Thursday, April 19, 2012

வெள்ளிக்கிழமை ராமசாமி வெட்டாஃபீஸ் வெங்கிடுசாமி (20.4 .2012) 6 படங்கள் முன்னோட்ட பார்வை

http://www.kollytalk.com/wp-content/gallery/narasimhan-ips-movie-stills/narasimhan-ips-movie-stills-15.jpg 

1. நரசிம்மன் ஐ.பி.எஸ் - சரத்குமார் நடிக்கும் நரசிம்மன் ஐ.பி.எஸ் திரைப்படம், தமிழ் மற்றும் மலையாள மொழிகளில் வெளியாக உள்ளது.கொலிவுட் சூப்பர் நாயகன் சரத் குமார் கம்பீரமாக 'நரசிம்மன் ஐ.பி.எஸ்' என்ற படத்தில் பொலிஸ் உயர் அதிகாரியாக நடித்துள்ளார்.அச்சண்ட ஆண்மகன் என்ற பெயரில் இப்படம் மலையாளத்திலும் ஒரே நேரத்தில் வெளியாக இருப்பதாக திரையுலகம் கூறுகிறது.


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg0j4-Cnpm9-wheuPmfUO3bvpXvPrOK0gGo-FU1V4Uhw6xUYB9fdiV0am4Kc0kYFRUuQx6R9U4iTcYQPg9hv0oyuQE3H2NrFDXRhJ97FdqlD9b016i-G30v2t9_g_dGzwd3xSEgo8uPIzE/s1600/meghana-raj-narasimhan-ips-stills-3.jpg


சரத்குமாருக்கு சீனியராக இப்படத்தில் நெடுமுடி வேணு நடித்துள்ளார். அவருக்கு இரு மகள்கள், அவர்களில் ஒருவரான மேக்னாராஜ்ஜை நாயகன் சரத்குமார் மணக்கிறார்.


மேலும் மாமனாரின் எதிரிகளை சரத்குமார் எப்படி பழி வாங்குகிறார் என்பதை சுவாரஸ்யமாக இயக்குனர் கூறியுள்ளார்.

சி.பி - ஓஹோ மலையாள டப்பிங்க் படம் போல..  படம் ஈரோடு ராயல், ஸ்டாரில் ரிலீஸ்

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgy0Wkm5gV16WomFsoHq7jsoWplBsEoDrksjv4a-VsNsVRoHXXfFug9GUOQ0Whm1uMium8cY680XVzKDYLyQkiX0TqyWKRs50hBhUfOaFGn5nyxOZcoC4uunBOp3nVq6JBzlPd8_MeO_wY/s320/Ooh+La+La+Laa+tamil+mp3.jpg


2.  ஊலலலா  -சென்னை கமலா திரையரங்கில் 'ஊலலலா' (ஊர்வசி, லதா, லலிதா, லாவண்யா) திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா மிகவும் பிரம்மாண்டமான முறையில் நடைபெற்றது. தமிழ் சினிமாவின் முன்னணி பிரபலங்கள் மற்றும் நட்ச்சத்திரங்கள் இதில் கலந்துகொண்டனர். பல பிரம்மாண்டமான திரைப்படங்களை கொடுத்த தயாரிப்பாளர் ஏ.ம்.ரத்னம் அவர்களின் மூத்த மகன் ஜோதி கிஷ்ணா இப்படத்தை இயக்கி இதில் கதாநாயகனாக அறிமுகம் ஆகிறார்.


தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தலைவர் ராமநாராயணன், தயாரிப்பாளர் முரளி, கே.எஸ்.ரவிக்குமார், தரணி, கே.ஆர்., அம்மா கிரியேஷன்ஸ் டி.சிவா, லட்சுமி மூவி மேக்கர்ஸ் முரளிதரன், கஞ்சா கருப்பு, நடிகை கீர்த்தி சாவ்லா, ரமேஷ்கண்ணா, சிட்டி பாபு, பட்டிமன்றம் ராஜா மற்றும் பலர் இவ்விழாவில் கலந்து கொண்டனர். திரைப் பிரபலங்களின் முன்னிலையில் ’ஊலலலா’ திரைப்படத்தின் இசைத் தட்டினை தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தலைவர் ராமநாராயணன் வெளியிட்டார்.


கே.எஸ்ரவிக்குமார் பேசுகையில் ஜோதி கிருஷ்ணாவைப் பற்றிய சில ஆச்சர்யமான தகவல்களை பகிர்ந்து கொண்டார். ஜோதி கிருஷ்ணாவின் இயக்கதில் அமைந்த முதல் படம் ’எனக்கு 20 உனக்கு 18’ என்பது அனைவரும்
அறிந்த விஷயம். ஆனால் அவர் என் ’நட்புக்காக’ படத்தின் கதாசிரியர். அப்போது அவர் பத்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தார் என்றார். மேலும் ஜோதி கிருஷ்ணா அறிமுகம் செய்து வைத்த நாயகிகள் ஸ்ரேயா, தமன்னா, இலியானா என எல்லாரும் இன்று முன்னணி நடிகைகளாக இருக்கிறார்கள். அதே போல் இந்த படத்தில் அறிமுகமாகும் நான்கு நாயகிகளும் முன்னணிக்கு வருவார்கள் என்று ஜோதி கிருஷ்ணாவின் ஹீரோயின் ராசியையும் சொன்னார்.


http://www.top10cinema.com/dataimages/1406/03-11-09-1406-2-4.jpg


தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தலைவர் ராமநாராயணன் ’ஊலலலா’ படத்தின் குழுவினருக்குதன்னுடைய வாழ்த்துகளை தெரிவித்ததோடு, காதலிக்க நேரமில்லை, உள்ளத்தை அள்ளித்தா படங்களைப் போலவே ’ஊலலலா’ படமும் சிறப்பான படமாக அமையும் என்று நம்பிக்கை தெரிவித்தார். 


ஏ.எம்.ரத்னம் மிகவும் தைரியமானவர் என்றும், துணிச்சலோடு அவர் தயாரித்த இந்தியன், பாய்ஸ் படங்களை குறிப்பிட்டு பேசினார் இயக்குனர் கே.ஆர்.இயக்குனர் தரணி பேசுகையில் ’ஊலலலா’ படத்தின் இசை வெளியீட்டு விழா அழைப்பிதழே மிகவும் வித்யாசமாக உள்ளது. இதை வைத்தே இப்படத்தின் வெற்றியை கணித்துவிடமுடியும், என்னுடைய மெகா ஹிட் திரைப்படங்களான தூள், கில்லி போன்ற படங்கள் ஏ.எம்.ரத்னம் தயரித்தது தான் என்றார். 


இயக்குனர் பேரரசு பேசுகையில், ஜோதி கிருஷ்ணா இயக்குனர் கே.ஆர்-ரை பின்னுகுத் தள்ளிவிட்டார். கே.ஆர். ‘வனஜா கிரிஜா’ என இரண்டு பெண்களின் பெயரைத்தான் படத்துக்கு டைட்டிலாக வைத்தார். ஆனால் ஜோதி கிருஷ்ணா நான்கு பெண்களின் பெயரை டைட்டிலாக வைத்துள்ளார் என அரங்கத்தை கொஞ்சம் கலகலப்பாக்கினார். பட்டிமன்றம் ராஜா பேசுகையில் நான் இந்தப் படத்தில் நாயகி ப்ரீத்தி பண்டாரியின் அப்பாவா நடித்துள்ளேன். அவருக்கு தமிழ் தெரியாத காரணத்தால் வசனங்களை இந்தியில் தான் பேசுவார். அவர் பேசும் இந்தி எனக்கு புரியாது, இருந்தாலும் காட்சிக்கு எற்றமாதிரி நான் ரியாக்‌ஷன் கொடுக்க வேண்டிய நிலை.


மேலும் ஒவ்வொரு படத்தின் வெற்றிக்கும் அந்த திரைப்படத்தின் உதவி இயக்குனர்கள் தான் காரணம். எனவே உங்கள் வெற்றியில் தயவு செய்து அவர்களை நினைவு கூறுங்கள் என்றார். அரங்கத்தில் இருந்த அனைவரும் அதை கைகளை தட்டி ஆதரித்தனர்.


சிவகாசி படத்தில் நடிக்க வைத்து தன்னை ஒரு முன்னணி காமெடி நடிகனாக்கிய தயரிப்பாளர் ஏ.எம்.ரத்னத்திற்கு நன்றிகளை தெரிவித்துக் கொண்டார் கஞ்சா கருப்பு. இறுதியாக பேசிய ஏ.எம்.ரத்னம் தன் மகன் ஜோதி கிருஷ்ணா நடிக்க வந்த நிகழ்ச்சியை சொன்னார். முன்பெல்லாம் வைர வியாபாரிகளும், தொழிலதிபர்களும் மட்டுமே இந்தியாவில் திரைப்பட தயாரிப்பாளர்கள். 

ஆனால் இப்போது ரிலையன்ஸ், ஸ்ரீஆஷ்ட வினாயக் போன்ற கார்பரேட் கம்பனிகளும் சினிமா தயாரிப்பில் இறங்கியிருக்கிறார்கள்.ஜோதி கிருஷ்ணாவை நான் லண்டனில் படிக்க வைத்தேன், ஹாலிவுட்டில் படம் எடுக்க சொன்னே. ஆனால், அவன் தமிழ் சினிமா மேல் உள்ள காதலால் தமிழ் படங்கள் எடுகிறான் என்றார். விழா முடிவில் இயக்குனரும் படத்தின் நாயகருமான ஜோதி கிருஷ்ணா வந்திருந்த அனைவருக்கும் நன்றிகளை தெரிவித்துக் கொண்டார். குறிப்பாக தமிழில் வசனம் பேசி நடித்த நாயகி ப்ரீத்தி பண்டாரிக்கு நன்றி தெரிவித்தார்.  இந்தப்படம் ஈரோடு ஸ்ரீஇ கிருஷ்ணா, அண்ணா வில் ரிலீஸ்


3.  அடுத்தது -
Aduthathu-Movie-Preview
சூத்ரதார் நிறுவனம் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘அடுத்தது’. ‘ஜென்ம நட்சத்திரம்’, ‘அசோகவனம்’ ஆகிய திகில் படங்களை இயக்கிய தக்காளி சீனீவாசனின் அடுத்த திகில் படம்தான் இந்த ‘அடுத்தது’. 


சாகச நிகழ்ச்சி ஒன்றிற்காக கோடிக்கணக்கில் பரிசு தொகையை அறிவிக்கிறது ஒரு தொலைகாட்சி கம்பெனி. இந்த பரிசுப் பணத்துக்காக பத்து பேர் கொண்ட ஒரு குழு, தங்களது உயிரைப் பணயம் வைத்து, ஆபத்து நிறைந்த தீவுக்காட்டுக்குள் பயணம் செய்கிறது.


உயிரை பணயம் வைத்து ஆவிகள் நிறைந்த அந்த தீவுக்கு செல்ல பலர் போட்டி போடுகிறார்கள். அதில் தேர்வு செய்யப்பட்ட சிலர் அந்த தீவுக்கு செல்கிறார்கள். அப்படி சென்றவர்களுக்கு ஏற்படும் பிரச்னைகள்தான் கதை. 

அந்த அடர்ந்த தீவுக்காட்டுக்குள் அவர்கள் சந்திக்கும் கஷ்டங்களையும் உயிரைக் கவ்வும் அனுபவங்களையும் இதில் மிரட்டலாக சொல்லியிருக்கிறார்கள்.


இப்படத்தில் ஸ்ரீமன், நாசர், இளவரசு, வையாபுரி, மீனாள், தர்ஷினி, ஆஷா, அருணா மற்றும் பலர் நடித்துள்ளார்கள். திகில் படம் என்றாலே இசையும், ஒளிப்பதிவும்தான் அப்படத்திற்கு மிகப் பெரிய பலமாக அமையும். அப்படிப்பட்ட துறைகளில் இசையமைப்பாளர் பீட்டர் பாலாஜியும், ஒளிப்பதிவாளர் எழிலும் பணிபுரிந்திருக்கிறார்கள்.ஈரோடு லட்சுமியில் ரிலீஸ்

http://www.kodambakkamtoday.com/wp-content/uploads/2011/09/mai-movie-still-swetha.jpg

4.  மை - பத்மாலயா சினி விஷன் தயா‌ரித்திருக்கும் படம். விஷ்ணுப்‌ரியன், ஸ்வேதா பாசு, ஜெயப்பிரகாஷ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
கோபலான் இயக்கியிருக்கும் இந்தப் படத்துக்கு கண்ணன் இசையமைத்துள்ளார்.

 ஈரோடு ஆனூர் -ல் ரிலீஸ்



5. மாட்டுத்தாவணி - பழைய பாணியில் கதைகள் சொன்னால் எடுபடாது, யதார்த்தமான படங்கள் தான் வெற்றி பெறும் என்றார் இயக்குனர் பவித்ரன்.

இது பற்றி மாட்டுத்தாவணி பட இயக்குனர் பவித்ரன் கூறியது: வசந்தகால பறவைகள், சூரியன், இந்து, ஐ லவ் இந்தியா படங்களை இயக்கிய போது இருந்த டிரெண்ட் மாறிவிட்டது.

இப்போது யதார்த்தமான படங்கள்தான் எடுபடுகிறது. காதலில் சொதப்புவது எப்படி?, ஒரு கல் ஒரு கண்ணாடி போன்ற படங்களின் திரைக்கதைகள் மாறுபட்டு அமைக்கப்பட்டிருந்ததால் அது வரவேற்பு பெற்றுள்ளது.

நான் இயக்கியுள்ள மாட்டுத்தாவணி இப்போதைய டிரெண்டில்தான் உருவாகி இருக்கிறது. இப்படத்தின் சில காட்சிகளில் மாற்றம் செய்யப்பட்டு சமீபத்தில் ரீ ஷூட் செய்யப்பட்டது.

களவாணி விமல், சதீஷ், ராம், சூரி ஆகியோருடன் ஹீரோயின் ஜூலியட் நடித்திருக்கிறார். பொறுப்பில்லாமல் சுற்றும் இளைஞர்களின் வாழ்க்கையை மையமாக வைத்து சொல்லப்பட்டிருக்கிறது.

மதுரை பின்னணியிலான இக்கதை முழுக்க மதுரையில் உள்ள மாட்டுத்தாவணி பஸ் நிலையம் சுற்று வட்டாரப்பகுதிகளில் படமாக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.ஈரோடு தேவி அபிராமியில் ரிலீஸ்
http://www.disneydreaming.com/wp-content/uploads/2012/03/International-Battleship-Movie-Poster.jpg

6. BATTLESHIP - இது ஒரு சயின்ஸ் ஃபிக்சன் ஃபிலிம்.. There are 3 hugely anticipated block-busters this year and Battleship was the first one to be released. I had expectations of watching this at that cinema a few times and getting it on blue ray - this is my type of movie!; or at least that was the expectation. With such great promotional footage and Liam Neeson heading the cast, it had to be great. In reality, Neeson has almost a bit part (in fact you see most of it in the promotional adverts), clearly there to increase sales of the movie; with the bulk of the 'acting' coming from Taylor Kitsch.

A ludicrous start with Kitsch playing a 27 year loser who, on the recommendation of his brother (Alexander Scarsgard) joins the Navy, suddenly to become at Lt Cdr - The script is clearly written by someone with no military knowledge or experience and that the actions, demeanour and interaction with all that are supposed to be military personnel, is a non sense. It makes Top Gun look believable! However, it gets worse;with aliens that have made there way to earth with great looking craft,that impressively rise from the ocean (great CGG) - you see it on the commercials for the movie, the only weapon they possess are melee type Armour - pretty ridiculous


really and by this point the movie has lost any form of credibility. The outcome is obvious from the first few minutes and I certainly wouldn't go back for a repeat viewing. It's still probably worth a watch if you can't resist, but don't buy any pop corn; there's enough corn in this movie!

 ஈரோடு வி எஸ் பி யில் ரிலீஸ்

3 comments:

ராஜி said...

அரிய, அவசியமான தகவல்களை தொகுத்து தந்தமைக்கு மிக்க நன்றி, தொடரட்டும் உங்கள் சேவை

மனித புத்திரன் said...

அச்சண்ட ஆண்மகனா?இது உண்மை பேரா இல்லை அய்யா வெச்ச பேரா?
அப்புறம் நாளைக்கு நம்ம சி பி அண்ணன் முழு நாள் லீவுன்னு கேள்விப்பட்டேன்!ஆமா ஆறு படம் பாக்க வேனாவா?

Anonymous said...

முதல்ல உள்ளவர் பவர் ஸ்டாருன்னு நினைச்சேன்....