Saturday, October 06, 2012

ஊறுகாய் - ஆந்திரா

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjFxYPMoKojLxp2zgIO7MOlqvggJS9tUmcftx0l6eashtp605L9afqPvX8UyuzC9w2ROnD3rseVoGN8MP7Dhfh0LuBT_L_M6hYsmoYAHheq0r0gCRJHGzfHlh2845b74YcG7edrx8__scI/s320/cucumber_pickle_andhra_dosavakaya.JPG
 
ஆந்திராவில் உள்ள கோனசீமா டெல்டா பகுதியைச் சேர்ந்த இரண்டு கிராமங்கள் நாக்கில் நீர் ஊறவைக்கும் ஊறுகாய்த் தொழில் மூலம் உலகமெங்கும் பிரபலமடைந்துள்ளன. அதுபற்றி கிருஷ்ணா சாய்ராம்


தென்னிந்திய உண வைப் பொறுத்த வரை காரசாரமான ஊறுகாய் இல்லா மல் நிறைவடைவதில்லை. ஆந்திரப் பிரதேச மாநிலத்தி¢ல் உள்ள கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் கோனசீமா பாசனப் பகுதியில் தயாராகும் ஊறுகாய்களுக்கு இணையாக வேறு இல்லை. அங்கம்பாலம் மற்றும் நற்கடிபள்ளி ஆகிய இரண்டு தீவுக் கிராமங்கள்தான் இரண்டு நூற்றாண்டு களாக ஊறுகாய்த் தொழிலில் கொடிகட்டிப் பறக்கின்றன. ஆந்திரா வின் நீர்வளமுள்ள இப்பகுதியில் மாங்காய் மட்டுமின்றி பழங்கள், காய்கறிகள் எனப் பலவகைகளில் ஊறுகாய்கள் தயாராகின்றன.



ஆந்திர மாநிலத்தில் உள்ள வாடிக்கையாளர்களுக்காக பாலிதீன் பைகளிலும், ஆந்திராவுக்கு வெளியேயும் பிற நாடுகளுக்கும் மண் ஜாடிகளிலும் ஊறுகாய்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.


அங்கம்பாலம், நற்கடிபள்ளி ஆகிய இரண்டு கிராமங்களில் உள்ள எல்லா  வீடுகளிலும்  ஊறுகாய் மணம் வீசுகிறது. இந்த குடிசைத் தொழில் ஆண்டுக்கு 25  கோடி ரூபாய் வருவாயை அளிக்கிறது. ஆந்திரப் பிரதேச மாநிலத்திலிருந்து பிற மாநிலங் களுக்கும், நாடுகளுக்கும் வேலைக்காகக் குடிபெயர்ந்த மருத்துவர்களும், பொறியாளர்களும் தான்  கோனசீமா  ஊறுகாய்களைப் பிரபலப்படுத்தினார்கள்.



 ஏற்றுமதி அதிகரிக்கும்போது புதிய வாடிக்கையாளர்கள் உருவாகி இந்த இரு கிராமங்களும் ஊறுகாய் தொழிலில் செழிக்கத் தொடங்கின. இங்குள்ள மக்கள் தங்களது தொழில் முனைவுத் திறனாலும் சிறப்பான தொடர்பு கொள்ளும் திறனாலும் பாரம் பரியத் தொழிலான விவசாயத்தையே விட்டுவிட்டனர். “விவசாயம் வருவாயைத் தரவில்லை. அதனால் இங்கு ஊறுகாய்த் தொழிலை 170 ஆண்டுகளுக்கு முன்பு தொடங் கினோம்” என்கிறார் நற்கடிபள்ளியைச் சேர்ந்த கோபி ஹனுமந்து பலம்.



கிழக்கு மற்றும் மேற்கு கோதாவரி மாவட்டங்கள் தொடர்ந்த வெள்ளங்களால் பாதிக்கப்படுபவை. இதனால் அங்குள்ள மக்கள் இயற்கைப் பேரிடர்களால் தொடர்ந்து அவதிப்பட்டு வந்தனர். இந்த நிலையில், 150 ஆண்டுகளுக்கு முன்பு சர். ஆர்தர் காட்டன்  மிகப்பெரிய  அணை ஒன்றை கட்டி இப்பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைத்தார். இந்த அணை கட்டப்பட்ட பிறகுதான் இம்மாவட்ட மக்கள் நிம்மதியையும், வளத்தையும் அடைந்தனர்.



“ஆண்டு முழுவதும் பயன் படுத்துமாறு பிட்லா வெங்கடேஸ்வரலு என்பவர்தான் முதலில் ஊறுகாய்களைத் தயார் செய்தார். தொடர்ந்த பஞ்சம் இந்த ஊறுகாய்த் தொழிலை வியாபாரமாக மாற்றுவதற்கு அவரை உந்தியது. இந்தத் தொழில் படிப்படியாக உறவினர்களால் விரிவுபடுத்தப்பட்டு, முழு கிராமத்திற்கும் பரவியது” என்கிறார் பலம்.


ஏழு தலைமுறைகளாக இத்தொழில் இக்கிராமங்களில் செழித்து வருகிறது. ஒவ்வொரு ஆண்டும்  ஊறு காய்களைச் செய்யத் தொடங்கும்    போது சடங்குகள் செய்யப்படு கின்றன. வசந்த காலம் வரும்போது அங்காளம்மா என்ற கிராம தெய்வத்தை வணங்கி படையல் கொடுக்கின்றனர். சாதி, இன வித்தியாசமின்றி மாங்காய், எலுமிச்சை, மிளகாய், இஞ்சி, புளி, பாகற்காய், காட்டு நெல்லிக்காய், கத்தரிக்காய் ஆகியவற்றை வெட்டி ஊறுகாய் போட பக்குவப்படுத்துகின்றனர். மாங்காய் ஊறுகாய்களில் மட்டும் 22 வகைகள் உள்ளன. இவற்றில் பிரபலமானது ஆவக்காய்!
 http://www.tribuneindia.com/2003/20031123/chd14.jpg


பழங்கள் மற்றும் காய்கறிகளை பதப்படுத்தி சிறுதொழில் செய்பவர் களுக்கு ஆந்திர அரசு சலுகைகளை வழங்குகிறது. இதன்மூலம் கோனசீமா ஊறுகாய் தொழில் செய்பவர்கள் பயன் பெறுகின்றனர். இந்தத் தொழிலகங்கள் எப்பிஓ அமைப்பால் நிர்வகிக்கப்படுகின்றன. வீடுகளில் தொழில் செய்பவர்களுக்கு தொழில் உரிமம் தேவையில்லை.



ஆனாலும் ஊறுகாய்த் தொழில் செய்பவர்களுக்கு பிரச்னை இல்லாமல் இல்லை. அரசு அதிகாரிகள் இந்தச் சிறுதொழிலாளர்களை பெரிய கார்ப்பரேட் வியாபாரிகளின் நலனுக் காகத் தொந்தரவு படுத்துகின்றனர். ஏனெனில் அந்தப் பெரும் வியாபாரிகள் ஊறுகாய் ஏற்றுமதிக்காக உரிமங்களை வைத்திருக்கிறார்கள்.     அங்கம்பாலத் தைச்  சேர்ந்த 30 வயதான கங்கா பவானி நம்மிடம் பேசுவதற்கே தயங்குகிறார். இவரது இரண்டு மாடி கட்டட வீட்டின் முற்றம் முழுவதும் மிளகாய் வத்தலால் சிவப்பாகி இருக் கிறது. 



கங்கா பவானி தனது நாற்பது ஊழியர்களுடன் மிளகாய் வத்தலை மாவாகப் பொடி செய்வதற்குத் தயா ராகிறார். அவரது வியாபாரச் செழிப்பு அந்தச் சூழலிலேயே தெரிகிறது. “பெரிய எந்திரங்கள் வைத்து தொழில் செய்பவர்களுடன் போட்டி போடுவது சிரமமாகவே உள்ளது. எங்கள் ஊறுகாய்கள் மலிவாகவும் தரத்துடனும் இருந்தாலும் பிரியா பிக்கிள்ஸ் மற்றும் ஈநாடு குழு மத்தினருடன் போட்டியிடுவது சிரம மாக உள்ளது” என்கிறார் கங்கா பவானி.



செயற்கை வேதிப்பொருட்களை ருசிக்காகவோ, நீண்டகாலம் நிலைத்திருக்கவோ பயன்படுத்து வதில்லை என்கிறார் நற்கடிபள்ளியைச்  சேர்ந்த நரசிம்ம மூர்த்தி. இந்தக் கிராமத்தில் இருந்து திருமணம் செய்து வெளியேறும் பெண்கள் தங்களோடு ஊறுகாய் தொழிலையும் எடுத்துச் செல்கின்றனர். இக்கிராமத்தின் சுமார் 150 மருமகன்கள் இத்தொழிலில் உள்ளனர். 
 
 
தொடர்ந்து வரும் போட்டி களாலும் சவால்களாலும் இளம் தலைமுறையினர் உயர்கல்விக் குச் செல்லாமல் பள்ளிக் கல்வியை முடித்துவிட்டு இத் தொழிலில் ஈடுபடத் தொடங்குகின்றனர். இது அந்தக் கிராமத்திற்கு நல்லதா? கெட்டதா? என்று அவர்களைக் கேட்டால் தெரியவில்லை.   
 
நன்றி - த சண்டே இந்தியன்



http://www.uyirmmai.com/Images/ContentImages/uyirosai-98/stin7.jpg

0 comments: