Tuesday, March 06, 2012

-கொண்டான் கொடுத்தான் - சினிமா விமர்சனம்

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg1JNo697sdICGve3SZtEmbaUSdXc7MMKJj0AhkANzsrBrm5I5Sin14cmKW3mJHzIQnWikHK-2FECsWCLaasx3qpT0F_ABv_oHUvTxTyrvxEdROLIHMxnbnn_I8sqoJmTzsOXFIHzdnr2s/s1600/Kondaan+Koduthan+%25282012%2529.jpgஇந்தக்கால இளைய தலைமுறைக்கு அதிகம் பழக்கம் இல்லாத ஒரு சொலவடை தான் டைட்டில்..  ஒரு காலத்தில் பல குடும்பங்களில்  இருந்து வந்த பழக்கம் தான்.. அதாவது ஒரே குடும்பத்துல பொண்ணு குடுத்து பொண்ணு கட்டறது.., நெருங்கிய சொந்தத்தில் திருமணம் செய்தால் பிறக்கும் குழந்தையின் ஆரோக்யம் பாதிக்கும் என்று இன்றைய விஞ்ஞானம் சொல்வதாலும், காதல் திருமணங்கள் பெருகி விட்டதாலும் இப்போதெல்லாம் முறைப்பெண்ணை கட்டும் பழக்கம் வழக்கொழிந்து வருது.. அந்த வழக்கத்தில் உள்ள ஒரு குடும்பத்தில் நடக்கும் கதைதான் கொண்டான் கொடுத்தான்.

இளவரசுக்கு ஒரு பையன், ஒரு பொண்ணு. அவரோட தங்கச்சிக்கும் அதே போல் ஒரு பையன், ஒரு பொண்ணு. பொண்ணு குடுத்து பொண்ணு எடுக்கலாம்னு நினைக்கறப்ப ஒரு சிக்கல்.. இளவரசோட பையன்க்கு நடந்த மேரேஜ் அன்னைக்கு பொண்ணு ஓடிப்போயிடுச்சு.. உடனே இளவரசோட பையன் தற்கொலை பண்ணிக்கறான்.. அதனால குடும்பத்துக்குள்ள பகை.. இளவரசோட பொண்ணை தன் தங்கை பையனுக்கு கட்டித்தர மாட்டேன்னு அடம் பிடிக்கறார்.. 

 எல்லா படங்கள்லயும் வர்ற மாதிரி இந்தப்படத்துலயும் ஒரு வில்லன்.. அவன் பையனுக்கு கட்டித்தர்றதா பேச்சு.. எல்லாத்தடையையும் தாண்டி அந்த லவ் ஜோடி கம் முறைப்பையன் ,முறைப்பொண்ணு எப்படி ஒண்ணு சேர்றாங்க அப்டிங்கறதுதான் கதை.

 ஏ , மற்றும் பி செண்ட்டர்களில் எடுபட வாய்ப்பில்லாத கிராமத்துக்கதை.. நாடகம் பார்க்கறது மாதிரி காட்சி அமைப்புகள்  எல்லாவற்றையும் தாண்டி இளவரசுவின் நடிப்பு அற்புதம்.. ஆனால் ஒரு நடிகரின் நல்ல நடிப்பு ஒரு சுமார் ரக படத்தை காப்பாற்றி விடுமா?

வெளுத்துக்கட்டு பட ஹீரோ  கதிர்தான் ஹீரோன்னாலும் அவரது மாமாவாக வரும் ஒளிப்பதிவாளர் இளவரசு தான் ஒரு பண்பட்ட குணச்சித்திர நடிகர் என்பதை பல இடங்களில் நிரூபிக்கிறார்.. பூர்ணம் விஸ்வநாதனுக்குப்பிறகு இவர் பல படங்களில் பாராட்டத்தக்க நடிப்பை வழங்கி வருகிறார். 

http://g.ahan.in/tamil/Kondaan%20Koduthan%20%20stills/Kondaan%20Koduthan%20(1).jpg

கதிர் அதிக அனுபவம் இல்லாத ஹீரோவாக இருந்தாலும் எதார்த்தமான நடிப்பு.. இயல்பான முகபாவங்கள் என கவர்கிறார்,

ஹீரோயின் அத்வைதா ( அழகர் சாமியின் குதிரை) கிராமத்துப்பெண்ணுக்கு இவ்ளவ் மேக்கப் எதுக்கு என்று கேட்க வைத்தாலும் உறுத்தல் இல்லாத நடிப்பு.. 

அது போக படத்தில் குறிப்பிட பெரிய நட்சத்திரப்பட்டாளமே  இருந்தாலும் குறிப்பிடத்தக்கவர்கள் வில்லனாக வரும் டைரக்டர் ராஜ்கபூர் , அவரது எடுபுடியாக வரும் டைரக்டர் மனோபாலா.. இருவரும் நல்ல காம்பினேஷன்.. 

 கஞ்சா கறுப்பு சில இடங்களில் கிச்சு கிச்சு மூட்டுகிறார்.. 

http://atozactress.com/wp-content/uploads/2011/10/Advaitha-In-Kondan-Koduthan-7.jpg


இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள்

1. தனது மகன் இறந்த செய்தி கேட்டு ஓடி வந்து மகன் டெட்பாடியில் புரண்டு அழும் இளவரசுவின் நடிப்பு இன்னும் கண்ணுக்குள்ளே.. அதே மாதிரி மகன் இறந்து 30 நாட்கள் கூட ஆகாத நிலையில் தன் தங்கை மகள் விருந்து வைத்தது கண்டு பொங்கி எழுந்து விசேச வீட்டில் போய் செய்யும் ரகளை அச்சு அசல் கிராமத்து கோபத்தை காட்டும் இடங்கள். சபாஷ்.. 

2. இளவரசுவின் தங்கையாக , கதிர்-ன் அம்மாவாக வரும் பாலாமணியின் நடிப்பும் இளவரசுவுக்கு ஈடு கொடுக்கும் அளவு,.. 

3. படத்தின் முற்பாதியில் பொண்ணு ஓடிப்போய்ட்டா என்பதற்காக எந்த மாப்பிள்ளையாவது தற்கொலை செய்வானா? என்று ஆடியன்ஸின் சந்தேகத்தை களையும் விதமாய் மாப்பிள்ளைக்கு எய்ட்ஸ்.. அதை வெளியில் சொல்ல முடியாமல், ஒரு பெண்ணின் வாழ்வை கெடுக்க விரும்பாமல் தான் தற்கொலை செய்தார் என்று ஏற்கத்தக்க அளவில் சஸ்பென்ஸ் ட்விஸ்ட் வைத்த விதம்.. 

4. முறை மாமன், முறைப்பெண் என பெண் கொடுத்து பெண் எடுக்கும் வழக்கத்தை கிராமத்து மண் வாசம் வீச பதிவு செய்த விதம்.. 

5. எப்போதும் முறைத்துக்கொண்டு வரும் ராஜ்கபூர்.. எதற்கெடுத்தாலும் காமெடி பண்ணும் மனோபாலா இருவரை காமெடி ஜோடி ஆக்கி காட்சிகள் அமைத்த விதம்.. 

6.  ஓப்பனிங்க்கில் வரும் தஞ்சாவூர் கோபுரம் அழகு பாட்டு கூட்டுக்குடும்ப அழகை காட்டும் இயல்பான பாட்டு .. பாவாடை போட்ட தட்டாம்பூச்சியே உதடும் உதடும் சண்டை போடட்டும் வாயேண்டி  லந்துப்பாட்டு,தில்லானா பாட்டுக்காரி என்ற டப்பாங்குத்து பாட்டு என கேட்க வைக்கும் 3 பாடல்களை எடுத்த விதம்


http://123tamilforum.com/imgcache2/2011/10/XSVy8-1.jpg

 இயக்குநர் லாஜிக் மிஸ்டேக்ஸ்


1.  இன்ஸ்பெக்டரா வர்றவர் கிராமத்துல  இருக்கறவரை யோவ்னு மரியாதை இல்லாம கூப்பிடறார்.. எந்த தப்பும் பண்ணாத ஆளை அப்படி கூப்பிட அந்த மாதிரி ஒரு கிராமத்து ஜனங்க விட்டுடுவாங்களா?

2. எய்ட்ஸ் நோய் வந்தா 100% சாவுதான் அப்டினு சொல்லாம சொல்ற மாதிரியும், எய்ட்ஸ் வந்தா  தற்கொலை செஞ்சுக்கனும்கற நெகடிவ் சிந்தனையும் மைனஸ்.. எத்தனையோ எய்ட்ஸ் நோயாளிகள் 15 வருடங்கள் தாண்டியும் உயிர் வாழ்ந்திருக்காங்க.. இந்த படத்துல வர்ற ஒரு கேரக்டர் எய்ட்ஸ் வந்ததால் ரயில் முன் பாய்ந்து சாகற மாதிரி சீன் வருது

3.  இளவரசுவின் மகனாக  வரும் கேரக்டரிடம் தாலி குடுத்து கட்ட சொல்லும்போது அவர் ஏன் கட்டனும்? எய்ட்ஸ் இருப்பதை சொல்ல வேணாம்.. அவர் பாட்டுக்கு ஊரை விட்டு ஓடிப்போய் இருக்கலாமே? ஏன் உலகத்தை விட்டே போகனும்?

4. ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்த பாடி போஸ்ட்மார்ட்டத்துக்கு போன போது மெடிக்கல் சர்ட்டிஃபிகேட்டில் எய்ட்ஸ் இருப்பதை சொல்லி இருப்பாங்களே.. அது எப்படி இளவரசுக்கு தெரியாமல் போச்சு?

5. க்ளைமாக்ஸ் கபடி போட்டி, அதில் வெல்பவர்க்குத்தான் ஹீரோயின் என்பதெல்லாம் அரதப்பழசான காட்சிகள்.. 


http://www4.pictures.zimbio.com/mp/krUMHKhHGkDm.jpg

ஆனந்த விகடன் எதிர்பார்ப்பு மார்க் - 38

குமுதம் எதிர்பார்ப்பு ரேங்க் - சுமார்

 சி.பி கமெண்ட் - கிராமத்து ரசிகர்களுக்கு மட்டும். ஈரோடு ஆனூரில் பார்த்தேன்
 


12 comments:

கோவை நேரம் said...

மாலை வணக்கம்

கோவை நேரம் said...

புவனேஸ்வரி இருக்காங்க போல ...

கோவை நேரம் said...

அப்போ படம் அம்புட்டுதானா....

Unknown said...

////கிராமத்து ரசிகர்களுக்கு மட்டும்///

நான் உகாண்டாங்கோ! படம் பார்க்கலாமா?

நாய் நக்ஸ் said...

"ஒரு பயங்கரமான குருக்களை பார்க்க வேண்டுமா வாருங்கள் நண்பர்களே! "

ராஜி said...

இன்னிக்கு வெள்ளிக்கிழமையா? விமர்சனம் போட்டிருக்கீங்களே அதுக்காக கேட்டேன்.

rajamelaiyur said...

//நாடகம் பார்க்கறது மாதிரி காட்சி அமைப்புகள் எல்லாவற்றையும் தாண்டி இளவரசுவின் நடிப்பு அற்புதம்.. ஆனால் ஒரு நடிகரின் நல்ல நடிப்பு ஒரு சுமார் ரக படத்தை காப்பாற்றி விடுமா?
//

உண்மைதான் ..

rajamelaiyur said...

இன்று

தமிழ் சினிமா வரலாற்றில் முதல் முறையாக ...

சசிகுமார் said...

கிராமத்து கதைகள் எனக்கும் ரொம்ப பிடிக்கும் மாப்ள... பார்க்க வேண்டிய லிஸ்டில் இதையும் சேர்த்து கொள்கிறேன்...

ஹாலிவுட்ரசிகன் said...

முதல் போட்டோல இருக்கிறது ஹீரோயினா? கண்கள் நல்லாயிருக்கு

Menaga Sathia said...

இன்னிக்கு செவ்வாய்க்கிழமைதானே விமர்சனம் போட்டிருக்கீங்க....

KANA VARO said...

இளவரசு இப்ப எல்லா படங்களிலையும் பின்னியெடுக்கிறார்