Friday, November 30, 2012

நீர்ப்பறவை - சினிமா விமர்சனம்

http://tamil.way2movies.com/wp-content/uploads/2012/10/Neerparavai2.jpgஹீரோ ஒரு சரக்கு சங்கரலிங்கம். எப்போ பாரு குடி. குடிக்கு அடிமை. தண்ணி அடிக்க காசு வேணும்னா ஊரெல்லாம் கை ஏந்தத்தயங்காத ஆள்.அம்மா, அப்பா மீனவ்க்குடும்பம்.ஹீரோயின் சர்ச்ல ஒர்க் பண்றாங்க. ஹீரோயினைப்பார்த்ததும் ஹீரோவுக்கு காதல். குடிக்கு அடிமை ஆனவர் காதலுக்கு அடிமை ஆகிடறார். (2ம் 1 தான். ஆளை முடிச்சுக்கட்டிடும்).


ஹீரோவை ஹாஸ்பிடல்ல சேர்த்து ஆளை குடிபோதைப்பழக்கத்தில் இருந்து  மீட்டுடறாங்க.அவங்க ஏரியா மீனவர்கள் ஹீரோவை மீன் பிடிக்க விடலை. காரணம் ஹீரோ மீனவப்பரம்பரை இல்லை. தத்துப்பிள்ளை.ஆனா ஹீரோயின் நீ கடல் போய் மீன் பிடிச்சு மீனவன் ஆகுங்கறா. காதலி வாக்குக்காக ஹீரோ என்ன செஞ்சார்,  என்ன ஆச்சு? என்பதே மிச்ச மீதிக்கதை .


ஹீரோ விஷ்ணு கேரக்டரை உணர்ந்து பண்ணி இருக்கார். வெண்ணிலா கபாடிக்குழு , குள்ள நரிக்கூட்டம் போல் இதுவும் நிதானமாக ஸ்கோர் செய்ய வாய்ப்பு உள்ள படம்.  பேரை காப்பாற்றி இருக்கிறார். ஆனாலும் குடிகாரர் கேரக்டர் எப்படி இருக்கனும் என்பதை சிவா மனசுல சக்தி ஜீவா கேரக்ட்ர் பார்த்து இன்னும் நல்லா பண்ணி இருக்கலாம்.


 ஹீரோயின் சுனைனா .இளஞ்சிவப்பு உதட்டழகி. கடல் ஓர கிராமக்கதை என்பதால் மேக்கப் போட வாய்ப்பு கம்மி .தூசு படிந்தாலும் வெள்ளிக்குத்துவிளக்குக்கு மதிப்பு போயிடுமா? ஜொலிக்கிறார். வழக்கொழிந்த பஃப் கை ஜாக்கெட் கம் சர்ட் மாடலில் டைட் டிரஸ் டாப் , பாவடை போட்டுக்கொண்டு படம் நெடுக உலா வருகிறார். குடிவெறியரான ஹீரோ காதலை சொல்ல  கிட்டே வரும்போது “ சாத்தானே! அப்பால் போ! என பயந்து மருகும்போது தியேட்டரில் அப்ளாஸ் அள்ளுகிறார். ஆனால் சினேகாவுக்கு கிட்டத்தட்ட தங்கை மாதிரி புன்னகை இளவரசியான இவரை ஏன் சோனியா அகர்வாலுக்கு அக்கா போல் மெல்லிய சோக இழையை முகத்தில் ஒட்ட வைத்து இருக்கிறார்? இயக்குநர். புரியாத புதிர்.



சரண்யா அம்மா கேரக்டர். தென் மேற்குப்பருவக்காற்றில் கலக்கியது போல் இதிலும். சரக்கு அடிக்க பையனுக்கு காசு தரும் சீனில் செம நடிப்பு. அவர் வசனம் பேசும் உச்சரிப்புஸ்டைல் பலர் பின் பற்ற வேண்டிய பாடம். அப்பாவாக வருபவர் நடிப்பும் நிறைவு .

இயக்குநர் சமுத்திரக்கனி முஸ்லீம் மீனவராக வருகிறார். கொஞ்ச நேரம் தான். ஆனால் மனதில் நிற்கிறார். இவரும் சீமான் போல் கை தட்டல் வாங்கும் குணச்சித்திர நடிகர் லிஸ்ட்டில் .


ஹீரோயின் சுனைனாவின் வயதான கேரக்ட்ர்க்கு நந்திதா தாஸ். வாய்ப்பு ரொம்ப குறைவு . வந்தவரை நிறை குடம்


http://www.indiancinemagallery.com/Gallery2/d/835356-1/Neer+Paravai+stills+_17_.jpg


 இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள்




1. கதைக்களம் ராமேஸ்வரம் தங்கச்சி மடம் என்பதால் கடலின் பல்வேறு கோணங்களை காமெராவில் அழகுபடுத்திக்காட்டியது. ஒளிப்பதிவு பக்கா.. குறிப்பா கடல் ஓர நண்டுகளை பாடல் காட்சியில் காட்டுவது, கடல் நீரை செங்கடல் , நீலம், பச்சை , கரும்நீலம் என வகைப்படுத்தி வண்ணக்கோலம் கண்ணுக்கு குளுமை


2. ஹீரோவைப்பார்த்தாலே பயந்து போய் விலகும் சுனைனா முதல் முறையாக காதல் பார்வையை அள்ளி வழங்கும் காதல் மலரும் காட்சி



3. மீனுக்கு கடல் மீனுக்கு ,பர பர ,தேவன் மகளே  என 3 கலக்கலான மெலோடி சாங்க், இசை , காட்சிப்படுத்தியமை அனைத்தும் அழகு ( பர பர பாட்டு 2 டைம் ஸ்ரேயா கோசால் , சின்மயி இருவரும் தனித்தனியா )


4. படத்துக்கு நேர்த்தியாக திரைக்கதை எழுதியது , இலக்கியவாதி எழுத்தாளர் ஜெயமோகனின் வசனங்கள்  பக்க பலமாய்



http://www.tamilstar.com/photo-galleries/tamil-cinema-neerparavai-movie-stills/images/tamil-cinema-neerparavai-movie-stills15.jpg

இயக்குநரிடம் சில கேள்விகள்



1. மீனவர்கள் பிரச்சனை பற்றிய படம் என நீங்கள் சொன்னவிதம், அளீத்த பேட்டிகள் எல்லாம் இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்களுக்கு இழைத்த கொடுமைகள் பற்றி , அதற்கான தீர்வு பற்றி படம் இருக்கும் என்ற இமாலய எதிர்பார்ப்பைப்பொய்த்து விட்டீர்கள். அந்த மேட்டர் ஜஸ்ட் வந்து போகுது. மக்கள் மனதில் குடிப்பழக்கம் தவறு என்பதை உணர்த்திய அள்வில் கால் பங்கு கூட மீனவர்களை அநியாயமாக கொல்லும் விஷயம் பதிவாகவில்லை, இது மிகப்பெரிய பின்னடைவு


2. மீனவர் பற்றி , அவர்கள் சந்திக்கும் கடல் பிரதேச பிரச்சனை பற்றி சொல்ல 1000 விஷயங்கள் இருந்தும்  அதைச்சொல்லாமல் படத்தின் முதல் பாதியை குடிப்பிரச்சனைக்கு தாரை வார்த்தது ஏன்?


3. ஓப்பனிங்க்ல கொலையாளி என கைது செய்யப்படும் நந்திதா தாஸ் விசாரணையில் மயக்கம் போடும்போது விசாரணை செய்யும் போலீஸ் ஆஃபீசர் காட்டும் பதட்டம் ஓவர். நந்திதாவின் அம்மாவோ , மகனோ காட்ட வேண்டிய பதட்டத்தை போலீஸ் ஆஃபீசர் காட்றார்.



4. கிறிஸ்டியனான சுனைனா ஹீரோவுக்கு 50 ரூபா தரும்போது இடது கைல  தர்றார். லட்சுமி வலது கை தானே பரிமாற்றங்கள்?


5. சுனைனா அந்தப்பணத்தை திரும்ப வாங்க வரும்போது சரன்யா வீட்டுக்குள் இருந்து பணம் தர்றார். சுனைனா வாசப்படில நின்னு வாங்கறார். கிராமங்களில் அப்படி பழக்கம் இல்லை. அப்டி செஞ்சா செல்வம் போயிடும். சரண்யா வாசலுக்கு வெளீல வந்தோ , சுனைனாவை வீட்டுக்குள்ளே வரச்சொல்லியோ பண்ம் கொடுத்திருக்கலாம்



6. ஒரு காட்சியில்  ஹீரோயின் மழையில் குடை பிடித்து  நிற்கிறார். ஹீரோ அவர் எதிரில் 4 அடி தள்ளி மண்டி போட்டு இருக்கார். ஆனா அவர் சட்டை நனையவே இல்லை . வாட்டர் ப்ரூஃபா?


7. மொத்தக்கதையும் ஃபிளாஸ்பேக் உத்தியில் நாயகியின் பார்வையில் சொல்லப்படுது. அப்போ ஹீரோ தனியா இருக்கும் காட்சி , ஹீரோயின் இல்லாமல் இருக்கும் காட்சிகள் 30 நிமிடம் வருதே? அது எப்படி? இதை தவிர்க்க ஃபிளாஸ்பேக்கை ஹீரோ பார்வையில் அல்லது பொதுவா காட்டி இருக்கலாம்

http://cdn3.supergoodmovies.com/FilesFive/neerparavai-movie-press-meet-stills-5637e45b.jpg


8. வயசுக்கு வந்த பொண்ணு சர்ச் வாசல்ல பப்ளிக்கா படுக்குமா? அரன்மனை மாதிரி இடம் இருக்கே? ஹீரோயின் வாசல்ல படுத்திருக்கும் காட்சியும் , ஹீரோ மப்பில் அருகே வந்து படுக்கும் காட்சியும் செயற்கை



9. பொது வெளியில் கிணற்ற்டியில் குளிக்கும் கிராமத்துப்பெண்கள் மஞ்சள் , ஆரஞ்சு போன்ற லைட் கலர் பாவாடை கட்டிக்குளிக்க மாட்டாங்க. கறுப்பு, பிரவுன், மெரூன் டார்க் கலர் தான் கட்டுவாங்க. சீன் படங்களில் கில்மாவுக்காக அப்படி காட்சி வெச்சா கேட்கமாட்டோம். ரசிச்சுட்டு போயிடலாம், ஆனா இது கண்ணியமான படம் ஆச்சே?


10. கொலைக்குற்றவாளியான நந்திதாவை ஜாமீனில் எடுக்கனும்னா ஏதாவது வக்கீல் ஆஃபீஸ் போகனும். அதை விட்டுட்டு அவரை விசாரணை செய்யும் போலீஸ் ஆஃபீசரிடமே என்ன பண்ண? ஜாமீன் எடுக்கனும் என ஐடியா கேட்கும் காட்சி எதுக்கு?



11. ஆரம்ப்ம் முதலே காதலுக்கு கெத்து காட்டி வரும் சுனைனா ஹீரோவை மீனவனாக மாற்ற எடுக்கும் முயற்சியில் ஏன் கெஞ்சனும்? ஹீரோ ஏதாவது ஒரு வேலைக்குப்போனா போதும். ஆனா மீனவனாத்தான் ஆகனும்னு ஏன் கண்டிஷன் போடறாங்க? அதுக்கு காரணம் காட்டி இருக்க வேணாமா?


12. யாராலும் பிடிக்க முடியாத உளுவை சுறாவை ஹீரோ பிடிச்சுட்டு வந்து அம்மா , அப்பா கிட்டே கொடுத்துட்டு அடுத்த நிமிஷமே ஹீரோயினைப்பார்க்க அதே டிரஸ்ல வர்றார். அப்போ ஹீரோயின் “ ஊரே உன்னைப்பற்றித்தான் பேசுது. அரிய வகை மீனைப்பிடிச்சுட்டியாமே?” சன் டி வி ல சொன்னாங்களா?



13. சுனைனாவுக்கு கதைப்படி 21 வயசு. அவர் 36 வயசுல அவ்ளவ் மாற்றம் ஆகி நந்திதா தாஸ் ஆகிடுவாரா? டைட்டானிக் படத்துல 2 வெவ்வேறு ஹீரோயினை காட்டியதுக்குக்காரணம் வயசு வித்தியாசம் 21 - 90 . ஸ்டார் வேல்யூவுக்ககவா?அவருக்கு காட்சிகளும் அதிகம் இல்லையே? ஒரு வேளை சுனைனாவின் கால்ஷீட் பிரச்சனையா?


14. ஹீரோ பஞ்சம் பிழைக்க வேற ஊர் போனப்ப ஓனர் தங்கச்சி ஹீரோ மேல ஆசைப்படறது இந்தக்கதைக்கு தேவை இல்லாதது

http://cine-talkies.com/movies/tamil-actress/sunaina/sunaina-104.jpg




ஆனந்த விகடன் எதிர்பார்ப்பு மார்க்  - 43


 குமுதம் எதிர்பார்ப்பு ரேங்க் - ஓக்கே


 சி.பி கமெண்ட் - கண்ணியமான காதல் கதை , நேர்த்தியான் திரைக்கதைதான். ஆனால் மீனவர் பிரச்சனை சரியாக சொல்லப்படவில்லை . இயக்குநரின் நோக்கம் நல்ல நோக்கம் தான். ஆனால் அதை மக்களுக்கு சொன்ன  விதம் இன்னும் நல்லா அழுத்தமா சொல்லி இருக்கலாம்னு தோணுது . ஈரோட்டில் அபிராமியில் படம் பார்த்தேன்.


டிஸ்கி - படத்தில் ஜெயமோகனின் அபாரமான வசனங்கள் 64 இடங்கள் இருக்கு. நினைவில் நின்றவை 46.அது தனிப்பதிவாய் பின் ஒரு சந்தர்ப்பத்தில் . மின் தடை கையை கட்டிப்போட்டு விட்டது  .

நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் - சினிமா விமர்சனம்

 

http://www.adrasaka.com/2012/12/blog-post_8939.html

 

 




https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiOn48BD80JIk8BdYPvn9zfiyNV1N3W7m8-5Q9NjAPsyiR9FCVeuIWf5zjJTRRnYfWxVij_7scICkdeyMBlpyTX_ZteXovzgWsBRlQIesCt27oEEQ-1eCMhFrg4_vLIR3PYOfDYKVcNp-8/s320/sunaina+hot+in+yathumagi+(10).jpg

வெள்ளிக்கிழமை ராமசாமி வெட்டாஃபீஸ் வெங்கிடுசாமி ( 30.11.2012 ) 5 படங்கள் முன்னோட்ட பார்வை

1.
Posted Date : 16:20 (22/11/2012)Last updated : 16:21 (22/11/2012)
செப்டம்பர் 21ம் தேதி வெளியீடு என்று விளம்பரம் செய்யப்பட்டது 'நடுவுல கொஞ்சம்  பக்கத்த காணோம்'. அப்படம் வெளியாகும் முன்பு பத்திரிகையாளர்கள், முன்னணி  இயக்குநர்கள் என படம் பார்த்த பலரும் பாராட்டினார்கள்.

அச்சமயத்தில் 'நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்' படத்திற்கு தமிழகம் முழுவதும்  35 திரையரங்குகள் மட்டுமே கிடைத்தது. ஆனால் தற்போது இப்படத்திற்கு பெரும்  எதிர்ப்பார்ப்பு இருக்கிறது.

'நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்' படத்தினை தற்போது 'ஆரோகணம்' படத்தின்  தயாரிப்பாளர் சதீஷ்குமார் வாங்கி நவம்பர் 30ம் தேதி வெளியிட திட்டமிட்டு இருக்கிறார்.  எனவே 'நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்' படக்குழு பத்திரிகையாளர்களை மீண்டும்  சந்தித்தது.

அங்கு பேசிய அனைவருமே இப்படம் தாமதமாக வெளியாவதில் எங்களுக்கு மிகப்பெரிய  சந்தோஷம்.தற்போது இப்படம் தமிழகம் முழுவதும் 150 திரையரங்குகளில்  வெளியாகிறது என்றார்கள்.

அப்போது பேசிய விஜய் சேதுபதி " 'பீட்சா' படத்திற்கு கிடைத்த வரவேற்பு மிகவும்  சந்தோஷமாக இருக்கிறது. 'நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்' படமும் கண்டிப்பாக  வரவேற்பு பெரும் என்பதில் சந்தேகமில்லை.

உங்களுக்கு திரையிட்டு காட்டிய போது நீங்கள் கைதட்டி ரசித்தது எங்களுக்கு மிகப்பெரிய  சந்தோஷத்தினை கொடுத்தது. அச்சமயத்தில் 35 திரையரங்குகள் தான் கிடைத்தது..  அந்த நேரத்தில் படத்தினை அப்புறம் வெளியிடலாம் என்ற முடிவு எடுத்த  தயாரிப்பாளருக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.

படத்தில் சுமார் 20 நிமிட காட்சிகளை நீக்கி படத்தினை இன்னும் மெருக்கேற்றி  இருக்கிறார்கள். இப்படத்தினை தொடர்ந்து புதுமுக இயக்குனர்கள் இயக்கும் 'ரம்மி',  'சூது கவ்வும்' என வித்தியாசமான கதையம்சங்கள் கொண்ட படங்களில் நாயகனாக  நடிக்கிறேன் " என்றார்.

'நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்' படத்தின் தெலுங்கு மற்றும் இந்தி ரீமேக்  உரிமையையும் விற்று விட்டார்கள்.இரண்டு உரிமையையும் நடிகர் பிரசாந்தின் தந்தை  தியாகராஜன் வாங்கியிருக்கிறார்.

கோலிவுட்டில் இது ஒரு புது ட்ரென்ட்தான்.இனி நல்ல படமாக எடுத்தும் திரையிட  தியேட்டர்கள் கிடைக்கவில்லை என்று தவிக்கும் தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குனர்கள்,  இந்த ரூட்டிலேயே போகலாம் போல!ஈரோட்டில் தேவி அபிராமியில் ரிலீஸ் 




நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் - சினிமா விமர்சனம்

 

http://www.adrasaka.com/2012/12/blog-post_8939.html

 http://www.vizhi.net/wp-content/uploads/2012/11/Neerparavai_12.jpg
2. நீர்ப்பறவை 

பலரும் மிக எதிர்பார்ப்போடு இருக்கும் படம் : நீர்ப்பறவை. சமீபத்து பாடல்களில் மனதை பெரிதும் கவர்வது இப்பட பாடல்கள் தான் !  


கலைஞரில் இப்படத்து பாடல்களை நிஜத்தில் பாடியவர்களே வந்து பாடிக்காட்ட,  பட காட்சிகளையும் சற்று காண்பித்தனர். கடலோர கவிதைகள் போல கடலை ஒட்டி நடக்கும் ஒரு காதல் கதையாகவே தோன்றுகிறது. கூடவே தந்தைக்கும் மகனுக்கும் உள்ள பாசமும், மீனவர் பிரச்னையும் கதையில் தொட்டு செல்ல கூடும். ஹீரோயின் சுனைனா செம அழகு. மீனுக்கு சிறு மீனுக்கு  பாடல் திரையாக்கம் லட்சக்கணக்கான சுனைனா ரசிகர்களுக்காக டெடிகேட் செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது :)    



ரகுநந்தன் இசையில், “பரபர பறவை” என்கிற அட்டாசமான பாட்டு பாடிய  இசை அமைப்பாளர் ஜி. வி.பிரகாஷ் குமார்    ” எல்லா மெட்டையும் கேட்டு விட்டு, இது தான் நிச்சயம் பெரிய ஹிட் ஆகும் என இந்த பாட்டை செலக்ட் செய்து பாடினேன் ” என்றார் சிரித்தவாறே. 


:"கிறிஸ்தவர்களின் மனதை புண்படும் படி பாடல் எழுதிய வைரமுத்து, பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்' என, போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் தரப்பட்டு உள்ளது.

சீனு ராமசாமி இயக்கியுள்ள, "நீர்ப்பறவை' எனும் சினிமா படத்தில், இடம் பெற்றுள்ள பாடல்கள், கிறிஸ்தவர்களின் மனதை புண்படும்படி எழுதப்பட்டு இருப்பதாக, எதிர்ப்பு கிளம்பியது.

இதையடுத்து, பாடலாசிரியர் வைரமுத்து வீடு மற்றும் அலுவலகத்திற்கு, போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

இந்திய கிறிஸ்தவ உரிமை இயக்கத்தைச் சேர்ந்தவர்கள், நேற்று போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர்.

அதன் விவரம்:"நீர்ப்பறவை' சினிமா படத்தில், கிறிஸ்தவ பெண்களை கேவலமாக சித்தரித்தும், பைபிளை இழிவுபடுத்தும் வண்ணம், பாடல்கள் எழுதப்பட்டுள்ளன. வசனங்களும், இழிவுபடுத்தும் நோக்கத்தில் எழுதப்பட்டு இருக்கலாம் என, சந்தேகிக்கிறோம். பாடலாசிரியர் வைரமுத்து மற்றும் தயாரிப்பாளர்கள் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லையெறால், தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்தப்படும்.இவ்வாறு, அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளதுl

ஈரோடு அபிராமியில் ரிலீஸ்  

பட விமர்சனம் படிக்க 


அட்ரா சக்க: நீர்ப்பறவை - சினிமா விமர்சனம்


-http://www.adrasaka.com/2012/11/blog-post_9009.html
 http://www.telugunow.com/wp-content/uploads/2012/10/Krishnam-Vande-Jagadgurum-t.jpg?5c1bd2
 3. Krishnam Vande Jagadgurum -  கம்யம், வேதம் படங்களை இயக்கிய க்‌ரிஷின் அடுத்த படம் Krishnam Vande Jagadgurum. தெலுங்கு தெ‌ரியாமல் மொழிபெயர்த்தால் பெய‌ரின் கடைசி எப்படிப் பார்த்தாலும் குருமா என்றே வருகிறது. எதற்கு வம்பு, ஆங்கிலத்திலே படித்துக் கொள்ளுங்கள்.இதில் கம்யம் காதல்னா சும்மா இல்லை என்ற பெய‌ரில் தமிழில் ‌ரிமேக் செய்யப்பட்டது. இரண்டாவது படமான வேதத்தை க்‌ரிஷ்ஷே வானம் என்ற பெய‌ரில் தமிழில் எடுத்தார். தெலுங்கில் சூப்பர்ஹிட்டான இரண்டும் தமிழில் ரொம்ப சுமாராகவே போனது. மூன்றாவது படத்தை தமிழ் தெலுங்கு இரு மொழிகளில் எடுத்திருக்கிறார் க்‌ரிஷ். நயன்தாரா, ராணா நடித்துள்ளனர். ராணாவின் முதல் தமிழ்ப் படமாக இருக்கப் போகும் இதற்கு மணிசர்மா இசையமைத்துள்ளார்.தமிழ்ல ஓங்காரம் என ரிலீஸ் ஆகுது


http://www.hamaramovie.net/wp-content/uploads/2012/10/Krishnam-Vande-Jagadgurum-Movie-stills-550x297.jpg



ஸ்ரீராமராஜ்ஜியம் என்ற தெலுங்கு படத்தில், சீதை வேடத்தில், பவ்யமாக நடித்த நயன்தாரா தற்போது ராணாவுடன் நடித்துள்ள, கிருஷ்ணம் வந்தே ஜெகத்குரும் என்ற படத்தில் கிளாமராக நடித்துள்ளார்.
இப்படம், ஓங்காரம் என்ற பெயர் மாற்றத்துடன் தமிழுக்கும் வர உள்ளது. இதுபற்றி நயன்தாரா கூறும் போது, 
ஸ்ரீராமராஜ்ஜியம் படத்தில் சீதை வேடம் என்பதால், அந்த கரக்டருக்கு ஏற்ப, மாறி நடித்தேன். ஆனால், சாதாரண மாடர்ன் கரக்டர்கள் என்கிற போதும், 
முழுசாக போர்த்திக் கொண்டு நடித்தால், ரசிகர்களிடம் எடுபடாது. 
அதனால் தான் ராணாவுடன் நடித்த படத்தில் கதைக்கும், காட்சிக்கும் அவசியப்பட்ட இடங்களில் சற்று கிளாமராக நடித்தேன். 
மற்றபடி, ஓவராக கிளாமர் காண்பிக்கவில்லை. தமிழிலும், அஜீத்துடன் நடிக்கும் படம், ஆர்யாவுடன் நடிக்கும், ராஜாராணி படம் ஆகியவற்றில், ரசிக்கத் தூண்டும் வகையில், கிளாமராக நடித்து வருகிறேன் என்கிறார்.
கிருஷ்ணம் வந்தே ஜெகத்குரும் என்ற படத்தை விளம்பரப்படுத்துவதற்காக ராணா- நயன்தாரா ஜோடி மும்பைக்கு வரவிருக்கிறார்களாம்.
 ராணா, நயன்தாரா சேர்ந்து நடித்துள்ள தெலுங்கு படம் கிருஷ்ணம் வந்தே ஜெகத்குரும்.
நயன்தாரா படுகவர்ச்சியாக நடித்துள்ள இந்த படத்தை விளம்பரப்படுத்த நாயகி, நாயகன் இருவரும் இணைந்து பல்வேறு முக்கிய நகரங்களுக்கு செல்கிறார்களாம்.


மேலும் இப்படத்தை இந்தியில் டப் செது வெளியிடும் திட்டமும் உள்ளது என்று கூறப்படுகிறது.


இந்த படத்தின் படப்பிடிப்பின் போது ராணாவும், நயனும் நல்ல நண்பர்களாகி விட்டனராம். ஆனால் அவர்கள் டேட் செய்வதாகவும் பேச்சு அடிபடுகிறது.
இந்நிலையில் அவர்கள் மும்பை வரும்போது அங்கிருந்து கிளம்பி வேறு எங்காவது செல்லத் திட்டமிட்டுள்ளாராம் பிரபுதேவா.


நயன்தாராவைப் பிரிந்த பிறகு பிரபுதேவா மும்பையில் தங்கி இந்தி படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். இந்நேரத்தில் முன்னாள் காதலியை சந்திப்பது நன்றாக இருக்காது என்று நினைக்கிறாராம்.


Krishnam Vande Jagadgurum - சினிமா விமர்சனம்

http://www.adrasaka.com/2012/12/krishnam-vande-jagadgurum.html
 



http://www.beyondhollywood.com/uploads/2012/05/Rachel-McAdams-on-the-set-of-Passion-2013-Movie-Image.jpg
4.  THE PASSION -A young businesswoman plots a murderous revenge after her boss and mentor steals her idea.


 "Are you kidding me?" "is this a joke?" these were the questions I asked to writers, producer, director and actors who involved in this movie as well as to the critics who gave high ratings to it. Bad scenario, bad acting (excluding Rachel McAdams). This movie reminded me of the movie Room in Rome which also tried so hard make a terrible scenario to look attractive with girl to girl action. 



I'm not a movie critic or somebody who can understand from cinematography etc. I'm just a keen movie watcher who watches average of 60 movies a year. According to me this is a terrible movie and feel like this is my responsibility to warn people not to waste their time and movie to watch a beyond mediocre movie.

ஈரோட்டில் வி எஸ் பி யில் ரிலீஸ்
நன்றி - விகடன் , வல்லமை , தினமலர் , மற்றும் அனைத்து சினிமா இதழ்கள்

 http://cafebollywood.in/wp-content/uploads/mvbthumbs/img_12561_talaash-music-launch-at-red-light-area.jpg

5. talash - அமீர்கானின் தலாஷ் படத்தில் ஒரு பாடல் காட்சியில் ரஜினி நடிக்கிறார் என்றும், இதற்காக அவருக்கு ரூ 15 கோடி சம்பளம் என்றும் செய்திகள் வெளியாகியுள்ளன.

பாலிவுட்டின் முன்னணி நடிகர்கள், தங்கள் படங்களில் ரஜினி நடிக்கிறார் என்று செய்தி பரப்புவது வழக்கமாகி வருகிறது.


இதற்கு முன் ஷாரூக்கானின் ரா ஒன் படத்தில் ஒரு காட்சியில் வந்தார் ரஜினி. ஆனால் அது ரஜினிதானா என்று கேட்கும் அளவுக்கு படு செயற்கையாக எடுத்திருந்தனர்.


அடுத்து தூம் 3-ல் ரஜினியை நடிக்க வைக்க முயற்சி நடப்பதாக தயாரிப்பாளர் தரப்பிலிருந்தே செய்தி வெளியிட்டுள்ளனர்.

இப்போது அமீர்கான் முறை. தனது தலாஷ் படத்தில் ரஜினியை ஒரு பாடல் காட்சியில் தோன்ற வைக்க தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளாராம்.


இந்தக் காட்சியில் ரஜினி மட்டுமல்லாமல், அமிதாப், தர்மேந்திரா உள்பட பாலிவுட் பிரபலங்களும் தோன்றுவார்களாம். கபில்தேவ், சச்சின் உள்ளிட்ட கிரிக்கெட் பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், சமூக ஆர்வலர்கள் சிலரும் கூட இந்த பாடலில் இடம்பெறவிருக்கிறார்களாம்.


பல்வேறு நாடுகளில் உள்ள 50 லொகேஷன்களில், ரூ 50 கோடி செலவில் இந்தப் பாடல் காட்சி படமாகப் போகிறதாம்.


இந்தப் பாடலில் தோன்ற ரஜினிக்கு சம்பளம் ரூ 15 கோடி என செய்தி வெளியாகியுள்ளது. இது உண்மையாக இருந்தால், உலகிலேயே ஒரு பாடலில் தோன்ற அதிக சம்பளம் பெற்ற நடிகர் என்ற பெருமையும் ரஜினிக்கே கிடைக்கும்!


http://mimg.sulekha.com/hindi/talaash/stills/talaash-cinema-035.jpg

A cop, a housewife and a prostitute get entangled in a mystery that links their lives in unexpected ways.  


Went for Talaash screening expecting a great thriller but what i witnessed was sheer magic on screen.

Story starts with an ostensible accident of a star followed by police investigation.Chief investigation officer is played by Aamir Khan. The story of Talaash is not only about suspense element ,suspense is just a part of beautiful lesson portrayed in Talaash i.e. " Coming to terms with loss". Go with high expectations and you will be pleasantly shocked to see the brilliance.

Songs Jee le Zara and Muskanein look exceptional on screen.

Can't help,have to give it a 10/10.



Talaash - சினிமா விமர்சனம்

http://www.adrasaka.com/2012/12/talaash.html
 





http://movieszone.in/wp-content/gallery/talaash/talaash-movie-stills-rani-mukherji-hot.jpg

நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம்


http://sphotos-a.xx.fbcdn.net/hphotos-ash4/c0.0.403.403/p403x403/305539_522349147778113_1533270271_n.jpg
லியோ விஷன் நிறுவனத்தின் சார்பில் வி.எஸ்.ராஜ்குமார் தயாரிக்கும் படம், நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம். விஜய் சேதுபதி, காயத்ரி நடிக்கிறார்கள். வேத்சங்கர் இசை அமைக்கிறார். சி.பிரேம்குமார் ஒளிப்பதிவு. படம் பற்றி இயக்குனர் பாலாஜி தரணிதரன் கூறியதாவது:


நல்ல கதை புத்தகம் படிக்கும்போது நடுவில் சில பக்கங்கள் காணாமல் போனால் அந்தக் கதையின் தொடக்கமும் முடிவும் அறுந்து போகும். அதுமாதிரி ஒரு மனிதனின் வாழ்க்கையில் இடையில் சில காலம் மறந்து போனால், என்னாகும் என்பதுதான் கதை. படத்தின் ஒளிப்பதிவாளர் பிரேம் எங்கள் நண்பர். சிறுவயதில் ஒரு விபத்தில் சிக்கிய அவருக்கு சில வருடம் என்ன நடந்தது என்பது மறந்துவிட்டது. நாங்கள் நண்பர்கள் இணைந்து அவருக்கு சிகிச்சை அளித்தோம். ஆனாலும் அவருக்கு அந்த காலகட்டம் நினைவுக்கு வரவில்லை. இதை அடிப்படையாக வைத்து இந்தக் கதையை காமெடி கலந்து கொடுக்கிறோம். ஒளிப்பதிவாளர் பிரேமாக, விஜய் சேதுபதி நடிக்கிறார். எனது கேரக்டரில் ராஜ்குமார் என்பவர் நடிக்கிறார். சம்பவத்தில் தொடர்புடைய சிலர், அவர்கள் கேரக்டரிலேயே நடிக்கிறார்கள். தமிழில் இந்தப் படம் புது முயற்சியாக இருக்கும்.


நன்றி - விகடன்


புதியவர்கள் இணைந்து உருவாக்கி உள்ள படமான நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம் படம் கடந்த 14ந் தேதியே வெளிவந்திருக்க வேண்டியது. ஆனால் கடைசி நேரத்தில் சரியான தியேட்டர் கிடைக்காமல் அடுத்த மாதத்திற்கு தள்ளி வைத்திருக்கிறார்கள். முதலில் திரையிட ஒப்புக் கொண்ட தியேட்டர்கள். கடைசி நேரத்தில் வேறொரு பெரிய படத்துக்கு தியேட்டர்களை ஒதுக்கி நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம் படத்துக்கு காலைக் காட்சி, பகல் காட்சி என்று ஒதுக்கிவிட்டார்கள். இதனால் பயந்து போன தயாரிப்பாளர் படத்தை வெளியீட்டை தள்ளி வைத்துவிட்டார். பத்திரிகையாளர் காட்சியும் திரையிடப்பட்டுவிட்ட நிலையில் இப்போது விமர்சனம் எழுதி விடாதீர்கள். என்ற கோரிக்கையையும் வைத்திருக்கிறார். ஒரு சிறிய விபத்தால் சில வருடங்களை நினைவு இழக்கும் ஒருவனின் நிஜக் கதையை சொல்லும் படம்.

நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் படத்தில் வரும் "ஆம்லேட் போட்டா முட்டையை காணோம்,நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம்" என்ற பாடலின் 50 செகன்ட்ஸ் ஓடக் கூடிய வீடியோ இன்று முன்னோட்டமாக வெளியிடப்பட்டுள்ளது.


மிகவும் வித்தியாசமான முறையில் எடுக்கப்பட்டுள்ள இந்தப் பாடலைப் பார்க்கும் போதே, முழுப் பாடலையும் பார்க்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றுகிறது. பாடலின் பின்னணி இசை, படமாக்கப் பட்ட விதம் ஆகியவை பிரமிப்பூட்டும் வகையில் அமைந்துள்ளது. ரசிகர்களுக்கு ஒரு சந்தோசமான அதிர்ச்சியாக, மைனா படத்தில் இடம் பெற்ற ஜிங்ஜிக்கா என்ற

குத்துப்பாடலுக்கு நடனம் ஆடிய டான்ஸ் மாஸ்டர் பாபி இந்தப் பாடலுக்கும் ஆடியுள்ளார். ஜிங்ஜிக்கா பாடலுக்குப் பின் வேறு எந்த பாடலுக்கும் முகத்தைக் காட்டாத பாபி, நீண்ட இடைவெளிக்குப் பின் "ஆம்லேட் போட்டா முட்டையை காணோம்" பாடலுக்காக ஆடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


இது குறித்து கூறிய பாபி," மைனா படத்திற்குப் பிறகு வேறு பாடல்களில் ஆடுவதற்கு எனக்கு விருப்பம் இல்லை. எனவே தான் வாய்ப்புகளை தவிர்த்து வந்தேன்.ஆனால் "ஆம்லேட் போட்டா முட்டையை காணோம்" பாடலைக் கேட்கும் போதே, அது நிச்சயம் பெரிய வெற்றி பெறும் என்று எனக்குத் தோன்றியது.மேலும் 2012 ஆம் ஆண்டின் வெற்றிப் பாடலாகவும் இருக்கப் போகிறது” என்று கூறினார்.


நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் படத்தில் வரும் "ஆம்லேட் போட்டா முட்டையை காணோம்,நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம்" என்ற பாடலின் 50 செகன்ட்ஸ் ஓடக் கூடிய வீடியோ இன்று முன்னோட்டமாக வெளியிடப்பட்டுள்ளது.


மிகவும் வித்தியாசமான முறையில் எடுக்கப்பட்டுள்ள இந்தப் பாடலைப் பார்க்கும் போதே, முழுப் பாடலையும் பார்க்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றுகிறது. பாடலின் பின்னணி இசை, படமாக்கப் பட்ட விதம் ஆகியவை பிரமிப்பூட்டும் வகையில் அமைந்துள்ளது. ரசிகர்களுக்கு ஒரு சந்தோசமான அதிர்ச்சியாக, மைனா படத்தில் இடம் பெற்ற ஜிங்ஜிக்கா என்ற குத்துப்பாடலுக்கு நடனம் ஆடிய டான்ஸ் மாஸ்டர் பாபி இந்தப் பாடலுக்கும் ஆடியுள்ளார்.


ஜிங்ஜிக்கா பாடலுக்குப் பின் வேறு எந்த பாடலுக்கும் முகத்தைக் காட்டாத பாபி, நீண்ட இடைவெளிக்குப் பின் "ஆம்லேட் போட்டா முட்டையை காணோம்" பாடலுக்காக ஆடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


இது குறித்து கூறிய பாபி," மைனா படத்திற்குப் பிறகு வேறு பாடல்களில் ஆடுவதற்கு எனக்கு விருப்பம் இல்லை. எனவே தான் வாய்ப்புகளை தவிர்த்து வந்தேன்.ஆனால் "ஆம்லேட் போட்டா முட்டையை காணோம்" பாடலைக் கேட்கும் போதே, அது நிச்சயம் பெரிய வெற்றி பெறும் என்று எனக்குத் தோன்றியது.மேலும் 2012 ஆம் ஆண்டின் வெற்றிப் பாடலாகவும் இருக்கப் போகிறது” என்று கூறினார்.

நன்றி - தினமலர்




அட்ரா சக்க: நீர்ப்பறவை - சினிமா விமர்சனம்-http://www.adrasaka.com/2012/11/blog-post_9009.html








விஜய் ரசிகைகள் தலையணை மந்திரம் போடமாட்டாங்க, ஏன்னா.....

1.திருமணம் ஆன ஒல்லி கில்லி விஜய் ரசிகைகள் தலையணை மந்திரம் போடுவதை விரும்பமாட்டார்கள் 1, தல 2 மந்த்ரா ( "தல" அணை "மந்த்ரா") 




------------------------



2. ரஜினி ,அஜித் , விஜய் பட வசூலை முறியடித்தது .டாஸ்மாக் 270கோடி வசூல் 



---------------------


3. யார் டாப் விஜய்? அஜித்? 'பூவா' 'தலையா' போட்டுப் பார்த்தேன்.விழுந்தது " தல' ;-)) # சஸ்பென்ஸ் ஸ்டோரி 




----------------------


4. எல்லோரும் பொதுவாக இரும்பு மனுஷி என்று சொல்வது கன்னத்தில் பளார் வாங்கிய பின் அவரவர் மனைவியை் 




--------------------------


5. மனைவியின் பிரசவத்தை அருகில் இருந்து பார்க்காததற்கு 1 அந்த அளவு மனோபலம் இல்லை 2 பின் வரும் நாட்களில் நினைவை விட்டு அகலாது(கிக் போயிடும்



---------------------


6.



----------------------


7.கோட்டாறு சவேரியார் தேவாலயத்தில் ரூ. 8 லட்சத்துடன் காணிக்கைப் பெட்டி மாயம்: # கோட்டை விட்டாங்களா?ஆட்டையைப்போட்டாங்களா? 


-------------------


8. திருமணமான அப்பாவி ஆண்கள் அதிகம் பிரயோகிக்கும் சொல் "ம் ம் ",பெண் அதிகம் நொடிக்கும் சொல் - ம்க்கும் 



-----------------------


9. மலயாளத்துல ரீமா கல்லிங்கள்னா கல் போல் மனசுன்னு அர்த்தமா?



------------------------


10. பகல் டைம்ல சம்சாரம் சிரிச்சுப்பேசுனா நேத்து நாம துவைச்சுகாாயப்போட்ட சேலைகளை மடிச்சு வைக்க நைஸ் பண்றாங்கனு அர்த்தம் # உஷார் 



---------------------------


11. வீட்டில் இருந்த 4 பீரோவையும் சுத்தம் பண்ணும் பணியில் ஈடு்பட்டபோது 245 சேலைகள் கண்டேன்.எதுக்கு இத்தனை?னா டார்கெட் 365 ஆம்.அவ்வ் 



----------------------


12. டியர் ,மயில் மாதிரி உன்னோட..



. ஐ ஜாலி அத்தான் ,கூந்தலைத்தானே சொல்றீங்க ?


 ம்க்கும் ,குரலை 



-------------------


13. கணவரை சாத்துவேன்!- ஆர்த்தி கணேஷ் # எல்லா வீட்லயும் நடக்கறதுதானே?புத்சா ஏதாவது சொல்லம்மா 




---------------------


14. ஜட்ஜ் - உனக்கு பிடிக்கலைன்னா டைவர்ஸ் பண்ணி இருக்கலாமே ஏன் கொலை செஞ்சே? 



கைதி - என்னை மாதிரி வேற எந்த ஆணும் பாதிக்கப்படக்கூடாதுனு 



---------------------


15. பேய் பிடிச்ச மாதிரி பே -னு நிக்கும் அழகிதான் பேரழகியா? 



--------------------


16. தினத்தந்தி டி வி யில் கன்னித்தீவு நெடுந்தொடர் வருமா? 



---------------------


17. உங்க கம்பெனி சோடாவை ஒரு மாசம் டெய்லி குடிச்சா ஒல்லி ஆகலாம்னு சொன்னீங்க ஆகலையே? 



சாரி .குடிச்சிட்டு டெயிலி 25 கிமீ ஓடனும் 



------------------------------


18. ஸாரி .டியர்.மேரேஜ்க்கு முன்னாடியே தப்பு பண்ணிட்டோம். 



ஸாரி.தூக்கக்கலக்கம்.கவனிக்கலை.ஒன்ஸ் மோர் ப்ளீஸ் 



-------------------------


19.போலீஸ் - டேய்.யார்றா இந்தப்பொண்ணு? ஓட்டிட்டு வந்ததா? 



 சார்.லைசன்ஸ் , பர்மிட் எல்லாம் இருக்கு 



----------------------


20. என்னை லவ் பண்றதா சொல்லிட்டு அவ கூட சுத்தறீங்க ? 


உன்னை மட்டும் லவ் பண்றேன்னு எப்பவாவது சொன்னேனா? 



---------------------



21. எனக்கு இருப்பது 99% பேர் ஆண்கள் தான் - நடிகை சோனா # மேடம், ப்ளீஸ், நீங்களாவது பெண்களுக்கு 33 % ஒதுக்கக்கூடாதா?



-----------------------


22. டாக்டர், செல்ஃபோன்ல வர்ற தங்கிலீசு படிச்சதால கண் வலிக்குது , என்ன பண்ண?



 உங்க கிட்டே இருக்கும் செல் ஃபோனை என் கிட்டே கொடுத்துடுங்க



-----------------------


23. 5 பைசா செலவு பண்ணாத நீ உன் சம்சாரத்துக்கு மட்டும் நகை செஞ்சியே, எப்டி?


மூக்குத்தி தான் வாங்கிக்குடுத்தேன். அப்டியாவது வலிக்கட்டும்னு



-------------------------


 24, காதலுக்கும், காமத்துக்கும் என்ன வித்தியாசம்னா காதல் = பரத் நடிச்ச படம் , காமம் ஷகீலா ஆண்ட்டி நடிச்ச படம்



----------------------


25. சார், சமீபகாலமா உங்க விமர்சன எழுத்துக்களில் ஒரு துள்ளல் தெரிது, எப்டி? 


 ஆட்டோல போகும்போது லேப்டாப்ல டைப் பண்ணுவேன்




-------------------------


26. தருமர் @ கல்யாண மாலை - எனக்கு மனைவியா வர்ற பொண்ணு என் தம்பிகள் 4 பேரையும் அட்ஜஸ் பண்ணி என் கிட்ட அனுசரனையா இருக்கனும்




-----------------------


27. எல்லா பஸ்ஸிலும் ஒவ்வொரு சீட்டின் ஓரமும் ஒரு பிளக் பாயிண்ட் இருந்தா ஆண்ட்ராய்டு ஃபோன்ல சார்ஜ் நிக்கலைன்னு தமிழன்  வருத்தப்படமாட்டான்



---------------




28. ஏகப்பட்ட லட்டு அக்கம் பக்கம் வீட்டில் இருந்து ஓ சி யில் கிடைத்தால் அதை ஸ்வீட் ஸ்டாலில் செகன்ட்ஸில் விற்கவும்




---------------------


29. பாரக் ஒபாமா துப்பாக்கி படத்தை 20 முறை பார்த்தார்.பின் இந்தியாவின் மீது போர் தொடுப்பேன் என்றார் - முருகதாஸ் பெருமிதம் ( சும்மா )




--------------------



30.  திரைக்கதை தயார், மீண்டும் அஜித்துடன் இணைய விரும்பும் முருகதாஸ் # ஸ்லீப்பர் செல்ஸ் கொலையாளிகளை வாக்கிங் போய்ட்டே ஹீரோ என் கவுன்ட்டர்?





-----------------------


Thursday, November 29, 2012

நீர்ப்பறவை


நம்பர் ஒன் ஆக வேண்டாம்!





நேற்று வரை கடற்கரை வாசம். கஷ்டம், நஷ்டம், கண்ணீர் எல்லாம் பார்த்த நாள்கள். மக்களோடு மக்களாக வாழ்வது ஒரு கலைஞனுக்கு முக்கியம். இப்போதுதான் அது எனக்கு கிடைத்திருக்கிறது.'' பக்குவத்துடன் பேசுகிறார் நாயகன் விஷ்ணு. "நீர்ப்பறவை' டப்பிங் முடிந்த நாளில் பேசியதிலிருந்து...




.
அறிமுக சினிமாவில் இருந்தே அதிக நிதானம் காட்டுகிறீர்கள். கதைகளுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்து வருகிறீர்கள். இருந்தும் முதல் படத்தை தவிர மற்ற படங்கள் எதற்கும் பெரிய அடையாளம் இல்லையே?




எனக்கு உண்மையில் கிரிக்கெட் மீதுதான் உயிர். இந்தியாவுக்காக விளையாட வேண்டும் என்ற கனவுதான் அதிகம். ஏனோ சரியாக அமையவில்லை. அதன் பின்தான் சினிமாவுக்கு வந்தேன். வீட்டில் பெரிய கஷ்டம் இல்லை. கேட்டதெல்லாம் கொடுக்கிற வீடுதான். ஆனாலும் சினிமாவில் மட்டும் இடம் கிடைக்கவில்லை. தொடர் முயற்சிகள், சினிமா சம்பந்தமான ஆள்களுடன் சந்திப்புகள் என நாள்கள் கடந்து கொண்டே இருந்தது. சினிமா அவ்வளவு பெரிய விஷயமாக இருந்தன. அதனாலேயே நிச்சயம் இதில்தான் பயணிக்க வேண்டும் என்று முடிவெடுத்து விட்டேன்.



 அப்போதுதான் இயக்குநர் சுசீந்திரன் சார் அழைத்து வெண்ணிலா கபடி குழு வாய்ப்பு தந்தார். நல்ல படம், எனக்கான நல்ல அடையாளத்தை உருவாக்கி தந்தது. கதைதான் ஹீரோ என்பதை நம்புகிற அளவுக்கு படம் பார்த்தவன் நான்.சினிமாவுக்கு வந்த பின்பும் அதுதான் நிஜ சினிமாவாக இருக்கும் என எண்ணினேன். ஏதோ சில காரணங்கள் சில விஷயங்கள் கை கூடி வரவில்லை. எல்லாமே நம்பி நடித்த படங்கள்தான். சில இடங்களில் தவறு நடந்திருக்கலாம். ஆனால் பெரிய பாதிப்பு இல்லை. இப்போது "நீர்ப்பறவை'. அவ்வளவு நம்பிக்கை கொடுத்திருக்கிறது. நிச்சயம் வேறுபட்ட சினிமா. நான் நினைத்த சினிமா இப்போதுதான் கிடைத்திருக்கிறது. இது என்னை நல்ல இடத்துக்கு கொண்டும் போகும்.




ஒரு படம் ஹிட் ஆனாலே நம்ம ஹீரோக்கள் தாறுமாறாக பிஸி ஆகி விடுகிறார்கள். ஆனால் நீங்கள் வருடத்துக்கு ஒரு படம் கூட நடிக்கவில்லையே?




ஒவ்வொரு ஹீரோவுக்கும் ஒரு பாணி. எனக்கென ஒரு வட்டம் இருக்கிறது. எந்த இடத்திலும் எந்த தவறும் செய்யக் கூடாதென கட்டுப்பாடுடன் இருக்கிறேன். அதற்குள் மட்டும்தான் என்னால் இயங்க முடியும். கிடைக்கிற இடத்தில் இருந்து விட்டு போகலாம் என நினைத்தால், ஒன்றுக்குமே ஆகாத படங்களில் நடித்துக் கொண்டே இருப்பேன். சினிமாவுக்கு வந்த வேகத்தில் இந்நேரம் 15 படங்களை கடந்திருக்கலாம். அது தேவை இல்லை. நான் பெரிய அழகன் இல்லை. மற்ற ஹீரோக்களுக்கு சவால் விடுகிற அளவுக்கு எனக்கு பலசாலியும் இல்லை.



எனக்கான இடம் ஒன்று இருக்கும். அதற்கு போராடிக்கொண்டு இருக்கிற சின்ன பையன் நான். என்னால் எந்த மாதிரியும் நடிக்க முடியும். "வெண்ணிலா கபடி குழு', "குள்ளநரி கூட்டம்", "துரோகி', "பலே பாண்டியா' எல்லாவற்றிலுமே தனித் தனி அடையாளங்கள். சாக்லேட் பாய் கேரக்டர் எனக்கு சரி வராது என்பது எனக்கே தெரியும். எல்லோருமே நல்ல அடையாளத்துக்குதான் வந்திருக்கிறோம். அது எனக்கும் வேண்டும். பல தரப்பட்ட கதைகளில் நடிக்க நிச்சயம் என் உடம்பு செட் ஆகும். அதனால்தான் நடித்த படங்களில் எல்லாவற்றிலுமே தனி அடையாளங்களை காட்டியிருக்கிறேன்




. அப்ப எந்த மாதிரியான சவாலான வேடம் வந்தாலும் ஏற்றுக் கொள்வீர்களா?



நிச்சயம். எனக்கு கிடைத்த வாய்ப்புகள் என்னோடு சினிமாவுக்கு வந்த ஹீரோக்களுக்கு கிடைத்திருக்கிறதா என்று தெரியவில்லை. எனக்கு கிடைத்த கேரக்டர்களும் அப்படி. காமெடி, ரொமான்ஸ், கிராமம் சார்ந்த கதை, சிட்டி பேஸ் கதைகள் என நடித்த நான்கு படங்களிலும் வித்தியாசம் காட்டியிருக்கிறேன். இதுவே நான் நல்ல சினிமாவுக்கான தேடலில் இருக்கிறேன் என்பதை காட்டும். ஒரே விதமான சினிமாக்கள் செய்வது என் எண்ணம் இல்லை. தமிழில் எதிர்பார்த்த கதைகள் இப்போதுதான் கூடி வந்திருக்கிறது. தேசிய விருது இயக்குநர் சீனுராமசாமி சார் இயக்கத்தில் நடிப்பது நல்ல விஷயம். எனக்கென எந்த பிராண்டும் இல்லை. தவறான முடிவை எடுத்து விட்டோம் என சொல்லி வருத்தப்படவும் ஒன்றும் இல்லை. எந்த மாதிரியான வேடத்துக்கும் நான் தயார். நான் கிரிக்கெட் வீரர். எந்த பந்தைப் போட்டாலும் சமாளிக்க வேண்டும். சினிமாவிலும் அப்படித்தான் இருப்பேன். நம்பர் ஒன் இடம் வேண்டாம். எல்லோருமே கவனிக்க வேண்டும். அது போதும்.

http://cdn3.supergoodmovies.com/FilesFive/nandita-das-about-neer-paravai-a1f5946e.jpg


ரொம்பவே எதார்த்தத்துக்கு பக்கத்தில் போய் படம் எடுப்பார் சீனுராமசாமி. கஷ்டம் அதிகமாக இருந்திருக்குமே?





ஆமாம். அவருடன் வேலை பார்த்தது நல்ல அனுபவம். எப்போதுமே நல்ல காட்சிகளுக்காக காத்திருப்பார். இயல்பாக, உண்மையாக வர வேண்டும் என்பதற்காக மெனக்கெடுவார். ""உங்கள் முகத்தில் ஒரு உண்மை இருக்கிறது. அதுதான் இந்த கதைக்கு வேண்டும். கதை சொல்லலாமா"" என்று கேட்டார். கதை கேட்டேன்.


""நான் இத்தனை வருடமாக இதற்குதான் காத்துக்கொண்டிருந்தேன். நடிக்கிறேன்.'' என என்னை அவரிடம் ஒப்படைத்து விட்டேன். இது வேண்டும், அது வேண்டும் என்கிற தேடலில் இருப்பாரே தவிர, நமக்கு முழு சுந்திரம் கொடுத்து விடுவார். ""இதுதான் காட்சி. உன்னால் எப்படி நடிக்க முடியுமோ அதை கொடு'' என்று சொல்லி விடுவார். நிச்சயம் அவரின் வேலை வித்தியாசமானது. இது மாதிரி ஒரு கதை பிடித்ததற்காகவே அவருக்கு விருது தரலாம். நாமெல்லாம் தினமும் சந்திக்கிற செய்தி. அது ஒரு செய்தியாகத்தான் நம்மை கடந்து போகிறது. அதற்கு தீர்வு சொல்ல ஒரு கதை. அந்த கதைக்கு நான் ஹீரோ. நிச்சயம் நல்ல பெயர் கிடைக்கும்.



ஒரு முத்த காட்சியில் நடித்தாலே இங்கு ஆயிரம் பிரச்னைகள். ஆனால் நீங்களோ சுனைனாவுக்கு எண்ணிக்கையில் அடங்காத முத்தங்கள் கொடுத்திருக்கிறீர்களாமே?



இயக்குநர் என்ன சொன்னாரோ அதைத்தான் செய்தேன். மற்றபடி கிசுகிசுக்களுக்கோ, பிரச்னைகளுக்கோ இடம் இல்லை. சுனைனாவும் இதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.இதுவரை என்னைப் பற்றி எந்த கிசுகிசுவும் வந்ததில்லை. என்னை இப்படியே விட்டு விடுங்கள்.



அப்புக்குட்டி தேசிய விருது வரைக்கும் போய் விட்டார். "பரோட்டா' சூரிக்கு தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத இடம் உருவாகி வருகிறது. உங்களுடன் வந்தவர்கள் ஒவ்வொரு இடத்துக்கு போய் விட்டார்கள். அவர்களையெல்லாம் பார்ப்பது உண்டா? அவர்களைத் தவிர வேறு யாரெல்லாம் உங்களுக்கு ஃப்ரெண்ட்ஸ்?




அப்புக்குட்டிக்கு தேசிய விருது கிடைத்ததில் எங்கள் எல்லோருக்கும் மகிழ்ச்சி. அதுவும் சுசீந்திரன் சார் படத்துக்கு. உனக்கு ஒரு தவிர்க்க் முடியாத இடம் இருக்குன்னு அப்புக்குட்டியிடம் சொல்லிக் கொண்டே இருப்பேன். அதற்கு இப்போது அர்த்தம் கொடுத்திருக்கிறார்.சூரியின் காமெடிக்கு நல்ல வரவேற்பு. அவ்வப்போது பார்ப்பது உண்டு. அடிக்கடி பார்க்கா விட்டாலும் நல்ல, அழகான நட்பு இன்னும் அப்படியே இருக்கிறது. சினிமாவில் எனக்கு யாரையும் தெரியாது. ஸ்டார் கிரிக்கெட்தான் எனக்கு பலரையும் நண்பனாக்கியது. விஷால், ஆர்யா, பரத், சாந்தனு எல்லோருமே எனக்கு நல்ல ப்ரெண்ட்ஸ். "நீர்ப்பறவை' வந்த பின் இன்னும் ஆழமான சில நட்புகள் நிச்சயம் கிடைக்கும்.
 நல்ல சினிமாவுக்கு உண்மை மட்டுமே போதும்!"



http://cdn4.supergoodmovies.com/FilesFive/6a7b8b4455af420b9ec86b8ac192547f.jpg


நன்றி - சினிமா எக்ஸ் பிரஸ் 


க.நாகப்பன்

'தென்மேற்குப் பருவக் காற்று’ படத்தில் கிராமத்தைக் கையாண்ட இயக்குநர் சீனுராமசாமி, கடலைக் களம் ஆக்கி இருக்கிறார் 'நீர்ப்பறவை’யாக.


 ''இது இலங்கைத் தமிழர்களின் கதையா?''



''நடுக்கடல்ல ஒரு படகில் பலர் இறந்துகிடக்கிறாங்க. அதில் ஒரு சிறுவன் மட்டும் உயிரோடு இருக்கான். தென் இலங்கையைச் சேர்ந்த அவனை ஒரு மீனவன் தமிழகத்துக்கு அழைச்சிட்டு வந்து வளர்க்குறான். அவன்தான் விஷ்ணு. இதுல புலம்பெயர்ந்த தமிழர்களின் வலியை 14 நிமிஷங்கள் சமரசம் இல்லாமல் பதிவு செஞ்சுருக்கேன். மத்தபடி முழுக்க கிறிஸ்துவ மீனவக் கிராமத்தின் அசலான பதிவு இந்தப் படம். 'நீர்ப்பறவை’ தண்ணீரில் இரை தேடும்.''





''வசனங்கள் ரொம்பக் காட்டமா இருக்கும்போலத் தெரியுதே?''



''ஜெயமோகன் வசனம் எழுதி இருக்கார். அதைத் திரைமொழிக்குத் தகுந்தபடி வலுவாக்கி இருக்கேன். சினிமாவுல எல்லாரும் ஜெயிக்கணும்னு நினைக்கிற ஒரே ஆத்மா சமுத்திரக்கனிதான். 'அண்ணே, நான் உங்க படத்துல நடிக்குறேன்’னு உரிமையாக் கேட்டார். 'நம்மகிட்ட ஒத்துமை இல்லை. 30 தொகுதி மீனவனுக்கு இருந்தாத்தான் நம்ம சத்தம் கேட்கும். இல்லைன்னா, அலை மாதிரி நம்ம சத்தம் நமக்குள்ளதான் இருக்கும்’னு  சமுத்திரக்கனி பேசுற ஒவ்வொரு வசனத்துலயும் உண்மை சுடும்.''




''படத்தில் அரசியல் அதிகமா?''



''கடல் அரசியல்தான் 'நீர்ப்பறவை’. கடல்தான் இந்த உலகத்துல மூத்த உசுரு. எல்லாவித இறக்குமதி, அந்நியப் படையெடுப்பு, மதம் வந்து இறங்கிய இடம்னு சகலமும் நடக்குற இடம். இப்போ அங்கே மீனவன் வாழ்றதுக்குப் பாதுகாப்பு இல்லை. உயிருக்கு உத்தரவாதம் இல்லை. ஒரே ஒரு தக்கையை எல்லையா வெச்சு இந்திய எல்லைக் கோட்டைத் தாண்டக் கூடாதுனு சொல்றாங்க. தக்கை ஒரு கிலோ மீட்டர் தொலைவுக்கு அங்கேயும் இங்கேயும் தள்ளிப்போகுது. கடலுக்கு நடுவே காம்பவுண்டு சுவரா இருக்கு? நாட்டுப் படகில் மீன் பிடிக்கப்போகும் சட்டை இல்லாத மீனவனை ஒரு அந்நிய நாடு சுடுறதுதான் உலகத்திலேயே மிகப் பெரிய வன்முறை. முப்படைகளும் கொண்ட இந்திய நாட்டின் கடலோரப் பிள்ளைகளை இன்னொரு நாடு சுட்டுக் கொல்றதை எப்படிப் பொறுத்துக்க முடியும்?  இதை எல்லாம் என் படம் கேட்கும்.''



''படம் முழுக்கப் பிரச்னைகள் மட்டும்தானா?''



''இரானில் இருக்கும் இயக்குநர்கள் இரான் பிரச்னைகளைத்தான் படமா எடுக்குறாங்க.  நான் தமிழ்நாட்டு மீனவர்களின் கதையை எடுக்குறேன். எதிரிகள்கூட இந்தப் படத்தைப் பார்த்தா இரக்கப்படுவாங்க. மற்றபடி விஷ்ணுவுக்கும் சுனைனாவுக்கும் இடையிலான சுவாரஸ் யமான, நெகிழ்வான காதல் கதை இருக்கு.''



''கதைக்கு நந்திதாதாஸ் எப்படித் தேவைப்பட்டாங்க?''



''நம்ம மீனவர்களின் அபயக் குரல் நாடு முழுக்க ஒலிக்கணும்னு ஆசைப்பட்டேன். உடனே, நந்திதாதான் எனக்கு நினைவுக்கு வந்தாங்க. நான் இதுவரை நேரில் பார்த்திராத நண்பர் ரவி.கே.சந்திரன்,அவங்க கிட்ட 'தைரியமா சீனுராமசாமி படத்துல நடிக்கலாம்’னு சொல்லி இருக்கார். கதையைக் கேட்ட நந்திதா, 'படத்துல நிறைய உண்மைகள் இருக்கு. ஆனால், சினிமாவுக்கு உண்மை போதுமா?’னு கேட்டாங்க. நான் நல்ல சினிமா வுக்கு உண்மை மட்டுமே போதும்னு சொன்னேன். நம்பிக்கையா நடிச்சுக் கொடுத் தாங்க.''

நன்றி - விகடன்

அட்ரா சக்க: நீர்ப்பறவை - சினிமா விமர்சனம்-http://www.adrasaka.com/2012/11/blog-post_9009.html





ரஜினி - மணிரத்னம் இணையும் படம் - காமெடி கலாட்டா



http://www.cinesouth.com/images/new/pwed-4.jpg



ரஜினியின் புதுப்படத்துக்கான கதை விவாதம் துவங்கியுள்ளது. இந்த படத்தை மணிரத்னம் இயக்குவார் என தகவல் வெளியாகியுள்ளது.



ரஜினி உடல் நலம் குணமான பிறகு 'கோச்சடையான்' படத்தில் நடிக்க துவங்கினார். இப்படத்தை அவரது மகள் சவுந்தர்யா இயக்கினார். படப்பிடிப்பு முடிந்து 'டப்பிங்' ரீ ரிக்கார்டிங் பணிகள் நடக்கின்றன. விரைவில் ரிலீசாக உள்ளது.



இதையடுத்து புதுப்படத்தில் நடிக்க தயாராகிறார். இந்த படத்தை இயக்குவதற்கு மணிரத்னத்தை அவர் தேர்வு செய்துவிட்டதாக கூறப்படுகிறது. இருவரும் சமீபத்தில் இது தொடர்பாக பேச்சுவார்த்தைகள் நடத்தியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.



கதை விவாதமும் துவங்கி விட்டதாம். மணிரத்னம் ஏற்கனவே ரஜினியை வைத்து தளபதி படத்தை டைரக்டு செய்தார். அப்படம் வெற்றிகரமாக ஓடியது. நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் இருவரும் இணைகின்றனர். கடல் படத்தை முடித்து ரிலீஸ் செய்யும் முயற்சியில் மணிரத்னம் தீவிரமாக உள்ளார்.



இப்பணிகளை முடித்துவிட்டு ரஜினி படத்தை இயக்க வருகிறார். தயாரிப்பாளர் மற்றும் இதர நடிகர், நடிகைகள், தொழில் நுட்ப கலைஞர்கள் இன்னும் முடிவாகவில்லை. 


நன்றி - மாலை மலர் 

http://www.rajinilive.com/wp-content/uploads/2008/12/rajini-kamal.jpg

1. மணிரத்னம் - நாம 2 பேரும் ஒரு படம் பண்றோம். 


ரஜினி - புராணத்துல இருந்து கதை உருவாதீங்க.சுகாசினி வசனம் வேணாம் 



2. ரஜினி - தளபதி ,நாயகன் மாதிரி தாதா கதை வேணாம் . 



மணிரத்னம் - தாத்தா கதை ஓக்கே?.ஐஸ்வர்யாராய் குழந்தை கால்ஷீட் ரெடி 



3. ரஜினி - என் பொண்ணை அசிஸ்டெண்ட்டைரக்டரா சேர்த்துக்குங்க 



. மணிரத்னம் - அது எனக்கு ஓக்கே.என் சம்சாரம் ஒத்துக்கனுமே? 


4.  ரஜினி - கடல் ஹிட் ஆகட்டும்.நாம இணைவது பற்றி பேசுவோம். 



மணிரத்னம் - அதே மாதிரி கோச்சடையான் ஹிட் ஆகட்டும்னு சொன்னா ? 




5. மணி - மகாபாரதத்துல இருந்து ஒரு கதை.நீங்க தருமர்.நயன் தாரா தான் பாஞ்சாலி.



 ரஜினி - அப்போ சிம்பு தான் வில்லனா? என்ன கொடுமை மணி இது? 




6. மணிரத்னம் ஹி ஹி RT : ungala madhiri masala padam pakravangaluku maniratnamnu solla kuda thagudhi illa.. 





7. இங்கேயும் சைபர்? கி கி RT : karthik.. These guys are .. Just leave them





8. சுஹாசினி - ஆச்சரியம்! உங்களுக்கு ட்விட்டர்ல கூடரசிகர்கள் இருக்காங்களா? 



 மணி - பேக் ஐடிகள் தானா உருவாகாது.நாமதான் உருவாக்கனும் 







Rajini’s next with Mani Ratnam?
For most Kollywood directors, to have ‘Rajinikanth’ on the CV is to have arrived. No two ways about it. But of late, given his precarious health condition, the Superstar’s acting career has had to take a back seat. His choice of films has been a lot more constrained, with Kochadaiyaan being the only current project.
Now comes the news that there is the possibility of Mr. Robot himself offering his services to a select director. DC has learnt from sources in ace filmmaker Mani Ratnam’s office that the Superstar has initiated talks with Mani on a new project.



Mani Ratnam, who is currently in the process of releasing the audio for his upcoming magnum opus, Kadal, did one film, Thalapathi, with Rajinikanth two decades ago, which was set in a contemporary milieu at the time of its release and was a critical and commercial success.



This new development comes as the most pleasant surprise for fans that have had to accustom themselves to Rajini’s tendency to decline offers, considerably reducing his output over the years.
To add a twist in the tale, only a few days ago, Ulaganayagan Kamal Haasan, whose cult classic, Nayagan, with Mani Ratnam completed 25 years, expressed an inclination to collaborate with the latter once again. 




This could very well turn out to be quite a few interesting months ahead for Mani!



நன்றி - டெக்கான் கிரானிக்கல்


கலைஞர் , ஜெ , டாக்டர் ராம்தாஸ் மூவருக்கும் ஓ பக்கங்கள் ஞாநியின் காரசார கடிதங்கள்

பக்கங்கள்

இரண்டு கடிதங்கள்!

ஞாநி

கடிதம் 1:
அன்புள்ள கலைஞர் கருணாநிதி அவர்களுக்கும் செல்வி ஜெயலலிதா அவர்களுக்கும்
வணக்கம்.
இதற்கு முன்பு உங்கள் இருவருக்கும் தனித்தனியே கடிதங்கள் எழுதியிருக்கிறேன். இருவருக்குமாக ஒரே கடிதம் எழுதுவது இதுவே முதல்முறை. முந்தைய கடிதங்களை நீங்கள் பொருட்படுத்தாதது போல இதையும் அலட்சியம் செய்வது உங்கள் விருப்பம். எனினும் எழுதுவது என் கடமை.
தீபாவளியை இருவரும் அவரவர் வழியில் கொண்டாடி மகிழ்ந்திருப்பீர்கள் என்று நம்புகிறேன். தமிழ்நாடும் எப்படி அன்றைய தினம் கொண்டாடி மகிழ்ந்தது என்பதை கீழ்வரும் செய்திகளிலிருந்து அறிந்து மகிழும்படி கேட்டுக் கொள்கிறேன்.
மயிலாடுதுறை பொறையாறு அருகே இரண்டு காவலர்கள் குடிபோதையில் ஒரு காரை உடைத்து நொறுக்கினார்கள்.
கோவை அருகே குடிபோதையில் ஒரு காவலர் தம்மேல் அதி காரியைக் கண்டபடி திட்டினார்.
தர்மபுரியில் ரோந்துப் பணியில் இருந்த ஒரு காவல் அதிகாரி குடிபோதையில் தள்ளாடினார்.

அரசின் காவலர்கள் இப்படி முன்மாதிரிகளாகக் கொண்டாடும்போது குடிமக்கள் பின்தங்கியிருக்க முடியுமா?
ராயபுரத்தில் குடி போதையில் இருந்த ஒரு கணவன், உடல் சோர்ந்து படுத்திருந்த கர்ப்பிணி மனைவியை எழுப்பி தோசை தரச் சொன்னதும் அவள் உடனே தராததால், கழுத்தை நெரித்துக் கொன்றான். கொருக்குப் பேட்டையில் குடித்துக் கொண்டிருந்த இரு நண்பர்களில் ஒருவன் தரையில் வைத்திருந்த மதுக் கோப்பையைத் தவறுதலாக இடறி அது கொட்டி விட்டதால் எரிச்சலடைந்த மற்றொரு நண்பன் அவனைக் கத்தியால் குத்திக் கொன்றான்.
இவையெல்லாம் ஒன்றுமே இல்லை.
சேலம் ஆத்தூரில் ஐந்து நண்பர்கள் குடித்துவிட்டுப் பெரும் போதையில் இரண்டு பைக்குகளில் தாறுமாறாக சாலையில் சென்றார்கள். அவசர காலத்தில் உயிர்காக்க உதவும் ஆம்புலன்ஸ் வண்டியின் டிரைவரான அரசு ஊழியர் சண்முக சுந்தரம் என்பவர் அதே சாலையில் தன் டூவீலரில் வந்தார். குடிகார இளைஞர்களை நிதானமாக வண்டி ஓட்டும்படி சொன்னார். ஆத்திரமடைந்த ஐவரும், சண்முகசுந்தரத்தை சாலையிலேயே இழுத்துப் போட்டு அடித்து உதைத்துக் கொன்றே விட்டார்கள். அதில் ஒருவன் கல்லூரி மாணவன்! சண்முக சுந்தரத்துக்கு பள்ளிப்படிப்பு படிக்கும் இரு குழந்தைகள் இருக்கிறார்கள். இந்தத் தீபாவளி அவர்களுக்கு எப்படி இருந்திருக்கும் என்று சொல்லத் தேவையில்லை.
கடந்த சில வருடங்களாகவே தமிழகத்தின் பல பகுதிகளிலிருந்தும் வந்த செய்திகளில் எப்படி பல அரசுப் பள்ளி ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்கள் மது குடித்துவிட்டு பள்ளிக்கு வந்து தள்ளாடுகிறார்கள் என்பதை வெளிப்படுத்தின. பள்ளி வளாகத்துக்குள்ளேயே கும்பலாக உட்கார்ந்து படித்துக் கொண்டு அல்ல, குடித்துக் கொண்டு இருந்த மாணவர்களைக் கண்டித்த ஆசிரியரை அவர்கள் தாக்கிய செய்தியையும் உங்களுக்கு நினைவுபடுத்துகிறேன்.
எட்டாம் வகுப்பு வரை படித்தும் தமிழையோ ஆங்கிலத்தையோ எழுத்துக் கூட்டிக் கூடப் படிக்க சிரமப்படும் நிலையில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் இருப்பதாக ஓர் ஆய்வு ஒரு பக்கமும், 10வது, 11வது வகுப்பு மாணவர்கள் மத்தியிலேயே மது அடிமைத்தனம் உருவாகிவிட்டதாக இன்னொரு ஆய்வும் தெரிவித்ததை நீங்கள் இருவரும் படித்தீர்களா என்று தெரியவில்லை.
மேலே சொன்ன எந்த நிகழ்ச்சியின் போதும் நீங்கள் இருவரும் ஒரு அறிக்கை கூட வெளியிட்டதில்லை. எதெதற்கோ அறிக்கை வெளியிட்டு அறிக்கைப் போரே நடத்துபவர்கள் நீங்கள். தமிழகமே இப்படி மது அடிமைத்தனத்தால் சீரழிவதைப் பற்றி உங்கள் இருவரிடமிருந்தும் ஒரு அறிக்கை கூட வந்ததில்லை.

ஏனென்றால் இந்தச் சீரழிவுக்குப் பொறுப்பேற்க வேண்டியவர்களே நீங்கள்தான். உங்களில் ஒருவர்தான் 35 வருட காலம் தமிழகத்தில் இருந்த மதுவிலக்கை நீக்கி அடுத்த 40 வருட காலமாக பல தலைமுறைகளுக்கு மதுவைப் பழக்கிக் கொள்ள வழிவகுத்தவர். உங்களில் இன்னொருவர்தான் பள்ளிக் கூடங்களை தனியாரை நடத்த விட்டுவிட்டு, மதுக்கடைகளை அரசாங்கம் நடத்தும் புரட்சியைச் செய்தவர்.
இதன் விளைவுகளில் ஒரு சிறு துளியைத்தான் மேலே பட்டியலிட்டேன். இன்றைய தமிழகத்தில் 18 வயது முதல் 35 வயது வரையிலான இளைஞர்களில் பாதி பேருக்கு மேல் குடிகாரர்களாகிவிட்டார்கள். தமிழகத்தில் இருக்கும் சுமார் மூன்று கோடி குடும்பங்களில் வீட்டுக்கு ஒரு மது அடிமை இல்லாத குடும்பமே இல்லை என்ற நிலை படுவேகமாக உருவாகிக் கொண்டிருக்கிறது.


 மதுவால் சீரழியும் காவலர்கள் பற்றியோ ஆசிரியர்கள் பற்றியோ வெளியான செய்திகள் ஒவ்வொன்றுக்குப் பின்னாலும் இன்னமும் செய்தியாகாமல் தப்பித்துக் கொண்டிருக்கும் கோடிக்கணக்கான குடிகாரர்கள் இருக்கிறார்கள். ஒரு சமூகத்தில் காவலர்களும் ஆசிரியர்களுமே குடிபோதைக்கு அடிமையானால், அந்தச் சமூகம் இன்னும் எவ்வளவு உள்ளுக்குள்ளேயே அழுகிக் கிடக்கும் என்று யூகிக்கலாம். தினசரி சுமார் 2 கோடி தமிழர்களேனும் மது குடித்து மதி இழப்பதை சாத்தியப் படுத்தியிருக்கிறீர்கள்.



 அதன் விளைவுதான் இன்று தமிழகத்தில் எலெக்ட்ரீஷியன், ஃபிட்டர், வெல்டர், ப்ளம்பர், மெக்கானிக், மேசன் என்று பல துறைகளிலும் மிகக் கடும் ஆள் பற்றாக்குறை ஏற்பட்டிருக்கிறது. ஏழைப் பெண்கள் ஏழைமையால் படும் துயரம் போதாதென்று தம் வீட்டு ஆண்களின் போதையால் படும் கூடுதல் துயரம் சொல்லி மாளாது. நேரமிருந்தால் உங்கள் வீட்டில் வேலை செய்யும் பணிப்பெண்களிடமே மனம் விட்டுப் பேசிப் பாருங்கள். குடிப்பழக்கத்தால் சீரழியும் குடும்ப சோகங்களை அவர்கள் கொட்டித் தீர்ப்பார்கள்.


கடந்த இருபது வருடங்களில் நீங்கள் இருவரும் மாறிமாறி ஆட்சி நடத்தியதால் தமிழர்களுக்கு எந்தப் பெரிய லாபமும் ஏற்பட்டுவிடவில்லை. உங்களில் ஒருவர் வீட்டுப் பெண் கோடிக்கணக்கான ரூபாய் ஊழல் புகார் குற்றச்சாட்டில் சிறைக்குச் சென்றதும், ஒரு பேரன் மோசடி வழக்கில் கைதாக பயந்து மாதக் கணக்கில் தலை மறைவாக ஒளிந்திருப்பதும், உங்களில் மற்றவர் தன் அன்புக்குரிய உடன் பிறவா சகோதரியுடன் சட்ட விரோத சொத்துக் குவிப்பு வழக்கில் வருடக்கணக்கில் நீதிமன்றப் படி ஏறி இறங்கிக் கொண்டிருப்பதும்தான் உங்கள் சாதனைகள். உங்கள் இருவரின் ஆட்சியில் ஏற்பட்ட நன்மைகளுடன் தீமைகளை ஒப்பிட்டு காஸ்ட்- பெனிஃபிட் ரேஷியோ பார்த்தால், தமிழர் பெற்றதை விட இழந்ததே அதிகம்.

உங்கள் இருவருக்கும் கொஞ்சமேனும் மனசாட்சி இன்னமும் மீதம் இருக்குமானால், தயவுசெய்து இந்த மது அவலத்துக்கு முற்றுப் புள்ளி வையுங்கள். ‘தமிழினத் தலைவர்அவர்களே, தமிழக அரசு பூரண மதுவிலக்கு கொண்டு வந்தால், அதை தி.மு. முழுமையாக ஆதரிக்கும். தி.மு. ஆட்சிக்கு வந்தாலும் மதுவிலக்கு தொடரும் என்று அறிக்கை வெளியிடுங்கள். ‘புரட்சித் தலைவிஅவர்களே, ஜனவரி 1 முதல் தமிழகத்தில் பூரண மதுவிலக்கு என்றும் அதை ஆதரிக்கும் தி.மு..வுக்கு நன்றி என்றும் அறிவியுங்கள்.

இதைச் செயத் தாமதமாகும் ஒவ்வொரு கணமும் தமிழகம், தமிழ் இனம் அவலப் பெருங்குழியில் வீழ்ந்து கொண்டே இருக்கிறது. ஈழத்தமிழர்களை அழிக்கும் பழி சிங்கள ராஜபட்சே மீதானது. ஆனால் இந்தியத் தமிழர்களைக் கத்தியின்றி ரத்தமின்றி மதுக் கோப்பைகளாலேயே அழிக்கும் பழியை நீங்கள் இருவர்தான் சுமக்கப் போகிறீர்கள்.
உங்கள் இருவராலும் தமிழகத்தில் மது விலக்கைக் செயல்படுத்த முடியாதென்றால், ஒரே ஒரு வேண்டுகோள்தான் எனக்கு மீதம் இருக்கிறது. தயவுசெய்து இருவரும் அரசியலை விட்டு வெளியேறுங்கள். அதுவே தமிழ் மக்களுக்கு நீங்கள் செய்யக் கூடிய மாபெரும் தொண்டாக இருக்கும்.
இன்றிரவு உறங்கப் போகும் முன்பு ஒரு தவறும் செய்யாத ஒரு சண்முகசுந்தரம் நடுத்தெருவில் உங்களால் ஊக்குவிக்கப்பட்ட குடிகாரர்களால் அடித்துக் கொலை செய்யப்பட்டதை எண்ணிப் பாருங்கள். ஒவ்வொரு இரவிலும் அப்பாவின் கொடூர சாவைப் பற்றி எண்ணி தூக்கம் இழக்கும் அந்தக் குழந்தைகளை எண்ணிப் பாருங்கள். காலையில் எழுந்ததும் முதல் வேலையாக பூரண மதுவிலக்கு ஆதரவு அறிக்கையை எழுதி வெளியிட்டு பரிகாரம் தேடுங்கள்.
இன்னும் உங்கள் இருவர் மீதும் எஞ்சியிருக்கும் சொற்ப நம்பிக்கையுடன்,
ஞாநி
கடிதம் 2:
அன்புள்ள மருத்துவர் ராமதாஸ் அவர்களுக்கு,
வணக்கம். தர்மபுரியில் தலித்துகளுக்கு எதிராக நடத்தப்பட்ட அட்டூழியங்களுக்கு உடனடியாகத் தீர்வு தேடும் ஒரு முயற்சியாகவே இதை உங்களுக்கு எழுதுகிறேன்.
ஈழத் தமிழர்களைப் பாதுகாக்க .நா சபை தவறிவிட்டது; அதற்கு பரிகாரம் செய்ய வேண்டும் என்று சர்வதேசப் பார்வையுடன் அறிக்கை விடும் நீங்கள் அதற்கு முன் உள்ளூர் பார்வையில் தர்மபுரி தலித்துகளுக்கு நிகழ்ந்த கொடுமைகளுக்கு யார் பொறுப்பு, என்ன பரிகாரம் என்பதைப் பேசியாக வேண்டும்.

தர்மபுரி தலித் கிராமங்களில் தாக்குதல் செய்தவர்கள் எல்லாரும் உங்கள் சொந்தங்கள் என்பது மறுக்கமுடியாத உண்மை. தாக்குதலை ஆரம்பித்துவைத்தது ஒரு கலப்புத் திருமணம்தான். கடந்த காலத்தில் தலித் தலைவர் திருமாவளவனுடன் சேர்ந்து சுற்றுப்பயணம் சென்று வன்னியர்களுக்கும் தலித்துகளுக்கும் இடையே இருந்த பகையுணர்வை தணித்த நீங்கள் இப்போது ஏன் அப்படிப்பட்ட ஒரு நடவடிக்கைக்கு முன்வரத் தயங்குகிறீர்கள்?
இந்த சாதி அரசியலால் வன்னியர்கள் அடையப்போகும் நன்மை என்ன? கடந்த காலத்தில் நீங்கள் மாறி மாறி திராவிடக் கட்சிகளுடன் கூட்டு சேர்ந்ததாலோ, உங்கள் மகனை மத்தியிலே அமைச்சராக சில வருடம் வைத்திருந்து அழகு பார்த்ததாலோ, வன்னிய சாதியினரின் வாழ்க்கையில் என்ன முன்னேற்றம் ஏற்பட்டது என்று விளக்க முடியுமா? உங்கள் அரசியல் பலத்துக்கு வன்னியர்களை பயன்படுத்தப் பார்த்தீர்களே தவிர, அதனால் வன்னியருக்கு விளைந்த நன்மை என்ன?
வன்னிய சமுதாயத்தையே குடிகாரர்களாக்கி அழிக்கப் பார்க்கிறார்கள் என்று உங்கள் கட்சிப் பிரமுகர் காடுவெட்டி குரு திராவிடக் கட்சிகள் மீது குற்றச்சாட்டை உங்கள் முன்னிலையிலேயே வைத்தார். சரியான குற்றச்சாட்டுதான். உங்கள் மீது எனக்கு இன்னமும் இருக்கும் நம்பிக்கைக்கும் மதிப்புக்கும் காரணம் நீங்கள் குடியை எதிர்ப்பதும், உங்கள் டி.வி.யில் இன்னும் பிடிவாதமாக வணிக சினிமாவை அனுமதிக்க மறுப்பதும்தான்.
வன்னியர் மட்டுமல்ல, எல்லா தமிழ் சாதிகளையும் குடி அழிக்கிறது. ஆனால் அதை ஊக்குவித்த திராவிட கட்சிகளுக்கு மாற்று அரசியலாக நீங்கள் முன்வைப்பது என்ன? சாதி அரசியல் தான்.
வன்னியர்களை திராவிடக் கட்சிகள் குடிகாரர்களாக்கியது. நீங்களோ வன்முறையாளர் களாய்க்குகிறீர்கள். குடி சீரழிக்கும். சாதிவெறி உயிர் கொல்லி. நீங்கள் அறிந்தோ அறியாமலோ ஊக்குவிக்கும் இந்த சாதி வெறி எதிர் வன்முறையைத் தூண்டினால் எஞ்சுவது அழிவுதான். வன்னியர் பெரிதும் வாழும் ஆற்காடு மாவட்டங்களில் பிரபலமான கூத்து மகாபாரத யுத்தத்தில் இறுதியில் எல்லாரும் அழிந்ததைத்தான் சொல்லிச் சொல்லி எச்சரிக்கிறது. அந்த அழிவை நோக்கி வன்னியரையும் தலித்துகளையும் தள்ளும் சாதி அரசியலைவிட திராவிட அரசியலே மேல் என்றுதான் சிந்திக்கத் தெரிந்த ஒவ்வொரு வன்னியரும் முடிவெடுப்பார்கள்.

சாதி அரசியல் உங்களையும் அடுத்த தேர்தலில் அழித்துவிடும். உங்கள் சொந்தங்களையும் நிரந்தரமாக யுத்த பூமியில் ரத்தம் சிந்தியே வாழச் செய்துவிடும். ஒரு வன்னிய அன்புமணி, மருத்துவம் படித்து நவீன மனிதனாக மாறியதுபோல ஒவ்வொரு வன்னிய இளைஞனும் மாற தேவைப்படுவது தமிழுணர்வும் மானுட நேயமும் தான்.
இன்னும் காலம் தாமதமாகி விடவில்லை. இந்த முட்டாள் தனங்களுக்கு நீங்கள் நினைத்தால் இப்போதே முற்றுப்புள்ளி வைக்கலாம். சாதி ஒழிப்புதான் உங்கள் உண்மையான நோக்கம் என்றால், நாயக்கன் கொட்டா கிராமத்து இளவரசனையும் திவ்யாவையும் அழைத்துப் பாராட்டுவிழா நடத்துங்கள். அந்தச் செய்தி ஒவ்வொரு வன்னியர் மனத்திலும் ஒவ்வொரு தலித் மனத்திலும் புதிய வெளிச்சத்தை ஏற்படுத்தும்.
மறுபடியும் திருமாவை அழைத்துப் பேசுங்கள். இருவருமாக பாதிக்கப்பட்ட பகுதிகளுக்குச் செல்லுங்கள். மக்களிடையே இணக்கத்தை ஏற்படுத்துங்கள். எந்த வன்னியர்கள் தாக்குதலைச் செய்தார்களோ அவர்களைக் கொண்டே இடித்த வீடுகளைக் கட்டிக் கொடுக்கச் செய்யுங்கள். பாதிக்கப்பட்டோருக்கான நிவாரணப் பணிக்கு நீங்கள் முன்னின்று நிதி திரட்டிக் கொடுங்கள். வன்னியராகக் குறுகாமல், தமிழராக நிமிருங்கள்.
இல்லையென்றால், தமிழின் பெயரால், தமிழரின் பெயரால் .நாவுக்கு அறிவுரை சொல்லும் தகுதியே உங்களுக்கு இல்லாமல் போய்விடும்.
சிந்தியுங்கள்.
அன்புடன்
ஞாநி
நன்றி - கல்கி