Wednesday, June 27, 2012

GHOST SON -ஹாலிவுட் திகில் சினிமா விமர்சனம்

http://www.filmlinks4u.net/wp-content/uploads/2011/04/Ghost-Son-2007-%E2%80%93-Hollywood-Movie-Watch-Online.jpg
ரத்தம், வன்முறை, தேவை அற்ற பயமுறுத்தல் காட்சிகள் எல்லாம் இல்லாம ரொம்ப நுணுக்கமான மனித உணர்வுகளை சித்தரிக்கும் வித்தியாசமான படமா இதை எடுத்திருக்காங்க.. 2007-ல் வந்த இந்தப்படம் இப்போதான் இங்கே ரிலீஸ் ஆகுது.. படத்தோட விமர்சனத்துக்கு போறதுக்கு முன்னே என் அம்மா , அப்பா பற்றி ஒரு பேரா...


எங்கப்பா ஜூலை 7, 2007 ஆம் ஆண்டுதான் மாரடைப்பில் திடீர்னு இறந்தார்.. எங்களுக்கு சென்னிமலைல சொந்த வீடு இருக்கு.. மொத்தம் 4 வீடுகள்.. 3 வீடுகளை வாடகைக்கு விட்டுட்டு மீதி ஒன்றில் குடி இருந்தோம்.. அப்பாவின்  இறப்புக்குப்பின்  அம்மாவை ஈரோடு வந்துடச்சொல்லி எல்லோரும் அழைத்தும் அம்மா வர்லை.. எங்கப்பா வாழ்ந்த ( 30 வருடங்களா) அதே வீட்டில் தான் வசிப்பேன் என உறுதியா சொல்லீட்டாங்க.. அந்த வீட்டில் உள்ள ஒவ்வொரு பொருளும் , அப்பாவின் நினைவுகளை கிளறி விடுவதாக,வர்ணிக்க இயலாத ஆத்ம சந்தோஷம்  தருவதா அம்மா சொல்றாங்க..இந்தப்படம் பார்க்கறப்போ  எனக்கு அவங்க நினைவு தான் வந்தது.. 


தென் ஆப்பிரிக்காவில் உள்ள கானகம் தான் கதை நடக்கும் இடம்.. அங்கே ஹீரோ, ஹீரோயின் 2 பேரும் குடி இருக்காங்க.. சில குதிரைகள் சொந்தமா இருக்கு. அந்த குதிரை லாயத்தை நடத்திட்டு இருக்காங்க.. 2 பேரும் புது மணத்தம்பதிகள்.. 

ஹீரோ ஜீப்ல ஒரு இடத்துக்கு போறப்போ ஒரு விபத்துல மாட்டிக்கறார்.. உடனே ஹீரோயின் ஸ்பாட்டுக்கு சைக்கிள்ல போறாங்க.. ஜீப்  கவிழ்ந்து இருக்கு.. அதுக்குள்ளே சிக்கி இருக்கற ஹீரோ தன் கடைசி மூச்சை விட்டுட்டு இருக்காரு.. என்னை விட்டுட்டுப்போயிடாதேன்னு ஹீரோயின் கதறியும் ஹீரோ இறந்துடறாரு.. 

 ஹீரோவின் பாடியை அடக்கம் பண்ணிடறாங்க.. ஹீரோயினை அங்கே தனியா இருக்க வேணாம்.. ஊருக்கு கிளம்பிடுன்னு டாக்டர் கம் ஃபிரண்ட் அட்வைஸ் பண்றாரு.. ஆனா ஹீரோயின் கேட்கலை..  கணவன் இருந்த இடத்துல வாழ்ந்து அந்த குதிரை லாயத்தை பார்த்துக்கறேன்னு சொல்லிடறா.. 

அவ உதவிக்கு ஒரு டீன் ஏஜ் பொண்ணு.. நீக்ரோ.. கூட மாட ஒத்தாசைக்கு.. அந்த பொண்ணோட அம்மாவும் இறந்துட்டாங்க.. ஆனா அந்தப்பொண்ணு அடிக்கடி இறந்து போன அம்மா தன் கூட அப்பப்ப வந்து பேசுவாங்கன்னு சொல்லி ஹீரோயினை குழப்பறா.. 

இனி நடக்கும் சம்பவங்களை எல்லாராலும்  நம்ப முடியாது.. உணர முடியாது.. ஐ திங்க் ஆண்களை விட பெண்களால் தான் இந்த நுட்பமான உணர்வுகளை உணர முடியும்.. 




http://images.movieplayer.it/2004/01/18/laura-harring-in-una-scena-del-film-ghost-son-38905.jpg

தனிமையின் தவிப்பில் ஒரு முறை ஹீரோயின் தற்கொலை முயற்சி பண்றா.ஆனா அந்த டாக்டர் வந்து காப்பாத்தறார்.. நார்மல் செக்கப் பண்றாங்க. அப்போதான் ஹீரோயின் கர்ப்பமா இருக்கறது  தெரிய வருது.. கலைக்கலாம்னு சொல்லியும் அவ கேட்கலை..

 ஹீரோயின் ஹீரோ கூட வாழ்ந்துட்டு இருக்கா.. கற்பனையில் .. அவளோட ஒவ்வொரு அசைவும் தன் கணவன் பக்கத்துலயே இருக்கறதா நினைச்சுக்கறா.. ஆல்ரெடி மாசமா இருக்கற ஹீரோயின் குழந்தை பெத்துக்கறா.. 


இறந்து போன கணவன் இப்போ அடிக்கடி அவ முன்னால வந்து “ என்னை விட்டுட்டு நீ எப்படி இருக்கப்போறே? என் கூடவே வந்துடு..”ன்னு சொல்றான்.,. 


குழந்தைக்கு  தாய்ப்பால் குடுக்கறப்போ குழந்தை நல்லா கடிச்சு வெச்சுடுது.. ரத்தம் வர்ற அளவு.. டாக்டர்ட்ட காட்டுனா அவர் நம்பலை.. 2 மாசமே ஆன குழந்தை எப்படி பல்லே இல்லாம ரத்தம் வர்ற அளவு கடிக்க முடியும்?னு உதாசீனப்படுத்திடறார்.. 


இப்போ கணவனின் ஆவி அப்பப்போ குழந்தையின் உடலில் புகுந்து ஹீரோயினை மிரட்டுது.. பயம் காட்டுது.. 

ஹீரோ பேய் கிட்டே இருந்து ஹீரோயின் எப்படி தப்பிக்கறா? என்பதை ஒன்றரை மணி நேரம் திகிலுடன் சொல்லி இருக்கார்..   



http://i188.photobucket.com/albums/z58/annubis44/GhostSonCap1.jpg


 இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள்



 1. தெளிவான திரைக்கதை, மிகக்குறைவான பாத்திரப்படைப்புகள்.. எந்த அளவு திரைக்கதையில் கேரக்டர்ஸை குறைக்கறோமோ அந்த அளவு தெளிவு, புரிதல், ஆர்வம் வந்துடும் ( விதி விலக்கு - பொன்னியின் செல்வன் )


2. ஹீரோயின் பயம் கலந்த நடிப்பு டாப் ரகம்.. குறிப்பா பாத்டப்ல பிளேடால தற்கொலை செய்ய முயலும் சீன், தன் குழந்தையைப்பார்த்து தானே பயப்படும் சீன் என படம் முழுக்க ஹீரோயின் ராஜ்யம் தான்


3. பேய்ப்படமாகட்டும், திகில் படமாகட்டும்  பின்னணி இசை ரொம்ப முக்கியம்.. இந்தப்படத்துல கனகச்சிதமா பயமுறுத்தும் இசை போடப்பட்டிருக்கு.. 


4. அந்த சிறுமியின் மரணப்போராட்டம் செம திகில்.. அந்த 7 நிமிடக்காட்ட்சியில் ஒளிப்பதிவு, இசை, நடிப்பு 3க்கும் பலத்த போட்டி.. வென்றது அந்த சிறுமியின் நடிப்பு.. நீக்ரோ முகமாக இருந்தாலும் அட்டகாசமான நடிப்பு


5. லொகேஷன் செலக்சன் அழகு.. அந்த மரச்சிற்பங்கள் செய்யும் கலைஞனின் இடம் அசத்தல்.. அந்த மரம்.. காடு என ஆர்ட் டைரக்‌ஷன் செம.. 




http://images.movieplayer.it/2004/01/18/john-hannah-e-laura-harring-in-una-scena-del-film-ghost-son-38906.jpg


 இயக்குநரிடம் சில கேள்விகள்



1. கணவனால் ஆபத்து என்பது தெரிந்ததும் ஹீரோயின் அந்த வீட்டை விட்டு வெளியேற ஓக்கே சொல்லிடறா.. ஆனா டாக்டர் இப்போ என்ன அவசரம்? விடிஞ்சதும் காலைல போய்க்கலாம்னு அசால்ட்டா சொல்றார்.. அது ஏன்? இவரே தான் சில காட்சிகளுக்கு முன்  “ இங்கே நீ இருக்கும் ஒவ்வொரு நிமிஷமும் ஆபத்துதான்னு பேசறார்.. ஏன் இந்த முன்னுக்குப்பின்  முரண்?



2. ஹீரொயின் தன் குழந்தையை கொஞ்சும்போது அது அப்படியே கணவனாக உருமாறுவது , பின் இருவரும் கில்மாவில் ஈடுபடுவது என்னமோ மாதிரி இருக்கு.. அந்த காட்சி அமைப்பில் மாற்றம் தேவை.. 


3. ஒரு சீன்ல வீட்டில் நடக்கும் சின்ன விபத்தில் கண்ணாடி அலமாரி  உடைஞ்சு ஹீரோயின் சின்னத்தம்பி க்ளைமாக்ஸ் குஷ்பூ “ நீ எங்கே என் அன்பே?  பாட்டு பாடறப்போ கால் பூரா கண்னாடி மாதிரி எதையோ ஏத்திக்குவாரே அந்த மாதிரி ஆகிடுது.. பேண்டேஜ் போட்டுக்கறா.. அவளே சுய வைத்தியம்.  ஓக்கே , ஆனா அவ எப்படி பூ விழி வாசலிலே வில்லன் ரகுவரன் மாதிரி அந்த உபகரணம் வெச்சு நடக்க ஆரம்பிக்கறார்.. அது ஏது? தனி வீடு.. கானகம்.. அருகில் ஹாஸ்பிடல் இல்லை.. உடனே எப்படி அந்த கிட் கிடைக்கும்?



4. பேய்க்கணவனின் இலக்கு தன் மனைவி தானே? எதுக்காக சம்பந்தமே இல்லாம வேலைக்கார சிறுமியை  கொலை செய்யுது? ( சாமார்த்தியமா அந்த சீனை விபத்து மாதிரி காட்டினாலும் அது எடுபடலை)

5. ஹீரோயின் ஆரம்பத்துல கணவன் போன இடத்துக்கே போக நினைக்கறா.. தற்கொலை முயற்சி எல்லாம் செய்யறா.. ஆனா அவ  தன் கணவன் கூப்பிடும்ப்போது ஏன் மனசு மாறிடறா?ன்னு தெளிவா சில்லலை.. 


6. பேய்க்கு அபரிதமான சக்தி இருக்கு.. தன் மனைவியை கொல்ல வருது.. எப்போ மனைவி “ எனக்கு உன் மேல உண்மையான காதலே இல்லை,.” அப்டினு சொல்றாளோ அப்பவே அது மனசு உடைஞ்சு கிளம்பிடுது.. அவ்ளவ் நல்ல பேய் ஏன் அவளை அப்பப்ப டார்ச்சர் பண்ணுது? டார்ச்சர் பண்ற மாதிரி காட்டிட்டா அவளை கொலை பண்ணி இருக்கனும்.. நல்ல பேய் மாதிரி காட நினைச்சா டார்ச்சர் பண்ற சீன் இருக்கக்கூடாது. எதுக்கு இந்த ரெண்டும் கெட்டான் வேலை?






ஈரோடு வி எஸ் பி ல இந்தப்படம் பார்த்தேன்.. பெண்கள் , திகில் பட ரசிகர்கள் பார்க்கலாம்..  இந்தப்படம் வழக்கமான பர பரப்புள்ள திகில் படம் அல்ல. ஸ்லோவான ஸ்க்ரீன்ப்ளே தான்.. பொறுமையாக பார்ப்பவர்கள் மட்டும் பார்க்கலாம்..



https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhoJf-AVq534w20VkCRFePMF08OREiVae8pYD-FZiibZSSh4WoCYjuNCo6hkpcD2Uwlro9pwCrELsPo6bjryPDHW0J_K4pfdtDrMQYs3TOP7e1J6RGQRb5FKAnmdhq0TQ-X0l0mtpPaakY/s400/ghostsonharring.jpg




2 comments:

கோவை நேரம் said...

மாலை வணக்கமுங்க...

”தளிர் சுரேஷ்” said...

கதை நல்லா இருக்கு! நுணுக்கமான கேள்விகளும் சூப்பர்!