Sunday, July 08, 2012

சீறும் ஆண்ட்டியை நம்பு, சிரிக்கும் டீன் ஏஜ் பெண்ணை நம்பாதே ( ஜோக்ஸ்)

1. வாழ்க்கைல ரொம்ப பாதிக்கப்பட்டவர் போல

 எப்படி சொல்றே?


சீறும் சினேக்கை நம்பு ( SNAKE), ஆனா சீக்கிரமா போய்ச்சேர்ந்துடலாம்னு எல் எஸ் எஸ்   ( L S S ) பஸ்ஸை நம்பிடாதே.. அப்டினு சொல்றாரே?


--------------------------------


2.  தலைவர் மேடைல பேசறப்போ கைல எதுக்கு சாட்டை வெச்சுக்கறாரு?


மேடைல பேசற ஒவ்வொரு பேச்சும் சாட்டைல அடிக்கற மாதிரி இருக்கனும்னு மேலிட உத்தரவாம்


-----------------------------


3. அடிக்கடி ஆளை மாற்றும் ஆள்னு அவரை சொல்றியே, ஏன்?


 உன் காதலியின் கேரக்டரை மாற்ற முயற்சி செய்.. முடியலையா? காதலியையே மாற்றி விடுன்னு எல்லாருக்கும் அட்வைஸ் பண்றாரே?



------------------------------


4. எனக்கு மேரேஜ்னு ஒண்ணு நடந்தா அது சதீஷ் கூடத்தான்.. 



 அடிப்பாவி.. அப்போ என் கதி?


அதோ கதிதான்.. சரி விடுங்க, அவர் கூட டைவர்ஸ் ஆச்சுன்னா உங்களுக்கு ஒரு வாய்ப்பு தர்றேன்.. 



----------------------------------------------


5. டேய், பொய் சொல்லாத. சொன்னா  சாமி கண்ணை குத்திடும்.. 


 இதுவும் பொய் தானே டாடி?



-------------------------------


நம்ம ஊரில பூனை பொரிச்சமீனை இப்படித்தான் பார்க்கும்.........

இதுக்காக நம்ம சாமி...



6. அந்தக்காலம், இந்தக்காலம் - என்ன வித்தியாசம்?


சரித்திரத்துல இடம் பெறனும்னு அவனவன் தன் உயிரையே குடுத்த காலம் அப்போ, இப்போ நெட்ல தான் பார்த்த ஹிஸ்டரியை இடம் பெற விடாம அழிக்கறாங்க..


--------------------------------------


7. அந்த டாக்டர் இண்டர்நெட் பைத்தியம்னு எப்படி சொல்றே?

 மனுஷன் பெற்றதில் உருப்படியான    ரெண்டே விஷயம் 1. இணையம் 2 . கணையம் அப்டிங்கறாரே?


----------------------------------

8. மெரீனா பீச்ல காதலர்கள் போராட்டம் நடக்குதா? ஏன்?


 பீச்ல லவ்வர்ஸ் கட்டிப்பிடிக்க, கிஸ் பண்ண மட்டும் தான் அனுமதி கிடைக்குதாம். “ எல்லாத்துக்கும்” பர்மிஷன் வேணுமாம்



----------------------------------------


9. சானியா, சோனியா - என்ன வித்தியாசம்?

 இந்தியா ஜெயிக்கனும்னு விளையாண்டா அது சானியா.. இந்தியாவையே விளையாட்டா அசால்ட்டா நினைச்சா அது சோனியா



---------------------------------------------

10. ஜட்ஜ் - எதுக்காக பொண்ணுங்களை வெளி நாட்டுக்கு கடத்துனே?


கைதி - பெண்கள் வாழத்தகுதி இல்லா நாடு - இந்தியான்னு ஒரு சர்வே சொல்லுச்சு யுவர் ஆனர், அதான் அவங்களை  காப்பாத்தலாம்னு..


-----------------------------------




11. இக்கரைக்கு அக்கரை பச்சை-ன்னா என்ன?


நாம பைக்ல போறப்ப  லாங்க்ல டிராஃபிக் சிக்னல் பச்சைல காட்டும், கரெக்டா நாம கிட்டப்போறப்போ சிவப்பு லைட் எரியும்.. அதான்



--------------------------------


12. அடிக்கடி பொண்ணுங்களோட சேட்டில் கடலை போடற ஆளை கிரிக்கெட் மேட்ச்ல ஃபீல்டிங்க் பண்ண விட்டது தப்பா போச்சு 


 ஏன்?


 கேட்சை மிஸ் பண்ணிட்டு “ ஐ கேட்ச் யூ லேட்டர்” அப்டிங்கறாரு


----------------------------


13. டாட்டா ஏஸ் வண்டியால அடிக்கடி ஆக்சிடெண்ட் நடக்குதாம்./. 

 அப்போ அதை சின்ன யானைன்னு சொல்ல கூடாது, சின்ன எமன்னு தான் சொல்லனும்.. 



----------------------------------


14. ஆட்டோ டிரைவர் ஒரு டைப்பான ஆள்னு எப்படி சொல்றே?


 சீறும் ஆண்ட்டியை நம்பு, சிரிக்கும் டீன் ஏஜ் பெண்ணை நம்பாதே-ன்னு ஆட்டோல எழுதி வெச்சிருக்காரே?



-----------------------------------------

புதிய மீன்பிடி துறைமுகத்தை திறந்து வைத்த தலைவரு பேசி சூப்பரா சொதப்பிட்டாரு

அப்படி என்னையா பேசினாரு ?

"மீனையெல்லாம் ...கடலில் சேமிக்கணும்னு சொல்லிட்டாரு "

(இந்த கார்டூனை பார்க்காத கண்மணிகளுக்காக..... இதற்கும் இந்த புதிய நகைசுவைக்கும் தொடர்பு இல்லை !)

6 comments:

Prem said...

நம்ம ஊரில பூனை பொரிச்ச மீனை இப்பிடித் தான் பாக்கும்...! //சூப்பர் கடீஸ் // :)

Yoga.S. said...

வணக்கம்,சி.பி சார்!!!நல்லாயிருந்திச்சு!

MANO நாஞ்சில் மனோ said...

எஃப் எம் பாடலை நிப்பாட்டு அண்ணே, டியூட்டியில உன் பிளாக்கை படிக்க முடியவில்லை, எல்லாரும் ஒரு மாதிரியா பாக்காணுக...!

MANO நாஞ்சில் மனோ said...

தலைப்புக்கே அருவாளோடே ஈரோடு நோ சென்னிமலைக்கு வரலாம்னு தோனுதுடா...

”தளிர் சுரேஷ்” said...

கலக்கல் ஜோக்ஸ்! நேற்று எதுவும் பதிவு போடலயா? என் டேஷ் போர்டுல காணோம்?

Unknown said...

எஃப்.எம்மை நிறுத்து மக்கா!! சாமியார் பார்வை ஜூப்பரு!!!:)