Thursday, December 13, 2012

நீதானே என் பொன்வசந்தம்


 https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjmCJ11rLaPQLmxdUVDVOPwJsZf66pw3hVzsriU8om_UjwH3qMJcxRH5xsyt5fTXWd1ik-Pp7yWcsVKUvgxiT19NLlDYdqCnljM9pxjB-n09V7Ukfg-ccN7g1CjlwtaDvkfO6PvPM8GTdm-/s1600/Neethane-En-Ponvasantham-jeeva-samantha-gaiutham-menon.jpg


"இது காதலின் பொன்வசந்தம்!"

கி.கார்த்திகேயன்





1. இயக்குநர் கவுதம் வாசுதேவ் மேனன் பேட்டி 


'' 'நீதானே என் பொன்வசந்தம்’ ஷூட்டிங் முடிஞ் சிருச்சு... 'கதை கேட்டப்போ இவ்ளோ ஃபீல் பண்ணலை பிரதர். இப்போ யோசிச்சா என் வாழ்க்கையின் காதல் எபிசோடுல மறுபடியும் வாழ்ந்துட்டு வந்த ஃபீலிங்’னு சொன்னார் ஜீவா. எடிட்டிங் டேபிள்ல ஆண்டனி பார்த்துட்டு, 'ஜி... பழசுலாம் ஞாபகம் வருது... நாளைக்கு எடிட் வெச்சுக்கலாமா?’னு மெல்ட் ஆகிட்டார்.


 எடிட்டிங்ல பார்க்கும்போது எனக்கும் சட்டுனு பிளாங்க் ஆகிடுது. லவ் இஸ் ஃப்யூட்டிஃபுல்!' - காதலும் காதல் நிமித்தமுமாகப் பேசத் தொடங்குகிறார் கௌதம் வாசுதேவ் மேனன். கோடம்பாக்கத்தின் 'லவ் ஸ்பெஷல்’ இயக்குநர். 'அலைபாயுதே’, இளையராஜா, கமல், அகிரா குரோ சோவா, அஜித், சசிகுமார், ஆர்யா, சமந்தா என்றெல் லாம் நீண்ட உரையாடலில் தனது வாழ்வின் ரியல் காதல்பற்றிப் பேச்சு வந்தபோது ஒரு சஸ்பென்ஸ் வைத்தார் கௌதம். அது இறுதியில்...


 ''முதல் பார்வையிலேயே காதல், பிரிந்த காதலியைத் தேடிச் செல்லும் காதலன், தனக்குத்தானே குழம்பும் காதலி... இதெல்லாம் 'ழிணிறி’-யிலும் (நீதானே என் பொன்வசந்தம்) இருக்கும் தானே?'



''சந்தேகமே வேண்டாம். என் காதல் படங்களின் ஸ்ட்ரக்சர்ல பெருசா எந்த மாற்றமும் இருக்காது. ஆனா, மொமன்ட்ஸ்தான் விஷயம். சின்னச் சின்ன தருணங் களில்தான் காதல் ஒளிஞ்சிருக்கும். அந்தத் தருணங்களில்தான் நான் லைஃப் சேர்க்கிறேன். 'விடிவி’-ல த்ரிஷா ரொம்பக் குழம்புவாங்க. ஆனா, இதுல சமந்தா கேரக்டர் அப்படி இல்லை. ரொம்ப போல்டு. ரொம்ப க்ளியர். சும்மா லவ்வர் பின்னாடி வால் பிடிச்சுட்டே போறவ இல்லை.


 'சிந்து பைரவி’ சுஹாசினி, 'புதுமைப் பெண்’ ரேவதியோட ஒப்பிடாதீங்க. ஆனா, காதலிகளில் சமந்தா கேரக்டர், ஒரு புதுமைப் பெண். சாய்ந்து சாய்ந்து சமந்தா பார்க்கிறதே தனி அழகு... ஜீவா கண்ல எப்பவும் காதல் நதி ஓடிட்டே இருக்கும். க்ளைமாக்ஸ்ல சமந்தா கேரக்டர் எடுக்கும் முடிவு, அத்தனை வருஷப் பிரிவுக்கு அப்புறம் ஜீவாவும் சமந்தாவும் பேசிக்கிற விஷயங்கள்... சும்மா காலி ஆயிடுவீங்க!''



''உங்களுக்குப் பிடிச்ச உலக லவ் கிளாஸிக் படங்கள் என்னென்ன?''



''இதுக்கு நேரடியா 'எந்தெந்தப் படத்துல இருந்து சீன் பிடிக்கிறீங்க?’னு கேட்ர லாமே. உலக சினிமாக்களாப் பார்த்து கதை, சீன்லாம் உருவிப் படம் எடுக்கிறேன்னு என்னைப்பத்தி வெளியே ஒரு பேச்சு இருக்குன்னு எனக்கும் தெரியும். ஆனா, நல்லாக் கவனிச்சீங்கன்னா புரியும், 'அலைபாயுதே’ படத்துல வரும் 'எவனோ ஒருவன் வாசிக்கிறான்’ பாட்டுதான் என் காதல் படங்களின் இன்ஸ்பி ரேஷன்.



ரெண்டு பேருக்குள் காதல், சின்ன மோதல், பிரிவு, தேடிப் போறான் லவ்வர். ஹேப்பி அல்லது சோகமான எண்ட். காதல்ல அவ்ளோதான் என் டிராவல் இருக்கும். மணி சார் படங்களைவிடவா நமக்கு வேற காதல்படங்கள் வேணும்? 'மௌன ராகம்’ படத்தின் கார்த்திக் போர்ஷன், 'இதயத்தைத் திருடாதே’, 'அலைபாயுதே’, ராஜ்கபூர் நடிச்ச 'ஆவாரா’... இதெல்லாம்தான் எனக்குப் பிடிச்ச லவ் கிளாஸிக்ஸ்.



 மத்தபடி உலக சினிமாக்கள் பார்க்கிற பழக்கமே எனக்கு இல்லை. அகிரா குரோசோவாவின் ட்ரீட்மென்ட்பத்தி தெரியும். ஆனா, அவரோட 'ரோஷமான்’ உட்பட ஒரு படத்தைக்கூடப் பார்த்தது இல்லை. நான் உணர்ந்ததை, அனுபவிச்சதை வெவ்வேறு சம்பவங்கள் மூலமா சினிமா பண்றேன். 'எவனோ ஒருவன் வாசிக்கிறான்’ பாட்டு எனக்குள் உண்டாக்கின எமோஷனுக்கு இன்னும் தாராளமா பதினஞ்சு படங்கள் எடுப்பேன்!''



''உங்க இயக்கத்தில் நடிக்காத ஹீரோக்கள் பத்தி கமென்ட்ஸ் சொல்லுங்க?''



''அஜித்... அவருக்கு இருக்கிற மாஸ்... சான்ஸே இல்லை. அவருக்குக் கிடைக்கிற ஓப்பனிங் என்னைப் பிரமிப்படையவைக்கும். இத்தனைக்கும் அவரோட ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு ஏத்த ஒரு படம்கூட அவருக்குக் கிடைக்கலை. 'உதயம்’ல நாகார்ஜுனா சைக்கிள் செயினைப் பிச்சு இழுக்கிற மாதிரியோ, 'பாட்ஷா’ல தங்கச்சி மேல கைவெச்சதும் ரஜினி தண்ணி பம்ப்பை உடைச்சு அடிக்கிற மாதிரியோ ஒரு பவர்ஃபுல் சீன்கூட அஜித்துக்கு இன்னும் சிக்கலை.



விஜய்னா டான்ஸ்தான். ஒவ்வொரு பாட்டிலும் ஏதோ ஒரு ஸ்டெப்ல இழுத்துப் பிடிச்சுடுறார். அவரைவெச்சு முழுக்க முழுக்க ஒரு டான்ஸ் ஃபிலிமே பண்ணலாம். 'பாஸ்’ படத்துல ஆர்யா காமெடி பண்ணியிருந்தது ரொம்பப் பிடிச் சிருந்தது. ஹீரோயின்கள்ல அஞ்சலி அசரடிக்கிறாங்க!''




''அஜித், விஜய் பத்தி இவ்ளோ நல்ல ஒப்பீனியன் சொல்றீங்க... ஆனா, 'துப்பறியும் ஆனந்த்’ல அஜித், 'யோஹன்’ல விஜய்... உங்ககூட சேர்ந்து பண்ண வேண்டிய புராஜெக்ட்ல இருந்து ரெண்டு பேரும் விலகிட்டாங்களே... ஏன்?''



'' 'துப்பறியும் ஆனந்த்’ 1920-கள்ல நடக்கும் கதை. அதுக்கான ஸ்க்ரிப்ட் வேலைகளுக்கே கிட்டத்தட்ட ஒரு வருஷம் தேவைப்படும். இப்போ அதுக்கான நேரம் இல்லை. அதனால அஜித்துடன் படம் பண்ண முடியலை. சூர்யாவை வெச்சுப் பண்ணலாம்னு 2013 மார்ச்ல இருந்து அவர்கிட்ட டேட்ஸ் வாங்கி அட்வான்ஸும் கொடுத்துட்டேன்.



 ஆனா, 'துப்பறியும் ஆனந்த்’ ஸ்க்ரிப்ட் இல்லை. ஆக்ஷனும் காதலும் கலந்த ஒரு ஸ்க்ரிப்ட் அவருக்காகப் பண்ணிட்டு இருக் கேன். 'யோஹன்’ முழுக்க முழுக்க ஆக்ஷன் படம். 'எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு. ஆனா, ரொம்ப இங்கிலீஷ் டைப் படமா இருக்கு. இன்னும் நம்ம ஸ்டைல் சேர்த்து கொஞ்சம் தமிழாப் பண்ணலாம்’னு சொன்னார் விஜய். அதனால அந்தப் படம் பண்ண முடியலை. இப்போ அதே ஸ்க்ரிப்ட்ல மகேஷ்பாபுவை வெச்சு தெலுங்கு, தமிழ், இந்தினு மூணு மொழி யிலும் 'யோஹன்’ பண்றேன். இதைத் தவிர அஜித், விஜய்கூட படம் பண்ணாததுக்கு வேற எந்தக் காரணமும் இல்லை!''



''நீங்கள் இயக்க விரும்பும் ஹீரோ?''



''எனி டே, கமல்ஹாசன். மறுபடியும் மறுபடியும் எத்தனை தடவை வேணும்னாலும் அவர்கூடப் படம் பண்ணுவேன். அப்புறம் ரஜினி சார். அவரோட ஸ்டைல், என்னோட மேக்கிங்ல ஒரு படம் பண்ணணும்னு ரொம்ப ஆசை. ஷங்கர், கே.எஸ்.ரவிக்குமார்னு சீனியர் இயக்குநர்களை விட்டு அடுத்த செட் இயக்குநர்களுக்குப் படம் பண்ணலாம்னு அவர் வந்தா, முதல் சாய்ஸ் நானா இருக்கணும்னு ஆசைப்படுறேன்!''




''உங்களுக்கு அப்புறம் வந்த இயக்குநர்களில் யார்லாம் உங்களை இம்ப்ரெஸ் பண்ணியிருக்காங்க?''



''வெற்றி மாறன். ஆனா, எனக்கு 'ஆடுகளம்’ படத்தைவிட 'பொல்லாதவன்’தான் ரொம்பப் பிடிச்சது. வட சென்னை, பைக்னு படத்துல இருக்கிற சின்னச் சின்ன விஷயங்களைக்கூடப் பிரமாதமா பிரசென்ட் பண்ணியிருந்தார். 'சுப்ரமணியபுரம்’ சசிகுமார் ரொம்பப் பிடிச்சது. எந்த இயக்குநரும் முதல் படத்திலேயே அவ்வளவு ஷாக் கொடுக்கலை.



 ஆனா, இப்போ சசிகுமார் நடிக்கப்போயிட்டாரேனு வருத்தமா இருக்கு. ரொம்ப அழகா, ரசனையாக் கவர்ந்தார் 'எங்கே யும் எப்போதும்’ சரவணன். அவ்வளவு சீன், அவ்வளவு டீடெய்ல்ஸ் இருந்தும் தெளிவான படமா இருந்தது. ரொம்ப ராவா இருந்த 'ஆரண்ய காண்டம்’ நல்ல க்ரிப்பா இருந்தது. ஆனா, தியாகராஜன் குமாரராஜா அடுத்து படம் எதுவும் பண்ணலையா?''



''அஜித் நடிச்ச 'மங்காத்தா’வும் ஹிட். மாஸ் ஹீரோ இல்லாத 'எங்கேயும் எப்போதும்’ படமும் ஹிட். சினிமா, ஹீரோக்கள் கையிலா... இயக்குநர்கள் கையிலா?''



''எந்தப் படமா இருந்தாலும் 'கன்டென்ட்’தான் கிங். 'மங்காத்தா’ல அஜித்தான் ராஜா. 'எங்கேயும் எப்போதும்’ல திரைக்கதைதான் ராஜா. கன்டென்ட் இல்லாம என்ன ஷோ பண்ணாலும், வேலைக்கு ஆகாது!''



''ஒவ்வொரு படத்திலும் உங்கள் ரியல் காதலைத்தான் வேறவேற வெர்ஷன்ல சொல்றீங்க... அந்தக் காதலைப் பத்திக் கொஞ்சம் பேசலாமே?''



''ம்ம்ம்... இப்போ பேசினா பிரச்னை ஆகிருமே! 'விடிவி’ க்ளைமாக்ஸ்ல 'என் நம்பர் எப்படிக் கிடைச்சது?’னு த்ரிஷா கேட்கிறப்போ, 'என் அடுத்த படத்தில் சொல்றேன்’னு சிம்பு சொல்வார். அப்படி இந்தக் கேள்விக்கான பதிலையும் அடுத்த பேட்டியில சொல்லட்டுமா?''




நன்றி - விகடன்




2. ஹீரோயின் சமந்தா ஓபன்டாக் பேட்டி

கௌதம்மேனன்... க்யூட் கிரியேட்டர்!

அரவிந்தன்

சான்ஸே இல்ல... செம க்யூட்டாகிவிட்ட சமந்தாவின் முன்பு, ‘நீதானே என் பொன்வசந்தம்என்று முழந்தாழிட்டு ப்ரஃபோஸ் பண்ணத் தோன்றுகிறது. அவ்ளோ அழகு. நமது கேள்விகளுக்கு சமந்தாவைவிட அவரது கண்களே அதிகம் பதில் சொல்கின்றன!


நீதானே என் பொன்வசந்தம்?


நான் நடிச்ச படங்களிலே ப்ரிலியன்ட் படம்னா அதுநீதானே என் பொன் வசந்தம்தான். யதார்த்தமான காதலும், கதையும் கைகோத்திருக்கிற படம் இது. ‘விண்ணைத்தாண்டி வருவாயாஜெஸ்ஸி கேரக்டர் இளைஞர் மத்தியில் எனக்கு க்ரேஸ்ஃபுல் இடத்தைப் பெற்றுத் தந்தது எனில், ‘நீதானே என் பொன்வசந்தம்அதை இன்னும் ஸ்ட்ரங்காகச் செய்யும். எனக்கு தமிழில் முதல் இரண்டு படங்கள் சரியா போகலை. அதையும் தாண்டி ரீ-என்ட்ரிக்கு எனக்குநீதானே என் பொன்வசந்தம்கைகொடுக்கும்!"


என்ன கதை?


ஒரு மனுஷனுடைய வாழ்க்கையில நாலு ஸ்டேஜ்ல நடக்கிற முக்கியமான ஹைலைட்ஸ்தான் கதை. படம் வரட்டும். பார்க்கறவங்க ஒவ்வொருவரும் தம் வாழ்க்கையைத் திரும்பிப் பார்ப்பாங்க! கௌதம்மேனனை சந்தோஷமாய் சபிக்கப் போறாங்க."
ஜீவா?

யூத் ஹீரோக்களில் பளிச்சுன்னு முன்னேற்றம் காட்டுபவர் ஜீவா. எந்தப் பாத்திரங்களில் இருந்தாலும் அதன் வடிவத்துக்கு மாறிடும் தண்ணீர் போல ஜீவா பாத்திரத்துக்கு ஏற்ப தம்மைத் தகவமைச்சுக்கிறார். கௌதம்மேனன் படங்களில் ஹீரோ - ஹீரோயின் ஆன் ஸ்க்ரீன் கெமிஸ்ட்ரி அள்ளிக்கத் தோணும். அதுநீதானே என் பொன்வசந்தம்படத்திலும் உண்டு. வாய்ப்புக் கிடைத்தால் மீண்டும் ஜீவாவோடு நடிக்கத் தயார்!"
இளையராஜா மியூஸிக்?



நான் அவரோட ரசிகையாவே மாறிட்டேன். ஒவ்வொரு ட்யூனும் ஹாட் வார்மிங். யூத்களின் ஆழ்மனசைத் தொடுகிற ட்யூன். ‘சற்றுமுன்பாடல் தூக்கத்துல எனக்குள்ள சுத்திக்கிட்டே இருக்கு. எண்பதுகளில் இளையராஜா சாங்ஸைக் கேட்பதுபோல இருக்கு. பாடல்கள் ஷூட் பண்ணும்போது ஸ்க்ரிப்ட்டோடு என்னை அறியாமல் ஜெல் ஆயிட்டேன்! ரொம்ப நாளைக்குப் பிறகு படத்துல பக்கவா ஒரு க்ளைமாக்ஸ் பாட்டு வந்திருக்கு!"


முன்பைவிட க்யூட் ஆயிட்டீங்களே?

காரணம், கௌதம்மேனன். இவர், கேரக்டருக்கு ஏத்த மாதிரி நடிகர்களை மோல்ட் பண்ண மாட்டார். ஆர்ட்டிஸ்ட்டுக்குள்ள இருக்கிற பர்ஸனாலிட்டியை உண்மையா வெளியே கொண்டு வர்றதுக்கு முயற்சி பண்ணுவார். என் விஷயத்துலயும் அதுதான் நடந்தது. அதான் உங்கள் கண்களுக்கு நான் முன்பைவிட க்யூட்டா தெரியறேன்! கௌதம்மேனன் ஒரு க்யூட் கிரியேட்டர். அவர் செதுக்கும் கேரக்டரும் அவருக்குள்ள இருக்கற ரைட்டரும் அவர் உருவாக்கும் கேரக்டர்மேல ஒருவித ஈடுபாட்டை உண்டு பண்ணிவிடும். ‘நீங்க க்யூட் ஆயிட்டீங்கன்னு என்னைப் பார்த்து நீங்க சொன்னதுகூட கௌதம்மேனன் செய்த மேஜிக்தான்!"



கௌதம்மேனன் புகழ் அதிகமாகப் பாடறீங்களா?
பாஸ்... இது ரொம்ப கம்மி. கௌதம்மேனனுக்கு நான் வெச்சுருக்கற பேர் யூத் என்சைக்ளோபீடியா. யூத்களின் லாங்வேஜ்லேர்ந்து அவங்களோட லேட்டஸ்ட் ஸ்டைல் வரைக்கும் அத்தனை அப்டேட்டா இருப்பார். எனக்கு ஆச்சர்யமாய் இருக்கும். ஸ்பாட்ல கௌதம்மேனன் ஸ்கிரிப்ட்டை இம்ப்ரூவ் பண்ணும்போது ஒரு மேஜிக் பாக்கறது போல ஜிவ்வுன்னு இருக்கும் தெரியுமா? இவரோட படங்கள்ல நடிக்கும் போது நடிக்கறது போலவே இருக்காது. வாழறதுபோல இருக்கும். அதான் கௌதம் மேனன் ஸ்பெஷல்!"


சமர்த்தாகப் பேசுகிறார் சமந்தா!


 நன்றி - கல்கி  




நீதானே என் பொன்வசந்தம்


இசை: இளையராஜா  பாடல்கள்: நா.முத்துக்குமார்


வெளியீடு: சோனி மியூஸிக் விலை; 99



ளையராஜா - கௌதம் வாசுதேவ் மேனன் - நா.முத்துக்குமார்... பிரமாண்ட எதிர்பார்ப்புக் கிளப்பியிருக்கும்  ஆல்பம். 'வழக்கமான தொனி இருக்கக் கூடாது... இன்றைய தலைமுறை ரசிகர்களையும் கவர வேண்டும்.’ இந்த இரண்டு நிர்பந்தங்களையும் கவனமாகக் கடந்திருக்கிறார்  இளையராஜா.



'சாய்ந்து சாய்ந்து...’ பாடல்... மிக ரசனையான கம்போசிஷன். கிடாரின் முதல் மீட்டலிலேயே இரவின் ரம்மியத்துக்கு நம்மைக் கடத்தும் இசை, 'என் தந்தை, தோழன் ஒன்றான ஆணை நான் கண்டுகொண்டேன்...’ ரம்யாவின் குரலில் காதல் வருடல். 80-களின் 'ராஜா’ சாயலோடு மனதை வருடிச் செல்கிறது 'காற்றைக் கொஞ்சம் நிற்கச் சொன்னேன்...’ பாடல். அட... காதல் குறித்த வன்உணர்வுகளைக் காதலி குமுறுகிறாள் 'முதல் முறை...’ பாடலில். சுனிதி சௌஹான் குரலில் கோபம், ஆதங்கம், வெறுப்பு அனைத்து உணர்வுகளும் காதல் கலந்து எட்டிப் பார்க்கிறது.



'வானம் மெள்ளக் கீழிறங்கி வந்தாடுதே...’ பாடலில் இளையராஜா, பெலா சென்டே குரல்களில் குதூகல உற்சாகம். இரு வித்தியாச டோன்களில் ஏகத்துக்கும் எனர்ஜி ஏற்றுகிறது 'புடிக்கல மாமு...’ பாடல்.



முதல் நொடியிலேயே பிடித்துவிடுகிறது 'என்னோடு வா வா...’ பாடல். ஆல்பத்தின் மெஸ்மரைஸிங் மெலடி. இடையிடையே ஹைபிட்ச் உற்சாகம்கொள்ளும் இசை, பிறகு மென்மையாகக் காது மடல் வருடுகிறது. 'காதலுக்கு இலக்கணமே... தன்னால் வரும் சின்னச் சின்ன தலைக்கனமே!’ குறும்பு வரிகளில் மெலடிக்கு அழகு சேர்க்கிறார் நா.முத்துக்குமார்.



மிகக் குறைந்த அளவு வாத்தியங் களைக்கொண்ட பாடல். ஆனால், அந்தத் தொனியே இல்லாமல் ராக் பேண்ட் பாடல்போல அதிரடிக்கிறது 'பெண்கள் என்றால் பொய்யா பொய்தானா...’ பாடல். 'சற்று முன்பு’ பாடலில் 'ஏங்கி ஏங்கி நான் கேட்பது உன்னைத்தானடா... தூங்கிப் போனதாய் நடிப்பது இன்னும் ஏனடா?’ என ரம்யாவின் குரலில் ஒரு காதலியின் துயரம்... அவ்வளவு அழுத்தம்.



இந்தத் தலைமுறை ரசிகர்களுக்கான ராஜா ஆல்பம்.


Rate this article 

 நன்றி - சினிமா விகடன் 




3. ஹீரோயின் சம்ந்தா பேட்டி  

மிழ், தெலுங்கில் 'மோஸ்ட் வான்டட் நடிகை’... சருமப் பாதிப்பு, வெயிலில் முகம் காட்டக் கூடாது, மணிரத் னத்தின் 'கடல்,’ ஷங்கரின் 'ஐ’ படங்களில் இருந்து காரணம் சொல்லாமல் விலகினார்... என இந்த அழகுப் பெண்ணைச் சுற்றி ஏகப்பட்ட சர்ச்சைகள். ஆனால், சந்தித்தால் செம சமத்தாகப் பேசுகிறார் சமந்தா!
 




சமந்தாவுக்கு என்ன ஆச்சு?'' 

 
''ஹைய்யோ, பெருசா எதுவும் இல்லை. இம்யூனிட்டி (நோய் எதிர்ப்புச் சக்தி) குறைஞ்சிடுச்சு. ரெண்டு மாசம் பெட் ரெஸ்ட். கொஞ்சம் முகம் டல் ஆகிருச்சு. அதான் 'கடல்’, 'ஐ’ படங்களில் நடிக்க முடியாமப்போச்சு. மிஸ் பண்ணிட்டோம்னு மனசுக்குள்ள ஃபீலிங்ஸ்தான். ஆனா, இப்போ அதுக்கெல்லாம் சேர்த்துவெச்சு, தமிழ், தெலுங்குனு நாலு மாசத்துல நாலு படங்கள் அடுத்தடுத்து ரிலீஸ் ஆகப்போகுது. தமிழ்ல அடுத்து லிங்குசாமி டைரக்ஷன்ல சூர்யாவுடன் நடிக்கிறேன். நிச்சயம் என் கேரியர் சூப்பரா இருக்கும்!''


'' 'நீதானே என் பொன்வசந்தம்’ டிரெய்லர் க்யூட். ஆனா, 'வி.டி.வி.’ ஜெஸ்ஸியை 'என்.இ.பி.’ நித்யா பீட் பண்ண முடியுமா?'' 



''நிச்சயமா! ஜெஸ்ஸியை விட நித்யாவுக்கு பெரிய கேன்வாஸ் கொடுத்திருக்கார் கௌதம் சார். சொல்லப்போனா, 'வி.டி.வி’-யைவிட 'என்.இ.பி.’ உங்க மனசுக்கு இன்னும் நெருக்கமா இருக்கும். படத்தின் ஏதோ ஒரு அஞ்சு நிமிஷம் உங்க வாழ்க்கையில நடந்திருக்கும். எனக்கும் என் மேக்கப் அசிஸ்டென்ட், காஸ்ட்யூமர்னு என் கூட இருந்தவங்களுக்கும் அந்த ஃபீல் கிடைச்சது!''



''இப்படி ஒரு முழு ரொமான்டிக் சப்ஜெக்ட்ல ஜீவா நடிக்கிறது புதுசு. அவரை நீங்க ஈஸியா ஓவர்டேக் பண்ணியிருப்பீங்களே?'' 



''அட போங்க பாஸ்... ஜீவா கூட ரொமான்ஸ் படம் பண்றது கஷ்டம். எமோஷன், சென்டிமென்ட் சீனுக்கு முன்னாடி நான் மூணு நாலு மணி நேரம் பயங்கரமா ஹோம் வொர்க் பண்ணிட்டு கேமரா முன்னாடி நிப்பேன். ஆனா, டைரக்டர் ஆக்ஷன் சொல்றதுக்குள்ள சின்னதாக் கண்ணடிச்சு மொத்த மூடையும் மாத்தி சிரிக்கவெச்சிடுவார் ஜீவா. அதே நேரம், அவர் மட்டும் நல்ல பிள்ளையா கண்ணு முழுக்கக் காதலோட பார்த்துட்டு நிப்பாரு. ஸ்வீட் ராஸ்கல். அவர்கூட காமெடிப் படம் பண்றதுன்னா புகுந்து விளையாடலாம்!''




''சமந்தாவோட க்ளோஸ் ஃப்ரெண்ட்ஸ் யாரு?'' 



''காஜல் அகர்வால். 'பிருந்தாவனம்’ தெலுங்குப் படத்தில் சேர்ந்து நடிச்சப்போ, ரொம்ப க்ளோஸ் ஆகிட்டோம். அவ எனக்கு காஜ். நான் அவளுக்கு சாம். ரெண்டு பேரும் அரட்டை அடிக்க ஆரம்பிச்சா, நேரம் போறதே தெரியாது. ஆனா, அப்போ சினிமா பத்திப் பேசவே மாட்டோம்!''


''சமந்தா செய்கிற நல்ல விஷயம்?'' 



''எதுக்கும் ஃபீல் பண்ணாம நம்மால முடிஞ்சதைப் பண்ணணும்னு நினைப்பேன். 'பிரதியுஷா’னு ஒரு ஃபவுண்டேஷன் ஆரம்பிச்சிருக்கேன். ஹீமோபிலியா, தாலசீமியா நோயால் பாதிக்கப்பட்ட அறுநூறு குழந்தைகளைக் கவனிச்சுக்கிறேன்.''


''சமந்தாவுக்குப் பிடிச்ச நடிகை?'' 


''அப்ப கஜோல். இப்ப அஞ்சலி. எனக்கு கஜோல் மாதிரி இருக்கணும்னு ஆசை. செமத்தியா நடிச்சாங்க. சரியான டைமிங்ல சினிமாவை விட்டுட்டு குடும்பத்துல செட்டில் ஆனாங்க. அந்த சிம்ப்ளிசிட்டி... சிம்ப்ளி சூப்பர். 'தமிழ் எம்.ஏ’, 'அங்காடித் தெரு’, 'எங்கேயும் எப்போதும்’ படங்கள்ல அஞ்சலியை ரொம்பப் பிடிச்சது. ரொம்ப ஷார்ப். ரொம்ப திறமையான நடிகை. அஞ்சலியோட ரசிகை நான்!''



''சமந்தாவின் நேர்மைக்கு ஒரு சின்ன டெஸ்ட்... உங்களுக்குக் காதல் பூத்த தருணம் எது?'' 



''உண்மையைச் சொல்லியே ஆகணுமா? ம்ம்... எட்டாவது படிக்கிறப்போ ரெண்டு, மூணு பேர் மேல லவ் வந்துச்சு. பப்பி லவ். அப்புறம்... ஹலோ... நான் ஒரு பொண்ணுங்க... எல்லாத்தையும் உங்ககிட்ட ஓப்பனா சொல்ல முடியுமா? கௌம்புங்க... கௌம்புங்க!''

நன்றி - விகடன்

0 comments: