Thursday, June 07, 2012

இதயம் திரையரங்கம் - சினிமா விமர்சனம்

http://www.cineikons.com/wp-content/uploads/2012/05/idayam.jpeg
பேங்க்ல ஏதோ ஃபார்ம் ஃபில்லப் பண்ண ஹீரோ கைவசம் பேனா இல்லை, அந்த பேங்க்ல 17 பேர் இருக்காங்க, மீதி 16 பேர் ஹீரோ கண்ணுக்கு தெரில.. 17 வதா ஒரு ஏழரை தான் கண்ணுக்கு தெரியுது.. அதாவது ஹீரோயின் கிட்டே... பேனா கை மாத்து கேட்கறார்.. ஒரு லட்சம் ரூபா மதிப்புள்ள தங்கப்பேனா அது.. ஹீரோயின் கொடுக்குது.. 2 ரூபா ரீபிள் கொடுத்தாலே இந்தக்காலத்துல பக்கத்துலயே பம்மிக்கிட்டு நிப்பாங்க.. ஆனா பாப்பா பாருங்க ஞாபக மறதி.. ஏதோ ஃபோன் வருதுன்னு பேசிட்டே மறந்த வாக்குல போயிடுது..


 மறுபடி ஒரு டைம் ஹீரோயின் ஹீரோவை வழில பார்த்து பேனா கேட்கறார்.. ஹீரோ தன் ஃபிரண்ட் கிட்டே இருக்கு வாங்க போலாம்னு பைக்ல கூட்டிட்டுப்போறார். போற வழில இவங்க விழறதுக்காகவே டைரக்டர் ஒரு குழி தோண்டி வெச்சிருக்கார்.. அடிஷனல் கிளாமருக்கு கொஞ்சம் தண்ணியும் ஊத்தி வெச்சிருக்காங்க.. அதுல ஹீரோயின் விழறாங்க ஹீரோ அவர் மேல விழறாரு.. 2 பேரும் 4 தடவை புரண்டு விழறாங்க ..

அந்த தங்கப்பேனாவை ஹீரோவோட ஃபிரண்ட் சேட்டு கடைல அட்மானம் வெச்சிருக்காரு..  2 பேரும் போய் அதை மீட்டுக்கறாங்க..அப்புறம் ஒரு டைம் ஹீரோயின் கோயில்ல இருக்கும்போது கற்பூரம் பற்ற வைக்க தீப்பெட்டி கேட்கறாரு ஹீரோ ..  எப்படியோ 2 பேருக்கும் லவ் வந்துடுது.( இந்த ஐடியா எல்லாம் முதல்லியே தெரிஞ்சிருந்தா நானும் ஏதாவது ஃபிகர்ட்ட 1000 ரூபா கடன் கேடிருப்பேன் லவ் வந்திருக்கும் ஹூம் மிஸ்.. ). . ஹீரோயினோட அம்மா சொர்ணாக்காக்கா.. அதாவது சொர்னா அக்கா ஃப்ரம் தூள் படம் அவங்களுக்கே அக்கா. பேட்டை வட்டி வசூல் பார்ட்டி.. ஜோசியப்பைத்தியம்.. 

 ஜோசியர் சொன்னாருன்னு தன் மகனுக்கே மகளை கட்டி வைக்க துணியறாங்க.. அப்புறம் உக்காந்து யோசிச்சப்ப டைரக்டருக்கு உதிச்சது ரொம்ப கேவலமா இருக்கே.. உடனே ஒரு ஃபிளாஸ்பேக்.. 

 அதாவது ஹீரோயின் அவங்க குழந்தையே இல்லை.. வட்டி கட்ட முடியாத ஒரு ஆளோட குழந்தையை பணயமா பிடுங்கிட்டு வர்றாங்க .. ஃபேமிலி ஜோசியர் அந்த குழந்தை அதிர்ஷ்ட குழந்தை அப்டினு சொல்லிட்டதால தானே வளர்க்க முடிவு செய்யறார்..

 இப்பொ கதைல ஒரு டர்னிங்க் பாயிண்ட்.. அது தப்பு.. அவங்க குழந்தை அவங்க கிட்டேயே வளரட்டும்னு சொன்ன புருஷனை நடு ரோட்ல சதக் சதக்னு 2 டைம் குத்தி கொன்னுடறாரு.வில்லி . இவங்க கிட்டே லாஜிக் மிஸ்டேக் எல்லாம் பார்த்தா நம்மையும் போட்டுத்தள்ளிடுவாங்க அப்டிங்கற பயத்துல ஆடியன்ஸ் கப் சிப் சைலன்ஸ்..  என்ன நடக்குது?ங்கறது மீதிக்கதை.. 

 நானும் என் காதலும் - இதுதான் இந்தப்படத்துக்கு வைக்கப்பட்ட ஆரம்ப கட்ட டைட்டில்.. அப்புறம் ஏனோ மாத்திட்டாங்க.. 

ஹீரோ சுமாரா நடிக்கறார்.. அவர் ஏன் தலையே சீவாம, தாடியோட பரதேசி மாதிரி படம் பூரா வர்றார்னு தெரியலை..  2 பாட்டுக்கு ஒழுங்கா ஸ்டெப் வெச்சு ஆடி இருக்கார்.. காதல் காட்சிகளில் முகத்தில் சந்தோசம்.. உம்மணாம்மூஞ்சிகள் கூட பக்கத்துல ஜோடி இருந்தா முகம் பிரகாசம் ஆகிடும்பாங்க.. அது போல .. 

 ஹீரோயின்க்கு 43 மார்க் போடலாம்.. பேரு ஸ்வேதா.. கோடம்பாக்கத்துக்கு இவங்க 4 வது ஸ்வேதா.. கொழுக் மொழுக்னு இருக்கு.. ஆனா தேறாது.. 

காதல் சுகுமார் காமெடி போர்ஷன்.. நாட் பேடு.. அவருக்கு ஒரு ஜோடி பேரு கவிதா.. அவங்களுக்கிடையேயான காதல் காட்சிகள் பார்த்தா லவ்வர்ஸ்க்கு கோபமே வந்துடும் .. அப்படி இருக்கு. 



http://cinema.vikatan.com/index.php?view=image&format=raw&type=img&id=8406&option=com_joomgallery&Itemid=141


இயக்குநரிடம் சில கேள்விகள்


1. ஹீரோயின் கிட்டே ஒரு ஸ்கூட்டி இருக்கு.. அதை அடிக்கடி ஹீரோயின்  பைக் பைக்னு சொல்றார்.. ஹீரோ ஸ்கூட்டிங்கறார்.. ஏன்?


2. காணாம போன ஸ்கூட்டியை தேடி போலீஸ் ஸ்டேஷன் வர்ற ஹீரோ & ஹீரோயின் 2 பேரும் “ ஸ்கூட்டி என்னுது” குடுங்கன்னு கேட்டதும் உடனே எடுத்து குடுத்துடறாரு எஸ் ஐ.. ஆர் சி புக் அல்லது அந்த வண்டிக்கு அவங்க தான் ஓனர் என்பதற்கு ஆதாரம் ஏதும் கேட்கவே இல்லை.. ??


3. ஸ்கூட்டியை விதி முறையை மீறி ரோட்டில் நிறுத்தி வெச்சதால போலீஸ் ஸ்டேஷனுக்கு ஓட்டிட்டு போயிடுது ஓக்கே .. அதை உள்ளே தானே வைப்பாங்க? ஸ்டேஷன் வாசல்ல ஹீரோயின் வந்து எடுக்க வசதியா வாசல்ல அனாமத்தா வைப்பாங்களா?

4. தங்கப்பேனா ஒரு லட்சம் மதிப்புன்னு ஹீரோயின் பாப்பா சொல்லுது.. ஹீரோவோட ஃபிரண்ட் அதை அடமானம் வெச்சு சேட் கிட்டே பணம் வாங்கிக்கறார்.. ஆனா அதை மீட்கப்போகும் ஹீரோ தன் கிட்டே இருக்கற கால் பவுன் மோதிரத்தை கொடுத்து  அந்தப்பேனாவை வாங்கிக்கறார்.. எந்த ஊர்ல அந்த மாதிரி இ வா சேட் இருக்காங்க?


5. ஹீரோ ஹீரோயின் கிட்டே “உங்க பேனா என் ஃபிரண்ட் கிட்டே இருக்கு”ன்னு சொன்னதும் ஒரு நல்ல பொண்ணு என்ன சொல்லனும்? ஃபோனை போட்டு அவனை இங்கே வரச்சொல்லுங்கன்னு சொல்லனும். அதை விட்டுட்டு முன்னே பின்னே அறிமுகம் இல்லாத ஆள்  பைக் பின்னால உக்காந்து ஊரையே ரவுண்ட் அடிக்குது.. 


6. ஒரு ஷாட்ல ஸ்கூட்டி ஆக்சிடெண்ட் ஆகி ஹீரோவும், ஹீரோயினும் பள்ளத்துல விழுந்து கட்டிப்பிடிச்சு உருள்றாங்க.. அப்போ ஸ்கூட்டி கவுந்து கிடக்கு.. அவங்க எந்திரிச்சு கரை ஏறும்போது ஸ்கூட்டி ஸ்டேண்ட் போட்டு ரெடியா நிக்குது? விட்டாலாச்சாரியா வந்தாரா?


7. கோயில்ல சனீஸ்வர பகவான் கிட்டே 247 விளக்கு தீபம் இருக்கு.. கற்பூரம் பற்ற வைக்கனும்னா அதுல பற்றி வெக்கலாம். அதை விட்டுட்டு ஹீரோ ஹீரோயின் கிட்டே தீப்பெட்டி ப்ளீஸ் ஹி ஹி -ங்கறார்.. அந்த கேனமும் எடுத்து கொடுக்குது..

8. ஹீரோ லோன்ல எடுத்த பைக் ஒரே ஒரு டியூ கட்டலைன்னு ஃபைனான்ஸ் ஆளுங்க வந்து மிரட்டறது ஓவர்.. அதுவும் 1ந்தேதி டியூ டேட்.. மாசாமாசம் 5 ந்தேதி கட்டறார்.. அன்னைக்கு 5 ந்தேதி.. அப்பவே ஆள்ங்க வந்துடறாங்க.. வர்றவங்க ஒண்ணா பைக்கை சீஸ் பண்ணிட்டு போகனும்.. அல்லது எச்சரிச்சுட்டு போகனும்.. அதை விட்டுட்டு பைக்கை எரிக்கறாங்க. லூசாய்யா அவனுங்க

9. ஃபைனான்ஸ் கம்பெனி அசிஸ்டென்ட் மேனேஜரா வர்ற ஒரு லேடி கேவலமான லோ கட் பனியனும், ஜீன்ஸ் பேண்ட்டும் போட்டுட்டு டியூட்டிக்கு வருது.. டிரஸ்சிங்க் சென்ஸ் நோ?

10. என்னதான் காமெடியா இருந்தாலும் காதல் சுகுமார் தன் காதலிக்கு முதல் காதல் பரிசா காண்டம் பாக்கெட் தர்றது ரொம்ப ஓவர்.. அதுக்கு அந்த பேக்கு பத்திரமா வைங்க , பின்னால (????)யூஸ் ஆகும் அப்டினு ஒரு டயலாக் வேற ..


11. தத்துப்பிள்ளைக்கு லவ் ஏற்பட்டதுக்காக தற்கொலை வரை போவேன்னு சொல்றதும்,  கொலை பண்றேன்னு மிரட்டறதெல்லாம் ஓவரோ ஓவ்ர்


12. க்ளைமாக்ஸ்ல படு கேவலமா ஒரு சீன்.. ஹீரோயினை, வில்லனை ஒரு கார்ல கூட்டிட்டு வில்லி போறா.. ஹீரோவுக்கு அவங்க இருப்பிடம் தெரியாது.. ஹீரோயின் செல்லுக்கு ஹீரோ ஃபோன் போடறார்.. வில்லி செல்லை ஸ்விட்ச் ஆஃப் பண்ணிடறா.. வில்லன் உலக மகா கேனம் போல .. ஹீரோவுக்கு ஃபோனை போட்டு நாங்க இன்ன இடத்துக்கு போறோம், முடிஞ்சா வந்து காப்பாத்துங்கறார்.. அய்யகோ.. 

13. ஹீரோ அம்மா கட்டிட்டு இருக்கற வீடு பாதில நிக்குது.. கிட்டத்தட்ட 12 லட்சம் ரூபா தேவைப்படும் பிராஜக்ட்.. ஆனா ஒன்றரை லட்சம் கிடச்சா போதும்கற மாதிரி ஒரு  வசனம்




http://cinema.vikatan.com/index.php?view=image&format=raw&type=img&id=9352&option=com_joomgallery&Itemid=141



 மனம் கவர்ந்த வசனங்கள்


1. கடவுளே.. எல்லாம் நல்லபடியா நடக்கனும்.. 

நடந்தா நல்லது.. நடக்கலைன்னா இன்னும் நல்லது..

 புரியலை


எதெது எப்பெப்போ நடக்கனுமோ அது அது அப்பப்போ நடக்கும்.. நம்ம கைல எதுவும் இல்லை.. 


2. என்னது முடி வெட்ட 50 ரூபாயா?பத்து ரூபா, 15 ரூபாய்க்கெல்லாம் வெட்ட மாட்டாங்களா?


நம்மைத்தான் வெட்டுவாங்க 


3. புள்ளை பெத்துக்கிட்டா மட்டும் போதாது,ஒவ்வொரு பெற்றோரும் தன் பிள்ளைக்கு சொந்த வீடு கட்டித்தரனும்.. 


4. நீ பேசற 4 வார்த்தைல ஒரு வார்த்தை என் பெற்றோரை குறை சொல்லிட்டே தான் இருக்கே..


5. கஷ்டத்தை தன் பக்கம் வெச்சுக்கிட்டு  லாபத்தை முதலாளி பக்கம் தர்றவன் தான் உண்மையான லேபர்.. 


6. டபுள் மீனிங்க் லேடி - உன்னை வேலையை விட்டுத்தூக்கிடுவேன்.. 

 ஹி ஹி நீங்க தூக்கனும், நாங்க அதை பார்க்கனும்.. 


 அவ்வ்வ்வ்

 என்ன ? நெஞ்சு வலிக்குதா? 

 வலிச்சது நெஞ்சு இல்லை....... 


7. தங்கம்னு இந்த மோதிரம் மட்டும் தான் உங்க கிட்டே இருக்கும்மா. அதையும் அடமானமா வைக்கனுமா?

 அதான் நீ இருக்கியேப்பா.


8. பொண்ணா கேட்கறே? இப்படித்தயங்கறே?PEN தானே கேட்கப்போறே?.


9. அடிக்கடி இங்கே வாங்க.. 


 யோவ், சேட்டு .. உன் நகைக்கடை( அடகுக்கடை) என்ன பாத்ரூமா  அடிக்கடி வந்துட்டுப்போக ..?


10. எக்ஸ்க்யூஸ் மீ மிஸ்.. மேட்ச் பாக்ஸ் ப்ளீஸ்.. 

 கேட்கறது  கடன்.. அதுல என்ன இங்க்லீஷ் வேண்டிக்கிடக்கு?


11.  இப்படி பட்டுன்னு ஐ லவ் யூ சொன்னா எப்படி?

காதல் வந்துட்டா பொண்ணை பார்த்து பட்டுன்னு லவ்வை சொல்லிடனும்..

 அவளுக்குப்[பிடிக்கலைன்னா?

 பிடிக்க வைக்கனும்.. 


12. வீடு கட்ட ஆசைப்பட்டா ஆரம்பிச்ச வேகத்துல கட்டி முடிச்சுடனும்.. இல்லைன்னா இழுத்துக்கிட்டே தான் போகும்.. 


13. ஜோசியரே.. நல்ல நாள், நல்ல நேரம் எல்லாம் காலண்டர்லயும், பஞ்சாங்கத்துலயும் நாங்க பார்த்துக்க மாட்டோமா? உன் வேலை என்ன? நடக்கபோறதை சொல்லு பார்ப்போம்.. என் பொண்ணு லவ் பண்றாங்கற மேட்டரை நீ ஏன் முதல்லியே சொல்லலை?

 சனி எப்பவும் சொல்லிட்டு வராதுங்க.. காதலும் சனி மாதிரி தான். 

 http://tamildigitalcinema.com/wp-content/uploads/2012/05/Idhayam-Thiraiarangam-Movie-Stills16-300x199.jpg




படத்துல ஆச்சரியமான விஷயம் 2 பாட்டு நல்லா பண்ணி இருக்காங்க..

 ஒரு வார்த்தை ஒரு வார்த்தை சொன்னாளே ,  ஒரு ஓரத்துல உக்காந்து பேசனும் 2 பாட்டும் நல்லா எடுத்திருக்காங்க.. டான்ஸ் மாஸ்டர் குட்.. 

எதிர்பார்க்கும் ஆனந்த விகடன் மார்க் - 38


எதிர்பார்க்கும் குமுதம் ரேங்க் - சுமார்

 சி.பி கமென்ட் - டி வி ல போட்டா பார்க்கலாம். ஈரோடு ஸ்ரீலட்சுமில படம் பார்த்தேன்

4 comments:

Saminathan said...

இப்படி ஒரு படம் வந்துருக்கறதே உங்க விமர்சனம் பார்த்துதான் தெரிஞ்சுகிட்டேன்

Senthil said...

Escape!!

Thanks

jegans said...

அட போங்கப்பா உங்க ஊர் ஹீரோ எல்லருமே மூனுநாள் தாடியோட(ஆடு மேய்ந்த புல்லுபோல) தானே நடிக்கிறாங்க இதுக்குபோய் அலட்டிக்கலாமா....?

ammuthalib said...

ha ha ha... i was laughin like anything.. sarcasm really worked out very well