Thursday, December 20, 2012

நான் திரைக்கதை அமைத்திருந்தால்? - நீஎபொவ

http://tamil.way2movies.com/wp-content/uploads/2012/12/Neethane-En-Ponvasantham_movie_review-300x300.jpg 

இளையராஜாவின் பிரமாதமான சூப்பர் ஹிட் பாடல்கள் , விண்ணைத்தாண்டி வருவாயா மேஜிக் ஹிட்டால் அதீத எதிர்பார்ப்பு , சந்தனச்சிலை சமந்தா ,காமெடி கலக்கல் சந்தானம்  இவ்வளவு பிளஸ் இருந்தும் படம் ஏன் ஊத்திக்கொண்டது? என்ன செஞ்சா  அல்லது செஞ்சிருந்தா படத்தை காப்பாத்தி இருக்கலாம்? ஒரு பொழப்பத்த ஆராய்ச்சி ... 


1. திரைக்கதையின் பெரிய மைனஸ் ஹீரோ - ஹீரோயின் இருவருக்கும் நடக்கும் ஈகோ மோதல்களில் கருத்து வேற்றுமை வருவது, 5 முறை பெரிய காரணம் , அல்லது சண்டை ஏதும் இல்லாமல் பிரிவது . நிஜ வாழ்க்கைல தம்பதிகள் , காத்லர்கள் இப்படி பிரிவது சகஜம் என்றாலும்  ஒரு நாவல் அல்லது சினிமாவுக்கு வலுவான காரணங்கள் காட்டனும்.18 அசிஸ்டெண்ட் டைரகடர்கள் வெச்சு அவங்களுக்கு சம்பளம் கொடுத்து வேஸ்ட் பண்றதை விட ஈசியா ஒரு வழி இருக்கு. ஆனந்த விகடன் , குமுதம் மாதிரி பிரபல வார இதழில் ஒரு போட்டி அறிவிக்கனும். காதலர்களே! இது உங்களுக்கான போட்டி ! உங்கள் வாழ்வில் நடந்த பிரிவுக்கான சம்பவம் எது? மனதைத்தொடும் நிகழ்வுக்கு ரூ 25,000 பரிசு  தலா 4 பேருக்கு , மொத்தம் ரூ 1 லட்சம் பரிசுன்னு ஒரு அறிவுப்பு .


 போதும், கிட்டத்தட்ட  5 லட்சம் புக்ஸ் விற்கும் புக்கில் இப்படி ஒரு அறிவிப்பு வந்தா  மினிமம் 1000 பேர் , மேக்சிமம் 15,000 பேர்  ஐடியா அனுப்புவாங்க. அதுல இருந்து  4 தேர்வு செய்து ஆசிரியர் தருவார். அதை சினிமாவுக்கு ஏற்ற படி  டெவலப் பண்ணிக்கலாம் . .



2. மேலே சொன்ன  ஐடியா இயக்குநருக்கு ஈகோவா இருந்துச்சுன்னா இன்னொரு வழி இருக்கு . திரைக்கதை மன்னன் கே பாக்யராஜ் கிட்டே போய் சார், இந்த மாதிரி  லவ்வர்ஸ் பிரிய  4 அல்லது 5 சிச்சுவேஷன் வேணும் , டைட்டில்ல  உங்க பேர் போட்டுடறோம்னா அவர் ஒத்துழைப்பார். ஆல்ரெடி  ஷாம் -ன் 12 பி படத்துல திரைக்கதை மேற்பார்வையில் உதவி செஞ்சிருக்கார் 



3. படம் பூரா ஹீரோ ஹீரோயின் 2 பேரையே ரொம்ப நேரம் காட்டிட்டே இருந்தா போர் அடிக்கும். ஹீரோவின் அண்ணன்  ஆஃபீசில் வேலை செய்யும் சக கொலீக்கை பொண்ணு பார்க்கும் சீன் ரொம்ப முக்கியம். அந்த சீனில் ஹீரோ அண்ணன் கூட போவது மாதிரியும்  ரொம்ப வசதி படைத்த  அந்தப்பெண்ணின் பெற்றோர் அடிக்கும் நக்கல்கள் ஹீரோவின் மனதை பாதிப்பதையும் , இதே போல் தானே ஹீரோயினும் இருப்பார் என்ற நினைப்பு ஹீரோவுக்கு வருவது போலவும் ஆடியன்சுக்கு விஷூவலா காட்ட வேண்டும் . நான் சொன்ன எல்லாமே மறைமுகமாக படத்தில் உணர்த்தப்படுது , என்றாலும் இன்னும் டீட்டெயிலாக தேவை .


4. ஹீரோ திடீர்னு தன் அண்ணியின் தங்கையுடன் நிச்சயத்துக்கு ஓக்கே சொன்னதை பலரால் ஜீரணிக்க முடியலை. ஹீரோயினுக்கு வேற பக்கம் மேரேஜ் ஆகாத வரை ஹீரோ பொறுத்துத்தான் போகனும். அதை நியாயப்படுத்த  ஹீரோ , ஹீரோவின் அண்ணீயின் தங்கை இருவரும் சாதாரணமாக ஒரு ஹோட்டலில் சாப்பிட வரும்போதோ , அல்லது ஒரு டான்ஸ் பார்டியில் இருவரும் இணைந்து நடனம் ஆடும்போதோ ஹீரோயின் அங்கே வந்து பிரச்சனை பண்ணி அனைவர் முன் அவமானப்படுத்துவது மாதிரி சீன் வெச்சுட்டா அந்த அவமானத்தால பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு வாழ்க்கை தர என ஒரு சா;ல்ஜாப்பு கிடைக்கும் . சும்மா பேசிட்டு இருந்ததுக்கே குதிச்சியே , இப்போ பாரு மேரேஜே பண்ணிக்கப்போறேன்னு ஹீரோ ஹீரோயின் கிட்டே டயலாக் பேசலாம்.




5. ஹீரோயின் ஹீரோ கூடவே  காலேஜில் ஜாயின் பண்ண வர்றேன் என சொல்லும் போது ஹீரோ “ நீ வந்தா படிக்க முடியாது , எங்க ஃபேமிலி சிச்சுவேஷன் இப்படி இருக்கு, நான் நல்லா படிச்சே ஆகனும், நாம மாசம் ஒரு டைம் மீட் பண்ணுவோம்” என ஓப்பனாக சொல்லிட்னும். எந்தக்காரணுமுமே  சொல்லாம நீ வர வேணாம்னு சொல்லக்கூடாது . ஹீரோயின் ஹீரோவைப்பார்க்க வரும்போது ஹீரோ வேற ஒரு பொண்ணு கிட்டே பேசிட்டு இருப்பதைப்பார்த்து சந்தேகம் வந்து வாக்குவாதம் வருவது போல காட்சி வைக்கலாம் 



http://moonramkonam.com/now/wp-content/uploads/2012/03/nee-thane-en-ponvasantham-samantha7.jpg


6. க்ளைமாக்ஸ்ல ஹீரோவும் , ஹீரோயினும் நைட் ஃபுல்லா தாங்கள் சந்திச்ச பழைய இடங்கள்ல ரவுண்ட் அடிக்கறாங்க. அதை யதேச்சையா பார்த்து  மணப்பெண்ணோ , அவர் அப்பாவோ மேரேஜை நிறுத்துவது மாதிரி காட்சி வைக்கனும். ஏன்னா எல்லாம் முடிஞ்சு மேரேஜ்க்கு ஒரு மணி நேரம் முன்னே அந்தப்பொண்ணை அம்போன்னு  கழட்டி விடுவது கேப்டனை கூட்டணில இருந்து கழட்டி விட்ட ஜெ நிலைமை மாதிரி இருக்கு 



7. ஜீவா எல்லா சீனிலும் மீசை இல்லாம இருப்பது சரி இல்லை . ஸ்கூல் ம் காலேஜ் ஓக்கேஎ, ஆஃபீஸ் கெட்டப் வரும்போது கோ பட ஜீவா கெட்டப் பக்காவா சூட் ஆகும். அதே போல் சந்தானமும் பல காட்சிகளில் மீசை இல்லாமல் , மீசையுடன் என மாறி மாறி வருது , எடிட்டிங்க் ஃபால்ட் , அதையும் சரி செய்யனும் 



8. சாந்து சாய்ந்து பாடல் காட்சியை  ரொம்ப டீசண்ட்டா எடுக்கனும் , கேளடி கண்மணி வசந்த் எடுத்த நீ பாதி நான் பாதி கண்ணே , அருகில் நீ இன்றித்தூங்காது கண்ணே ! பாடல் காட்சி போல  கவிதையா எடுக்கனும். சிச்சுவேஷனும்  நீண்ட இடைவெளிக்குப்பின் சந்திக்கும் காதலர்கள் பாடுவது போல் வைக்கனும். இப்படி கில்மாப்பாட்டு மாதிரி  எடுக்கக்கூடாது. அந்தப்பாட்டுக்கே ஜீவன் போச்சு பிக்சரைசேஷன்ல 



9. ஜீவா - சமந்தா  வாக்குவாதக்காட்சிகளில் வசனங்கள் ஓவர்  + ஆங்கிலம் ஓவர். மணிரத்ன சுருக்காய் வசனங்களை குறைக்கனும்




10. படத்துல பி ஜி எம் இன்னும் நல்லா பண்ணி இருக்கலாம் , இசை ஞானி கிட்டே “ சார், மவுன ராகம் படம் மாதிரி இதுல எதிர்பார்க்கறோம், ஆடியொபொ ஆல்ரெடி ஹிட், மிச்சம் பி ஜி எம் மும் ஹிட் ஆகிடுச்சுன்னா படம் எங்கியோ போயிடும் , எல்லாம் உங்க கைல தான் இருக்கு என் லாவகமா பேசி பி ஜி எம் ஒர்க் பக்காவா முடிக்கனும் 







11. அவ்வளவு வசதியான பொண்ணு பழைய நோக்கியா ஃபோனா கால ஓட்டத்துக்கு தகுந்த மாதிரி மாடலை மட்டும் மாத்திட்டு இருக்கறது நம்ப முடியல , ஆண்ட்ராய்டு ஃபோன் , ஆப்பிள் ஃபோன் இப்படி காட்டனும் 


12. ஹீரோ , ஹீரோயின் இருவருக்கும் இடையே வச்தி , அந்தஸ்து பேதம் மலையளவு இருக்கு. அவங்களையும் அறியாமல் கண்டிப்பா அது பிரச்சனையா வெடிக்கும் . அப்படி ஒரு சீன் வைக்க்னும். உதாரணாம “ நான் கிஃப்ட் குடுக்கும்போதெல்லாம் உணத்தியா வாங்கிக்கிட்டே, இப்போ வேற நல்ல இடம் கிடைச்சதும் என்னை கழட்டி விடப்பார்க்கறியா? “ அப்டினு ஹீரோயின் சொல்வது போலவும் , ஹீரோ வெகுண்டு எழுவது போலவும்  காட்சி வைக்கனும் 



13. ஹீரோ , ஹீரோயின் பொசுக்கு பொசுக்குன்னு லிப் கிஸ் 13 தடவை அடிக்கறாங்க, ஆனா ஒண்ணைக்கூட உருப்படியா காட்டலை, ஒரு வாசகம் சொன்னாலும் திருவாசகம் சொன்னார் என்பது மாதிரி ஒரு கிஸ் அடிச்சாலும் அது கமல் கிஸ் மாதிரி நச்சுன்னு இருக்கனும் , நல்லா காட்டனும் 




14. சந்தானம் காமெடி பின் பாதில சுத்தமா இல்லை, ஓக்கே ஓக்கே லெவலுக்கு இல்லைன்னாலும் இன்னும் அவருக்கு காட்சிகள் வைக்கனும் . படம் பார்த்தவங்க பெரும்பாலும் சந்தானம் இருக்கும் வரை அதாவது இடைவேளை வரை படம் ஓக்கே , பின் பாதி திராபைங்கறாங்க.. 



15. ஹீரோ அல்லது ஹீரோயினுக்கு உடம்பு சரி இல்லாம போகும்போது , அல்லது ஒரு விபத்தில் அடி பட்டு இருக்கும்போது மற்றவர் அவரை தாங்கும் சீன்கள் கண்டிப்பா சாரி அன்பா வைக்கனும். லவ் ஸ்டோரிக்கு அது முக்கியம். அது எதுக்குன்னா சுக துக்கங்களில் சமமா பங்கெடுக்க ஒரு துணை இருக்குன்னு காட்ட

3 comments:

கோவை நேரம் said...

ஏன் சித்தப்பு....அதான் பொழப்பத்த வேலை அப்படின்னு சொல்லிடீங்க...அப்புறம் எதுக்கு...

Easy (EZ) Editorial Calendar said...

நல்லா வருவிங்க......

நன்றி,
மலர்
http//www.ezedcal.com/ta(வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

”தளிர் சுரேஷ்” said...

டைரக்டரு ஆக வாழ்த்துக்கள்!