Sunday, October 21, 2012

அனிருத் - கொலை வெறி ஹிட்டர்


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgtUnAjFOu6HR0sWEQywYCaXyNx9X8X3a-EubnvsMYH218iJTnGVESSZdMIOHyaz078RQJxtKQgCzaMWdMZGpOCwiIvkBibyPSG6emapOKqWwJM_ETlAmBTRnsap6V9Tru8zCCTSAbNrKQ/s1600/0.jpg 

கொலவெறி பாடலுக்கு இசை சேர்த்த அனிருத் ரவிச்சந்தர், தற்போதுதான் லயோலா கல்லூரியில் பி.காம் முடித்திருக்கிறார். இனி இசைதான் வாழ்க்கையின் பயணம். ஐஸ்வர்யா தனுஷ் இயக்கும் 3 படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத். ஐஸ்வர்யாவின் மாமா ரவிச்சந்தரின் மகன். தனது அத்தை மகள் இயக்கிய பத்து குறும்படங்களில் பள்ளியில் படிக்கும்போதிருந்தே பின்னணி இசை சேர்த்தவர் அனிருத். ஒரே பாடலில் உச்சத்தைத் தொட்ட அதிர்ஷ்டசாலி.

அனிருத்  நான்காவது வயதிலிருந்து பியானோவை கற்றுக்கொள்ளத் தொடங்கியவர். பதினோராம் வகுப்பில் படிக்கும்போது கர்நாடக இசையுடன் சேர்ந்த வெஸ்டர்ன் மியூசிக் பியூஷன் செய்திருக்கிறார். அவர் மேற்கத்திய இசை பயின்றது டிரினிட்டி மியூசிக் ஸ்கூலில்.


"பள்ளியில் படிக்கும்போதிருந்தே இசைதான் ஒரே நோக்கமாக இருந்தது. பத்மாசேஷாத்ரி பாலபவன் பள்ளியில் சிங்க்ஸ் என்ற பெயரில் பேண்ட் வைத்திருந்தோம். லயோலா கல்லூரி வந்ததும் ராக் பேண்ட் ஆரம்பித்தோம். அதற்காக நானே டியூன் போட்டு பாடல்கள் எழுதினேன். ஐநூறுக்கும் அதிகமான சிறு பாடல்களை எழுதியிருக்கிறேன். பெரும்பாலும் அவை வரிகளாக இருக்காது. டியூன்களாக இருக்கும். ஆனாலும் பல்லவி, அனுபல்லவி, சரணம் என்று பாடல்களுக்கான வடிவம் இருக்கும்" என்று பேசத் தொடங்கும் அனிருத், பதினொன்றாம் வகுப்பு  படிக்கும்போது ஏ.ஆர்.ரகுமான் நடுவராக இருந்த ஊ...ல...லா என்ற  சன் டிவி  போட்டியில் வென்றிருக்கிறார்.


"அந்தப் போட்டியில் கலந்து கொள்ளும்வரை விளையாட்டாகத்தான் இருந்தேன். ஏதோ இசைக்குழு வைத்திருந்தோம் என்பதைத்தவிர உருப்படியான முயற்சிகள் எதையும் செய்யவில்லை. ரகுமான்  கையால் பரிசு வாங்கிய கணத்திலிருந்தே இசையில் தீவிரமாக இருக்க ஆரம்பித்தோம். அதன் விளைவுதான் ஐஸ்வர்யாவின் குறும்படங்களில் இசையமைக்கும் வாய்ப்புகள் கிடைத்தன. அது ஒய் திஸ் கொல வெறிடி  பாடலின் உச்சகட்ட வெற்றி வரை வந்திருக்கிறது" என்கிறார்.


3 படத்தில் ஆறு பாடல்கள் இடம்பெறுகின்றன. அதற்கான இசை வேலைகளில் கவனம் செலுத்திவரும் அனிருத், இந்தப் பாடல் அடைந்த வெற்றியை நம்பமுடியாமல் இருக்கிறார். "ஒரு பாடலில் இப்படியொரு புகழை யாரும் அடைந்த தில்லை என்று சொல்கிறார்கள். எனக்கு அந்த வரம் கிடைத்திருக்கிறது. ஆண்டவன் கருணையால் எனக்கு அது நடந்திருக்கிறது. இந்த அளவுக்கு பாடல் மக்களிடம் போய்ச் சேரும் என்று நினைக்கவில்லை. கீபோர்டில் விளையாட்டாக ஒரு ட்யூனை வாசித்துக்காட்டினேன். அதற்கு டம்மியாக தனுஷ் பாடிக்காட்டினார். அதுவே எல்லோருக்கும் பிடித்துப்போய் விட்டது. அந்தப் பாடலில் தமிழ் நாட்டுப்புற இசையின் கூறுகளும் இருக்கும். அந்தப் பாடலே காமெடியாக இருக்கும். இதை  ரஜினி சார் கேட்டுவிட்டு கண்டிப்பாக பெரிய ஹிட் ஆகும் என்று சொன்னார். இது உண்மையில் நடந்துவிட்டது" என்று மகிழ்ச்சியை வெளிப்படுத்துகிறார்.


ஸ்காட்லாந்திலிருந்து 70 வயதான ஒரு மனிதர் அனிருத்துக்கு பேஸ்புக்கில் செய்தி அனுப்பியிருக்கிறார். ஒய் திஸ் கொலவெறிடி பாடலை ஆயிரம் தடவை கேட்டிருப்பேன். எனக்கு மொழி தெரியாது. ஆனாலும் அதை கேட்கும்போதெல்லாம் மகிழ்ச்சி அடைகிறேன் என்று சொல்லி யிருக்கிறாராம்.


"இந்தப் பாடல் மிகப்பெரிய வெற்றியை அடைந்ததும்  மனம் பரபரப்பாக இருந்தது. இரண்டு நாட்கள் அப்படி இருந்தேன். அதுவே எல்லாம் அல்ல என்¢று புரிந்துகொண்டேன். இப்போது இசையில் ஆத்மபூர்வமாக நான் ஈடுபடுகிறேன்" என்று ஞானம் பெற்ற இளைஞராகப் பேசுகிறார் அனிருத்.   
நன்றி - த சண்டே இந்தியன் 

2 comments:

முத்தரசு said...

சித்தப்பு,

பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்

'பரிவை' சே.குமார் said...

happy birthday anna.