Thursday, December 06, 2012

நாஞ்சில் சம்பத் பல்டி - மக்கள் கருத்து

சென்னை: ம.தி.மு.க.,வின் பிரசார பீரங்கியாக இருந்து வந்த பிரபல நாஞ்சில் சம்பத் இன்று காலையில் முதல்வர் ஜெ.,வை சந்தித்து அ.தி.மு.க.,வில் தன்னை இணைத்து கொண்டார். இவர் தி.மு.க.,பக்கம் சாய்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அ.தி.மு.க.,வில் இன்று சேர்ந்தார். இந்த செய்தி ம.தி.மு.க., தொண்டர்களுக்கு பெரும் அதிர்ச்சியை தந்துள்ளது.

மனக்கசப்பில் இருந்தார்:




ம.தி.மு.க.,வில் வைகோவுக்கு இணையாக பெரும் திரளாக நாஞ்சில் சம்பத் பேச்சை கேட்க கூட்டம் சேரும். கட்சியில் கொள்கை பரப்பு செயலாளராக இருந்து வந்தார். கடந்த சில நாட்களாக கட்சி பொதுச்செயலர் வைகோவுடன் மனக்கசப்பில் இருந்து வந்த சம்பத் கட்சிப்பணியில் இருந்து விலகி இருந்தார். பிரசாரத்திற்கு எங்குமே செல்லவில்லை.


இந்நிலையில் இவர் அ.தி.மு.க., பொதுசெயலரை நேரில் சந்தித்து தன்னை அ.தி.மு.க.,வில் இணைத்து கொண்டார். இவரது விலகல் ம.தி.மு.க.,வுக்கு பேரிழப்பாக அமைந்துள்ளது.


அ.தி.மு.க., வில் உயர்ந்த பதவி :


இன்று காலையில் அ.தி.மு.க.,வில் இணைந்ததும் சம்பத்துக்கு இந்த கட்சியின் கொள்கை பரப்பு துணை செயலர் பதவி அளிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து மாநில அரசின் சாதனை விளக்க கூட்டங்களில் பங்கேற்க நாஞ்சில் சம்பத் தனது பிரசார பயணத்தை விரைவில் துவங்குவார் என கட்சி வட்டாரம் தெரிவிக்கிறது.


1.  - Kovilpatti,இந்தியா
05-டிச-201211:35:52 IST Report Abuse
Mariappan Krishnasamy சம்பத் ஐ பொறுத்த வரை இது அவருக்கு மாபெரும் இழப்பு. ஏனென்றால் இனி அவர் வைகோ அவர்களிடம் பயின்ற தன்மானம், சுய கௌரவம், கொள்கை பிடிப்பு....போன்ற அனைத்தையும் இழக்க வேண்டிவரும். இப்பவே முதுகு வளைய ஆரம்பிச்சிருச்சு.ஆம்... வைகோ ஒரு தொண்டரை இழந்து விட்டார் ... பாவம் திரு.சம்பத் அவர்கள் தன் சுயமரியாதை இழந்து விட்டார்.. பல நாஞ்சில்களை உருவாக்குபவர் வைகோ. இதற்கெல்லாம் கவலை கொள்ள போவதில்லை. 
 
 
 
 
2.  - doha,கத்தார்
05-டிச-201208:59:06 IST Report Abuse
saravanakumar அண்ணன் வைகோ அவர்களே தங்கள் பார்க்காத சோதனைகளா இந்த மனிதர் போனதால் என்ன ஆகிவிடும் எப்பவும் போல நீங்கள் செயல்படுங்கள் நிச்சயம் நீங்கள் வெல்வீர்கள் தங்களின் வெற்றி தமிழனின் வெற்றி, தமிழின் வெற்றி ( தயவுசெய்து சகுனி படம் பாருங்கள் ) விவேகமாக செயல்படுங்கள் சாதனை படைக்க தன் பலத்தை தான் நம்பவேண்டும் நீங்கள் சாதிப்பீர்கள் 
 
 
 
 
3.  - nashville,tn ,யூ.எஸ்.ஏ
05-டிச-201201:41:04 IST Report Abuse
Matt 
pillai பேச்சு ஒன்றையே மூலதனமாக வைத்து அரசியல் வாழ்க்கை நடத்தி கொண்டிருக்கும் இவர போன்றவர்கள் இப்படி தான் இருக்க முடியும் என்று தெரிகிறது. பத்தொன்பது ஆண்டுகளாக ம தி மு கவில் ஒட்டி கொண்டிருந்திகிறார். 
 
 
 
 
4.  - chennai,இந்தியா
05-டிச-201200:24:23 IST Report Abuse
Raju 
Sutham Dear fris how many of us will vote for good people.if one person doing good things we will not vote for them. we will see party e, religion,etc.but we can write lot of comments. last election all chennai people supported for saidai duraisamy. now where is he? personally he is a good person. but he cannot work individually. if any one of you or your family members in politics then you will know how good politicians are suffering to do a people basic needs. if they are hundred percent honest next election peoples will not support for him or his party will not gove seat for him. this is a fact. so no one ready to loose his own property . he has to do something for his family also. 
 
 
 
5.  தாயகம் சுரேஷ், பக்ரைனிலிருந்து, 
 
 
நாஞ்சில் சம்பத் வெளியேறியதால் இவ்வியக்கம் பாதாளத்திற்க்கு சென்று விடும் என்கிற எழுத்திலும் பேச்சிலும் எனக்கு நம்பிக்கையில்லை. அதற்கான அவசியமுமில்லை. வெற்றிடத்தை நிரப்பும் தகுதி காற்றிற்க்கு உண்டு.., காற்று தானே சுவாசம்.., ஆம் மறுமலர்ச்சி கூட்டத்தின் சுவாசமே வை.கோ என்கிற மையப்புள்ளி என்றிருக்கும் போது அந்த "வெற்றிடத்தையும்" வை.கோ அவர்கள் நிரப்பிவிடுவார் என்பதில் நம்பிக்கை உண்டு. கருணாநிதியின் ஆட்சியின் போது அதிமுக_விலிருந்து, அனிதா ராதாகிருஷ்ணன், முத்துசாமி, சின்னசாமி, செல்வகணபதி,சேகர்பாபு என்று தொடர் தொடராக பலர் ஒடினார்களே அப்போது இத்தகைய "கிண்டலான" கட்டுரையை தினமல்ர் வெளியிடவில்லையே?
 
 
 
 
 அப்படி ஒடிய கூட்டத்தினால் அதிமுக_தான் அழிந்து போய்விட்டதா என்ன? அதே போல் தான் இந்த சம்பத் ஓட்டத்தால் நாங்கள் தொய்ந்து விடவில்லை. எங்கள் தாய்(வை.கோ) உழைத்து எங்கள் வீட்டிற்க்குள்(தாயகம்) உட்கார வைத்து ஊட்டி விடும் "பழங்கஞ்சியே" எங்களுக்கு போதும் என்ற எண்ணம் உள்ள தொண்டர்கள் வை.கோ_வோடு இருக்கிறோம். ஆனால் பக்கத்து வீட்டுக்காரனின் "பிரியாணி"க்கு ஆசைப்பட்டு எஞ்சில் ஊற நாக்கை தொங்கப் போட்டு கொண்டு ஓடுபவர்களை பற்றி எங்களுக்கு கவலையில்லை. 
 
 
 
எத்தனை சுவையான உணவெனினும் தாய் ஊட்டி விடும் "பழங்கஞ்சி"க்கு உள்ள சுவையை நேர்மையான மனிதன் மறக்கவே மாட்டான். வை.கோ_வின் தொண்டர்களாகிய நாங்கள் நேர்மையான மனிதர்கள். எவர் போயினும் யாம் வை.கோ_வோடிருப்போம்........, வை.கோ மேல் நாங்கள் கொண்டிருக்கும் இந்த நம்பிக்கை மட்டுமே எங்கள் "மூலதனம்"...., மறுமலர்ச்சி பயணத்தின் எல்லை வரை வர விழையும் இயக்க விசுவாசி. 
 
 
 
6.  - Chennai,இந்தியா
04-டிச-201222:51:16 IST Report Abuse
Panchu Mani இதை சம்பத் முன்னாலே செய்திருக்க வேண்டும். அ தி மு க க்கு சம்பத் போன்றவர்கள் வேண்டும். கருணாநிதி, புரட்சி தலைவி இவர்களுக்கு அப்புறம் கருத்து குவிவது தமிழ் தாயின் தலை மகன்களில் ஒருவனான சம்பத்துக்கு மட்டும்தான். நெஞ்சில் நிறைந்த நாஞ்சிலே, கம்பன் தந்த சம்பத்தே தமிழ் தாயின் தலைமகனே வாழிய நீ பல்லாண்டு. - முகம் அறியா தம்பி 
 
 
 
 
7.
Poompattinaththaan - KaveriPoompattinam,இந்தியா
04-டிச-201222:37:39 IST Report Abuse
Poompattinaththaan போயும் போயும்.. அடச் சே.. இது ஒரு மானங்கெட்ட ஜென்மம். பழ கருப்பையா பழசாகிப்போனதுபோல் நாஞ்சில் நாவடைத்துப்போகும் காலம் விரைவில் எதிர்பார்க்கலாம். என்ன ஒரு காமெடி? இருட்டில் இருந்து வெளிச்சத்துக்கு வந்திருக்கிறாராம். மரை கழண்டுவிட்டதுபோலும். தமிழகமே இருண்டு கிடக்கும்போது இவருக்கு மட்டும் என்கிருந்து வெளிச்சம் வந்ததோ? ( ஒருவேளை பெட்டி மாறியதைத்தான் அப்படிச்சொல்கிறாரோ ) எது எப்படியோ.. முழ்கும் கப்பலில் புகுந்திருப்பதால் மூழ்கடிக்கப்படுவதென்னவோ உறுதி. 
 
 
8. - jeddah,சவுதி அரேபியா
04-டிச-201220:48:35 IST Report Abuse
Shaikh Miyakkhan ஏன்? நமக்கு தானே தூது விட்டு இருந்தார் பின்னே எப்படி அங்கே போய் சேர்ந்தார் ? என்று ஒரு பெரியவர் முக முக்கல் முனங்கள் சத்தம்கேட்கிறது. எங்கையோ தப்பு நடந்து இருக்கிறது ? வைர விழாவில் பெயரை தான் விட்டு விட்டார்கள் என்றால் கையில் கிடைக்க இருந்த பழத்தையும் தட்டி பறித்து விட்டார்களே அவருடைய முடிவு சரியானதே . திமுக வில் வாரிசு கோஷ்டியில் சிக்கி சின்ன பின்னமாவதை விட தன்னை மதிக்கின்ற கட்சில் சேருவது என்கின்ற அவரது முடிவு சரியானதே. 
 
 
9. - Chennai,இந்தியா
04-டிச-201217:29:01 IST Report Abuse
Suresh Rajagopal நாஞ்சில் சென்றதில் ம தி மு க எதையும் இழந்துவிடவில்லை. வைகோ இவர்மீது தி மு க ஆட்சில் போடப்பட்ட வழக்குகாக வைகோ இவருக்காக நீதிமன்றத்தில் வாதாடினார், வீடு, கார் என கட்சி தொண்டர் காசில் இவருக்கு கொடுக்கப்பட்டது. எந்த தொண்டனுக்கும் தலைவன் செய்யாததை வைகோ செய்தார். நன்றி மறந்துவிட்டார். இவர் சென்றதால் ம தி மு க விற்கு எந்த இழப்பும் இல்லை. இவரை போல் இன்னும் பல பேச்சாளர் உள்ளனர். நாட்டின் நலனை விரும்புவர்கள் வைகோ வின் உறுதியுடன். இப்பொழுது தான் மனிதர் வளைந்து இருக்கிறார். ஏன்டா சேர்ந்தோம் என்று எவர் நினைப்பர், ஏன்டா சேர்ந்தார் என்று ஜெயா நினைப்பர் இன்னும் சில மாதகலில். இது ம தி மு க விற்கு நன்மை. 
 
 
 
10.
saravanan tamil - chennai,இந்தியா
04-டிச-201215:09:15 IST Report Abuse
saravanan tamil சம்பத் அவர்கள் மதிமுக விலிருந்து விலகியது பெரும் தவறு, அதிமுக வில் இணைந்தது அதைவிட மாபெரும் தவறு. மதிமுக வை பொறுத்த வரை இது இழப்பு அல்ல. ஆனால் சம்பத் ஐ பொறுத்த வரை இது அவருக்கு மாபெரும் இழப்பு. ஏனென்றால் இனி அவர் வைகோ அவர்களிடம் பயின்ற தன்மானம், சுய கௌரவம், கொள்கை பிடிப்பு....போன்ற அனைத்தையும் இழக்க வேண்டிவரும். மாநில அரசின் சாதனைகளை விளக்கி பிரசாரம் செய்வார் என்று செய்தி வெளியிடப்பட்டுள்ளது. இதிலிருந்தே மறைமுகமாக தெரிகிறது, அவருக்கு அங்கு எந்த வேலையும் இருக்காது என்று. சாதனை என்று ஏதாவது இருந்தால் தானே சொல்வதற்கு. தேவை எனில் ஜெயா டிவி நியூஸ் சேனல் கு நியூஸ் ரீடர் ஆகலாம். 
 
 
நன்றி - தினமலர்

1 comments:

R. Jagannathan said...

This is just a happening. No need for prominence. This will not affect Vaiko or MDMK; nor will this benefit Jaya / ADMK in the long run. Nanjil will have a source of income by speaking in meetings, but for how long? Jaya is known to throw people at any time and without known reasons. Vaiko is a good example! - R. J.