Monday, October 29, 2012

அட்ராசக்க சி.பி எக்ஸ்க்ளூ “ஜிவ்” பேட்டி - பாகம் 19



ட்விட்டர் நண்பர் கலைவசந்த் கேள்விகள்....,


1.பார்க்க ஹேண்ட்சம்மா இருக்கீங்க.(தூ கண்ணு தெரியாத கபோதி போல) உங்களுக்கு சினிமா, டி.வில நடிக்க இதுவரை எந்த சான்சும் கிடைக்கலியா?!



காலம் போன காலத்துல இதெல்லாம் தேவையா?ன்னு எல்லாரும் கேட்கப்போறாங்க. யோவ். நான் குடும்பத்துப்பையன்யா, எனக்கு எதுக்கு சினிமா , டி வி எல்லாம், கடைசி வரைக்கும் கற்போட இருக்க ஆசைப்படறேன். ( அப்போ சினிமா , டி வி ல இருக்கற மத்தவங்க எல்லாம்?னு கேட்டு சர்ச்சை ஆக்க நினைக்காதிங்க யாரும் .. இது சும்மா ஜோக்;-)) )







2.  ட்விட், பிளக்குல கலக்குறீங்க. ஆனா, கார்க்கி, தோட்டா ராஜனைவிட உங்களுக்கு ஃபாலோயர்ஸ் குறைவா இருக்காங்க. இத பார்த்த உங்களுக்கு என்ன தோனும்?


அடடடா , இந்த கம்பேரிசனை தமிழன் விடவே மாட்டானா? சின்ன வயசுல இருந்து பக்கத்து வீட்டுப்பொண்ணை பாரு, எப்படி படிக்கறா? நீயும் தான் இருக்கியே? அப்டின்னு அப்பா திட்டுனதால ப வீ பொண்ணை பார்க்க ஆரம்பிச்சு அப்படியே   எல்லா பொண்ணுங்களையும் பார்க்க ஆரம்பிச்சதுதான் மிச்சம். அவங்கவங்க திறமைக்குத்தக்கபடி ஃபாலோயர்ஸ் இருக்கும்.


 தோட்டா நெம்பர் ஒன் ட்வீட்டர். என்னை விட பல மடங்கு திறமையானவர். கார்க்கி ட்வீட் உலகின் கிரேசி மோகன். அவங்க திறமை என்னை விட அதிகம், அப்போ ஃபாலோயர்ஸும் அதிகமா இருக்கறதுல என்ன அதிசயம்? வேணா அவங்க கிட்டே கொஞ்சம்  ஃபாலோயர்ஸ் கடன் கேட்டுப்பார்க்கிறேன் ;-))



3. பி.எஸ்,சிக்கு மேல படிக்கலைன்னு நீங்க எப்பவாவது வருத்தப்பட்டதுண்டா? (படிக்க வெச்சிருந்தா ஈரோடு மாவட்ட காலேஜ்லாம் வெளங்கியிருக்கும்.)



ஹிந்தில எம் ஏ முடிச்சிருக்கேன்,பிஜிடிசிஏ பண்ணி இருக்கேன் , அதை எல்லாம் புரொஃபைல்ல போட்டா படம் காட்டற மாதிரி ஆகிடும் .அதுவும் இல்லாம ஹோம் மினிஸ்டர் ஒரு டிகிரி ஹோல்டர் என்பதால் மேரேஜ் இன்விடேஷன்லயே ஒரு டிகிரி மட்டும் தான் போடனும்னு சீரியஸ் கட்டளை. தமிழன் அம்மா பேச்சை கேட்காம இருந்தாலும் பொண்டாட்டி பேச்சை கேட்டே ஆகவேண்டிய சூழலில் இருப்பதால் கி கி 




இனிய காலை வணக்கம்.
உடல் பலகீனமானவன் எப்படி பொறுமையாகப் பயிற்சி செய்து தன்னைப் பலப்படுத்திக் கொள்ள முடியுமோ,அதுபோல பலகீனமான எண்ணங்களை உடைய மனிதன் சரியான எண்ணங்களை வளர்த்துக்கொள்வதன் மூலம் தன் வாழ்விற்கு வலிமை ஊட்ட முடியும்.
இனிய காலை வணக்கம்.



4. நான் டிவிட்டர்ல கொஞ்ச நேரம் உக்காந்தாலே என் மனைவி என்னை கடிஞ்சுக்குறாங்க. நீங்க பிளாக், டிவிட்டர்ல பொழுதன்னைக்கும் இருக்குறதை பார்த்து உங்க மனைவி உங்க மேல கோபப்படுறது இல்லியா?


 அங்கே தான் நீங்க தப்பு பண்றீங்க , எங்க வீட்ல நெட் கனெக்‌ஷனே இல்லை, எல்லாம் ஆஃபீஸ் டைம்ல தான். சனி , ஞாயிறு லீவ்ல வீட்ல லேப்டாப்ல மற்ற 5 நாட்களுக்குத்தேவையான பதிவை டைப் பண்ணிக்குவேன். நோக்கியா 1100 ஃபோன் தான் ரொம்ப நாள் வெச்சிருந்தேன், இப்போ சமீபத்துலதான் மொபைல்ல கேலக்‌ஷி ஆண்ட்ராய்டு  ஃபோன் வாங்கி இருக்கேன். என் ஆஃபீஸ் பணி எப்பவும் ட்ராவலிங்க்லயே இருப்பேன் என்பதால் அந்த டைம்ல மொபைல் ட்வீட்ஸ்.. 

ஞாயிறு என்பது என்னைப்பொறுத்தவரை ஓய்வு நாள் அல்ல,மற்ற 6 நாட்களுக்கான பதிவுகளை தயார் செய்யும் நாள் 

வெள்ளி, சனி பார்த்த 4 படங்கள் விமர்சனம் ஞாயிறு டைப் பண்ணி திங்கள் டூ வியாழன் தினசரி 1 பதிவு


 நான் வீட்ல இருக்கும்போது டைப் பண்ண வேண்டி தேவை வந்தா நைஸா என் பாப்பாவை தூண்டி விட்டு 2 பேரையும் மாமியார்  வீட்டுக்கு பேக் பண்ணி அனுப்பிடுவேன்.1 கி மீ தூரம் தான் எங்க வீட்டுக்கும், அவங்க வீட்டுக்கும்.அடிக்கடி கோவிச்சுட்டு போக ஈசியா இருக்கும்னு அப்படி ஏற்பாடு, நாமளும் சள்ளை ( தொந்தரவு) விட்டுதுன்னு நிம்மதியா டைப்பலாம்



5. உங்களை ஃபாலோ பண்ற புது ட்விட்டரை கூட நீங்க ஃபால்லோ பண்றீங்க. எல்லா மென்ஷனுக்கும் பதில் சொல்றீங்க. இந்த நல்ல பண்பு உங்களுக்கு எப்படி வந்தது? (அப்போதானே கடலை போட முடியும்)


ட்விட்டருக்கு வந்த புதுசுல எனக்கு மென்ஷன் பார்க்கவோ, டி எம் பார்க்கவோ தெரியாது. அப்புறம் 6 மாசம் கழிச்சு பலர் ஏன் மென்ஷனுக்கு பதில் சொல்லலை? மனசுக்குள்ளே புரட்சித்தலைவின்னு நினைப்பா? ஏன்  யாரையும்  மதிப்பதே இல்லை?னு கேட்டாங்க.. நான் பதறிட்டேன்.

 ஏன்னா வீட்ல என்னை மதிக்காத என் சம்சாரத்தையே  ரொம்ப மதிக்கறவன் நான், ஃபாலோயர்சை மதிக்காம இருப்பேனா? அதனால மென்ஷன் பார்த்து பதில் சொல்ல பழகிட்டேன். ஆனா பெரும்பாலும் ஸ்மைலிதான் ;-)) 


 ஏன்னா நாம ஏதாவது காமெடியா சொல்லப்போய் அதை அண்ணன் மாயவரத்தான்  மாதிரி யாராவது ஸ்க்ரீன் ஷாட் எடுத்து நம்மை மாட்ட வெச்சுட்டா? 



6. ஈரோடுல இருக்குற எல்லா தியேட்டர் ஓனர் , மேனேஜர், அங்கு வேலை செய்யுறவங்களுக்கு உங்க முகம் நிச்சயம் பரிச்சயம் ஆகியிருக்கும். அடிக்கடி நீங்க தியேட்டர்ல படம் பார்க்க வரும்போது உங்களை அவங்க பார்க்கும்போது அவங்க ரியாக்‌ஷன் எப்படி இருக்கும்?


 படு கேவலமா பார்ப்பாங்க . எந்த குப்பை போட்டாலும் வந்துடறானே, நமக்கு வருமானமதானே அப்டினு நினைக்க மாட்டாங்க.. கன்செஷன் பாஸ் மாதிரி ஏதாவது கொடுப்பாங்கனு பார்த்தேன். ஒரு பய கண்டுக்கலை.. பைக் பாஸ் போடும்போது  ரகசியமா பாஸ் வாலா எச்சரிப்பாரு - சார், இந்த படம் மொக்கைதான் அப்டினு, நான் எதுவும் சொல்லாம தெரியும்னு மனசுக்குள்ளே நினைச்சுக்குவேன். அவன் அதை விட கேவலமா பார்ப்பான். அவ்வ்வ்வ் 




எவ்வளவுதான் தீய பழக்கங்கள் (பொதுவுக்கு தெரியாமல்)இருந்தாலும் நம்முடன் பழகும்போது ,மிகவும் நல்லவனாக நமக்கு ஆறுதலாக ,நல்ல மொட்டிவேட்டராக ,அனைத்துக்கும் மேலாக பண்பான சொற்கள் ,பணிவான செயல் என்று இருப்பவருடன்  நட்பாக இருப்பது சிறப்பா ??



7. நீங்க டைரக்டர் ஆனா ஓகே ஓகே எம்.ராஜேஷுக்கு போட்டியா வருவீங்க எனபது என் தனிப்பட்ட கருத்து. இதற்கு உங்கள் பதில் என்ன?


நல்ல வேளை அவர் ட்விட்டர்ல இல்லை, என் பிளாக்கும் படிப்பது இல்லை. இல்லைன்னா வாழ்க்கையே விரக்தி அடைஞ்சிருப்பார்.

 எனக்கு டைரக்‌ஷன் துறைல ஆர்வம் உண்டு, ஆனா அதில் அனுபவம் இல்லை. மணிரத்னம் மாதிரி அனுபவம் இல்லாம இறங்கும்  துணிச்சலோ, எண்ணமோ  இதுவரை இல்லை.. 

 சினிமா விமர்சனம் எழுதும்போது படத்தில் காணப்படும் குறைகளை  துல்லியமாக கணிப்பவர்கள் எல்லாம் நல்ல சினிமா எடுத்து விட முடியாது. படைப்பாளிக்கும் , விமர்சனம் செய்பவருக்கும் ஒரு கோடு உண்டு . ஒரு படைப்பாளி சுலபமாக விமர்சகர் ஆகி விட முடியும் , ஆனா ஒரு விமர்சகர் நல்ல படைப்பாளி ஆகி விட முடியாது, ரொம்ப கஷ்டம் 



8. அட்ரா சக்கல வெட்டாபீஸ் வெங்கிடுசாமில படங்கள் முன்னோட்டம் போடரீங்க.அத்தனை படத் தகவல் உங்களுக்கு எப்படி கிடைக்குது? (அதான் கடலை போட்டு அங்கங்க ஆள் வெச்சிருக்கானே)


இதை நக்கல் கேள்வியா எடுப்பதா? சீரியஸா எடுப்பதா? தெர்ல


 கூகுள் சர்ச்ல போய் பட டைட்டிலை டைப் பண்ணி க்ளிக் பண்ணா அந்தப்படத்தை பற்றி ஏதாவது நியூஸ் நாளிதழ் செய்தியா வந்திருக்கும். அதுல 4 செய்தியை படிச்சுப்பார்த்து அதுல ஒண்னை செலக்ட் பண்ணி கட் காப்பி பேஸ்ட் பண்ணிக்குவேன், நோகாம நோம்பி கும்பிடறதா பலர் சொன்னாலும் அதுக்கு நிறைய உழைப்பு தேவைப்படுது. 

  நான் சொந்தமா டைப் பண்ணி போடும் சாதா பதிவுக்கு ஒரு மணி நேரம், சினிமா விமர்சனத்துக்கு ஒன்றரை மணி நேரம் ஆகுதுன்னா  வெள்ளிக்கிழமை ராம சாமி வெட்டாஃபீஸ் வெங்கிடுசாமி போஸ்ட்க்கு 3 மணி நேரம் ஆகும், ஏன்னா மினிமம் 7 டூ 10 படங்கள் வாராவாரம்  ரிலீஸ் ஆகுது. 7 * 4 = 28 பதிவுகள் படிச்சு அதுல இருந்து 7 செலக்ட் பண்ணனும். அப்புறம் கிளாமரான ஸ்டில்ஸ் தேடனும் , உஷ் அப்பா எவ்ளவ் வேலை  




9. சின்மயி சர்ச்சை பற்றி எல்லா பதிவும் கட் காபி போஸ்ட்டா போடறீங்க.. உங்க நிலைப்பாடு என்ன? 

ராணி வார இதழில் சின்மயி வழக்கு பற்றிய ஆதியோடு அந்தமாய் உண்மை விளக்கும் தொடர் எழுத பேச்சு வார்த்தை நடந்து வருது 

தேவி வார இதழில் கண்டெண்ட்டை பார்த்து மிரண்ட்டுட்டாங்க. குமுதம் ரிப்போர்ட்டர்ல நோ ரிப்ளை. கடைசி முயற்சி ராணி


ஆல்ரெடி 7 அத்தியாயம் 7 வாரம் வரும் அளவு எழுதி ராணி வார இதழுக்கு அனுப்பியாச்சு, அங்கே போட்டதும் இங்கே போடுவேன்.இரு தரப்பிலும் கண்டிக்கப்படவேண்டிய தவறுகள் இருந்தாலும் தண்டிக்கப்படவேண்டிய தவறு யாருடையது என்பதை காலமும்,கோர்ட்டும் சொல்லும்

கோர்ட்டில் ஒரு கேஸ் கொடுத்த பிறகு அது பற்றி சம்பந்தப்படவர்கள் பொது வெளியில் விவாதிப்பது தவறு.பின்னடைவுதான்

சின்மயி வழக்கில் வாதாட சட்டம் படிச்ச வக்கீலை விட ட்விட்டரில் இருக்கும் ஒரு நபர் வாதிட்டால் பிரமாதமாக இருக்கும்


 சின்மயி தரப்பில் வாதாட மாயவரத்தான் ,ராஜன் தரப்பில் ஜாக்கி சேகர் வாதாடினா கோர்ட் களை கடடும்.்

கடைசில கோர்ட்ல ஜட்ஜ் ராஜன் கிட்டே “ உங்க ட்வீட்ஸ், பிளாக் எல்லாம் படிச்சிருக்கேனே? ஃபாலோயர்னு சொல்லிடனும், செம காமடியா இருக்கும்

அட அதுக்கு நாமே பெட்டர்போல?





இதன் 17 ஆம் பாகம் படிக்காதவர்கள் -http://www.adrasaka.com/2012/10/17.html


 இதன் 18 ஆம் பாகம் படிக்காதவர்கள் -http://www.adrasaka.com/2012/10/18.html

அனைவருக்கும் மனதை மயக்கும் மழை வணக்கம்,,,,



3 comments:

ராஜி said...

பதிவை விட டிஸ்கி ரொம்ப நீளமா இருக்கே! கவனிக்க கூடாதா சார்?!

RAMA RAVI (RAMVI) said...

உங்க பதிவோட டிஸ்கி நல்லாயிருக்கு.கடைசி படம் சூப்பர்..

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

டிஸ்கிலாம் சூப்பர்.