Sunday, August 19, 2012

அதிசய உலகம் - மழலைக்கான படமா? மண்ணாங்கட்டி படமா? - சினிமா விமர்சனம்

http://images3.wikia.nocookie.net/__cb20120727045103/speedydeletion/images/1/19/Theatrical_poster_of_Adhisaya_Ulagam_3D.jpg


லிவிங்ஸ்டன் ஒரு சயிண்ட்டிஸ்ட். தன் மகன் வீட்லயே சின்னதா ஒரு ஆராய்ச்சிக்கூடம் அமைச்சு டைம் டிராவல் மிஷின் பற்றி ஆராய்ச்சி பண்ணிட்டு இருக்கார்.. அவர் கிட்டே ஒரு பேசும் நாய் இருக்கு. நாய் பேசுமா?ன்னு எல்லாம் கேட்கக்கூடாது. மேடை ஏறிட்டா கண்ட நாய்ங்க எல்லாம் பேசும்போது நன்றி உள்ள நாய் பேசுனா இன்னா தப்பு?


அவர் ஆராய்ச்சி நடத்தும்போது அவர் நண்பர் அவரை பார்க்க வர்றார். பாதிலயே விட்டுட்டுப்போறார். அப்போ அங்கே வரும் பேரக்குழந்தைங்க ஒரு பையன், ஒரு பொண்ணு 2 பேரும் தவறுதலா பல நூற்றாண்டுகள்  முன்னால சாரி பின்னால போயிடறாங்க.. டினோசர் காலம்..



விஞ்ஞானி லிவி குழந்தைகளை காணாம பதறி அவரும் அதே காலகட்டத்துக்கு வந்து அவங்களை பார்த்துடறார்.. ஆனா ரிட்டர்ன் போகனும்னா  டைம் மிஷின்க்கு கரண்ட் , அல்லது பேட்டரி வேணும்.. இப்போ இருக்கற காலத்துல கரண்ட் ஏது? பேட்டரி ஏது?


 அவங்க எப்படி தப்பிக்கறாங்க? இதான் கதை..



http://www.cinejosh.com/gallereys/movies/normal/adhisaya_ulagam_3d_movie_photos_1503120835/adhisaya_ulagam_3d_movie_photos_1503120835_016.jpg


 கேட்க நல்லா த்தான் இருக்கு.. ஆனா லோ பட்ஜெட் படம்கறதால கிராஃபிக்ஸ் சீன்ல குவாலிட்டு குடுக்க முடியல. ஆனா சாமான்ய ரசிகனுக்கு அது பற்றி அக்கறை தேவை இல்லை

 லிவிங்க்ஸ்டன் நல்ல தேர்வு.. அவர் ஃபிரெஞ்ச் தாடி வெச்சாலே சயிண்ட்டிஸ்ட் ஆகிட்ட மாதிரி ஒரு ஃபீலிங்க்.. ( அவருக்கு)மொத்தப்படமே 1 1/2 மணி நேரம் தான்... அதனால ஒண்ணும் சொல்லிக்கற அளவு இல்லை..


வாண்டுகள் 2ம் குறும்புகள், சண்டைகள் போடறது  நல்லாருக்கு. ஆனா எதுக்கெடுத்தாலும் அவங்க வாவ் என்ற ஆச்சரியச்சொல்லை உபயோகிக்கும்போது கடுப்படிக்கிறது..


http://moviegalleri.net/wp-content/gallery/adhisaya-ulagam-3d-movie-stills/adhisaya_ulagam_3d_movie_stills_9468.jpg



மனம் கவர்ந்த வசனங்கள்


1.  அப்பா, யாரோ ரேங்கோ பாஷையாம், உங்களை பார்க்க வந்திருக்கார்.

 ஹய்யோ, அது ரங்க பாஷ்யம்மா


2. இனி நம்ம காலத்துக்கு போக முடியாதே?



 ஐ ஜாலி.. ஸ்கூல்க்கு போக வேண்டியதில்லை, ஹோம் ஒர்க் செய்ய வேண்டியதில்லை..




3.இப்போ என்ன புரிஞ்சுதுன்னு நீ சிரிக்கறே?



http://www.retham.com/plogger-1.0RC1/plog-content/images/movie-stills/adhisaya-ulagam-3d/adhisaya-ulagam-3d12.jpg



இயக்குநரிடம் சில கேள்விகள்


1. ஒரு கேனத்தனமான வசனம் பாருங்க -


“ நீ ஏன் ஃபோனை எடுக்கலை?


குளிச்சிட்டு இருந்தேன்

 ஓஹோ! அப்போ குளிக்கறப்போக்கூட ஃபோனை பக்கத்துல வெச்சுட்டு குளிப்பியா?அதனால தான் எடுக்கலையா?



 குளிக்கறப்போ ஃபோன் வந்தா எப்படி எடுக்க முடியும்? ஈரம் ஆகிடாதா? 



2. லிவிங்க்ஸ்டன் அவர் நண்பர் வந்தார்னு பாதிலயே ஆராய்ச்சியை அப்படியே விட்டுட்டு வெளீல போறப்போ நாய் கிட்டே “ யாரும் உள்ளே வராம பார்த்துக்கோ”ங்கறார்.. அதுக்கு கதவை பூட்டிட்டே போகலாமே?


3. லிவியின் பேரப்பசங்க அந்த சர்க்கிள்க்குள்ளே நின்னு சண்டை போட்டுட்டு இருக்காங்க.. அதை ஸ்கேனிங்க்ல காட்டறப்போ 2 பேரும் சும்மா எதிர் எதிரே நிக்கற மாதிரி காட்டுது.. அதுவும் அட்டென்ஷன் பொஷிஷனில். மறுபடி அவங்களை காட்டும்போது அவங்க தொடர்ந்து சண்டை போட்டுட்டு இருக்காங்க..



4. கண்னாடியை அந்த ஆதிவாசி மனுஷன் பார்த்து மிரள்ற மாதிரி சீன் நம்ப முடியல. ஆல்ரெடி அவன் தண்ணீர்ல, குளம் குட்டை, ஆறு, கிணறுன்னு தன் முகத்தை பார்த்திருப்பானே?


5. டைம் மிஷினோட ரூல்ஸ் பிரகாரம் கடந்த காலத்துக்குள்ளே போனா எந்த பாதிப்பும் ஏற்படுத்தக்கூடாதுன்னு ரூல்ஸ் இருக்கும்போது அந்த ஆதி வாசியை எப்படி இங்கே நிகழ்காலத்துக்கு கூட்டிட்டு வர முடியும்?


6. டைம் மிஷின் ரொம்ப லைட்டான பொருளை டெலி போர்ட்டிங்க் மெத்தட்ல  கடந்த காலத்துக்கு பாஸ் பண்ண முடியலைன்னு காட்டறாங்க. அதே போல் ரொம்ப வெயிட்டான பொருளுக்கும் அதே ரூல்ஸ் பொருந்தும்தானே? எப்படி டினோசர் நிகழ்காலத்துக்கு வருது?


7. அந்த பேரக்குழந்தைங்க 5 நிமிஷத்துக்கு ஒரு தடவை வாவ் சூப்பர் தாத்தா என்று சொல்வதாக ஒரு டயலாக் வருவது செம கடுப்பு.. 



http://www.tamilstar.com/photo-galleries/tamil-cinema-adhisaya-ulagam-3d-movie-stills/images/tamil-cinema-adhisaya-ulagam-3d-movie-stills05.jpg



 கவுண்டமணி இயக்குநரிடம் கேட்கும் கேள்வி


 தம்பி , இங்கே வா.. உன் கிட்டே புரொடியூசர் என்ன சொன்னாரு?



 சயின்ஸ் ஃபிக்‌ஷன் படம் எடுக்கச்சொன்னாரு


 எவ்ளவ் ரூபா  குடுத்தாரு?


50 லட்சம் கொடுத்தாரு..


 எடுத்தியா?


 எடுத்தேண்ணே..


 எங்கே அந்தப்படம்?

 இதாண்ணே அது..


 கடுப்பைக்கிளப்பாத. ஓடிப்போயிடு .. ராஸ்கல்.


சி.பி கமெண்ட் - கொஞ்சம் கூட பொறுப்பே இல்லாம சின்ன சின்ன பொம்மைகளை வெச்சு படு மோசமான படமாக்கம் இது.. ஆரும் போயிடாதிங்க.. மீறிப்போனா... அப்புறம். அப்பளம் தான் ..  ஈரோடு தேவி அபிராமில படம் பார்த்தேன்

3 comments:

ஆர்வா said...

அம்புட்டு கேவலமாவா இருக்கு.. ஹி..ஹி.. அதுக்காகவாவது ஒரு வாட்டி பார்த்துடணும்.. ஏன்னா நாங்க எல்லாம் லத்திகா, கொஞ்சம் சிரிப்பு கொஞ்சம் கோவம் படத்தையே பார்த்தவங்க.. ஹி..ஹி..

Amith said...

ROFL MAXX..

”தளிர் சுரேஷ்” said...

குட்டி பசங்க பார்க்கலாமா?

இன்று என் தளத்தில்
திருஷ்டிகளும் பரிகாரங்களும் 1
http://thalirssb.blogspot.in/2012/08/1.html