Thursday, April 26, 2012

வெள்ளிக்கிழமை ராமசாமி வெட்டாஃபீஸ் வெங்கிடுசாமி (27.4 .2012) 8 படங்கள் முன்னோட்ட பார்வை

1. லீலை -
பல வருடங்களாக காத்திருந்த படமான லீலை தற்போது திரையரங்கை முற்றுகையிட உள்ளது.2008 ஆம் ஆண்டு படப்பிடிப்பு தொடங்கப்பட்டு 2010 இல் வெளியிடப்பட இருந்த இப்படமானது சுமார் இரண்டு வருடங்கள் கிடப்பில் போடப்பட்டிருந்தது.


இரண்டு வருடங்கள் எதற்காக இவ்வாறு கிடப்பில் போடப்பட்டிருந்தது என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.எவ்வாறாயினும் இந்த வாரம் வெள்ளிக்கிழமை அன்று லீலை படம் திரையிடப்படவுள்ளது.

ஆஸ்கார் ரவிச்சந்திரன் அவர்களே இப்படத்தை வெளியிட ஆர்வம் காட்டியிருந்தார்.இப்போது அவர் தலைமையிலேயே லீலை படம் திரையரங்குகளை அலங்கரிக்கவுள்ளது.
http://l.yimg.com/bt/api/res/1.2/qAsmgYzt79kyHaCPJ_2TWg--/YXBwaWQ9eW5ld3M7Zmk9aW5zZXQ7aD00MDA7cT04NTt3PTYwMA--/http://media.zenfs.com/en_us/News/ybrand.dinamalar.com.ta/15093886067.jpg


லீலை படத்தில் ஷிவ் பண்டித்,மனசி பரேக் கோகில்,சுஹாசினி ராஜு மற்றும் சந்தானம் ஆகியோர் நடித்துள்ளனர்.மென்பொருள் துறையில் வேலை செய்யும் இளைஞர், யுவதிகளின் கொண்டாட்டம் நிறைந்த வாழ்க்கை அவர்களுக்கிடையே மலரும் காதல் போன்றவற்றை அடிப்படையாக கொண்டே தயாரிக்கப்பட்டுள்ளது லீலை திரைப்படம்.


இயக்குனர் ஆண்ட்ரூ லூயிஸ் இயக்கத்தில் படமாக்கப்பட்டுள்ள இப்படத்திற்கு இசை வடிவம் கொடுத்துள்ளார் சதீஷ் சக்கரவர்த்தி.ஈரோடு தேவி அபிராமில ரிலீஸ்.

http://www.kollytalk.com/wp-content/gallery/narasimhan-ips-movie-stills/narasimhan-ips-movie-stills-15.jpg 

2 நரசிம்மன் ஐ.பி.எஸ் - சரத்குமார் நடிக்கும் நரசிம்மன் ஐ.பி.எஸ் திரைப்படம், தமிழ் மற்றும் மலையாள மொழிகளில் வெளியாக உள்ளது.கொலிவுட் சூப்பர் நாயகன் சரத் குமார் கம்பீரமாக 'நரசிம்மன் ஐ.பி.எஸ்' என்ற படத்தில் பொலிஸ் உயர் அதிகாரியாக நடித்துள்ளார்.அச்சண்ட ஆண்மகன் என்ற பெயரில் இப்படம் மலையாளத்திலும் ஒரே நேரத்தில் வெளியாக இருப்பதாக திரையுலகம் கூறுகிறது.


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg0j4-Cnpm9-wheuPmfUO3bvpXvPrOK0gGo-FU1V4Uhw6xUYB9fdiV0am4Kc0kYFRUuQx6R9U4iTcYQPg9hv0oyuQE3H2NrFDXRhJ97FdqlD9b016i-G30v2t9_g_dGzwd3xSEgo8uPIzE/s1600/meghana-raj-narasimhan-ips-stills-3.jpg


சரத்குமாருக்கு சீனியராக இப்படத்தில் நெடுமுடி வேணு நடித்துள்ளார். அவருக்கு இரு மகள்கள், அவர்களில் ஒருவரான மேக்னாராஜ்ஜை நாயகன் சரத்குமார் மணக்கிறார்.


மேலும் மாமனாரின் எதிரிகளை சரத்குமார் எப்படி பழி வாங்குகிறார் என்பதை சுவாரஸ்யமாக இயக்குனர் கூறியுள்ளார்.

சி.பி - ஓஹோ மலையாள டப்பிங்க் படம் போல..  படம் ஈரோடு ராயல், ஸ்டாரில் ரிலீஸ்


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEicggz6YqkD5szN416UuyOmD56ueYC5jQ-b46b7Wc1Jhzn4c2jgbq3g2pi770pV52LXzEFtkHiIfQ_3QASgULm_5-1lj2zBxnfJAK9GnF-TEI4W9uewQTRYhXvsAz63SA1MazW9bPzxnupm/s1600/Padam+Parthu+Kadhai+Sol+Movie+Posters+Mycineworld+Com+%25281%2529.jpg

3.  படம் பார்த்து கதை சொல் -  பென்ஜமின் பிரபு படத்தை இயக்கியுள்ளார். டெய்சி என்ற கொ‌ரியன் படத்தை தழுவி இப்படம் எடுக்கப்பட்டுள்ளது. ஏ.பி.எம்.புரொடக்ஷன்ஸ் சார்பில் எஸ்.மணி, எஸ்.ரங்கராஜ் இணைந்து ‘படம் பார்த்து கதை’ சொல் என்ற பெயரில் புதுப்படம் தயாரிக்கின்றனர்.

இதில் நாயகனாக  தருண் சத்திரியா நாயகியாக ஷிகா மற்றும் தர்ஷனி, ஹாரிஸ், ஐசக் ஆகியோர் நடிக்கின்றனர். இப்படத்துக்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி ஆர்.பென்ஜமின் பிரபு இயக்குகிறார்.

படம் பற்றி அவர் சொல்கிறார்.

http://www.thedipaar.com/pictures/resize_20111224061510.jpg

நாயகன் கரடுமுரடான வாழ்வை தேர்ந்தெடுத்து தவறான பாதையில் செல்பவன் கன்னியாகுமரியில் சுற்றுலா தலங்களுக்கு வருபவர்களை போட்டோ எடுப்பவள் நாயகி. நாயகனுக்கு அவள் மேல் காதல் மலர்கிறது. ஆனாலும் அதை சொல்ல தயங்குகிறான். இந்த காதலை வைத்து நாயகனையும் அவனை ஆட்டி வைக்கும் வில்லனையும் பிடிக்க போலீசார் வியூகம் வகுக்கின்றனர். இத்தகு விறுவிறுப்பான கதையில் படம் பயணப்படும். கன்னியாகுமரி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகள் படப்பிடிப்பு நடந்துள்ளது.

இசை: கணேஷ் ராகவேந்திரா, ஒளிப்பதிவு: தீபு எஸ். உன்னி, வசனம்: நாகராஜ், எடிட்டிங்: பாலா.ஈரோட்டில் ரிலீஸ் இல்லை

 http://mp3scorner.com/wp-content/uploads/2009/10/aadhi-narayana-tamil-mp3s.jpg


4. ஆதிநாராயணா'. - தமிழ் சினிமாவில் ஆச்சர்யமான நிகழ்வு ஒன்று சப்தமின்றி நடந்தேறி இருக்கிறது. முன்னணி நடிகர்களின் படங்களில் மட்டுமே நடிப்பேன் என்று பிடிவாதம் செய்யும் நடிகைகளுக்கு மத்தியில் ""சிறந்த கதையமைப்புடன் கூடிய பாத்திரம் இருந்தால் நடிக்க தயார்'' என்று, எந்த பிரச்சினையும் செய்யாமல் நல்ல ஒத்துழைப்புக் கொடுத்து நடித்து, முடித்துக் கொடுத்திருக்கிறார் பிரபல நடிகையான மீரா ஜாஸ்மின். (கேரள நடிகர்களின் மீதுள்ள மரியாதையை மேலும் உயர்த்திட்டீங்க மீரா, வாழ்த்துக்கள்) 


அந்தப் படம் "ஆதிநாராயணா'. கதாநாயகனாக நடித்திருப்பவர் கஜன். இப்படத்தின் திரைக்கதையை எழுதி இயக்கியிருப்பவர் ஜெ. வெற்றிவேந்தன். இவரது முதல் படம் இது. இப்படத்தை "பாக்ஸ் ஆஃபிஸ் புரொடக்ஷன்' சார்பில் எஸ்.பாலாஜி தயாரித்திருக்கிறார்.நிறைய புது முகங்கள் நடித்திருக்கும் இந்தப் படத்தில் மீரா ஜாஸ்மின் நடித்தது பற்றி அதன் இயக்குனரிடம் கேட்டபோது,""மீரா ஜாஸ்மினை தொடர்பு கொண்டு இப்படத்தைப் பற்றி சொன்னபோது அவர் கூறியது, 


 ""கதாநாயகன், இயக்குனர், தயாரிப்பு நிறுவனம் இவற்றையெல்லாம் நான் பார்ப்பதில்லை. படத்தின் கதை எப்படி இருக்கிறது? அதில் என் பாத்திரம் எப்படியிருக்கிறது? என்றுதான் பார்ப்பேன்'' என்றார். மேலும், ""படத்தின் கதையை எனக்கு அரைமணி நேரத்தில் சொல்லுங்கள்'' என்றார்.ஆனால் கதையைச் சொல்ல ஆரம்பித்ததும், கதையில் இன்வால்வ் ஆனவர் ஒன்றரை மணி நேரத்திற்கும் மேலாகக் கேட்டார். 


அது மட்டும் இன்றி எந்த இடைஞ்சலும் இன்றி விரைவாக படப்பிடிப்பிற்கு வந்து முழுப் படத்திலும் நடித்து, முடித்துக் கொடுத்தார்.படத்தின் கதையைப் பற்றி...?சராசரி வாழ்க்கையை தொலைத்துவிட்டதாக எண்ணும் ஒரு இளைஞன், தன் வாழ்க்கையை சந்தோஷமாக மாற்றிக் கொள்ள முற்படும்போது எதிர்பாராமல் ஏற்படும் காதல், அதனால் ஏற்படும் பிரச்சினைகளே இந்தப் படத்தின் கதை. 

http://lh5.ggpht.com/_561gP6TDhvA/S23PZE3DdmI/AAAAAAAAis0/o2guD674G98/actress.meera-jasmine.aadhinarayana-movie-stills-005.jpg


உண்மைச் சம்பவத்தை மையமாகக் கொண்ட கதை இது.படத்தோட ஸ்பெஷல்?படத்தின் டபுள் பாசிட்டிவ் பார்த்த இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா, படத்தை அதே உயிரோட்டத்துடன் தரவேண்டும் என்பதற்காக ஏற்காடு மலையில் தங்கியிருந்து நோட்ஸ் எடுத்து பின்னணி இசையை அமைத்திருக்கிறார்.பாடல்கள்?


 சினேகன் எழுதிய, "டுவிங்கிள் டுவிங்கிள் லிட்டில் ஸ்டாருடா... அட நீயும் நானும் மிங்கிள் ஆனா சூப்பர் ஸ்டாருடா...' என்று சுசித்ரா, கார்த்திக் பாடிய பாடல் ரசிகர்களின் மனதை அள்ளும்.மேலும் பழனிபாரதி, கபிலன் ஆகியோரும் பாடல்கள் எழுதியிருக்கின்றனர். அதேபோல விவேகாவின் வரிகளுக்கு சிம்பு பாடியிருக்கும், "கருப்பாயி கருப்பாயி எங்கே போற...' பாடல் தியேட்டரில் ரசிகர்களை ஆடவைக்கும்.படத்தின் இன்னொரு கதாநாயகனாக கருணாஸ் நடிக்கிறார்.


 மேலும் யோஹிதா, மயில்சாமி, முத்துக்காளை, விஜய்பாபு, ராஜலெட்சுமி, மதன்பாப், ஷோபனா, "காதல்' சுகுமார் என ஒரு பெரிய நட்சத்திர பட்டாளமே நடிக்கிறார்கள்.ஒளிப்பதிவு -ஆர்.செல்வா, படத்தொகுப்பு -உதயசங்கர். மல்லியம்பட்டி மாதவன் தயாரிப்பு மேற்பார்வையில் படம் உருவாகி வருகிறது.ஈரோடு அண்ணாவில் ரிலீஸ்


5.AVENTURES - - http://moviestalk.doyouknow.in/images/201203231226395261919.pnga


Nick Fury is director of S.H.I.E.L.D, an international peace keeping agency. The agency is a who's who of Marvel Super Heroes, with Iron Man, The Incredible Hulk, Thor, Captain America, Hawkeye and Black Widow. When global security is threatened by Loki and his cohorts, Nick Fury and his team will need all their powers to save the world from disaster

I'm happy to report that everything established in previous movies pays dividends in a big way. It's not that anyone needs to see those other Avenger solo films before seeing this gem but it certainly adds depth and texture to this amazing product. Not having to intro big main characters deeply allows the action to flow but also allows for better development. This also allows them to probe deeper into the character's personalities. This heightens the tension, so often missing from comic-book movies, and adds real weight to the story as well as the action sequences which are thrilling and often mesmerizing. The result is a film that's just flat out exceptional.

Of course all the phenomenal heroes got to shine and the story accommodated them all perfectly. What I loved is that Marvel did it again with their main villain. Loki was just so wonderful and complex in this amazing movie. Spurned Loki masterfully dances on the fault lines of villainy and redemption. He always keep people guessing and. Again, that's just shear perfection coming from the god of mischief. He has such a mixture of emotional psychological complexity. You have somebody who's capable of thinking and strategizing at the speed of light, but underneath that is a deep well of pain that at any moment threatens to boil over and Tom Hiddleston plays it like the master he has become. This is Oscar worthy villain performance good.


http://horrornews.net/wp-content/uploads/2012/02/The-Avengers-2012-movie-stills-14.jpg

The performances in this movie are as good as any I've ever seen in an adventure film. The great actors say that acting akin to playing tennis. The rally that they play with a new partner is completely different from one to the other. Each of these GREAT actors have such specific talents that it's fun to see them play off each other at different times in this movie. I think Whedon realized this as both director and writer and shuffled things around on purpose to play to strengths. It's just another wonderful aspect of this spectacular movie event.
ERODE VSP , AANOOR 2 THEATERS RELEASE


6.F E 77 ( HINDI) - ajaydevghaan movie
http://www.beatoon.com/covers/?small&1&06b0fed87477060f6eb687e352f924ad


7. ராஜா போக்கிரி ராஜா -
Shriyas Raja Pokkiri Raja release in april 27 பெரும் பஞ்சாயத்துக்களைத் தாண்டி போக்கிரி ராஜா படம் வருகிற 27ம்தேதி ரிலீஸ் ஆகிறது. நடிகை ஸ்ரேயா மலையாளத்தில் கதாநாயகியாக நடித்த படம் போக்கிரி ராஜா. இதில் மம்முட்டி, ப்ருதிவிராஜ் ஆகியோரும் நடித்துள்ளனர். மம்முட்டி மதுரை தாதா கெட்டப்பில் தமிழ் பேசி நடித்துள்ளார். இப்படத்தை தமிழில் ராஜா போக்கிரிராஜா என்ற பெயரில் டப்பிங் செய்து வெளியிட தயாரிப்பாளர் மலேசியா பாண்டியன் ஏற்பாடு செய்தார். இதற்கு ஸ்ரேயா எதிர்ப்பு தெரிவித்தார். மலையாள படத்துக்குதான் சம்பளம் வாங்கி நடித்தேன். அதை தமிழில் டப்பிங் செய்யக்கூடாது என்று கூறினார். தயாரிப்பாளர் சங்கத்திலும் புகார் அளித்தார். இதனால் ஸ்ரேயா மீது நஷ்டஈடு வழக்கு தொடர மலேசியா பாண்டியன் முடிவு செய்தார்.

இதற்கிடையில் ஸ்ரேயாவுக்கும், மலேசியா பாண்டியனுக்கும் இடையே சமரச பேச்சுவார்த்தை நடந்தது. இதில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து, படத்தை தமிழில் ரிலீஸ் செய்ய ஸ்ரேயா சம்மதித்தார். இதையடுத்து வருகிற 27-ந்தேதி தமிழ்நாடு முழுவதும் ராஜா போக்கிரி ராஜா படம் ரிலீஸ் ஆகிறது.

 சி. பி . - 4 நாள் ஓடி டப்பா ஆகர படத்துக்கு ஏன் இவ்ளவ் பில்டப்?


http://bookmarks.cinemamasti.com/wp-content/uploads/2012/04/Dammu9.jpg
8. சிங்கமகன் - தெலுங்கு ஹீரோக்களுக்கு தமிழில் கால் பதிக்க வேண்டும் என்று ஆசை. இங்குள்ள அ‌ஜித், விஜய், சூர்யா படங்கள் ஆந்திராவில் வசூலை அள்ளும் போது தமிழில் நம் படம் ஓட வேண்டும் என்று அவர்கள் நினைப்பது சகஜம்தான்.

ராம் சரண் தேஜாவின் ரட்சா படம் ரகளை என்ற பெய‌ரில் இப்போதுதான் வெளியானது. ரட்சா இதுவரையான ஆந்திரா ‌ரிக்கார்டுகளை அடித்து நொறுக்கியிருக்கிறது. இந்நிலையில் ரட்சாவின் வசூலை முறியடிக்கும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கும் ஜுனியர் என்டிஆ‌ரின் படம்தான் தம்மு.

http://gallery.tamilkey.com/wp-content/themes/transcript_new/timthumb.php?src=http://gallery.tamilkey.com/wp-content/uploads/2012/04/DAMMU-Telugu-Movie-2012-SPECIAL-STILLS-1.jpg&q=90&w=629&zc=1


சி.பி - எங்க ஊர்ல கரண்ட் கம்பத்தை பார்த்தா நாய்ங்க காலை தூக்கும்.. இவங்க ஏன் ஒரு காலை மட்டும் தூக்கறாங்கனு தெரியலை ..


த்‌ரிஷா, கார்த்திகா நடித்திருக்கும் இந்தப் படத்தின் பாடல்கள் ஏற்கனவே ஆந்திராவில் சூப்பர்ஹிட். சண்டைக்காட்சிகளும் பிரமாதம் என்கிறார்கள். 3000 தியேட்டர்களுக்கு குறையாமல் வெளியாகவிருக்கும் இப்படம் சிங்கமகன் என்ற பெய‌ரில் தமிழிலும் வெளியாகிறது. மரகதமணி இசையமைக்க ஆர்தர் ஏ.வில்சன் படத்துக்கு இசையமைத்துள்ளார்.


ஜுனியர் என்டிஆருக்கு தமிழகத்தில் மார்க்கெட் உள்ளதா என்பதை வரும் 27 ஆம் தேதி படம் வெளியாகும் போது தெ‌ரிந்து கொள்ளலாம். அநேகமா டப்பா மசாலாவா இருக்கும்னு நம்பலாம்.. 

 

4 comments:

ராஜி said...

நாளைக்கு என்ன படத்துக்கு போலாம்ன்னு முடிவு பண்ணிட்டீங்களா?

MARI The Great said...

ரைட்டு .., நல்லாத்தானே போய்கிட்டு இருந்துச்சு திடீர்ன்னு ஏன் இந்த கொலைவெறி இங்கிலீஷ்ல ..?

Unknown said...

சரத்குமார் படம் இந்த வெள்ளியாவது ரிலீஸ் ஆகுமா......?

மனித புத்திரன் said...

என்னா பாஸு நடுவில் துளு மொழியில் ஏதோ எழுதி இருக்கீங்க?
அப்பால எங்க தல படம் (அச்சண்ட ஆண்மகன்) இந்த வாரமாவது ரிலீஸ் அக்குமா?
சிபியாரின் செம நச் விமரனதுக்காக வெயிட்டிங்!எம்புட்டு மனசுல சோகம் இருந்தாலும் சிரிக்க வைக்கும் அண்ணன் சிபி வாழ்க!