Saturday, March 10, 2012

உதிரிப்பூக்கள் இயக்குநர் மகேந்திரன் பேட்டி

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhLf1hydgQ1SZN1v7L6gsubtouh8r8mO9Tbcz3Rm6e0Ob6yxvB1WJwlGfCfbD5IC3hVaKwzTn_6H7y8en75QReA_eNlT_k_YulRk-wxxHwEbn4QaLNSrBmz3bMPAYkUYytuwUISk2HS7rk8/s400/Uthiri-Pookal.jpg 

''நான் இன்னும் நல்ல சினிமா எடுக்காத குற்ற உணர்வில் இருக்கிறேன். இது தன்னடக்கம் அல்ல. நிஜமான என் வாக்குமூலம்!'' - சிம்பிளாகச் சிரித்து ஆச்சர்யப்படுத்துகிறார் இயக்குநர் மகேந்திரன்

சி.பி - உதிரிப்பூக்கள் மாதிரி ஒரு படம் இனி நீங்களே நினைச்சாலும் எடுக்க முடியாதே சார்.. ஆனந்த விகடன் விமர்சனங்களில் அதுதானே 2வது இடத்தில் இருக்கு ( முதல் இடம் 16 வயதினிலே)


 ''நீங்க சினிமாவுக்கு வந்தது விபத்தா... விருப்பப்பட்டா?''


''விருப்பம் இல்லாம சினிமாவுக்கு வந்தவன் நான். விரும்பாதது கிடைச்சாலும் நேசிக்க வேண்டிய கட்டாயம். பேருக்கும் புகழுக்கும் ஆசைப்படலை. சினிமாவை ஒரு தொழிலா மட்டும்தான் பார்த்தேன். அதனாலதான் 30 வருஷம் கழிச்சு 'முள்ளும் மலரும்விமர்சனம் படிக்கும்போது மனசுக்குள்ளே சின்ன ஆசுவாசம் கிடைக்குது. நான் சினிமாவைக் கட்டாயக் கல்யாணம் பண்ணிக்கிட் டாலும், எந்தக்காலத்திலும் நான் அதை வெறுக்கலை... கொடுமை பண்ணலை. பல முறை சினிமாவைவிட்டுப் போக நினைச்ச நான், 36 படங்களுக்குக் கதை - வசனம் எழுதி, 12 படங்களை இயக்கியிருக்கேன். எனக்கும் சினிமாவுக்குமான உறவு நாகரிகமாவே இருக்கு!''  

 சி.பி - அடேங்கப்பா, 36 படங்களில் பணி ஆற்றி இருக்கீங்களா? ஹூம்.. அந்த லிஸ்ட்டை முதல்ல எடுத்து எதெல்லாம் பார்க்காத படம்னு பார்த்து க்ளியர் பண்னனும்.. வீ ஜஸ்ட் மிஸ் இட்

'' 'முள்ளும் மலரும்படத்துக்கு முன்புவரை ரஜினிக்கு வில்லன் முத்திரைதான் அழுத்தமா இருந்துச்சு. அவரை எப்படி ஹீரோவா தேர்ந்தெடுத்தீங்க?''

''நடிகர், ஸ்க்ரிப்ட், இயக்கம்னு எதையும், நான் யார்க்கிட்டேயும் கத்துக்கலை. எது எப்படி இருக்கணும்னு எனக்கு நானே தீர்மானிச்சேன். போகிப் பண்டிகையில வேண்டாத விஷயங்களைக் கொளுத்துற மாதிரி, சினிமாவில் யதார்த்தத்துக்குப் புறம்பான, பிடிக்காத விஷயங்களைத் தூக்கிப்போட்டேன்.

சி.பி - முக்கியமா டூயட், ஃபைட் அவாய்ட் பண்ணீங்க..  

http://www.kollytalk.com/wp-content/uploads/2012/03/Director-Mahendran.jpg



 'ஆடுபுலி ஆட்டம்படத்துக்கு வசனம் எழுதினப்ப, ரஜினி எனக்கு நல்ல நண்பர் ஆனார். விடிய விடிய சினிமாபத்திப் பேசுவோம். சினிமா மேல அவருக்கு  வேட்கையும் தீராக் காதலும் இருந்துச்சு. 'முள்ளும் மலரும்எழுதினப்ப ரஜினிதான் சரியா இருப்பார்னு தோணுச்சு. தயாரிப்பாளர் வேணுகிட்ட சொன்னப்ப, 'ரஜினி கறுப்பா இருக்காரு. வில்லன் கேரக்டர்ல நடிக்கிறார். ஹீரோவா போட்டா எடுபடுமா?’ன்னு தயங்கினார். ஆனா, 'ரஜினிதான் ஹீரோன்னு நான் தீர்மானமா இருந்தேன்.

 சி.பி - கறுப்பு நிறமா இருக்கறவங்க சினிமால ஹீரோ ஆக முடியாதுங்கற கோடம்பாக்கம் செண்ட்டிமெண்ட்டை உடைச்சு வெற்றிகரமா சூப்பர் ஸ்டார் ஆன முத ஹீரோ ரஜினிதான்னு நினைக்கறேன்.. விஜய்காந்த் எல்லாம் அதுக்குப்பிறகு வந்தவங்க தானே?

 படம் வெளியான மூணு வாரம் மக்களிடம் இருந்து எந்த ரியாக்ஷனும் இல்லை. பிறந்தவுடனே குழந்தை சத்தம் போடாம இருந்தா, எப்படிப் பதைபதைப்பா இருக்குமோ, அப்படித்தான் நானும் ரஜினியும் இருந்தோம். நாலாவது வாரத்துல படம்     பிக்-அப்   ஆச்சு. இப்போ யோசிச்சாலும் காளி கேரக்டருக்கு ரஜினியைத் தவிர வேற யாரையும் யோசிக்க முடியலை!''  


 சி.பி - காளி கேரக்டரை காலி பண்ணிட்டாரே..?

'' 'உங்களுக்குப் பிடிச்ச டைரக்டர் யார்?’னு பாலச்சந்தர் கேட்டப்பவே, ரஜினி உங்க பேரைத்தான் சொன்னார். அதை எப்படி எடுத்துக்கிட்டீங்க?''

''நிறையப் பேர் 'ரஜினி உங்களைப் பத்திப் பேசியிருக்கார். அவருக்கு போன் பண்ணி நன்றி சொல்லுங்கன்னு சொன்னாங்க. 'நீங்க ரஜினியை, ரஜினியாப் பார்க்கிறீங்க. நான் என் நண்பனா பார்க்கிறேன்னு சொல்லிட்டேன். என் மனைவி தொடர்ந்து சொன்னதால ரஜினிக்கு ஒரு கடிதம் மட்டும் எழுதினேன். 'உலக சினிமாக்களைப்பார்த்த பிறகு நான் தமிழ் சினிமாவில் நுனிப்புல் மேய்ந்தவனாக உணர்கிறேன். என்னைப் போய் சொல்லியிருக்கீங்களே!’னு எழுதி இருந்தேன்


 கடிதம் போனதும் ரஜினி உடனே போன் பண்ணினார். 'சார் உங்க லெட்டர் படிச்சேன். எனக்கு போன் பண்ண பலரும் மகேந்திரனைச் சொன்னது தான் நல்ல பதில்னு சொன்னாங்கன்னு ஆரம்பிச்சு பழையவிஷ யங்களைப் பத்திப் பேசிட்டே இருந்தார். அவர் எப்பவும் என் ரஜினிதான்!''


  
''தற்போதைய தமிழ் சினிமாவின் சில அபத்தங்களை எப்படி மாற்றலாம்?''

''படம் பார்த்துட்டு வந்த பிறகும் மனசுக்குள்ள ரம்மியமான காட்சிகள் நினைவுக்கு வரணும். 'தி ஆர்டிஸ்ட்ஹாலிவுட் படம் வசனமே இல்லாமல் அழகா கறுப்பு - வெள்ளையில் எடுத்திருக்காங்க. நாமதான் 'பிளாக் அண்ட் வொயிட்டை ஃப்ளாஷ் பேக் உத்தியா  மட்டுமே பயன்படுத்துறோம். 1958-லேயே எம்.ஜி.ஆர்கிட்ட 'ஏன் படத்துல டூயட் வருதுன்னு கேட்டேன். அது இப்போ 2012 வரை தொடருது. குத்துப் பாட்டு, டூயட் இல்லாத மாற்று சினிமா வேணும். அதுதான் நல்ல சினிமாவும்கூட!''

 சி.பி - பாட்டு இல்லாம படங்கள் வர ஆரம்பிச்சா அது ஒரு நல்ல தொடக்கமா இருக்கும்.. நம்ம ஆளுங்க ஏன் தயங்கறாங்கன்னா ஆடியோ மார்க்கெட் மற்றும் குரூப் டேன்சர்கள் நல வாழ்வு..



''சமீபத்திய சந்தோஷம்..?''

'' 'ரசிகன்நிகழ்ச்சி மூலமா மீண்டும் என் ரசிகர்களுடன் ஏற்பட்ட தொடர்புதான்!  நிகழ்ச்சியின் இயக்குநர் மணிவண்ணன்  பல கேள்விகள் மூலம் என் தவத்தைக் கலைச்சிருக்கார். வியட்நாம், சிங்கப்பூர், மலேசியானு பல நாடுகளில் இருந்து 'அடுத்த படம் எப்போ பண்ணுவீங்க?’னு போன்ல கேட்கிறாங்க. நிகழ்ச்சியில் திரையிட்ட ஒவ்வொரு காட்சியையும் ரசிகர்கள் புதுசா ரிலீசான படம் மாதிரி  நினைச்சுப் பாராட்டுறது நெகிழ்ச்சியா இருக்கு.  அதேசமயம் இவ்ளோ மரியாதைவெச்சிருக்காங்களேன்னு கொஞ்சம் பயமாவும் இருக்கு.

 கலைஞர் டி வில நாளைய இயக்குநர் நிகழ்ச்சிக்குப்பிறகு நல்ல பேர் வாங்கிக்கொடுத்தது இந்த ரசிகன் நிகழ்ச்சி தான்.. அந்த பேட்டில ஒரு இடத்துல கூட நீங்க கேமராவை பார்க்காம எதார்த்தமா பேசுனது செம.. உங்க படம் போலவே நீங்களூம் ரொம்ப எதார்த்தம்.. 

இதோ என் கூட்டைவிட்டு வெளியே வர தயாராகிட்டேன். 'மோகமுள்கதைக்கு என் பாணியில்   திரைக்கதை வடிவம் கொடுத்திருக்கேன். சீக்கிரமே மகேந்திரன் படைப்புகளை வெள்ளித்திரையில் பார்க்கலாம்!'' - அழகாகச் சிரிக்கிறார் மகேந்திரன்.

சி.பி - மோக முள் பெஸ்ட் சாய்ஸ் அல்ல.. ஏன்னா அது ரொம்ப பழைய கதை.. ஆல்ரெடி நாவலாவும் , படமாவும் மக்கள் பார்த்துட்டாங்க.. இங்கே கதைக்கா பஞ்சம்? புதுக்கதை கையைல எடுங்க. களத்துல குதிங்க.. ஆல் த பெஸ்ட் சார்.. 


13 comments:

கோவை நேரம் said...

விமர்சனம் எங்க...

கோவை நேரம் said...

ஐந்து படம் சொன்னீங்க....

rajamelaiyur said...

அருமையான இயக்குனர் , அவர் படம் எடுக்காமல் இருப்பது நமக்குதான் இழப்பு

rajamelaiyur said...

உதிரி பூக்கள் படம் இப்போ பார்த்தாலும் அருமையாக இருக்கும்

rajamelaiyur said...

இன்று

கதம்பம்

உலக சினிமா ரசிகன் said...

நிச்சயம் மோகமுள்...
மகேந்திரன் பாணியில் வேறுவிதமாக பரிமளிக்கும்.
உதாரணத்திற்க்கு ஆலிவர் ட்விஸ்ட் கதையை டேவீட்லீன்,ரோமன் பொலான்ஸ்கி,கரோல்ரீட் போன்ற பெரிய இயக்குனர்கள் படமாக்கி உள்ளார்கள்.எல்லாமே சூப்பராக இருக்கும்.

பால கணேஷ் said...

மகேந்திரனோட ‘நெஞ்சத்தைக் கிள்ளாதே’ படம் பாத்திருக்கீங்களா செந்தில்? பிற்காலத்துல வந்த மெளனராகம் படத்தோட சாயல் அந்தக் கதையில இருக்கும். எனக்கு மகேந்திரனின் படங்களில் ‘முள்ளும் மலரும்’ மிகப் பிடித்த படம்.

காரிகன் said...

@கணேஷ்உங்கள் கருத்து தவறு.மகேந்திரனின் நெஞ்சத்தை கிள்ளாதே கதையைத்தான் மணிரத்னம் பின்னாளில் மவுன ராகம் என்று சிற்சில மாற்றங்கள் செய்து படம் பண்ணினார். நன்றாக கவனித்தால் மகேந்திரனின் ஒவ்வொரு படங்களும் ஒவ்வொரு கதை களத்தில் இருக்கும்.ஒரே மாதிரி இரண்டு படங்களை அவர் செய்யவேயில்லை.உதிரிப்பூக்கள் மற்றும் நெஞ்சத்தை கிள்ளாதே இரண்டும் poles apart. இதுவே அவரின் சிறப்பு. மணி ரத்னம் கூட தன்னால் உதிரி பூக்கள் மாதிரி ஒரு படம் செய்ய முடிந்தால் அதுவே தன் வெற்றி என்று குறிப்பிட்டுள்ளார்.

R. Jagannathan said...

மோகமுள் எடுக்கும் ஐடியாவைப் பற்றிய உங்கள் கருத்து தான் எனக்கும் உடனே தோன்றியது. மகேந்திரன் இதை படிக்கவேண்டும் என்று விரும்புகிறேன்.

அதைப் போல் அவர் 36 படங்கள் லிஸ்ட் கிடைத்தால் வெளியிடவும். எனக்கென்னவோ, அதில் 4, 5 படங்களைத் தவிர மற்றவை தேறவில்லை என்றே தோன்றுகிறது. அவரே எழுதியிருப்பதுபோல் ‘முள்ளும் மலரும்’ படமே 4-ஆவதுவாரம் தான் பிக் அப் ஆனது. இன்று எந்தப் படமும் முதல் காட்சியிலேயே பிக் அப் ஆகவில்லையென்றால் அடுத்த நாளே தூக்கிவிடுகிறார்கள். இப்போது அவர் படத்திற்கு என்னைப் போன்ற வயதானவர்கள் கூட வருவார்களா என்பது சந்தேகம். ரசிகர்களுடன், ரசனைகளும் மாறிவிட்டன / மாறிக்கொண்டே இருக்கின்றன.

-ஜெகன்னாதன்.

ராஜ நடராஜன் said...

சி.பி!படிச்சுகிட்டே வந்தேன்.திரைப்படங்களுக்கு பாடல்கள் ஏன் என்ற மகேந்திரனின் எம்.ஜி.ஆர் கேள்வியை விட நீங்க சொன்ன ஆடியோ மற்றும் நடனக் குழுவினரின் நலவாழ்வு என்பது நச்சென்று இருந்ததோடு என்னை ஈர்த்தது.

ஒரு முறை இயக்குநர் மீரா நாயர் இந்தியப் படங்களில் பாடல்கள் இருப்பதே இந்தியப் படங்களின் தனித்துவம்ங்கிற மாதிரி சொல்லியிருந்தார்.பாடல்களோடு படங்கள் வருவதோடு மாற்று சினிமாவாக பாடல்கள் இல்லாத திரைப்படங்களும் பயணிக்க வேண்டும்.இதற்கான முயற்சிகள் 70 பதின் இறுதி 80ன் துவக்க்ததில் முயற்சி செய்து தமிழ் திறையுலகம் தோல்வி கண்டது.படம் குடிசை என எங்கோ படித்ததாக நினைவு.

பதிவை பாதிதான் படிச்சேன்.பின்னூட்டத்துக்கு ஏதாவது தேறுனா மறுபடியும் சொல்றேன்.

ராஜ நடராஜன் said...

பதிவின் இறுதியைப் படிச்சதுல இன்னுமொன்னு தோணிச்சு.தமிழ் சினிமாவின் இயக்குநர்களில் மகேந்திரன் பங்கு முக்கியமான ஒன்று.அதே சமயத்தில் இயக்குநர் மகேந்திரனின் இயக்கத்திற்கான நெருப்பு அணைந்து விட்டதென்பதே எனது கணிப்பு.

தனி மனித விமர்சனத்தை விட கால இடைவெளியை முக்கிய காரணமாக கூறலாம்.

உலக சினிமா ரசிகன் said...

நெஞ்சத்தை கிள்ளாதே... மவுன ராகம் பற்றி ஒரு செய்தி குறிப்பிட வேண்டுகிறேன்.
மவுனராகம் பிரிவியூ ஸ்பெசலாக மகேந்திரனுக்கு போட்டு காண்பித்தார் மணிரத்னம்.

பட ஆரம்பத்தில் மணி... மகேந்திரனிடம் சொன்னது...
"உங்கள் நெஞ்சத்தை கிள்ளாதே படத்தைதான் மவுனராகமாக்கியிருக்கிறேன்".

பட முடிவில் மகேந்திரன் மணியிடம் சொன்னது...
"இது நெஞ்சத்தை கிள்ளாதே அல்ல..இது வேற...அதை விட அற்ப்புதமாக இருக்கிறது".
இரண்டு படைப்பாளிகளுமே மேதைகள்.
அதனால்தான் இப்படி உரையாட முடிந்தது.

Unknown said...

முள்ளும் மலரும் ஆனந்தவிகடனில் தொடராக வந்த நாவல்.....அனைவராலும் படித்து ரசிக்கப்பட்டது...ஆளால் திரைப்படமாக வந்து வெற்றி பெறவில்லையா சிபி! ஒரு தேர்ந்த சிற்பிக்கு மரமும் கல்லும் ஒன்றுதான்.....