Friday, April 12, 2013

வெள்ளிக்கிழமை ராமசாமி வெட்டாஃபீஸ் வெங்கிடுசாமி ( 12 .4.2013 ) 6 படங்கள் முன்னோட்ட பார்வை

1.உனக்கு 20 எனக்கு 40 -  இளம் பெண்ணுக்கும் நடுத்தர வயதை கடந்த ஆணுக்குமான காதலை சொல்லும் படமாக உருவாகி வருகிறது. "உனக்கு 20 எனக்கு 40". அக்ஷய் என்பவரே கதை, வசனம் எழுதி இயக்கி நடிக்கிறார். நாயகியாக ஷாலினி, அம்ருதா என்ற இருவர் நடிக்கிறார்கள்.
 தன் தோழி வீட்டுக்கு அடிக்கடி வரும் ஹீரோயின் தோழியின் தந்தை மீது காதல் கொள்கிறாராம். தோழியின் சகோதரனும் ஹீரோயினை காதலிக்கிறாராம். ஹீரோயின் அப்பாவுக்கு கிடைத்தாரா, மகனுக்கு கிடைத்தாரா என்பதுதான் கதையாம். பெரும்மான்மையான படப்பிடிப்புகள் முடிந்து விட்டதாம். 
 "இது நிறைய இடத்தில் நடக்கிற விஷயம்தான். பள்ளிக்கூட மாணவனை ஆசிரியை காதலிக்க வில்லையா? டியூசனுக்கு வரும் மாணவி ஆசிரியரை காதலிக்கவில்லையா, அதைத்தான் படத்தில் சொல்கிறோம். இப்படி முறைகேடான உறவுகளால் ஏற்படும் பிரச்சினைகளையும் சொல்கிறோம்" என்கிறார் இயக்குனர் கே.பி.எஸ்.அக்ஷய்.
 இந்த கேவலமான கதை அம் சம் கொண்ட படம் ஈரோடு அண்ணாவில் ரிலீஸ் 
 
2. அதிரடி வேட்டை - ஆந்திரத்து யங் சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு, சமந்தா இணைந்து நடித்த படம் "துக்குடு". தெலுங்கில் ஹிட் அடித்த அதிரடி ஆக்ஷன் படம். அதனை இப்போது தமிழில் டப் செய்து "அதிரடி வேட்டை" என்று பெயர் வைத்திருக்கிறார்கள்.
 சந்தோஷமான  நடுத்தர குடும்பத்திற்குள் நுழைகிறது ஒரு தாதா கும்பல், அம்மா அப்பா, தங்கை என்று அன்பு உலகத்தில் இருந்த ஹீரோ அரிவாள், துப்பாக்கி என்று ஆக்ஷன் அவதாரம் எடுத்து வேட்டையாடும் கதை. சீனு வைத்தலா இயக்கி உள்ளார். இயக்குனர் மகேந்திரனின் மகன் ஜான் மகேந்திரா தமிழ் வசனங்களை எழுதி உள்ளார். நா.முத்துகுமார் பாடல்களை எழுதியுள்ளார். தமன் இசை அமைத்திருக்கிறார். பிரகாஷ்ராஜ், நாசர் உள்ளிட்ட தமிழ் முகங்களும் உண்டு. 
ஈரோடு சண்டிகா , ஸ்டார் இல் ரிலீஸ்  
 இது தெலுங்கில் ரிலீஸ் ஆன போது எழுதிய விமர்சனம்

http://www.adrasaka.com/2011/09/dookudu.html
 
 3. நினைவுகள் அழிவதில்லை - மக்கள் பிரச்னைகளை சொல்லும் படமாக நினைவுகள் அழிவதில்லை படம் உருவாகி வருகிறது. புகழ்பெற்ற கன்னட எழுத்தாளர் நிரஞ்சனா எழுதி பரபரப்பை ஏற்படுத்திய திரேஸ் மரண என்ற நாவலை, பி.ஆர்.பரமேஸ்வரன் நினைவுகள் அழிவதில்லை என்ற பெயரில் தமிழில் மொழிமாற்றம் செய்தார். இந்த நாவல்தான் இப்போது அதே பெயரில் திரைப்படமாகி வருகிறது. இதில் புதுமுகங்கள் குகன், அருண், சிவா, சண்முகம் ஆகிய 4 பேரும் கதாநாயகர்களாக நடிக்க, காயத்ரி கதாநாயகியாக அறிமுகம் ஆகிறார். ஓம் முத்துமாரி, மஞ்சுளா ஆகிய 2 நாடக கலைஞர்களும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து இருக்கிறார்கள்.

திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியிருக்கிறார் டைரக்டர் பகத்சிங் கண்ணன். தனது படம் குறித்து பகத்சிங் கண்ணன் கூறுகையில், 1943-ம் ஆண்டில் ஆங்கிலேயர்கள் ஆட்சி புரிந்த காலத்தில், பிரிட்டிஷ் அரசாங்கத்தின் துணையுடன் நில பிரபுக்கள், ஏழைகளுக்கு சொந்தமான நிலங்களை அபகரிக்கிறார்கள். அதை எதிர்த்து ஒரு கிராமத்தை சேர்ந்த 4 இளைஞர்கள் மக்களை திரட்டி போராடுகிறார்கள்.
 அந்த நான்கு இளைஞர்களுக்கும் பிரிட்டிஷ் அரசாங்கம் தூக்கு தண்டனை விதிக்கிறது. அந்த தண்டனை நிறைவேற்றப்பட்டதா, இல்லையா? என்பதே கதை. `புதுயுகம் நடராஜன் ஒளிப்பதிவு செய்ய, பி.ஆர்.ரஜின் இசையமைத்து இருக்கிறார். படப்பிடிப்பு சென்னை, தஞ்சை, பல்லடம், ஊட்டி, திருப்பூர் ஆகிய இடங்களில் நடைபெற்று முடிவடைந்தது. மக்கள் பிரச்னையை மையக்கருவாக கொண்ட படம் என்பதால், எடிட்டர் பி.லெனின் சம்பளமே வாங்காமல், இந்த படத்தில் பணிபுரிந்து இருக்கிறார்.
ஈரோடு சங்கீதாவில் ரிலீஸ் 

4 யாரது - டிஜிட்டல் தொழில்நுட்பம் வளர்ந்த பிறகு குறைந்த செலவில் பயமுறுத்தும் பேய் படங்களின் தயாரிப்பு அதிகரித்து உள்ளது. அந்த வரிசையில் தயாராகும் படம் யாரது. சூர்யா விஷூவல் கம்யூனிகேஷன் சார்பில் ஏ.சுந்தர்ராஜ் இந்தப் படத்தை தயாரிக்கிறார். ஏ.சம்பத்குமார் இயக்குகிறார். வருண், உண்ணி கிருஷ்ணன் ஹீரோவா நடிக்கிறார்கள், சவுந்தர்யா, மீனா என்ற இரண்டு ஹீரோயின்கள்.

ஒரு ஜமீன் குடும்பத்தைச் சேர்ந்த பெண் இமாச்சல பிரதேசத்தில் உள்ள பனிமலைக்கு சுற்றுலா செல்கிறார். அங்கு வேறு ஊரிலிருந்து சுற்றுலா வரும் சில இளைஞர்கள் சேர்ந்து அவளை கற்பழித்து கொன்று விடுகிறார்கள். அதன் பிறகு எதுமே நடக்காத மாதிரி தொடர்ந்து சுற்றுலா செல்கிறார்கள். இறந்தவர் ஆவியாக வந்து அவர்கள் செல்லும் இடங்களுக்கு தொடர்ந்து சென்று எப்படி பழிவாங்குகிறாள் என்பதுதான் கதை. கேரளா, ஆந்திரா, அசாம், மனாலி, இமாச்சல பிரதேசம் என்று இந்தியாவின் அழகான பிரதேசங்களில் படம் பிடித்திருக்கிறார்கள்.
 ஈரோடு ஸ்ரீகிருஷ்ணாவில் ரிலீஸ் 
 
5.  சிக்கி முக்கி! -முழுக்க முழுக்க மலேசியாவில் தயாரான படம் New movie titled chikky mukkyஎன்னவோ பிடிச்சிருக்கு, எழுதியதாரடி போன்ற படங்களை தயாரித்தவர் வெளிநாட்டில் வாழும் தமிழரான ஸ்ரீகந்தராஜா. இவர் இயக்கி இருக்கும் படம் சிக்கி முக்கி. ஜித்தேஷ் நாயகனாக அறிமுகமாகிறார். தமிழ் படம் திஷா பாண்டே நாயகியாக நடித்துள்ளார். 
"ஒரு நல்ல டாக்டர் ஒரு பெண்ணை இந்தியாவில் திருமணம் செய்து கொண்டு மலேசியாவில் வாழ்கிறார். அந்த பெண்ணின் இந்திய காதலன் அவளை துரத்திக் கொண்டு மலேசியாவுக்கே வருகிறான். அவளை பல வழிகளில் துன்புறுத்துகிறான். ஒரு காலத்தில் காதலித்தவன்தான் என்றாலும் அவன் தவறானவன் என்பதை தெரிந்து கொண்டதால் வெறுக்கும் அவள். மலேசியாவில் அவனது துன்பங்களை பொறுத்துக்கொண்டு அவனை எப்படி சமாளிக்கிறாள். புகழ்பெற்ற தன் டாக்டர் கணவனை அவனிடமிருந்து எப்படி காப்பாற்றுகிறாள் என்பதுதான் கதை. முழுபடத்தையும் மலேசியாவில் எடுத்து முடித்து விட்டோம். வெளிநாடுகளில் கணவனோடு வாழும் பெண்களுக்கு இந்தப் படம் ஒரு பாடமாக இருக்கும்" என்கிறார் 
ஈரோட்டில் ரிலீஸ் இல்லை 

 
6. COMMANDO -  துப்பாக்கி, பில்லா-2 வில் வில்லனாக வந்து மக்களைக் கவர்ந்தவர் வித்யூத் ஜம்வால். தன்னுடைய 3 வயதிலேயே களரி தற்காப்பு கலையை கற்றுத் தேர்ந்துள்ளார் வித்யூத். களரி மட்டுமன்றி ஜிம்னாஸ்டிக், குங்பூ, ஆகிய தற்காப்பு கலைகளையும் பயின்றுள்ளார். மேலும் சில ஆண்டுகள் மாடலிங் துறையிலும் அசத்தியிருக்கிறார். அதுமட்டுமின்றி வித்யூத் தேசிய ஜிம்னாஸ்ட் சாம்பியனும் கூட.
 இவர் போர்ஸ் படத்தில் ஜான் ஆபிரஹாமுக்கு வில்லனாக நடித்ததன் மூலம் தமிழ் பட வாய்ப்புகளைப் பெற்றவர். தற்போது தமிழ் படங்கள் மூலம் இந்தியில் கதாநாயகனாகி உள்ளார்!

ஈரோட்டில் ரிலீஸ் இல்லை 

0 comments: