Published on Friday, April 06, 2012 at 7:26:00 AM with 1 Comments

வெள்ளிக்கிழமை ராமசாமி வெட்டாஃபீஸ் வெங்கிடுசாமி (6.4..2012 ) 8. படங்கள் முன்னோட்ட பார்வை

http://www.filmglitz.com/tamil/wp-content/uploads/2012/04/Mazhaikalam.jpg 

1. மழைக்காலம் - இந்தப்படத்தோட பரபரப்பே காதல் பட சரண்யா இதுல நிர்வாணமா நடிச்சதுதான்.. 


ஜனநாதனின் பேராண்மையில் அறிமுகமான சரண்யா, தற்போது ஏ.ஆர். ஸ்கிரீன்ஸ் தயாரிக்கும் மழைக்காலம் படத்தில் நடித்துவருகிறார்.
சஞ்சய் நாயகனாக நடிக்கும் இப்படத்தின் இயக்குநர் தீபன். இதில் சரண்யா ஓவியக் கல்லூரி மாணவியாக வருகிறார். இதற்காக ஓவியக் கல்லூரிக்குச் சென்று அங்குள்ள மாணவ மாணவிகளை உற்றுக் கவனித்திருக்கிறார்.
இப்படத்தின் க்ளைமாக்ஸ் நிச்சயமாகப் பேசப்படும் என்று ஆருடம் சொல்கிறார் அம்மணி. 
http://cdn4.supergoodmovies.com/FilesFive/saranya-appears-nude-in-mazhaikalam-96d31ed7.jpg
மழைக்காலம் படம் நாயகி சரண்யா ஆபாசமாக நடித்ததை பற்றி கொலிவுட் பரபரப்பாக பேசி வருகிறது.


தமிழில் காதல், பேராண்மை படங்களுக்கு பிறகு படத்தில் நாயகி கதாப்பாத்திரத்தில் நடிக்க, சரியான வாய்ப்பிற்காக சரண்யா காத்திருந்தார்.


பின்பு மழைக்காலம் படத்தில் நாயகியாக நடிக்க வாய்ப்பு வந்ததும், முதலில் ஏற்க தயங்கினார் என்று படக்குழு கூறியுள்ளது.


இதுகுறித்து நாயகி சரண்யா கூறியதாவது, போராண்மை படத்திற்கு பின்பு நாயகி பாத்திரத்தில் நடிக்க, சரியான வாய்ப்பிற்காக காத்திருந்தேன்.


மழைக்காலம் படத்தின் கதையை கேட்டேன். இப்படத்தின் நாயகி கதாப்பாத்திரத்தில் நடிக்க முதலில் எனக்கு தயக்கமாக இருந்தது.


இந்தப்படத்தில் ஆபாசமாக நடித்து என் நடிப்பு திறமையை காட்டியுள்ளேன்.

 http://www.tamilspy.com/wp-content/uploads/2012/01/nirv.jpg
காட்சிப்படி கலைக்கல்லூரி மாணவர்கள் முன்பு நான் ஆபாசமாக தோன்றவேண்டும். இந்தக் குறிப்பிட்ட காட்சியில் 'ஸ்கின்-டோன்','பாடி-ஷுட்ஸ்' பயன்படுத்த இயக்குனர் யோசனை சொன்னார்.


ஆனால், படத்தில் இந்தக்காட்சி யதார்த்தமாக வரவேண்டும் என்பதற்காக நான் துணிச்சலாக ஆடைகளை துறந்து நடிக்க முடிவெடுத்தேன்.


படத்தில் இது ஆபாசமான காட்சியாக இல்லாமல் கலைநயமாக வந்துள்ளது. தணிக்கை அதிகாரிகளும் இப்படத்துக்கு 'யு' சான்றிதழ் வழங்கியுள்ளார்கள் என்று தெரிவித்துள்ளார்.

ஈரோடு சங்கீதா வில் ரிலீஸ் 

 http://tamilstarmedia.com/wp-content/gallery/rakalai/06-copy.jpg
 2. ரகளை - தமிழ்-தெலுங்கு ஆகிய 2 மொழிகளில் தயாராகும் இப்படத்தில் சிரஞ்சீவியின் மகன் ராம்சரண்-தமன்னா ஜோடியாக நடித்து இருக்கிறார்கள். முக்கிய வேடத்தில் பார்த்திபன், அஜ்மல் ஆகிய இருவரும் நடித்துள்ளனர். மற்றும் நாசர், கோட்டா சீனிவாசராவ், கீதா, பிரகதி ஆகியோருடன் இந்தி பட உலகின் பிரபல வில்லன் நடிகர்கள் ஐந்து பேரும் நடித்து இருக்கிறார்கள். 
http://www.chiranjeeviblog.com/albums/Galleries/Movies/Racha/107.jpg
.. இதுதான் தமன்னா நடித்து வரும் ஒரே தமிழ்ப் படம். தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் வெளியாகும் படம் என்றாலும் தெலுங்கு நடிகர் ஹீரோ என்பதால் தெலுங்குக்குதான் முதல் ம‌ரியாதை.
http://cinema.vikatan.com/index.php?view=image&format=raw&type=img&id=2612&option=com_joomgallery&Itemid=140

தமன்னா ரசிகர்களை ஆற்றுப்படுத்தும் விதமாக தெலுங்கில் அவர் நடித்தப் படமொன்று தமிழில் வெளியாகிறது.

ரட்சா என்ற அந்தப் படத்தில் சிரஞ்சீவியின் மகன் ராம் சரண் தேஜா ஹீரோவாக நடித்துள்ளார். தெ‌ரிந்த முகங்களான பார்த்திபனும், அ‌‌ஜ்மலும் இருக்கிறார்கள். எல்லாவற்றிற்கும் மேலாக தமன்னாவின் கவர்ச்சி இருக்கிறது. யோசிக்காமல் டப்பிங் வேலையை தொடங்கியிருக்கிறார்கள். படத்துக்கு பெயர் ரகளை.

இந்த டப்பிங்க் படத்துக்கு வந்த மவுசு பாருங்க ஈர்ரோட்டில் 2 தியேட்டரில் ரிலீஸ்.. தேவி அபிராமி, ஸ்ரீகிருஷ்ணா
http://mp3scorner.com/wp-content/uploads/2009/09/Agarathi-2009-mp3s.jpg 


3. அகராதி -வர்னிகா மூவி மேக்கர்ஸ் அகராதியை தயாரிக்கிறது. க்ரைம் கதை எழுத்தாளர் ராஜேஷ்குமார் எழுதிய, இரவில் ஒரு வானவில் கதையையே அகராதி என்ற பெயரில் எடுக்கிறார்கள்.


குடும்பப் பின்னணியில் உறவுகளின் சிக்கல்களையும் அதனால் உருவாகும் எதிர்மறை விளைவுகளையும் அகராதி சினிமா ஆக்சன் கலந்து சொல்கிறது. பணத்தால் கலாச்சாரங்களை மீறி உறவுகள் சிதறிப் போவதையும் அகராதி காட்சிப்படுத்துகிறது.


webdunia photoWD
நாகா வெங்கடேஷ் இயக்குனர். பிரதீப், மோனிகா, செளந்தர்யா, அர்ச்சனா, கிரண், பவன் ராஜ்குமார், காயத்ரி ப்ரியா, வெண்ணிற ஆடை மூர்த்தி, சத்யன், புவனேஸ்வரி, மூமைத்கான் மற்றும் பலர் நடிக்கிறார்கள்.

சென்னை எண்ணூரில் சண்டைக் காட்சி ஒன்று படமாக்கப்பட்டது.
ஒரு பாடலுக்கு முமைத்கான் ஆடியுள்ளார்.


சந்தர் சி பாபு இசையில் வாலி, தாமரை, கவிவர்மன், அண்ணாமலை ஆகியோர் பாடல்கள் எழுதியுள்ளனர்.
ஒளிப்பதிவு பியோன். திரைக்கதை இயக்கம் காகா வெங்கடேஷ். இந்தப்படம் இன்று அல்லது ஏப்ரல் 13 ரிலீஸ்..
 http://www.filmics.com/tamil/images/stories/news/2012/March/21-03-12/titanic-movie.jpg
4. டைட்டானிக் 3டி - 3டி தொழில்நுட்பத்தில் உருவாகி இருக்கும் டைட்டானிக் படத்திற்கு எந்தவித கட் கொடுக்காமல் அப்படியே ரிலீஸ் செய்ய இந்திய தணிக்கை குழு அனுமதி அளித்துள்ளது. ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில், லியோனார்டோ டிகாப்ரியோ மற்றும் கேத் வின்ஸ்லெட் நடிப்பில் கடந்த 1997-ம் ஆண்டு வெளியாகி, இந்தியா உள்ளிட்ட உலகமெங்கும் மாபெரும் வெற்றி பெற்று வசூலில் சரித்தர சாதனை படைத்த படம் டைட்டானிக்.

1912-ம் ஆண்டு டைட்டானிக் என்ற பிரம்மாண்ட கப்பல் அட்லாண்டிக்கு கடலில் மூழ்கியதை மையப்படுத்தி இப்படம் உருவாக்கப்பட்டு இருந்தது. உலகமெங்கும் வசூலில் சாதனையும், 11 ஆஸ்கர் விருதுகளையும் அள்ளிய டைட்டானிக் படம் இப்போது 3 டி தொழில் நுட்பத்தில் மாற்றி அமைக்கப்பட்டு மீண்டும் ரிலீஸ் ஆகி இருக்கிறது. ஈரோட்டில் ரிலீஸ் இல்லை


http://www.thegate.ca/wp-content/uploads/2009/02/kate-winslet_ar_0130.jpg

ஏப்ரல் 5ம் தேதி முதல் இந்தியா உள்ளிட்ட உலகமெங்கும் ரிலீஸ் . டைட்டானிக்கு 3டி படத்திற்கு இந்திய தணிக்கை குழு அதிகாரிகள் யு/ஏ சான்று அளித்துள்ளனர். முன்னதாக கடந்த 1997ம் ஆண்டு டைட்டானிக் படம் இந்தியாவில் ரிலீஸ் ஆன போது, அதில் கேத் வின்ஸ்லெட்டின் நிர்வாண ஓவியம் மற்றும் டிகாப்ரியோ-கேத் வின்ஸ்லெட் ரொமான்ஸ் காட்சிகள் உள்ளிட்ட சில காட்சிகளை கட் செய்தனர் தணிக்கை குழுவினர். ஆனால் இம்முறை அந்த காட்சிகள் எதுவும் கட் செய்யப்படவில்லை. அப்படியே ரிலீஸ் செய்ய தணிக்கை குழு அதிகாரிகள் அனுமதி அளித்துள்ளனர்.


டைட்டானிக் கப்பல் மூழ்கியதன் 100ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, டைட்டானிக் 3டி படம் வெளியாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
 http://www.tamilmurasu.org/data1/TmNewsImages/Evening-Tamil-News-Paper_94994318486.jpg

5. அஸ்தமனம்  - கிஷோரை ஹீரோவாக்கி போர்க்களம் என்றொரு படம் வெளிவந்தது நினைவிருக்கிறதா? பண்டி சரோ‌ஜ்குமார் இயக்கியது. படம் முழுக்க ஸ்லோமோஷனில் எடுக்கப்பட்ட ப‌ரிசோதனை முயற்சிப் படம்?

பலரை திரும்பிப் பார்க்க வைத்த அந்தப் படத்துக்குப் பிறகு அவர் இயக்கியிருக்கும் படம்தான் அஸ்தமனம். டார்க் ஃப்ளேவ‌ரில் உருவாகியிருக்கும் இந்தப் படத்தின் ஸ்டில்களும் எதிர்பார்ப்பை தூண்டுவதாகவே உள்ளது. சென்சார் இதற்கு யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது.
வரும் 6ஆம் தேதி அஸ்தமனம் திரைக்கு வருகிறது. நல்லதொரு அனுபவத்துக்கு தனது படம் உத்தரவாதம் என்கிறார் பண்டிட் சரோ‌ஜ்குமார்.ஈரோடு அண்ணாவில் ரிலீஸ்
 http://wallpaperpassion.com/upload_big_thumb/15586/housefull-2-hq-wallpaper.jpg
 
6. HOUSEFULL -2  - ஹிந்தில மட்டும் இல்லை , எந்த மொழிலயும் ஒரு படம் ஹிட் ஆகிட்டா அதனோட 2 வது பாகம் எடுக்காம விட மாட்டாங்க.  Akshay Kumar, John Abraham, Ritesh Deshmukh, Asin, Jacqueline Fernandez, Zarine Khan, Shazahn Padamsee, Boman Irani, Rishi Kapoor, Mithun Chakraborty, Johnny Lever, Chunky Pandey, Shreyas Talpade அப்டின்னு பெரிய நட்சத்திரப்பட்டாளமே நடிச்சிருக்கு...ஈரோடு ஸ்ரீநிவாசாவில் ரிலீஸ்.. 
 
 http://cini.in/wp-content/uploads/2012/04/Nandu-Baski.jpg
 
 
7. நண்டு பாஸ்கி -  அய்யனார் கிரியேஷன்ஸ் சார்பில் பி.செல்வகுமார் தயாரித்து, இயக்கும் படம், �நண்டு பாஸ்கி�. புதுமுகங்கள் ஜெகன், புருஷோத்தமன், விக்கி, பிரபாத், சத்யா ஹீரோக்கள். ரித்து, துர்கா, ஜோஷிதா ஹீரோயின்கள். முக்கிய வேடங்களில் ஆண்டனி, துளசிங்கம் உட்பட பலர் நடிக்கின்றனர். 
 
ஒளிப்பதிவு, ஜெயச்சந்திரன். இசை&பாடல்கள்: ஜெயம் செந்தில். படம் பற்றி செல்வகுமார் கூறுகையில்,
 
 
 �நண்பன் நினைத்தால், ஒருவனை உயர்த்த முடியும். காப்பாற்ற முடியும். அதேநேரம், அழிக்கவும் முடியும். உயரிய நட்புக்கு துரோகம் செய்தால் என்ன தண்டனை கிடைக்கும் என்பதை இதில் சொல்கிறோம்� என்றார்.
 http://4.bp.blogspot.com/-XCt4Y2CZqz8/TzO_mhypqWI/AAAAAAAABEQ/CysSW840C18/s1600/01.jpg
 
8.  ரதி நிர்வேதம் -மலையாளத்தில் வெ:ளிவந்த ரதிநிர்வேதம் கில்மா படங்களீன் முன்னோடி.. பல வருடங்களுக்குப்பின் ரீமேக் ஆகி போன வருஷம் மறுபடி எடுத்தாங்க.. இப்போ தமிழ்ல டப் பண்ணி இருக்காங்க ..ஈரோடு அன்னபூரணியில் ரிலீஸ்
 

ரதிநிர்வேதம் -கேரளத்துக்கவிதை @கில்மா மொழி - சினிமா விமர்சனம்   http://www.adrasaka.com/2011/07/blog-post_6567.html

 
 

1 comment:

கோவை நேரம் said...

இன்னிக்கு அனேகமா ரதி நிர்வேதம் தானே....ஏற்கனவே பார்த்த படம் என்றாலும் இப்போ தமிழ் டப் பண்ணி வருதுல்ல...