Monday, April 30, 2012

நரசிம்மன் ஐ பி எஸ் (Achante Anmakkal ) - மலையாள சினிமா விமர்சனம்

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg4vyAdVeSudoVg4rxdKGw351LI7OZXI5STlc_0_b24iEdSkK9e3jKbKUPNiPQVdK3Z3qPe0sMT8ZTrxk7EW9v6b_oVx8F4-_cxnImT5-010Mj4zbFVtV5IkgNlbmwazHvvpN-le2EmzCw/s1600/Achante_Aanmakkal.jpg

கோவை லாட்டரி அதிபர் மார்ட்டின் கதையை படமா எடுக்க டைரக்டர் நினைச்சிருக்காரு.. ஆனா என்ன பிரச்சனை வந்ததோ டக்னு கதையை டைவர்ட் பண்ணி ஆர்டினரி கொலை கேஸ் இன்வெஸ்டிகேஷனா மாத்திட்டாரு.திரைக்கதைல அண்ணன் இன்னும் நிறைய கத்துக்கனும்..

ஒரு ஊர்ல ஒரு  மாமனார்.. அவருக்கு அமைஞ்ச 2 மாப்பிள்ளைகளும் போலீஸ் ஆஃபீசர்ஸ். மாமனாரும் ஒரு போலீஸ் ஆஃபீசர் தான்.. அவர் ஒரு லாக்கப் டெத்ல ஒரு கைதியோட மரணத்துக்குக்காரணமானதா குற்றம் சாட்டப்படறார்.. அந்த  பொய்க்கேஸ்ல இருந்து எப்படி 2 மாப்பிள்ளைகளூம் விடுவிச்சாங்க என்பதே படத்தோட ஒன் லைன்.. டைட்டில் ஓக்கேவா? அதாவது மாப்ளைங்க 2 பேரும் மாமனார்க்கு மகன்கள் போல .. 

சரத்குமார் தான் ஹீரோ.. ஓப்பனிங்க் ஷாட்லயே  ஆள் ஜம்முன்னு ப்ளூ ஜீன்ஸ் , ஒயிட் சர்ட், கூலிங்க் கிளாஸ்னு கலக்கறார்.. ஆனா அவர் ஃபைட் போட ஆரம்பிச்சா  அதை முடிக்க 20 நிமிஷம் ஆகுது.. உஷ் அப்பா முடியல.. காது வலிக்குது.. சும்மா  ஃபைட் போட்டா பரவாயில்லை.. ஹேய் ஹேய் ஏய் ஏய்னு பேக் கிரவுண்ட் மியூசிக் வேற..

நெடுமுடி வேணுதான் மாமனார் கேரக்டர்.. நல்ல அனுபவம் வாய்ந்த நடிப்பு.. ஆனா போலீஸ் யூனிஃபார்ம்ல ஏன் ஆள் பம்முறார்னு தெரியல..  என்னமோ அவர் தப்பு பண்ணுன மாதிரியே ஒரு கில்டி ஃபீலிங்க்ஸ்டோட நடிச்சிருக்கார்.. ( ஒரு வேளை கதையை மாத்திட்டாங்களோ..)

http://cdn4.supergoodmovies.com/FilesFive/narasimhan-ips-6c113f88.jpg


மேக்னா ராஜ் தான் சரத்க்கு ஜோடி..  2 டூயட் இருக்கு. 1 அழுகாச்சி சீன் இருக்கு.. வேற சீன் ஏதும் இல்லை.. யுவராணி ஹீரோவுக்கு கொழுந்தியாவா வர்றார்.. நோ யூஸ். ( அதாவது படத்தின் கதைக்கோ திரைக்கதைக்கோ அவர் நோ யூஸ்னு சொல்ல வந்தேன் ஹி ஹி )


படத்தில் மனம் கவர்ந்த வசனங்கள்


1.  கோவைல ஒருத்தன் தப்பு செஞ்சா அவன் ஓடி ஒளீயற முத இடம் பாலக்காடு தான்..  ( அப்போ பாலக்காட்ல ஒருத்தன் தப்பு செஞ்சா அவன் ஓடி ஒளீயற முத இடம் பா கோவையா?)


2.  ஒரே மாசத்துல அந்த குற்றவாளீகளை நான் அரெஸ்ட் பண்ணிடுவேன்

 போ போ எல்லாரும் பஸ் ஸ்டேண்ட்ல தான் வெயிட்டிங்க்.. போய் அரெஸ்ட் பண்ணிட்டு வந்துடு..


3.  என் புருஷன் மப்புல இருக்காரா? இல்லையா?ன்னு கண்டு பிடிக்க ஒரு டெஸ்ட் இருக்கு.. பேரு கொக்கு டெஸ்ட். அதாவது அவரை ஒரு காலை தூக்கி ஒரு கால்ல நிக்க சொல்லி 10 வரை எண்ணூவேன்// 8 வரை நின்னா அவர் ஒரு ஆஃப் குவாட்டர் மட்டும் தான் அடிச்சுருக்கார்னு அர்த்தம்


4.  உங்களூக்குத்தெரியாதா? ஒரு சுப்பீரியர் ஆஃபீசர் இன்சார்ஜ்ல இருக்கற கைதி இறந்துட்டா ஸ்பாட்ல அவர் இல்லைன்னாலும் அதுக்கான மாரல் ரெஸ்பான்ஸிபிலிட்டி அவருக்கு உண்டு

5.  தப்பை எப்படி செய்யனும்? அதை எப்படி மறைக்கனும்னு போலீஸ் தான் நல்லா தெரிஞ்சு வெச்சிருக்கும்.. அதனால இந்த கொலையை போலீஸ் தான் செஞ்சிருக்கும்..

6.  ஒரு கேஸ் துப்பறீயும் போது இன்னொரு கேஸ் துப்பு துலங்கறது ஒண்ணூம் பெரிய அதிசியம் இல்லை.. மாமூலா நடக்கறதுதான்


7.  இந்தப்பொண்ணை இதுக்கு முன்னால எங்கயாவது பார்த்திருக்கீங்களா?

 ம்.. ஆனா இவ்வளவு பக்கத்துல இல்லை..


http://moviegalleri.net/wp-content/gallery/narasimhan-ips-movie-stills/sarathkumar_meghana_raj_narasimhan_ips_movie_stills_1723.jpg


 இயக்குநர் செய்த லாஜிக் மிஸ்டேக்ஸ்.. , அவரிடம் சில கேல்விகள், திரைக்கதையில் சில ஆலோசனைகள்


1.  ஒரு சீன்ல சரத் தன் சகலை கிட்டே நான் பாலக்காட்ல இருக்கேன்.. நீ கோவைல இருக்கே.. அதனால அந்த விசாரனையை நீ பார்த்துக்கோ அப்டிங்கறார்.. ஆனா அவர் ஃபோனை வெச்ச அடுத்த சீன்ல யே சகலை கூட நடந்து பேசிட்டு இருக்கற மாதிரி சீன் வருது.. எப்படி?

2.  சரத் பெரிய ஆக்‌ஷன் ஹீரோ தான் ஆனா அதுக்காக கூலிங்க் கிளாஸ் கூட கழட்டாம 24 பேரை உதைக்கறது ரொம்பவே ஓவர்.. கண்ணே தெரியாது.. எப்படி ஃபைட் போடுவாரு?

3.  லாட்டரி டிக்கெட்சை பதுக்கி போற வேனை சரத் மடக்கி பிடிக்கறார்.. அப்போ வேன்ல இருக்கற ஆளூங்க சும்மா கீழே குதிச்சா போதாதா? டாய்னு கத்திக்கிட்டே அந்த லாட்டரி டிக்கெட்ஸை எல்லாம் ஏன் வானத்துக்கு தூக்கி எறியறாங்க? மறுபடி அடுக்க சிரமம் ஆச்சே?

4. படம் ஆக்‌ஷன், த்ரில்லர், இன்வெஸ்டிகேஷன்னு ஸ்பீடா போற டைம்ல சரத் மலையாளம் கத்துக்கற போர்ஷனை காட்ட ஒரு பாட்டு, சம்சாரத்தை சமாதானப்படுத்த ஒரு பாட்டு தேவையா?


5. படத்தில் ஒரு சீன்ல மார்ச் 20 ல எலக்‌ஷன் வெச்சிருக்கறதா டயலாக் வருது.. டென்த் , பிளஸ் டூ எக்சாம் எல்லாம் முடிஞ்ச பின் எப்பவும் மே மாசம் தானே பொதுத்தேர்தல் வரும்? ( கேரளாவுல மாறி இருந்தா டப்பிங்க்ல மாத்தி இருக்கலாமே/)



http://nowrunning.com/content/movie/2012/NarasimhanIPS/stills/NarasimhanIPS6.jpg
6. போலீஸ் ஒரு சீன்ல பொட்டிக்கடைல கில்மா புக்ஸ் சீஸ் பண்ணுது.. ஓக்கே ஆனா எவனாவது பப்ளீக்கா என்னமோ வெத்தலை வெச்சிருக்கற மாதிரி ஓப்பனா கடை வாசல்ல கில்மா புக் போட்டு விப்பானா? மறைவா வெச்சிருப்பான்.. அப்புறம் கஸ்டமர்ஸ் கேட்ட பின் எடுத்து தருவான்

7. லாட்டரி டிக்கெட் பிரின்ட் பண்ணுன கேஸ்ல பிரஸ் ஓனர் அண்னனிடம் விசாரிக்கறப்ப மாறூவேஷத்துல விசாரிக்கறாங்க.. பிரஸ் ஓனர் நெம்பர் வேணூம்.. நாங்க அவனோட அண்ணன்ங்க அப்டினு சொன்னதும் அவன் எப்படி ஏமாறுவான்? ஏன்னா அதுக்கு முந்தின நாள் தான் போலீஸ் வந்து விசாரிச்சப்போ எனக்குத்தெரியாதுன்னு சொன்னான்.. அப்பொ அவன் என்ன சொல்லனும்? எனக்கு தெரியலை. உங்க ஃபோன் நெம்பர் குடுங்கனு வாங்கி வெச்சிருந்து அனுப்பி இருக்கனும்.. 

8. பெரிய இடத்துப்பெண்ணை அந்த பொடியன் லவ் பண்றதா ஒரு கிளைக்கதை வருது.. அந்த கோடீஸ்வர ஃபிகரு கழுத்துல 10 ரூபா பாசி, 35 ரூபா தாவணி போட்டுட்டு பரிதாபமா வருது.. ( ஆன ஃபிகர் சூப்பர் தான் பணக்காரக்களை இல்லீங்கொவ்)


9. மம்முட்டி நடிச்ச சி பி ஐ டைரி குறிப்பு படம் மாதிரி எடுக்கனும்னு நினைச்சு வேணும்னே தேவை இல்லாம ஃபிளாஸ் பேக் சீன்ஸ் மட்டும் 18 தடவை வருது... ஆர்டினரி ஆடியன்ஸ் குழம்பிட மாட்டாங்க?

10.  ஒரு இன்வெஸ்டிகேஷன் கதைல தேவை இல்லாம எதுக்கு செண்டிமெண்ட், அழுகை காட்சிகள்.. அதுவும் கதைக்கு சம்பந்தம் இல்லாம சர்த் மனைவி தன் அப்பா பற்றி அழுவது?

http://thebollywoodgallery.com/wp-content/uploads/2012/02/Meghana-Raj-Hot-In-Narasimhan-IPS-10.jpg


இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள்


1. ஆடை வடிவமைப்பு அருமை.. அதுவும் குறிப்பா சரத்க்கு ஜோர்.. அவர் அன்யூனிஃபார்மில் வரும் அனைத்துக்காட்சிகளும் கம்பீரம்..


2. பட போஸ்டர், விளம்பரம், புரோமோட் வேலைகளீல் இது ஒரு நேரடி தமிழ்ப்படம் போல் பார்த்துக்கொண்ட சாமார்த்தியம் அழகு.. டப்பிங்க் படம்னு நிறைய பேருக்கு தெரில..


3. இடைவே:ளை வரை கொஞ்சம் இழுத்தாலும் அதுக்குப்பின் திரைக்கதை ஸ்பீடா போவது பிளஸ்

4. படத்தின் கதை வாய்ப்பு கொடுத்தும் கவர்ச்சி ஏதும் காட்டாமல் அனைவரையும் கண்ணியமாக காட்டியது

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhksttrsgFqdZdesa8-1N3HrBA-etqJoDeZLQAHclUIoYmjJ8X-6mxA10J2JxCUVnkhlShsB_asI2ghfvLtr72VrBEIE6rZOLTHzWjQgBXmRFmmvq3qlp_OP4p-U1r7fFBqvKNKfPx8800/s1600/Megna_Raj_Hot_Stills_11.jpg


சி.பி கமெண்ட் - ஆக்‌ஷன் பட விரும்பிகள், இன்வெஸ்டிகேஷன் டைப் படங்களை ரசிக்கும் பெண்கள் பார்க்கலாம்..


 எதிர்பார்க்கும் ஆனந்த விகடன் மார்க் - 41 ( ஆனா டப்பிங்க் படத்துக்கு விகடன் நோ விமர்சனம்)

எதிர்பார்க்கும் குமுதம் ரேங்க் - ஓக்கே

 ஈரோடு ராயல் தியேட்டரில் படம் பார்த்தேன்.

நரசிம்மன் ஐ பி எஸ் ஆன் லைனில் ஓ சி யில் பார்க்க 

டிஸ்கி  -தமழ் திரட்டியில் தொடர்ந்து இணைந்து வரும் பதிவர்களுக்கு நன்றி. தொடர்ந்து http://www.hotlinksin.com

 இணையதளத்தில் நீங்கள் பதிவுகளை இணைத்து வந்தால் விரைவில் உங்கள் பிளாக்கின் அலெக்ஸா ரேங்க் மதிப்பு நிச்சயம் உயரும். எனவே பதிவு எழுதியதும் முதல் வேலையாக பதிவுகளை http://www.hotlinksin.com
 திரட்டியில் இணைத்து விடுங்கள்

http://cinemabucket.blogspot.in/2012/03/achante-aanmakkal-new-malayalam-full.html


http://moviegalleri.net/wp-content/gallery/meghana-raj-hot-wet-in-jakkamma/meghana_raj_hot_wet_pics_stills_jakkamma_0050.jpg

பில்லா - 2 ( Billa 2 - All song teasers ) பாடல்கள் வீடியோ

a
அஜித்தின் பில்லா பார்ட் 2 படம் இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. அஜித் நடித்த பில்லா படம், கடந்த 2007ல் ரிலீசானது. இதில் நயன்தாரா, நமீதா ஆகியோர் அஜித் ஜோடியாக நடித்ததுடன், போட்டி போட்டு ரசிகர்களுக்கு கவர்ச்சி விருந்து படைத்தனர். டைரக்டர் விஷ்ணுவர்த்தன் இயக்கினார். இப்படம் பழைய பில்லா படத்தின் ரீமேக் ஆகும். இதன் இரண்டாம் பாகத்தை பில்லா 2 என்ற பெயரில் படமாக்க அஜித் விரும்பினார். அதன்படி இயக்குனர் சக்ரிடோலட்டி இதற்கான கதையை உருவாக்கினார். இவர் கமலஹாசன் நடித்த உன்னைப்போல் ஒருவன் என்ற படத்தை இயக்கியவர்.
http://www.ithayakkani.com/OpenFile?r1=speeches&r2=/doc_Apr_13_2012_9_12_26_AM1.jpg

தூத்துக்குடி கடற்கரையோரம் பிறந்து வளர்ந்து ஒருவன் சர்வதேச கடத்தல் தாதா ஆவதுபோல் கதை உருவாக்கப்பட்டு உள்ளது. இதன் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக விறுவிறுப்பாக நடந்தது. தற்‌போது கடைசி கட்ட படப்பிடிப்பு ஜார்ஜியாவில் நடந்து முடிந்துள்ளது. மொத்தம் 93 நாட்கள் படப்பிடிப்பு நடந்துள்ளது. அடுத்து பாடல் மற்றும் டிரைலர் வெளியிட ஏற்பாடுகள் நடக்கின்றன. இறுதிகட்டத்தில் இருக்கும் பணிகளை முடித்ததும், ஓரிரு மாதங்களில் படம் ரிலீசாக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

 http://www.filmics.com/tamil/images/stories/news/2012/February/18-02-12/ajith-in-billa2-new-stills.jpg

டிஸ்கி  -தமழ் திரட்டியில் தொடர்ந்து இணைந்து வரும் பதிவர்களுக்கு நன்றி. தொடர்ந்து http://www.hotlinksin.com

 இணையதளத்தில் நீங்கள் பதிவுகளை இணைத்து வந்தால் விரைவில் உங்கள் பிளாக்கின் அலெக்ஸா ரேங்க் மதிப்பு நிச்சயம் உயரும். எனவே பதிவு எழுதியதும் முதல் வேலையாக பதிவுகளை http://www.hotlinksin.com
 திரட்டியில் இணைத்து விடுங்கள்.


 http://cinema.natpu.in/wp-content/uploads/2012/03/Parvathi-Omanakuttan-Attukal-Temple-Pongala-5.jpg

நித்யானந்தா - மதுரை -ஆதீனம் - ரஞ்சிதா - கிடாவெட்டு

:"http://www.onlinesrilanka.com/plog-content/thumbs/events/ranjitha-and-nithyananda-press-meet/large/2595-ranjitha130711_9.jpg"நடிகை ரஞ்சிதாவுடன் நான் ஆன்மிக பயிற்சி செய்ததாக ஒருபோதும் கூறியது கிடையாது. எல்லாமே பொய். என்னை அழிக்க நினைத்தனர். ஆசிரமத்தை சேதப்படுத்தினர். ஆசிரமத்திற்குள் வருவதும், போவதும் அவரவர் விருப்பம். அதேபோல், ரஞ்சிதா வந்து செல்கிறார்,'' என மதுரையில் சாமியார் நித்யானந்தா கூறினார்.


 சி.பி - சும்மா ரீல் உடாதீங்க.. ரஞ்சிதா ஆசிரமத்துக்கு வந்தாரு, ஓக்கே, எப்போ போனாரு? ஹி ஹி , அவருக்கு குடி இருக்கும் கோயிலே உங்க ஆசிரமம் தானே?

மதுரை ஆதீனத்தின் 293 வது மடாதிபதியாக முடிசூட்டிய பின், முதன்முறையாக நேற்று மடத்திற்கு வந்த சாமியார் நித்யானந்தா, ஆதீனத்திற்கு தங்க கிரீடம் அணிவித்தார். நித்யானந்தாவுக்கும் அணிவிக்கப்பட்டது.


சி.பி - அந்த தங்க கிரீடத்தை மார்வாடில வெச்சு உருக்கி ஒட்டியானமா மாத்தி ரஞ்சிதாவுக்கு தரப்போறாராம்.. கிசு கிசு



மதுரை ஆதீன மடத்துக்குச் சொந்தமான நான்கு கோவில்களுக்கு இந்தாண்டுக்குள் கும்பாபிஷேகம் நடத்தப்படும்.


சி.பி - அதுக்கு தை (THIGH) ஸ்பெஷலிஸ்ட்  நடிகை ரம்பாவை வரச்சொல்லிட்டா எதுகை மோனையா ரம்பாபிஷேகம் இன் கோயில் கும்பாபிஷேகம்னு நியூஸ் டைட்டில் வைக்கலாம். 


.:மடத்தில் 24 மணி நேரமும் அன்னதானம் வழங்கப்படும். ஆதீனத்தின் ஆன்மிகப் பணிக்காக, 1 கோடி ரூபாய் கொடுத்தேன். இன்னும் 4 கோடி ரூபாய் கொடுப்பேன்.
சி.பி - ஆதீனம் பதவி எனக்கு, ரஞ்சிதா உனக்கு அப்டினு ஏதாவது டீலிங்கா? 
 
மே 5ல், திருவண்ணாமலையில் ஆதீனத்திற்கு தங்க சிம்மாசனம், தங்க பாதுகை வழங்கப்படும். ஜூன் 5ல் கனகாபிஷேகம் செய்யப்படும். நானும், எனது சீடர்களும் மற்றும் அசையும், அசையா சொத்துகளும் ஆதீனத்துக்கு கட்டுப்பட்டு நடப்போம்.



சி.பி - அசையும் சொத்துகளை வளைச்சுப்போடறதுல நித்யா கில்லாடி ஆச்சே?


என்னை நியமிக்க முதலில் ஆதீனம் தான் விருப்பம் தெரிவித்தார். "என் மீது வதந்திகளை பரப்பி, சர்ச்சை ஏற்பட்ட நிலையில், அது உங்களுக்கு(ஆதீனம்) பிரச்னையை ஏற்படுத்துமே' என கேட்டேன். அதற்கு அவர், "உங்களை கண்டு உணர்ந்த பின், பீடாதிபதியாக்கா விட்டால், அது வரலாற்று பிழையாகி விடும். எது வந்தாலும் அதை எதிர்கொள்வோம்' என்றார்.


 சி.பி - இப்போ நடந்தது வரலாற்றுப்பிழை இல்லைய்யா.. அழிக்க முடியாத அவமானம்..


"சிடி' விவகாரத்தில், எல்லாமே பொய். என்னை அழிக்க நினைத்தனர். ஆசிரமத்தை சேதப்படுத்தினர். நடிகை ரஞ்சிதாவுடன் நான் ஆன்மிக பயிற்சி செய்ததாக ஒருபோதும் கூறியது கிடையாது. ஆசிரமத்திற்குள் வருவதும், போவதும் அவரவர் விருப்பம். அதேபோல் ரஞ்சிதாவும் வந்து செல்கிறார்.



சி.பி - அது ஆன்மீகப்பயிற்சி அல்ல.. கட்டிப்பிடி வைத்தியம் வித் எ குட்டி 

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj9SXt91vhfqaTbOBgoQot4EYGM42tUIS7iGadDMdT6GROBJrBx_-w7lTf69NWPy6GNFa6ityU2cOwWiAsICN0v-M1CHRgUhXHjEeuIpDdN_XEQVtizSy6ZCPqnM5BBDgguwuO5lU28vqw/s1600/Actress+Ranjitha+Latest+Press+Meet+Photos+%25288%2529.jpg

ரஞ்சிதா வரவில்லை: விரைவில், 100 கிராமங்களில், பள்ளி, கல்லூரிகள் கட்டுவது குறித்து ஜூன் 5ல் அறிவிப்பேன். ஆதீன மடத்தை நிர்வகிக்க 50 ஆண், பெண் சீடர்களை அனுப்பி உள்ளேன், என்றார். நேற்று, மதுரை ஆதீன மடத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு நடிகை ரஞ்சிதா வரவில்லை என நித்தியானந்தா சீடர்கள் தெரிவித்தனர்.


சி.பி - 50 ஜோடிங்க நிர்வாகம் பண்ண வரப்போறாங்களா? ஐ ஜாலி. மதுரை போனா ஓ சி ல சீன் பார்க்கலாம்..?

ஆதீன உத்தரவுப்படி...:"ஆதீனம் போன்று நீங்களும் அரசியல் ஈடுபாட்டுடன் இருப்பீர்களா? பெங்களூருவில் வசிக்கும் நீங்கள், மதுரை ஆதீன மடத்திற்கு அடிக்கடி வருவீர்களா, இல்லை இங்கேயே தங்குவீர்களா? பெங்களூருவை போன்று "ஹீலிங்' பயிற்சி மடத்தில் நடத்தப்படுமா? என நிருபர்கள் அடுத்தடுத்து கேட்டதற்கு, "ஆதீனம் என்ன உத்தரவிடுகிறாரோ, அதன்படி நடப்பேன்' என்ற நித்யானந்தா, "லண்டனில் வெளிவரும் பத்திரிகை ஒன்று, பாப்புலரான 100 பேரில் என்னையும் தேர்ந்தெடுத்துள்ளது,' என்றார்.



சி.பி - ஆமா அந்த பாப்புலர்ல  பல டிக்கெட்டுங்க பேர் எல்லாம் பார்த்தேன்.. 

"நித்யானந்தா கிடைத்தது நாங்கள் செய்த புண்ணியம்':""நித்யானந்தா கிடைத்தது நாங்கள் செய்த புண்ணியம். எனக்கு இருந்த இளைப்பு நோயை குணப்படுத்தியவர் அவர்,'' என மதுரை ஆதீனம் கூறினார்.


சி.பி - அந்தாளுக்கே பல நோய் இருக்காம்..   அப்படியே உங்க நோயை அவர் குணப்படுத்தி இருந்தா  அவரை ஜி ஹெச் ல கவுரவங்கெட்ட டாக்டர் ஆகி இருக்கலாம்.. எதுக்கு மதுரை ஆதீனம் ஆக்கி இருக்கீங்க?

ஆபாச "சிடி' சர்ச்சையில் சிக்கிய சாமியார் நித்யானந்தாவை, மதுரை ஆதீனத்தின் 293வது மடாதிபதியாக ஏப்., 27ல் தற்போதைய ஆதீனம் அருணகிரி, பெங்களூருவில் முடிசூட்டினார். இந்நிகழ்ச்சிக்கு இந்து அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்தன. 


சி.பி - வெறும் கண்டனம் மட்டும் தானா? போராட்டம் எல்லாம் பண்ணலையா? ஆன்மீகம் தழைக்கனும்னா அந்தாளை ஊரை விட்டு ஒதுக்கனும்



இச்சூழலில், நேற்று நித்யானந்தாவுடன் மதுரை திரும்பிய ஆதீனம் கூறியதாவது :


சி.பி - அய்யய்யோ , அந்தாள் கூடவா ஒரே கூப்பேல வந்தீங்க.. ஆபத்தாச்சே? ஆண், பெண் பாகுபாடே பார்க்க மாட்டாரே/

ஞானம், புலமை, போர்க்குணம் உடைய நித்யானந்தா கிடைத்தது, நாங்கள் செய்த புண்ணியம். எனக்கு இருந்த இளைப்பு நோயை குணப்படுத்தியவர். நோய் இருந்தால் அவரை அணுகுங்கள்.நித்யானந்தாவை தேர்ந்தெடுத்ததற்கு, இந்து அமைப்புகள் எதிர்ப்புத் தெரிவிப்பது, அவர்களின் அறியாமை, பொறாமையைக் காட்டுகிறது. நித்யானந்தாவை தவறான கண்ணோட்டத்திலேயே பார்க்கின்றனர். அவர் மீதான குற்றச்சாட்டுகள் பொய்யானவை.


சி.பி - ஓஹோ, நீங்க தான் விளக்கு பிடிச்சு பார்த்தீங்களா?

http://moviegalleri.net/wp-content/gallery/ranjitha-press-meet/ranjitha_press_meet_178.jpg

யாரை நியமிக்கலாம் என எட்டு ஆண்டுகளாக தேடுதல் இருந்தது. பெங்களூருவில் நித்யானந்தாவை சந்தித்தபோது, அவரை நியமிக்கலாம் என உள்ளத்தில் உதித்தது. அங்கு அவருக்கு பக்தர்கள் அதிகம் என்பதால், அங்கேயே முடிசூட்டினேன்.ஒரு கோடி ரூபாய் நன்கொடை கொடுத்து இப்பதவியை அவர் பெறவில்லை. அத்தொகை கொடுத்தது குருவுக்கு செய்யும் பாதகாணிக்கை. மீனாட்சி அம்மன் கோவில் 1865க்கு முன், மதுரை ஆதீன கட்டுப்பாட்டில் இருந்தது. பின், அரசிடம் நிர்வாகம் ஒப்படைக்கப்பட்டது. மீண்டும் கோவிலை ஆதீனம் நிர்வாகத்திற்கே தரவேண்டும் என நித்யானந்தா கோரிக்கை விடுத்துள்ளார்.


சி.பி - ஒரு கேடி கொடுத்தாரே ஒரு கோடி.. அதற்குப்பின்னணியில் ஒரு லேடி

எனக்கு ஓராண்டாக போலீஸ் பாதுகாப்பு இல்லை. மீண்டும் கேட்டுள்ளேன். ஆதீன மடத்தில் ஓட்டல் கட்டியதில் எனக்கு உடன்பாடில்லை. காலி செய்ய கூறியுள்ளேன். அதேபோல், மதுரை ஜாரிபுதுக்கோட்டையில், மன்னர் கூன்பாண்டியன் வழங்கிய 1,250 ஏக்கரை அந்த ஓட்டல் நிர்வாகிக்கு குத்தகைக்கு வழங்கினேன். இரண்டையும் ஒப்படைக்காத பட்சத்தில், போலீசில் புகார் செய்வேன், என்றார்.

ஐகோர்ட் போனாலும் செல்லாது:""ஆதீன மடத்தின் விதிப்படி, ஓலைச்சுவடி மூலம் தானே தேர்வு செய்திருக்க வேண்டும்; ஆனால் யாரிடமும் ஆலோசிக்காமல் திடீரென்று நியமித்து விட்டீர்களே?'' என நிருபர்கள் கேட்டதற்கு, ""ஓலைச்சுவடியைப் பாருங்கள். அதில் நித்யானந்தா பெயர்தான் இருக்கும். இதை மற்ற ஆதீனங்கள் அங்கீகரித்துள்ளனர். இந்து சமயம் நலிவடையாமல் இருக்கவும், தூக்கி நிறுத்தவுமே அவரைத் தேர்ந்தெடுத்தேன். இதற்கு எதிராக ஐகோர்ட் போனாலும் அது செல்லாது,'' என்றார் ஆதீனம்.


சி.பி - தூக்கி நிறுத்தப்போறீங்களா? அவர் வந்தா எல்லாரையும் படுக்க வெச்சுடுவாரே?


http://www.cinemahour.com/gallery/cinenews/72674952ranjitha1.jpg
மதுரை ஆதீன மடத்துக்குள் இந்து அமைப்புகள் போராட்டம் :பெங்களூரில் இருந்து நேற்று மதுரை வந்த ஆதீனம், நித்யானந்தாவுக்கு தாரை, தப்பட்டை அடித்தும், பட்டாசுகள் வெடித்தும் வரவேற்பு கொடுக்கப்பட்டது. பின், பக்தர்கள் நடுரோட்டில் குத்தாட்டம் ஆட, இருவரும் ஊர்வலமாக மீனாட்சி அம்மன் கோவிலுக்கு புறப்பட்டனர். இதற்கு போலீஸ் அனுமதிக்காததால், சீடர்களுடன் கோவிலுக்கு சென்றனர்.


சி.பி - குத்தாட்டத்துக்கு  ரஞ்சிதா வர்லையா? ஏன்?  தன் செட்டப் தான் தனக்கு மட்டும் தான், சொந்தம் தான் அதை நான் விட்டுத்தர மாட்டேன்னு அண்ணன் பாடுனாரா?



சந்திக்க மறுப்பு:இதற்கிடையே, "நித்யானந்தாவை தேர்ந்தெடுத்தது ஏன்?' என ஆதீனத்திடம் கேட்க, இந்து மக்கள் கட்சி மாநில தலைவர் அர்ஜுன் சம்பத், உட்பட பலர், மடத்துக்கு வந்தனர்.அவர்களை சந்திக்க ஆதீனம் மறுத்ததால், மடத்தினுள் திருஞான சம்பந்தர் சன்னிதி முன், உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். "திருஞான சம்பந்தர் வாழ்க' என, அவர்கள் கோஷமிட, பதிலுக்கு நித்யானந்தா பக்தர்கள், "நித்யானந்தாவிற்கு ஜே' என கோஷமிட, பதட்டம் உருவானது. இருதரப்பும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். போலீசார் சமரசம் செய்தனர்.போரூர் திருப்பனந்தாள் ஆதீன பிரதிநிதி, சுரேஷ்பாபு மட்டும் மதுரை ஆதீனத்தை சந்திக்க அனுமதிக்கப்பட்டார்.

பின், அவர் கூறியதாவது:சூழ்நிலை கைதிபல்வேறு தடைகளை (நித்யானந்தா சீடர்கள்) தாண்டி, அவரை சந்தித்தேன். அவர் சூழ்நிலை கைதியாக உள்ளார்.நித்யானந்தாவை நியமித்தது குறித்து கேட்டதற்கு, "இதுகுறித்து யாரிடமும் பேச முடியாது. யாருக்கும் தகுதி கிடையாது' என்றார். எல்லா இந்து அமைப்புகளும் சேர்ந்து, மடத்தில் ஏற்பட்டுள்ள சூழலை மாற்ற வேண்டும்,'' என் றார்.பின், ஆதீனத்திற்கு எதிராக இந்து அமைப்பினர் கோஷமிட்டனர். பதிலுக்கு, நித்யானந்தா சீடர்கள் கோஷமிட்டதை தொடர்ந்து, இந்து அமைப்பினரை போலீசார் வெளியேற்றினர்.

பல வழக்குகள்:அர்ஜுன் சம்பத் கூறியதாவது :ஆதீன மடத்தில் நடந்த நிகழ்வு வேதனை அளிக்கிறது. அடுத்த வாரிசை, முன்கூட்டியே தேர்வு செய்து, பயிற்றுவித்து, சிவதீட்சை கொடுத்த பின் தான் நியமிப்பர். ஆனால், பல வழக்குகள் உடைய, சர்ச்சையில் சிக்கிய நித்யானந்தாவை திடீரென தேர்ந்தெடுத்தது ஏன்? முறையாக தேர்வு நடந்ததா என, ஆதீனம் விளக்க வேண்டும் என்றார். 

https://bharatabharati.files.wordpress.com/2012/04/nithy-embraced-by-female-disciple.jpg?w=468



1.  ஆசிரமத்தில் ரஞ்சிதாவை அனுமதிப்பது ஏன்?நித்யானந்தா விளக்கம் # இவரு பெரிய RTO , நேஷனல் பர்மிட் கொடுத்துட்டு, அதுக்கு விளக்கம் கொடுக்குது


-----------------------------


2.  மதுரை இனி மனோரஞ்சிதம் என அழைக்கப்படும் - மதுரை ஆதீனம் அதிரடி அறிவிப்பு! ஜெ திகைப்பு, கலைஞர் கெக்கலிப்பு!


------------------------------

3. மதுரை மீனாட்சி அம்மன்.. பார்த்து பத்திரமா இருக்கவும், கோயில் பிரகாரக்கதவை உட்புறமாக தாளிட்டுக்கொள்ளவும் ஹி ஹி # நித்தி தான் ஆதீனம்


--------------------------------

4. மதுரை வாழ் பெண்களுக்கு ஒரு அபாய அறிவிப்பு, நித்யானந்தா மதுரை ஆதீனம் ஆகி விட்டார், அவரவர் கற்பை பத்திரமாக பார்த்துகொள்க, தொலைந்தால் அரசு பொறுப்பல்ல


---------------------------


5.  சிவன் - ஹாய் , பார்வதி! ஏன் கோயிலுக்கு வெளியே நிக்கறே?


 மதுரை மீனாட்சி - உள்ளே நித்யானந்தா இருக்காரு


------------------------------

http://api.ning.com/files/hgYIDJnwI-qQaztTXOcd8ZR9jVoEFo8Ty-QuehU7cFfLVjuHLj484AsvdcSCnrP52IcjqyI9fY77uatr6Lgb9LuLVoD9WB*q/sannidhanam.jpg?width=600

6. எல்லா பெண்களூம் ரொம்ப சிரமத்துல இருக்காங்க.. 

 ஏன்? 

 குரு ஆசிரமத்துல இருக்காரே?


---------------------------------------

7. லேடி - குருவே! சித்தி அடைய  என்ன செய்யனும்? 


குரு - முதல் கட்டமா (COT டமா) நீ நித்தியை அடையனும்



--------------------------

8. முன்னாள் மதுரை ஆதீனத்துக்கு இளைப்பு நோய், அதை நித்தி சரி செஞ்சதால ஆதீனம் பதவி அளீக்கப்பட்டதுன்னா அது இந்து மதத்துக்கு ஈடு செய்ய முடியாத இழப்பு.. அப்புறம் ஆளாளூக்கு சித்த வைத்தியர்களையே ஆதீனமா போட ஆரம்பிச்சுட்டா?

-------------------------

9. "ஆதீனத்தின் ஆன்மிகப் பணிக்காக, 1 கோடி ரூபாய் கொடுத்தேன். இன்னும் 4 கோடி ரூபாய் கொடுப்பேன்".#இவரிடம் இந்த பணம் எப்படி வந்தது? சில நாட்களுக்கு முன்னர் தான் பத்திரிக்கையாளர் மத்தியில் "நான் சாமியார் என்னிடம் பணம் இல்லை" னு  சொன்னாரே?


--------------------------

10. ரஞ்சிதா இனி ரஞ்”சீதா” - மதுரை ஆதீனம் அறிவிப்பு # ஆ” தீனா”


-------------------------


11. மேடம், உங்களுக்கு வந்த வீசிங்க் ட்ரபுள் எப்படி சரி ஆச்சு?


  ரஞ்சிதா -எல்லாம் குருவின் ஆசி + “ கை” ராசி


------------------------------

12. கண்ணா! என் சேலைக்குள்ள கட்டெறும்பு புகுந்துடுச்சு # கண்ணே! ஆசிரமத்தில் சேலைக்கு என்ன வேலை?


------------------------------

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhy0h_dSmvYC7J_JyV9PrxFkC1FRKDpHE4uYCPJP3pTqBVkpvzQCElhpDP4MoqKu51Fr9kWQrWsV_CGiKLqwrVGeT7CeaWCqxA4l5yGSc_jbljhs_cf01hRrj1Rr-fcnDiuVmLrxVlJaRsk/a

டிஸ்கி  -தமழ் திரட்டியில் தொடர்ந்து இணைந்து வரும் பதிவர்களுக்கு நன்றி. தொடர்ந்து http://www.hotlinksin.com

 இணையதளத்தில் நீங்கள் பதிவுகளை இணைத்து வந்தால் விரைவில் உங்கள் பிளாக்கின் அலெக்ஸா ரேங்க் மதிப்பு நிச்சயம் உயரும். எனவே பதிவு எழுதியதும் முதல் வேலையாக பதிவுகளை http://www.hotlinksin.com
 திரட்டியில் இணைத்து விடுங்கள்.