Wednesday, November 28, 2012

சூசயிட் பாயிண்ட் VS , பக்கோடா பாயிண்ட்

Photo: இந்நாளில் வாழ்தலைப் போன்றதொரு 
முட்டாள் தனம் வேறில்லை.

பிரியம் உடைத்தாகிவிட்டபோது
உழன்று தவிக்கின்ற ஒன்றைப்பற்றி
யாருக்கும் கவலையில்லை தான்....
1. டாக்டர், சாயங்காலம் 6 மணி ஆனா போதும், எல்லாப்பொண்ணுங்களும் அழகா மங்களகரமா தெரியறாங்க.


இது காம மாலைக்கண் நோய் மாதிரி தெரியுதே?



------------------------



2. தலைவருக்குத்தான் இண்ட்டர்நெட் நாலெட்ஜே இல்லையே? எப்டி சைபர் க்ரைம் போலீஸ் கிட்டே மாட்னாரு?


 அவர் லேடி சைபர் க்ரைம் போலீஸ் கையைப்பிடிச்சு இழுத்துட்ட்டாராம்



----------------------



3. உங்க பையன் எல்லா சப்ஜெக்ட்லயும் பூஜ்யம் தான் வாங்கி இருக்கான்

 நோ பிராப்ளம், சைபர் க்ரைம் போலீஸ்ல வேலை கிடைச்சுடும்



-------------------------



4. பைக் பெட்ரோல் டேங்க் ல என்ன கிறுக்கி வெச்சிருக்கே?


 பைக்ல 8 போட்டு காட்டு.அப்போதான் லைசன்ஸ்ன்னு சொன்னீங்களே?




------------------------


5. டியர், எங்க குடும்பத்துல யாருமே லவ் மேரேஜ் பண்ணூனதில்லை


 நல்ல வேளை, எங்க குடும்பத்துல யாரும் மேரேஜே பண்ணலைன்னு சொல்லாம விட்டியே?



----------------------


Photo: எந்தன் சிறைகள் தான்
எனக்கான சிறகுகளென்பதை அறிவீராக....



6. தலைவருக்கு காங்கிரஸ்னா அ;லர்ஜி


 அதுக்காக கையேந்தி பவன்ல கூட சாப்பிடமாட்டேன்னு அடம் பிடிச்சா எப்டி?




---------------------


7. மிஸ்! உன்னை மாதிரி ஒரு அழகியை என் வாழ்க்கைல நான் பார்த்ததே இல்லை

 இதே டயலாக்கை என் தங்க்ஜச்சி கிட்டேயும் சொன்னீங்களாமே?

 ஆமா, ஆளை மாத்தினாலும், பேச்சு மாத்தமாட்டேன்.




-------------------


8. டாக்டர், கண்ல பூ விழுந்துடுச்சு



 எப்டி?



 காலி ஃபிளவர் ரை என் மேல எறிஞ்சுட்டா என் சம்சாரம்




---------------------


9. மேரேஜ் ஆன நாள்ல இருந்து கட்டுன பொண்டாட்டிக்கு ஒரு சேலையாவது எடுத்து குடுத்தியாய்யா?



 விளையாடறியா? சுடிதான் பிடிக்கும்னு இதுவரை நீ 309 சுடி எடுத்துக்கலை?




-----------------


10. மடி கணினி ரூ 25,000


 மடி இல்லாம வெறும் கணீனி  மட்டும் எவ்ளவ் சார்?



====------------------------------------

Photo: ●
விட்டுச்செல்கின்ற நேசங்களைத் தாண்டியும்
விடாது தொடர்கின்ற
நினைவுகளையே அதிகம் நேசிக்கின்றது
இந்த பாழும் மனம்...
●
ரேவா பக்கங்கள்




11. சார், போஸ்ட் கார்டு 100 கேட்டீங்களே, இந்தாங்க


 சார், ரொ ம்ப வெளுத்து இருக்கே, வேற டார்க் கலர்ல குடுங்க




-----------------


12. வாஷிங்க் மிஷின் வேணும்


 என்ன மாடல்?

 6 அடி




---------------------


13. டியர், சூசயிட் பாயிண்ட்ல நாம தற்கொலை செஞ்சுக்கலாமா?



வேணாம், பக்கோடா பாயிண்ட்ல ஏதாவது வாங்கி கொறிச்சுக்கிட்டே சாகலாம்



--------------------


14. அந்த காலத்துக்கும், இந்தக்காலத்துக்கும் என்ன வித்தியாசம்?


அந்த காலத்துல விளை நிலங்கள் , இப்போ விலை போன நிலங்கள் ஆகிடுச்சு



-----------------------


15. ஒரு கைல ஓசை எழுப்ப முடியும்னு நேத்துத்தான் தெரிஞ்சுக்கிட்டேன்


 எப்டி?



 என் சம்சாரம் ஒரு கைல என் கன்னத்துல ஓங்கி பளார்னு ஒண்ணு குடுத்தா பாரு




---------------------

Photo: கொஞ்சம் - நீ
இதழ் திறந்து இதயம் காட்டு
புரியாது நிற்கும் 
இக்கவிதையின் அடுத்தவரி
ஆரம்பமாகட்டும்...
16.  கேரளா ஆட்கள் இங்க்லீஷ் உச்சரிப்புல ஆ  என சொல்லும் இடங்கள்ல ஓ என சொல்வாங்களாமே? உண்மையா?

 ஓ மா





------------------------------------
டுடே டைம் பாஸ் @ டி வி 

டுடே டைம் பாஸ் @ டி வி


4 comments:

Seeni said...

haaa haaa ...

sako!

sema....

நம்பள்கி said...

என்னா செந்தில் ஈரோடு பேரையே கெடுக்குறீங்களே!

No.10. கேள்விக்கு: உங்கள் கேள்வி "கணினி இல்லாமல் மடி மட்டும் எவ்வளோ மேடம்" என்றல்லவா இருக்க வேண்டும்.

tech news in tamil said...

அருமை............

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

செம.