Friday, February 10, 2012

புற்று நோயை வெற்று நோய் ஆக்குவது எப்படி? -நேசம்+யுடான்ஸ் கேன்சர் விழிப்புணர்வுப் போட்டி

1980 களில் வந்த சினிமா படங்கள் நம் மக்கள்ட்ட ஏற்படுத்துன பயம் இன்னும் போகலை..அதாவது கதைப்படி ஹீரோ அல்லது ஹீரோயின்க்கு கேன்சர் வந்திருக்கும்.. டாக்டர் தேதி குறிச்சுடுவார்.. நிர்ணயிக்கப்பட்ட மரணம் என்பது போல் ஒரு தவறான  கற்பிதம் மக்கள் மனதில் பரவிடுச்சு.. அது இன்னும் நிலைத்திருப்பது வேதனை தான்..

சினிமா பிரபலங்களான லிசா ரே, கவுதமி , மம்தா மோகன் தாஸ் உட்பட பல நடிகைகள் புற்று நோயால் பாதிக்கப்பட்டு ஆரம்ப நிலையில் கண்டறிந்து சிகிச்சை பெற்று குணம் அடைந்தவர்களே.. அதனால் யாரும் கேன்சர் என்றால் மரணம் தான் என எண்ணத்தேவை இல்லை..



இன்று மாடர்ன் டெக்னாலஜிகள் வந்து விட்டது.. கீமோதெரபி உட்பட்ட பல சிகிச்சைகள் குணம் அடைய போதுமான மருத்துவ முறைகள் வந்து விட்டன.. எனவே எந்த விதமான மரண பயமும் இல்லாமல் இந்த நோயை அணுகலாம்.. எய்ட்ஸ் போல் இது உயிர்க்கொல்லி நோய் அல்ல என்பதை புரிந்து கொள்ள வேண்டும்..


புற்று நோய் என்பது என்ன? அதுல என்னென்ன வெரைட்டி இருக்கு?நோய் வரும் முன் காப்படு எப்படி? வந்த பின் சிகிச்சை மூலம் குணம் ஆவது எப்படி? நோயின் தீவிரத்தை குறைப்பது எப்படி? என்பதை எளிமையா, பாமரனுக்கும் புரியற மாதிரி பார்ப்போம்.. 

புற்று நோய் என்பது குறிப்பிட்ட வயது வந்த ஆட்களைத்தான் தாக்கும் என்றில்லை, அது யாரை வேணும்னாலும் தாக்கலாம்.. ஆனாலும் வயது அதிகம் ஆக ஆக வாய்ப்பு அதிகம்,, 

நம்ம உடம்பு பல செல்களால் ஆனது.. செல்கள் பிரிந்து பல புதிய செல்களை உருவாக்குது.. பழைய செல்கள் இறந்து வெளியேறாமல் உள்ளேயே தங்கிடுது.அதுதான் புற்று நோய் ஏற்பட முக்கிய காரணம்

புற்றுநோய் அதிகமாக பெண்களை தாக்குகிறது..

 புற்று நோய் வருவதற்கான காரணங்கள் +.யார் யாருக்கெல்லாம் நோய் தாக்கும் அபாயம்?
1. அதிகமாக உடலில் படும் சூரிய ஒளி

2. அதிக உடல் எடை போடுதல்

3. உடல் பயிற்சி செய்யாமல் உடல் உழைப்பு இல்லாமல் இருத்தல்

4. கருத்தடை மாத்திரைகள் அடிக்கடி உபயோகம் செய்யும் பெண்கள்

5.மிக தாமதமாக முதல் குழந்தை பெற்றுக்கொள்ளும் பெண்கள்

6. மிகச்சிறிய வயதில் பூப்டையும் பெண்கள்

7. தாய்ப்பால் கொடுக்காத பெண்களுக்கு

8. மிகத்தாமதமாக மாத விலக்கு நிற்கும் பெண்கள் ( மெனோபாஸ் லேட்)

9. கொழுப்புச்சத்து அதிகம் உள்ள உணவு வகைகள் உண்பவர்கள், மாமிச உணவு அதிகம் உண்பவர்கள்

10. குடும்பத்தில் அம்மா அல்லது சகோதரர்களுக்கு இருந்தால் அந்த பெண்ணுக்கு வர வாய்ப்பு அதிகம்

 புற்று நோய்களின் வகைகளும், வருவதற்கான காரணங்களும்

 1. செஸ்ட் கேன்சர் - ( மார்புப்புற்று) பெரும்பாலும் இது பெண்களுக்கே வரும், ஒரு குழந்தை மட்டுமே பெற்ற பெண்கள்,தாய்ப்பால் தராத பெண்கள்,குழந்தைப்பேறு இல்லாத பெண்கள், குண்டான உடல் வாகு கொண்ட பெண்கள்க்கு செஸ்ட் கேன்சர் வருகிறது

2. லங்க்ஸ் கேன்சர்  - (நுரையீரல் புற்று ) புகை பிடிக்கும் பழக்கம் உள்ளவர்கள்க்கு வரும் வாய்ப்பு அதிகம்.. ஆஸ்பெஸ்டாஸ், சிலிக்கான் தொழிற்சாலைகளில்  பணி புரிபவர்கள் , சிமெண்ட் தொழிற்சாலைகளில் பணி புரிபவர்கள்க்கு வரும் வாய்ப்பு அதிகம்

3. மவுத் கேன்சர்  - (வாய்ப்புற்று) -புகையிலை உபயோகிப்பவர்களுக்கு,பான் பராக், ஜர்தா பீடா அடிக்கடி சாப்பிடுபவர்கள், பற்களை முறையாக பராமரிக்காமல் அஜாக்கிரதையாக இருப்பவர்கள்க்கு இது வரும் வாய்ப்பு அதிகம்.

4. லிவர் கேன்சர் - (ஈரல் புற்று ) -  மது பான வகைகளை அதிகம் உபயோகிப்பவர்கள், வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டோர்கள்க்கு வர வாய்ப்பு அதிகம்

5. ஸ்டொமக் கேன்சர்  -( வயிற்றுப்புற்று) -  முறையில்லாமல் கண்ட நேரத்தில் சாப்பிடும் உணவுப்பழக்கம் கொண்டவர்கள் அதாவது நினைச்ச நேரம் சாப்பிடுபவர்கள்க்கு,ஜங்க் ஃபுட் எனப்படும் பாக்கெட்களில் விற்கப்படும் நொறுக்ஸ்களை அதிகம் உண்பவர்கள்க்கு,சரக்கு அடிக்கற குடிமகன்கள்க்கு, தம் அடிக்கற ஆட்களுக்கு இது வர வாய்ப்பு அதிகம்

6.  ஸ்கின் கேன்சர் - ( தோல் புற்று  ) - சோரியாசிஸ் எனப்படும் தோல் வியாதி வந்தவர்கள், நாட்பட்ட ஆறாத புண்கள் உள்ளவர்களுக்கு, அதிகமாக வெய்யில்லில் உடல் காய்பவர்களுக்கு வர வாய்ப்புகள் அதிகம்

7. யூட்ரஸ் கேன்சர் -(கருப்பை புற்று) - கணக்கு வழக்கே இல்லாம ,வகை தொகை இல்லாம குழந்தை பெத்துக்கற பெண்கள்க்கு,ஹெச் பி வி வைரஸ் தாக்கிய பெண்கள்க்கு இந்த நோய் வர வாய்ப்புகள் அதிகம்.. பல ஆண்களுடன் உறவு வைக்கும் பெண்கள்,பிறப்பு  உறுப்பை சுத்தமாக வைத்துக்கொள்ளாத பெண்கள்க்கு வர வாய்ப்பு அதிகம்

8.  பிளட் கேன்சர்  ( ரத்தப்புற்று) - புகை பிடிக்கும் பழக்கம் உள்ளவர்கள்க்கு, சில சிகிச்சைகளின் போது இன்ஃபெக்‌ஷன் ஏற்படுபவர்களுக்கு இது அதிகம் வருகிறது.. பரம்பரைத்தன்மையும் ஒரு காரணம்.. அதிக வயது ஆனவர்களுக்கும் வரலாம். 

விந்தையான விஷயம் - மேற்கொண்ட எந்த கெட்ட பழக்கங்களும் இல்லாதவர்களுக்கும் கேன்சர் வர வாய்ப்பு உண்டு.. நமக்குத்தான் எந்த கெட்ட பழக்கமும் இல்லையே என ஜாலியாக இருக்கக்கூடாது.. 35 வயதுக்கு மேல் முழு உடல் செக்கப் செய்து கொள்வது அவசியம்.. 

புற்று நோய் வராமல பாதுகாப்பது எப்படி?

1. நார்ச்சத்து அதிகம் உள்ள உணவுப்பொருள்களை சேர்த்துக்கொள்தல்

2. பச்சை காய்கறிகள் அதிகம் உட் கொள்தல்

3. வைட்டமின் டி குறைபாடு வராமல் பார்த்துக்கொள்ள  அந்த வைட்டமின் சத்து உள்ள உணவு வகைகளை உண்ணுதல்

4. பிளாஸ்டிக் கேன்களில் தண்ணீர் குடிக்காமல் தவிர்த்தல்,அழகு சாதனப்பொருட்கள் அதிகம் உபயோகிக்காமல் இருத்தல் நலம்..

5. ரோட்டோரம் விற்கும் நடைபாதை கடைகளில் பஜ்ஜி, போண்டா சிப்ஸ் வகைகள் சாப்பிடாமல் தவிர்த்தல் நலம், ஏன் எனில் அவர்கள் ஒரே எண்ணெயை மீண்டும் , மீண்டும் உபயோகிப்பதால் அது உடல்க்கு கெடுதல் விளைவிக்கிறது

 புற்று நோய் வந்ததற்கான அறி குறிகள்

1. வாயில் கொப்புளங்கள் வந்து ஆறாமல் இருத்தல்

2. வெள்ளை அல்லது சிவப்பு நிற புள்ளிகள் வாயின் உட்புறத்தில் காணப்படுதல்

3. மார்பில் வலி உள்ள அல்லது வலி அற்ற கட்டிகள் தோன்றுதல்

4.மார்பகம் வழக்கத்திற்கு மாறாக பெரிதாக இருத்தல்

5. உடல் உறவின்போதோ, அதற்குப்பின்போ ரத்தக்கசிவு இருப்பது

6. நீண்ட நாட்களாக ஆறாத புண்கள் இருத்தல்

7. அதீத இருமல், உணவு உண்ணுவதில் ஏற்படும் மாற்றங்கள்

8. இயற்கை உபாதைகளில் வழக்கத்திற்கு மாறான சில மாற்றங்கள்


சிகிச்சை முறைகள்

1. கதிர் இயக்க சிகிச்சை 2.  அறுவை சிகிச்சை 3  மருத்துவ சிகிச்சை

இப்போதெல்லாம் பெரும்பாலும் கதிரியக்க சிகிச்சையே அளிக்கப்படுகிறது..

பீட்ரூட், கீரை வகைகள் சேர்த்துக்கொள்வது நல்லது..

செல் ஃபோன்கள் அதிகம் பயன் படுத்துவதால் கேன்சர் வரும் வாய்ப்பு உள்ளதாக சில ஆராய்ச்சியாளர்கள் சொல்றாங்க.. இது முழுதாக நிரூபிக்கப்படலை, இருந்தாலும் அனைவரும் செல் ஃபோன் பயன் பாட்டை குறைக்கனும். தொடர்ந்து ஒரு மணி நேரம் ஒரே காதில் வைத்துப்பேசுவது கூடாது.. .

கோவை ஸ்ரீ ராம கிருஷ்ணா புற்று நோய் சிகிச்சை மையம் மிக புகழ் பெற்றது.. அது போக அனைத்து முக்கிய நகரங்களில் புற்று நோய்க்கான சிகிச்சை மையங்கள் உள்ளன..

நாம் செய்ய வேண்டியது ஒன்று தான் . 35 வயது டூ 40 வயது ஆனவர்கள் உடனடியாக முழு உடல் பரிசோதனை செய்வதே ..

புற்று நோய் இருப்பது கண்டறியப்பட்டு சிகிச்சை பெற்று வரும் பிரபலங்கள் கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங்க்.. காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி.. இதில் சோனியாவுக்கு சிகிச்சை முடிந்தது.. நலமாக உள்லார்.. யுவராஜ்க்கு இப்போதான் சிகிச்சை ஆரம்பித்து உள்ளார்கள்

புற்று நோயை ஆரம்ப நிலையில் கண்டறிவோம், அதை வெற்று நோய் ஆக்குவோம்.. ஆரோக்யமான உலகம் படைப்போம்.. நாளைய உலகமும், இன்றைய உலகமும் நம் கையில்..

9 comments:

Damu said...

உபயோகமான பதிவு. நோயினை கண்டுபிடிக்கவும் மற்றும் சிகிட்சை செய்ய தக்க மருத்துவ ஆலோசனை அவசியம்

Anonymous said...

பயனுள்ள பதிவு, எளிமையாக விளக்கி உள்ளீர்கள்

ஹேமா said...

புற்றுநோய்பற்றி ஆழமான விளக்கமான பதிவு.வெற்றிக்கு வாழ்த்துகள் சிபி !

sutha said...

மிகவும் பயனுள்ள கட்டுரை - நன்றி செந்தில்

sutha said...

போட்டியில் இந்த கட்டுரை வெற்றி பெற வாழ்த்துக்கள் !!!

ராஜி said...

Vetri pera vazhthukal cp sir

Selva Lingam said...

அருமை. நல்ல பதிவு.

RAMA RAVI (RAMVI) said...

பயனுள்ள தகவல்களை தொகுத்து கொடுத்திருக்கீங்க.வாழ்த்துக்கள்.

தமிழ்விடுதி சத்யபிரபு said...

எலும்பு புற்று நோய் பற்றி நீங்கள் சொல்லவேயில்லயே அதை பற்றி தெரிந்தால் தயவு செய்து சொல்லவும் i am waiting for ur answer