Saturday, November 10, 2012

Barfi! (2012) - சினிமா விமர்சனம்

http://img.hindilinks4u.net/2012/09/Barfi-20121.jpg

என் மன வானில் ஹீரோ போல், மொழி ஹீரோயின் போல் இந்தப்பட ஹீரோவும் வாய் பேச முடியாத செவித்திறன் குறைபாடு உள்ள ஒரு மாற்றுத்திறனாளி . காதல் மன்னன் அஜித் போல் இவர் ஆல்ரெடி மேரேஜ் நிச்சயம் ஆன  இலியானாவுக்கு ரூட் விடறார்.அவர் நாட் ஓக்கேன்னு சொன்னாலும் மனசளவுல லவ் இருக்கு. வீட்ல ஒத்துக்க மாட்டாங்க என்பதால் தயக்கம், இருந்தாலும் சைக்கிள் கேப்ல  சத்யா கமல் அமலா முத்தம் மாதிரி ஒரு லிப் கிஸ் வரை போயிடுது.


இலியானாவுக்கு நிச்சயிக்கப்பட்ட மாப்ளையுடன் மேரேஜ் ஆகிடுது. ஹீரோ தேவதாஸ் எல்லாம் ஆகலை. அவரோட அப்பாவுக்கு திடீர்னு உடல் நலக்குறைவு. ஆபரேஷனுக்கு பணம் வேணும். அப்பா கார் டிரைவரா வேலை செய்யும் முதலாளியிடம் செலவுக்கு பணம் கேட்டா கர்நாடகா நமக்கு தண்ணீர் விஷயத்துல என்ன பண்ணுச்சோ அதை பண்றாரு.கடுப்பான ஹீரோ தன் அப்பாவின் முதலாளியின் மகளை  குணா கமல் மாதிரி கிட்நாப் பண்ணிடறாரு .


 இவ்ளவ் பணம் குடுத்தாத்தான் மகளை ஒப்படைப்பேன்னு மிரட்டி  அந்தப்பணத்தை வாங்கி ஆபரேஷன் பண்ண வைக்கிறாரு. முதலாளியின் மகள் பிரியங்கா சோப்ரா  மூன்றாம் பிறை ஸ்ரீதேவி மாதிரி மனநலக்குறைவு  உள்ளவர். ஆட்டிசம் நோயால் பாதிக்கப்பட்டவர். இருவருக்கும் பாடி கெமிஸ்ட்ரி , பிசிக்ஸ் எல்லாம் ஒர்க் அவுட் ஆகிடுது.


பிரியங்காவின் அப்பா ஒரு டிராமா போட்டு  ஹீரோவை போலீஸ்ல சிக்க வைக்கிறார். பழைய காதலி இலியானா தாலி கட்டுன புருஷனை அம்போன்னு விட்டுட்டு ஹீரோ கூட இருந்து அவர் காதலை சேர்த்து வைக்க ட்ரை பண்றாரு. என்ன ஆச்சு என்பதே மிச்ச மீதிக்கதை.. 

 படத்தோட இயக்குநர் பல உலகப்படங்கள் பார்த்தவர் போல். செய் நேர்த்தி, தொழில் நுட்பக்கலைஞர்களிடம் வேலை வாங்கிய முறை எல்லாம் பிரமாதம். சீன் பை சீன் ஆல்ரெடி வந்த பல படங்களின் கலவையா இருந்தாலும் சாதா ரசிகனுக்கு சிந்திக்க வாய்ப்பே கொடுக்காத திரைக்கதை அமைப்பு , காட்சிகளின் விவரிப்பு அழகு.


ஹீரோ  ரன்பீர் கபூர் சிம்மா சொல்லக்கூடாது, செம நடிப்பு. பிறவிக்கலைஞனும், தன் ஒவ்வொரு படத்தையும் வித்தியாசமான  ரசனைக்கு தீனி போடும்  கேரக்டர்  தேர்வு செய்யும் ஜீவ கலைஞனுமாகிய   கமல் செய்யமுடிந்த கேரக்டரை சர்வசாதாரணமாக அநாயசமாக ரன்பீர் செஞ்சுடறார். படம் முழுக்க அவருக்கு வசனங்கள் இல்லை, ஆனாலும் அந்த குறையே  தெரியாத வண்ணம் தன்  பக்குவமான நடிப்பால் மெருகேற்றி இருக்கிறார். 


ஹீரோயின் இலியானா ஹிந்தியில் இவருக்கு இதுதான் முதல் படம். அநேகமாக இவர் இடுப்பை காட்டாமல் நடிப்பைக்காட்டிய முதல் படம் இதுவாகத்தான் இருக்கும். ( ஒரே ஒரு சீன்ல பேக்ல இருந்து லைட்டா இடுப்பை காட்டறார் ) குடும்பப்பாங்கான தோற்றம் அபாரம். நிச்சயிக்கப்பட்ட பெண் காட்டும் தடுமாற்றம், காதல்  , வெட்கம் எல்லாம் வெளிப்படுத்தும் அழகிய கேரக்டர். வெல்டன் 


  பிரியங்கா சோப்ராக்கு லைஃப் டைம் கேரக்டர். மூன்றாம் பிறையில் ஸ்ரீ தேவிக்கு குழந்தை மாதிரி நடிச்சா போதும், ஆனா இதுல அதை விட சவால் நிறைந்த கேரக்டர்.  சாதா ஜனங்களுக்கு அதிகம் பரிச்சயம் இல்லாத உயர் குடி மக்கள் மட்டுமே அறிந்த நோய் தாக்கிய கேரக்டரை பிரமாதமாக வெளிப்படுத்தி இருக்கிறார். 


அது போக ஆசிஸ் வித்யார்த்தி மிடுக்கான நடிப்பு, போலீஸ் ஆஃபீசராக வரும் தொந்தி கேரக்டர், அப்பா கேரக்டர் எல்லாரும் அளவான நடிப்பு


http://static.ibnlive.in.com/ibnlive/pix/slideshow/07-2012/first-look-ranbir/barfi23.jpg


இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள்


1. இது 1972 மற்றும் 1978 ஆகிய கால கட்டங்களில் நடக்கும் கதை என்பதால் ஒளிபப்திவு , ஆர்ட் டைரக்‌ஷனுக்கு ஏகப்பட்ட எக்ஸ்ட்ரா ஒர்க். அதி அற்புதமான பங்களிப்பு.கொல்கத்தா , டார்ஜிலிங்கில் கேமரா புகுந்து விளையாடுகிறது


2. ஹீரோ இலியானாவுக்கு பிரபோஸ் பண்ணியதும் தான் ஆல்ரெடி எங்கேஜ்டு என்று இலியானா சொன்னதும் டக் என இலியானா தோழிக்கு ரூட் விடும் குறும்புத்தனம் , மிக இய்ல்பாக நடக்கும் அந்த லிப் டூ லிப் கிஸ் சீன் அந்த சீனில் லைட்டிங்க்


3. ஹீரோ தன் ஷூவை கழட்டி அதில் டாட்டா காட்டுவது. பிரியங்காவுக்கு தன் இருப்பிடம் , வருகை அறிவிக்க தன் ஷூவை மேலே எறிந்து எறிந்து சோர்வது 


4. இலியானாவின் விரலில் மாட்டப்பட நிச்சய மோதிரத்தை  கழட்டி வீசி , அருகம்புல்லால் மோதிர முடிச்சு இடுவது கவிதையான சீன் 


5. பிரியங்கா சோப்ரா கோசாப்பழம் ( தர்பூசணி) சாப்பிடும்போது மேட்சுக்கு மேட்சாக ரத்த சிவப்பில் கோட் அணிந்து இருப்பது கொள்ளை அழகு 


6. இடைவேளை கார்டு போடும்போது பிரியங்கா தூக்கக்கலக்கத்தில் தன் விரலை ஹீரோ கையோடு இணைப்பது , பின் ஹீரோ எழுந்து அவர் தூக்கம் கலக்காமல் தன் விரலை விடுத்து அவர் விரலுடன் கோர்ப்பது 


7. ஹீரோவுக்கு காது கேட்காது என்பதால் காலிங்க் பெல்லுக்கு பதிலாக  செய்யப்பட்ட மாற்று ஏற்பாடு செம 


8. பிரியங்கா கயிற்றுப்பாலத்தை கடக்கையில் ஹீரோ குறும்பாக அதை ஆட்டுவது, பின் ஒரு காட்சியில் இருவரும் நாசியில் நாசி வைத்து கொஞ்சுவது ரொமாண்டிக் சீன்ஸ் 


9. ஹீரோ  ஆளில்லா வயல்காட்டில் நெம்பர் ஒன் போவதும் திடீர் என ஒரு கூட்டம் அவர் முன் தோன்றுவதும் பின் சேம் டிட்டோ போலீசுக்கும்  நடப்பதும் ரகளையான காமெடி 


10. ஹீரோயின் இலியானாவின் அம்மா கேரக்டர் நடிப்பும் , அவர் தரும் ஆதரவும் பேச்சும் அழகு


http://blog.bookmyshow.com/wp-content/uploads/image/BMS%20Reviews/BARFI!/barfi-2.jpg



 இயக்குநரிடம் சில கேள்விகள்


1. படத்தின் முதல் காட்சியான போலீஸ் , ஹீரோ சேசிங்க் சீன் ஆல்ரெடி ஜாக்கிசானின் பிராஜக்ட் ஏ படத்தில், ஆர் பாண்டிய ராஜனின் நெத்தி அடி, ஊரைத்தெரிஞ்சுக்கிட்டேன்  படத்தில் வந்ததுதான், புதுசா யோசிச்சு இருக்கலாம்.அதேபோல் பல கட்சிகள் சார்லி சாப்ளின் படங்கள் சாயல்


2. இந்தப்படத்தின் மார்க்கெட்டிங்க் மகா மோசம். போஸ்டர் டிசைன் எல்லாம் ஹீரோ சைக்கிளில் நிற்கும் காமெடிப்படம் போல் தோற்றம். இது அழகிய கவிதை மாதிரி லவ் ஸ்டோரி, போஸ்டர் டிசைன் மணிரத்னத்தின் கீதாஞ்சலி, மவுன ராகம் போல் அமைந்திருந்தால் செமயா இருந்திருக்கும். படத்துக்கான ஓப்பனிங்க் கிடைக்காததுக்கு காரணம் போஸ்டர் தான் ( பி & சி செண்ட்டரில் படம் சரியா போகலை ) 


3. ஹீரோ அடிக்கடி ரயிலில் ஜன்னலில் பிடி போட்டு ரயிலுடன் பயணித்து விளக்குக்க்ம்பத்தில் மோதி கீழே விழறார், கம்பமும் விழுது. அது எப்படி? சைக்கிள் தான் டேமேஜ் ஆகும். இரும்பு கம்பம் சாதா லைட் வெயிட் லேடீஸ் சைக்கிள் மோதி கீழே விழுமா?


4. அடிக்கடி ஹீரோ கதவில் மோதி இடிச்சுக்குவது ஆல்ரெடி சாகர் ஹிந்திப்படம் முதல் பல படங்களில் கமல் செஞ்சதுதான், சிப்பிக்குள் முத்து , மூன்றாம் பிறை , பாச வலை போன்ற கமல் படங்கள் தாக்கம் ஆங்காங்கே 


5. இலியானா பாரம்பரியம் மிக்க குடும்பப்பெண்ணாக நெற்றி வகிட்டில் குங்குமம் வைத்து வர்றார், ஆனால் நெற்றியில் ஸ்டிக்கர் பொட்டு. அது எப்படி? அவர் அம்மா கேரக்டர் நெற்றி வகிடு , நெற்றியில் குங்குமம் வெச்சு வர்றாரே? அதே போல் இலியானாவையும் நடிக்க வைக்கலையே? 


6. திரைக்கதை அமைப்பு சாதா ஜனங்களுக்கு புரியாது. நான் லீனியர் ஸ்க்ரீன்ப்ளே. தேவையே இல்லை. நேரடியா ஒரே நேர் கோட்டில் கதை சொல்லி இருக்கலாம் 


7. ஒரு பென்ச் ரசிகனின் கேள்வி. படத்தில் ஹீரோவுக்கும் ப், பிரியங்காவுக்கும் மேரேஜ் ஆகுது. பல வருடங்கள் ஒண்ணா வாழறாங்க, ஆனா குழந்தை இல்லை, சோ அவங்களூக்கு இடையே மேட்டர் நடந்ததா? இல்லையா? என்பதை நாசூக்காகவாவது சொல்லி இருக்க வேண்டாமா? 


8. இலியானா தன் புருஷனை அம்போன்னு விட்டுட்டு வந்துடறார், புருஷன் மிக்சர் பார்ட்டியா? எந்த ஸ்டெப்பும் எடுக்கலையா? அவர் காலம் முழுக்க ஹீரோவுக்கும், பிரியங்காவுக்கும் சேவை செஞ்சாரா? ஹீரோ கூட மேட்டர் பண்ணாரா? என்ற  கேள்வுக்கும் தெளிவான விடை இல்லை . (  நெம்பர் 7 , 8 கேள்வி சந்தேகங்கள் எழுப்பிய பெஞ்ச் ரசிகன் நான் தான் ஹி ஹி )


9.ஒரு  சீன்ல சன்பாத் எடுக்கும் ஆண் நிர்வாணமா படுத்திருக்கார், அவர் இடுப்பருகே பேப்பர், அந்த நியூஸ்பேப்பரில் ஹீரோவை போலீஸ் தேடும் விளம்பரம், ஹீரோ அந்த பேப்பரை பார்க்க ,, அந்த ஆள் ஹீரோவை ஹோமோ என நினைக்க மேற்படி காமெடி ஹாலிவுட்டுக்கு ஓக்கே, ஆனா இங்கெ? அதே சீனை ஒரு பெண்ணை வைத்து எடுத்திருந்தா கிளாமருக்கு கிளாமர், கிளு கிளுப்புக்கு  கிளு கிளுப்பு


10. மன நலம் குன்றிய பிரியங்கா ஒரு சினில்  நெம்பர் டூ போக  சல்வாரை உயர்த்தி நிக்கரை கழட்டுன்னு ஹீரோ கிட்டே சொல்றார். அந்த சீனில் கேமரா ஹீரோயினுக்கு பேக்கில் வைக்கப்படிருக்கனும், கண்ணியத்துக்கு கண்ணியம். எதிர்பார்ப்பான கிளு கிளுப்புக்கு கிளுகிளுப்பு . கேமரா ஹீரோயினுக்கு முன்னால பட்டவர்த்தனமா வெச்சிருக்க வேணாம்.


http://zns.india.com/upload/2012/9/23/priyanka-barfi.jpg


சி.பி கமெண்ட் - இது வித்தியாசமான அனுபவம் தரும் நல்ல காதல் கதைதான். ஆனால் ஆஸ்காருக்கு அனுப்பி பிரமாதப்படுத்தும் அளவு ஒரிஜினல் சரக்கு இல்லை. அதாவது வழக்கு எண்  18 /9 படம்  20 கிமீ வேகத்தில் ஓடும் இளைஞன் எனில் பர்ஃபி 30 கிமீ வேகத்தில் ஊக்க மருந்து சாப்பிட்டு ஓடும் இளைஞன். குவாலிட்டியில் ஒரு படி கீழே இருந்தாலும் வழக்கு எண்  18 /9  தான் நல்ல படம். மசாலா ரசிகர்கள், மாமூல் ஆக்‌ஷன் பட விரும்பிகளுக்கு படம் பிடிக்காது. ஏ செண்ட்டரில் மட்டுமே ஓடும். ஈரோட்டில் வெள்ளிகிழமை ரிலீஸ் ஆகி 2 நாள் தான் ஓடுச்சு. நான் பார்க்கும்போது தியேட்டரில் 12 பேர்தான்.

http://content.internetvideoarchive.com/content/photos/7918/702611_131.jpg

2 comments:

Anonymous said...

Nalla vimarsanam. Thupakki, poda podi, kumki. Entha padam first. Online booking paniyacha.

கோலா பூரி. said...

realy picture superb. mumbaila iruppathaala udane paathassu. vimarisanam nallaa irukku.