Monday, February 20, 2012

கோர்ட்டில் சசிகலா - மெஸ்சில் ஜெ - இட்லி, ஜெட்லீ, நெட்லீ - காமெடி கும்மி

http://moonramkonam.com/wp-content/uploads/2012/01/jayalalitha-sasikala-tamil-cartoon.jpg 

64 ஜோடிகளுக்கு திருமணம் நடத்தி வைத்த தமிழக முதல்வர் ஜெயலலிதா கணவன் - மனைவி அன்பு குறித்து இட்லி கதை ஒன்றைக்கூறினார்.


 சி.பி - இன்னொரு ஜோடியை சேர்த்திருந்தா கூட்டுத்தொகை 9 வந்திருக்கும், ராசியன நெம்பர்,.. அடடா ஜஸ்ட் மிஸ்..

"
வேலைக்கு சென்ற கணவனை எதிர்பார்த்து மனைவி வீட்டில் காத்திருக்கிறாள். இருக்கின்ற இருவருக்குமாக தயார் செய்திருந்த மாவை வைத்து கணவனுக்காக இட்லி ஊற்றுகிறாள். மொத்தமாக 12 இட்லிகள்தான் அந்த மாவில் இருந்து அவளால் தயாரிக்க முடிந்தது.

சி.பி - அதெப்பிடி? இப்போவெல்லாம் மினிமம் 2 டம்ளர் அரிசி ஊறவெச்சாக்கூட  2 எடசு ( 24 இட்லி) வருமே?

சரி, கணவன் சாப்பிட்டது போக மீதம் இருப்பதை நாமும் சாப்பிட்டு இன்றைய பொழுதை கழித்துவிடலாம் என்று எண்ணியவாறே அவள் எதிர்பார்த்துக் காத்திருந்த வேளையில், கணவன் தனது பால்ய சிநேகிதன் ஒருவனை கூடவே அழைத்துக் கொண்டு வீட்டிற்கு வருகிறான். அப்படி அழைத்துக் கொண்டு வந்தவன் 'எனக்கும் என் நண்பனுக்கும் உணவு எடுத்து வா' என்று கூறினான். பின்னர் இருவரும் சாப்பிட அமர்கிறார்கள். அடுப்பறையில் இருப்பது 12 இட்லிகள்தான் என்பதை எப்படி கணவனுக்கு தெரிவிப்பது என்று குழம்பிய நிலையிலேயே

 சி.பி - அது ரொம்ப ஈஸி ஆச்சே, கிச்சன் ரூம்ல போய் நங்க்னு  டம்ளரை வைக்கலாம், 3 குண்டாவை உருட்டலாம், புருஷன் புரிஞ்சுக்குவான் ( ஹி ஹி எங்க வீட்டுல அப்படித்தான்)

 இரண்டு தட்டுகளை எடுத்து வந்து கணவனுக்கும், அவனுடைய நண்பனுக்கும் வைத்து அதில் ஆளுக்கு நாலு இட்லியை வைத்தாள்.

மீதம் இருப்பது நாலு மட்டுமே என மனதுக்குள் படபடப்போடு கணக்கு வேறு போட்டுக்கொள்கிறாள். வைத்த வேகத்தில் நான்கு இட்லிகளையும் கணவன் வேகவேகமாக சாப்பிட்டுவிட பதற்றம் கொண்டவளாய் இரண்டு இட்லியை எடுத்து கணவனுக்கு வைப்பதற்காக குனியும் வேளையில், கணவன் சொன்னான் 'எனக்குப்போதும். நாலு இட்லிக்கு மேலேயா சாப்பிடுவது...?' என்று சொல்ல; அருகில் ரசித்து, ருசித்து இன்னும் சில இட்லிகள் சாப்பிடலாம் என எதிர்பார்த்திருந்த விருந்தாளி நண்பனுக்கோ வெடுக்கென்று ஆனது! அந்த நேரத்தில் இவளோ 'அண்ணா உங்களுக்கு...' என கணவனின் நண்பரை நோக்கிக்கேட்க,

சி.பி - கணவனின் நண்பன் பேரு அண்ணாத்துரையா? சுருக்கமா அண்ணான்னு  கூப்பிடறாரா? 

http://www.envazhi.com/wp-content/uploads/2011/12/jaya-sasi-21.jpg


 'போதும்... போதும்... நான் எப்போதுமே மூன்று இட்லிதான் சாப்பிடுவேன். இன்று உன் கைப்பக்குவம் நான்கு இட்லிகளை சாப்பிட்டு விட்டேனம்மா...' என்று கூறி எழுந்தான் அந்த விருந்தாளி நண்பன்.


 

கை கழுவச் செல்லுகையில் மனைவியை கடக்கின்றபோது 'மீதமுள்ள நான்கை நீ சாப்பிட்டுவிடு' என்று கணவன் சொல்ல, தன் இதயத்தில் மட்டுமல்ல தான் சமைத்த பாத்திரத்தில் கூட எத்தனை இட்லிகள் இருக்கின்றன என்பதை பார்க்காமலே, தன் பார்வையைக் கொண்டே கணக்கிட்டுக் கொண்டதோடு; அந்த இக்கட்டில் இருந்தும் அழகாக தன்னை காத்திட்ட தன் கணவனை நினைத்து ஆச்சரியப்பட்டு மகிழ்ந்தாள் அந்தப் பெண்!

சி.பி - இந்தக்கதை நடந்து 50 வருஷங்கள் இருக்கும்னு நினைக்கறேன், ஏன்னா இந்தக்காலத்துல சம்சாரங்க எல்லாம் அடுப்புல 2 தோசைக்கல் வெச்சு தோசை சுட்டுட்டே டக டகன்னு கிச்சன் ரூம்லயே சாப்பிட்டு முடிச்சுடறாங்க... அவங்க எப்ப சாப்பிடராங்க அப்டிங்கறதை  கண்டு பிடிக்கவே முடியறதில்லை

இந்தக் கதையில் நாம் பார்த்த தம்பதியினரின் புரிதலைப்போல, இன்று மணம் முடித்திருக்கும் மணமக்களாகிய நீங்களும், ஒருவரை ஒருவர் நன்கு புரிந்து கொண்டு எந்நாளும் மகிழ்ச்சியுடன் வாழ வேண்டும் என்று மனதார வாழ்த்துகிறேன்".

சி.பி - போயஸ் தோட்டத்துல ஏதோ ஸ்டோரியோ போபியா பீதியா அப்டினு ஒரு பழக்கம் இருக்கு போல, சூப்பர் ஸ்டார் ஆகட்டும், புரட்சித்தலைவி ஆகட்டும் மேடை ஏறும்போதே கதை சொல்ல ரெடி ஆகிடறாங்க.. 


சொத்து குவிப்புக்கும், ஜெ.,வுக்கும் சம்பந்தமில்லை: தானே பொறுப்பு என சசிகலா கண்ணீர்


பெங்களூரு: ""ஜெயா பப்ளிகேஷனில் முதல்வர் ஜெயலலிதா பங்குதாரராக இருந்தாலும், நிர்வாகத்தில் ஈடுபாடு காட்டவில்லை. நானே முழுமையாக பொறுப்பை கவனித்தேன். சொத்து குவிப்பு குற்றத்திற்கும், ஜெயலலிதாவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. தவறுகளுக்கு நானே பொறுப்பு,'' என, சொத்து குவிப்பு வழக்கு விசாரணையில் சசிகலா தெரிவித்தார்; அத்துடன் கண்ணீர் விட்டு அழுதார்.


சி.பி - எனக்கு என்ன டவுட்னா புரட்சித்தலைவி முன்னாள் நடிகை அதனால அவங்க அழுதாக்கூட ஆல்ரெடி எக்ஸ்பீரியன்ஸ் இருக்குன்னு அசால்ட்டா விட்டுடலாம், ஆனா நடிகையர் திலகம் சாவித்திரி ரேஞ்ச்க்கு அக்கா அழுது இருக்காங்கன்னா உண்மையிலேயே அவங்க நடிப்பை பாராட்டனும்.. 



http://www.envazhi.com/wp-content/uploads/2011/12/jaya-sasi-1.jpg
தமிழக முதல்வர் ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக தொடரப்பட்ட வழக்கு, பெங்களூரு சிறப்பு கோர்ட்டில் நடந்து வருகிறது

 சி.பி - ஆமா, அந்த கேஸ் பல ஆண்டுகளாக நடந்து வந்தது.நடந்து வருகிறது.நடந்து வரும்.. முப்பொழுதும் உன் கேஸ்கள்


 இந்த வழக்கில் இரண்டாவது குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டுள்ள சசிகலா, தனக்கு ஆங்கிலம் தெரியாது. தன்னிடம் கேட்கப்பட வேண்டிய கேள்விகளை, தமிழில் கேட்டு பதிவு செய்ய வேண்டும் எனக் கோரியதை, பெங்களூரு சிறப்பு கோர்ட், கர்நாடக ஐகோர்ட் நிராகரித்த நிலையில், சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. சசிகலாவின் கோரிக்கையை நிராகரித்த சுப்ரீம் கோர்ட், மனு மீதான விசாரணையை மார்ச் 2ம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது.


சி.பி - சசிகலா அக்கா ஒரு தப்பு பண்ணிட்டாங்க, எனக்கு தமிழும் தெரியாது, பேச மட்டும் தான் தெரியும், படிக்கத்தெரியாது, அதனால கேஸ் விபரங்களை யாராவது டெயிலி ஒரு பக்கம் மட்டும் படிச்சு காட்டுங்க  அப்டின்னு சொல்லி இருந்தா 18,780 பக்கம் உள்ள அந்த கேஸ் டீட்டெய்லை படிக்கவே  47 வருஷங்கள் ஆகி விடும் எஸ் ஆகி இருக்கலாம் ஜஸ்ட் மிஸ்..

இந்நிலையில், நீதிபதி மல்லிகார்ஜுனையா முன்னிலையில் பெங்களூரு சிறப்பு கோர்ட்டில் வழக்கு விசாரணைக்கு வந்தது. அரசு வழக்கறிஞர் ஆச்சார்யா, ஜெ., வழக்கறிஞர் குமார், சசிகலா வழக்கறிஞர் மணிசங்கர், சுதாகரன் வழக்கறிஞர் சரவணகுமார், இளவரசி வழக்கறிஞர் அசோக் ஆகியோர் ஆஜராகினர். சசிகலா தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்த மனு, மார்ச் 2ம் தேதிக்கு விசாரணைக்கு வருகிறது. எனவே, அவரிடம் மார்ச் 3, 4ம் தேதிகளில் விசாரணை வைத்துக் கொள்ள வேண்டும் என, அவரது வழக்கறிஞர் மனு தாக்கல் செய்தார்.
ஆச்சார்யா கூறுகையில், "சுப்ரீம் கோர்ட் அவர்களின் கோரிக்கையை நிராகரித்து விட்டது. சிறப்பு கோர்ட் விசாரணை செய்ய தடை எதுவும் கூறவில்லை. எனவே, இன்றே விசாரணை துவங்க வேண்டும்' என்றார். இரு தரப்பு வாதத்தையும் கேட்ட நீதிபதி, சசிகலா கோரிக்கையை நிராகரித்தார். இன்றே விசாரணை துவக்கப்படுகிறது' என்றார். இதையடுத்து, மொழிபெயர்ப்பாளர் ஹரீஸ் மூலம் சசிகலாவிடம் கேள்விகள் கேட்கப்பட்டன. சசிகலாவிடம் பெயர், அப்பா பெயர், முகவரி, என்ன தொழில் செய்கிறீர்கள் என கேட்கப்பட்டது. அதற்கு அவர் பதில் அளித்தார்.


சி.பி - என்ன தொழில்? கேள்விக்கு ஊரை அடிச்சு உலையில் போடறது, நிலங்களை அபகரிச்சு ஆட்டமா ஆடறதுன்னு உண்மையை சொல்லி இருப்பாங்களா?  
நீதிபதி: இவ்வழக்கில் சாட்சிகள் கூறிய வாக்கு மூலங்களின் விவரங்கள் உங்களுக்கு தெரியுமா?

சி.பி - சாரி யுவர் ஆனர் எனக்கு ஆதி மூலம், நதி மூலம், ரிஷி மூலம் மட்டும் தான் தெரியும் ஹி ஹி 
சசிகலா: என் வக்கீல்கள் மூலம் தெரிந்து கொண்டுள்ளேன்.

சி.பி - அக்காவுக்கு ஒரு வக்கீல் வெச்சா பத்தாது போல, பல கேஸ்ல மாட்டுன கேஸ்ங்க எல்லாம் பல வக்கீல் வெச்சுத்தானே ஆகனும்? ஹி ஹி 


கேள்வி: ஜெயா பப்ளிகேஷன் நிறுவனத்தில் நீங்கள் பங்குதாரராக உள்ளீர்களா? ஜெயலலிதாவும் பங்குதாரராக உள்ளாரா?


சி.பி - எஸ் யுவர் ஆனர், நாங்க 2 பேரும் எல்லாத்துலயும் 50 -50 பார்ட்னர்ஸ்.. ஏதாவது பிரச்சனை வந்தா மட்டும் சண்டை போட்டுக்கிட்ட மாதிரி சீன் போடுவோம், பிரச்சனை சரி ஆனதும் பழைய படி சேர்ந்துக்குவோம் ஹி ஹி 
பதில்: நான் பங்குதாரராக உள்ளேன். ஜெயலலிதாவும் பங்குதாரராக இருக்கிறார். நிர்வாகத்தை முழுமையாக நானே கவனித்து வருகிறேன். அவர்கள் (ஜெயலலிதா) இந்த நிர்வாகத்தில் ஈடுபாடு காட்டுவதில்லை. அனைத்து முடிவுகளையும் நானே எடுப்பேன்.


சி.பி - ஜெ எந்த முடிவும் எடுக்க மாட்டார், எல்லாமே இவங்க தான் எடுப்பாங்கன்னா இப்போ பொம்மை யாரு? ரிமோட் கண்ட்ரோல் யாரு?  


http://www.envazhi.com/wp-content/uploads/2012/01/IN19_JAYA_SASI_OPS_868555g.jpg
இதைத் தொடர்ந்து, சசிகலாவிடம் சென்னை தி.நகர், ஆலந்தூர், செய்யூர், தி.வி.., தொழிற்பேட்டை ஆகிய இடங்களில் பல்வேறு கட்டடங்கள், நிலங்கள், வீடுகள் வாங்கப்பட்டது குறித்தும், எந்த பணத்தில் வாங்கப்பட்டது, பல இடங்களில் சொத்துகள் வாங்கியபோது, அவற்றின் மதிப்பை குறைவாகப் போட்டு, முத்திரைத் தாள் கட்டணம் குறைவாகச் செலுத்தப்பட்டது குறித்தும் கேள்விகள் கேட்கப்பட்டன. இதற்கு சசிகலா பதிலளிக்கையில், ஜெயா பப்ளிகேஷன், சசி எண்டர் பிரைசஸ் நிறுவன வருமானத்திலும் சில சொத்துகள், நமது எம்.ஜி.ஆர்., பத்திரிகை சந்தா, விளம்பரப் பணத்திலும் சொத்துகள் வாங்கப்பட்டன. ஜெயா பப்ளிகேஷன் ஒன்றரை கோடி ரூபாயும், சசி எண்டர்பிரைசஸ் 75 லட்சம் ரூபாயும், வங்கிகளில் 20 லட்சம் ரூபாயும் அதிக பற்று பெறப்பட்டுள்ளது. அந்த பணத்தில் தான் இந்த சொத்துகள் வாங்கப்பட்டன என்றார்.
தி.நகர், முருகேஷ் தெருவில் கோபால்சாமி என்பவரின் வீட்டை, சுதாகரன் நேரில் சென்று விலை பேசினார். 50 லட்சம் ரூபாய் மதிப்புள்ள வீட்டை, 29 லட்சம் ரூபாய்க்கு பேரம் பேசி, இரண்டு லட்சம் ரூபாயை கோபால்சாமியிடம் அட்வான்சாக கொடுத்தார். அப்போது இந்த வீடு, சசிகலாவுக்கு என, சுதாகரன் மிரட்டி வாங்கினார் என கேட்டதற்கு, எனக்கு ஒன்றும் தெரியாது என, சசிகலா கூறினார். செய்யூரில் இரண்டரை ஏக்கர் நிலம் வாங்கியது குறித்து கேட்டதற்கு, சிக்னோரா எண்டர்பிரைசஸ், ஜெ.ஜெ., எண்டர்பிரைசஸ் போன்ற நிறுவன வருமானத்தில் தான் வாங்கப்பட்டது என்றார்.

 சி.பி - ஆச்சரியமா இருக்கே? என்ன விலை நிலவரமோ அதுல பாதிக்கு பாதி ரேட் குடுத்திருக்காங்க, ஆனா தெலுங்கு டப்பிங்க் படத்துல  எல்லாம் அடி மாட்டு விலைக்கு வாங்கறாங்களே.. ?



விசாரணையின் போது, இரண்டு, மூன்று முறை அனைத்து நிர்வாகத்தையும் நானே கவனித்து வருகிறேன். இதில், ஜெயலலிதாவுக்கு சம்பந்தம் இல்லை. சொத்துகள் வாங்கிய குற்றத்திற்கும், ஜெயலலிதாவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. தவறுகளுக்கு நானே பொறுப்பு என்றும் கூறினார். ஜெயலலிதாவும் தன்னிடம் விசாரணை நடத்திய போது தான், "சைலன்ட் பார்ட்னர்' என கூறியுள்ளார் என்பதையும் விளக்கினார். இவ்வாறு கூறிய போது, சசிகலா கண் கலங்கினார்.


சி.பி - சைலண்ட் பார்னர்னா சத்தம் இல்லாம கூட்டாளி கழுத்தை கடக்குனு வெட்டறதா?
* சசிகலாவிடம் காலை 11.35 மணிக்கு, கேள்விகள் கேட்கும் பணி ஆரம்பமானது.
* சசிகலா பதில் கூற ஆரம்பிக்கும் முன், தன் இரு கைகளையும் கூப்பி வணங்கி கொண்டார்.

சி.பி - என்னது? அக்கா வணக்கம் எல்லாம் போட்டாங்களா? அடேங்கப்பா, பணிவுதான்
* அவர் மிகவும் சோர்வாகக் காணப்பட்டார். குரல் வலிமை மிகவும் குறைந்து இருந்தது. அவரது சத்தம் குறைவாக இருந்ததால், கூறும் பதில், மொழி பெயர்ப்பாளருக்கு சரியாக கேட்காமல், பல முறை திரும்பிக் கேட்டார்.
* கண்களில் இருந்து கண்ணீர் வந்ததால், அடிக்கடி கைக்குட்டையால் துடைத்தபடி இருந்தார். சில நேரங்களில் கண்களில் இருந்து தண்ணீர் வடிந்தது.


சி.பி - அது என்ன பிரச்சனைன்னா கிளிசரின் போடறப்ப இங்க் பில்லர்ல 2 சொட்டு மட்டும் போடனும், அக்கா அவசரத்துல ஸ்பூன்ல நிறைய போட்டுட்டாங்களாம்.. 
* காலை 11.35 மணியிலிருந்து மதியம் 2 மணி வரை 25 கேள்விகளும், மூன்று மணியிலிருந்து 3.45 வரை 15 கேள்விகளும் என, மொத்தம் 40 கேள்விகள் கேட்கப்பட்டன.
* மாலை 6 மணிக்கு சென்னை விமானத்தில் டிக்கெட் முன் பதிவு செய்திருந்ததால், அவரது வழக்கறிஞர்கள் கோரிக்கை விடுத்ததை நீதிபதி ஏற்றுக் கொண்டார்.
* இந்த வழக்கு விசாரணை பிப்ரவரி 23ம் தேதி நடக்கும் என்று அறிவித்தார்.
* சசிகலா வழக்கறிஞர் கூறுகையில், "ஹோட்டல் சாப்பாடு சசிகலாவுக்கு ஒத்துக் கொள்ளாது. எனவே, விசாரணைக்கு தொடர்ந்து வர இயலாது' என்றனர்.

சி.பி - ஜட்ஜய்யா வீட்ல இருந்து புளி சாதம் கழறி எடுத்துட்டு வந்து தந்து வழக்கை விசாரிக்கனும் அடங்கொய்யால
* கடந்த முறை போன்றே இம்முறையும் சசிகலா அமைதியாக வந்து, அமைதியாகச் சென்றார்.
* .தி.மு.., வினர் யாரும் வரவில்லை. இரண்டு போலீசார் மட்டும் அவரின் பாதுகாப்புக்கு வந்திருந்தனர்.


http://s1-02.twitpicproxy.com/photos/large/475967820.jpg

 மக்கள் கருத்து 

1. மதுரை விருமாண்டி -ஹோட்டல் சாப்பாடு சசிகலாவுக்கு ஒத்துக் கொள்ளாது. எனவே, விசாரணைக்கு தொடர்ந்து வர இயலாது" என்றனர். - ஜெயில் சாப்பாடு ஒத்துக் கொள்ளாது என்று கொடநாட்டிலே தங்குறதுக்கும் பெர்மிஷன் வாங்கியிருங்க.. இவ்வளவு செஞ்ச நீதிபதி, இதைக் கூட செய்ய மாட்டாரா என்ன ?

2. காவேரிப்பட்டனம் முனியண்டி -ஆஹா.. சசி இப்படி சொன்னதற்கான பரிசு.. இன்று அவர் கணவர் நடராஜன் கைது நாடகம் பார்த்திருக்கிறோம். ஆனால் நாடகமே நாட்டை ஆள்வதைப் பார்த்ததில்லை. இது தமிழனுக்கு கொடுமையிலும் கொடுமை. பெங்களூர் நீதிபதி மல்லிகார்ஜூனே மற்றும் வழக்கறிஞர் ஆச்சார்யா இருவரும் கேழ்வரகில் நெய் வடிகிறது என்றால் கேட்டுக்கொண்டிருக்கும் கேனயர்களா என்ன.? இறைவன் ஒருவன் இருக்கின்றான்.. இவையெல்லாவற்றையும் பார்த்துக்கொண்டும் பதுங்கியே இருக்கின்றான் என்பதை மட்டும் இந்த நாட்டையாளும் நாடகக் கோமளவல்லிகள் புரிந்துகொண்டால் சரி.. நீண்ட நாட்களுக்கு கிளிசரின் வேலைசெய்யாது. பாட்டியம்மா எனக்கு ஒன்றும் தெரியாதென்பாராம்.. அவரது தோழியை தன்னைவிட்டு விலக்கிவைத்து அவரையே கைகாட்டிவிட்டு அவர் வேலையைப் பார்க்கச் சென்றுவிடுவாராம்.. அவரது தோழியும் அதையே ஒப்புக்கொள்வாராம்.. ஆனால் தோழியின் சுற்றங்கள் சுற்றிவளைக்கப்படுவார்களாம்.. இந்தக் கதையையும் இளிச்சவாயத் தமிழன் ஏற்றுக்கொள்வான் என்று நம்பி நாடகம் ஆடுகிறார்களே.. என்னத்தைச் சொல்ல.. தமிழா விழித்துக்கொள்

3. திண்டுக்கல் சாரதி -தன் கூட இருந்த உயிர் தோழி நல்லவளா கெட்டவளா என தெரிந்து கொள்ளவே இருபது வருடம் ஆகி இருக்கிறது ஒருவருக்கு. அவரை மிக சிறந்த நிர்வாகி ,administravite பவர் அதிகம் என்று சிலர் சொல்லுகிறார்கள்

4, அமெரிக்கா ஆல்பர்ட் - இந்த செய்தியை விட தமிழர்கள் இச்செய்தியை எடுத்துக்கொண்ட விதம் அதிர்ச்சியளிக்கறது. ஒன்று மட்டும் நிச்சயம், தமிழர்கள் அறிவாளிகள், புத்திசாலிகள் என்ற வர்ணனை எல்லாம் ஹம்பக். ஐ.எஸ்.ஐ குத்தப்பட்ட அக்மார்க ஏமாளிகள். எதற்க்கு இவர்களுக்காக நம் முன்னோர்கள் விடுதலையும், ஜனநாயகத்தையும் வாங்கி கொடுத்தார்கள் என்று தெரியவில்லை. இவர்களுக்கு கொஞ்சம் நடிப்பு திறன் உடைய கொடூர சர்வாதிகாரியே போதும். They deserve that much. உலகத்தின் மிக பிந்தங்கிய நாடுகள், கலாசரங்கள் இன்னும் 100 அல்லது 300 வருடங்களில் வளம் பெற்றுவிடும், ஆனால் நாம் இன்னும் 1000 ஆண்டுகள் ஆனாலும் நல்ல தலைவர்களை அடையாளம் கண்டு கொள்ளும் பக்குவம் வராது. வாழ்க தமிழ் மக்கள்

 http://2.bp.blogspot.com/-Gdd2MdXFS7w/TvFtQiamvjI/AAAAAAAABgQ/XZGtYBX1VvM/s1600/WR_202612.jpeg

18 comments:

தாமரைக்குட்டி said... Best Blogger Tips

சிபி, உங்க திறமையே திறமை!!

சீரியஸ்ஸா மேட்டர படிச்சிட்டிருக்கும் போதே, நடுவுல உங்க கடி கலக்கல்!!

தாமரைக்குட்டி said... Best Blogger Tips

இதென்ன வெவகாரம் எல்லாம் சின்னப்புள்ளத்தனமா இருக்கு. நம்மள மாதிரி சுருட்ட தெரியலியே!!!

#கருணாநிதி கவலை.

வா.கோவிந்தராஜ், said... Best Blogger Tips

ஆளுங்கட்சி (கு)தொண்டர்கள் வருகிறார்கள் பார்த்து பதுங்கி கொள்ளுங்கள் ஹாஹாஹாஹா

Ganpat said... Best Blogger Tips

ஒரு உப்பு சப்பில்லாத இட்லி (கதை)க்கு,உங்க comments அருமையான தேங்காய் சட்னி,கார சட்னி,சிறுவெங்காய சாம்பார,கொத்சு,மிளகாய்பொடி,சேர்த்தது போல மிகச்சுவையாக இருந்தது.24 இட்லிகளையும் நானே தின்றுவிட்டேன்!

கணேஷ் said... Best Blogger Tips

செம கும்மு கும்மிருக்கீங்க... நல்ல கமெண்ட்ஸ். கோவிந்தராஜ் ஸார் சொன்ன மாதிரி உடம்பு பத்திரம் செந்தில்!

DhanaSekaran .S said... Best Blogger Tips

அருமைப் பதிவு வாழ்த்துகள்

வீடு K.S.சுரேஸ்குமார் said... Best Blogger Tips

இட்லி, ஜெட்லீ, நெட்லீ,ஆட்டோ வருது வருது சிபி சட்னி! காமெடி கும்மி மம்மிக்கு தெரிஞ்சா கழன்டிடும் டிம்மி! அட இன்னா ரெய்மிங்கு....

முட்டாப்பையன் said... Best Blogger Tips

வாங்க.வாங்க.உங்க விக்கி கதி
என்னான்னு பாருங்க.டப்பியுலகம் டக்கி பயங்கரரரரரடேட்டா!

Chilled Beers said... Best Blogger Tips

பழசெல்லாம் ரொம்பவே கிண்டறீங்க சார்! எங்கேர்ந்து மகாமகம் போட்டோவைப் பிடிச்சீங்க! ஜெவின் இட்லிக் கதை போலவே மணமக்கள் வாழ வாழ்த்துவோம்...

Chilled Beers said... Best Blogger Tips

எல்லா இட்லியையும் புருசனோ தின்னுட்டா டைவர்ஸ்தான் போல...

புலவர் சா இராமாநுசம் said... Best Blogger Tips

நல்ல அலசல் பதிவு உண்மை!

சா இராமாநுசம்

ராஜி said... Best Blogger Tips

இட்டிலி கதை நல்லா இருக்கே. இப்பலாம் அம்மா நிறைய கதை சொல்றாங்க போல.

Yoga.S.FR said... Best Blogger Tips

அறிவித்தல்:பழம்பெரும் நடிகை எஸ்.என் லட்சுமி இன்று காலை மரணமானார்!சுமார் ஐநூறு திரைப்படங்கள்,குறுந்திரை தொடர்களிலும் நடித்தவர்.இறக்கும்போது அவருக்கு வயது 80.

மாலதி said... Best Blogger Tips

மிகவும் சிறப்பான நகைசுவை கொஞ்சமும் குறையாத உங்களுக்கே உரிய நடையுடன் பாராட்டுகள் தொடருங்கள் ...

தமிழ்வாசி பிரகாஷ் said... Best Blogger Tips

போட்டோஸ் எல்லாமே காப்பிரைட் வாங்கியிருக்காங்க அம்மா தரப்பு......
நீங்க அது தெரியாம போட்டுடிங்களே...

தமிழ்வாசி பிரகாஷ் said... Best Blogger Tips

ஆகா.. இது தான் வீடு சுரேஷ் கொடுத்த பதிவா?

சுரேஷ் எஸ்கேப்பா?

Yoga.S.FR said... Best Blogger Tips

64 ஜோடிகளுக்கு திருமணம்.நீங்க சொல்லுறபடி ஒண்ணு கூட்டினா எப்புடி சார் கூட்டெண் 9 வரும்???