Wednesday, December 26, 2012

ஆரோகணம் - நடிகை விஜி பேட்டி

நடிகை விஜி பேட்டி

சின்னத்திரையும் சினிமாவும் ஒண்ணுதான்!

விஜய் கோபால்

ஆரோகணம்படம் மூலம் நல்ல நடிகை என பெயர் பெற்றுவிட்டார். இந்த சந்தோஷம் எப்படி இருக்கு என்றோம்.
நான் கடைசியா நடிச்சதுஅண்ணா மலைதொடர். அது முடிந்ததும் நிறைய வாய்ப்புகள் வந்தன. ஆனால் ஒரு தாயாக என் மகள்கள் சுரக்ஷா, லவ்லின் இருவரையும் கவனிக்க வேண்டும். கண்ணும் கருத்துமாக வளர்க்க வேண்டும் என்பதிலேயே கவனம் இருந்தது. அவர்களோட படிப்பு எனக்கு முக்கியம். இப்போ இருவரும் நன்றாகப் படிக்கிறார்கள். ஷூட்டிங் முடிந்து போகும்வரை தங்களைப் பக்குவமாகப் பார்த்துக் கொள்கிறார்கள். அதனால்தான்அழகிதொடரில் நடிக்க ஒப்புக் கொண்டேன்.
இயக்குனர் வி.சி.ரவி என்னிடம் வந்து கதை சொன்னபோது, இரவு 10.30 மணிக்கு வரும் சீரியலா? மக்களிடம் போய் சேருமா? என யோசித்தேன்.
நல்ல கதை. நிச்சயம் ரசிப்பார்கள் என்றார்இயக்குனர். குழப்பத்தோடு அக்கா சரிதாவிடம் போய்க் கேட்டேன்.
உனக்கு ஏத்த கதை. தைரியமா பண்ணுன்னு சொன்னா. கணவர், மகள் எல்லோரும் உற்சாகப்படுத்தினாங்க. இப்போது இந்தத் தொடர் பார்த்துட்டுப் பக்கத்து வீட்டு குடும்பத்தை ஜன்னல் திறந்து பார்ப்பதுபோல இருக்கு என பாராட்டுகிறார்கள்.
ஒரு தடவை நீலகிரி போயிருந்தேன். அந்த ஊரில் மக்கள் இரவு 8.30 மணிக்கே தூங்கிடுவாங்களாம். அழகி தொடர் பார்க்க இரவு 10.30 க்கு அலாரம் வைத்து, எழுந்து பார்க்கிறோம் என்றார்கள். சிங்கப்பூர், மலேசியா, என வெளிநாடுகளில் இருந்து பாராட்டு. நல்ல வேளை மிஸ் பண்ண இருந்தேன்.

அழகிசீரியல் பார்த்துட்டு தான் லட்சுமி ராமகிருஷ்ணன்ஆரோகணம்படத்துக்கு தேர்வு செய்தாரா?
சூர்யாவின்நந்தா’, பரத்தின்எம்மகன்போன்ற படங்களுக்கு அழைப்புகள் வந்தன. அப்பவும் குழந்தைகளுக்காக நடிக்கலே. ஒரு பங்ஷன்லே லட்சுமி ராமகிருஷ்ணன் என்னைப் பார்த்தாங்க. படத்திலே நடிக்கிறீங்களான்னு கேட்டாங்க. கதை என்னன்னு கேட்டேன். ஸ்கிரிப்ட் கொடுத்து விட்டாங்க. ரொம்பவும் பிடிச்சுப் போச்சு.
இப்பவும் அக்கா சரிதாகிட்டே போய் ஒபினியன் கேட்டேன். இது ரீச் ஆகும் நடின்னு சொன்னாங்க. உடனே .கே. சொன்னேன். கோயம்பேடு, மைலாப்பூர் என பல பகுதிகளில் 20 நாட்கள் படமாக்கினார்கள். கோயம்பேடு பகுதியில் படமாக்கியபோது பல பெண்கள்அழகிசீரியல் நடிப்பைப் பாராட்டினாங்க."
சினிமாவில் இருந்து நடிகைகள் சின்னத் திரைக்கும் வருவாங்க. நீங்கள் சின்னத் திரையில் இருந்து சினிமாவுக்கு போகிறீர்கள்?
நல்ல கதை எங்கிருந்தாலும் அதை தேடி பயணிப்பதில் தப்பு இல்லை. சின்னத்திரை, சினிமா இரண்டுமே ஒன்றுதான். கதைதான் பேசவேண்டும்."


நன்றி - கல்கி , புலவர் தருமி 

0 comments: