Monday, April 29, 2013

தூத்துக்குடி ஸ்டெர்லைட் வரமா... சாபமா? - ஒரு மினி தொடர் - பாகம் 6 , 7

ஸ்டெர்லைட் வரமா... சாபமா? - ஒரு மினி தொடர் - பாகம் 6


ஸ்டெர்லைட் ஆலையை ஆய்வு செய்த தேசிய சுற்றுச்சூழலுக்கான பொறியியல் ஆராய்ச்சி மையம் என்கிற 'நீரி' (National Environmental Engineering Research Institute ) அமைப்பின் முதல் அறிக்கையை தொடர்ந்து மூடப்பட்ட ஆலை, மறுஆய்வு நடத்த வேண்டும் என்கிற நீதிமன்ற உத்தரவுடன் மீண்டும் இயங்க தொடங்கியது. முதல் அறிக்கையில் காட்டமான கருத்துக்களை பதிவு செய்திருந்த 'நீரி' குழுவின் அறிக்கை, அடுத்த இரண்டு மாதத்தில் மாறிவிட்டது.

 


முதல் அறிக்கையில், 'ஸ்டெர்லைட் ஆலைக்கு அனுமதி பெற்றதில் முறைகேடு, ஆலையில் இருந்து அபாயகரமான கழிவுகள் வெளியேற்றப்படுகிறது, அனுமதி பெற்றதையும் மீறி அதிக உற்பத்தி நடக்கிறது, தண்ணீர் மாசுபட்டு விட்டது, நிலத்தடி நீர் பாழடைந்து விட்டது...' என்று காட்டமாக பதிவு செய்திருந்த அறிக்கை, இர்ண்டாவது ஆய்வின் போது முற்றிலுமாக மாறிப்போய் இருந்தது. இது வேதாந்தா நிறுவனத்துக்கு உற்சாகத்தையும், உள்ளூர் மக்களுக்கு வேதனையையும் ஏற்படுத்தியது.



அழுது புலம்பிய மக்கள்

ஸ்டெர்லைட் ஆலை குறித்து மீண்டும் ஆய்வு செய்த குழுவினர், சுற்றிலும் உள்ள மக்களை சந்தித்து பேசினார்கள். ஆலை நிர்வாகமே சில இடங்களில் மக்களை ஏற்பாடு செய்து ஆலைக்கு ஆதரவான கருத்துக்களை தெரிவிக்க வகை செய்திருந்தது. ஆனால் அதிகாரிகளை சந்தித்த மக்கள் கொந்தளிப்புடன் பேசினார்கள். குறிப்பாக மீளவிட்டான், தெற்கு வீரபாண்டியாபுரம் ஆகிய கிராமங்களை சேர்ந்த மக்கள், தங்கள் வீடுகளில் உள்ள அடிபம்புகளில் குடிநீர் மஞ்சள் நிறத்திற்கு மாறி விட்டதை ஆதாரத்துடன் சுட்டிக் காட்டினார்கள். இதனால் தெற்கு வீரபாண்டியாபுரம், மீளவிட்டான், சில்வர்புரம் ஆகிய பகுதிகளில் நிலத்தடி நீரும், கிணற்று நீரும் சேகரிக்கப்பட்டு ஆய்வுக்கு எடுத்துச் செல்லப்பட்டது.

 

ஆலைக்கு அருகில் உள்ள கிராங்களில் வசிக்கும் மக்களுக்கு சுவாசக் கோளாறு ஏற்பட்டு இருப்பதை சொன்னார்கள். குழந்தைகளுக்கு எலும்பு மூட்டுக்களில் தாங்க முடியாத அளவுக்கு வலி ஏற்படுவதை தெரிவித்தார்கள். தண்ணீரில் அளவுக்கு அதிகமாக ஃபுளூரைடு கலந்து இருப்பதால் குழந்தைகளுக்கு பற்களில் பிரச்னை ஏற்படுவதாகவும், வாயில் அரிப்பு ஏற்பட்டு பற்கள் தானாக விழுந்து விடும் ஆபத்து இருப்பதை மருத்துவர்கள் எச்சரித்தையும் குழுவினரிடம் சொல்லி குமுறினார்கள்.


ஆலையை அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்ட மறுநாள், அந்த பகுதியில் கனமழை பெய்தது. அந்த சூழலை ஆலை நிர்வாகம் சாதகமாக்கிக் கொண்டு ஆலைக்குள் இருந்த கழிவு நீர் அனைத்தையும் மழை தண்ணீருடன் சேர்த்து வெளியே திறந்து விட்டதாக புகார் எழுந்தது. அந்த தண்ணீரை குடித்த கால்நடைகள் செய்து விழுந்ததாக கிராம மக்கள் பதைபதைப்புடன் எடுத்துக் கூறினார்கள். இந்த ஆலை தங்கள் உயிருக்கு உலை வைக்க வந்த எமன் என்று அழுகையோடு பெண்கள் தெரிவித்தனர்.

ஆலையை சுற்றிப் பார்த்ததோடு, மக்களின் கருத்தையும் பதிவு செய்து கொண்ட 'நீரி' குழுவானது, 1999 பிப்ரவரி மாதத்தில் இரண்டாவது அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. அதில், 'ஸ்டெர்லைட் ஆலையில் பழுதாகி போயிருந்த கழிவுகளை சுத்தப்படுத்தும் இயந்திரம் சரி செய்யப்பட்டு விட்டது. அதனால் தற்போது ஆலையின் கழிவு நீரில் ஆர்சானிக், செலினியம், குரோமியம், காரியம் போன்றவை தமிழக மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் அனுமதித்து இருக்கும் அளவை விடவும் குறைவாகவே இருக்கிறது' என அந்த அறிக்கையில் சுட்டிக் காட்டியது.

சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் எரிச்சல்

ஸ்டெர்லைட் நிறுவனத்தை பொறுத்தவரை, இது போன்ற குழுக்களின் ஆய்வை எத்தனையோ முறை சந்தித்து இருக்கிறது. தமிழக மாசுக் கட்டுப்பாட்டு வாரியம், தேசிய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம், மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை குழுக்கள், உச்ச நீதிமன்ற கண்காணிப்புக் குழு, மத்திய அரசின் சார்பில் அமைக்கப்பட்ட கண்காணிப்பு குழு என பல குழுக்களையும் சமாளித்து ஆலையை முழுவீச்சில் இயங்க செய்யும் தந்திரம் வேதாந்தா நிறுவனத்துக்கு தெரிந்து இருந்தது. அதனால் தான் ஆலை நிர்வாகம் விரும்பியபடியே அறிக்கை வந்திருக்குமோ என சந்தேகிக்கிறார்கள், தூத்துக்குடி மக்கள்.

ஆலையை சுற்றிலும் நடந்து சென்று பார்த்தாலே தெரியும் அளவுக்கு மலை போன்று கழிவுகள் குவிந்து கிடக்கின்றன. ஃபுளூரைடு கலந்த கழிவுகள் ஒரு பக்கம் தேங்கி நிற்கிறது. காரிய கழிவுகளும், அலுமினிய கழிவுகளும் ஒரு பக்கம் மலையாக குவிந்து உள்ளது. ஆனாலும், இதை எல்லாம் மறைத்து விட்டு 'நீரி' அறிக்கை வெளியானது சுற்றுச்சூழல் ஆர்வலர்களை எரிச்சல் அடைய வைத்தது.

'ஸ்டெர்லைட் ஆலையால் ஏற்படும் அத்தனை சீரழிவுக்கும் காரணம், தமிழக மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தான். பெரிய தொழிற்சாலைகள் செய்யும் விதிமுறை மீறல்களை கண்டு கொள்ளாமல் ஆலையை பாதுகாக்கும் செயலில் தமிழக மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் ஈடுபட்டது. தொழிற்சாலைகளுக்கு சாதகமாக செயல்பட வேண்டும் என்பதில் காட்டிய அக்கறையில் துளி அளவுக்கு கூட மக்களின் உயிருக்கும் உடைமைக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை என்பது வருத்தத்துக்கு உரியது' என சுற்றுச்சூழல் ஆர்வலரும் கடலோர மக்கள் கூட்டமைப்பின் அமைப்பாளருமான புஷ்பராயன் அந்த சமயத்திலேயே காட்டமாக கருத்து தெரிவித்து இருந்தார்.
நலிவடைந்த வாழ்வாதாரம்
ஆலையில் 1500 பேர் பணியாற்றிய போதிலும் ஆலையால் ஏற்பட்ட பாதிப்புகள் அதிகம் என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள். ஆலையின் கழிவுகள் கொட்டப்படுவதால் விவசாயமும், மீன்வளமும் பெருமளவில் பாதிக்கப்பட்டு விட்டது. துறைமுகம் சார்ந்த ஏற்றுமதி, இறக்குமதியிலும் பல்வேறு மோசடிகளை நடந்து இருப்பதாக ஸ்டெர்லைட் எதிர்ப்பு இயக்கத்தினர் குற்றம் சாட்டுகிறார்கள். பல ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு வரி ஏய்ப்பு நடந்திருப்பதாக அதன் அலுவலர்கள் கைது செய்யப்பட்டதே, அந்த நிறுவனத்தின் தவறான நடவடிக்கைக்கு சாட்சி என்கிறார்கள், ஆலையின் எதிர்ப்பாளர்கள்.



தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு பலகோடி ரூபாய் மின்சார கட்டணம் பாக்கி வைக்கப்பட்டு இருப்பதாகவும் புகார் எழுந்து உள்ளது. ஆனால், மக்களையும், அரசையும் ஏமாற்ற நலத்திட்டங்கள் என்ற பெயரில் பணத்தை செலவு செய்து மக்களின் எதிர்ப்பை திசை திருப்ப முயற்சி நடப்பதாவும் எதிர்ப்பு குழுவினர் புகார் தெரிவிக்கிறார்கள். அத்துடன், ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து 'பை ப்ராடக்ட்' மூலம் தங்கம், பிளாட்டினம் உள்ளிட்டவை கிடைப்பதாகவும் அவற்றை அரசுக்கு அறிவிக்காமலே வெளிநாட்டுக்கு கொண்டு சென்று விற்பனை செய்வதாகவும் குற்றச்சாட்டு உள்ளது.



இந்நிலையில் சென்னை விமான நிலையத்தின் மூலம் வெளிநாட்டுக்கு கடத்த இருந்த 60 கோடி ரூபாய் மதிப்பிலான தங்கம், பிளாட்டினம் பிடிபட்ட கதையை நாளை பார்க்கலாம்..




ஸ்டெர்லைட் வரமா... சாபமா? - ஒரு மினி தொடர் - பாகம் 7

- ஆண்டனி ராஜ்

படங்கள்:
ஏ.சிதம்பரம்  

டெர்லைட் ஆலையில் தாமிரத்தை உருக்கி தகடுகளாக மாற்றும் போது ‘பை ப்ராடக்ட்’ என்கிற முறையில் உடன் கிடைக்க கூடிய சல்ப்யூரிக் அமிலம், பாஸ்ஃபோரிக் அமிலம், தங்கம், பிளாட்டினம், வெள்ளி, பல்லேடியம் என விலை உயர்ந்த பொருட்கள் கிடைக்கின்றன. அவற்றை நல்ல விலைக்கு விற்பனை செய்து கொள்ள லாபம் சம்பாதிக்கும் இந்த நிறுவனம், இது குறித்து முழுமையான தக்வல்களை அரசுக்கு தெர்விக்காமல் வரி ஏய்ப்பு செய்வதாகவும் புகார் எழுந்தது.

2010 ஆகஸ்ட் மாதத்தில் ஸ்டெர்லைட் நிறுவனத்தில் ஆய்வு செய்த மத்திய கலால் துறை அதிகாரிகள், இந்த நிறுவனம் 750 கோடி ரூபாய் வரி ஏயப்பு செய்திருப்பதை கண்டுபிடித்தனர் இதற்காக நிறுவனத்தின் துணைத் தலைவரான வரதராஜன் என்பவர் கைது செய்யப்பட்டார். அவரை ஜாமீனில் விடக்கோரி மதுரை உயர்நீதி மன்றக் கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அவரை பிணையில் விடுவித்த நீதிமன்றம், நெல்லையில் உள்ள மத்திய கலால் துறையில் 200 கோடி ரூபாய் பிணைத்தொகையாக கட்ட வேண்டும் என நிபந்தனை விதித்தனர்.

கடத்தப்பட்ட விலை உயர்ந்த உலோகங்கள்


ஸ்டெர்லை நிர்வாகம் வரி ஏய்ப்பு செய்த விவகாரம் தூத்துக்குடி மக்களால் பரபரப்பாக பேசப்பட்டது. அது அடங்குவதற்கு முன்பாக அடுத்த சில நாட்களிலேயே விலை உயர்ந்த பொருட்களை அனுமதி பெறாமல் கடத்தி சென்றதாக அதே கலாத்துறையினரிடம் சிக்கிக் கொண்டது, ஆலை நிர்வாகம். இந்த கடத்தல் விவகாரம் தூத்துக்குடி நகரத்தில் அபோது ஹாட் டாபிக் ஆக பேசப்பட்டது.

அதாவது, ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து பொருட்கள் கடத்தப்படுவதாக மத்திய கலால் துறைக்கு ரகசிய தகவல் கிடைத்ததால் ஆலை அமைந்துள்ள சிப்காட் வளாகத்துக்கு அருகில் வாகன சோதனை நடத்தி இருக்கிறார்கள். அப்போது ஆலையில் இருந்து வந்த வாகனத்தை சோதனையிட்டதில் சென்னை விமான நிலையத்திற்கு கொண்டு செல்வதற்காக 36 பெட்டிகள் இருந்து உள்ளது. ஆலையின் கழிவை கட்டிகளாக்கி அதனை சென்னை விமான நிலையம் வழியாக வெளிநாட்டுக்கு கொண்டு செல்ல இருப்பதாக அதனை எடுத்து சென்றவர்கள் தெரிவித்து இருக்கிறார்கள். அந்த கழிவுகளை வெளிநாட்டுக்கு அனுப்பி அதில் உள்ள தங்கம் மற்றும் வெள்ளியை பிரித்து எடுக்க இருப்பதாகவும், அதற்கான ஆவணங்களையும் காட்டி உள்ளனர்.


அந்த கழிவுகளில் இருந்து 1080 கிலோ தங்கம் மற்றும் வெள்ளி கிடைக்கும் என்றும் ஆவணத்தில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் சந்தேகம் அடைந்த அதிகாரிகள், கழிவுகள் அடங்கிய அந்த கட்டிகளை சோதனைக் கூடத்துக்கு அனுப்பினர். அங்கு ஆய்வு செய்யப்பட்டு முடிவுகள் வந்திருக்கிறது, அதனை பார்த்து கலால் துறை அதிகாரிகள் மலைத்து விட்டார்களாம். காரணம், அந்த கழிவுகளில் தங்கம், வெள்ளி மட்டும் அல்லாமல் விலை உயர்ந்த உலோகங்களான பிளாட்டினம் மற்றும் பல்லேடியம் ஆகியவையும் இருந்து உள்ளது.


ஆனால் அது பற்றி தெரிவிக்காமல் அரசுக்கு வரி கட்டாமலே பல வருடங்களாக இது போன்ற முறைகேடு நடந்திருப்பதும் தெரியவந்து இருக்கிறது. இதனால் 60 கோடி ரூபாய் மதிப்பிலான அந்த கழிவுகளை பறிமுதல் செய்த கலால் துறையினர் இதற்காக ஆலை நிர்வாகத்தின் மீது வழக்கு தொடர்ந்தனர்.

2500 பேருக்கு புற்றுநோய்

மத்திய அரசின் நகர்புற மேம்பாட்டு அமைச்சகம் நாடு முழுவதும், சுற்று சூழல் மற்றும் நிலத்தடி நீர் மாசுபடுவது பற்றி ஒரு ஆய்வு மேற்கொண்டது. அந்த ஆய்வின் அறிக்கை வெளியானபோது, தொழில் நகரமான தூத்துக்குடி நாட்டிலேயே மிக மோசமான நகரம் என குறிப்பிடபப்ட்டு இருந்தது. மக்கள் வசிப்பதற்கு ஆபத்தான நகரம் என்கிற தகவலும் உள்ளூர் மக்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.

மாசு மிகுந்த தொழிற்சாலைகளால் தூத்துக்குடி மாநகர மக்கள் புற்றுநோய், சுவாசக்கோளாறு போன்ற கொடிய நோய்களுக்கு ஆளாகி வருவது தெரிய வந்து இருக்கிறது. குறிப்பாக குழந்தைகள் அதிக அளவு நோய்களால் பாதிக்கப்படுகின்றனர். இந்நிலையில் தூத்துக்குடியில் புற்றுநோயாளிகளின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருவது தகவல் அறியும் சட்டத்தின் மூலமாக நிரூபணமாகியுள்ளது.

இதுதொடர்பாக ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டக் குழுவின் அமைப்பாளரான நயினார் குலசேகரன், தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் முதல்வரிடம் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் மனு செய்து பல அரிய தகவல்களை பெற்று இருக்கிறார்.

அதில், புற்றுநோயாளிகள் தொடர்பான கேள்விக்கான பதில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கடந்த 2012ம் ஆண்டு ஜனவரி முதல் டிசம்பர் வரை 2 ஆயிரத்து 552 பேர் புற்றுநோயாளிகள் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று சென்று இருக்கிறார்கள். வருடந்தோறும் புற்று நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வரும் தகவலும் தெரிய வந்து உள்ளது. புற்றுநோயாளிகள் பெருகுவதற்கு தூத்துக்குடியை சுற்றிலும் பெருகிவரும் மாசு நிறைந்த தொழிற்சாலைகளே காரணம் என்று மருத்துவர்கள் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மத்திய,மாநில மாசுக்கட்டுப்பாட்டு வாரியங்கள் தெரிவித்த ஆலோசனைகள், பரிந்துரைகளை ஸ்டெர்லைட் நிர்வாகம் நிறைவேற்றவில்லை. அத்துடன் 2004 ல் உச்ச நீதிமன்றம் சார்பில் அமைக்கபப்ட்ட கண்காணிப்புக் குழு பல்வேறு பரிந்துரைகளை செய்து இருந்தது. அவையும் செயல்படுத்தப்படவே இல்லை. அரசும் ஆலை நிர்வாகத்தை கண்காணிக்கவில்லை. இதுவே நோயாளிகளின் நகரமாக தூத்துக்குடிமாறுவதற்கு முக்கிய காரணம் என்கிறார்கள், சமூக ஆர்வலர்கள்.

இந்த நிலையில, உயர் நீதிமன்றம் ஆலையை மூட உத்தரவிட்டது குறித்த தகவல்கள்
ன்றி = விகன்
ிஸ்கி 1 -தூத்துக்குடி ஸ்டெர்லைட் வரமா... சாபமா? - ஒரு மினி தொடர் - பாகம் 1 , 2 ,3-http://www.adrasaka.com/2013/04/1-2-3.html
ிஸ்கி 2  -தூத்துக்குடி ஸ்டெர்லைட் வரமா... சாபமா? - ஒரு மினி தொடர் - பாகம் 4, 5 -http://www.adrasaka.com/2013/04/4-5.html


0 comments: