Wednesday, December 05, 2012

ஜெ-வுக்கு வைக்கப்பட்ட ஐ க்யூ டெஸ்ட்


இனிய காலை வணக்கம் நண்பர்களே....
1.மழைகாலத்தில் ‘மின்சாரம்’ தாக்காமல் இருக்க என்ன செய்யனும்: ஈபி அட்வைஸ்! # மின்சாரமா? வழக்கொழிந்த வார்த்தை ஆச்சே? 




----------------------


2. அன்பே! இமயமலைக்கே பூட்டு போட்டாலும் உன் வாய்க்கு மட்டும் பூட்டு போட முடிவதில்லையே ,அடடே!! 



------------------------


3. டொக்கு பிகர் - ஐ மிஸ் சென்னை . 


சக்க பிகர் - அப்போ நான் யாரு?


  சென்னையை மிஸ் பண்றேன்னு சொல்ல வந்தேன் 



-----------------------


4. வங்கத்தில் புயல் சின்னம்.உன் அங்கத்தில் மையல் சின்னம்.நம் ஊடல்கள் சின்னாபின்னம் 



-----------------



5. பிரியாணியில் நான் தான் ஹீரோ: பிரேம்ஜி # ஹீரோயின் பிரியாமணியா ? 



----------------

சென்னிமலை அருள் மிகு காமாட்சி அம்மன்



6. ஹாலிவுட் ஜட்ஜ் - பாலத்தையே திருடிட்டியே? 


கைதி - ஆத்தையே திருடி இருப்பேன்.ஆத்துல இடம் இல்லை 



------------------


7.  நம்மை  பயமுறுத்தும்  பஞ்ச பூதங்கள் 

1சம்சாரம் 

2 டேமேஜர்


3.  மாமியார் 


4 மின்வெட்டு


 5 , நமீதாவின் உப்பி வரும் உடல் கட்டு 



------------------------


8. நம் உள்ளங்கைகள் ஒன்றுபட்டபோது உலகையே வென்றுவிட்டது போல மிதப்பு வந்தது 



------------------------


9. டீ குடிச்சுட்டு தெம்பா வந்தா அதுதான் டீ ஆக்டிவேஷனா? 



----------------------


10. மழை பெய்த பொழுதுகளில் ஆண்கள் குனிந்த தலை நிமிராமல் நடந்தால் எதிர் வரும் பெண்களின் கெண்டைக்கால்களை திருட்டுத்தனமாக ரசிக்கிறான்னு அர்த்தம் 



-------------------------



நீல வானம்.ஒற்றைப்பனை மரம் @ சென்னிமலை



11.  மழை பெய்த காலைப்பொழுதுகளில் இல்லத்தரசிகளின் சிற்றுண்டி உப்புமாவாகத்தான் இருக்கும்



---------------------


12. சாலையில் நடந்து செல்லும் பெண்கள் - சூர்யக்கதிர்களால் தொட முடியாத இடங்களையும் மழைத்துளிகள் தொட்டு விடுகிண்றன 



--------------------


13. வாரம் ஒரு முறைதான் தலைக்கு குளிப்பேன் என்ற மனிதனின் வைராக்யத்தை மழை தவிடு பொடி ஆக்கிவிடுகிறது 



-------------------------


14. மழை பெய்தால் வீட்டுக்கூரை வழி ஒழுகும் இடங்கள் பார்த்து பாத்திரங்கள் வைப்பதற்கே நேரம் சரியாக இருக்கும் குடிசை வாசிகளுக்கு 




---------------------------


15. முழுகும் என்பது முன் கூட்டியே தெரிந்தும் மெனக்கெட்டு அப்பாவிடம் கேட்டு காகிதக்கப்பல்கள் விட தவறுவதில்லை மழலைகள் 




---------------------------



நேற்று, தூத்துக்குடியில் நடைபெற்ற வெள்ளிவிழா நிறைவு நாள் நிகழ்ச்சியில், 10,00,000 சங்குகளால் செய்யப்பட்ட தேசியகொடி. இது கின்னஸ் சாதனைக்கான் முயற்சி.


16. மழையை சாக்காக வைத்து காதலர்கள் குடைக்குள்ளும் ,தம்பதிகள் வீட்டுக்குள்ளும் நெருக்கம் காட்டுவது கிளுகிளுப்பு 




--------------------------


17. மனிதர்கள் செய்யும் பாவங்களை எத்தனை மழை பெய்தும் இயற்கை அன்னையால் கழுவி விட முடிவதில்லை 



----------------------


18. மழைப்புரட்சி தொடர்வதால் நடைப்பயிற்சிக்கு சனிப்பெயர்ச்சி 



----------------------



19. மனைவி சொல்லே மந்திரம் என நாம் எண்ணுவதாய் நம்ப வைப்பதே ஆண்களின் தந்திரம் 




---------------


20. இந்தியாவின் அடுத்த பிரதமர் ராகுல் ,துணை பிரதமர் நமீதா # முன்னேற்றப்பாதையில் பாரத மாதா 




-----------------------------


நேற்று, தூத்துக்குடியில் நடைபெற்ற வெள்ளிவிழா நிறைவு நாள் நிகழ்ச்சியில்,வெட்டப்பட்ட பிரமாண்டமான கேக். இந்த விழாவின் ஹைலைட் 10,000 மரக்கன்றுகள் நடும் திட்டத்தின் துவக்கவிழாதான்.



21. காங்கிரசில் நமீதா # டேய் கையை வெச்சுக்கிட்டு சும்மா இருடா டோய்@ கொள்கை முழக்கப்பாடல்




------------------------------



22.  10 வருடங்களாக உன் கூந்தலில் இருந்து முடியே உதிராத போது கவரி மான் பரம்பரை என நினைத்தேன். சவுரி மான் போல




----------------------


23. உண்டியல்ல போட்டதை திருப்பிக் கேட்க மாட்டேன் - நித்தி # கேட்டாலும் கிடைக்காது.ஒன் வே மாதிரி - ரஞ்சிதா 




------------------


24. 2014-ம் ஆண்டுக்குள் 60 கோடி பேருக்கு ஆதார் அட்டைகள் வழங்கப்படும்: மன்மோகன்சிங்# அதுக்குள்ளே 10 கோடி ஏறிடும் .மின் வெட்டு வேற 





--------------


25. மின் பற்றாக்குறைப் பற்றி எனக்கு தெரியவே தெரியாது-ஜெ! # மேடம் .இப்போ ஐ க்யூ டெஸ்ட்.தமிழ்நாட்டின் சி எம் யாரு? 



-------------------------------



கொலு 2 @ ஈரோடு டீச்சர்ஸ் காலனி

26. நான் வீடு ,ஆபீஸ் என்று குறுகிய வட்டத்தில் இருந்ததால் மின் வெட்டு பாதிப்பு பற்றி தெரியாமல் போய் விட்டது -ஜெ 



----------------------


27. பூரண மது விலக்கு கொணடு வருவதா சொல்லிட்டு செலக்டிவ் அம்னீஷியா காரணமாக பூரண மின் வெட்டு கொண்டு வந்த புரட்சித்தலைவி பூரண குணம் அடைவாராக 



---------------------------


28. இன்னும் 4 வருடங்களுக்குள் மின் வெட்டு சரி செய்யப்படும் - ஜெ @ முரசொலி 



---------------------


29. நான்தான் தமிழ் நாட்டின் சி எம் என்பதை எந்த அமைச்சரும் எனக்கு நினைவுபடுத்தவே இல்லை - ஜெ அதிரடி அறிக்கை 



--------------------------


30. ஈறு கெட்ட எதிர் மறை வினையெச்சம் உதாரணம் - சஹானா ,ரஞ்சிதா 




-------------------------



கொலு @ ஈரோடு