Friday, June 08, 2012

கிருஷ்ணவேணி பஞ்சாலை - சினிமா விமர்சனம்

http://images.behindwoods.com/photo-galleries-q1-09/tamil-photo-gallery/krishnaveni-panchalai/wmarks/krishnaveni-panchalai13.jpg
படத்தோட டைரக்டர் கொங்கு மண்டலம்.. நம்ம ஏரியா -கோவைக்காரர்.. அவருக்கு வாழ்த்துகள்.. ரொம்ப செலவில்லாம மினிமம் பட்ஜெட்ல ஒரு தரமான படம் தர முயற்சித்ததற்கு....

ஈரோடு மாவட்டம் பெருந்துறை தாலுக்கா ஈங்கூர் என்ற கிராமத்தில் இருந்த சுப்பாத்தா ஸ்பின்னிங்க் மில்ல நடந்த சில நிர்வாகப்பிரச்சனைகள், போனஸ் பிரச்சனைகள், மில் மூடப்பட்டது, முதலாளி வர்க்கத்தின்  ஈகோ இவை தான் கதைக்களன்.. ஆனா படத்துல உடுமலைப்பேட்டைல நடந்த மாதிரி காட்டறாங்க.. 

 கதையை கேட்ட புரொடியூசர் ரொம்ப ட்ரையா (DRY)  இருக்கே..ன்னு யோசிச்சிருக்கனும்.. அதனால திருப்பூர் மாவட்டம் மண்ணறை ( ஊத்துக்குளி ரோடு ) கிராமத்தில் உள்ள பிரைட் பிராசசர்ஸ் டையிங்க் கம்ப்பெனியில் நடந்த ஒரு லவ் ஜோடி, அவங்க அக்காவின் நிறைவேறாத காதல் இதை எல்லாம் கிளைக்கதையா வருது.

மில்லுல ஒர்க் பண்ற ஹீரோவும், ஹீரோயினும் லவர்ஸ்.. ஆனா அந்த கிராமத்துல ஜாதிப்பிரச்சனை அஜீத் தூக்கி அதாவது தலை . தூக்கி ஆடுது.. ஹீரோயினோட அக்கா லவ் மேரேஜ் பண்ணிக்கறா.. 4 மாசம் தனியா வாழ்றா.. அப்புறம்  அம்மா வீட்டுக்கு 3 மாச கர்ப்பத்தோட மாப்பிள்ளையையும் கூட்டிட்டு வர்றா.. அம்மாக்காரியே விஷம் வெச்சு கொன்னுடறா.. இது படம் பார்த்த லாலி பாப் சாப்பிடற குழந்தைக்குக்கூடத்தெரியுது, ஆனா வேற யாருக்கும் தெரியலை.. இடை வேளை.. ( படம் போட்டு 48 நிமிஷங்கள்லயே இடைவேளை)

ஹீரோயின் லவ் மேட்டர் தெரியுது.. அம்மாக்காரி அடிக்கறா.. மில்லுல வேலை செய்யற சூப்பர் வைசர் ஹீரோயின் வீட்டுக்கு தன் அம்மாவோட வந்து பொண்ணு கேட்குறான், இவங்க தர்லை.. உடனே அவன் விஷம் குடிக்கற மாதிரி அவங்க வீட்டுக்கு முன்னால ஆக்ட் குடுக்கறான்.. அதை பார்த்து பயந்து ஹீரோயினோட தாய் மாமன் ராத்திரியோட ராத்திரியா வீட்டை காலி பண்ணப்பார்க்குறான்.. இந்த ஹீரோயினோட  அம்மா பேக்கு போல் விஷம் சாப்பிட்டு இறந்துடுது.. லவ் ஜோடிக சேருது இவ்ளவ் தான் கதை..


ஹீரோ ஹேமச்சந்திரன்  அழகா இருக்கார்.. நல்லா நடிக்கறார்.. காதல் காட்சிகளில் யதார்த்தம்.. பாடல் காட்சிகளில் உற்சாகம் .. இவருக்கு நல்ல எதிர்காலம் உண்டு.. 

 ஹீரோயின் நந்தனா..  ஆள் பார்த்தவுடன் தந்தனா பாட சொல்லும் அளவுக்கு எல்லாம் இல்லை.. கேரளா வனப்பு மட்டும் கொஞ்சம் பார்வையை தாழ்த்தும்போது தெரிகிறது ( அதாவது நம்ம பார்வையை ) குண்டு முகம்.. என்ன ஆச்சரியம்னா படம் பூரா இவரை கண்ணியமாக காட்டியதுதான்.. ஒரு இடத்துல கூட அவர் ஆடை விலகல..  அப்படியே அச்சு அசல் உடுமலைப்பேட்டை கிராமத்துப்பெண்ணை கண் முன் நிறுத்துகிறார்.. அவரை லிப்ஸ்டிக் கூட போட விடாமல் மிதமான  ஒப்பனையில் வலம் வர விட்டது இயக்குநர் சாமார்த்தியம்.. விழிகள், புருவங்கள் கூடுதல் கூட்டல் அதாங்க அடிஷனல் பிளஸ்

எம் எஸ் பாஸ்கர்  வந்தவரை ஓக்கே.. ஹீரோயின் அம்மாவாக நடித்தவர் அழுத்தமான நடிப்பு.. சபாஷ்.. படத்தில் காமெடிக்காட்சிகள் இல்லாதது ஒரு குறை.. 




http://chennaionline.com/images/gallery/2011/June/20110607034918/Krishnaveni-Panchalai-Movie-Photos-101.jpg

 இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள்


1. படத்தோட ஓப்பனிங்க் ஷாட்ல  1957 ல , 1967 ல நடக்கிற மாதிரி சில காட்சிகள் படமாக்கப்பட்டிருக்கு .. அதுக்கான ஆர்ட் டைரக்‌ஷன் அற்புதம்.. அந்தக்கால தினமணி பேப்பர், தினத்தந்தி பேப்பர், சேர், கட்டில், இண்ட்டிரியர் டெக்ரேஷன் ஆஃப் த பங்களா  எல்லாம் அபாரம்


2.பிரமாதமான பாடல்கள் 4.. அனைத்தும் படமாக்கப்பட்ட விதம் கவிதை..ஆலைக்காரி பஞ்சாலைக்காரி,ஆத்தாடி ஒரு பறவை பறக்குதோ ,ரோஜா மலரே, உன் கண்கள் முன்னாலே என பாடல் வரிகள் - வைரமுத்து + தாமரை.. சபாஷ்


3. ஆத்தாடி ஒரு பறவை  பாடல் காட்சிகளில் நீர் நிலைகளில் பறவைகள்,தண்ணீர்ப்பாம்பு, என ஒளிப்பதிவு செம  செம


4. ஹீரோ ஹீரோயினுக்கு முத்தம் தரும் காட்சியில்  ஹீரோயின் சிலிர்க்கும் காட்சியில் அதே போல் சிலிர்க்கும் சேவல் ஷாட், கன்னுக்குட்டியின் குதூகலம் படமாக்கப்பட்ட விதம் அழகு.. 


5. படத்தில் வசனங்கள் ரொம்பவே ஷார்ப்  அண்ட் ஸ்வீட்.. தேவையான இடங்களில் மட்டுமே பாத்திரங்கள் பேசுகின்றன




http://chennai365.com/wp-content/uploads/movies/Krishnaveni-Panchalai/Krishnaveni-Panchalai-Stills-02.jpg

 இயக்குநரிடம் சில கேள்விகள், லாஜிக் மிஸ்டேக்ஸ் சுட்டிக்காட்டல்கள், திரைக்கதையில் சில ஆலோசனைகள்


1. பொதுவா பஞ்சாலைல வேலை செய்யறவங்க எப்பவும் முகம் எல்லாம் புழுதியா, பஞ்சு அடைச்சு அழுக்கா தான் இருப்பாங்க.. ஆனா படத்துல வர்ற ஹீரோயின் உட்பட எல்லா லேடிஸும் என்னமோ முதலிரவுக்கு போற முத்தழகி மாதிரி 4 முழம் மல்லிகைப்பூவோட கலக்கலா வர்றாங்க.. ஹீரோ மற்றும் ஆண் கேரக்டர்கள் எல்லாம் அப்போதான் கோயில்ல இருந்து வர்ற கோயில் காளை மாதிரி நெற்றியில் விபூதி , பவுடர் உடன் அழகா இருக்காங்க.. ஒரு பயலை கூட வேலை செஞ்சு களைச்ச மாதிரி காட்டலை.. ஆனா படம் கதைக்களன் பூரா பஞ்சாலை.. 


2. மில் டைம் 10 மணிக்கு.. ஒரு லேடி 10.35க்கு வர்றா, கேட்ல வாட்ச்மேன் ( செக்யூரிட்டி) என்னம்மா இவ்ளவ் லேட்டா வர்றே? 5 நிமிஷம் , 10 நிமிஷம்னா பரவாயில்லைன்னு சொல்றான்.. அதே லேடி உள்ளே போறப்ப சூப்பர்வைசர்  4 பேர் கிட்டே பொத்தாம் பொதுவா கேட்கறான்.. “ ஒரு நிமிஷம் லேட்டா வந்தாலும் லேட் லேட் தான்.. 4 பேர்  ஆளுக்கு ஒரு நிமிஷம்னா  4 நிமிஷம் புரொடக்‌ஷன் பாதிக்கப்படுதே? அப்டிங்கறான்


3. ஹீரோ தன் காதலியின் அக்கா மேரேஜை முன்னால நின்னு நடத்தி வைக்கறான், ஆனா ஹீரோயினுக்கு அது தெரியலை. எந்தக்காதலன் தன் காதலிக்கு தெரியாம  காதலியோட அக்காவுக்கு மேரேஜ் பண்ணி வைப்பான்.. என் கிட்டே கூட சொல்லாம அப்படி என்ன என் அக்கா கூட உனக்கு நட்பு? அப்டினு அவ கேட்கமாட்டாளா?


4. அக்காவோட துணிகள் எனக்கு பத்தலை, எல்லாத்தையும் அவ கிட்டே கொடுக்கவா? அப்டின்னு ஹீரோயின் கேட்டதும் அம்மாக்காரி அவ டிரஸ்சை எல்லாம் எரிக்கறா.. ஏன் எரிக்கனும்? ஜாக்கெட் தான் பத்தாது.. ஏன்னா ஹீரோயின் ரெட்டை நாடி , அவங்கக்கா ஒற்றை நாடி, ஆனா புடவைக்கு என்ன சைஸ் வேண்டிக்கிடக்கு?அப்படியே கோபமா இருந்தாலும் ஏதாவது அநாதைக்கோ, பிச்சைக்காரிக்கோ கொடுக்கலாமே? ஏன் எரிக்கனும்?

5. மில்லுல வேலை செய்யற தொழிலாளர்கள் எண்ணிக்கை 300 -ன்னு ஒரு இடத்துல டயலாக் வருது.. ஆனா  ஒரு சீன்ல மில் ஏற்பாடு செய்யும் டூர்ல வேன்ல 16 பேர் மட்டும் தான் வர்றாங்க.. மீதி 284 பேருக்கும் உடம்பு சரி இல்லையா? போனஸ் பிரச்சனை பற்றி பேச்சு வரும்போது  கூட்டத்துல  8 வரிசைல சேர்  போட்டிருக்கு ,8 *  8 = 64 பேர் தான் இருக்காங்க.. மில்லுல உள்ளே காட்டறப்போ எப்பவும் 4 பேர் தான் காட்டறாங்க.. என்னதான் லோ பட்ஜெட் படம்னாலும் மில்லுல லேபர்ஸ் வேலை செய்யறதை கொஞ்சம் பிரம்மாண்டமா காட்ட வேணாமா? க்ளைமாக்ஸ்ல செட்டில்மெண்ட் பேசறப்பக்கூட  100 பேரைத்தான் காட்டறீங்க.. 


6. ஹீரோயினை பெண் கேட்க ஒரு கூட்டம் வருது.. ஹீரோயினோட அம்மாவும்,  தாய்மாமாவும் பாய்ல உக்காந்திருக்காங்க.. ஆனா பெண் கேட்டு வந்தவங்க வெறும் தரைல உக்காந்திருக்காங்க.. இதுதான் தமிழர் பண்பாடா? அவங்க ஏழையாவே இருந்தாலும் அவங்க தரைல உக்காந்து வந்த விருந்தாளிங்களை  பாய்ல உக்கார வைப்பாங்க.. 

7.  மில் ஓனர் ரொம்ப நல்லவர், ஆனா லேபர்ஸை பேச்சு வார்த்தைக்கு ஏன் கூப்பிடவே இல்லை.. ?


8 .. ஈங்கூர் சுப்பாத்தா மில்லுல 18% போனஸ் குடுத்தாங்க.. கோவை லக்‌ஷ்மி மில்லுல 24% போனஸ் குடுத்தாங்க.. ஆனா இந்தக்கதைல  25 % போனஸ் கொடுப்பதாவும் லேபர்ஸ் 28 % ஒரு சாராரும், இன்னொரு சாரார் 30 % போனஸ் கேட்பதாவும் வசனம் வருது.. மில் ஓனர் 45% தர ஓக்கே சொல்றார்... தமிழ் நாட்ல எந்த மில்லுல போனஸ் 45% தர்றாங்க?உயர்ந்த பட்சமே 28% தான்


9. அப்படிப்பட்ட நல்ல மில் ஓனர் லாஸ் ஆனதும் லேபர்ஸ் எல்லாம் வீம்பா இருப்பது நம்பற மாதிரி இல்லை. போன வருஷம் மாதிரியே 45% போனஸ் வேணும்னு கேட்பதும் சரி அல்ல.. நம்பகத்தன்மை இல்லை.. 

10.. லேடீஸ் லோ கலெக்டரா ( பொம்பளை பொறுக்கி ) வர்ற வில்லன் ஹீரோயின் கிட்டே கல்யாணம் வரை போறதெல்லாம் ஓவர்... அவன் என்ன பெண்களையே பார்க்காதவனா?


11.. படத்தோட நீளம் ரொம்பக்குறைவு.. 113 நிமிஷம் தான் ஓடுது.. ஹீரோயின் அக்கா சாகறப்ப நமக்கு பரிதாபமே வர்லை.. ஏன்னா அவங்க காதல் போர்ஷன் காட்டவே இல்லை.. ஹீரோயின் அக்கா செத்ததும் அக்கா வீட்டுக்காரர் அப்பவே செத்திருக்கனும்.. என்னமோ தப்பிச்சு ஓடற மாதிரி காட்டி அப்புறம் அவர் தற்கொலை செய்வதும் நம்பற மாதிரி இல்லை.. 

12. படத்தின் முக்கிய விஷயம் ஹீரோயின் அம்மா ஏன் அவ்வளவு ஆங்காரமா பெத்த பெண்ணையே விஷம் வெச்சுக்கொல்றாங்க? என்பதை சரியா காட்டலை.. 


13. ஓப்பனிங்க் ஷாட்ல  கைல கன் இருந்தும் அதுல சுட்டு தற்கொலை செய்யாம மில் ஓனர் கார்ல பெட்ரோல் ஊற்றி அதுக்குள்ள உக்காந்து தீ பற்ற வைத்து சாவது நம்பவே முடியலை.. தீப்பற்றிட்டா தற்கொலை செய்யற எண்ணன் உள்ள  ஆள் கூட எரிச்சல், வலி தாங்காம கத்துவான், அங்கேயும் இங்கேயும் ஓடுவான்.. அவர் பொம்மையா இருக்கார் 


http://images.behindwoods.com/photo-galleries-q1-09/tamil-photo-gallery/krishnaveni-panchalai/wmarks/krishnaveni-panchalai01.jpg

 மனம் கவர்ந்த வசனங்கள்


1.  நம்ம ஜாதிக்காரங்களா இருந்தா விசுவசமா வேலை பார்ப்பாங்க.. கூடவே இருப்பாங்க.. 


 நோ நோ நல்லா  வேலை பார்க்கறவங்க, நல்லா வேலை பார்க்காதவங்க என ரெண்டே வகைதான்


2. கவர்மென்ட் மாப்ளைன்னா ஊர் ஊரா போகனும்.. ஆனா மில் மாப்ளைன்னா நிரந்தரம் , அதனால மில் மாப்ளையே பாரு


3. ஏய்.. எதையாவது விட்டுட்டுப்போய்ட்டியா?

 ம்

 இதுவா பாரு


4. ட்ரிங்க் ட்ரிங்க் ( சைக்கிள் பெல்)

என்ன எதையாவ்து விட்டுட்டுப்போறியா?

 ம் ம் ம் 


5. பூ வாங்கித்தர்றேன்.. உனக்கு என்ன பூ பிடிக்கும்?

 ஏன்? எனக்கு என்ன பூ பிடிக்கும்னு உனக்குத்தெரியாதா?


6. ஏய்.. நான் உனக்குக்குடுத்தேனே, அதை திருப்பிக்குடு.. 

 வெச்சுக்கோன்னு சொல்லித்தானே கொடுத்தே.. 


7. ஒரு வருஷத்துல இந்த லேபர்ஸ்  மிச்சப்படுத்தறதே தீபாவளி போனஸ் தான்


8. லைட் இருக்கு.. ஆனா அதை போடாம ஏன் லாந்தர் விளக்குல படிக்கறே?

 நான் படிச்சுட்டு இருக்கறது மாக்ஸிம் கார்க்கி புக், அப்படித்தான் படிக்கனும்


9. கண்டவங்களையும் சொந்தக்காரங்கன்னு சொல்லிட்டு திரியறதுக்கு அவ செத்துப்போனதே , எவ்வளவோ மேல்


10. எத்தனை நாளைக்கு லேபர்ஸ் ஓனரை தேடி வர்றது? இப்போ எங்க டர்ன்.. அவங்க எங்களைத்தேடி வரட்டுமே? 


11. அடச்சே.. காரியத்தையே கெடுத்துட்டானே?


ஏன் கோவிச்சுட்டு போறான்?

 ம்.. இரு கேட்டு சொல்றேன். 

12.  சார்.. உங்க கிட்டே இருக்கற தாராள குணத்தையும், தொழிலையும் போட்டுக்குழப்பிக்காதீங்க


13. சிக்கலான நேரங்களில் எடுக்கப்படும் நேர்மையான முடிவுகளில் கூட சில சமயங்களில் தவறுகள் நேர்ந்து விடுகின்றன


14. ஜாதி விட்டு ஜாதி மாறி லவ் மேரேஜ் பண்றவங்களுக்கு நகரம் தான் பெஸ்ட்.. 




http://moviegalleri.net/wp-content/gallery/tamil-actress-nandhana-stills/krishnaveni_panjalai_actress_nandhana_stills_5794.jpg


எதிர்பார்க்கும் ஆனந்த விகடன் மார்க் - 39



எதிர்பார்க்கும் குமுதம் ரேங்க் - ஓக்கே 

 சி..பி கமெண்ட் - காதலர்கள், மில் தொழிலாளிகள் பார்க்கலாம்.. பெண்கள் பார்க்கும் விதமாய் கண்ணியமான காட்சி அமைப்புகள்.. இந்தப்படத்தின் ப்ரொமோவில் ஓவராய் பில்டப் கொடுத்தது தேவையற்றது

 ஈரோடு ராயல்-இல் படம் பார்த்தேன்


http://images.behindwoods.com/photo-galleries-q1-09/tamil-photo-gallery/krishnaveni-panchalai/wmarks/krishnaveni-panchalai19.jpg

2 comments:

குரங்குபெடல் said...

"பொதுவா பஞ்சாலைல வேலை செய்யறவங்க எப்பவும் முகம் எல்லாம் புழுதியா, பஞ்சு அடைச்சு அழுக்கா தான் இருப்பாங்க.. ஆனா படத்துல வர்ற ஹீரோயின் உட்பட எல்லா லேடிஸும் என்னமோ முதலிரவுக்கு போற முத்தழகி மாதிரி 4 முழம் மல்லிகைப்பூவோட கலக்கலா வர்றாங்க "


என்ன ஒரு ஒப்பீடு . . ?

மொதோ சங்கை ஊதிட்டிய்யா தம்பி . . .

Senthil said...

Good?

Thanks