Wednesday, October 31, 2012

ஜூ வி - வழக்கு பாயுதே வாழ்த்துகள் டூ ரைட்டர் ஜெயமோகன்

ஜெயமோகன் மீது வழக்கு ஏன்?

ரண்டு எழுத்தாளர்கள் மத்தியிலான மோதல் இப்போது நீதிமன்றப் படிக்கட்டுகளைத் தொட்டுள்ளது. 


சமூக அக்கறையோடு பெரியாரியம், மார்க்சியச் சித்தாந்தங்களைப் பேசியும் எழுதியும் வரும் வெகு சிலரில் எஸ்.வி.ராஜதுரை முக்கியமானவர். அவரது 60-க்கும் மேற்பட்ட புத்தகங்கள் உலகளாவிய அரசியல், பொருளாதாரம், இலக்கியச் சிந்தனைகளை தமிழில் விதைத்தவை. இவர், எழுத்தாளர் ஜெயமோகன் மீது  மானநஷ்ட வழக்கு தொடுக்க, இலக்கிய வெளியில் அதிர்வலைகள்.


நீலகிரி மாவட்டம் ஊட்டி நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்திருக்கிறார் ராஜதுரை. அவரது சார்பில் வழக்கு தாக்கல் செய்திருக்கும் வழக்கறிஞர் கே.விஜயன், இந்த விவரங்களை நம்மிடம் பகிர்ந்து கொண்டார்.
''தனித்த எந்த இயக்கத்தையும் கட்சியையும் சாராமல் சுதந்திரமான சிந்தனையாளராக விளங்கும் எஸ்.வி. ராஜதுரை, தன்னை 'சர்வ தேசியவாதி’​யாகவே அடையாளம் காட்டிக்கொள்ள விருப்பப்படுகிறார்.

 முழு மனிதஇனத்தின் நலனுக்கும் சார்பான ஒரு மனிதனாக தன்னை வெளிப்படுத்த விரும்பும் இவர் மீது வலைதளத்தில் பொய்களை அள்ளித் தெளிக்கிறார் எழுத்தாளர் ஜெயமோகன். பெரியார், அம்பேத்கர் போன்ற மாமனிதர்களை இழிவுபடுத்தி எழுதுவதன் மூலம் தனது இருப்பை உறுதிபடுத்திக்கொள்வதே ஜெயமோகனின் வழக்கம். கடந்த ஜூன் 20-ம் தேதி ஜெயமோகன் தனது வலைதளத்தில், 'காலச்சுவடு இதழுக்கு வழங்கப்பட்ட மூல நிதியானது ஃபோர்டு ஃபவுண்டேஷன் அளித்ததே என்று, அந்த ஃபவுண்டேஷனின் முக்கிய நபரான முத்துக்குமாரசாமியே கூறியுள்ளார். 


காலச்சுவடும், க்ரியாவும், எஸ்.வி.ராஜதுரையும், இப்படிப் பெற்ற பணத்தின் அளவு சராசரி வாசகனுக்குக் கொஞ்சம் பிரமிப்பைத்தான் அளிக்கும். நாம் சாதாரணமாக வாசித்துச் செல்லும் கருத்துகளுக்கு இவ்வளவு பண மதிப்பா என நாம் வியப்போம். அடுத்த முறை கொஞ்சம் கவனமாகவே புத்தகங்களைப் புரட்டுவோம்’ என்று வார்த்தைக்கு வார்த்தை வன்மம் காட்டி எழுதி உள்ளார்.




மூன்று நாட்கள் கழித்து 'விதவிதமான பண்பாட்டு அமைப்புகள் மற்றும் கல்வி நிறுவனங்கள் வாயிலாகவே இந்த நிதியுதவிகள் பெரும்பாலும் அளிக்கப்படுகின்றன. முத்துக்குமாரசாமிபோல உள்ளிருந்தே ஒருவர் சுட்டிக்காட்டும்போதுதான் இந்த உண்மைகள் எல்லாம் நமக்குத் தெரிகிறது, இல்லையேல் இதெல்லாம் வெளியே வர வாய்ப்பே இல்லை’ என்று தொடர்ந்து தனது சாடலையும் கேலியையும் வலியுறுத்தி உள்ளார்.



ஒரு புத்தகத்தின் உருவாக்கத்துக்குப் பல நிலை​களில் ஊக்கமாகவும் உதவியாகவும் இருந்தவர்களை நன்றியோடு அந்தப் புத்தகத்தில் நினைவுகூர்வதுதான் இலக்கியப் பண்பாடு. ராஜதுரையின் 'பெரியார்- சுயமரியாதை சமதர்மம்’ என்ற நூலில் இப்படி நன்றி தெரிவிக்கப்பட்டிருப்பதையே ஓர் ஆதாரமாக்கி, மேலும்மேலும் அவதூறு செய்திருக்கிறார் ஜெயமோகன்.



மேலும், அதேமாதம் 24-ம் தேதி தனது வலைதளப்பதிவில் 'ராஜதுரையின் நிதி ஆதாரங்​களை ஆராய்ந்துகொண்டிருக்கிறேன். இன்னொரு தருணத்தில் விரிவாகவே எழுதுகிறேன். பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் பெரியாரியல் ஆய்வு இருக்கையில் கௌரவப் பேராசிரியராக நீங்கள் பணியாற்றியதை ஒட்டி அந்த இருக்கையின் நிதிஆதாரம் என்ன? என்ற கோணத்திலும் ஆராய்கிறேன்’ என்று விடாது வசை மழையைப் பொழிந்திருக்கிறார். ஜெயமோகனின் ஆதாரமற்ற கருத்துகளுக்கு விடியல் பதிப்பகத்தின் சிவா எதிர் விமர்சனம் தெரிவித்தார். 'ஆர்.எஸ்.எஸ்., சங் பரிவார் கூட்டத்தின் முகவராகவே நீங்கள் செயல்படுகிறீர்கள்.


 ஏகாதிபத்தியத்தின் கள்ளக்கூட்டாளிகளாக உள்ள இந்த அமைப்புகள் எத்தனை அன்னியநிதியில் திளைக்கின்றன என்பதை நீங்கள் ஆராய்ச்சி செய்ததுண்டா? உங்களைப் போன்றவர்கள் என் பிணத்தைக்கூட பார்க்கக் கூடாது’ என்று பதிவு செய்திருக்கிறார். ராஜதுரையோடு இணைந்து செயல்படும் எழுத்தாளர் வ.கீதா குறித்தும் தவறான பேச்சுகளை உதிர்த்திருக்கிறார்.


'வ.கீதா நடத்தி வரும் தன்னார்வக் குழு பற்றி ஒரு முழுமையான பொது விவாதம் தமிழில் தேவையாகிறது. நம் அறிவுஜீவிகளுக்கும் தன்னார்வக் குழுக்களுக்கும் இடையேயான உறவுகள் பற்றி வெளிப்படையான பேச்சு உருவாக வேண்டும்’ என்று குறிப்பிட்டு உள்ளார். ஜெயமோகனின் இந்தப் பொய்யுரைகள் ராஜதுரையின் மனதை வெகுவாகக் காயப்படுத்தி இருக்கின்றன. அவர் நலம் நாடுவோர் வருத்தத்துடன் கேட்கும் கேள்விகளுக்குப் பதில் சொல்லி மாளவில்லை.



 மனிதநேயப் பணிகளுக்காகப் போராடும் ராஜதுரை போன்றோரைச் சீண்டி, அதன்மூலம் பெரிய ஆளாக நினைக்கும் ஜெயமோகன் போன்றவர்களுக்குச் சட்டம் தகுந்த சாட்டையடி கொடுக்கும் என்பதை இந்த வழக்கின் தீர்ப்பு வாயிலாக உலகுக்கு உணர்த்திட வேண்டும்'' என்றார்.



கோத்தகிரியில் வசித்துவரும் எஸ்.வி. ராஜதுரையைச் சந்தித்தோம். ''ஏன் இவ்வளவு மோசமாக, அடிப்படை ஆதாரங்கள் துளியும் இன்றி, பொய்யுரைகளால் என்னை ஜெயமோகன் விமர்சிக்கிறார் என்று தெரியவில்லை. தொடக்கத்தில் நான் ஜெயமோகன் பற்றி பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை.



 ஆனால், பொறுமை காக்கக் காக்க, மிக அதிகப்படியான வன்மையோடு தாக்க ஆரம்பித்து விட்டார். என்னைப் பற்றி அறிந்திருக்கும் நபர்கள் எனக்கு ஆதரவாக அவரிடம் பேசியிருப்பார்கள்போல. உடனே, தமிழ் அமைப்புகளுக்குக் குறுஞ்செய்தி அனுப்பி அவரை மிரட்டச் சொன்னேன் என்று கயிறு திரிக்கிறார். இதயநோய்க்காகத் தொடர்அறுவை சிகிச்சைகளை செய்து மிகதளர்ந்த உடல்நிலையோடு என் வாழ்க்கையைக் கழித்து வருகிறேன். மருத்துவச் செலவுகளை எவ்வளவு கடினமான சூழலில் நானும் என் துணைவி யும் எதிர்கொண்டு வருகிறோம் என்று எங்களை அறிந்தவர்களுக்குத்தான் தெரியும்'' என்றார்.


தொடர்ந்து பலமுறை, ஜெயமோகனை தொடர்பு கொண்டு விளக்கம் பெற முயற்சித்தும், அவர் பேசுவதற்குத் தயாராக இல்லை. எஸ்.எம்.எஸ். மூலமும் விவரம் தெரிவித்தோம். பதில் இல்லை. அவர் விளக்கம் கொடுத்தால் பிரசுரம் செய்யத் தயாராகவே இருக்கிறோம்.



இந்த வழக்கு தொடர்பாக நவம்பர் 16-ம் தேதி நேரில் ஆஜராகும்படி ஜெயமோகனுக்கு ஊட்டி நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருக்கிறது. எழுத்தாளர்களுக்குள் விமர்சன மோதல் இருக்கலாம்... ஆனால் அது, தனி மனித  தாக்குதலாக இருக்கலாமா?


நன்றி - ஜூ வி & ஆல்சோ வழக்கு பாயும் ஜெய மோகன் சார் 

SKY FALL

http://tamil.oneindia.in/img/2012/10/25-skyfall-300.jpg 

இங்கிலாந்து நாட்டின் ரகசிய உளவாளி பாத்திரமான  'ஜேம்ஸ்பாண்ட்' உலக சினிமா வரலாற்றில் மிகவும் பிரபம். பியர்ஸ் பிராஸ்னனை தொடர்ந்து  தற்போது அப்பாத்திரத்தில்  டேனியல் கிரெய்க் நடித்து வருகிறார்.

நான்கு ஆண்டுகளுக்கு முன்பு டேனியல் கிரெய்க் நடிப்பில்  'குவாண்டம் ஆப் சோலாஸ்' வெளிவந்தது. அப்படத்தினை தொடர்ந்து  இந்த ஆண்டுதான் ஜேம்ஸ்பாண்ட்டின் புதிய படம் வெளிவர இருக்கிறது.

ஸ்கை ஃபால் (SKY FALL) என பெயரிடப்பட்டுள்ள இப்படம் ஜேம்ஸ்பாண்ட் படவரிசையில் 23 -வது படமாகும். அதுமட்டுமின்றி இந்த ஆண்டுதான்  ஜேம்ஸ்பாண்ட் கேரக்டர் உருவாகி 50 ஆண்டுகள் துவங்குகிறது.

மிகுந்த பொருட் செலவில் உருவாகி வரும் 'ஸ்கை ஃபால்' படத்தை சாம் மெண்டிஸ் இயக்கி வருகிறார். சேவியர் பார்டெம் வில்லனாக நடிக்கிறார். இவர்களுடன் ஜூடி டென்ச், ரால்ப் பெயின்னஸ், ஆல்பர்ட் பின்னர் ஆகியோர் நடிக்கின்றனர். கதாநாயகிகளாக நவோமி ஹாரிஸ், பெர்னிஸ் மர்லோகே ஆகியோர் நடிக்கின்றனர்.

இந்தியாவில் கோவா, அஹமதாபாத், டெல்லி ஆகிய இடங்களிலும் இப்படத்தின் படப்பிடிப்பு நடத்தி இருக்கிறார்கள்.

உலகளவில் பெரும் எதிர்ப்பார்ப்பிற்கு உள்ளாகி இருக்கும்  'ஸ்கை ஃபால்' திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ டிரெய்லர்


 https://lh5.googleusercontent.com/-KxcEJkQM00U/UJAKORJ-igI/AAAAAAAAl60/qYT1zRiI9f0/s500/skyfall_makings.jpg

ஜேம்ஸ் பாண்ட் பட வரிசையில் 23வது ஜேம்ஸ் பாண்டாக வருகிறது  ஸ்கைஃபால். இதிலும் டேனியல் க்ராக்தான் ஜேம்ஸ் பாண்ட். நயோமி ஹாரிஸ் ஹீரோயின், ஜேவியம் பேர்டன் வில்லன். சர்வதேச பயங்கரவாத கும்பலின் சதிவேலையை முறியடிப்பது மாதிரியான வழக்கமான கதை, படம் லண்டனில் தொடங்கி இஸ்தான்புல், ஜப்பான், சீனா, தாய்லாந்து, எகிப்து வழியாக அமெரிக்கைவை அடையும். இந்த நாடுகளில் எல்லாம் படம்பிடித்திருக்கிறார்கள். 


இதில் இன்னொரு சிறப்பு என்னவென்றால். படத் தயாரிப்புக்கு ஆன செலவை விட படப்பிடிப்பின் போது சேதமடைந்து கட்டிடங்கள், கார்களை சரி செய்து கொடுத்து வகையில்தான் அதிக செலவாம். இந்தியா முழுவதும் 1300 தியேட்டர்களில் சோனி பிக்சர்ஸ் நிறுவனம் படத்தை வெளியிடுகிறது. தமிழ் நாட்டில் 300 தியேட்டர்கள். அதில் 250 தியேட்டர்களில் ஜேம்ஸ்பாண்ட் தமிழ் பேசப்போகிறார்.




ஜேம்ஸ் பாண்ட் படங்கள் என்றாலே சுவாரஸ்யமான விசயங்களுக்கு பஞ்சமிருக்காது. ஆடைகுறைந்த தேவதைகளும், முத்தக்காட்சிகளும் ஜேம்ஸ்பாண்ட் படங்களில் குறைவில்லாது இருக்கும். விரைவில் வெளியாக உள்ள ஸ்கைபால் படத்தில் இதுவரை இருந்ததை விட சூப்பர்காட்சிகள் அதிகம் இடம் பெற்றிருக்கிறதாம். இதை சொன்னது வேறு யாருமல்ல படத்தில் நடித்த டேனியல்க்ரேக்தான்.




ஜேம்ஸ்பாண்ட் படங்களால் நஷ்டம் என்று சில சமயம் பேச்சு எழுந்ததுண்டு. ஆனால் இனி அப்படி இருக்காது. கடந்த சில மாதங்களாகவே ஜேம்ஸ்பாண்ட் பற்றிய பேச்சுதான் மீடியாக்களில் உலாவருகிறது. ஜேம்ஸ்பாண்ட் கதாபாத்திரம் தோன்றி 50 ஆண்டுகள் ஆவதால் இப்போது எங்குப் பார்த்தாலும் பாண்ட்... ஜேம்ஸ்பாண்ட்தான். இதனால் ஸ்கைஃபால் படத்திற்கு சூப்பர் விளம்பரம்தான்.



http://www.tamilchat.in/wp-content/uploads/2012/10/2012_james_bond_movie_skyfall-t2.jpg

‘ஸ்கைஃபால்' படத்தின் பிரிமியர் காட்சி கடந்த அக்டோபர் 23ம் தேதி வெளியிடப்பட்டது. இதனைக் காண இதற்கு முன் ஜேம்ஸ்பாண்ட் படத்தில் நடித்த அனைத்து நடிகர்கள், நடிகையர்கள் வந்திருந்தனர். அவர்களுக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.



‘ஸ்கைஃபால்' திரைப்படம் பற்றி ஜேம்ஸ்பாண்டாக நடித்திருக்கும் டேனியல் க்ரேக்கிடம் கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த டேனியல், பாண்ட் படங்களிலேயே ஸ்கைஃபால் கிளாஸ் படமாக இருக்கும் என்று தெ‌ரிவித்துள்ளார். படத்தில் நடித்திருக்கிறார், இப்படிதான் பேசுவார் என்று சாதாரணமாக விடமுடியாது. காரணம் ஸ்கைஃபாலை இயக்கியிருப்பது சேம் மென்டிஸ்.



சேம் மென்டிஸ் இயக்கிய முதல் படமான ‘அமெ‌ரிக்கன் பியூட்டி' ஐந்து ஆஸ்கர் விருதுகளை வாங்கியது. அடுத்து ‘ரோடு டூ பெர்டிஷன்', ஜார் கெட்.. என அவர் இயக்கிய அனைத்து படங்களுமே சூப்பர்ஹிட். இதேபோல் ‘ஸ்கைஃபால்' படத்தையும் வழக்கமான பாண்ட் படங்களைப் போல் இல்லாமல் ஸ்டைலிஷாகவும், அதேநேரம் ஆக்சன் அளவுக்கு பாண்டின் கேரக்டருக்கு முக்கியத்துவம் கொடுத்தும் எடுத்திருக்கிறாராம்.



ஸ்கைபால் திரைப்படம் நவ.1 இந்தியாவில் வெளியாகிறது. அதேசமயம் அமெ‌ரிக்காவில் நவம்பர் 9ஆம் தேதிதான் வெளியாகிறது. ஜேம்ஸ் பாண்ட் படத்திற்கு ஆஸ்கர் கிடைக்குமா? அல்லது தரையில் வீழுமா என்று இன்னும் சில தினங்களில் தெரிந்துவிடும் என்கின்றனர் திரைவிமர்ச்சகர்கள்.







thanx - cinema vikatan,thats tamil



Give Bond an Oscar! It's not just the best ever 007 film - Skyfall deserves to bag its stars, director and writers a host of Academy Awards

Bond movies have picked up an insultingly meagre two technical Oscars over the past 50 years, for Goldfinger and Thunderball.
There must be a good chance that this is about to change, and change dramatically. For Skyfall takes the Bond franchise to a new pinnacle of quality.


Nine times nominee Roger Deakins (No Country For Old Men, The Shawshank Redemption) should win his first Academy Award for his stunning cinematography, equally magical whether it is among the iridescent skyscrapers of modern Shanghai or the bleak, ancient moorland of Scotland.


Scroll down to watch trailer
Skyfall's eyefall: New Bond girl Bernice Marlohe with Daniel Craig's 007 in the background
Skyfall's eyefall: New Bond girl Bernice Marlohe with Daniel Craig's 007 in the background 



One of the world’s most talented yet least known composers Thomas Newman (American Beauty, Road To Perdition) must also be a good bet after ten unsuccessful nominations to achieve his first Oscar, finally emulating his famous cousin Randy.
The score is matchlessly atmospheric and makes witty use of old Bond themes while adding a few of its own.
 

Disgracefully for a series that has brought us such great numbers as Goldfinger, Nobody Does It Better and Live And Let Die, Bond has always failed to win best song. Adele should at least win a nomination this time.


And who would have thought Skyfall would be a strong contender for best original screenplay? John Logan (a nominee for Gladiator, The Aviator and Hugo) has teamed up with previous 007 scribes Neal Purvis and Robert Wade to come up with a script that has qualities rarely seen in an action adventure: topicality, wit and intelligence.



Perhaps most significantly, Skyfall is the first Bond film to have a realistic chance of winning the major awards: best picture, director (Sam Mendes, who has already won for American Beauty), actor (Daniel Craig) and supporting actors (Judi Dench, Javier Bardem).
The best Bond yet: Skyfall is one of the top action-adventure films of all time
The best Bond yet: Skyfall is one of the top action-adventure films of all time 


That’s how good this film is. A second viewing persuades me this is not just the best Bond movie, it’s up there with the top action-adventures of all time.



It tells a refreshingly simple story and succeeds because of consummate craft, marvellous action set pieces and a cast that looks like the National Theatre at play.



In the pivotal role, Dench as M gets more to do than ever before in a Bond movie, and endows her role with a lifetime of experience and authority. She won an Oscar for Shakespeare In Love, and she’s even better here.



There are juicy roles for Ralph Fiennes, as M’s deviously bureaucratic new boss, and Albert Finney, as an entertainingly violent gamekeeper.
Strong supporting parts are also played by Rory Kinnear, Helen McCrory, Naomie Harris and especially Ben Whishaw as a new, modernising Q. 



The only weak link is Berenice Marlohe, struggling with the surely outmoded job of being a Bond girl. But after a parachuting Queen, I suppose anyone would have been a let-down.  In Raoul Silva (Bardem), Bond gets his creepiest adversary ever: a man not — for once — bent on world domination, but with good reason to hate MI6. 


Helped by astonishing special effects and a spectacularly demented hairstyle, Silva exudes a peculiar kind of menace: a cheery perviness that makes The Joker look wholesome.
Academy Award contender: Daniel Craig could be in the running for best actor while Skyfall could take the biggest prize - best picture
Academy Award contender: Daniel Craig could be in the running for best actor while Skyfall could take the biggest prize - best picture
The film gets off to a terrific start in Istanbul, with a thrilling rooftop chase of a kind you won’t have seen before.
Quite apart from its ingenuity, it’s a valuable reminder that CGI is no match for superb stunts, courageously staged. By the start of the title sequence, Bond is already missing, believed dead, and M has written him a careful obituary.
Needless to say, he has miraculous powers of recuperation, and he’s soon helping the head of MI6 track down Silva, who — like all Bond villains — seems to have endless funds and a limitless supply of henchmen.
The action roams the globe from Turkey to London, then off to Shanghai, before ending up in Scotland for a splendid climax that’s like Home Alone with an unlimited budget.
Here, Mendes pays tribute to earlier writers in the spy genre, particularly John Buchan and Michael Innes, and reveals more of Bond’s back story and traumatised childhood than anyone has before.
There are more acting scenes than we’re used to in Bond films, but because of the quality of the cast and gravity of the ideas being discussed they don’t drag; they make most action adventure films look rushed  and superficial.
Mendes delivers not only wonderfully exciting scenes, but some new, genuinely surprising twists and a welcome element of humour, most of it thanks to Bardem and Dench. Craig is superb as a defiantly virile Bond well past the first flush of youth, and not the crack shot or honed athlete he used to be. 
Action packed: This movie takes Bond to a new level and makes Jason Bourne look outdated
Action packed: This movie takes Bond to a new level and makes Jason Bourne look outdated
The film makes more of his patriotism and resilience than any previous 007 movie, and his relationship with M becomes all the more touching as we realise she’s become the mother he virtually never had.
Mendes steers clear of cheap sentiment, and British upper lips have rarely been stiffer. But this movie has a respect for Bond, and the secret services, that hasn’t always existed in previous adventures of the world’s most famous spy.  Long-standing devotees will enjoy the way elements are brought back from much earlier films, especially a rather well-known car.
But the reason Skyfall excels is that it builds on our familiarity with the Bond canon and takes it in a new direction, much more relevant to world politics in the 21st century.
With this film, Bond enters the age of cyber-terrorism. 007 has been regenerated in such a way that it is he who makes Jason Bourne look old-fashioned.
The ingenious central idea is to probe the heart of what we demand from our intelligence services in the age of WikiLeaks and public accountability.  Is it really that murkiest of concepts, transparency or something deeper than that? Isn’t it really our primeval desire to be safe?
Thanks to Skyfall, the future of Bond movies is assured for years to come.
Everyone connected with this brave, wholly successful enterprise deserves congratulation.Whether or not it triumphs at the Oscars — and I hope it will — I don’t see how anyone can deny that this is a cracking story, very well told.
There hasn’t been a more entertaining picture this year.



thanx - mail on line

நீலம் புயல் - சென்னை - அப்டேட்ஸ்

 Nilam Moves Closer Chennai Coast

சென்னை: நிலம் புயல் தற்போது மகாபலிபுரம் அருகே கரையை கடந்து கொண்டிருப்பதாகவும், மேலும் கரையை புயல் முழுவதுமாக கடந்து முடியும் இன்னும் 2 மணிநேரமாகும் என்று சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.



வங்கக் கடலில் சென்னைக்கு 500 கிலோ மீட்டர் தொலைவில் உருவெடுத்த குறைந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் புயலாக மாறியது. இதற்கு நிலம் என்றும் பெயரிடப்பட்டது. அந்தமான் தீவுகள் கடற்பரப்பில் உருவான இந்த புயல் இலங்கையின் திரிகோணமலைக்கும் சென்னைக்கும் இடையே மையம் கொண்டிருந்தது.



நேற்று இரவு முதல் இது வேகமாக நகர்ந்து இன்று காலை சென்னைக்கு தென்கிழக்கில் 320 கிலோ மீட்டர் தொலைவில் மையம் கொண்டிருந்தது. தற்போது இது சென்னைக்கு தென்கிழக்கில் வந்து புயல், தற்போது மகாபலிபுரம் அருகே கரையை கடந்து கொண்டிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதனால் தற்போது வீசி வரும் பலத்த காற்று காரணமாக, பல இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்துள்ளன. சாலைகளில் மக்கள் நடமாட்டமின்றி உள்ளது.



சாலைகளில் மரங்கள் முறிந்து விழுந்து போக்குவரத்திற்கு பாதிப்பு ஏற்படாத வகையில் போலீசாரும், தீயணைப்பு துறையினரும் ரோந்து சென்று வருகின்றனர். மேலும் உடனடி மருத்துவ உதவிக்காக ஆங்காங்கே ஆம்புலன்ஸ் வாகனங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.



நிலம் புயல் கரையை முழுவதுமாக கடந்து முடிக்க 2 மணிநேரத்திற்கு மேல் எடுத்து கொள்ளும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் அடுத்த 5 மணிநேரத்திற்கு பொதுமக்கள் யாரும் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.



8-ம் எண் புயல் கூண்டு



சென்னை மெரினா கடற்கரையின் மணற்பரப்பு முழுவதையும் சீறிவரும் கடலலைகள் ஆக்கிரமித்திருக்கிறது. சென்னை துறைமுகத்தில் 8-ம் எண் புயல் கூண்டு ஏற்றப்பட்டிருக்கிறது. சென்னை துறைமுகத்தின் இடதுபக்கமாக புயல் கரையைக் கடந்து வருவதால் சென்னை துறைமுகத்துக்கு கடுமையான பாதிப்பு இருக்கும் என்பதால் 8-ம் எண் புயல் கூண்டு ஏற்றப்பட்டிருக்கிறது.சென்னை எண்ணூர் துறைமுகத்தில் 6-ன் எண் புயல் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.



பலத்த காற்று


இன்று மாலைக்குள் புதுச்சேரி- நெல்லூர் இடையே சென்னைக்கு அருகே கரையைக் கடக்க இருக்கிறது, புயல் கரையைக் கடக்கும் போது 90 முதல் 100 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது. நிலம் புயல் கரையை நெருங்க நெருங்க கடலில் அலைகள் ஆக்ரோஷமாக எழும்பி மிரட்டி வருகின்றன. இதனால் இன்றும் மீனவர்கள் யாரும் கடலுக்குச் செல்லக் கூடாது என்று ஏற்கனவே எச்சரிக்கப்பட்டிருக்கிறது.



அலுவலகங்கள் விடுமுறை:


புயல் கரையை கடக்கும் போது சென்னையில் பலத்த சேதங்கள் ஏற்படலாம் என்பதால், அரசு மற்றும் தனியார் அலுவலகங்களில் வேலை செய்யும் பணியாளர்களை மாலை விரைவில் வீடுகளுக்கு திருப்பி அனுப்பப்பட்டனர். மாலை 3 மணிக்கு மேல் அலுவலகங்கள் அனைத்தும் மூடப்பட்டன.



மின்சாரம் துண்டிப்பு


நிலம் புயலால் சென்னை நகரின் பல பகுதிகளில் குறிப்பாக கடலோரப் பகுதிகளில் முன்னெச்சரிக்கையாக மின்சாரம் முற்றிலுமாக துண்டிக்கப்பட்டுள்ளது. மின்வாரியத்தின் உஷாரான நிலையில் வைக்கப்பட்டிருக்கின்றனர். இதனிடையே தமிழகம் முழுவதும் புயல் நிவாரணப் பணிகளை மேற்கொள்வதற்காக 13 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை தமிழக அரசு அனுப்பி வைத்திருக்கிறது.



 People Tired Take Photos Cyclone

சென்னை: நிலம் புயல் கரையை கடக்கும் போது போட்டோ எடுத்து, அந்த நீரில் தங்களின் காலை நனைக்க வேண்டும் என்று பொதுமக்கள் சிலர் விரும்பி சென்னையில் கடற்கரை பகுதிகளில் காத்திருந்தனர். ஆனால் அவர்களை கடலை நோக்கி செல்ல போலீசார் அனுமதி அளிக்க மறுத்துவிட்டனர்.



நிலம் புயல் கரையை கடக்கும் போது சென்னை மற்றும் புதுச்சேரியில் பலத்த சேதம் ஏற்படலாம் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே எச்சரித்து இருந்தது. இந்த நிலையில் மாலை 4.45 மணி அளவில் நிலம் புயல் கரையை கடக்க துவங்கியது. புயல் முழுவதுமாக கரையை கடக்க சுமார் 2 மணி நேரமாகும் என்பதால், பொதுமக்கள் யாரும் வெளியே நடமாட வேண்டாம் என்று எச்சரிக்கப்பட்டிருந்தது.



புயல் காரணமாக சென்னை மற்றும் கடலோர பகுதியில் பலத்த காற்று வீசியது. புயல் கரையை எட்டும் முன் சிறிதுநேரம் மழை பெய்தது. ஆனால் புயல் கரையை எட்டிய பிறகு, மழை நின்று பலத்த காற்று வீசியது.



இந்த நிலையில் புயலை நேரடியாக பார்க்க விரும்பிய சிலர், கடற்கரை பகுதியில் கேமராக்களுடன் சுற்றி திரிந்தனர். மேலும் சிலர் கடலை நோக்கி சென்று போட்டோக்களை எடுத்தனர். அப்போது கடற்கரை பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசார், அவர்களை தடுத்து நிறுத்தினர்.



அப்போது அவர்கள், நிலம் புயலில் வரும் தண்ணீரில் காலை நினைக்க வேண்டும். புயலின் போது போட்டோ, வீடியோ எடுக்க வேண்டும் என்று தெரிவித்தனர். ஆனால் அவர்களின் விபரீத ஆசைக்கு போலீசார் மறுப்பு தெரிவித்து, திருப்பி அனுப்பி வைத்தனர்.



நிலம் புயல் காரணமாக கடற்கரை பகுதிகளில் வசித்த பலரும், அங்கிருந்து பாதுகாப்பான பகுதிகளுக்கு சென்ற நிலையில், சிலர் ஆர்வ கோளாறாக புயலுக்கு இடையே போட்டோ எடுக்க முயன்றது போலீசாருக்கு வியப்பை அளித்தது.

 Nilam Cyclone Safety Tips Precaution

சென்னை: சென்னைக்கு அருகே மகாபலிபுரம் அல்லது கல்பாக்கத்தில் நிலம் புயல் நாளை கரையைக் கடக்கப் போகிறது. இதனால் தமிழகத்தின் கடலோர மாவட்டங்கள் அனைத்திலும் கூடுதல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுளளது.


அண்மையில் தானே புயலை தமிழகம் எதிர்கொண்டது.மணிக்கு நூறுகிலோ மீட்டருக்கும் மேலாக வீசிய கொடுங்காற்றினால் கடலூர் மாவட்டமே நிர்மூலமானது.



இந்தப் புயலைத் தொடர்ந்து இந்த ஆண்டின் முதல் புயலாக நிலம் வலம் வந்து கொண்டிருக்கிறது. அந்தமான் அருகே காற்றழுத்தத் தாழ்வுநிலை மையம் கொண்டபோது அதாவது கடந்த வாரமே தமிழகத்துக்கு மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுவிட்டது.



மேலும் கடந்த 3 நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. புயல் சென்னை நோக்கி வருவதும் எச்சரிக்கப்பட்டுள்ள நிலையில் அனைத்து கடலோர மாவட்டங்களிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.



கடலோர மக்களே கவனம்
குறிப்பாக கடலோரப் பகுதிகளில் வசிப்போரை பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயர்ந்து செல்ல வேண்டும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.



மீனவர்களே கடலுக்குள் போகாதீர்கள்
கடல் சீற்றமாக இருந்து வருவதால் மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்லக் கூடாது என்று கடந்த 3 நாட்களாகக் கூறப்பட்டு வருகிறது.
தற்போது புயல் கரையைக் கடக்க இருப்பதால் கரையோரம் நிறுத்தப்பட்டுள்ள படகுகளும் பாதுகாப்பான இடங்களுக்கு நகர்த்தப்பட்டுள்ளன.



பீச் பக்கம் எட்டிப்பார்க்காதீங்க...
சென்னை மெரினா, பெசன்ட்நகர் கடற்கரை தவிர மகாபலிபுரத்துக்கு அருகே உள்ள கோவளம், விஜிபி, நீலாங்கரை, பாலவாக்கம் உள்ளிட்ட அனைத்து கடற்கரைக்கும் செல்வதைத் தவிர்க்குமாறு போலீசார் எச்சரிக்கை விடுத்திருக்கின்றனர்.



அத்துடன் மக்கள் கூடும் கடற்கரைப் பகுதிகளில் போலீசாரும் ரோந்துப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.


மின்கம்பங்கள் சாயலாம்


பொதுவாக மழைகாலத்தில் தேங்கிக் கிடக்கும் மழைநீரில் மின்சாரம் பாய்வதற்கு வாய்ப்பிருக்கிறது. புயல் காலங்களில் முறிந்து விழும் மரங்கள், மின்கம்பங்கள் அருகே செல்வதை கட்டாயம் தவிர்க்க வேண்டும்.



மரங்கள் விழலாம் - கீழே ஒதுங்காதீர்கள்


புயலடித்துக் கொண்டிருக்கும் நிலையில் மரங்களின் கீழே மழைக்கு பாதுகாப்பு என ஒதுங்கி நிற்பதைத் தவிர்க்க வேண்டும். தேவையில்லாமல் மழை நீரில் நடந்து போவதைத் தவிர்க்கவும்



சுவிட்சுகளை முடிந்தவரை ஆப் செய்யுங்கள்


புயல் காற்று வீசும் நிலையில் வீடுகளில் மின்சாதனங்கள் மற்றும் தகவல் தொடர்பு சாதனங்களுக்கான சுவிட்சுகளை கூடுமானவரை அணைத்தே வைக்கவும்.



மெழுகுவர்த்திகள் ஸ்டாக் இருக்கட்டும்


மின்சாரம் துண்டிக்கப்படும் வாய்ப்புகள் அதிகம் இருப்பதால் வீட்டில் மெழுகுர்த்திகளை போதிய அளவில் வைத்துக் கொள்வது நல்லது.


தற்போதைய நிலம் புயலுக்கான முன்னெச்சரிக்கையின் போது வானிலை மையமும் கூட தகவல் தொடர்பு சாதனங்கள் பாதிக்கப்படும் என்பதை சுட்டிக்காட்டுகிறது.


அவசர உதவிக்கு...


சென்னையில் புயல், மழை பற்றிய அறிய 044-28447734 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.

Cyclone Nilam: Emergency numbers in Chennai 26412646, 28170738, 24838968, 24867725,22342355, 24425961, 22420600, 24500923 


 Heavy Rain Lashes Chennai Its Suburbs

சென்னை: புயல் சின்னம் காரணமாக தலைநகர் சென்னை முழுவதும் கன மழை கொட்டி வருகிறது. இதனால் போக்குவரத்து ஸ்தம்பித்துள்ளது. அலுவலகம் செல்வோர் கடும் பாதிப்பை சந்தித்துள்ளனர்.


வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் வலுவடைந்து வருவதால், புயலாக மாறும் அபாயம் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக கடலோர மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.
கடந்த சில நாட்களாக சென்னையில் மழை இல்லாமல் இருந்தது.இந்த நிலையில் புயல் சின்னம் காரணமாக நேற்று நள்ளிரவு முதல் நல்ல மழை பெய்து வருகிறது.



சென்னை நகரின் பல பகுதிகளிலும் கன மழை கொட்டிக் கொண்டிருக்கிறது. கடலோரப் பகுதிகளான மயிலாப்பூர், பட்டினப்பாக்கம், சேப்பாக்கம், மந்தைவெளி, திருவல்லிக்கேணி, திருவொற்றியூர் உள்ளிட்ட பகுதிகளில் கன மழை பெய்து வருகிறது.



இதேபோல நகரின் உட்பகுதியிலும் மழை பெய்கிறது. புறநகர்ப் பகுதிகளான தாம்பரம், குரோம்பேட்டை, மேடவாக்கம், வேளச்சேரி உள்ளிட்ட பகுதிகளிலும் கன மழை பெய்தபடி உள்ளது.



இதனால் காலையில் அலுவலகம் செல்வோர் கடும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளதால் மாணவ மணிகள் காலையிலேயே டிவி முன் உட்கார்ந்து ஜாலியாக பொழுதைப் போக்கிக் கொண்டிருக்கின்றனர். ஆனால் அலுவலகம் செல்வோர்தான் வெளியில் எப்படிப் போவது என்று தெரியாமல் குழம்பிக் கிடக்கின்றனர்.



 http://www.vikatan.com/news/images/koyambedu-rain2.jpg






http://www.vikatan.com/news/images/koyambedu-rain.jpg
 அ





http://dinamani.com/incoming/article1307137.ece/ALTERNATES/w460/RAIN4.JPG





http://mmimages.maalaimalar.com/Articles/2012/Oct/e5c2df68-3e35-4459-8e08-052ee18c2bdf_S_secvpf.gif






http://www.dinakaran.com/data1/Nilam-Chennai-Gallery/day-1/image_1.jpg


நன்றி - தட்ஸ் தமிழ்



NILAM Current Status

Current Wind Speed 63 MPH / 55 knots
Max Predicted Wind Speed 63 MPH / 55 knots at

TROPICAL CYCLONE NILAM Land Hazards

No land hazards or hazard data not available for this storm.

TROPICAL CYCLONE NILAM Tracker

NILAM Satellite Loop

TROPICAL CYCLONE NILAM Alternate Tracking Map

Alternate tracking maps are only available on NHC tracked storms.

என்னை கவர்ந்த பிரபல ட்விட்டரின் கடிதம்

வசந்த் (@)

தோழர் சதீஷுக்கு வணக்கம்,

நான் நேற்று உங்களுடனான உரையாடலை தொடங்கியதற்கு காரணம் நீங்கள் அச்சமயத்தில் எழுதிய ட்வீட் மட்டுமல்ல,அதற்கு முன் நீங்கள் எழுதிய தமிழ் டிவிட்டர்கள் மற்றும் பாடகி சின்மயிக்கு இடையேயான பிரச்சனை பற்றிய பதிவும் கூட. அது ஒரு நடுநிலைமை பார்வையாக எனக்கு தெரியவில்லை, அதற்காக நீங்கள் இந்த விசயத்தில் நடுநிலைமையுடன் தான் இருக்கவேண்டும் என்பது என் விருப்பமும் அல்ல.


முதலில்,நாகரீகம் மட்டும் கட்டுபாட்டுடன் கூடிய கருத்துச் சுதந்திரம் என்பது இணையத்தில் எதிர்பார்க்ககூடாது என்பதே எனது கருத்து. இவ்வாறு ஏன் கருதுகிறேன் என்றால் நான் முன்னொரு முறை சொன்னது போல் நாகரீகம் என்பது நபருக்கு நபர் மாறுபடக்கூடியது, கரண்டி மூலம் மட்டுமே உணவை உண்ணும் மக்கள் பெருகிவிட்ட இன்றைய நிலையில் கையினால் பிசைந்து உணவை உண்பவர்கள் நாகரீகம் அற்றவர்களாகவே பார்க்கப்படுகின்றனர்.




ஆனால் இதில் உள்ள நியாயம் இருவருக்கும் வெவ்வேறானது. ஒருவரின் நாகரீகமானது அவரின் கடந்து வந்த வாழ்க்கை, பொருளாதார சூழல், சுற்றி உள்ள மனிதர்கள் என்று பல காரணிகளால் ஆளுமைக்கு உட்படுத்தப்படுகிறது. உதாரணமாக இன்வர்ட்டர் & ஜெனரேட்டர் போன்ற கருவிகள் உடைய பணக்காரர் மின்வெட்டு ஏற்படுகையில் அலட்டிக் கொள்ளமாட்டார், ஆனால் உடல் உழைப்பை மட்டுமே நம்பியிருக்கும் ஏழை,ஆஸ்பெட்டாஸ் ஷீட்டுக்கு அடியில் ஒற்றை மின்விசிறியின் துணையால் காற்று வாங்கிக் கொண்டிருக்கும்போது மின்வெட்டு ஏற்ப்பட்டால் வட்டாரவழக்கை தான் துணை கொள்வார், இவர்களுக்கு இடையேயான பொருளாதார வித்தியாசத்தை கணக்கில் கொள்ளாதவர்கள் பின்சொன்னவரின் வட்டார வழக்கை மட்டும் குற்றம் சொல்வது நியாயமே கிடையாது.



அதுமட்டுமல்ல வட்டார வழக்கு என்பது எங்கெங்கும் நிறைந்து உள்ளது, அதை பல பெண்கள் உபயோகிப்பதை கூடக் கண்டிருக்கின்றேன், நண்பர்களுக்கு இடையே இதுபோன்ற வட்டார வழக்கு சொற்கள் வெகு இயல்பாக புழங்கும். புத்தகங்களில் இல்லாத வட்டார வழக்கு வார்த்தைகளா ? எத்தனை எழுத்தாளர்கள் அத்தகைய வார்த்தைகளை உபயோகிக்காமல் எழுதி உள்ளார்கள் என்று யோசியிங்கள்? பத்திரிக்கைகள்,சினிமாக்கள் மற்றும் டிவிக்களும் தன் பங்கிற்கு நாகரீக மீறல்களை நடத்திக் கொண்டுதான் இருக்கிறது. நிற்க. ஒரு அரசியல் கட்சி தலைவரை ஒருவர் திட்டுவது என்பது சொந்தக் காரணத்திற்க்காகவா ?




 ஒரு சாதாரண பொதுஜனமாக,அரசியல்வாதிகள் தொடர்ந்து செய்து வரும் அத்துமீறிய அநியாயங்களை எவ்வாறு கண்டிப்பது? அவர்களிடம் நேரில் சென்று நீதி கேட்பதோ,அவர்கள் மேல் வழக்கு தொடர்வதோ எத்தனை பேரால் முடியும் ? ஒருபுறம் அரசியல்வாதிகளின் சகிக்கமுடியாத அநீதிகள் மறுபக்கம் அதை தட்டிக் கேட்க்க முடியாத சூழ்நிலை, இத்தகைய நிலையில் ஒரு மனிதன் வெடித்து பேசத்தான் செய்வான், இதில் அவன் பேச்சை மட்டும் குற்றம் சொல்வது நியாயமே இல்லை. இவ்வாறு வெடித்து பேசாதவர்களும் இருக்கிறார்களே எனக் கேட்கலாம், அவ்வாறு பேசாதவர்களில் பெரும்பான்மையினர் மேட்டுக்குடியினர், பொதுப் பிரச்சனைகளால் பெரிய அளவில் பாதிக்கப்படாதவர், அதனால் இவர்களை உதாரணமாக எடுத்துக் கொள்வது சரியல்ல.




நீங்கள் நம்பும் நாகரீக மனிதர்களும் உணர்ச்சிவசப்படும்போது நாகரீகத்தை உடைத்தே வெளிவருகிறார்கள், நமக்கு தெரிந்த உதாரணமான மாயவரத்தானை எடுத்துக் கொள்ளுங்கள், அவர் மற்றொருவரை மிக ஆபாசமான வார்த்தையால் வசை பாடினார், காரணமாக அந்த நபர் மட்டும் திட்டலாமா என்று கேட்டார். இதுதான் அனைத்து மனிதர்களின் நிலையும், இங்கு யாராலும் ஒரு கட்டத்துக்கு மேல் நாகரீகத்தை கடைபிடிக்க முடியாது. பாதிப்பை பொறுத்தே நமது நாகரீகம் நிக்கும் மற்றும் நிலைக்கும். பிரபல பின்னணி பாடகி சின்மயி ஆங்கிலத்தில் பல வசை சொற்களை தொடர்ந்து பயன்படுத்தி கொண்டே தான் இருக்கிறார் (WTF, Shit, Bullcrap, முதலியவை)





அதுமட்டுமில்லாமல் அவர் என்ற ஐடியில் இருந்து வரும் ட்வீடுக்களை RT செய்திருக்கிறார். அதை யாரும் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. இவ்வளவு ஏன் மகேஷ் மூர்த்தி சின்மயியை சில ஆங்கில வன் சொற்களால் திட்டி உள்ளார்(Idiot, Fool). இதை சின்மயியோ அவரை ஆதரிப்பவர்களோ கூட கண்டுகொள்ளவில்லை. இதன் மூலம் நாம் உணர்வது ஆங்கிலத்தில் பேசும்போது நாகரீகம் தேவையில்லை ஆனால் தமிழுக்கு மட்டும் அது கட்டாயத்தேவை என்பதே. இதை ஏற்றுக்கொள்பவர்கள் பற்றி எனக்கு கவலை இல்லை ஆனால் நான் இதை ஏற்றுக்கொள்ளமுடியாது.




இங்கு பெரும்பாலான இடங்களில் மற்றும் சமயங்களில் கருத்து சுதந்திரம் இல்லாமல் தான் இருக்கிறோம். பள்ளி மற்றும் கல்லூரிகளை எடுத்துக் கொள்ளுங்கள், அங்கு ஒரு ஆசிரியர் தவறு செய்யும் போது அதை சுட்டிக்காட்டினால் அதன் பலன் என்னவாக இருக்கும், அந்த ஆசிரியர் தமது பலத்தை தவறாக உபயோகித்து நம்மை சஸ்பென்ட் செய்வது, பெற்றோரை கூட்டி வரச்சொல்வது, இன்டர்னல் மார்க்கில் கை வைப்பது போன்றவையை செய்கிறார்.




 அலுவலகங்களில், அனுமதிக்கப்பட்ட நேரம் தாண்டி வேலை செய்யச்சொல்லப்படும்போது எதிர்த்துக் கேட்டால் அப்ரைசல் சமயங்களில் "கவனித்துக்" கொள்ளப்படுகிறோம். சொந்த வேலைக்காக பிற அலுவலகங்களுக்கு செல்லும்போது அங்கு நம்மீது காட்டப்படும் அலட்சியங்களை சகித்துக்கொள்கிறோம். ஏன் குடும்பத்திலே தந்தைக்கோ, தாய்காகவோ, சகோதர சகோதரிக்காகவோ, வாழ்க்கை துனைக்காகவோ நாம் அடங்கிச் சென்றுகொண்டுதான் இருக்கிறோம். பின்பு எங்குதான் நாம் நம்மை சுதந்திரமாக வெளிப்படுத்தி கொள்வது, அதற்கு நமக்கிருக்கும் ஒரே வாய்ப்பு இந்த இணையம் தான்.இங்கும், நாம் நியாயம் என்று நினைப்பதுவே உலகப்பொது நியாயம் என்று நினைப்பவர்களால் அடக்கி வைக்கப்பட்டுக் கொண்டிருப்பது மிகவும் கொடுமையானதென்றே நான் நினைக்கிறன்.



உங்களின் மற்றொரு கருத்தான ஒருவரைப்பற்றி விமர்சனம் வைக்கும்போது அதற்கான ஆதாரம் இருத்தல் வேண்டும் என்பதும் என்னால் ஏற்கமுடியவில்லை. 2G ஊழலிலும் நிலக்கரி ஊழலிலும் சில அரசியல் கட்சிகள் சம்மந்தப்பட்டிருப்பதாக எனக்கு தோன்றுகிறது ஆனால் அதற்க்கான ஆதாரம் என்னிடம் இல்லை ஆதலால் இந்த விசயங்களை நான் இணையத்தில் பகிர்ந்தால் சம்பந்தப் பட்டவர்கள் என் மேல் வழக்குப்பதிவது நியாயமே என்பது என்ன மாதிரியான நியாயம் என்று எனக்கு புரியவில்லை. அப்பேர்ப்பட்ட ஆதாரங்கள் என்னிடம் இருந்தால் நான் நேரிடையாக நீதிமன்றத்துக்கு சென்று வழக்குபதிந்து விடமாட்டேனா? அதைவிட்டு இணையத்தில் எதற்காக புலம்பப்போகிறேன்? டீக்கடை விவாதத்தை கவனித்திருக்கிறீர்களா, அங்கு பல விசயங்கள் பேசப்படும், பேசுபவர்கள் பெரும்பாலும் நடுத்தரத்துக்கு குறைந்த பொருளாதார நிலை உடையவர்களாகவே இருப்பார்கள். அவர்களையும் அவ்வாறு பேசாமல் இருக்க ஏதும் நடவடிக்கை எடுக்கப்படுகிறதா என்றால் எதுவும் இல்லை. ஆனால் அது போன்ற விவாதத்தை இணையத்தில் சராசரி மற்றும் அதுக்கும் மேலுள்ள பொருளாதார நிலை உள்ளவர்கள் பேசினால் இந்த அரசாங்கத்துக்கு பிடிக்கவில்லை.



அதுக்கு காரணம் இத்தகைய சராசரி மக்கள் தங்களை தாண்டி எதையும் பார்க்கும் திறன் இல்லாமலே இருந்திருக்கிறார்கள், அதனாலேயே இந்த அரசாங்கம் பல தவறுகளை துணித்து செய்து கொண்டிருக்கிறது, இந்த நிலையில் இந்த சராசரி மனிதர்கள் உலகத்தை புரிந்துகொள்வதில் உள்ள ஆபத்தை இந்த அரசாங்கம் பயத்துடன் கவனிக்கிறது, இதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என்ற முடிவுக்கு வருகிறது, அதன் காரணமாகவே சில நாட்களுக்கு முன் ட்விட்டரை தடை செய்யவேண்டும் என்ற பரிசீலனையை முன்வைத்தது. இப்போது சைபர் கிரைம் மூலமாக சில கைதுகளை நிகழ்த்தி மக்களை பயமுறுத்துகிறது.




சரி,அப்பிடியே இணையம் மூலம் செய்யப்படும் தனிப்பட்ட அவதூறுகளை கண்டிக்கும் விதமாக இந்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்கத் தயாராக இருக்கும்பட்சத்தில் அதனால் அனைவரும் பயன் அடைவார்களா என்று பார்த்தால் அதற்கான பதிலும் சந்தேகமே. உங்களையோ என்னையோ ஒருவர் திட்டிவிடுகிறார் என்று வைத்துகொள்வோம் நாம் சென்று சைபர் கிரைமில் புகார் குடுத்தால் அவர்கள் நியாயமான முறையில் நடவடிக்கை எடுப்பார்கள் என்று நினைகிறீர்களா? இப்பொழுது சின்மயி சொன்ன கருத்தை எடுத்துக்கொள்வோம், இப்பொழுது நடைமுறையில் உள்ள இடஒதுக்கீடு சரியானது இல்லை என்று சொல்கிறார்.




 இவருக்கு இட ஒதுக்கீட்டு பற்றி முழுவது தெரியுமா இல்லை இவர் கூறிய கருத்துக்கு ஏதேனும் வலுவான ஆதாரம் இவரிடம் உள்ளதா ? இது கட்டாயம் என்னை பாதிக்கிறது, எனவே நான் இதை எடுத்துக்கொண்டு சைபர் கிரைம்முக்கு செல்வது தான் சரியா ? அப்பிடி நான் சென்றால் நியாயமான நடவடிக்கை எடுக்கப்பட்டு விடுமா ? இதை பற்றி உங்களுடைய கருத்து எப்படிப்பட்டது என தெரியவில்லை ஆனால் நான் தெளிவாக நம்புவது இந்த சட்டமும் நடவடிக்கையும் தங்களின் செல்வாக்கை தவறாக பயன்படுத்தி அடுத்தவர்களை அடக்குபவர்களுக்கு மட்டுமே உரியது என்பதே.




நான் கடேசியாக சொல்ல விரும்புவது என்னவென்றால், மேலே நான் குறிப்பிட்ட அணைத்து கருத்துகளும் இந்த இணைய வசதியினால் நான் மற்றவர்களிடமிருந்து உள்வாங்கிக் கொண்டவையே. இந்த வரம்பற்ற இணையம் இல்லை என்றால் இது சாத்தியப்பட்டு இருக்காது. நீங்கள் நியாயம் என நினைக்கும் கருத்தடக்கும் சட்டப் பாய்ச்சலினால் இவை போன்ற கருத்துபகிர்வுகள் சாத்தியம் இல்லாமல் போய்விடும். அது ஆரோக்கியமற்றது சகோ, தொடர்ந்து பல சமூக விசயங்களை பகிரும் நீங்களுமா இதற்கு ஆதரவாக இருக்கப் போகிறீர்கள், வேண்டாமே. இவ்வளவு விளாவரியாக நான் இதை எழுதி இருப்பதற்கு உங்களின் ஏற்றுக்கொள்ளும் புரிதலும் ஒரு காரணமே, அந்த வகையில் உங்களுக்கு நன்றிகள்.

நன்றி,


கணேஷ்-வசந்தாகவே அறியப்பட விரும்பும் சக தோழர்.

Conversations with Mani Ratnam - மணிரத்னம் பேசிய சர்ச்சைக்குரிய உரை

http://cdn1.supergoodmovies.com/FilesFive/mani-ratnam-s-kadal-location-stills-9f7e81dd.jpg 

மணிரத்னம் வயது 30

‘‘ரஜினிக்கு என்னிடம் கதை இல்லை!’’


எஸ். சந்திரமௌலி

தமிழ் சினிமாவை உலக சினிமா உயரத்துக்கு தூக்கிப் பிடித்த முன்னோடி மணிரத்னம். தாம் பேசுவதைவிட, தம் படங்கள் பேசவேண்டும்; பேசப்பட வேண்டும் என்ற கருத்துக்குச் சொந்தக்காரர் அவர். 1983, ‘பல்லவி அனுபல்லவிகன்னடத் திரைப்படத்தின் மூலமாகத் திரையுலகில் பிரவேசித்தவர்


 அடுத்த படம் மலையாளத்தில்உணரு’. 85ல்பகல் நிலவுமூலமாக தமிழில் களமிறங்கினார். 86ல், ‘மௌனராகம்மூலமாக தம்மைத் திரும்பிப் பார்க்க வைத்தார். ‘நாயகன்மூலமாக அகில இந்திய வீச்சு கிடைத்தது. தற்பொழுது எடுத்துக் கொண்டிருக்கும்கடல்படத்தோடு மணிரத்னத்துக்கும் சினிமாவுக்குமான தொப்புள் கொடி உறவுக்கு வயது முப்பது.


 இந்தத் தருணத்தில் தாம் வந்த சினிமா பாதையைத் திரும்பிப் பார்த்து, தமது எண்ண ஓட்டங்களை ஆங்கிலப் புத்தகமாகப் பதிவு செய்து, இந்திய சினிமாவுக்குச் சமர்ப்பித்திருக்கிறார். தலைப்பு: Conversations with Mani Ratnam. எழுதி இருப்பவர்: பரத்வாஜ் ரங்கன். பெங்குயின் வெளியீடு. தம் படங்களைப் பற்றி மணிரத்னம் என்ன சொல்கிறார்? ஒரு சுவையான டிரெயிலர்:

விவேகானந்தா கல்லூரியில் பி. காம் படித்த பிறகு, மும்பை சென்று பஜாஜ் இன்ஸ்டிட்டியூட்டில் எம்.பி.. முடித்து விட்டு, ஒரு கன்சல்டன்சி கம்பெனியில் பணியாற்றினேன். அங்கே எனக்கு வேலை பிடிக்கவில்லை என்றாலும், சினிமா டைரக்டர் ஆகவேண்டும் என்ற எண்ணம் எனக்குத் துளிக்கூட இல்லை. பிரபல இயக்குனர் பி.ஆர்.பந்துலுவின் மகனும், என் நண்பருமான ரவி சங்கர் தமது முதல் (கன்னட) படத்தை எடுக்க முடிவு செய்த போது, வீணை பாலசந்தரின் மகன் ராமனும், நானும் சேர்ந்து மூவருமாக ஆபீஸ் விட்ட பிறகு மாலை நேரங்களில் சந்தித்து, படத்தின் ஸ்கிரிப்ட்டை எழுத முடிவு செய்தோம்



 ஒவ்வொரு சீன் குறித்தும் கடுமையான விவாதம் நடக்கும். ஆங்கிலத்தில் ஸ்கிரிப்ட்டை தயார் செய்து கொண்டு, ரவிசங்கர் ஷூட்டிங் ஆரம்பித்தார். கோலாரில் படப்பிடிப்பு. நாங்கள் ஆங்கிலத்தில் எழுதிய சீன்களை, கன்னட வசனகர்த்தாவுக்கு விளக்கிச் சொல்வது என் வேலை. முதல் ஷெட்யூல் முடியும் தறுவாயில்எனக்கான இடம் சினிமாஎன்று நான் முடிவு செய்தேன். அப்போது கூட படத்தின் ஸ்கிரிப்ட்டை எழுதி, டைரக்டர்களுக்குக் கொடுத்து பணம் சம்பாதிக்கலாம் என்ற எண்ணமே எனக்கு இருந்தது. ஆனால்பல்லவி அனுபல்லவிஸ்கிரிப்ட் ரெடியானபோது, ‘படத்தை நாமே இயக்கினால் என்ன?’ என்ற எண்ணம் வந்தது.


மும்பையில் இரண்டு வருடங்கள் படித்தபோது, மும்பை நிழல் உலகில் மிக உச்சத்தில் இருந்தார் வரதராஜ முதலியார். மாதுங்கா பகுதி மக்கள் அவரை தெய்வமாகவே நினைத்தார்கள். சக மனிதர் ஒருவரை ஏன் இவர்கள் தெய்வமாக மதிக்கிறார்கள்? என்பது எனக்குப் புதிராகவே இருந்தது. அது எனக்கு பெரும் ஆர்வத்தை ஏற்படுத்தியது


 தமிழ்நாட்டிலிருந்து போன ஒருவரால் எப்படி மும்பை நகரத்தையே கட்டி ஆள முடிகிறது என வியந்து போனேன். கமலிடம் திருப்பங்கள் நிறைந்த வரதராஜ முதலியார் வாழ்க்கையைப் படமெடுக்கலாம் என்று சொன்னதும் உடனே சம்மதித்தார். ‘மௌனராகம் கதைஅப்ரூவ் ஆவதற்கு ஐந்தாண்டுகள் பிடித்தது. நாயகன் பத்தே நிமிடங்களில் .கே. ஆனது.



‘அக்னி நட்சத்திரம்படத்துக்கு இளையராஜா ரீ-ரிக்கார்டிங் செய்து கொண்டிருந்தபோது, அவருடைய நண்பரான இன்னொரு இசையமைப்பாளர், ‘ இப்படியே படத்தை ரிலீஸ் பண்ணாதீர்கள்! கிளைமாக்சை மறுபடியும் எடுங்கள்.


 இல்லையென்றால் படம் பார்க்கிறவர்கள் கண் வலிக்கிறது என்று சொல்வார்கள். நான் சினிமாவில் பல வருடமாக இருப்பவன். நான் சொல்கிறேன். நீங்கள் தப்பு செய்திருக்கிறீர்கள். படம் வெற்றி பெற்றால், நான் என் பெயரை மாற்றிக் கொள்கிறேன்என்று சொன்னார்.


என் படங்களில் வரும் மழைக் காட்சிகளுக்கு (ஜப்பானிய இயக்குனர்) குரசோவாதான் காரணம். அவரது படங்களில் பஞ்சபூதங்களும் உயிரோட்டத்தோடு இடம்பெற்றிருக்கும். மழை, என் காட்சிகளுக்கும் வலு சேர்க்கிறது.

பேபி ஷாம்லிக்கு அப்போது இரண்டரை அல்லது மூன்று வயது. அழகான, ஆரோக்கியமான, துறுதுறு வென்று இருக்கும் அந்தக் குழந்தையை மனவளர்ச்சி குன்றிய குழந்தையைப் போல நடிக்க வைப்பது பெரும் சவாலாகத்தான் இருந்தது. ஒரு சிறிய வீட்டில் வீடியோவில் ஒருநாள் படம் பிடித்தோம். எதிர்பார்த்தபடி அமையவில்லை.


 ‘அஞ்சலிபடத்தையே டிராப் பண்ணி விடலாமா என்று யோசித்தோம். அண்ணா நகரில் உள்ள சிறப்புக் குழந்தைகள் இல்லத்துக்குச் சென்று, அங்கே இருந்த எஸ்தர் என்ற குழந்தையின் சிரிப்பு, அழுகை, கோபம் என்று விதம் விதமாக இரண்டு மூன்று நாட்களுக்கு கூடவே இருந்து டெஸ்ட் ஷூட் பண்ணினோம். பேபி ஷாம்லிக்கு அதைப் போட்டுக் காட்டினோம். அதன்பிறகு பிரச்னை ஏதுமில்லை.


ரஜினிக்கு என்னோடு பணியாற்ற ஆர்வம் இருந்தது. ஆனால் அவ்வளவு பெரிய ஸ்டாரை வைத்துப் படமெடுக்க என்னிடம் கதை இல்லை. ரஜினியை வைத்து வழக்கமான ஒரு படத்தை எடுக்க எனக்கு விருப்பமில்லை. ரஜினியின் இமேஜுக்குப் பொருத்தமாகவும் இருக்க வேண்டும்; அதே சமயம் அது என் படமாகவும் இருக்க வேண்டும் என நான் நினைத்தேன். அப்போது தான் மகாபாரத கர்ணன் ஐடியா எனக்குத் தோன்றியது. என் அண்ணன் ஜி.வி. யோடு போய், ரஜினியைச் சந்தித்துப் பேசினேன். உடனே சம்மதித்தார். ‘தளபதிஇப்படித்தான் ஆரம்பமானது.



‘இருவர்படத்தின் ஹீரோயினுக்காக ஒரு புதுமுகத்தைத் தேடிக் கொண்டிருந்த போது, ராஜிவ் மேனன், ஐஸ்வர்யா ராயை என் வீட்டுக்கு அழைத்துக் கொண்டு வந்து அறிமுகப்படுத்தினார். ‘உங்களுக்கு நட்சத்திர அந்தஸ்து கிடைக்க வழிசெய்யும் படம் அல்லஇருவர்படம். படத்தில் அவருக்குரிய இருமாறுபட்ட ரோல்களைப் பற்றிச் சொன்னேன். நடிக்க சம்மதமா?’ என்று கேட்டபோது, சினிமாவில் நடிப்பதா? வேண்டாமா? என்று தயக்கத்தில் இருந்த ஐஸ்வர்யா ராய் .கே. சொன்னார். அடுத்து, ஆபீசில் டெஸ்ட் எடுத்தோம். தமிழ் வசனம் கொடுத்துப் பேசச் சொன்னோம். முதல் நாள் ஷூட் டிங்கில் ஐஸ்வர்யா ராய் பேசியஎனக்குப் பேசணும்என்ற வசனத்தை அவர் இன்னமும் ஞாபகம் வைத்துக் கொண்டிருக்கிறார்.


ஃபிலிப்பைன்ஸைச் சேர்ந்த ஒரு குழந்தை அமெரிக்காவில் ஒரு தம்பதிக்கு, தத்து கொடுக்கப்பட்டது. அதன் வளர்ப்புப் பெற்றோர்கள், அந்தக் குழந்தைக்கு அதன் பெற்றெடுத்தவர்களைக் காட்டுவதற்காக ஃபிலிப்பைன்சுக்கு அழைத்து வந்தார்கள். உணர்ச்சிபூர்வமான அந்தச் சந்திப்பு பற்றி டைம் பத்திரிகையில் ஒரு கட்டுரை வெளியானது. அதை சுஹாசினி படித்துவிட்டு, என்னிடம் காட்டினார். அதை வைத்து ஒரு படம் எடுக்கும்படி அவரிடம் சொன்னேன். அவர் டி.வி. சீரியலில் பிசியாக இருந்ததால், நானே, ஸ்ரீலங்கா பின்னணியில் படமெடுத்தேன். அதுதான்கன்னத்தில் முத்த மிட்டால்.’


சீதை கேரக்டருக்கு மிகப் பொருத்தமான முகம் ஐஸ்வர்யா ராய்யுடையதுதான் என்று நான் நினைத்தேன். அதனால்தான் ராவணனில் அவரை நடிக்க வைத்தேன்.


மணிரத்னத்தோடு 100 மணி நேரம்

மணிரத்னத்தின் படங்கள் பற்றி அவரோடு நீண்ட உரையாடல்கள் நடத்தி, Conversations with Mani Ratnam புத்தகத்தை எழுதி இருப்பவர் ஹிந்து நாளிதழின் துணை ஆசிரியரான பரத்வாஜ் ரங்கன். சினிமா தொடர்பான ஆழமான கட்டுரைகள் பல எழுதியவர். பரத்வாஜ் ரங்கன் பேசுகிறார்:
நான் மணிரத்னத்தின் படங்களைப் பற்றி எழுதிய ஒரு கட்டுரையைப் படித்து விட்டு, என்னை ஒரு புத்தகம் எழுதும்படி பெங்குயின் நிறுவனம் கேட்டது. ஒரு பத்திரிகையாளராக அவரைச் சந்தித்துப் பேட்டி காண்பதற்கான எனது முயற்சிகள் வெற்றிபெறவில்லை என்பதால், மணிரத்னத்தின் ஒவ்வொரு படமாக எடுத்துக் கொண்டு அலசி, ஒரு புத்தகம் எழுத நினைத்தேன். அதற்கு முன்பாக, மரியாதை நிமித்தம் அவரைச் சந்தித்தேன். அவரோடு பேசிக்கொண்டிருந்தபோதுதான், ஒவ்வொரு படம் பற்றியும் அவரோடு உரையாடி புத்தகத்தையும் உரையாடல்களின் தொகுப்பாகவே எழுதுவது என்பது முடிவானது.
ஒரு சந்திப்பில் இரண்டு மணி நேரம் பேசுவோம். இதுபோல 50 தடவைகள் சுமார் 100 மணிநேரம் பேசி இருப்போம். என் கேள்விகள், அவை எரிச்சலூட்டும்படி இருந்தாலும் அவர் கோபப்படாமல், தம் கருத்தை அழுத்தமாகத் தெரிவித்தார். அவரது பேச்சில் நேர்மை இருக்கும். ‘ராவணன்படம் முடிந்து சுமார் மூன்று மாதங்கள் கழித்து ஆரம்பித்தோம். அவரோடு பேசிய அனைத்தையும் எழுதியிருந்தால், இந்தப் புத்தகம் 300 பக்கங்களுக்குப் பதிலாக 600 பக்கங்கள் வந்திருக்கும். மணிரத்னம் நேரத்தைப் பொன்னாக மதிப்பவர். சந்திப்புக்கு நேரம் கொடுத்துவிட்டார் என்றால், அந்த நேரத்தில் ரெடியாக இருப்பார்.
ஒரு சந்திப்பில் அவர் சொன்ன விஷயங்களை, அடுத்த முறை சந்திப்பதற்கு முன்னால் எழுதிவிடுவேன். ஒவ்வொரு படத்தின் கதை, கதாபாத்திர உருவாக்கம், நடிகர்கள், வசனம் போன்றவற்றோடு கேமரா, எடிட்டிங், மியூசிக் போன்ற டெக்னிக்கல் விஷயங்களைப் பற்றியும் நிறைய பேசினோம். ஆனால், எல்லோருக்கும் படிக்க சுவாரஸ்யமாக இருக்கும்படி புத்தகம் அமைய வேண்டும் என்பதிலும் குறியாக இருந்தேன்."


நன்றி - கல்கி 
 https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjsIYh85sHIkyh4r8NhyphenhyphenUUD2Aaig-NW1zk8KHoSZcqcgD8a_PWB9Dit41E6xcxaqQ2GXuk9C0MMMxF-fI7jqsd0c8Do29UybebDyT2n2qu6o9uTHfJ7OCh3RFpPI8Pd6VdkYjZPl_nIQzTB/s1600/Kadal-Movie-Pics.jpg

எழுபதுகளில் நான் பார்த்த மோசமான படங்கள்தான் என்னை இயக்குநராக மாற்றின. தமிழ் சினிமாவைக் காப்பாற்றத் தூண்டின, என மனம் போன போக்கில் பேசி சர்ச்சை கிளப்பியுள்ளார் இயக்குநர் மணிரத்னம்.



கான்வர்சேஷன் வித் மணிரத்னம் என்ற புத்தகத்தில் அவரது பேட்டி இடம்பெற்றுள்ளது. பொதுவாக அதிகம் பேசாதவர் என்று அறியப்படும் மணிரத்தனம், இந்தப் பேட்டியில் நிறைய பேசியுள்ளார். அப்படி பேசியதால்தான் இவரது மனதுக்குள் எத்தனை இருட்டு நிறைந்து கிடக்கிறது என்ற உண்மை வெளிச்சத்துக்கு வந்துள்ளது.



அந்தப் பேட்டியின் ஒரு பகுதி இது:



‘ஒரு ஒழுக்கமான எம்.பி.ஏ.ஸ்டூடண்டா நான் பாட்டுக்கு என் வேலையை பாத்துக் கொண்டு இருந்திருக்க வேண்டியவன் நான். ஆனால் எழுபதுகளில் வந்த மட்டமான தமிழ்ப் படங்கள்தான், தமிழ் சினிமாவை நாமாவது காப்பாற்ற வேண்டும் என என்னை உணரவைத்தது.



பாலசந்தர் மற்றும் மகேந்திரன் படங்கள் தவிர்த்து, 70 களில் தமிழ் சினிமாவில் பல குப்பையான படங்களை நான் தொடர்ந்து பார்க்க நேர்ந்ததால், கோபப்பட்டுதான் நான் சினிமா எடுக்க வந்தேன். அப்போது மற்ற இயக்குனர்களும் நல்ல படங்கள் எடுத்திருந்தால் நான் தமிழ் சினிமாவுக்கு வந்தே இருக்கமாட்டேன்," என்கிறார் மணிரத்னம்.



மணிரத்னம் எடுத்ததில் எது ஒரிஜினல், எது நல்ல படம் என்பதை அவரே விளக்கிச் சொன்னால்தான் உண்டு. தொடர்ந்து 4 தோல்விப் படங்கள் தந்தவர் இதே மணிரத்னம்தான். அனைத்துப் படங்களிலும் ஏதாவது ஒரு புராணத்தைக் கட்டிக் கொண்டு அழும், இவர் நாயகன் எடுத்த கதையை முக்தா சீனிவாசன் கடந்த ஞாயிறன்று பிரித்து மேய்ந்துவிட்டார்.




எழுதுபதுகளில் பல அருமையான படைப்புகள் வந்தன. எழுபதுகளில் இவர் குறிப்பிடுவது பாலச்சந்தரையும், போனால் போகட்டுமென்று மகேந்திரனையும் மட்டுமே.



அந்த காலகட்டத்தில் கொடிகட்டிப் பறந்த ஸ்ரீதரையோ பாலுமகேந்திராவையோ, ஏன் இன்றும் வியக்க வைக்கும் படைப்பான அவள் அப்படித்தான் தந்த ருத்ரையாவையோ விட்டுவிட்டது ஏனோ.. எழுதுபதுகளில்தான் பாரதிராஜா என்ற சினிமா புரட்சியாளன் அழுத்தமாக தடம் பதித்தான் என்பதும் இந்த இருட்டு ஸ்பெஷலிஸ்ட் மணிரத்னத்துக்கு தெரியாமல் போனது ஏனோ?



'மணிரத்னம் தன் படங்களின் நேர்மை குறித்த யோக்கியமான விவாதத்தை முதலில் தொடங்கி வைக்கட்டும். மற்ற படைப்பாளிகளை விமர்சிக்கும் தகுதி அவருக்கில்லை!' - இது மணிரத்னத்தின் பேட்டி குறித்து இன்றைய படைப்பாளி ஒருவரின் காட்டமான விமர்சனம்!



நன்றி - தட்ஸ் தமிழ்


http://moonramkonam.com/now/wp-content/uploads/2012/04/Kadal-gauntham-samantha-maniratnam-kadal-movie-story.jpg


 டிஸ்கி - மேலே குறிப்பிடப்பட்ட செய்தி வேறொரு தளத்தில் இருந்து எடுக்கப்பட்டது. இதில் எனக்கு  உடன்பாடு என்றோ உடன்பாடு இல்லை என்றோ சொல்லி விட முடியாது.