Saturday, October 27, 2012

சிதறிய தேமுதிக , பதறிய கேப்டன், கதறிய பிரஸ் ரிப்போர்ட்டர்ஸ்

தின மணி செய்தி 1 - மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தில் தேமுதிக தலைவர் விஜயகாந்த், தனது கட்சியினருடன் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.


நேற்று இரண்டு தேமுதிக எம்.எல்.ஏக்கள் முதல்வர் ஜெயலலிதாவைச் சந்தித்து, பாராட்டு தெரிவித்தனர். இன்றும் இரண்டு தேமுதிக எம்.எல்.ஏக்கள் முதல்வரைச் சந்தித்து பாராட்டு தெரிவித்துள்ளனர். இந்நிலையில், தொடர்ந்து கட்சி எம்.எல்.ஏக்கள் தேமுதிக.வில் இருந்து விலகுவார்கள் என்று கூறப்படும் தகவல்கள் குறித்து, அவர் கட்சியினருடன் அவசர ஆலோசனையில் ஈடுபட்டார்.


முன்னதாக, இன்று காலை மதுரை விமான நிலையத்தில் வந்திறங்கிய அவரை கட்சியினர் யாரும் வரவேற்க வரவேண்டாம் என்று தடை விதித்துவிட்டார் விஜயகாந்த்.



 தின மணி செய்தி 2

தேமுதிக சட்டமன்ற உறுப்பினர்கள் இருவர் தங்கள் ஆதரவாளர்களுடன் சென்று முதல்வரைச் சந்தித்து, அரசின் செயல்பாடுகளுக்கு பாராட்டு தெரிவித்தனர்.


மதுரை மத்திய தொகுதி தேமுதிக சட்டமன்ற உறுப்பினர் ஆர்.சுந்தர்ராஜன், திட்டக்குடி  தேமுதிக சட்டமன்ற உறுப்பினர் க.தமிழழகன் இருவரும் தங்கள் ஆதரவாளர்களுடன் சென்று முதல்வரைச் சந்தித்தனர். முதல்வருக்கு தங்கள் வாழ்த்துகளைத் தெரிவித்த அவர்கள், தமிழக அரசு சிறப்பாகச் செயல்படுவதாகக் கூறி பாராட்டினர். மேலும், தங்கள் தொகுதி வளர்ச்சிப் பணிகளுக்கு தமிழக அரசின் உதவியையும் ஆதரவையும் கோரினர்.


இந்நிலையில், தேமுதிக சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கள் ஆதரவாளர்களுடன் முதல்வரைச் சந்திக்கச் சென்றதால், அவர்கள் இருவரும் அதிமுகவில் இணையவுள்ளதாகவும், அதற்காகவே அவர்கள் முதல்வரைச் சந்திக்கச் சென்றதாகவும் மதுரையில் இன்று காலை முதல் பரபரப்பாகப் பேசப்பட்டது.


தேமுதிக தலைவர் விஜயகாந்த், அரசுக்கு எதிரான நிலைப்பாடு எடுத்து அரசையும் ஆட்சியையும் விமர்சித்து பல இடங்களில் பேசி வருகிறார். இந்நிலையில், அவரது கட்சி எம்.எல்.ஏக்கள் இருவர் முதல்வரை தலைமைச் செயலகத்தில் சந்தித்துப் பேசியிருப்பது பெரும் ஆச்சரியத்தையும் அதிர்ச்சியையும் கட்சிக்குள்  ஏற்படுத்தியுள்ளது. எனவே விஜயகாந்த் இவர்கள் இருவர் மீதும் நடவடிக்கை எடுக்க முற்படுவார் என்று கட்சி வட்டாரங்களில் பேசப்படுகிறது.


 தின மணி செய்தி 3
தேமுதிக எம்எல்ஏக்களான அருண்பாண்டியன் மற்றும் மைக்கேல் ராயப்பன் ஆகியோர் இன்று தமிழக முதல்வரை சந்தித்துள்ளனர்.
பேராவூரணி தொகுதி தேமுதிக எம்எல்ஏ அருண்பாண்டியனும், ராதாபுரம் தொகுதி தேமுதிக எம்எல்ஏ மைக்கேல் ராயப்பனும் இன்று தலைமைச் செயலகத்தில் தமிழக முதல்வரை சந்தித்து, அவரது தலைமையிலான அரசின் நடவடிக்கை குறித்து பாராட்டுத் தெரிவித்துள்ளனர்.
நேற்று  தேமுதிக எம்எல்ஏக்கள் தமிழ்அழகன் மற்றும் சுந்தரராஜன் ஆகியோர் முதல்வரை சந்தித்துள்ள நிலையில், இன்று அருண்பாண்டியன் மற்றும் மைக்கேல் ராயப்பன் முதல்வரை சந்தித்திருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 ஒன் இண்டியா தட்ஸ் தமிழ் செய்தி 

நாய்..நாய்..மைக்கைத் தூக்கிட்டு வந்துறீங்க.. பத்திரிகையாளர்களை கேவலமாக திட்டிய விஜயகாந்த்




 Vijayakanth Slam Media

சென்னை: தேமுதிக எம்.எல்.ஏக்கள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்தது பற்றி கேள்வி எழுப்பியதற்கு பத்திரிகையாளர்களை சகட்டு மேனிக்கு திட்டித் தீர்த்துவிட்டார் அக்கட்சி தலைவர் விஜயகாந்த்.


தமிழக முதல்வர் ஜெயலலிதாவை நேற்று தேமுதிக எம்.எல்.ஏக்கள் சுந்தரராஜனும் தமிழ் அழகனும் சந்தித்துப் பேசினர். இதனைத் தொடர்ந்து தேமுதிகவில் பிளவு வெளிப்படையாக வெடித்தது.


இந்நிலையில் இன்று காலை சென்னை விமான நிலையத்தில் மதுரை செல்வதற்காக வந்த தேமுதிக தலைவர் விஜயகாந்திடம் செய்தியாளர்கள், ஜெயலலிதாவுடனான எம்.எல்.ஏக்கள் சந்திப்பு பற்றி கேள்வி எழுப்பினர். இதில் கடுப்பாகிப் போன கேப்டன் விஜயகாந்த், பத்திரிகையாளர்களை கண்டபடி திட்டித் தீர்த்துவிட்டார்.


ஒருகட்டத்தில். நாய்..நாய்களா.. எங்க போனாலும் மைக்கை தூக்கிட்டு வந்துடுவீங்களா..உங்களுக்கு சம்பளம் கொடுக்கலையா? என்று ஏகத்துக்கும் ஒருமையில் பேசினார்.


பத்திரிகையாளர்களைத் திட்டுவதில் மட்டுமே குறியாக இருந்த விஜயகாந்த் கடைசிவரை கேட்ட கேள்விக்கு பதில் எதுவும் சொல்லாமலேயே எஸ்கேப் ஆகிவிட்டார்.



கூட்டணியில் இருந்து விலகிய விஜயகாந்த், தமிழக அரசை கடுமையாக விமர்சித்து வரும் நிலையில், அவரது கட்சியைசேர்ந்த இரு எம்.எல்.ஏ.,க்கள், அ.தி.மு.க., வலையில் விழுந்துள்ளனர்.
தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஜெயலலிதாவை, நேற்று காலை, 8:50 மணிக்கு, தே.மு.தி.க.,வைச் சேர்ந்த, மதுரை மத்திய தொகுதி எம்.எல்.ஏ., சுந்தர்ராஜன் மற்றும் திட்டக்குடி எம்.எல்.ஏ., தமிழழகன் ஆகிய இருவரும், திடீரென சந்தித்தனர். பின், இரு எம்.எல்.ஏ.,க்களும் தமிழக அரசுக்கு பாராட்டு தெரிவித்து, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளனர்.
நற்சான்றிதழ்:

பத்து நிமிட சந்திப்புக்கு பிறகு, செய்தியாளர்களிடம் அவர்கள் கூறுகையில், "தொகுதியில் நிறைவேற்ற வேண்டிய திட்டங்கள் தொடர்பாக முதல்வரை சந்தித்து மனு கொடுத்‌‌தோம்; இந்த அரசு, நல்ல அரசாக செயல்பட்டு வருகிறது' என, நற்சான்றிதழ் அளித்தனர்.தே.மு.தி.க., - எம்.எல்.ஏ.,க்கள் இருவரும், அக்கட்சியின் கரைவேட்டியுடன், கட்சி கொடி கட்டிய காரில் வந்திருந்தனர். இவர்களது சந்திப்பு,தே.மு.தி.க., வட்டாரத்திலும், அரசியல் வட்டாரத்திலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வீட்டில் ஆலோசனை :

சென்னை, விருகம்பாக்கம் வீட்டில் இருந்த விஜயகாந்திற்கு, எம்.எல்.ஏ.,க்கள் சந்திப்பு குறித்த செய்தி, உடனுக்குடன், மொபைல் போன் மூலம் தெரிவிக்கப்பட்டது. அதிர்ச்சி அடைந்தஅவர்,கட்சி நிர்வாகிகள் இருவரையும், உதவியாளரையும்,மைத்துனர் சுதீஷையும்,போனில் தொடர்பு கொண்டு, ஆலோசனை நடத்தினார். பெரும் எண்ணிக்கையிலான பத்திரிகையாளர்கள், கட்சி அலுவலகத்தில், காத்திருப்பதாக கிடைத்த தகவலையடுத்து, விஜயகாந்த் அலுவலகம் வருவதை தவிர்த்து விட்டதாக கூறப்படுகிறது
. அதேநேரத்தில், மதுரை கோரிப்பாளையம் தர்காவில், தே.மு.தி.க., சார்பில், தனது தலைமையில் இன்று, மாலை 4:00 மணிக்கு, பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படும், என்ற அறிக்கையை, விஜயகாந்த் வெளியிட்டார்.கட்சி அலுவலகத்திற்கு வந்த, அவைத் தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன், பாண்டியராஜன் எம்.எல்.ஏ., உள்ளிட்@டாரும், எவ்வித கருத்தையும் தெரிவிக்கவில்லை.
கவலையில்லை :

தன்னை தொடர்பு கொண்ட கட்சி நிர்வாகிகள் சிலரிடம்பேசிய விஜயகாந்த், "யார் கட்சியை விட்டுப் போனாலும், எனக்கு கவலையில்லை. வேறு கட்சிக்கு போக திட்டமிட்டவர்கள், போய்த்தான் தீருவார்கள்; அவர்களை என்ன செய்தாலும், தடுக்க முடியாது' என, தெரிவித்ததாக கூறப்படுகிறது.மேலும், "கடந்த ஆட்சியில், அ.தி.மு.க., முக்கியப் புள்ளிகள் பலர், தி.மு.க.,வுக்கு தாவினர். எனவே, அதைப் பற்றியெல்லாம் கவலைப்பட்டால் அரசியல் நடத்த முடியாது; எதிர்க்கட்சி தலைவர் பதவியை தக்கவைத்துக் கொள்ள, எம்.எல்.ஏ.,க்களை அழைத்து கெஞ்சப் போவதில்லை' என்று, கூறியதாக தெரிகிறது.
Advertisement
இன்று தெரியும்:முதல்வரை சந்தித்த எம்.எல்.ஏ.,க்களின் பதவி பறிக்கப்படலாம் என்ற தகவல், தே.மு.தி.க., வட்டாரத்தில் பரவியுள்ளது. இது தொடர்பாக, சட்ட நுணுக்கங்கள் குறித்து, அக்கட்சி வழக்கறிஞர்களுடன், விஜயகாந்த், நேற்று மாலை நீண்ட ஆலோசனை நடத்தியுள்ளார்.இன்று மதுரையில் நடக்கும் பக்ரீத் விழாவில், முதல்வர் - எம்.எல்.ஏ.,க்கள் சந்திப்பு குறித்து, தனது கருத்தை விஜயகாந்த், வெளிப்படையாக வெளியிடுவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-




நன்றி - தினமணி , ஒன் இண்டியா,தினமலர்

diSki - விஜயகாந்த் நிருபரை கேவலமாகத் திட்டிய வீடியோ காட்சி | அட்ரா சக்க

http://www.adrasaka.com/2012/10/blog-post_4792.html

0 comments: