Saturday, February 16, 2013

என்னைப் பத்தி வெளியே வராத பயங்கரமான கிசுகிசு ஒண்ணு - அஞ்சலி பேட்டி

மொபைல், இமெயில், ஃபேஸ்புக்... எங்கேயும் எப்போதும் நாட் ரீச்சபிளிலேயே இருந்தார் அஞ்சலி. காத்திருந்து காத்திருந்து 'சேட்டை’ ஷூட்டிங் ஸ்பாட்டில் பிடித்தேன். 'சிங்கம்-2’ படத்தில் ஒரு குத்துப் பாடலுக்கு சூர்யாவுடன் ஆடியிருக்கிறார்.



''ஹலோ, 'சிங்கம்-2’ல நான் ஆடிஇருக்கிறது அயிட்டம் சாங் கிடையாது. நான் சூர்யா சாரோட இன்ட்ரோ சாங்ல ஆடியிருக்கேன். ஹீரோகூட பப்ளியா ஒரு பொண்ணு ஆடினா நல்லா இருக்குமேனு தேடி இருக்காங்க. பை லக்... எனக்கு அந்த வாய்ப்பு கிடைச்சது. பாட்டு நல்லா வந்திருக்கு. நிறையக் கதைகள் கேட்டுட்டு இருக்கேன். சீக்கிரமே விஜய், அஜித், சூர்யா கூட நடிப்பேன்.''



''சினிமால நல்ல கிராஃப் இருக்கு உங்களுக்கு. ஆனா, டபுள் ஹீரோயின் சப்ஜெக்ட்களிலேயே தொடர்ந்து நடிக்கிறீங்களே?''



'' 'சேட்டை’யில் ஹன்சிகா, 'எம்.ஜி.ஆர்’ல வரூ, தெலுங்கு 'சீதம்மா’வில் சமந்தா, 'பலுபு’வில் ஸ்ருதி... இவங்களோட சேர்ந்து நடிச்சது தானா அமைஞ்சது. யார் என்கூட நடிச்சாலும் எனக்கு எந்தப் பிரச்னையும் இல்லை. எல்லா ஹீரோயினும் என்கூட நெருக்கமாகிடுவாங்க. ஏன்னா, நான் ரொம்ப ஃப்ரெண்ட்லி!''  


''ஆர்யா, விஷால் யார் பயங்கரமான ப்ளேபாய்?''  



''ஆர்யா, விஷால்... ரெண்டு பேருமே ரொம்ப ஜாலியாப் பழகுவாங்க. ஆர்யா செட்ல இருந்தா, நமக்கு எந்தக் கவலையும் வேண்டாம்.  எல்லா வேலையும் இழுத்துப் போட்டுப் பார்ப்பார். நிறைய ஹெல்ப் பண்ணுவார். அதைவிட நிறையப் பேசிட்டே இருப்பார். விஷால் அமைதியா இருப்பார். ஆனா, பயங்கரமா சேட்டை பண்ணுவார். ரெண்டு பேருக்குமே எனர்ஜி லெவல் ஜாஸ்தி. என்ன, ஆர்யா சேட்டை பண்ணா, வெளியே தெரிஞ்சிடும். விஷால் சேட்டை பண்ணா, யாருக்கும் தெரியாது. விஷால் அவ்ளோ அமைதி... ஆனா, பயங்கர நாட்டி!''


''இப்போ லீடிங்கில் இருக்கிற பல ஹீரோயின்கள், 'அஞ்சலி நடிப்புக்கு நான் ரசிகை’னு சொல்லியிருக்காங்க. அஞ்சலி யாருக்கு ரசிகை?''


''என் ஆல்டைம் ஃபேவரைட் ஸ்ரீதேவி மேடம்தான். ஆனா, நான் இம்ப்ரெஸ் ஆனது, நடிப்பு கத்துக்கிட்டது எல்லாம் ஜோதிகா மேடம் நடிப்பைப் பார்த்துதான்.''


''சினிமாவில் ஹீரோயினாக இருப்பது வரமா... சாபமா?''

''நூடுல்ஸ், சுடிதார், வீடு, வீக் எண்ட் சினிமான்னு பிடிச்ச விஷயங்களோடு இருந்த பொண்ணு நான். 'கற்றது தமிழ்’ படத்துக்குப் பிறகு என் உலகமே மாறிடுச்சு. இங்கேயும் சில சிரமங்கள் இருக்குதான். ஆனா, ஹீரோயினா இருக்கிற ஒவ்வொரு நாளும் எனக்குப் பிடிச்சிருக்கு. 'கற்றது தமிழ்’ ஆனந்தி, 'அங்காடித் தெரு’ கனி, 'எங்கேயும் எப்போதும்’ மணிமேகலை கேரக்டர்கள் எல்லாம் எனக்கு ஒவ்வொரு வாழ்க்கை. இதெல்லாம் எனக்குக் கொடுத்தது சினிமாதான். என்ன சொல்றது... நான் ஆசீர்வதிக்கப்பட்டவள்.''


''எப்பவும் ஏதாவது ஒரு கிசுகிசு உங்களை விரட்டிக்கிட்டே இருக்கே?''  

சத்தமாகச் சிரிக்கிறார்... ''உங்களுக்கு ஒண்ணு தெரியுமா? இதுவரை என்னைப் பத்தி வெளியே வராத பயங்கரமான கிசுகிசு ஒண்ணு இருக்கு... அது எனக்கு மட்டுமே தெரிஞ்ச ரகசியம். அதோட கம்பேர் பண்றப்ப, இதெல்லாம் ஒண்ணுமே இல்லைங்க!''


 நன்றி -ஆனந்த விகடன்,