Monday, October 15, 2012

BHOOT RETURNS - சினிமா விமர்சனம்

http://cdn.koimoi.com/wp-content/new-galleries/2012/10/Bhoot-Returns-Review.jpg

ஹீரோ ஒரு ஆர்க்கிடெக் இஞ்சினியர், அவருக்கு ஒரு சம்சாரம், ஒரு தங்கச்சி, ஒரு பையன், ஒரு பொண்ணு. இந்த ஃபேமிலி ஒரு புது வீட்டுக்கு குடி போகுது. சீப் ரேட்ல கிடைச்சதால சரியா விசாரிக்காம வாங்கிட்டாங்க.. அந்த வீட்டுக்குள்ளே தான் மொத்தப்படமுமே. இந்த 5 கேரக்டர்கள் தான். சம்பள செலவும் மிச்சம், அவுட்டோர் ஷூட்டிங்க் செலவும் மிச்சம்.// நமக்கு தலை வலி தான் மிச்சம்


அந்த வீட்டுக்குள்ளே நைட் மட்டும் சில அமானுஷ்ய சத்தம் கேட்குது. டொக் டொக்னு கதவு தட்டும் சத்தம் , யாரோ கத்தும் சத்தம். இருக்கற மின் வெட்டு பிரச்சனை பத்தாதுன்னு மின்சாரக்கட்டணத்தையும் , டீசல் விலையும் உயர்த்துன கதையா  ஹீரோவோட மகள் கூட ஒரு ஆவி பழகுது. அது எப்பவும் கைல ஒரு பொம்மையை வெச்சிருக்கு.

 ஆல்ரெடி நாம பல படங்கள்ல பார்த்த அதே கதை, சம்பவங்கள் தான் என்பதால் சலிப்பு.. 

ஹீரோவா சக்ரவர்த்தி , இவர் முகம் பூரா தாடி என்பதால் உணர்ச்சிகளை காட்டலைன்னு எவனும் குறை சொல்ல முடியாது, ஏன்னா தாடி மறைச்சிடுச்சுன்னு சமாளிக்கலாம். வந்தவரை ஓக்கே.


 ஹீரோயின் மணிஷா கொய்ராலா .நிமோனியா வந்த பேஷண்ட் மாதிரி இளைச்சு பாப் கட்டிங்க் எல்லாம் பண்ணி கன்றாவியா இருக்கார்.குச்சி குச்சி ராக்கம்மா  தேறாது.. நடிப்பு நளினி , ஜீவிதா ரேஞ்சுக்கு எல்லாம் இல்லை.


மதுஷாலினி . பொட்டு வைக்காத முகம். அதுலயே பாதி மார்க் போயிடுது. ஏனோதானோ நடிப்பு 


 அந்த குழந்தைக்குத்தான் காசு . செம க்யூட் பேபி . அண்ட் கரெக்டான நடிப்பு . அந்தப்பையன் நடிப்பும் ஓக்கே


http://kaw.stb.s-msn.com/i/95/5CAF10409DE5A9332277A6D85168.jpg


 இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள்



1. ராம் கோபால் வர்மான்னா ஒரு பிராண்ட் நேம் இருக்கு. அதை நல்லா மிஸ் யூஸ் பண்ணிக்கிட்டது. எப்படி இருந்தாலும் நமக்குன்னு ஒரு ரசிகக்கூட்டம் இருக்கு. எப்படி படம் குடுத்தாலும் பார்ப்பாங்கன்னு அசட்டு துணிச்சல். அதனால எந்த ரிஸ்க்கும் எடுக்காம ஜஸ்ட் 40 நாட்களில் முடித்த படம். டோட்டல் செலவே  50 லட்சம் தாண்டி இருக்காது, அள்ளுனது 5 கோடி ம் ம் நல்லா வருவீங்க.. 



2. மதுஷாலினி கண்ணாடி முன் நிற்பது பின் நகரும்போது அந்த பிம்பம் கண்ணாடியிலேயே அப்படியே இருப்பது ஆல்ரெடி பல திகில் படங்களில் வந்தாலும் பார்க்க டெரராத்தான் இருக்கு. அந்த சீனில் பின்னணி இசை கலக்கல். படம் முழுவதுமே ஆர் ஆர் கவனிக்க வைத்தது 



3. ஒளிப்பதிவு , ஒலிப்பதிவு இரண்டும் சராசரிக்கும் மேலே. 3 டி எஃபக்ட்  கூட சுமார்தான் என பார்த்தவங்க சொன்னாங்க. ஈரோட்டில் 3 டி இல்லை


http://static.ibnlive.in.com/ibnlive/pix/sitepix/10_2012/bhootreturnsreview.jpg


மனம் கவர்ந்த வசனங்கள்


1. புது வீட்டுக்குள் போக சிலர் பொறுத்திருப்பதில்லை, சில வீடுகள் புது ஆட்கள் உள்ளே வருவதை விரும்புவதில்லை 



2. டாடி, என் பொம்மை ஷப்பு எங்கே இருக்கு? காணோமே? 


தெரில 


பொய் சொல்லாதீங்க டாடி. அதை நீங்க தானே எடுத்து ஒளிச்சு வெச்சீங்க? 


உனக்கு யார் சொன்னது?

 பொம்மை ஷப்பு


3.  உங்களுக்கு யாராவது எதிரி இருக்காங்களா? 


 இல்லை


 உங்களையா கேட்டேன்? அவங்க 2 பேரையும் கேட்டேன் 


 இன்ஸ்பெக்டர், அவங்க 2 பேரும் என் ஃபேமிலி மெம்பர்ஸ் தான்..நாங்க எல்லாரும் 1 தான் 


 அப்டி இருக்க முடியாது, போலீஸ் கண்ட்ரோல்ல வந்துட்டா ஃபேமிலி மெம்பர்ஸ்னாலும் தனித்தனி  கருத்து இருக்குமே/


 http://blog.bookmyshow.com/wp-content/uploads/image/BMS%20Reviews/BHOOT%20RETURNS/bhoot%20returns1.jpeg

இயக்குரிடம் கோபமாய் சில கேள்விகள்



1. நடுராத்திரில யாரோ கதவை தட்டறாங்க. அது புது வீடு. அந்த பயம் பொதுவா இருக்கும். என்னதான் பொண்டாட்டிங்க புருஷன் பேச்சை மதிக்காம இருந்தாலும் இந்த மாதிரி சிக்கலான நேரங்கள்ல என்னங்க? ஏதோ சத்தம் வருது என்னன்னு பாருங்கன்னு நம்மைதான் பொண்ட்டாட்டிங்க மாட்டி விடுவாங்க.. ஆனா மனீஷா மிட் நைட்ல தட தடன்னு சத்தம் கேட்டதும் தான் தனியா எந்திரிச்சு தெனாவெட்டா போறாங்களெ? அவங்க என்ன விஜய சாந்தியா?


2.  பொம்மையால தான் குழப்பம், அதுதான் பேய்னு கிட்டத்தட்ட முடிவான பின் காலுக்குதவாத செருப்புன்னு அதை தூக்கி வெளில கடாசாம அந்த பொம்மையை ஏன் பரண்ல வைக்கனும்? அது தட்டு முட்டுச்சாமானா? அரிதான பொருளா? என்ன தான் காஸ்ட்லியா இருந்தாலும் யாராவது ராஜ நாகத்தை உள் பாக்கெட்ல வைப்பாங்களா? 


3. ஒரு சீன்ல பேய் மதுஷாலினி போர்த்தி இருக்கும் போர்வையை ஸ்டெப் ஸ்டெப்பா உருவுது, அப்போ அவர் 4 இஞ்ச் இறக்கம் உள்ள ஒரே ஒரு ஷார்ட்ஸ் தான் போட்டிருக்கார், ஆடியன்ஸ்க்கு கிளு கிளுப்புத்தான், ஆனா பாருங்க நாங்க கிளூ கிளுப்பை விட லாஜிக்கை தான் பார்ப்போம். அந்த பேய் ஒரு பெண் குழந்தை பேய்னு சூசகமா சொல்லப்படுது. அது ஏன் அப்படி போர்வையை உருவனும்? அது என்ன நம்பியாரா? பி எஸ் வீரப்பாவா? மன்சூர் அலிகானா? போர்வையை உருவி ரேப்பா பண்ணப்போகுது?


4. பொதுவா பொண்ணுங்க நைட்ல தூங்கும்போது நைட்டி அல்லது லூஸ் சுடி தான் போட்டு படுப்பாங்க ( இந்த ஜெனரல் நாலெட்ஜை  என் சம்சாரம் மூலம் தெரிஞ்சுக்கிட்டேன், மற்றபடி பல பெண்கள் தூங்குனப்போ போய் எல்லாம் பார்க்கலை )  அப்படி இருக்கும்போது மது ஷாலினி நைட் டைம்ல கூட ஷார்ட்ஸ் சர்ட் எல்லாம் போட்டு இன் பண்ணி பெல்ட் போட்டிருக்கு.. 



5. இந்த வீட்டுக்கு குடி வரவேணாம், எனக்கு பிடிக்கலைன்னு நேரடியா பேய் ஒரு வார்த்தை சொல்லாதா? அதுக்கு இன்டைரக்ட் ஸ்பீச் தான் பிடிக்குமா?


6. ஆல்ரெடி பேய் பயம் இருக்கு. தம்பதிகள் தங்கள் குழந்தைகளோட ஒரே ரூம்ல இருக்கவேண்டியதுதானே? எதுக்கு குழந்தைகள் 2 பேரையும் தனித்தனி ரூம்ல வெச்சிருக்காங்க.. கில்மா ரொம்ப முக்கியமா? அப்படி தேவைன்னா குழந்தைகளை தூங்க வெச்சுட்டு அந்த பூஜை புனஸ்காரத்தை வெச்சுக்க முடியாதா? ஒரு சத்தம் கேட்டா உடனே எல்லா ரூமுக்கும் போய் போய் செக் பண்ணிட்டிருக்கற தண்ட வேலைக்கு நான் சொல்லும் ஐடியா பெஸ்ட் ஆச்சே? 


http://www.zorsebol.com/wp-content/uploads/2012/10/Bhoot-Returns-movie-stills.jpg


7. நடு ராத்த்ரி , ஏதோ சத்தம் கேட்டு  3 பேரும் எந்திரிக்கறாங்க. 3 பேரும் தனித்தனியா போய் தேடறாங்க. 3 பேரும் ஒரே புள்ளியில் சந்திக்கும்போது டெரர் ஆகி கத்தறாங்க.. இதுவரை ஓக்கே.. பார்க்க நல்லா இருந்துச்சு.. ரசிக்கும்படியான திகில் காட்சி. ஆனா அதுக்குப்பின் 3 பேரும் கவுண்டமணி காமெடி சீன் பார்த்த மாதிரி கெக்கே பிக்கேன்னு எதுக்கு சிரிச்சுக்கறாங்க? டெரர் டெம்போவே அவுட் ஆகுதே?காமெடி இல்லாத குறையை போக்குவதா நினைப்பா?



8. ஹீரோவோட தங்கச்சியா வர்ற மதுஷாலினியை ஹீரோயின் தங்கச்சியா காட்டி இருந்தாலாவது மச்சினி கிளுகிளுப்பாவது மிச்சம் ஆகி இருக்கும். அதுக்கும் வழி இல்லை.. படத்துல ஒரு கிளுகிளுப்பே இல்லையே? ( ரண களத்துலயும் தமிழன் கிளுகிளுப்பு எதிர்பார்ப்பான் )


 9. தன் சொந்தக்குழந்தை பேய் கிட்டே மாட்டி இருக்கு. ஒரு அப்பாவா ஹீரோ என்ன பண்ணனும்? அந்த கண்ணாடியை பக்கத்துல இருக்கும் ஸ்டூலால் உடைச்சு ரூமுக்குள்ளே போகனும். அதை விட்டுட்டு ஹீரோ கதவை சும்மா தட்டிட்டு இருக்காரே? எஸ் கம் இன் அப்டினு அந்த பேய் வந்து கதவை திறந்து விடும்னு நினைப்பா?


10. ஒரு குழந்தை செத்ததும் டக்னு அந்த வீட்டை விட்டு கிளம்பவேணாம்?  படம் முடியும் வரைக்கும் அதே வீட்ல தான் இருக்கனுமா?



11. கடைசி வரை அந்தப்பேய் யாரு? எதுக்கு அந்த கொலை பண்ணுச்சு, ஏதாவது நிறைவேறாத ஆசை இருந்துச்சா? எந்த ஃபிளாஸ் பேக் கதையும் சொல்லவே இல்லையே?

12. ஒரு சீன்ல அந்த பெண் குழந்தை பேயா மாறி அல்லது பேயால் ஆட்கொள்ளப்பட்டு தன் சொந்த அப்பாவையே கத்தியால் தாக்குது. அப்போ முதல் ஷாட்ல பாப்பா கண்ணுக்கு கீழ் ஏகப்பட்ட கரு மை அப்பி பேய் எஃபக்ட் காட்டி இருக்காங்க. அடுத்த ஷாட்ல மை இல்லை.. அதுக்கு அடுத்த ஷாட்ல லைட் ஷேடுல மை இருக்கு..  எடிட்டிங்க் ஃபால்ட்டா? 


13. போலீஸ் ஆஃபீசர் வீடு தேடி வந்து புகார் வாங்கிட்டு போவாரா? அவர் என்ன போஸ்ட் மேனா? போலீஸ் ஸ்டேஷன் போய் இவங்க புகார் தந்து அவர் இங்கே விசாரணைக்கு வருவது தானே வழக்கம்? வேலைக்காரன் கொலை செய்யப்பட்டது தெரிஞ்சதும் போலீஸ் இவங்க கைரேகை எல்லாம் எடுத்து ஏன் செக் பண்ணலை?



http://akamai.maastars.com/wp-content/uploads/2012/07/madhu_shalini_hot_gallery023.jpg



சி.பி கமெண்ட் - இந்த கேவலமான குப்பையை ஈரோடு ஸ்ரீ கிருஷ்ணாவில் பார்த்தேன். யாரும் போய் பார்க்க வேணாம், பார்க்கவும் முடியாது , ஏன்னா வெள்ளிக்கிழமை ரிலீஸ் ஆன இந்த பாங்குப்பை  2 நாளில் அதாவது இன்னைக்கு எடுத்தாச்சு ஹி ஹி ..

3 comments:

'பரிவை' சே.குமார் said...

எப்படியோ போட்டா காசைவிட அதிகமா எடுத்துட்டாங்கள்ல இனி ஓடினா என்னா ஓடாட்டா என்ன...

Menaga Sathia said...

aiyoo aiyooo...

F.NIHAZA said...

படத்தை பொழுதுபோக்குக்காக பார்த்போல தெரியலையே....
பதிவு எழுதனும் என்ற வெறியில பார்த்தபோலவே இருக்கு.....