Thursday, May 31, 2012

கொஞ்சும் மைனாக்களே - சினிமா விமர்சனம்


http://www.filmglitz.com/tamil/wp-content/uploads/2012/05/Konjum-Mainakkale.jpg

எங்கேயும் எப்போதும் படத்துல வர்ற மாதிரி ஓப்பனிங்க் ஷாட்லயே புத்தம்புது தம்பதிகள் போற வேன் ஆக்சிடெண்ட் ஆகிடுது.. மாப்பிள்ளை அவுட், பொண்ணு எஸ்கேப்( இயற்கை கொடுத்த வரம் என்னான்னா பொதுவா விபத்தில் அதிக பலி ஆவது அவசர புத்தி ஆண்களே!)இப்போ அந்த பொண்ணு கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரினி.. இந்த பாப்பா இப்படியே இருக்கட்டும்.. வாங்க இன்னொரு டிராக்ல இன்னொரு கதை

ஹீரோவுக்கு வீட்ல பார்த்து பண்ணி வெச்ச அரேஞ்ஜ்டு மேரேஜ்..முதல் இரவுல பாப்பா பம்முது, பயப்படுது.. மாப்ளை சரி போனா போகுது, கிணத்து தண்ணியை ஆத்து வெள்ளமா அடிச்சுட்டுப்போகப்போதுன்னு விட்டுடறாரு.. ஆனா இது ஒரு தொடர்கதை ஆகுது..

பாப்பா டிரஸ் மாத்தறப்பக்கூட  கணவனை பார்க்க விடறதில்லை.. ஏதோ பயங்கரமான கற்புக்கரசி ஃபேமிலி போல.. காலம் பூரா கற்போட இருக்கனும்னு ஆசைப்படுது..


நம்மாளுங்க காசு கொடுத்து பிளாக்ல டிக்கெட் வாங்கி பிட்டுப்படம் பார்க்கறவங்க , சொந்த தியேட்டர் இருந்தும் சீன் பார்க்க முடியலைன்னா எப்படி? தம்பதிகளுக்குள் சண்டை.. பாப்பாவை அம்மா வீட்டுக்கு பேக் பண்ணி அனுப்பிடறான்.

ஓப்பனிங்க்ல ஒரு பாப்பா அம்போன்னு இருக்கே அந்த பாப்பாவுக்கும் இவருக்கும் சிவசம்போ .. ஐ மின்  ஒரு நட்பு உருவாகுது... 2 பேரும் எப்போ வெளீல போனாலும் வருண பகவான் அருள் பாலிக்கறாரு.. அடிக்கடி மழை வந்து அவங்க நெருக்கம் ஆக உதவியா இருக்கு..

http://www.cinejosh.com/gallereys/spicy/normal/konjum_mainakkale_tamil_movie_spicy_stills_1004120909/konjum_mainakkale_tamil_movie_spicy_stills_1004120909_025.jpg

அப்படி ஒரு நெருக்கமான கடத்துல பாப்பா கண்ணை மூடி, உதட்டை கடிச்சு ( அவர் உதட்டை அவரே கடிச்சு) விரக தாபத்தை வெளீப்படுத்தி கில்மாக்கு ரெடி ஆகறாரு .. இப்போ தான் ஹீரோ தன் ஹீரோயிசத்தை காட்றாரு.. நான் உத்தமன், ஏதும் செய்ய மாட்டேன்னு விலகி வந்துடறாரு.. புராணத்துல வர்ற ராமன் கூட அப்படி உட்டுட்டு வர மாட்டான்.. இவர் வந்துடறாரு..

இவங்க 2 பேர் லவ் பிக்கப் ஆச்சா? அல்லது பழைய ஃபிரஷான சம்சாரம் கூடவே சேர்ந்தாரா? அப்படிங்கறது  தான் மிச்ச சொச கதை ஹி ஹி ..

ஹீரோ பேரு உதய்.. ஆள் ஓக்கே .. ரொம்ப ஓவர் ஆக்டிங்க் எல்லாம் பண்ணாம டைரக்டர் என்ன சொன்னாரோ அதை மட்டும் செய்யறார்.. லோ பட்ஜெட் படங்களில் தொடர்ந்து சான்ஸ் உண்டு..

ஹீரோயின்ஸ் 2 பேரு.. அக்‌ஷதா, மோகனப்பிரியா.. இதுல யார் அக்‌ஷதா யார் மோகனப்பிரியா என்ர வரலாற்று உண்மைகள் சரியாத்தெரியலை.. கூகுள் சர்ச்லயோ,ராகுள் மிர்ச்லயோ தேடுனா ஈசியா கிடைக்கும்.. ஆனா பாருங்க ஃபிகருங்க அந்த அளவு ஒர்த் இல்லை.. 2 மே  50 மார்க் ஃபிகருங்க தான்.. சோ லீவ் தட் மேட்டர்..

ஹீரோவுக்கு மனைவியா வர்றவர் பாதி நேரம் அழுதுட்டே இருக்காரு..  ஃபேமிலி கேர்ள் முகம் ஓரளவு சூட் ஆகுது.. 30% தள்ளுபடி மாதிரி கிளாமர்  @ டூயட் சீன்ஸ்..

காதலியா வர்றவர் குண்டு முகம்.. தமிழனை கவர்றது கஷ்டம்.. உதா - சுவலக்‌ஷ்மி  .வசனம் பேசும்போது மறந்துடக்கூடாதேன்னு அவசர அவசரமா பேசறாரு..  நடிப்பு ஓக்கே ..


http://mimg.sulekha.com/tamil/konjum-mainakkale/stills/konjum-mainakkale-photos-082.jpg

இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள்

1. படத்தில்  அதிக பட்சம் 6 கேரக்டர்களை மட்டும் வெச்சு திரைக்கதை எழுதுனது.

2. மொக்கையா இருந்தாலும் ஓரளவுக்கு ரிலாக்ஸா வர்ற எம் எஸ் பாஸ்கர் காமெடி டிராக்கை கஷ்டப்பட்டு படத்துல சேர்த்தது..

3. ஹீரோவுக்கு சூர்யா மாதிரி முக சாயல் இருப்பதை உணர்ந்து அதை பூஸ்ட் பண்ற மாதிரி கேமரா ஆங்கிள்ஸ் யூஸ் பண்னது

4.  மினிமம் 50,000 ரூபா சம்பளம் குடுத்தாலும் மேக்சிமம் கிளாமரை 2 ஹீரோயின்களிடம் இருந்து கறந்தது



http://www.abimani.com/wp-content/gallery/konjum-mainakkale-tamil-movie-hot-stills/konjum-mainakkale-tamil-movie-hot-stills-11.jpg

இயக்குநரிடம் சில கேள்விகள்

1.  படத்தோட டைட்டில்க்கும் படத்துக்கும் சம்பந்தமே இல்லை, பேசாம டைட்டிலை மை டியர் மைனா அல்லது கொஞ்ச மறந்த மைனாக்கள் அப்படி வெச்சிருக்கலாம்

2. தனக்கு ஆல்ரெடி மேரேஜ் ஆகியாச்சு என்ற மேட்டரை ஹீரோ ஏன் அந்த பாப்பா கிட்டே சொல்லலை? அவன் ஒண்ணும் சீட்டிங்க் பேர்வழி கிடையாது, சான்ஸ் கிடைச்சும் பாயாசம் சாப்பிடாம எந்திரிச்சு வந்தவன். அப்பேர்ப்பட்ட நல்லவன் தன்னை பற்றி சுய அறிமுகம் ஏன் செஞ்சுக்கலை?

3. ஹீரோ மேரேஜ் ஆன ஆள்னு தெரிஞ்சதும் என்னமோ வாழ்க்கையே போன மாதிரி ஹீரோயின் ஏன் பதறனும்? ஹீரோயினும் ஆல்ரெடி மேரேஜ் ஆகி ,மேட்டர் நடக்காம  விதவை ஆனவர்.. ஹீரோவும் மேரேஜ் ஆகியும் மேட்டர் நடக்காம மனைவியை பிரிஞ்சவர்.. ஆனா என்னமோ பிளான் பண்ணி ஏமாத்துன மாதிரி ஏன் குதிக்கனும்?

4. ஹீரோ ஒரு சராசரி மனிதர் தான்.. ஆசாபாசங்களை அடக்கி வாழும் துறவி அல்ல,அதை பல காட்சிகள்ல காட்டிடறீங்க.. ஆனா தனிமை, பாழடைஞ்ச பங்களா, இரவு,  வெளீயே மழை , பாப்பாவும் ஓக்கே சொன்ன பின் ஏன் ஹீரோ பம்பறாரு.. அம்புட்டு நல்லவரா காட்ட வேண்டிய அவசியம் என்ன? ( எங்க கவலை எங்களுக்கு, படம் தான் டப்பா சீனாவது டாப்பா 1 பார்க்கலாம்னு ஆதங்கம் தான் ஹி ஹி )


http://gallery.tamilkey.com/wp-content/themes/transcript_new/timthumb.php?src=http%3A%2F%2Fgallery.tamilkey.com%2Fwp-content%2Fuploads%2F2012%2F04%2FKonjum-Mainakkale-Movie-2012-Hot-Stills-1.jpg&q=90&w=340&h=254&zc=1


மனம் கவர்ந்த வசனங்கள்

1. நான் உனக்கு பொண்ணு  பார்க்கறேன், உனக்கு எந்த மாதிரி பொண்ணு வேணும்?

உங்க சம்சாரம் சுந்தரி மாதிரி சூப்பர் ஃபிகரா , செம கட்டையா வேணும் சார் ஹி ஹி


2. டேய்.. நாயே.. இதே ஃபோட்டோவை நான் காட்டினப்போ பிடிக்கலைன்னு சொல்லிட்டு இப்போ என் சம்சாரம் காட்டினதும் செம , சூப்பர்னு சொல்றியே  ?

3.  ஏம்மா.... நீ யாரு? சம்பந்தம் இல்லாம ஆஜர் ஆகறே?

 நானும் இவர் பொண்டாட்டி தான்.. ஆனா பொண்டாட்டி மாதிரி ஹி ஹி

 ஓஹோ கீப்பா? நகரு நக்ரு.. செல்லாது செல்லாது..


4. சார், உங்க தலை ஏன் அயர்ன் பண்ணுன மாங்கொட்டை மாதிரி இருக்கு?

5.  அது பேசாது ஒன்லி ஆக்‌ஷன் தான்..

 என்ன, புருஷனை அது இதுங்கறீங்க?

ம் ம் , நைட் டியூட்டி மட்டும் பார்த்தா பரவாயில்லை, பகல் டியூட்டியும் பார்க்குதே?

 எது? இந்த மூஞ்சி? ம் ம்


6.  என் புருஷன், என் உரிமை, நான் டா போட்டுக்கூப்பிடக்கூடாதா?

அந்நிய ஆம்பலைங்க முன்னால அது தப்பு , அடக்கி வாசி

7. நான் நிரந்தரமானவன் இல்லை, சும்மா வந்துட்டு போய்ட்டு, இருக்கிறவன்..

ஓஹோ டெம்ப்ரவரி ஹஸ்பெண்ட்?

8. என்னை உங்களுக்கு பிடிச்சிருக்கா?

ம் யாருக்குத்தான் உங்களை பிடிக்காது?

9. மண்ணுக்குள்ள போற வரை பொண்டாட்டியை மாத்தாம இருக்கறவன் தான் உண்மையான ஆம்பளை

10. உனக்கு லைஃப்ல எல்லாமே கிடைச்ச மாதிரி கிடைச்சு கிடைக்காத மாதிரி இருக்கா?

11. நான் உன்னை தப்பா நினைச்சது தப்புன்னு நினைச்சேன், ஆனா எல்லாமே சரியாத்தான் நினைச்சிருக்கேன்


http://www.cinemamasti.com/wp-content/uploads/Konjum-Mainakkale-Hot-Photos-4.jpg a


எதிர்பார்க்கும் ஆனந்த விகடன் மார்க் - 38


எதிர்பார்க்கும் குமுதம் ரேங்க்கிங்க் - சுமார்

 சி.பி கமெண்ட் -- டி வி  ல போட்டா பாருங்க  அவ்ளவ் தான்

 ஈரோடு சங்கீதா தியேட்டர்ல படம் பார்த்தேன்

புகையிலை எதிர்ப்பு விழிப்புணர்வுக்கட்டுரை

இன்று உலக புகையிலை எதிர்ப்பு தினம். World No Tobacco Day pic.twitter.com/tnrEHI4I
 இன்று புகையிலை எதிர்ப்பு நாள், அது சம்பந்தமான கட்டுரை ஒன்று போடுங்க என ட்விட்டர் நண்பர் டாக்டர் ராஜ்மோகன் சார் கேட்டுக்கொண்டதால் அது  பற்றி ஒரு கட்டுரை தேடிக்கொண்டிருந்தேன்.. .. 

அதே சமயம் சின்ன வயசுல இருந்து எனக்கு புகைப்பிடிக்கும் பழக்கம் வராமல் பார்த்துக்கொண்ட, அல்லது கவனித்துக்கொண்ட என் பெற்றோருக்கு என் நன்றிகள்.. என் அனுபவத்துல ஒருத்தன் 19 வயசுக்குள்ள கெட்டுப்போனாத்தான் உண்டு.. அதுக்குப்பிறகு அவனுக்கு பக்குவம் வந்துடும்.. எனவே மனம் அலை பாயும் டீன் ஏஜ் இளைஞர்களை பெற்றோர்கள் கவனிக்க வேண்டுகிறேன்



சிகரெட் அலர்ட்!



''என்னை நீ எரித்தால், உன்னை நான் எரிப்பேன்.''


- எரிந்துகொண்டு இருக்கும் சிகரெட்டைக் கூர்ந்து பார்க்கும்போது எல்லாம் இந்தக் கவிதை நினைவுக்கு வருவதைத் தவிர்க்க முடிவது இல்லை!


'சும்மா ஒரு கிக்... ஒரு த்ரில்’ என்றுதான் ஆரம்பிக்கும். ஒரு கட்டத்தில், 'மாப்ள தம் அடிக்காம இருக்க முடியலைடா...’ என அடிமையாகிற அளவுக்குப் பற்றிப் படர்ந்துவிடும். தெரிந்தே நுரையீரலுக்குத் தினமும் கொள்ளி வைக்கும் கொடிய புகைப் பழக்கத்தில் இருந்து எப்படி விடுபடுவது?


''புகையிலையில் கலந்துள்ள நிகோடினின் அபாயம் மட்டும்தான் வெளியே தெரியும். ஆனால் வெடி உப்பு, கார்பன் மோனாக்சைடு, அமோனியா ஆர்செனிக், மீத்தேன், பிரஸ்லிக் அமிலம், ஃபார்மிக் அமிலம், கிரிஸால், பைரால், ரூபிடின், மெதிலின் பர்பரோல், பைக்கோலின், பார்வோலின், ஒட்டிடைப், சல்புரேடட் ஹைட்ரஜன், சப்பரிடேட், லூனைன், விரிடைன், மைதிலைமின், பார்மால் டிரையுட், பார்பிக் ஆல்டிஹைட், மரிஜூவானா, அக்ரோலின், மார்ங்காஸ், கொரிடீன் போன்ற 4,000 விதமான அமிலங்கள் சிகரெட் தயாரிப்பில் பயன்படுத்தப்படுகின்றன.


விஷ வாயுக் கூண்டுக்குள் உங்களை நீங்களே தள்ளுவது எவ்வளவு பெரிய துயரம்'' என அதிர்ச்சி வைத்தியம் கொடுக்கிறார் டாக்டர் ஆல்வின் விஜய்.



'புண்பட்ட மனதைப் புகைவிட்டுத் தேற்றுகிறோம்’ எனச் சொல்பவரா நீங்கள்? ஒரு நிமிடம்... டாய்லெட்டுகளில் பயன்படுத்தும் அம்மோனியா ஆசிட் என்கிற ஃபினாயில், நெயில் பாலிஷ் ரிமூவர், இறந்த உடல்களைப் பதப்படுத்தும் ஃபார்மலின் போன்ற அமிலங்களின் கலவையும் சிகரெட்டில் இருக்கின்றன. இத்தகைய நச்சுக்களைக்கொண்டுதான் உங்களின் மனதைத் தேற்றப்போகிறீர்களா?


''சுவாசக் குழாயில் சளி ஏற்பட்டு 'லொக், லொக்’ என்று அடிக்கடி இருமல் படாத பாடுபடுத்தும். குடல் புண், வாய்ப் புண், தொண்டை எரிச்சல், நாக்கு சுவை உணர்வை இழத்தல், கண் பார்வை மங்குதல், தோல் சுருக்கம், கை கால் நடுக்கம், புற்றுநோய், நுரையீரலில் சளி கோத்து கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடியாத 'சி.ஓ.பி.டி.’ என்கிற நாள்பட்ட நுரையீரல் சுவாசக் குழாய் சுருக்கம் வரை இது கொண்டுபோகும்.


ரத்தத்தில் பிராண வாயுவின் அளவைக் குறைப்பதால், ரத்தத்தில் பித்தம் அதிகரித்து இரும்புச் சத்து குறைந்துவிடும். இதனால், ரத்தத்தில் உள்ள தேவையற்ற கொழுப்பு ரத்த நாளங்களில் ஒட்டிக்கொண்டு ரத்த ஓட்டத்தைப் பாதிக்கும். இதன் விளைவாக அதிக ரத்த அழுத்தம் ஏற்பட்டு, இதய நோய் உருவாகி மாரடைப்பு உண்டாகும். காச நோய்க்கு எவ்வளவு சிறப்பாக சிகிச்சை அளித்தாலும் புகையிலைப் பழக்கம் உள்ள நோயாளிகளில் 70 சதவிகிதத்தினரின் இறப்பைத் தவிர்க்க முடிவது இல்லை.


 மேலும், ஆண்களுக்கு மலட்டுத்தன்மை ஏற்படவும் புகையிலை ஒரு காரணம். மூளைப் பாதிப்பு, கல்லீரல் பாதிப்பு என உச்சந்தலையில் இருந்து உள்ளங்கால் வரை புகையிலையால் ஏற்படும் பாதிப்புகள் பயங்கரமானவை'' என்கிறார் டாக்டர் ஆல்வின் விஜய்.


பணத்தையும் கரைத்து, உயிரையும் குடிக்கும் புகையிலையை எப்படிக் கைவிடுவது என்பதற்கு சில யோசனைகளை முன்வைக்கிறார் அடையாறு புற்றுநோய் சிகிச்சை மையத்தின் புகையிலைத் தடுப்புப் பிரிவின் துறைத் தலைவராக இருக்கும் டாக்டர் விதுபாலா.


''ஆல்கஹாலைவிட, கஞ்சாவைவிட நிகோடினுக்கு மனிதனை அடிமைப்படுத்தும் தன்மை அதிகம். இதனால் புகையிலையைக் கொஞ்சம் கொஞ்சமாக விட்டுவிடுகிறேன் என்பது நடக்காத காரியம். அதனால், ஒரு நிமிடத்திற்குள் ஆரம்பித்த புகைப் பழக்கத்தை ஒரே நொடியில் விட்டுவிட முடிவு செய்ய வேண்டும். முதலில் புகையிலைப் பழக்கத்தினை நிறுத்த ஒரு தேதியினை முடிவுசெய்யுங்கள்.


மனதை இறுக்கத்தில் இருந்து தளர்த்தும் யோகா, நடைப்பயிற்சி, தியானம், நடனம் போன்றவற்றைத் தினமும் தவறாமல் செய்யுங்கள். புகையிலையால் புண்பட்ட உங்களை, அந்தப் பழக்கத்தில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக வெளியே கொண்டுவர இவை உங்களுக்குக் கை கொடுக்கும்.


புகையிலையால் உங்கள் பொருளாதாரத்துக்கும் உங்களைச் சுற்றி இருப்பவர்களுக்கும் எத்தகைய பாதிப்புகளை நீங்கள் உருவாக்குகிறீர்கள் என்பதைச் சிந்தித்துப்பாருங்கள்.


புகையிலையை நிறுத்த ஆரம்பித்த முதல் ஏழு நாட்கள் கோபம், எரிச்சல் தோன்றலாம். மாரடைப்பு, புற்றுநோயைவிட... கோபமும் எரிச்சலும் சமாளிக்க முடியாத பிரச்னை  இல்லை. இந்த மாதிரியான நேரங்களில் ஒரு டம்ளர் தண்ணீர் அருந்துவது, உடற்பயிற்சி செய்வது புகைப் பழக்க எண்ணத்தைக் குறைக்க உதவும்.


எப்போது எல்லாம் புகையிலை, பான் போன்றவை உங்களின் நினைவுக்கு வருகிறதோ... அப்போது எல்லாம் உட்கார்ந்த நிலையில் உங்களின் மூச்சினை நன்றாக இழுத்துவிட முயற்சி செய்யுங்கள். ஏலக்காய் அல்லது கிராம்பினை வாயில் போட்டு மெல்லுங்கள். இந்த வாசனைக்கு சிகரெட் குடிக்கும் எண்ணத்தைக் கட்டுப்படுத்தும் தன்மை அதிகம்.


சிகரெட்டை விட்டவர்கள் கேரட், வெள்ளரிக்காய் அதிகம் சாப்பிடுங்கள். புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகள் இருந்தால்கூட, இதில் உள்ள ஆன்டி ஆக்சிடன்ட் அதை தடுக்கும். சிகரெட்டைவிட சிகிச்சை முறையும் உள்ளது. படிப்படியாக இந்தப் பழக்கத்தில் இருந்து வெளியே கொண்டுவருவோம்'' என்கிறார் விதுபாலா.


மே 31-ம் தேதி புகையிலை எதிர்ப்பு நாள். சிகரெட் பழக்கத்தில் இருந்து நீங்கள் விடுபட அல்லது உங்களுக்கு நெருக்கமானவரை விடுவிக்க... இன்னும் ஒரு வாய்ப்பு!

 நன்றி - டாக்டர் விகடன்



டிஸ்கி - புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த திருப்பூர் பதிவர் சொல்லரசன் ஜேம்ஸ்  இன்று காலை மாரடைப்பால் இயற்கை எய்தினார்.
அவருக்கு அஞ்சலிகள் அவரது குடும்பத்துக்கு ஆழந்த இரங்கல்கள்.அவரது பிளாக் லிங்க் - http://sollarasan.blogspot.in/

லொள்ளு சபா - எந்திரன் பார்ட் 2 - ? சந்தானம் பேட்டி @ விகடன்

http://i.ytimg.com/vi/a5HXKnP52rA/0.jpg 


1. 'மீண்டும் லொள்ளு சபாவில் ஒரு படத்தை உல்டா செய்து நடிக்கணும்னா, எந்தப் படத்தை உல்டா செய்வீங்க... ஏன்?'' 


 
''கண்டிப்பா 'எந்திரன்’தான். அந்தப் படம் பார்த்த உடனே இதை வெச்சு எப்படி எல்லாம் லொள்ளு பண்ணலாம்னு சும்மா ஜாலியாப் பேசினோம். ஏகப்பட்ட ஸ்கோப் இருக்கிற கதை. அதனால நிறைய புதுப் புது ஐடியாஸ் கிடைச்சது. அப்படி ஒரு ஷோ பண்ணா, கண்டிப்பா எந்திரன் 2.0தான் எங்க சாய்ஸ்!''



2. ''நேற்று வடிவேலு... இன்று சந்தானம்... நாளை..?'' 


''நேற்று... இன்று... நாளைனு போட்டு 'காமெடியன்கள்’னு மட்டும் போடுங்க. அதுதான் ரொம்ப சரி!


சினிமாவுல வடிவேலு, சந்தானம், அப்படி இப்படினு பேர் மட்டும்தான் மாறும். ஆனா, காமெடியன்கள் வந்துட்டேதான் இருப்பாங்க. நாளைக்கு யார்னு நீங்கதான் முடிவு பண்ணணும். என்கிட்ட கேட்டா, எனக்கு மட்டும் என்ன ஆன்ஸர் பேப்பர் லீக் ஆகியிருக்குமா என்ன?''



3. ''உங்களுக்கு இன்னும் யாரும் பட்டம் எதுவும் கொடுக்கலையே. நீங்களே உங்களுக்கு எதுனா பட்டம் கொடுத்துக்கலாம்னா, என்ன கொடுத்துப்பீங்க?'' 



''வேண்டாங்க... பெருசா சாதிச்ச சார்லி சாப்ளின் பட்டம் வெச்சுக்கிட்டாரா என்ன, லாரல்-ஹார்டி பட்டம் வெச்சுக்கிட்டாங்களா? மிஸ்டர் பீனுக்கு என்ன பட்டம் இருக்கு? சாதிச்ச யாருமே பட்டம் வெச்சுக்கலையே. அதனால, எனக்கும் பட்டம் வெச்சுக்கணும்னு ஆசை இல்லை. அப்போ நீ சாதிச்சுட்டியானு கோக்குமாக்காக் கேள்வி கேட்கக் கூடாது. அப்படிலாம் படத்துலதான் எங்களை நாங்களே டபாய்ச்சுக்குவோம்!''




4. '' 'இம்சை அரசன் 23ம் புலிகேசி’ இரண்டாம் பாகத்தில் நீங்கதான் ஹீரோவாமே... உண்மையா?'' 


''இதுவரைக்கும் எதுவும் உறுதி ஆகலை. பேசிட்டு இருக்கோம். எல்லாம் கூடி வந்தா பார்க்கலாம்!''  




5. ''குவார்ட்டர் இல்லாமல் உங்களால் சிரிக்கவைக்கவே முடியாதா?'' 


''எனக்கும் ஆசைதாங்க. ஆனா, 'குவார்ட்டர்’னு ஒரு டயலாக்கை ஆரம் பிச்சாதான் எல்லாரும் சிரிக்கிறாங்க. ஆடியன்ஸ் முகத்துல ஒரு சந்தோஷமும் மலர்ச்சியும் அந்த வார்த்தையைக் கேட்ட தும்தான் வருது. அட... காமெடி சீன் பிடிக்க டிஸ்கஸ் பண்றப்போ, அதைச் சொன்னாதான் கூட உட்கார்ந்திருக்குறவங்க முகத்துல ஒரு உற்சாகம் பொங்குது. அதனால 'புலி வால் பிடிச்ச கதையா, குவார்ட்டரை விட முடியலை. ஞாபகப்படுத்திட்டீங்க. அதனால, ஒரு குவார்ட்டர் காமெடி சொல்றேன்...


என் ஆபீஸ்ல ஒரு குவார்ட்டர் பார்ட்டி இருக்கார். அன்னைக்கு ஒரு பெரிய ட்ரீட். அவரையும் சாயங்காலம் ட்ரீட்டுக்குக் கூப் பிட்டு இருந்தோம். பார்ட்டிக்குப் போறதுக்கு முன்னாடி வார்ம்-அப் பண்ணிக்கலாம்னு நினைச்சிருக்கார். பவர்கட்டான நேரத்துல ஒரு கட்டிங்கைத் தேத்தி, ஃபிரிஜ்ல இருந்து தடவித் தடவி வாட்டர் பாக்கெட் எடுத்து மிக்ஸ் பண்ணி அடிச்சிட்டு சத்தம் இல்லாம செட்டில் ஆகிட்டார்.


கரன்ட் வந்த பின்னாடி ஒரு நண்பர் வந்தார். அவருக்கு டீ போட்டுக் கொடுக்க ஃப்ரிஜ்ல பால் பாக்கெட் தேடுறோம். காணோம். அப்பத்தான் தெரிஞ்சது... 'வாட்டர் பாக்கெட்’னு நினைச்சு நம்ம தோஸ்த் பால் பாக்கெட்டை வெட்டி கட்டிங்ல மிக்ஸ் பண்ணியிருக்கார்னு. அவரை செம கலாய் கலாய்ச்சிட்டோம். நாங்க பார்ட்டி முடிஞ்சு வர்ற வரை அந்த கட்டிங் பார்ட்டி டாய்லெட்டைவிட்டு வெளியவே வரலை. சீதபேதி, வாந்தி பேதினு ஊர்ல இருக்குற அத்தனை பேதி யும் வந்து ஒரு காட்டு காட்டிருச்சு!''



6. ''தற்போதைய காமெடியன்களில் உங்களுக்குப் பிடித்தவர் யார்? ஏன்?'' 


''இப்போ உள்ள காமெடியன்களில் எல்லாருமே எனக்கு நண்பேன்டாதான். யாரையும் குறிப்பா சொல்ல முடியாது. ஹாலிவுட் காமெடியன்களில் என் ஆல்டைம் ஃபேவரைட் மிஸ்டர் பீன்தான். சமீபத்தில் அவர் நடிச்ச ஜானி இங்கிலீஷ் ரீபார்ன் படத்தை முதல் நாள் முதல் ஷோ பார்த்தேன். ரொம்பப் பிடிச்சிருந்தது. அவரோட எக்ஸ்பிரஷன்ஸ், பாடி லாங்குவேஜ் எல்லாமே அட்டகாச அட்ராக்ஷனா இருக்கும்!''

http://123tamilgallery.com/images/2010/09/telugu-actor-santanam-02.jpg



7. ''ஸ்கூல் நாடகங்களில் நடிச்ச காமெடி அனுபவம் சொல்லுங்களேன்?'' 


''நைன்த் படிக்கும்போது ஒரு நாடகம் போட்டோம். பூலோகத்துல இருந்து கிளம்பிப் போய் எமலோகத்துல இருக்குறவங்களை மாடர்னா மாத்துறதுதான் கான்செப்ட். எமன் வேஷம் போட்டவன் வேட்டி மாதிரி கட்டி, தலையில கிரீடம்லாம் வெச்சிருந்தான். அவன் உட்காரும்போது நான் சேரை இழுக்கணும். அவன் லேசா தடுமாறணும். அதை நான் ராங் டைமிங்ல பண்ணி சேரை முழுக்க இழுத்துட்டேன். அவன் விழுந்துட்டான்.


 தலைகுப்புற விழுந்த வேகத்துல, அவன் வேட்டி கிரீடத்துல சிக்கி, அவன் போட்டிருந்த ஓட்டை ஜட்டி அப்படியே எக்ஸ்போஸ் ஆகிருச்சு. நான் அவனுக்கு உதவி பண்றதா நினைச்சு, வேட்டியைக் கிரீடத்துல இருந்து பிடிச்சு உருவுறேன். மொத்த வேட்டியும் கையோட வந்திருச்சு. 'ஓட்டை ஜட்டி எமன்’னு எல்லாரும் சிரிச்சுட்டாங்க. அவன் கிரீடத்தைத் தூக்கிப் போட்டுட்டு ஸ்டேஜ்லயே என்கூட மல்லுக்கட்ட ஆரம்பிச்சிட்டான். 'நான் என்ன பண்றது?’னு சமாளிச்சுப் பார்த்தேன். ஹூம்ம்... கோபம் குறையாமப் பல வருஷம் என்கூடப் பேசாமயே இருந்தான்!''



8. ''காமெடி நடிகர்கள் அரசியலுக்கு வரலாமா?''   


''காமெடி நடிகர்கள் ஓட்டுப் போடலாம்தானே! அப்போ அவங்களுக்கும் அரசியலுக்கு வரத் தகுதி இருக்குதானே பிரதர்?! மக்களுக்கு நல்லது பண்ணணும்னு நினைச்சா, அவர் காமெடியனா இருந்தா என்ன... வில்லனா இருந்தா என்ன? ஆக்ச்சுவலி சினிமாவில் இருக்கும்போதே காமெடியன்ஸ் மக்களுக்கு நல்லது பண்ணிக்கிட்டுத்தான் இருக்காங்க!''



9. ''இந்தக் கேள்விக்கு மழுப்பாம, மறைக்காம பதில் சொல்லுங்க... நீங்க ஹீரோவா நடிக்கிற படத்துக்கு யாரை ஹீரோயினா ஃபிக்ஸ் பண்ணுவீங்க?'' 


''சும்மாவே என்கூட நடிக்கிற எல்லா ஹீரோயின்களும்... 'வாங்க ஹீரோ சார்’னு கூப்பிட்டுக் கலாய்ப்பாங்க. இதுல நீங்க வேறயா? ஆனா, இதுவரை அவங்களே யாரும் 'நீங்க ஹீரோவா பண்ணப்போறீங்களா’னு கேட்டது இல்லை. அதனால, அவங்க யாரும் என் சாய்ஸ் இல்லை. என் ஆசைனு கேட்டா, கேத்ரீனா கைஃப்தான். ஆனா, அவங்க சம்மதமும் அதுல முக்கியம் இல்லையா? கேட்டுச் சொல்லுங்களேன்!''



10. ''விகடன் மேடையில் கராத்தே உடையில் உங்க போட்டோ பார்த்தேன். எத்தனை பெல்ட் வாங்கியிருக்கீங்க? எந்தக் கடையில் வாங்கு னீங்க?'' 


''நீங்க வாங்கின கடைக்குப் பக்கத்துக் கடையில வாங்கினேன்  நம்புங்க பிரதர்... கராத்தேல பிரவுன் பெல்ட் வரை வாங்கியிருக்கேன். இப்பவும் கராத்தே ஸ்டெப்லாம் ஞாபகம் இருக்கு. ரியல் லைஃப்ல ஒருத்தனைத் தூக்கிப் போட்டுலாம் மிதிச்சிருக்கேன். ஆனா, அப்போ கராத்தே கை கொடுக்கலைங்க. நாம பொறுமையா அந்த ஸ்டெப் போட்டுத் தாக்கறதுக்குள்ள நம்மளை அடிச்சுட்டுப் போயிருவாங்க.


 பழக்கதோஷத்துல நாம 'ஹோஸ்’னு குனிஞ்சு மரியாதை பண்ணும்போது, அவனுங்க பொக்குனு குத்திருவானுங்க. தெருச் சண்டை வேற விஷயம். இப்போ ரீசன்ட்டாகூட ஒருத்தன் குடிச்சிட்டு ரோட்டுல ஒரு பொண்ணைப் போட்டு அடிச்சுட்டு இருந்தான். வண்டியை நிறுத்தி சொல்லிப் பார்த்தும் அவன் கேட்கலை. நானும் ஃப்ரெண்டும் சேர்ந்து நாலு அப்பு அப்புனோம். அப்புறம்தான் அடங்குனான்.


 அப்பப்போ பசங்ககூட ஜாலியா ரெஸ்லிங் விளையாடுவேன். யார் முதுகு முதல்ல கீழ படுதோ அவங்க அவுட். என் ஃப்ரெண்ட்ஸ் எல்லாம் வெயிட் பார்ட்டிங்க. ரெண்டு மாசத்துக்கு முன்னாடி விளையாடினப்ப, விரல்ல லேசா எலும்பு முறிஞ்சிருச்சு. ஆனா, நிச்சயம் கராத்தே கத்துக்கிறது நம்ம தன்னம்பிக்கையைத் தாராளமா வளர்க்கும். உடல் வலுவைக் கூட்டுற விஷயம். அதுக்காகவே அதைக் கத்துக்கலாம்!''



11. ''உங்களுக்குப் பெண் ரசிகைகள் அதிகமா... ஆண் ரசிகர்கள் அதிகமா?''


''இப்போ சென்சஸ் எடுத்துட்டு இருக்காங்களே.... அவங்ககிட்ட சொல்லி அப்படியே இந்தக் கேள்விக்கும் பதில் வாங்கிருவோமா? என்ன பாஸ் இது விளையாடிக்கிட்டு இருக்கீங்க. எனக்குத் தெரிஞ்சு ரெண்டு பேருமே சமமாத்தான் இருக்காங்க. ஆனா, பசங்க பரவாயில்லை. தியேட்டர்ல விசிலடிச்சோ, கலாய்ச்சோ விட்ருவாங்க. நம்ம நம்பருக்கு ஒரு தடவை கூப்பிட்டு அதை நாம எடுக்கலைன்னா, கோபப்பட்டுவிட்ருவாங்க.


 ஆனா, சில பெண் ரசிகைகள் கால் பண்ணுவாங்க. எடுக்கலைன்னா, 'என்ன சார், கால் அட்டெண்ட் பண்ண மாட்டீங்களா?’னு ஒரு மெசேஜ் வரும். அதுக்கு ரிப்ளை பண்ண மாட்டேன். கொஞ்ச நேரத்துல 'நீ என்ன அவ்ளோ பிஸியா?’னு கோச்சுப்பாங்க. அப்புறம் 'போடா வெண்ணெ’னு ரொம்பக் கோபமா அனுப்புவாங்க. நான் எதுக்கும் ரிப்ளை பண்ண மாட்டேன். எல்லா ரசிகர்கள்கிட்டவும் பேசணும்னு ஆசைதான். ஆனா, எவ்ளோ பேர்கிட்ட பேச முடியும்?''


- அடுத்த வாரம் 


http://profile.ak.fbcdn.net/hprofile-ak-snc4/592235_156557197698928_2040420322_n.jpg


''உங்களால்தான் வடிவேலுவுக்கு மார்க்கெட் போய்விட்டது என்ற கருத்து உண்மையா?'' 


''வாயைத் திறந்தாலே உங்களுக்கு 'பீர்... பீர்...’ என அடிக்கடி வருகிறதே... உங்க பிராண்ட் என்ன நைனா?'' 


''பொதுவாக, தமிழ் சினிமாக்களில் ஹீரோயின்களை 'லூஸுப் பெண்’களாகவே காட்டுகிறார்கள். ஆனால், உண்மையில் அவர்கள் எப்படி? அசின் முதல் ஹன்சிகா வரை உடன் நடித்த அனுபவம் இருக்கிறதே உங்களுக்கு... ஒவ்வொருவரின் ப்ளஸ் பாயின்ட் சொல்லுங்களேன்? 


டிஸ்கி - 1
- சந்தானம் பேட்டி பாகம் 1 படிக்க  http://www.adrasaka.com/2012/05/blog-post_2192.html

 சந்தானம் பேட்டி பாகம் 2 படிக்க http://www.adrasaka.com/2012/05/blog-post_4450.html





மத்திய அரசின் மடத்தனமான பெட்ரோல் விலை உயர்வு

ந்த பெட்ரோல் விலை உயர்வு வரலாறு காணாதது என்கிறார்கள். ஆமாம். 7.98 விலை உயர்வு வரலாறு காணாததுதான். பதவியேற்ற மூன்று ஆண்டுகளில் ஐக்கிய முன்னணி அரசு 18 முறை பெட்ரோல் விலையை ஏற்றி இருப்பது இதுவரை வரலாறு காணாதது. 




ஒரு பிரதமராக மன்மோகன் சிங்கின் எட்டு ஆண்டு ஆட்சிக் காலகட்டத்துக்குள் பெட்ரோலின் விலை 90 சதவிகிதம்  உயர்ந்து இருப்பது தனி வரலாறு. ஆனால், மக்கள் நொந்து வெந்து மாற்று வழியோ, மாற்றுத் தேர்வோ இல்லாமல் வதைபடுவது மட்டும் வரலாறு மீண்டும் மீண்டும் பார்ப்பது. இது இந்தியர்களுக்கான சாபக்கேடு!


பொருளாதார வளர்ச்சி கண்ட நாடுகள், ஏழை நாடுகள் என எந்தக் கணக்கில் பார்த்தாலும் பெட்ரோலை அதிக விலைக்கு விற்பதில் இந்தியாதான் முன்னணியில் இருக்கிறது. இந்தியாவில் மட்டும் ஏன் இந்த நிலை?
மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் ஜெயபால் ரெட்டி, ''ரூபாய் மதிப்பின் வீழ்ச்சி மற்றும் சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை உயர்வால் நமது எண்ணெய் நிறுவனங்கள் கடுமையான நஷ்டத்தைச் சந்தித்துவருகின்றன. கச்சா எண்ணெய் விலை உயர்வு என்பது சர்வதேசரீதியிலானது. நமது அதிகாரத்துக்கு அப்பாற்பட்டது'' என்கிறார்.


ஆனால், எண்ணெய் நிறுவனங்கள் நஷ்டத்தில் இயங்குவதாகச் சொல்லப்படுவது எவ்வளவு பெரிய நாடகம் என்பதை அம்பலப்படுத்துகிறார் பங்குச் சந்தை நிபுணரான நாகப்பன்.


''இந்திய எண்ணெய் நிறுவனங்கள் நஷ்டத்தில் இயங்குகின்றன என யார் சொன்னது? நஷ்டத்தில் இயங்கும் எந்த நிறுவனமாவது பங்குகளை வாங்கியவர்களுக்கு 140 சதவிகிதம் பங்குத் தொகையைக் கொடுக்க முடியுமா? ஆனால், அதுதான் நடக்கிறது. 2011-ல் 'இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன்’ ஒரு பங்குக்கு வழங்கிய பங்குத் தொகை 9. பாரத் பெட்ரோலியம் வழங்கிய தொகை 14. ஹிந்துஸ் தான் பெட்ரோலிய நிறுவனம் வழங்கிய தொகை 15. இந்த நிறுவனங்கள் லாபத்தில்தான் இயங்குகின்றன என்பதற்கு இதற்கு மேல் சாட்சி வேண்டுமா?'' என்கிறார் நாகப்பன்.



உண்மை என்னவென்றால், அரசு இந்த பெட்ரோல் விலை உயர்வை அறிவித்த காலகட்டத்தில் சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் ஒரு பீப்பா யின் விலை 92 டாலர்கள்தான். அதாவது, நம்முடைய அரசு அபாய விலைக் குறியீடாக நிர்ணயித்து இருக்கும் 115 டாலர்களைவிட இது குறைவு.



உள்ளபடி அரசுக்கு இதில் மூன்று பிரச்னைகள்.



முதலாவது, பெட்ரோலியப் பொருட்கள் மீது விதிக்கப்படும் அதீதமான வரி. பெட்ரோல் விலையில் 39 சதவிகிதமும் டீசல் விலையில் 18 சதவிகிதமும் வரியாக அரசின் கஜானாவுக்குப் போகிறது.


பெட்ரோலியப் பொருட்களுக்கு மாநில அரசுகளும் வரி விதிக்கின்றன. மாநிலத்துக்கு மாநிலம் இது வேறுபடுகிறது. தமிழ்நாட்டில் மட்டும் மண்ணெண்ணெய்க்கும் கேஸ் சிலிண்டருக்கும் மட்டும் இடத்துக்குத் தகுந்த மாதிரி 8 வகை வரிவிதிப்புகள் இருக்கின்றன. ஆக, மாநில அரசு நினைத்தாலும், இந்த வரிகளைக் குறைத்து மக்களை ஓரளவு காப்பாற்றலாம்.



இரண்டாவது, டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து வீழ்ந்துகொண்டே இருப்பது. கடந்த ஒன்பது மாதங்களில் மட்டும் 20 சதவிகிதம் ரூபாயின் மதிப்பு குறைந்து இருக்கிறது. இதற்குக் காரணம், அரசின் தவறான செயல்பாடுகள்.




மூன்றாவது, மானியங்களைக் குறைக்க அரசு திட்டமிட்டு இருப்பது. அரசின் மானியங்களில் ஏறத்தாழ 40 சதவிகிதம் 83 ஆயிரம் கோடி பெட்ரோலியப் பொருட்களுக்காக வழங்கப்படுகிறது. இதைக் குறைக்கும் திட்டத்திலேயே பெட்ரோலியப் பொருட்களின் விலையைத் தொடர்ந்து உயர்த்திவருகிறது அரசு. பெட்ரோலியப் பொருட்களுக்கான மானியத்தைக் குறைப்பதுபற்றி யோசிப்பது நல்லதுதான். ஆனால், அத்தியாவசிய பஸ், லாரிகளுக்கும் ஆடம்பர எஸ்யூவி கார்களுக்கும் ஒரே விலையில் டீசல் வழங்குவது தேவையா என்று அரசு யோசித்தால், அது ஆரோக்கியப் பாதை. பொத்தாம்பொதுவாக விலையை உயர்த்தி னால் என்னவாகும்?



''பெட்ரோல் டீசல் விலை ஏறும்போது அதோட விலை மட்டுமா ஏறுகிறது? போக்குவரத்துச் செலவுகள் கூடுவதைக் காரணம் காட்டி... அரிசி, பால், பருப்பு, காய்கறி என அனைத்தும் விலை ஏறும். என்ன பண்ணப்போறோம்னே தெரியலை. பைத்தியக்காரங்க மாதிரி ஆயிடுச்சு நிலைமை'' என்கிறார் நாகப்பட்டினத்தைச் சேர்ந்த தொழிலாளி குப்புசாமி.



கோவை விவசாயியான வழுப்பாறை பாலு, ''ரசாயனப் பூச்சிக்கொல்லி வாங்குவதில் ஆரம்பிச்சு பலவித வேலைகளுக்காக டவுனுக்கு வந்தே ஆகோணுமுங்க. அதுவும் பொசுக்குனு போய் வர்றதுக்கு பஸ்ஸை நம்பாம மொபெட்டதான் எடுத்துட்டுத் திரியுறோமுங்க. விளைஞ்ச பொருளைச் சந்தைப்படுத்துறதுக்கு பெட்ரோலுக்கு மட்டும் நூத்துக்கணக்குல செலவு பண்ணி டவுனுக்கு வர்றோம். ஆனா, லாபத்தைப் பார்த் தீங்கன்னா, அடுத்த கொள்முதலுக்குக்கூட இழு பறியாதான் இருக்குது'' என்கிறார்.


''மத்தவங்க மாதிரி இல்லை. இது எங்களுக்கு உசுருப் பிரச்னை. ஏற்கெனவே, நாங்க அதிக வாடகை வாங்குறோம், அது இதுனு சொல்லி சவாரி குறைஞ்சுகிடக்கு. இனிமே என்ன நடக்கும்னு தெரியலை. இந்தப் பொழைப்புக்குப் பேசாம மாடு மாதிரி வண்டி இழுக்கலாம்'' என்கிறார் மதுரையைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநரான ஷாகுல் ஹமீது.


''காலையில பத்தரை மணிக்கு வந்தேன். மூணு மணி நேரம் நின்னு பெட்ரோல் வாங்கி இருக்கேன். ஒரு ஆளுக்கு நூறு ரூபாய்க்கு மேல குடுக்க மாட்டேங்குறாங்க. இதாச்சும் கெடச்சுதேனு வாங்கிக்கிட்டேன். பெட்ரோல் விலை ஏறிடுச்சுனு திட்டுறோம்ல. பெட்ரோல் கிடைச்சாதானே திட்டுவீங்கனு எல்லா பங்க்கையும் மூடிட்டாங்க. இப்போ என்ன விலைன்னாலும் வாங்கித்தானே ஆகணும்? ஓட்டு போட்டதுக்கு இதுவும் வேணும்... இன்னமும் வேணும்'' என்கிறார் சென்னையைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் மூர்த்தி.


''பெட்ரோல் விலையை நிர்ணயிக் கிற உரிமையை எண்ணெய்நிறுவனங் களுக்குக் கொடுத்ததே தப்பு. தில்லு இருந்தா, விளைபொருட்களுக்கான விலையை விவசாயிகளே நிர்ணயிச் சிக்கிடலாம்னு சொல்லச் சொல்லுங்க பார்ப்போம். முதலாளிகள் கொடுக்கிற நன்கொடைக்காக நாக்கைத் தொங் கப்போட்டுக்கிட்டுத் திரியுறவங்க, எப்படி மக்களுக்கு விசுவாசமா ஆட்சி நடத்துவாய்ங்க?'' என்று ஆவேசப்படுகிறார் மதுரையைச் சேர்ந்த முத்துகுமார்.



மக்கள் எதிர்ப்பும் போராட்டங்களும் அரசைச் சூழ்கின்றன. ஆனால், அரசு அலட்டிக்கொள்ளவில்லை. தேர்தலுக்கு இன்னும் இரண்டு ஆண்டுகள் இருக்கின்றன; மக்கள் அதற்குள் எல்லாவற்றையும் மறந்துபோவார்கள் என்ற மமதையில் இருக்கலாம். ஆனால், மக்களின் நினைவாற்றல் குறித்து அவர்கள் வியக்கும் காலம் வரும்!

 நன்றி - விகடன்

சென்சார் கோட்பாடு?-யாம் பெற்ற இன்பம் பெறக்கூடாது இவ்வையகம்



Our official soft launch of the short film "WhITe Collars" was done by Ulaganayagan Padmashri Dr.Kamal hassan. Thanks to Era Murugan sir. What a golden moment for us to have the blessings of Ulaganayagan for the release of this short film...The Wait is over, Watch out for the official movie release date shortly.
1. இந்தியில் கூடுதல் கிளாமருக்கும் ரெடி- சமந்தா. # பாலிவுட்டுக்கு கவர்ச்சி காட்டும் நீங்க கோலிவுட்டுக்கு மட்டும் ஓரவஞ்சனை காட்டறீங்க ஏன்?



-----------------------------------------


2. மயங்கினேன் தயங்கினேன் படத்திற்கு 100 கட் கொடுத்த சென்சார் அதிகாரிகள் # இவங்க மட்டும் ரசிச்சுக்குவாங்களே!யாம் பெற்ற இன்பம் பெறக்கூடாது இவ்வையகம் பாலிசி?


----------------------------------------


3.மதுரை ஆதீன மடத்தில் பெண்கள் தொடர்பான நோய்களுக்கான சிகிச்சை முகாம்!# வரும் முன் காப்போம் திட்டம்?


----------------------------------


4. படித்த, புத்திசாலியான கணவர் வேண்டும் -அசின் # டபுள் எம் ஏ ( M.A , M.A )படிச்ச மிக்சர் ஃபேக்டரி ஓனர் இருக்காரு, ஓக்கேவா மேடம்?


------------------------------------

5. மிஸ்டு கால் வந்து அதை மதிக்காம இருந்தா அவ பெண்,, மிஸஸ் கால் வந்து அதை மதிக்காம இருந்தா அவன் மேரேஜ் ஆன ஆண்


-------------------------------





6. அழகு இருக்கற இடம் ஆபத்துள்ள இடம் என்று முன்னோர்கள் சொன்னதால தான் நான் அழகா இல்லை ஹி ஹி


-------------------------------

7. டியர் ஃபிகர், ஐ ஆம் அனபிள் டூ ஃபாலோ யூ, ஏன்னா நீ கார்ல போறே, நான் சைக்கிள்ல வர்றேன், சோ ப்ளீஸ் அக்சப்ட் மை லீவிங்க் லெட்டர், ஹி ஹி


-------------------------------


8. பெண்கள் நாட்டின் கண்கள் என்றால் ஆண்கள் அந்த பெண்ணையே காக்கும் இமைகள் # கொளுத்திப்போடேய்



---------------------------


9. ரஜினி மாதிரி ஒரு சினிமா ”மேதை”யுடன் நடிக்க ஆசை - லட்சுமிராய் # குழப்பாம சொல்லுங்க, ரஜினியா? ராமராஜனா?


---------------------------------


10. .பாஸ்போர்ட் சைஸ் ஃபோட்டோ எடுக்கனும், தலைல இருந்து செருப்பு வரை தெரியனும்,..


 அப்போ செருப்பை தலையில் வெச்சுக்கிட்டு உக்காரு #  SMS


-----------------------





11 கோபத்தில் அவசரமாக வார்த்தைகளை நாம் விட்டாலும், அது தவறு என பின் உணரும் சந்தர்ப்பங்களில் மன்னிப்பு கேட்க மனம் ரொம்பவே யோசிக்கிறது



-------------------------------------

12. தேடல் காதலின் கிரியா ஊக்கி, ஊடல் காதலின் ஈர்ப்புவிசை கொக்கி



------------------------------


13 மத்திய அரசை ஏன் கண்டிக்கக்கூடாது- கருணாநிதி கேள்வி # ஜால்ரா போடும் அதிகாரம் மட்டுமே உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது - சோனியா



---------------------------------

14.  டியர், நான் சேலைல அழகா இருக்கேனா? சுடிதார்ல அழகா இருக்கேனா?


  ஹி ஹி , உண்மையை சொன்னா உதைக்க வருவே!


---------------------------

15 அண்ணா.... என் ட்வீட்டை RT பண்ண மாட்டேங்கறீங்களே , ஏன்?  


மிஸ். உங்க கேள்விலயே பதிலும் இருக்கு ஹி ஹி


--------------------------




16 மழை வந்தால் நீ துள்ளிக்குதிப்பாய்!மழைத்துளிகளை நீயும், உன் துள்ளல்களை நானும் ரசித்துக்கொண்டிருப்போம்



-------------------------

17. ஜூன் மாதம் இனி கலைஞர் மாதம் என்று அழைக்கப்படும்: திமுக மாணவரணி தீர்மானம்?: # அப்போ செப்டம்பர் மாசம் கலைக்கற மாசமா?


----------------------

18. உன் பார்வை பரிமாறல்கள் என் விழிகளால் உட்கொள்ளப்படாமல் சிதறினால் நான் கவுரம் பார்க்காமல் பொறுக்கி எடுப்பேன் # சிறுக்கி நீ, பொறுக்கி நான்


--------------------

19. நான் இல்லாத தனிமையில் நீ வாடுவாய்! எல்லோரும் என்னுடன் இருக்கும்போதும் நான் உன்னையே நாடுவேன்


--------------------------------

20.  ரகசியக்காமிராவே தேவைப்படுவதில்லை, உன் ஒவ்வொரு அசைவுகளையும்  பதிவு செய்ய ! என் கண்கள் இருக்கக்கவலை எதற்கு?


--------------------------




--

Wednesday, May 30, 2012

உருமி - சினிமா விமர்சனம்

http://kakakiki.aneeska.com/wp-content/uploads/2011/04/urumi_malayalam_movie_1.jpgஇந்தியாவை கண்டுபிடிச்சது வாஸ்கோடகாமான்னு ஏழாம் கிளாஸ்ல படிச்சது நினைவு இருக்கு. 15ஆம் நூற்றாண்டுல நடந்த சரித்திர உண்மைக்கதையை சுவராஸ்யமா சொல்ல முயற்சி பண்ணி இருக்காங்க..

மிளகு இங்கே அதிகம் விளையறதை பார்த்த அண்ணன் வாஸ்கோடகாமா நம்மாளுங்க எப்படி மணல் கொள்ளை அடிச்சாங்களோ அந்த மாதிரி மிளகு டூ பிரிட்டிஷ் உலகு கடத்தறாரு.. பார்த்தாரு.. ஒரு பய கண்டுக்கலை, எதிர்க்கலை/.இந்தியாவில் இயற்கை வளங்கள் பிரமாதமா இருப்பதை பார்த்து ஒட்டு மொத்தமா இந்தியாவை ஆட்டையைப்போட்டுடலாம்னு பிளான் பண்றாரு.


சேரநாட்டில் அதாவது கேரளாவில் சிறைக்கல் அப்டினு ஒரு ஊரு, அங்கே வர்றாரு.. அங்கே இருக்கும் மன்னர் ஆங்கிலேயரை கேப்டன் ஜெவை எதிர்க்கற மாதிரி ஆவேசமா பல்லை, நாக்கை கடிச்சு எதிர்க்கறார்.. தமிழன் எங்கே போனாலும் ஒரு துரோகியும் அவன் பின்னாலயே வந்து அவன் கூடவே இருந்து குழி பறிக்க காத்திருப்பான். இது அவன் தலை விதி.. அமைச்சர் ஓ பி எஸ் மாதிரி ஆங்கிலேயர் கால்ல விழுந்து  மன்னருக்கு எதிரா சதி பண்றார்..


அப்போதான் 2 பேர் அதாங்க ஹீரோஸ்  பிருத்வி ராஜும் ,பிரபு தேவாவும் வர்றாங்க.. அவங்களோட வீர தீரத்தை பார்த்து மன்னர் அவங்களை  தளபதி ஆக்கிறார்.. கூடப்பிறந்த தம்பியை  சி எம் ஆக்க அப்பா ட்ரை பண்ணாலே அண்ணனுக்கு பொறுக்காத உலகம் இது. அமைச்சர் விடுவாரா? சதி பண்ணி மன்னரை போட்டுத்தள்ளிடறாரு..


இதுதான் சாக்குன்னு ஆங்கிலேயர்  படை எடுத்து வர்றாங்க.. வாஸ்கோடகாமாவின் சோப்ளாங்கி மகன் ஒருத்தன் மைதா மாவு அப்பாஸ் மாதிரி அவனை ஹீரோஸ் 2 பேரும் சிறைப்படுத்தறாங்க.. இப்போ போர் நடக்குது.. என்ன நடக்குது? அவங்க வாரிசுகள் என்ன ஆகறாங்க? இதுதான் கதை.. 

 அங்கங்கே மானே தேனே பொன் மானே போட்டுக்குங்க மாதிரி ஒவ்வொரு ஹீரோவுக்கும் ஒரு ஹீரோயின் ஜோடி ..


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg7rO06qnshKIgMygrp4jPo2kOvhWbqSJslTuxT6f0hrWfIXsPIVv-aDtDizq4giG14krmEMVoAKAcjSmDwTgBxkIIC5D1W9P-_Uq0brBaLgsGyqNnycN1LAbd4MGpu4AF3Sl3Re9m975Y/s1600/urumi_malayalam_movie_stills_pics_03.jpg


படத்துல  முதல் பாராட்டு அமைச்சரா வர்ற அந்த மலையாள நடிகருக்குத்தான். இப்படிக்கு ரோஸ் மாதிரி திருநங்கை போல் அவரது நளினம், வில்லத்தனம், பார்வை எல்லாமே அபாரம்.. ( jஜெகதி ஸ்ரீகுமார்)

 ஹீரோவாக வரும் பிருத்விராஜ் அமர்த்தலான நடிப்பு.. பொதுவா நம்மாளுங்க வீரம்னாலே முறுக்கு மீசை தான் அப்டினு ஒரு எழுதப்படாத நியதி வெச்சிருப்பாங்க. அதை எல்லாம் பொடியாக்கி அவரது உடல் மொழி, கம்பீரம், குரல் ஆவேசம் எல்லாம் கன கச்சிதம்.. தளபதி படத்தில் ரஜினி எப்படி படம் பூரா ஒரு இறுக்கமான முகத்தோட வந்து கலக்குனாரோ அந்த மாதிரி பின்னிப்பெடல் எடுக்கும் நடிப்பு 


ஜெனீலியாவின் பாத்திரபடைப்பு, அவரது உடல் மொழி, ஆக்ரோஷ கண்கள் எல்லாம் அட்டகாசம்.. சந்தோஷ் சுப்ரமணீயம், பாய்ஸ் படத்தில் கிட்டத்தட்ட ஜாலி லூஸ் கேர்ள் போல் வரும் இவர் இந்தப்பத்தில் விஜயசாந்திக்கே சவால் விட்டிருக்கிறார்.. இவரது ஆடை வடிவமைப்பு செம கிளுகிளுப்பு ஹி ஹி 


அடுத்து அண்ணன் பிரபு தேவா.. படத்துல வர்ற எல்லா ஆண் கேரக்டர்களும் அவனவனுக்கு யார் ஜோடியோ அந்த ஃபிகரை மட்டும் பார்க்கறாங்க, பேசறாங்க.. நம்ம அண்ணன் மட்டும் படத்துல கூட பொம்பளைன்னு வந்துட்டா போதும் வாயை ஆ-ன்னு பார்க்கறாரு. யோவ் யோவ்!அண்ணன் வர்ற சீன்ல எல்லாம் ஃபிகர் போற இடம் எல்லாம்  அவர் கண் போகுது.. சூரிய காந்திப்பூ சூரியன் போற திசையை நோக்கி திரும்பிக்கற மாதிரி.. அவர் சில சீன்ல காமெடிங்கற பேர்ல சில லூஸ்தனம் பண்றாரு.. திடீர்னு அழகிரி மாதிரி ஆவேசம் ஆகி சண்டை போடறாரு. ஹூம்.. 

கேரளத்துக்கன்னியாக  ( ஒரு உத்தேசமா சொல்றதுதான்) நித்யா மேனன்..  காதல் காட்சிகளில் நல்ல நெருக்கம்.. நமக்கு அதானே வேணும்? அப்புறம் தொட்டுக்க ஊறுகாய் மாதிரி வித்யா பாலன் .. நமக்கில்லை டைரக்டருக்கு


http://www.bollyketchup.com/wp-content/uploads/2011/03/Urumi-Malayalam-Movie.jpg


இயக்குநர் பாராட்டுப்பெறும் இடங்கள்


1. ஆர்ட் டைரக்‌ஷன் தான் இந்த மாதிரி பீரியட் ஃபிலிம்க்கு ரொம்ப முக்க்கியம்.. பிரமாதமா பண்ணி இருக்காங்க.. ஒளிப்பதிவும் செம அழகு.. அருவி , காடு , கடல் என காமிரா கலக்கல்.. சந்தோஷ் சிவன் அடிப்படையில் ஒரு ஒளிப்பதிவாளர் என்றாலும் இயக்குநரே ஆளுமைப்படுத்துகிறார்


2. வாஸ்கோடகாமாவாக நடிப்பவர், அவரது மகனாக நடிப்பவர் இருவரும் மிக லாவகமாக, பக்குவமாக அண்டர் ப்ளே ஆக்ட் செய்து நடித்தது அழகு.. ஏன்னா நம்மாளுங்க வாஸ்கோடகாமா பற்றி அதிகம் தெரியாதவங்க.. அதனால வீரபாண்டியக்கட்டபொம்மன் ரேஞ்சுக்கு ரீல் எல்லாம் விடாம கரெக்டா வரலாற்றுக்குறிப்பில் இருப்பது போல் காட்சிப்படுத்தியது சபாஷ்


3. உருமி என்பது பொதுவா ஒரு இசைக்கருவியைத்தான் குறிக்குதுன்னு நினச்சோம்.. அது அந்தக்கால சுருள் வாள் மாதிரி ஒரு ஆயுதம். கிட்டத்தட்ட பட்டாக்கத்தி அல்லது சுருள் கத்தி .. அதை கனகச்சிதமா வடிவமைச்சு பயன்படுத்தி இருக்கும் விதம்..

 
 jagathi sreekumaar 
http://www.zonkerala.com/movies/gallery/urumi/jagathy-sreekumar-in-urumi.jpg


4.படத்தில் ஏகப்பட்ட கேரக்டர்கள், எல்லாருக்கும் அந்தக்கால உடைகள், நகைகள் எல்லாம் ஏற்பாடு பண்ணி சாப்பாடு எல்லாம் கொடுத்து படம் எடுக்கறது சாதாரண விஷயம் இல்லை.. வெல்டன் டைரக்டர்


5. சண்டைக்காட்சிகளை வடிவமைத்தவர்க்கு தனி பாராட்டு. பல காட்சிகள் பிரமாதப்படுத்துகின்றன. குறிப்பா ஜெனிலியா சுழன்று சுழன்று எகிறும் காட்சியில் டூப்பே போடாமல் கலக்கலான ஃபைட் சீன்ஸ்.. இசை அழகு. பின்னணி இசை  நேர்த்தி.


6.படத்துல ஆர்யாவுக்கு கெஸ்ட் ரோல்னாக்கூட அவர் தான் ஹீரோ என்பது போல் போஸ்டர்களில் விளம்பரங்களீல் காட்டிக்கொண்டது


http://im.rediff.com/movies/2011/mar/29sd3.jpg


இயக்குநரிடம் சில கேள்விகள்,லாஜிக் மிஸ்டேக்ஸ், திரைக்கதையில் சில ஆலோசனைகள்


1. இளவரசி ஜெனீலியா பயங்கரமான ஃபைட்டர்னு தெரிஞ்சும் அவரை சுத்தி நிக்கும் 17 அடி ஆட்களும் ஒன் பை ஒன்னா ஃபைட்டுக்கு போறாங்க.. ஏன்? குரூப் ஸ்டடி சார் குரூப் அடி அவங்களுக்கு முடியாதா?


2. பிருத்விராஜ் கதைப்படி சீரியஸ் கேரக்டர் என்பதால் பிரபுதேவா காமெடி கேரக்டர் ஆக்கி பேலன்ஸ் செஞ்சது ஓக்கே.. ஆனா அப்பப்ப அவர் பண்ற அலப்பரைகள் சகிக்கலை.. அடிப்படையில் பயந்த சுபாவம் உள்ளவரா காட்டப்படும் அவர் அப்பப்ப வீராவேசம் வந்தவர் போல் ஃபைட் போடறது சறுக்கல்

3. ஜெனிலியாவை வில்லன் கில்மாக்கு ரெடி பண்ண பெட்ரூம்ல  தள்ளி விடறாரு.. அப்போ நைட் மணி 8..  ஆனா அதை ஒளிஞ்சிருந்து பார்க்கறப்ப பிருத்விராஜ் முகத்துல ஜன்னல் பேக்டிராப்ல சூரிய வெளிச்சம் மஞ்சள் வண்ண மயம்.. மறுபடி ஹீரோயினைக்காட்டறப்ப இருட்டு, ஹீரோவைக்காட்டறப்ப பகல்..


4. ஜெனிலியா அதுக்குப்பிறகு பிரித்விராஜ்  கூட சரசம் பண்றப்ப என்னமோ ஓட்டுக்கேட்க வார்டு மெம்பர்ஸ் சுதந்திரமா வீட்டுக்குள்ளே வர்ற மாதிரி 27 பேர் வர்றாங்க? என்னய்யா அக்கிரம் இது? பெட்ரூமை தாழ் போடற பழக்கம் தமிழனுக்கு இல்லையா? அவன் ரொம்ப விபரமானவன் ஆச்சே?


5. ஒரு சீன்ல ஆங்கிலேயர் மேல இருக்கற எதிர்ப்பை காட்ட நடு வீதியில் இருக்கும் நட்ட வைத்த தூக்குமரத்தை 78 பேரு சேர்ந்து தம் கட்டி தள்ளறாங்க.. இதுல காமெடி என்னன்னா ஹீரோ தனி ஆளா முதல்ல அதை ட்ரை பண்றாரு
அவரால முடியாத போனதும் மத்தவங்க எல்லாம் வர்றாங்க.. 2 பேரு கடப்பாரை  எடுத்து தோண்டினா 1 அடி ஆழம் வந்ததும் ஈசியா அதை பேர்த்து எடுக்கலாம்..


6. தனது தந்தையை கொலை செய்ய ஒருத்தன் முடிவு பண்ணுனா அவர் தூங்கறப்போ தலையணையை  வெச்சு அமுக்கி அல்லது சாப்பாட்ல விஷம் வெச்சுதான் கொல்வான்.. அப்போதான் டவுட் வராது.. ஆனா ஒரு மன்னரா இருக்கற தன் தந்தையை சர்வ சாதாரணமா மக்கள் சந்தேகப்படும் அளவுக்கா படுகொலை செய்வாங்க?


7. இளவரசர் திருநங்கை போல கேரக்டர்.. ரொம்ப அப்பாவி, பயந்த சுபாவம் உள்ளவர். படம் பூரா இப்படி காட்டிட்டு திடீர்னு பி எஸ் வீரப்பா மாதிரி சிரிச்சுக்கிட்டே நூறாவது நாள் சத்யராஜ் ஆகி கொலை பண்றது ஓவர்..


8. படத்தோட முதல் பாதில எடிட்டிங்க்ல இயக்குநர் தலையீடு இருந்திருக்கு , ஏகப்பட்ட குழப்பங்கள்.. இடைவேளைக்குப்பிறகி எடிட்டிங்க் பக்கா.. இன்னும் தெளிவா  எடிட் பண்ணி இருக்கலாம் முதல் பாதில ..


9. வாஸ்கோடகாமாவின் மகன் ஆக்சுவலி  வில்லன்.. ஆனா அவர் மேல ஆடியன்ஸ்க்கு பரிதாபம் வர்ற மாதிரி எப்போ பாரு அவரை  அடிச்சு உதைச்சு ஒரு கைதி மாதிரி நடத்தறதை  அவ்ளவ் விலா வாரியாக்காட்ட வேண்டியதில்லை.. இதனால வில்லன் மேல நமக்கு அனுதாபம் தான் வருது.. பொதுவா இயக்குநர்கள் கத்துக்க வேண்டிய பாடம் வில்லன் மேல மக்கள்க்கு அதாவது ஆடிய்ன்ஸ்க்கு பரிதாபமோ, பச்சாதாபமோ வராம பார்த்துக்கறதுதான்.


10 . படத்துல வர்ற  பெண் கேரக்டர்கள் எல்லாம் ஆண்களையே பார்க்காதது மாதிரி எவன் கிடைச்சாலும் லவ்விடறாங்க.. கொஞ்சம் கேப் விட்டு லவ்வி இருக்கலாம்.. எட்டாக்கனிக்குத்தான் மதிப்பு அதிகம்


http://www.cinespot.net/gallery/d/429427-1/Urumi+Malayalam+movie+photos+_3_.jpg


மனதில் நின்ற வசனங்கள்


1, எந்த தருணத்திலும் பகைவன் முன் தலை குனிந்து விடாதே.. இதுதான் அரச தர்மம் ( பகைவன் டி பி கஜேந்திரன் மாதிரி இருந்தா?)


2. நஷ்டம் எப்பவும் நம்ம பக்கமே வரகூடாது. டீலிங்கை லாபத்துல முடி.


3. சந்தன மணம் வீசும் இந்தப்பெண்  பின் போனால் உன் சங்கை அறுத்து சங்கு ஊதி விடுவார்கள்


ஊதட்டும் ஊதட்டும், ஊதிக்கொண்டே இருக்கட்டும்..


4. அகம்பாவி மரியாதையை கேட்டுப்பெறுகிறான்


5. கண்ணில் கள்ளமும், கையில் கத்தியும் வைத்திருப்பவனே என் விரோதி


6. என்னை யாரும் விலைக்கு வாங்க முடியாது.. எனக்காகத்தோன்றினால் அதை நான் செய்வேன்


7. பூட்டி வைத்திருக்கும் மலர்களில் பொத்தி வைத்த மல்லிகை நீ பெண்ணே! ( இதை எங்க பாரதிராஜா, வைர முத்து எல்லாம் அப்பவே “ பொத்தி வெச்ச மல்லிகை மொட்டு பூத்திருக்கு வெட்கத்தை விட்டு அப்டி பாடியாச்சுங்க்ணா.. )


8. ஆராதிப்பதற்கு ஆயுதம் எதற்கு? நான் ஆரியன்..


9. இந்த சபித்த நாட்கள் இனி ஒரு போதும்  திரும்பி வராது


10. அடுத்த பிறந்த நாளை நான் காணக்கூடாது, அதுதானே உன் நோக்கம்?

11. இனி நாம் போகவேண்டிய வழி போர்த்துக்கீசியர்கள் வழி..


12.  படுக்கையிலாவது நீ தலைவன் ஆக முயற்சி செய் பேடியே!


http://img.stillgalaxy.com/public/04-29-2011/vidya%20balan/vidya-balan-hot-stills-in-urumi-movie-0.jpg



ஆனந்த விகடன் எதிர்பார்ப்பு மார்க் - 44 ( இது டப்பிங்க் ப்டம் என்பதால் விகடன் விமர்சனம் வராது)


 குமுதம் எதிர்பார்ப்பு ரேங்க் - நன்று


 சி.பி கமெண்ட் - பீரியட் ஃபிலிம் பார்ப்பவர்கள், சரித்திரப்படங்களில் ஆர்வம் உள்ளோர், ஒளிப்பதிவு ரசிப்பவர்கள், வித்யாபாலன்,ஜெனீலியா,நித்யா மேனன் என 3 ஃபிகர்ஸ் இருக்கு, இது போதாதா? என நினைக்கும் யூத் உள்ளங்கள்  பார்க்கலாம்..

 ஈரோடு ஸ்ரீசண்டிகா, ஸ்ரீகிருஷ்ணாவில் படம் ஓடுது. நான் சண்டிகாவில் பார்த்தேன்


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg8SM86RhdUJDjdcqGuYl9Z40S2qp3DbZ5vYC7BMH_sQWEo5g4IUUh8UmgY6NZOV1KGmV__Z_tklj_yBUrzckEHwTA7HmFrZ5GlpndaVrBMX5-FjriD59QbJUMBwFPZoO260nMgzN0Nyb0/s1600/Urumi+On+Location7.jpg

ஐ பி எல் மேட்ச் - ட்விட்டரில் நடந்த வெட்டி பெட்டிங்க்-ஒரு அலசல்



 எனக்கு கிரிக்கெட்ல அவ்வளவா நாலெட்ஜ் கிடையாது , (மத்ததுல மட்டும் என்ன வாழுது?)நானும் ஒரு காலத்துல கிரிக்கெட் மேட்சை டி வி ல வெறியோட உக்காந்து பார்த்தவன் தான் , ஆனா மேட்ச் ஃபிக்சிங்க் வந்த பிறகு எல்லாமே பணம் தான் தீர்மானிக்குதுன்னு தெரிஞ்ச பிறகு ஒரு விரக்தி வந்துடுச்சு.. 


யாரோ பணம் சம்பாதிக்க யார் கிட்டேயோ  காசை வாங்கி வெற்றி தோல்வியை தீர்மானிக்கறாங்க.. அதை நாம ஏன் நேரம்,காலம் எல்லாம் வேஸ்ட் பண்ணி பார்த்து பி பியை ஏத்திக்கனும் என்பதே என் நினைப்பு.. 

ஐ பி எல் மேட்ச் நடக்கறப்ப ட்விட்டர்ல நம்மாளுங்க பெட்டிங்க் வெச்சு விளையாடுனாங்க..அது பற்றி இப்போ நான் கருத்து சொன்னா நல்லா இருக்காது. அதனால நண்பர் கட்டதுரையின் நட்புக்காக அவர் அனுப்பிய மெயிலை அவருக்காக போடறேன்.. 

பெட்டிங்க்ல ஜெயிச்சவங்களூக்கு வாழ்த்துகள்












ரெண்டு மாசமா ஐபிஎல் அலப்பறையோட..இந்த வெட்டி பெட்டிங் இம்சை தாங்க முடியாம தலையில அடிச்சுகிட்ட சந்துவாழ் பெருமக்களுக்கு முதல் வணக்கம். ஏதோ ஒரு வகையில உங்க சகிப்பு தன்மைய வளர்த்ததுக்கு நீங்க தான் நியாயமா எங்களுக்கு நன்றி சொல்லனும். J)

ஏதோ நாலு, அஞ்சு பேருக்கு விளையாட்டா ஆரம்பிச்ச வெட்டி பெட்டிங்..50 பேருக்கும் மேல சேந்து..டைம் லைன அதகளம் பண்ணீயதும் நடந்துச்சு.  ஒரு லிமிட்ல சாட்டிங் பன்றோன்னும் கல்லெறிய ஆரம்பிச்சு..ஜிமெயில்ல ஒண்ணு கூடி சலம்புனோம். @VaiRajaVai னு ஒரு ட்விட்டர் ஐடி கூட போட்டு கதைச்சோம். எவ்ளோ கதைச்சாலும் தீரலை. இது மாதிரி ஒரு பரிசாட்தர்த்தமான ஆன்லைன் பெட்டிங்..சக்ஸஸ்புல் ஆக்கின எல்லோருக்கும் நன்றி.

ஒவ்வொரு நாள் டீலும் ஓவ்வொரு மாதிரி..டாஸ் போடுறதுலெருந்து..முதல் பால் டாட் பாலாகுமா பாக்குறதுலெருந்து, ரன் அவுட் ஆகும் போது கீழ வுழுந்து வாறுவாங்களான்ற வரைக்கும். புனே, டெக்கான்னு விளையாடுற சொத்தை மேட்ச்லாம் கூட டாபிக்கா இருந்துச்சு..இன்னிக்கு யார் வாய்ல மண்ணுவிழுந்துச்சுன்னு பாக்க அவ்ளோ ஆர்வம். அந்த வகையில இந்த ஐபிஎல்-5 பாக்க உந்துதலா எங்க வெட்டி பெட்டிங் எங்களுக்கு அமைஞ்சதுன்னுதான் சொல்லனும்.
கங்குலி..இன்னிக்கு கண் அடிப்பாரா இல்லியான்னு சில பேரு போட்ட டீல பாத்து,சந்தே காறிதுப்பினிச்சுன்ன்னா பாருங்களேன்.

இப்ப வெட்டி பெட்டிங்ல வெற்றி பெற்ற, கீழ வுழுந்து வாறின..பயமக்களை வரிசையா பாக்கலாம்.!

@kattathora – ஆரம்பிச்சு வச்சது இவருதான். ஒரு நாள் மாலை நேரம் மல்லாக்க படுத்துகிட்டு யோசிக்கும் போது கிடைச்ச ஐடியா இது. இவரு மத்தவங்கள சிரிக்க வைக்க ட்விட்டருக்கு வந்து..சிரிப்பா சிரிச்சத, தலைவர் சிபி..தனி பதிவா போடுவாரு (அப்பாடா..ஒரு இண்டர்வியுக்க்கு அடி போட்டாச்சு.!). பாய்ண்ட்ம் சொரனையும் ஒரே நேரத்துல மைனஸ்ல போனாலும், முதல் பத்து இட்த்துக்கு ரூல்ஸ் எல்லாரும் சேட்டிஸ்ஃபை பண்ணாத்தால..போனா போவுதுன்னு இவருக்கு 100ரூ புக் பரிசா கொடுத்தாங்க # (மாலைமதி குடுத்து கவுத்துபுடாதீங்க மக்கா.!)

@thoatta இவரு..ஸ்ட்ராஜிட்டியே தனிதான். சனி பொணம் தனியா போவாதுன்ற மாதிரி..இவரு தோத்தா..ஒரு கும்பலே இவரு சொல்றத கேட்டுட்டு..வேட்டிய இழந்து நிப்பாங்க. பாய்ண்ட் டேபிள..டாப்பர் லிஸ்ட்ல பாதி கேம்க்கு மேலா..டாமினெட் பன்னாரு. ரொம்ப எதிர் பாக்க பட்டு கடைசியா முதலிடத்துக்கு வந்துட்டாரு (அதாவது கீழெருந்து!) 0. பாய்ண்ட். 100ரூ புக்கு பரிசா வாங்கிட்டாரு.

@திரு – ரூல்ஸ் கிங்கு..இவரு..வெட்டி பெட்டிங்கல இருக்குற சந்து பொந்த எல்லாம் அடைச்சு..ரூல்ஸ் போட்டு..கிடுக்கு பிடியா பெட்டிங்க கொண்டு போனாரு. என்ன கொடுமைன்னா..அவரு மத்தவங்களுக்கு வச்ச ஆப்புல தெரியாம அவரே உட்காந்து..பரிசு வாங்க முடியாம போய்ட்டாரு.

@விஜய் ராப்பகலா..கண்ணுமுழிச்சு பாய்ண்ட் அப்டேட் பண்ணி ஒரு சோப்புடப்பா கூட பரிசு வாங்காத விஜய். கூகிள் டாக்ஸ் வேலை செய்யாத சைனாவுக்கு எல்லாம் போய் கஷ்டபட்டு..பாய்ண்ட் அப்டேட் பண்ணாரு.

@ராஜன் இன்ஸ்டண்ட் பெட்டிங் இல்லைன்னு சொன்னதால நான் வரலை போங்கய்யான்னு கோச்சுகிட்டு துண்ட உதறி தோள்ல போனவரு இவரு.

@ஜானி வெட்டி பெட்டிங்ல ஆரம்ப நாள்ளெருந்து இருக்குற ஜீவன் இவரு..எனக்கு தெரிஞ்சு 2 முறை கடன் வாங்கி..திவால் ஆகி. ஒரு பத்துநாள் தலைமறைவா இருந்தாரு. விளையாடதவங்க பாய்ண்ட்ட பிரிச்சு கொடுக்கும் போதும் , எங்கிருந்தோ வந்து குதிச்சு..மானியமா கிடைச்ச பாய்ண்ட வச்சி..மானவாரியா ஜெயிச்சு..மூன்றாம் பரிசா 16ஜிபி பென் ட்ரைவும், 500ரூ புக்கும் பரிசா ஜெயிச்சாரு இவரு.

@குஞ்சு – இலங்கைக்கு எப்டி பரிசு அனுப்பீவீங்க..கொரியர் செலவு யாருதுன்னு ஒவர் கான்ஃபிடண்ட்ல பேசி பல்பு வாங்கினவரு இவரு. வெட்டி பெட்டிங்கல இவரு கைபக்குவம் அதிகம்

@அதிஷா – இவரு ஸ்டார்டிஜிய மட்டும் யாரும் புரிஞ்சுக்கவே முடியலை. எல்லாரும் ஜெயிக்கும்னா , இவரு மட்டும் தோக்கும்னு டீல் போடுவாரு. சென்னை ஜெயிக்காதுன்னு ஒரு மெகா டீல் போட்டு தோட்டா வேட்டிய உருவி அதை அவரே பரிவட்டமா கட்டிகிட்டாரு. முதல் பரிசா 64ஜிபி பெண்ட்ரைவ் , 500ரூ புத்தகம் பரிசு

@ஜென்னு – வெட்டி பெட்டிங்கல இருந்த ஒரே பொண்ணு இதுதான். தொடந்து 3 பெட் தோத்து தலைமறைவா இருந்துச்சு. சென்னை தோக்கனும்னு முண்டகண்ணியம்மன் கோவில் போய் அங்க பிரதட்சனம் பன்ற அளவுக்கு தமிழ் பற்று உண்டு அம்மனிக்கு.!

@திருட்டு குமரன் – பாதி பெட்டிங்ல மாட்டு லோன் மான்யம் வாங்கி சட சடன்னு எல்லாரையும் லைட்டா திரும்பி பாக்கவைச்சவரு. இவரு ஒமன் உளவாளியாயும் அறிய படுறாரு. நல்லா விளையாண்டு..கடைசியில இண்டென்சிவா ஆடாத்தால 100ரூ புக்கோட திருப்தி பட்டுகிட்டாரு! # அந்த புக்க கில்மா புக்கா கேளுன்னு, இவரு நண்பன் குள்ளபுஜ்ஜி படுத்தி எடுக்குறான்னு ஒரு தகவல்.!

@PSkumar கதிர்ன்னு பாதி டீல் போட்டு, பிஎஸ்குமார்னு பாதி டீல் போட்டு, கடைசியா..யாருய்யா இது..டீ கடையில புதுசா ஒரு ஆளுன்னு கேட்டுடாங்க. குய்யோ முறையோன்னு அழுது ப்ப்ல போய் 6 பீர் குடிச்சுட்டாரு. (பயபுள்ளை ..அப்பவும் பாய்சன் குடிக்குதா..பாருங்க!) கடைசியா 100ரூ புக் ஜெயிச்சு..என்னவோ எல்லா கோப்பையும் நானே ஜெயிச்ச மாதிரி ஆர்டி பண்ணிகிட்டு அலைஞ்சாரு!

@கோளாறு – மாட்டு லோன் வாங்க கொஞ்சம் கூட வெட்க மானமே பாக்காத ஒரே டீலர் இவருதான். தோட்டா சொல்றத கேட்காத மாமுன்னு படிச்சு படிச்சு சொன்னாலும்,  தோட்டாவுக்கு முன் மண்டை பள பளன்னு இருக்கு..அதுனால கண்டிப்பா தோட்டா புத்திசாலியாதான் இருக்கனும்னு, நம்ம்ம்ம்ம்பி நாசமா போனவரு. ஷேர் ஆட்டோல்லாம் கட்த்திருக்கோம், பாத்து போட்டு குடுங்கன்னு, வாசல்ல் உட்காந்து அழுதே..100ரூ புக்க பரிசா வாங்கினவரு.!

@சேட்டை – இவர பாதி டீல்ல காணொம்னு பஸ்ஸ்டான் ஃபுல்லா போஸ்டர் ஒட்டினோம். ஃபோட்டோவ பாத்தவங்க எல்லாம், நார்த்லெருந்து வந்துருக்குற செயின் வழி பறி கும்பல தேடுறாங்கன்னு நினைச்சுட்டங்காளம். இவரு விட்டு போன வேட்டி இன்னும் எங்க கிட்ட தொவைக்காம தான் இருக்கு. அடையாளம் சொல்லி வாங்கிட்டு போகலாம்.!

@நீலு – புயல் மாதிரி டீல் போட்டு, புயல் மாதிரியே காணம போனவரு இவரு. பரிசு கிடையாது வெளிய போய்யானு திரு தொறத்தியும், இவ்ளோ கவுரமா விளையாடினே ..எனக்கு ஒரு பரிசு இல்லியான்னு, கவுரவம், சிவாஜி ரேஞ்சுக்கு கேட்ட்து, கட்ட்தொர நெஞ்ச சொறிஞ்சதால, கட்ட்தொர அவர் பரிச தொலையுதுன்னு அவருக்கு தர ஒத்துகிட்டாரு.!

@சனியன்சகடை – எல்லா டீலுக்கும்ம் முன்னாடி திராணி இருந்தா என் கூட மோதுங்கன்னு சவால் வுடுற கைப்புள்ளை இவரு. கடைசியில எதிர் பாத்த மாதிரியே ஒன்னும் கிடைக்கலை. ஒரு பால்பென் பென்னாவது குடுத்துருக்கலாம்னு, டீகடை பெஞ்சுல பேசிகிட்டாங்களாம்.!


இன்னும் நிறைய பேரு இருக்காஙக்..பின்னூட்டத்துல போடுவோம்!

வெட்டி பெட்டிங் சக்ஸஸ்ஃபுல்லா ஆக்கின எல்லோருக்கும் நன்றி.!
கட்டதொர


!







பெட்டிங்க்ல ஜெயிச்சவங்களோட விபரம் -https://docs.google.com/spreadsheet/ccc?key=0AqT8e-2UI68jdEJ6SG50UU5PU0pPWGVaSnBfRXBBMlE#gid=22


-தொடரும்

ஃபேஸ்புக் மூலம் ஏமாற்றப்பட்டு கற்பை இழந்த சேலம் பெண்கள்-ஜூ வி கட்டுரை


ட்பு வட்டங்களுக்குத் தளமாக இருக்கும் ஃபேஸ்புக், சில நேரங்களில் தப்பு வட்டங்களுக் கான களமாகி விடுகிறது. இதற்கு சமீபத்திய உதாரணம் சேலத்தைச் சேர்ந்த லலிதாவும் கன்னியாகுமரியை சேர்ந்த மேரியும் (பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன). பேஸ்புக் மூலமாக அறிமுகம் ஆன நண்பர்களிடம் தங்களையே இழந்து நிற்கிறார்கள் இருவரும்! 


கடந்த 24-ம் தேதி வேலூர் மாவட்ட எஸ்.பி. அலுவலகத்தில் வந்து புகார் கொடுத்தவர்கள் சார்பில் பேசினார் வழக்கறிஞர் மணிகண்டன். ''லலிதா, மேரி இருவரும் தோழிகள், சென்னையில் ஒரு நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்கள். இருவரும் ஃபேஸ்புக்கில் இருக்கின்றனர். ஃபேஸ்புக் மூலமாக லலிதாவுக்கு வேலூர் மாவட்டம் ராணிப்பேட்டையைச் சேர்ந்த சதீஷ் பழக்கமானார். சதீஷின் நண்பர் ஆனந்தபாபுவும் லலிதாவிடம் அறிமுகமாக, மேரியும் அவர்களின் நட்பு வட்டத்தில் சேர்ந்துள்ளார்.

 சிவப்புச்சட்டை போட்டு நான் டேஞ்சரான ஆள்னு சொல்லாம சொல்றாரு போல அண்ணன் பார்க்க பாரதிராஜா பையன் மனோஜ் மாதிரி இருக்காரு
அடுத்து செல்போன் பேச்சாக இவர் கள் நட்பு வளர்ந்துள்ளது. அதைத் தொடர்ந்து, ஜனவரி மாதத்தில் ஒரு நாள் லலிதாவையும் மேரியையும் பார்க்க ராணிப்பேட்டை நண்பர்கள் காரில் சென்னைக்கு வந்தனர். இருவரையும் வேலூர் மாவட்டத்தில் இருக்கும் தங்கக் கோயிலுக்குக் கூட்டிச் செல்வதாக அழைத்துப் போனார்கள். 



சி.பி -   ஹா ஹா >>வேலூர் மாவட்டத்தில் இருக்கும் தங்கக் கோயிலுக்குக் கூட்டிச் செல்வதாக>>> 

 தங்கக்கோயிலா? அங்கே போய் தங்கறதுக்கு கோயிலா?


ஆனால் அவர்கள், ராணிப்பேட்டையில் இருக்கும் ஒரு ஹோட்டலுக்கு அழைத்துப் போயி ருக்கிறார்கள். அங்கே ஆனந்த பாபு - மேரி ஓர் அறையிலும், லலிதா - சதீஷ் ஓர் அறையிலும் தங்கி இருக்கின்றனர். காதலிப்பதாகவும் உருக்கமான வார்த்தைகளால் சொல்லி இருக்கிறார்கள். தங்களை நிச்சயமாகத் திருமணம் செய்து கொள்வார்கள் என்று எண்ணி, இருவரும் அவர்களிடம் ஏமாந்து போய் இருக்கின்றனர். பிறகு, 'எப்போது திருமணம்?’ என்று பெண்கள் இருவரும் நச்சரித்திருக்கிறார்கள்.


சி.பி - ஏம்மா, அப்பாவிப்பெண்களே! அந்த நச்சரிப்பை மேட்டர்க்கு முன்னாலயே பண்ணி இருந்தா தக்காளிங்க 2ம் ஓடி இருக்குமே?


 ஆள் எஸ் ஜே சூர்யா மாதிரியே இருக்காரு. அப்பவாவது பொண்ணுங்க ஜாக்கிரதையா இருந்திருக்கலாம்
'உங்களிடம் நாங்கள் டைம் பாஸ்க்குத்தான் பழகினோம். உங்களை எங்களால் திருமணம் செய்ய முடியாது. மீறி ஏதாவது பிரச்னை செய்ய நினைத்தால், உங்களின் அந்தரங்கப் புகைப்படங்கள் எங்களிடம் இருக்கிறது, அதை ஃபேஸ்புக்கில் போட்டுவிடுவோம்’ என்று மிரட்டி இருக்கிறார்கள்.



சி.பி - உடனே பொண்ணுங்களும் மிரட்டி இருக்கனும்.. தம்பி.. உன் ஆபாச ஃபோட்டோவும் இருக்கு அதை நாங்க நெட்ல போட எவ்ளவ் நேரம் ஆகும்? எங்க முகத்தை மறைச்சு உன் முகம் தெரியற மாதிரி போட்டுடுவோம்னு மிரட்டி இருக்கலாம் , பய புள்ளங்க பயந்து தெறிச்சிருக்கும்

அவர்களின் நண்பர்களான திலீப், லூயிஸ், ஆனந்த நித்தியானந்தம் ஆகியோரும் இந்தப் பெண் களை மிரட்டவே, தாங்கள் ஏமாற்றப்பட்டதாக வேலூர் எஸ்.பி. அலுவலகத்தில் புகார் கொடுத்துள் ளார்கள். இப்போது ஆனந்த், சதீஷ் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்கள்'' என்றார் கொந்தளிப்பாக.




வேலூர் காவல் துறையினரிடம் விசாரித் தோம். ''சதீஷ் மிகவும் டிப்டாப்பாக இருப்பான். பெண்களை ஏமாற்றுவது சதீஷ§க்கும் அவனது நண்பன் ஆனந்த பாபுவுக்கும் கை வந்த கலை. ஏற்கெனவே சென்னையைச் சேர்ந்த  விஜயலட்சுமியை ஃபேஸ்புக் மூலம் தொடர்புகொண்டு, சதீஷ் ஏமாற்றி உள்ளான். 'உன்னுடைய ஆபாசப் படம் என்னிடம் இருக்கிறது. இரண்டு லட்சம் தர வேண்டும்’ என்று மிரட்டி, 50,000 ரூபாய் வாங்கியுள்ளான். மேலும் மிரட்டவே, விழுப்புரம் மாவட்டத்தில் அந்தப் பெண் புகார் கொடுத்துள்ளார். இதுபோன்று நிறையப் பெண்களை ஏமாற்றி இருக்கிறார்கள். எங்களின் கணிப்புப்படி 15-க்கும் மேற்பட்ட பெண்கள் ஏமாந்திருப்பதாகத் தெரிகிறது'' என்று சொன்னார்கள்.
இந்த விவகாரம் குறித்துப் பேசும் வேலூர் மாவட்டத்தில் யாஸ்காம் இன்டர்நெட் சென்டர் நடத்திவரும் ஆஸாம் இர்பான், ''பெண்கள் ஃபேஸ்புக்கில் எந்தக் காரணம்கொண்டும் யாருக்கும் தொலைபேசி எண்ணைத் தரக்கூடாது. நன்கு அறிமுகமான நபர்களை மட்டுமே தங்களுடைய நண்பர்கள் பட்டியலில் சேர்த்துக்கொள்ள வேண்டும். தனது புகைப்படங்களையோ அல்லது குடும்பத்தாரின் புகைப்படங்களையோ ஃபேஸ்புக்கில் வெளியிடக்கூடாது. அறிமுகம் இல்லாத நபர்களிடம் சாட் செய்யாதீர்கள்'' என்று ஆலோசனைகள் சொன்னார்.



பெண்களே உஷார்!

ஈரோடு மாவட்டம் ஆப்பக்கூடல் காதல் சிந்தனைகள்

1.இஷ்டம் படத்தில் டைரக்டர் என் எதிர்ப்பை மீறி என்னை கவர்ச்சியா காண்பித்துவிட்டார்-நிஷா அகர்வால்# அப்டி ஏதும் தெரியலையே?




-------------------------

2. திரும்ப கிடைக்காதவை 1.கடந்து விட்ட நாட்கள்,2.தொலைந்த நட்புகள் 3 மறந்த உறவுகள் 4. கலைந்த கனவுகள் # SMS


-----------------------------


3. ஜனாதிபதி ஆக ஆசைப்படுகிறாரா கலைஞர்?  # உலகம் சுற்றும் வாலிபனை எதிர்த்தவர் அரசு செலவில் உலகம் சுற்ற ஆசைப்படுகிறார்!


--------------------------------

4. எக்ஸாம் = கேர்ள்ஸ் 


1.ஏகப்பட்ட கேள்விகள்


 2.புரிஞ்சுக்கறது கஷ்டம்


 3.ரொம்ப விளக்கனும்


 4. ரிசல்ட்  எப்பவும் ஃபெயில் தான்


-------------------------------


5.நமக்குள் நிகழ்ந்த ஊடல் பொழுதுகளை நீ சொல்லிக்காட்டும்போதெல்லாம் நமக்குள் அன்பு கூடு கட்டுகிறது


-------------------------------------






 6. ஆணாதிக்கமும், பெண்ணாதிக்கமும் தலை தூக்கினால் ஊடல்,தலை சாய்த்துப்படுத்தால் கூடல் # ஈரோடு மாவட்டம் ஆப்பக்கூடல் சிந்தனைகள்


--------------------------------

7. மிஸ்,உங்களை நான் ஃபாலோ பண்றேன், ஏன் என்னை நீங்க ஃபாலோ பண்ணலை?


2 பேரும் மாறி மாறி ஃபாலோ பண்ணுனா வட்டம் போட்டுட்டே இருக்கனும்



----------------------------------


8. புலம்பித்தள்ளுவது பெண்களின் பழக்கம், மனசுக்குள் புழுங்கிக்கிடப்பது ஆண்களின் வழக்கம் # உள்ளே , வெளியே



-------------

9. தன்னைக்கண்டு வெட்கப்படும் பெண்ணை ஆண் ரசிக்கிறான், தனக்காக மற்றவரிடம் கோபப்படும் ஆணை பெண் ரசிக்கிறாள்



-------------------------------------


10. உன் குறைந்த பட்ச மென்மைச்சொல் “ ம்”. உன் அதிக பட்ச வன்மைச்சொல் “ ஏய்”


 ------------------------
காந்த கண்ணழகி.ஐ லவ் யூ,ஹேய் ,,ஐ லைக் இட் "யா..இவ்வளவு சொல்லுறேன்.ஒரு ரீஆக்சென் காணோம்,.அவ்வ்வ்வ்;))#கவுண்டர் வாய்ஸ்;)

11. ஒரு பெண்ணை கண் கலங்க வைத்த ஆண் விளங்க மாட்டான்,ஒரு ஆணை கோபப்பட வைக்கும் பெண் மீண்டும் தன் நிலையில் இருந்து இறங்க மாட்டாள்



 ------------------------------


12. உதட்டில் இருக்கும் உமிழ்நீர் வெளியே வந்ததும் எச்சில் ஆகும், ஆனால் உன் இதழ்களுக்குள் இருந்து வெளிப்படும் வார்த்தைகள் கவிதை ஆகும்


-------------------------------


13. உன் விழிகளால் என்னை காயப்படுத்தினால் அதை ரசிப்பேன்,உன் உதடுகளால் என்  உதடு காயப்பட்டால் நான் ருசிப்பேன்


---------------------------


14. உனக்கு ஆறிதல் கூறும் சந்தர்ப்பங்களை நான் எதிர் நோக்கி இருப்பேன், அப்போதுதான் நீ வெட்கம் இன்றி என் அணைப்பில் இருப்பாய்!


--------------------


15.தனது பெற்றோரின் காதல் திருமணத்தின் எதிர் மறை விளைவுகளைப்பார்த்து பல குழந்தைகள் பாடம் கற்றுக்கொள்கின்றன


------------------------------------





16. பவர் ஸ்டார் பண்ற அலப்பறையில் அப்பாவித்தனமும், கோபிநாத்தின் அலப்பறையில் திமிர்த்தனமும் கொப்பளிக்கிறது



------------------------------

17.  நீ என்னை ”டே(ய்)” என்றாய்! நான் அடடே என்றேன்.அன்றே நம் லவ் டே # டே டே சிந்தனைகள்


--------------------------------


18. பொண்ணுங்க டைட் டிரஸ் போட்டா பசங்க லூஸ் ஆகிடறோம்,லூஸ் டிரஸ் போட்டா டைட் ஆகிடறோம் # ஹி ஹி


------------------------------

19. நான் இல்லாம உனக்கு போர் அடிக்குமா? ஆமா.. ( இவளே ஒரு போர் தான் - மைண்ட் வாய்ஸ்)



-------------------------------


20. உன் எல்லாக்கோபங்களையும் நீ என்னிடமே இறக்கி வைக்கிறாய்! என் எல்லா அன்பையும் உன்னிடமே நான் ஏற்றி வைக்கிறேன்


----------------------------------







Tuesday, May 29, 2012

விஜய் டி வி - கோபிநாத் VS பவர் ஸ்டார் - எப்பொழுதும் உன் அலப்பறைகள்



விஜய் டி வி தமிழ் சேனல்களில்  பெரிய புரட்சியை விளைவித்ததை யாரும் மறுக்க முடியாது.. எல்லா வீடுகளிலும் சன் டி வி யின் ஆதிக்கம் நிறைந்த போது தனது கிரியேட்டிவிட்டியை கூர் தீட்டி பல வித்தியாசமான படைப்புகளை முன் வைத்தது. இன்று முன்னணி சேனல்கள்  விஜய் டி வி பார்த்து காப்பி அடிக்கின்றன என்றால் மிகை ஆகாது..


விஜய் டி வியில் முதன் முதலாய் வந்த கலக்கப்போவது யாரு? நிகழ்ச்சியின் உல்டா தான் சன் டி வி யின் அசத்தப்போவது யாரு?அந்த நிகழ்ச்சியின் இயக்குநர் ராஜ் மோகன் அவர்களுக்கு அதிக சம்பள ஆசை காட்டி சன் டி வி அந்த குரூப்பை இழுத்துக்கொண்டது.. கலைஞர் டி வியில் எல்லாமே சிரிப்புத்தான்.. என பட்டியல் நீளும்..


நடன நிகழ்ச்சி, பாட்டுப்போட்டி, டாக் ஷோ என சொல்லிக்கிட்டே போலாம்.. அப்படிப்பட்ட விஜய் டி வியில் ஹிட் அடித்து டி ஆர் பி ரேட்டிங்க்கில் எகிறிய புரோகிராம் தான் நீயா? நானா? இந்த நிகழ்ச்சில ஒரு தலைப்பு கொடுத்துடுவாங்க.. 2 குரூப் பிரிஞ்சு எதிர் எதிரே அமர்ந்து அவங்கவங்க கருத்தை சொல்வாங்க.. இது கிட்டத்தட்ட  குழு பட்டிமன்றம் போல்..

நாட்டில் நிகழும் கரண்ட் டாபிக்கை வைத்து அலசுவதால் வாரா வாரம் ஞாயிறு இரவு அன்று பல வி ஐ பிகள் உட்பட மேல் தட்டு மக்கள் இந்த நிகழ்ச்சியின் ரசிகர்கள் ஆகிட்டாங்க.. ஆனா சி செண்ட்டர் ரசிகர்கள் ரசிக்க முடியாதபடி ஆங்கிலக்கலப்புகள், ஒரு அதி மேதாவித்தனம் அந்த நிகழ்ச்சில இரண்டற கலந்திருக்கும்.

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjDrzj-0OzN8CE-D5vum_sHzI9fdl9A4dM7r5k_F5CcWL9vu2lksn0O2HxtOUeuvKUq4vLMx2-wTbyyR3BETR21GmfIFHpTihLUZ_O1ljMtGcpZZm-iCYYS_WT-pnsc0EKSiFd4AgXdNMe-/s400/7-neeya-naana-gopinath-pics-images-photos-stills.jpg

கோபிநாத்- இவரை எனக்கு ஆரம்பத்தில் மிகவும் பிடிக்கும். இவர் பர்சனாலிட்டி, டிரஸ்சிங்க் சென்ஸ்,பேசுபவர்களை மடக்கும் விதம் எல்லாம் அபாரம்.எல்லா திறமைசாலிகளுக்கும் ஒரு மைனஸ் இருக்கும்.. கோபிநாத்திடம் உள்ள மைனஸ் அவரது தெனாவெட்டு, யாரையும் குறிப்பாக அவரை விட எளியோரை, படிப்பறிவு இல்லாதவரை  ரொம்ப எகத்தாளமாக பார்க்கும் மனோ பாவம் கொண்டவர்..

27.5.2012 ஞாயிறு அன்று பவர்ஸ்டாரிடம் அவர் நடந்து கொண்ட விதம் மிக மட்டமானது. ஊருக்கு இளைச்சவர்னா என்ன வேணாலும் பேசலாமா? இந்த இடத்தில் கலாய்த்தல், எள்ளி நகையாடல் இரண்டிற்கும் உள்ள வித்தியாசம் சொல்ல வேண்டும்..

 கவுண்டமணி, சந்தானம் வகையறாக்கள் படங்களில் செய்வது கலாய்த்தல்.. அது அனைவராலும் ரசிக்கப்படுகிறது .. சில சமயங்களில் எல்லை மீறினாலும்  நாம் அதிகம் பொருட்படுத்தாத அல்லது பொருட்படுத்த தேவை இல்லாத அளவில் தான் அவர்கள் காமெடி உள்ளது..


எள்ளி நகையாடல் என்பது ஜெ கேப்டனை பார்த்து “ தினமும் குடிக்காமல்  அவரால் தூங்க முடியாது” என்று சொன்னதும் “ இவர் தான் அருகில் இருந்து ஊற்றிக்கொடுத்தாரா?” என்று இவர் கேட்டதும்.. இதுக்குப்பிறகும் சுயநலத்துக்காக எலியும் , பூனையுமாய் இருந்தவர்கள் கூட்டணி அமைத்து பின் மீண்டும் எதிரிகள் ஆனது கேவலமான தமிழக அரசியல் வரலாறு

 வீட்டுக்கு வரசொல்லி பழி வாங்கிட்டாங்க என்று கிராமங்களில் ஒரு சொல்வடை உண்டு.. அந்த மாதிரி விஜய் டி வி சிறப்பு விருந்தினராய் பவர் ஸ்டாரை வரச்சொல்லி அப்படி அவமானப்படுத்தியது மாபெரும் தவறு..லட்சக்கணக்கான மக்கள் பார்க்கிற ஒரு நிகழ்ச்சியில் அப்படித்தான் ஒரு நடிகரை அவமானப்படுத்துவதா?

ஒரு ரஜினியோ விஜய்காந்த்தோ அங்கே வந்திருந்தால் அப்படி செய்யும் துணிவு கோபினாத்துக்கோ, விஜய் டி வி நிர்வாகத்துக்கோ உண்டா?

கொளுத்தும் கோடை வெய்யிலில் இப்படி கோட் சூட் மாட்டிக்கிட்டு ஏன் அவஸ்தைப்படறீங்க? காசுக்காகத்தானே? என்று லைவ் கமென்ட் கொடுத்தா அவருக்கு எப்படி இருக்கும்?மிஸ்டர் கோபிநாத்.. நீங்க வீட்ல பெட்ரூம்ல கூட கோட் சூட் போட்டுக்கிட்டுத்தான் தூங்குவீங்களா? நீங்க கோட்டடையானா? என்று சபையில் நக்கல் அடித்தால் அவர் முகம் எப்படி சுருங்கும்?


இவர் பற்றி ஒரு சம்பவம் இந்த டைமில் சொல்வது பொருத்தமாக இருக்கும்.. ஈரோடு மாவட்டம் பெருந்துறை என்ற ஊரில் நடந்த ஒரு கல்லூரி ஆண்டு விழாவுக்கு அண்ணன் கோபிநாத்தை சிறப்பு விருந்தினராக 2 ஆண்டுகளுக்கு முன் அழைத்திருந்தார்கள்.. அண்ணன் போட்ட கண்டிஷன்ஸ்

1. ஒரு மணி நேரம் மட்டுமே இருப்பேன், அதற்கான கட்டணம் ரூ 2 லட்சம் முழுத்தொகையும் இப்போதே கொடுத்துடனும்

2. சென்னையில் இருந்து பெருந்துறைக்கு காரிலேயே வந்து அழைத்துச்சென்று காரிலேயே விட்டு விட வேண்டும்..

3. காரில் ஏ சி இருக்க வேண்டும்.. ( ஏன்னா அண்ணன் கோட் சூட்டில் தானே இருப்பார்? அதனால்) பயண நேரத்தில் சரக்கு, சிகரெட், சாப்பாடு அனைத்து செலவுகளும் ஏற்க வேண்டும்

 அவர் போட்ட அனைத்து கண்டிஷன்களும் ஏற்றுக்கொள்ளப்பட்டது.. அரை மணி நேரத்துக்கு ஒரு முறை காரை நிறுத்தி  தம் அடிச்சு, சரக்கு அடிச்சு அண்ணன் ஃபுல் மப்பில் தான் வந்தார்..

 இது அவரது தனி உரிமை.. அவருக்கு மார்க்கெட் இருக்கு, கூப்பிடறாங்க.. அவர் டிமாண்ட் பண்றாரு.. நான் கேட்பது அந்த விழாவில் அனைத்து மாணவ மாணவிகள் முன்னிலையில் அண்ணன் இந்த மாதிரி அடாவடி பண்ணுனாரு, இப்போக்கூட ஃபுல் மப்புல தான் இருக்காரு என்று மேடையில் அவமானப்படுத்தி இருந்தால் எப்படி இருந்திருக்கும் அவருக்கு?

 உங்களுக்கு ஒரு நியாயம், மற்றவங்களுக்கு ஒரு நியாயமா?

http://tamil.oneindia.in/img/2012/05/14-neeya-naana-gopinath--300.jpg


அலப்பறை மன்னன் அண்ணன்  கோபிநாத்துக்கு சில ஆலோசனைகள்


1. உலகத்துலயே தான் தான் புத்திசாலிங்கற நினைப்பை முதல்ல விட்டுடுங்க..

2. விருந்தோம்பல் என்பது தமிழர் பண்பாடு.. அதாவது கூட்டிட்டு வந்து கும்மி அடிக்கக்கூடாது..

3. மற்றவங்களை பேச விடுங்க.. பெரிய அதி மேதாவி மாதிரி குறுக்கே பேசாதீங்க..

4. படிக்காதவங்க எல்லாம் முட்டாள், படிச்சவந்தான் அறிவாளிங்கற நினைப்பை மாத்திக்குங்க..

5. கிராமங்களில் இருந்து வரும்  நேயர்களை வழி காட்டுங்க.. ஷூட்டிங்க் டைமில் அவங்க தடுமாற்றம் பார்த்து நக்கல் அடிக்காதீங்க.

6. முடிஞ்சா வருஷம் ஒரு டைமாவது வேட்டி சட்டைல வாங்க


 பிரபல ட்வீட்டர் வேணு, perundurai சொன்னது கீழே உள்ள கருத்து (GD_Venu@GD_Venu)

பவர் ஸ்டார் ஸ்ரீநிவாசன் என்ற தனி நபர் 'இல்லாததை இருப்பது போல காட்டி கொள்ளும் ஒரு விளம்பர பிரியர், எதற்கு இந்த விளம்பரம்? ' என்ற பாணியில் பேசும்,தைரியம் தமிழ்நாட்டில் மக்கள் அங்கிகாரம் இல்லாமல் விளம்பரம் செய்யும் அரசியல் கட்சிகள் , ஜாதிகட்சி, தலைவர்களை அழைத்து கேட்கும் தைரியம் கோபிநாத்திற்கு இருக்கிறதா?

டாக்டராக இருந்த நீங்கள் ஏன் சினிமா துறைக்கு வரணும் ?, உங்களுக்கு என்ன கலை அறிவு இருக்கிறது ? என்று கேட்டவர் , கண்டக்டர் , ரைஸ் மில் அதிபராக இருந்த ரஜினி,விஜயகாந்தை பார்த்து 
ஏன் சினிமாவுக்கு வந்தீர்கள் ?, உங்களுக்கு என்ன கலை அறிவு இருக்கிறது என கேட்க முடியுமா ?கேட்டால் உங்கள் நிலைமை என் ?..

பிரபாகரன் இறந்த பின்னும் , அவர் இறந்ததை சொல்லாமல் ஏமாத்தும் தலைவர்களை , அழைத்து 'எதற்கு இந்த விளம்பரம்' "போலி வாழ்க்கை"என கேட்க முடியுமா ?

ஊழல் வழக்கில் ஜாமீனில் வெளி வந்து விட்டு , ஜாமீனில் வெளி வந்ததால் 
2ஜி வழக்கு நீர்த்து போகும் ன்னு சொன்ன முதல்வரை அழைத்து ஏன் என்று கேட்க'போலி வாழ்க்கை என கேட்க முடியும்மா?



250 கோடிக்கு விளம்பரம் கொடுத்து , தான் செய்த நல திட்ட உதவிகளை விளம்பர படுத்தும் தமிழக அரசை இல்லாததை இருப்பது போல காட்டி கொள்ளும் ஒரு விளம்பர பிரியர்'எதற்கு இந்த விளம்பரம்' "போலி வாழ்க்கை " என கேட்க முடியுமா?.. ..

http://tamildigitalcinema.com/wp-content/uploads/2012/04/Neeya-Naana-.jpg
வி சதீஷ் குமார் அவர்கள் கருத்து
ஒரு பொது நிகழ்வில் ஒரு நடிகரை (மருத்துவர் சீனிவாசன்)அல்லது ஒரு மனிதரை எப்படி நடத்த வேண்டுமென்ற குறைந்தபட்ச நாகரீகம் கூடத் தெரியாத கோபிநாத் ஒரு வக்கிரம் கொண்ட மனித கழிவு.சக நடிகரை ஒரு தொலைகாட்சி அவமான படுத்தி உள்ளது... ’’நடிகர் சங்கம்’’ என்ன நடவடிக்கை எடுக்க போகிறது?நடிகர் சங்க தலைவர்,செயளாலர் இதற்கு பதில் சொல்லுவார்கலா?



மிகைப்படுத்தி பேசுவதை தவிர எந்த குறையும் இல்லாத மனிதர் பவர் ஸ்டார்...
எதையும் எதிர்கொள்ளும் மனநிலையும்,
தோற்றாலும் போராடும் தன்னம்பிக்கையும்,
கேலி செய்தாலும் பொறுமை மாறாது பதில் சொல்லும் கோணத்திலும் ஒப்பிடும் போது...
ஒரு டி ஆர் பி ரேட்டிங் கூட்டி காண்பிக்க உபயோகப்படுத்தி , ஒரு மனிதனை வெளிச்சத்தில் இகழ்ச்சி செய்யும் கோபிநாத்& டீமை விட
பவர் ஸ்டார் சீனிவாசன் எந்த விதத்திலும்
குறைந்துவிடவில்லை...

சொந்த காசில் சினிமா எடுத்ததை தவிர தப்பான தொழில் செய்யவில்லை...
படங்கள் காணாமல் போனாலும் பணம் கொடுக்காமல் ஏமாற்றினார் என்று எந்த புகாரும் இல்லை...
விஜய் டிவியின் டி ஆர் பி வெறியை விட
சீனிவாசனின் சினிமா வெறி தவறாக தோன்றவில்லை...

"நான் அவர் படமும் பார்த்தது இல்லை.."
ஏற்றுக்கொள்ள முடியாத நடிகனாக இருக்கலாம்...
தனிமனிதனாக பவர் ஸ்டார் சீனிவாசன் நல்ல மனிதர் என்பது சத்தியமாக உண்மை என்று மட்டும் நிச்சயம் சொல்ல முடியும்...

மனிதனை மனிதனாக மதிக்க கற்றுக்கொள்ளுங்கள்...
தனக்காக பிறரை இகழ்ச்சி செய்யும் விஜய் டி வி போல் அல்லாது..
உங்கள் கருத்தும் வரவேற்கப்படுகிறது

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjcfBxTIGbgH0xOgVQPZFvMrtOsfypS7cjBqLLoE3g0gfq_vONBq_a3ZEexTb-1KvCuOLXGXusQLM-PJZ1q-p8Xaj3yMY4y328Z1xkIQj81hFIfK4O6k9wk5IUGNtJS0Ru-nAUOwryGAa3O/s1600/gopinath+neeya+naana.jpg

Sankarkumar  -சம்பந்தப்பட்ட நிகழ்ச்சியை நானும் பார்த்தேன். அன்றையத் தலைப்புக்குப்
பொருத்தமான ஒரு நபரையே விஜய் டிவி அழைத்திருந்தது. கோபிநாத் கேட்ட
கேள்விகளும் பவர் ஸ்டாரின் அவர் தற்போது அணிந்திருக்கும் போலிமுகத்தின்
பின்னால் இருக்கும் உண்மையான முகம் என்ன என்பதை அறியவே தொடுக்கப்பட்டன.
ஒருவேளை, அவர் உள்ளே வருவதற்கு முன், அவரது 11 நபர் குழு போட்ட
கெடுபிடிகள் நிகழ்ச்சியாளரை எரிச்சல் அடையச் செய்திருக்கலாம். ஆனாலும்
கேள்விகள் கண்ணியமாகவே அமைந்திருந்தன. அதற்கு பவர் ஸ்டார் அளித்த
பொறுமையான பதில்கள் அவரது இமேஜை உயர்த்தியே காட்டியது.

ஒபாமாவைக் கூட அழைத்து கேள்வி கேட்கக்கூடிய சுதந்திர நாட்டில் இருப்பதாலோ
என்னவோ, இந்த நிகழ்ச்சியில் எந்தத் தவறும் எனக்குத் தெரியவில்லை. பவர்
ஸ்டார் அவமதிக்கப்பட்டதாகவும் நான் கருதவில்லை. அவரேகூட அப்படிச்
சொல்லவில்லை. 'ஒருவேளை நீங்கள் எனக்கு எதிரியாக இருக்கலாம்' என மட்டுமே
அவர் சொன்னார்!


ஆயினும், சதிஷ் சார்பில் ஒன்றைக் கூற விரும்புகிறேன். இதே கோபிநாத்
எம்ஜியாரை அழைத்து, 'நீங்க ஏன் தொப்பி கண்ணாடி அணிஞ்சிருக்கீங்க? கொஞ்சம்
கழட்டி உண்மையான முகத்தைக் காட்டுங்க' எனக் கேட்டிருக்க முடியது;
கேட்டுவிட்டு, உயிர் பிழைத்திருக்கவும் முடியாது!:)) பவர் ஸ்டார்
என்பதால் கேட்டுவிட்டார். அவரும் பொறுமையாகப் பதில் சொல்லிவிட்டு, கைகளை
அசைத்து விடை பெற்று சென்றும் விட்டார்!