Friday, September 14, 2012

சுந்தரபாண்டியன் - சினிமா விமர்சனம்

http://www.ithayakkani.com/ITHAYAKKANI/OpenFile?r1=speeches&r2=/doc_Aug_27_2012_0_24_2_AM1.jpg



எம் ஜி ஆர் ஃபார்முலா, ரஜினி ஃபார்முலா மாதிரி எம் சசிகுமார் ஃபார்முலா என்று ஒன்று உருவாகி வருது.. நண்பர்களுக்காக  உயிரையும் கொடுக்கலாம், காதலர்களை சேர்த்து வைத்தல், காதலை மதித்தல் இதான் அந்த ஃபார்முலா .சுப்ரமணியபுரம்,நாடோடிகள் படத்தை தொடர்ந்து  இந்த முறையும்  சசிகுமார் அந்த ஃபார்முலாவில் ஜெயிச்சிருக்கார்.. ( போராளி,ஈசன் 2ம் சறுக்கல்)


ஹீரோவோட ஃபிரண்ட் பஸ்ல ரெகுலரா ஒரு பொண்ணை 5 மாசமா சைட்டிங்க்..சொல்ல தைரியம் இல்லை.. ஹீரோ கிட்டே உதவி கேட்கறாரு.. ஹீரோ நண்பன் கூடவே அந்த பஸ்சில் போய்ட்டு வந்துட்டு இருக்கார்.. அப்போ ஹீரோவோட இன்னொரு ஃபிரண்ட்டோட ஃபிரண்ட் அதே பொண்ணை அதே பஸ்ல 7 மாசமா சைட் அடிக்கறார்.. அவரும் ஹீரோ கிட்டே உதவி கேட்கறார்.. 


 இப்போ ஒரு டீலிங்க்.. ஒரு மாசம் ஃபிரண்ட்டோட ஃபிரண்ட் அந்த பொண்ணை ரூட் விட வேண்டியது செட் ஆகலைன்னா அடுத்து இவர் ரூட் விடுவாரு.. இதுதான் டீலிங்க்.. அவருக்கு தோல்வி... அடுத்து இவர் முறை.. ஹீரோ நண்பனுக்காக  தூது போறாரு ..  இந்த கலாட்டா சம்பவங்கள் எல்லாம் அட்ட கத்தி, பார்த்தேன் ரசித்தேன் மாதிரி ஜாலியா இடைவேளை வரை போகுது.. 



 இடைவேளை ட்விஸ்ட்.. அந்தப்பொண்ணு அதான் ஹீரொயின் ஹீரோவை லவ் பண்ணுது.. இப்போ ஒரு ஃபிளாஸ்பேக்.. நம்ம ஹீரோ தான் அந்த பொண்ணை முத முத லவ் யூ சொல்லி அப்ரோச் பண்ணினது.. ஆனா அப்போ பாப்பா மைனர்.. அதனால ஒண்ணும் சொல்லலை.. இப்போ மேஜர் . ஓக்கே சொல்லிடுது.. ( இதனால நமக்கு தெரிய வரும் நீதி என்னான்னா பொண்ணு வயசுக்கு வந்து குடிசைல சீர் பண்ண உக்கார வைக்கறப்பவே கர்சீப்பையோ துண்டையோ போட்டு இடம் பிடிச்சுடனும்,, கவர்மெண்ட் ஆஃபீஸ் மாதிரி சீனியருக்குத்தான் மரியாதை.. )


இப்போ பஸ்ல  எல்லாருக்கும் ஹீரோ ஹீரோயின் லவ்வர்ஸ்னு தெரிஞ்சுடுது.. ஹீரோவோட ஃபிரண்ட் கூட அதை ஏத்துக்கறார். ஆனா ஹீரோவோட ஃபிரண்ட்டோட ஃபிரண்ட் அதை ஏத்துக்கலை.. ஹீரோயின் கிட்டே தகறாரு பண்றான்.. ஒரு கைகலப்புல  ஓடற பஸ்ல இருந்து அவன் கீழே விழுந்து ஹீரோ மேல கொலைக்கேசு.. ஜெயிலுக்கு போயிடறாரு..  இடைவேளை.. 


http://www.cineulagam.com/photos/full/movies/sundarapandian_003.jpg


இதுக்குப்பிறகு  திரைக்கதைல 2 முக்கியத்திருப்பம் இருக்கு.  அதை சொன்னா சுவராஸ்யம் போயிடும்..  ஹீரோ & ஹீரோயின் சேர்ந்தாங்களா? கொலைப்பழியில் இருந்து ஹீரோ தப்பிச்சாரா? என்பதுதான் கதை.. 



படத்தோட முதல் ஹீரோ  திரைக்கதை ஆசிரியர் தான்.. எம் சசிகுமார்ட்ட அசிஸ்டெண்ட்டா ஒர்க் பண்ணி அவர் கிட்டே சான்ஸ் கேட்க கூச்சப்பட்டு வெளி ஆட்களிடம் கதை சொல்லி வந்திருக்கார்.. அந்த கதையை கேள்விப்பட்டு சசியே வாய்ப்பு கொடுத்திருக்கார்..  சசி ஃபார்முலாவை கப்னு பிடிச்சிருக்கார்.. 


 ஹீரோவா வரும் சசிகுமார்க்கு இது ரெடிமேட் சர்ட் மாதிரி.. சாதாரணமா பொருந்தி இருக்கு..ஹேர் ஸ்டைல் , தோற்றத்தில் டி ஆர் , ஸ்டைலில் வலியப்புகுத்திய ரஜினி ஸ்டைல், நடன அசைவுகளில் எஸ் ஜே சூர்யா என மிக்சிங்க் பர்சனாலிட்டி ..   நண்பர்களுக்காக அவர் பேசும் வசனங்கள் எல்லாம் வழக்கம் போல் கிளாப்ஸ் அள்ளிக்குது..


 ஆல்ரெடி இவருக்குன்னு ஒரு ஸ்டைலை உருவாக்குன பிறகும்  இவர் ஏன் ரஜினி ரசிகன்னு சொல்லிட்டு அவர் ஸ்டைலில் வருவதும், ஆண் பாவம்  ஆர் பாண்டியராஜன் ஸ்டைலில்  கிழவிகளுடன் காமெடி செய்வதும் ஏன்? புதுமுக நடிகர்கள் தான் ஒரு அங்கீகாரத்துக்காக அப்டி ரஜினி பேரை சொல்லிட்டு இருப்பாங்க..  க்ளைமாக்ஸ் காட்சியில் அவர் சாணக்யன், தேவர் மகன் கமல் மாதிரி பாடி லேங்குவேஜில் கலக்குகிறார்.. அந்த சண்டைக்காட்சியில்  அவரது நடை ,வீச்சு , ஆக்ரோஷம் செம செம.. 



 ஹீரோயின் புதுமுகம் , கும்கி படத்தில்  முதல் முதலாக புக் ஆனாலும் ரிலீஸ் ஆவதில் இது முந்திக்கொண்டது.. லட்சுமிமேணன் பேரு.. குங்குமச்சிமிழ் இளவரசி மாதிரி முகபாவனை சதா மாதிரி சிரிப்பழகு என மனதை கொள்ளை கொள்ளும் நல்ல நடிப்பு.. உண்மையில் ஹீரோவை விட  உயரமானவர்..  சொன்னா நம்ப மாட்டீங்க.. 15 வயசுதானாம்..  



 மேல் உதடு கீழ் உதடு இரண்டும் ஒரே அளவில் கொண்ட மிகச்சில  நடிகைகளில் இவரும் ஒருவர்.. ஒப்பனை இல்லாத , பவுடர் பூச்சோ லிப்ஸ்டிக் தீற்றலோ இல்லாமலேயே அழகு உள்ள முகம்.  ஒரே ஒரு குறை இடது கண் கீழே ஒரு சின்ன தழும்பு.. கேமரா கோணம் அதை மறைத்திருந்தால் இன்னும் செமயா இருந்திருக்கும்.. இவருக்கு நல்ல எதிர்காலம் உண்டு.. ஆடை வடிவமைப்பு, உடுத்தி இருக்கும் விதம் எல்லாவற்றிலும் கண்ணியம்..


ஹீரோவின் நண்பர்களாக வருவதில் புரோட்டா சூரி வழக்கம் போல் காமெடி பண்ண முயற்சித்து இருக்கார்.. அப்புக்குட்டி 2 படங்களில் ஹீரோவாக நடித்தும் இதில் கிட்டத்தட்ட ஒரு வில்லன் ரோல் பண்ணி இருக்கார். அதுக்கு ஒரு சபாஷ்.. அவர் நடிப்பும் அருமை..ஹீரோவின் உயரமான ஃபிரண்டா வரும்  சவுந்தர் ராஜா ஆள் நல்ல பர்சனாலிட்டி.. அவர் நடிப்பும் ஓக்கே..  வில்லனாக வருபர்கள் நடிப்பும் பக்கா..  எனிகோ ( அறிவழகன்) நடிப்பு கனகச்சிதம்
http://tamildigitalcinema.com/wp-content/uploads/2012/08/sundarapandian-audio-launch.jpg


இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள்



1. காதல் ஒரு பொய்யடா பாடல் காட்சி, கண்களில் உந்தன் காதலை நான் கண்டேன் பாடல் காட்சி ( இதில் ஆத்தங்கரை மரமே , அரச மர இலையே பாடலில் வரும் சரண வரிகளான மாமனே உன்னைச்சேராம  பாட்டின் வரி மெட்டை அப்படியே நைசாக சுட்டிருக்காங்க,.,. ஆனாலும் இனிமை தான் ) இந்த பாடல்காட்சிகள் அழகு.. 

2. ஹீரோ ஹீரோயினிடம் தனிமையில் பேச சந்தில் நிற்கையில் கூட வந்த தோழியை தலையில் குட்டி குறும்புடன் துரத்துவது அக்மார்க் சசிகுமார் டச் ( இந்த டச்சை எல்லாரும் ஃபாலோ பண்ணிக்கலாம் , பிற்காலத்துல யூஸ் ஆகும் ;-0 )


3. ஹீரோயின் காதல் விஷயம் தெரிஞ்ச பின் ஹீரோயினை பிரெயின் வாஷ் பண்ண வரும் சித்தி கேரக்டர் கலக்கல் நடிப்பு.. அநாயசமான வசன உச்சரிப்பு.. 



4. ஆங்காங்கே பளிச்சிடும் புத்திசாலித்தனமான வசனங்கள் .. திரைக்கதையில் ஸ்பீடு வித்தை.. 


http://nellaionline.net/gallery/a6b80ab31fe861c8163b9956d44b1e8e/b/Sundarapandian_10.jpg

 இயக்குநரிடம் சில கேள்விகள்



1. ஓப்பனிங்க் ஷாட்லயே ஹீரோ அழகான மாவுக்கோலத்தில் செருப்புக்காலுடன் மிதித்து நிற்பது.. ஆன்மீகப்பார்வை, செண்டிமெண்ட் பார்வை, பகுத்தறிவுப்பார்வை எதிலுமே அதை ஒத்துக்க முடியாதே? 


2. படத்தின் கதைக்கும் ஹீரோ ரஜினி ரசிகர் என்பதற்கும் என்ன சம்பந்தம்? ரசிகர்கள் கைதட்டல் பெறவா? 



3. பொதுவா ஒரு பொண்ணு ஒருத்தனை லவ் பண்றது தெரிஞ்சுட்டா நம்ம ஆளுங்க விலகிடுவானுங்க.. அடுத்த பட்சிக்கு ரூட் விடுவாங்க . ஆனா நிஜத்தில் கோழையான அப்புக்குட்டி ( ஐ மீன் கதைப்படி கோழை) ஹீரோயின் ஹீரோவை லவ் பண்றது தெரிஞ்சும் “ எனக்கு ஒரு மாசம் டைம் கொடுத்தா நான் இன்னும் ட்ரை பண்ணி பார்ப்பேன் என வாக்குவாதம் செய்வது செயற்கை.)



4. பொதுவா எந்த பிரச்சனை வந்தாலும் ஹீரோ அந்த பிரச்சனையை ஒரு தனிமையான இடத்துல சம்பந்தப்பட்ட .  நபரை அழைச்சுப்போய் பேசும் வழக்கம் உள்ளவரா  வரும் பொறுமை சாலி ஹீரோ இடைவேளை ட்விஸ்ட்டுக்காக ஆத்திரப்பட்டு ஓடும் பஸ்ஸில்  தகராறு செய்வது உறுத்தல்



5. ஹீரோ ஜெயிலுக்குப்போன பின் ஹீரோயின் வீட்டில் ஏக கெடுபுடி.. ஆனா எல்லார் முன்னாலயும் ஹீரோ கூட அவர் ஃபோன்ல கடலை போடறார்.. 



6. பொதுவா கிராமத்து பொண்ணுங்க கோபமோ, அழுகையோ, சிரிப்போ அதை அப்படியே வெளிக்காட்டிடுவாங்க , நகரத்துப்பொண்ணுங்க தான் உள்ளே ஒண்ணு வெளில ஒண்ணுன்னு நடிப்பாங்க.. ஆனா கிராமத்துப்பொண்ணா வர்ற ஹீரோயின் ஹீரோ ஜெயிலுக்குப்போன பின்பும் எந்த ரீ ஆக்‌ஷனும் காட்டாமல் இருப்பதும், பின் ஹீரோவை சந்திக்கும்போது அசால்ட்டாக பேசுவதும் முரண் 


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiv36Umx9O9k25rY69b6X39qAnSmpsELRkcW-TJZlhIXI5suAcWDIZZ9oL45iRiP31kRb68iJpN5nwpIEZ3rldTOiVgaLg_0sCNzIiP8A08sjRa7kB7n0tIu4VZIz8biv6FD2vkNZj9DK4/s1600/sundarapandian.jpg
7. ஹீரோயினுக்கு சிரிச்ச முகம்.. அப்போதான் அழகாவும் இருக்கார்.. ஆனா இயக்குநர் ஏன் அவரை உம்மனாம்மூஞ்சி மாதிரி, சிடு சிடு சின்மயி மாதிரி கேரக்டரா காட்டனும்? தேவையே இல்லையே? 


 8. கேமராமேன் ஏன் எப்போ பாரு கேமராவை க்ளோசப்ல ஹீரோயின் இடது கன்னத்துலயே வைக்கறாரு?அங்கே தான் தழும்பு இருக்குன்னு தெரியுதல்ல? 


9. படத்தோட கதை இடைவேளைக்குப்பிறகு நமக்கு மிகவும் பழக்கப்பட்ட சுப்ரமணிய புரம் டிராக்லயே ஏன் போகுது?



10. மேரேஜ் ஃபிக்ஸ் ஆகி மண்டபத்துல எல்லாரும் இருக்கும்போது ஹீரோ ஏன் நண்பன் பேச்சுவார்த்தைக்கு கூப்பிட்டான்னு அந்த அத்துவானக்காட்டுக்கு போறாரு? செல் ஃபோன்ல பேசலாம்.. அவனை இங்கே வரச்சொல்லி பேசலாம்.. 


11. ஹீரோ படு காயம் அடையறாரு.. அது போதாதுன்னு  நடு முதுகில் அரை அடி ஆழத்துக்கு  கத்தியால குத்திடறாங்க.. அதுக்குப்பின் அவர் நடக்கறதே கஷ்டம்.. பிழைப்பதும் கஷ்டம்.. ஆனா அவர்  4 பேரை துரத்தி துரத்தி அடிக்கறாரு.. 


12. இந்தப்படத்துக்கு மார்க்கெட்டிங்க் மேனேஜர் யாரு? மீடியாவில் , டி வி யில் பரபரப்பான விளம்பரம் ஏதும் பண்ணலை. ஒரு ஹிட் படத்துக்கு இப்படியா ஓபனிங்க் இருக்கும்? ரிலீஸ் டேட்க்கு ஒரு வாரம் முன்னால க்ளிப்பிங்க்ஸ் டி வி லபோட்டு பட்டாசைக்கிளப்பி இருந்தா செம ஓப்பனிங்க் ஆகி இருக்குமே? இனி படம் பிக்கப் ஆகி ஓடுறது வேற கணக்கு.. அப்புறம் மார்க்கெட்டிங்க் க்கு என்ன மரியாதை? 


13. ஹீரோயின் அப்பா திடீர்னு மனசு மாறுவது நாடகத்தனம்.. கல்யாணப்பத்திரிக்கை அடிக்கும்போது அவருக்கு ஹீரோ நல்லவர்னு தெரியலையா? 


14. பாரதிராஜா முதல் பாலச்சந்தர் வரை ஜாதியை மையமா வெச்சு படம் எடுக்கறவங்க யாருமே நேரடியா ஜாதிப்பெயரை சொல்ல மாட்டாங்க  பெரும்பாலும், ஆனா இந்தப்படத்துல தேவர் ஜாதியை தூக்கி வெச்சுப்பேசும் வசனங்கள் காட்சிகள்  வருதே ஏன்? ( பசும்பொன் முத்துராமலிங்கத்தேவரை காலண்டரில் காட்டுவது, அவர் புகழ் ஆங்காங்கே பாடுவது )
 http://www.nakkheeran.in/AllImages/Gallerys/30657_1.jpga


மனம் கவர்ந்த வசனங்கள்

1. எத்தனையோ பேர் வாக்கு தவறி இருக்கலாம.ஆனா அதுக்கு அவங்க நாக்கு சுத்தம் இல்லைன்னு அர்த்தம் இல்லை.சூழ்நிலை சரி இல்லாம போயிருக்கும்


2.  டேய், குத்துனது அவன் தான்னு ஏன் சொல்லலை? சொல்லி இருந்தா ஊரே அவனை கும்மி இருக்குமே? 

 நம்மை கொலை பண்ண வந்தது நம்ம நண்பன்னா அவன் பேரைக்கூட காட்டிக்குடுக்கக்கூடாது, அதாண்டா நட்பு 


3. பெரியவங்க நம்ம கிட்டே நாம வெளில போறப்ப பார்த்து போ பார்த்து பழகும்பாங்க.. இப்படி கூட பழகுன நண்பர்களே துரோகம் பண்ணுனா அப்புறம் எப்படி பழக? போங்கடா.. 


4. என்ன மாம்ஸ் கிளம்பிட்டே? 


 கல்யாண வீட்டுக்கெல்லாம் வந்தமா? சாப்பிட்டமா? போனோமா?ன்னு இருக்கனும், உன்னை மாதிரி பாயை போட்டு படுத்துட்டு இருக்கக்கூடாது.. 


5. பதறாம இருந்தா பாதி வேலை முடிஞ்ச மாதிரி 



6. சில விஷயங்கள்ல நாம விட்டுத்தான் பிடிக்கனும்\..


7. விட்டுத்தான் பிடிக்கனும்\..னு என் சித்தி சதித்திட்டம் போடறா.. எனக்கும்  அதே போல் விட்டுத்தான் பிடிக்கனும்\..னு தோணும்னு அவளுக்கு தெரியலை


8. ஏண்டா, ஹெல்ப் பண்றேன்னு சொல்லி ஃபிகரை கொத்திட்டு போவே, அதை பார்த்து நான் பொத்திட்டு போகனுமா? 


9.  பார்க்க பொரி உருண்டை மாதிரி இருக்கான், ஆனா செமயா காமெடி பண்ணுவான்.


 டேய். நான் எங்கடா காமெடி பண்ணேன்? என்னை வெச்சு நீங்க தான் காமெடி பண்ணிட்டு இருக்கீங்க.. 


10.  படிக்கறப்பதான் என்னை படிக்க விடலை.. இப்போ நான் தொழில் பண்ற இடத்திலும் ஏண்டா வந்து உசிரை வாங்கறீங்க? 


 நான் சொல்லலை? காமெடி பண்ணுவான்னு.. ? 


11. நீங்க எத்தனை மாசமா அவளை லவ்வறீங்க? 

 7 மாசமா

 நீ?

 5 மாசமா.. 

 அப்போ அவன் தான் சீனியர்.



12. என்னடி? உன்னை ஏலம் விட்டது போய் இப்போ முத மாசம், அடுத்த மாசம்னு காண்ட்ராக்ட் விட்டுட்டு இருக்கானுங்க./? 


13. .யோவ், வேற வேலை இருந்தா போய் பார்யா.. எனக்கு லவ் எல்லாம் இல்லை..


 அட, நமக்கு வேலையே இதாங்க..



14. எதிரியே இல்லாம போனா நாம வாழ்வோம், ஆனா வளர மாட்டோம்


15. இன்னைக்கு என் காதலை சொல்லலை

 =ஏண்டா?

  இன்னைக்கு ராகுகாலம்..



16. நீ ஏண்டி பதட்டமா இருக்கே?

 அவன் அவசரத்துல உன் கிட்டே லவ்வை சொல்லாம என் கிட்டே லவ்வை சொல்லிட்டா?



17. லவ்வை சொல்ற மாதிரியாடா போனே? என்னமோ அவ செயினை அத்துட்டுப்போறவனாட்டம்..


18. உங்க ஃபிரண்ட் துரத்துன பொண்னை நீங்க லவ் பண்ணலாம், நீங்க துரத்துன பொண்ணை நான் லவ் பண்ணக்கூடாதா? என்ன லாஜிக் இது?


19. பொண்ணுங்க நினைச்சா யானையை பூனை ஆக்குவாங்க, பூனையை யானை ஆக்குவாங்க.. ( மொத்தத்துல சோறு மட்டும் ஒழுங்கா ஆக்க மாட்டாங்க ? - சி பி )


20. கஷ்டம் வர்றப்போ காதலனையே கட்டி இருக்கலாம்னு தோணும், சந்தோஷமா இருக்கும்போது கட்டுனவனே ஓக்கேன்னு தோணும் டி,



21. எதுக்கு சத்தம் போடனும்? சத்தம் போடாம எதை சாதிக்கனும்னு தெரிஞ்சு வெச்சுக்கனும்


22. அப்போ எனக்குக்குடுத்த வாக்கு?

 வாக்கு முக்கியமா? வாழ்க்கை முக்கியமா?.


23. கூடப்பழகிட்டு இருந்தவனுக்கு துரோகம் பண்ணிட்டு ஒரு மேரேஜ் தேவையா?


http://www.tamilspy.com/wp-content/uploads/2012/07/soorya.jpg


ஆனந்த விகடன் எதிர்பார்ப்பு மார்க் - 43


 குமுதம் எதிர்பார்ப்பு ரேங்க் - ஓக்கே 



 சி பி கமெண்ட் - செம ஜாலி எண்ட்டர்டெயிண்ட்மென்ட் இடைவேளை வரை.,. அதுக்குப்பின் த்ரில்லர்.. பெண்களும் பார்க்கலாம்/./ 


 ஈரோடு ஆனூரில் படம் பார்த்தேன்.. .

22 comments:

Unknown said...

Gud Review!!

Thanks
Senthil, Doha

Muhamed Abdul Gafoor said...

Nice review, going to book the ticket.!

Unknown said...

சினிமா விமர்சனத்தில் உங்களை அடிச்சிக்க ஆளே இல்லை... அருமையான பதிவு.

அறிவு said...

அருமையான விமர்சனம்.கதை மட்டுமல்லாது கேமரா ஆங்கிள்,மார்கெட்டிங் என எல்லா ஏரியாக்களையும் அலசியது அருமை.
முக்கியமாக,இடைவேளைக்குப்பிறகு இருக்கும் முக்கிய திருப்பங்களைச் சொன்னால் சுவாரஸ்யம் போய்விடும் என்ற அந்த " நேர்மை,எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு".

வாழ்த்துக்கள் சார்.கலக்குங்க!

சி.பி.செந்தில்குமார் said...

@அறிவு

அடடே, அதுல கூட சசிகுமார் பஞ்ச்சா?

சி.பி.செந்தில்குமார் said...

@Balamurugan Sankaran said...

இன்னும் அடி வாங்கனுமா? :-0

SARAVAN_KAVI5 said...

Super

”தளிர் சுரேஷ்” said...

சுவையான விமர்சனம்! மொத்த கதையும் சொல்லாமல் படம் பார்க்கத்தூண்டுகிறது! நன்றி!

இன்று என் தளத்தில்
சரணடைவோம் சரபரை!
http://thalirssb.blogspot.in/2012/09/blog-post_14.html





Anonymous said...

ரஜினி ரசிகர், கமல் ரசிகர், அஜித் ரசிகர்,விஜய் ரசிகர், விக்ரம் ரசிகர், சூர்யா ரசிகர் மாதிரி நம்ம சி.பிண்ணே சசிகுமார் ரசிகர் போல!! பதிவுல கொஞ்சம் ஓவரவே சசிகுமார புகழ்றாரே...ரொம்ப நாளைக்கப்புறம் உங்க விமர்சனதுல பார்க்குற மாதிரி ஒரு படம்னு சொல்றீங்க.. பார்க்கலாம்!!

கே. பி. ஜனா... said...

படம் எப்படி இருக்கோ, உங்க விமரிசனம் படு சுவாரசியம்!

Menaga Sathia said...

அதுக்குள்ள படம் பார்த்தாச்சா??...

ராஜி said...

S.Menaga said...

அதுக்குள்ள படம் பார்த்தாச்சா??...
>>>
சிபி சார், இந்த நேரம் வரை படம் பார்க்கலைன்னாதான் ஆச்சர்யப்படனும். படம் பார்த்ததுக்கு ஏன் ஆச்சர்யப்படனும்?

மகேந்திரன் said...

உங்க நடையில் விமர்சனம் படு ஜோர் நண்பரே...

நம்பள்கி said...

மேல் உதடும் கீழ் உதடும் ஒரே அளவில்!

கேமரா பிரிண்ட் ஏதாவது எடுப்பீர்களா!

வீட்டிலே உங்க விமரிசனம் படிப்பாங்களா!

Easy (EZ) Editorial Calendar said...

நல்ல விமர்சனம் ......

நன்றி,
பிரியா
http://www.ezedcal.com/ta (வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)


SELECTED ME said...

நானும் படம் பார்க்க போகலாம்னு இருக்கேன்'

Raj said...

Good review. Some paaaapular blogers(????) appreciate only hindi & telugu movies.

Unknown said...

சிடு சிடு சின்மயி?? ஹா..ஹா..

Unknown said...

andha thalumbu kooda heroine ku alagu thaanga senthil ji........ :) . padatha rendu vaati paakalaam.

நான் கார்த்திகேயன்/naaan.karthikeyan said...

இடைவேளைக்கு பிறகு வரும் டுவிஸ்ட் நல்லா இருந்தது..
நீங்கள் எழுதியது போல படம் நன்றா இருந்தது.
என் பணம் 50 ரூபாய்க்கு ஒரு நல்ல படம் பார்த்த திருப்தி நன்றி செந்தில் அண்ணா.
அப்புறம் விமர்சனத்தில் பிண்ணனி இசை பற்றி சொல்லவே இல்லை.. படத்தில் பிண்ணனி இசை சொதப்பல்..
நீங்கள் நன்றாக இருப்பதாய் சொன்ன அந்த இரண்டு பாடல்களையும் எங்கள் ஊர் தியேட்டரில் கட் செய்துவிட்டார்கள்.
உங்கள் விமர்சனம் படித்திவிட்டுதான் படத்துக்கு போனேன் படம் நன்றாக உள்ளது, நன்றி தங்கள் அக்கறைக்கு

Unknown said...

suppara irukku

Unknown said...

m kk