Friday, May 25, 2012

வெள்ளிக்கிழமை ராமசாமி வெட்டாஃபீஸ் வெங்கிடுசாமி (25.5..2012 ) 5 படங்கள் முன்னோட்ட பார்வை


http://moviegalleri.net/wp-content/gallery/ishtam-tamil-movie-posters/ishtam_tamil_movie_posters_vimal_santhanam_8148.jpg


1. இஷ்டம்". வாகை சூட வா படத்திற்கு பிறகு, பாலாஜி ரியல் மீடியா கம்பெனி சார்பில் ‌ரமேஷ் தயாரிப்பில், விமல் நடித்து வரும் புதிய படத்தின் பெயர் "இஷ்டம்". படத்தில் விமலுக்கு ஜோடியாக காஜல் அகர்வாலின் தங்கை, நிஷா அகர்வால் நடித்துள்ளார். இவர்களுடன் அனுப், சந்தானம் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். காதல் கதையை ரொம்ப வித்யாசமாக இயக்கி வருகிறார் பிரேம் நஷீர். இந்தபடத்திற்காக விமல் தனது, நடை, உடை, பாவனை என எல்லாவற்றையும் மாற்றியுள்ளார். தமன் இசையமைக்க, ஜோசப் ஒளிப்பதிவு செய்கிறார். திரையில் இதுவரை பார்த்த விமலுக்கும், இனி இந்தபடத்தில் பார்க்க போகும் விமலுக்கும் ரொம்பவே வித்தியாசம் இருக்குமாம்.


களவாணி விமல் முதன்முதலாக ஐ.டி., கம்பெனி இளைஞராக சிட்டி பேக்கிரவுண்டில் நடிக்கும் இஷ்டம் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் அப்படத்தின் இயக்குநர் தயாரிப்பாளர் காமெடி நடிகர் சந்தானம் உள்ளிட்டவர்களுடன் துணிச்சலாக மேடையில் இருந்தார் அப்பட ஹீரோ விமல்! என்ன ஆச்சர்யம்?! மனிதர் மைக்கையும் பிடித்து.,இதுநாள் வரை கிராமத்து இளைஞராக கதாநாயகனாக திரையில் வந்த நான் இஷ்டம் படத்தில் முதன்முதலாக சிட்டி சப்ஜெக்டில் நடித்திருக்கிறேன் என் மற்ற படங்களுக்கு தந்த ஆதரவை மீடியா இதற்கும் தரவேண்டும் நன்றி வணக்கம் என்று உ.பா., உந்துதலில் இருந்த மாதிரியும் இல்லாத மாதிரியும் ஒரு வழியாக பேசி அமர்ந்துவிட்டார்.


http://images.south365.in/2012/01/Nisha-Agarwal-From-Ishtam-Tamil-Movie-HQ-Stills-4.jpg

 ஆனால், அடுத்து மைக் பிடித்த சந்தானமோ., எனக்கு கிரீடம் படத்தில் துணை நடிகராக வந்ததில் இருந்து விமலைத் தெரியும். அவரது நல்ல கேரக்டர் தான் அவரை இவ்வளவு உயரத்திற்கு கொண்டு வந்திருக்கிறது. டேலண்ட் 10% இருந்தால் போதும் கேரக்டர் 90% நன்றாக இருந்தால் சினிமாவில் சாதிக்கலாம் என்பதற்கு விமல் உதாரணம். கேரக்டர் 90,90 என்று திரும்ப திரும்ப சந்தானம் சொன்னது., கேட்டு விமலே மறந்திருந்தாலும் சந்தானம் விடமாட்டார்., போல என விமல் உ.பா., 90 பற்றி தெரிந்த சில பத்திரிகையாளர்கள் தங்களுக்குள் கிசுகிசுத்தது ஹைலைட் காமெடி! ஈரோடு அபிராமியில் ரிலீஸ்.. இது நான் இஷ்டானு என்ற தெலுங்கு படத்தின்டப்பிங்க் ப்டம். நேரடி தமிழ்ப்படம் அல்ல

 http://s.paadal.net/album_images/album/urumi.JPG
2. உருமி   - இயக்குநர் சந்தோஷ் சிவத்தின் கனவு திட்டமான உருமி படம் வரும் வெள்ளிக்கிழமை திரைக்கு வருகிறது. வரலாற்றுக் கதையை அடைப்படையாக வைத்து மிக அதிக பட்ஜெட்டில் உருவாகியுள்ளார் இப்படத்தின் தயாரிப்பாளர் தாணு.தமிழகத்தில் சுமார் 250 திரையரங்குகளில் இப்படம் வெள்ளியன்று திரையிடப்பட உள்ளது. 

இப்படத்தின் பலம் கதை என்றாலும், அதற்கு மேலும் பலம் சேர்க்கும் விதத்தில் பிருத்விராஜ், ஆர்யா, பிரபுதேவா, ஜெனிலியா, நித்யா மேனன், வித்யா பாலன் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.இந்த படம் பொதுமக்களிடம் எந்த விதமான வரவேற்பைப் பெறப் போகிறது என்று தெரிந்து கொள்ள சந்தோஷ் சிவன் மிகுந்த ஆவலோடு உள்ளார்.


http://www.bollyketchup.com/wp-content/uploads/2011/03/Urumi-Malayalam-Movie.jpg


வரலாற்றை மையப்படுத்தி எடுக்கப்படும் தமிழ் சினிமாக்களுக்கு ரசிகர்கள் நிச்சயமாக வரவேற்பு அளிக்க வேண்டும். வெறும் சதையை வைத்து படம் எடுக்காமல், கதையை வைத்துப் படம் எடுத்தால் வெற்றி பெறலாம் என்ற நம்பிக்கை இயக்குநர்களுக்கு வந்தால்தான் தமிழ் சினிமா சிறப்படையும் என்பது நமது ரசிகர்கள் அறிந்ததே

http://www.onlinemoviesfreee.com/wp-content/uploads/HLIC/ca151e128950586028e1cd1360b9c366.jpg


 3. MEN IN BLOCK 3 - An alien criminal kills the young Agent K in 1969, altering the timeline, changing the Agency and placing the Earth in danger. Veteran Agent J (Will Smith) must travel back in time to 1969 to before the murder and work with the young Agent K (Josh Brolin) to save him, the Agency, the Earth and humanity itself. Written by Anonymous  ERODE VSP

 https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg0K0c8KbWlL5HaHPPb50s9GY70QxJ5DpEFhxqN25zqnofpJVLDF48XP-yik5kZZbrxzx-V-mljSL1S-79Q-LgFxpYQPyAhpQIRixfcl8ASJyW8QycG-1R5Fmz-AYFp-SNI_cE8d957N4eB/s1600/Konjum+Mainakkale+Movie+Posters.jpg

4.கொஞ்சும் மைனாக்களே  - இதுல இளம் தம்பதிகளின் வாழ்க்கை பிரச்சினைகளை மையமா வச்சி உருவாக்கியிருக்காங்க.காதலித்து திருமணம் செய்வதைவிட அமையும் மனைவியை ஆயுள் வரை காதலிப்பது சிறந்தது என்ற கருத்தும்,

'புரிதலும், பொறுமையும்' இல்லேன்னா மணவாழ்க்கை புண்ணாகிவிடும்னு அட்டகாசமான கருத்தை சொல்லியிருக்கும் படம்தான் 'இந்த கொஞ்சும் மைனாக்களே..'

இந்தப் படத்தில புதுமுகங்கள்தான் மூணு பேர். உதய், மோனகப்பிரியா, அக்ஷதா.இவங்களைத் தவிர நம்ம டெல்லி கணேஷ், மீரா கிருஷ்ணன், எம்.எஸ். பாஸ்கர் கூட நடிச்சிருக்காங்க.
http://www.vidikural.com/wp-content/uploads/2012/04/konjum_mainakkale-1.jpg

ஒளிப்பதிவு; ஏ.என். தமிழ்மாறன்,  வசனம்: எஸ்.எஸ்.  ஷோபனசந்தர், கதை, திரைக்கதை, இயக்கம் ஏ.பி.கே. கார்த்திகேயன்.  தயாரிப்பு சத்யா கிரியேஷன்ஸ் எஸ்.எஸ். நாராயணன்..

 ஈரோடு ஸ்ரீலட்சுமியில் ரிலீஸ் 


http://southtamil.files.wordpress.com/2010/02/anbulla-maan-vizhiye-movie-pics.jpg?w=300

5. அன்புள்ள மான் விழியே - அன்புள்ள மான்விழியே" முத்துவேல் மூவீஸ் சார்பாக புலவர் வ.சிவசனகரன் தயாரிக்கின்ற படம். புது முகங்கள் சுனில், நசீர், ஹாசினி, ரிஷா வடிவுக்கரசி உட்பட பலர் நடித்துள்ளனர். இதன் பாடல் வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னையில் நடந்தது.

 அவ்வைநடராஜன் வெளிட்ட ஆடியோவை இயக்குனர் எஸ்.பி.முத்துராமன் பெற்றுக் கொண்டார். தயாரிப்பாளர் பி.எல்.தேனப்பன், அரு.அழகப்பன், திருப்பூர் கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் கலந்துக் கொண்டனர். மொத்தம் 6 பாடல்கள் உள்ள இந்த படத்திற்கு இசையமைத்தவர் அரவிந்த் ஸ்ரீராம். இதை இயக்கியவர் இயக்குனர் பிரம்மன்.

 "அன்புள்ள மான்விழியே" படத்தை பற்றி இயக்குனர் பிரம்மன் கூறுகையில்-"குழந்தை பருவத்தில் இரண்டு குழந்தைகளுக்கு இடையில் இருக்கும் நட்பு எப்படி பின்னாளில் காதலாக மாறுகிறது என்பதை காட்டுகிறது. அது மட்டுமில்லாமல் ஒரு குழந்தை மேல் தாயுக்கு இருக்கும் பாசத்தை பற்றியும் காண்பித்துள்ளோம். குடும்பத்துடன் கண்டுகளிக்க ஏற்ற ஒரு நல்ல பொழுதுப்போக்கு படம்" என்றார் ..





6. ரஜினி நடிச்ச பாட்ஷா படத்தின் ஹிந்தி டப்பிங்க் ரிலீஸ்/..


7. திருடன் திருடி அப்டினு ஒரு தெலுங்கு டப்பிங்க் ரிலீஸ்




2 comments:

கொக்கிகொமாரு said...

அடிங்கோ!பொதுவா சாக்கடை பதிவர்கள்,கசுமால பதிவர்கள்,இப்படிப்பட்ட பதிவர்களைதான் ஸ்பூப் பண்ணுவாங்கோ.இந்த கசுமாலதையும்
ஸ்பூப் பண்ணி சாக்கடையோட மானத்த கெடுத்துப்புடீங்களே.ஹே.ஹே.ஹே,

'பரிவை' சே.குமார் said...

இஷ்டம் நஷ்டம் இல்லாம ஓடுங்கிறீங்க...