Monday, February 06, 2012

சென்னிமலை சி.பி .செந்தில் குமார் -எனது பத்திரிக்கை உலக அனுபவங்கள் - பாகம் 3

உலகத்தில் பிறக்கும் அனைவருமே ஏதாவது ஒரு தனித்திறமையுடன் தான் பிறக்கிறார்கள்,ஆனால் யாரெல்லாம் அதை அடையாளம் காண்கிறார்களோ அவர்கள் வெற்றி பெறுகிறார்கள்..ஆனால் அதே சமயம் திறமை உள்ள அனைவருமே வெற்றி பெறுவதில்லை.. குடத்தில் இட்ட விளக்குகளை குன்றில் இட்ட தீபங்களாக்க சில கை கொடுக்கும் கைகள் தேவைப்படுகின்றன..

பத்திரிக்கை உலகில் அந்த மாதிரி திறமை சாலிகளை ஊக்குவிக்கும் இருவர் என் கண்ணுக்கு தென் பட்டார்கள் ஒருவர் ஆனந்த விகடன் ஆசிரியர் எஸ் பாலசுப்ரமண்யன், இன்னொருவர் அமரர் ஆசிரியர் சாவி அவர்கள்..

சாவி இதழில் தீபாவளி மலரில் அட்டைப்படத்தில் என் ஜோக்ஸ் போட்டு, அதே இதழில் 2 சினிமா விமர்சனங்கள், ஜெ பேட்டி காமெடி கற்பனை கட்டுரை செம ஹிட் ஆகவே அவர் மனம் மகிழ்ந்து பாராட்டியது எனக்கு இன்னும் உத்வேகம் தந்தது..

பொதுவா ஒரு நாள்ல சராசரியா 20 ஜோக்ஸ் , சனி ,ஞாயிறுல 50 ஜோக்ஸ் எழுதனும்னு ஒரு கணக்கு வெச்சுக்கிட்டு எழுதற நான் அன்னைக்கு மட்டும் 100 ஜோக்ஸ் எழுதிட்டேன்.. பாராட்டும், அங்கீகாரமும் கொடுக்கும் மகிழ்ச்சி அளவிட முடியாது..

ஹிந்தி பிரச்சார் சபாவில்  ஹிந்தி பிரச்சாரக் பட்டம் பெற சென்னை தி நகர் ஹிந்தி பிரச்சார சபா போக வேண்டி இருந்தது.. ( நான் டென்த் படிக்கும்போதே பிராத்மிக், மத்யமா, ராஷ்ட்ர பாஷா உள்ளிட்ட 8 ஹிந்தி எக்ஸாம்கள் முடிச்சிருந்தேன்)சாவி அவர்களிடம் முன் கூட்டி தகவல் சொல்லி விட்டேன்


முதல் முறையாக ஒரு பத்திரிக்கை அலுவலகம் செல்லும் வாய்ப்பு.. எனக்கு பிரமிப்பாக இருந்தது.. அவர் வந்தார், என்னை அரவணைத்தார்.. என் அப்பா ,அம்மா, ஆசிரியர் காலில் மட்டுமே விழுந்து பழக்கம் உள்ள நான் முதன் முறையாக ஒரு புகழ் பெற்ற எழுத்தாளர் காலில் விழுந்து ஆசீர்வாதம் பெற்றுக்கொண்டேன்..

சாவி அவர்கள் நகைச்சுவை ரசனை மிக்கவர்.. அதனால் அவர் எனது ஜோக்ஸ் பற்றி ஞாபகமாக பல விஷயங்கள் நினைவு கூர்ந்தார்.. சினிமா விமர்சனம் நன்றாக எழுதுவதாக பாராட்டினார்.. அதில் உள்ள சில நுணுக்கங்களை சொல்லிக்கொடுத்தார்.. 

விகடன் எஸ் பாலசுப்ரமணியன் அவர்கள்

http://www.frontlineonnet.com/fl2024/images/20031205004912402.jpg

தினத்தந்தி, தினமலர் போன்ற நாளிதழ்கள் வெளியிடும் சினிமா விமர்சனம்  முற்றிலும் நடு நிலைமையில் இருக்காது எனவும் வார இதழ்களில் வெகு சில பத்திரிக்கைகளே தயவு தாட்சண்யம் இல்லாமல் நீட்டான விமர்சனம் எழுதும் என்றும் சொன்னார்.. தின நாளிதழ்கள் சினிமா விளம்பரங்கள் வெளியிடுவதால் அவர்கள் படத்தில் உள்ள நல்ல அம்சங்கள் மட்டுமே சொல்வார்கள். மைனஸ் பாய்ண்ட்டை லைட்டாகத்தான் சொல்வாங்க. அதில் இருந்து வித்தியாசப்பட்டு நாம எழுதனும் என்றார்..

மேலும் படத்தின் கதையை ரெண்டே லைனில் சொல்லி முடிச்சிடனும்..  படம் பார்த்தவர்கள் விமர்சனத்தை ரசிச்சு படிக்கும்படியும், படம் பார்க்காதவர்கள் விமர்சனம் படிச்சா படம் பார்க்கும் ஆவலைத்தூண்டும்படியும் இருக்கனும், அதுதான் ஒரு நல்ல விமர்சனத்துக்கான அடையாளம் என்றார்..

அவர் சொன்ன தகவல்களை நான் உள் வாங்கிக்கொண்டேன்... அவரிடம் இருந்து விடை பெற்றுக்கொண்டேன்..

ஜோக்ஸ் எழுதுவதை குறைத்துக்கொண்டு சினிமா விமர்சனத்தில் ஆர்வம் காட்டினேன்..  சாவி வார இதழில் ஒரே ஒரு பக்கம் தான் விமர்சனம் எழுத அனுமதி..  கிட்டத்தட்ட 8 பத்திகள்.. அதற்குள் சொல்ல வந்ததை நறுக் சுருக் என சொல்ல வேண்டும் என்பது சவாலாக இருந்தது.. இப்போது வரும் ஆனந்த விகடன் விமர்சன அளவில் மூன்றில் ஒரு பங்குதான் எழுத முடியும்..

ஒரு படம் பார்க்கும்போது அந்தப்படத்தின் வெற்றி தோல்வியை கணிப்பது கொஞ்சம் கஷ்டமாக இருந்தது.. ஏ செண்ட்டர் ரசிகர்களுடன் அதாவது பால்கனியில் படம் பார்ப்பது ஒரு சினிமா விமர்சகனுக்கு உகந்ததல்ல என்று உணர்ந்தேன்.. ஏன்னா அவங்க அமைதியா படம் பார்த்துட்டு சத்தம் இல்லாம போயிடுவாங்க, ஆனா பி சி ரசிகர்கள் தான் கமெண்ட் அடிச்சு, கை தட்டி ரசனையோட படம் பார்க்கறாங்க.

அதனால நான் எப்போ தியேட்டருக்குப்போனாலும்  செகன்ட் க்ளாஸ் டிக்கெட் தான் எடுப்பேன்.. காட்சிகளின் ஃபீடு பேக் உடனுக்குடன் எனக்கு கிடைச்சிடும்.. அது போக தியேட்டர் இடைவேளையின் போது காண்ட்டீனில் 4 பேர் 4 பேராக சேர்ந்து படத்தை பற்றி கமெண்ட் அடிப்பதை நோட் செய்யத்தொடங்கினேன்..

தியேட்டர் ஆபரேட்டர்கள் விஷய ஞானம் உள்ளவர்களாக இருப்பார்கள்.. அவர்களிடம் கேபின்க்குப்போய் சும்மா பேச்சு குடுப்பேன்.. அவர் படம் எத்தனை நாள் ஓடும், தேறுமா, தேறாதா என்பதை ஓப்பனாக சொல்லி விடுவார்..

கேண்ட்டீன் -ல் வேலை செய்யும் பையன்கள், பைக் ஸ்டேண்ட்டில் பாஸ் போடும் ஆள் என ஒவ்வொருவரிடமும் கருத்து கேட்பேன், ஆரம்பத்தில் அப்படி நாமாக வலிய போய்க்கேட்க கொஞ்சம் தயக்கமக இருந்தது.. கொஞ்ச நாள் போனதும் சரி ஆகி விட்டது , அவர்களே நன்றாக ப்ழகி விட்டார்கள்.. கருத்து சொல்வார்கள்..


ஃபிலிமாலயா, நியூ ஃபிலிமாலயா, இதயம் பேசுகிறது, ஹெர்குலிஸ், தங்கம் , விகடகவி ,சாவி உட்பட 12 வார மாத இதழ்களில் என் சினிமா விமர்சனம் வரத்தொடங்கியது.. இதில் இன்னொரு சிக்கல் ஒரே படத்தின் விமர்சனம் 12 வெவ்வேறு வடிவத்தில், உள்ளடக்கத்தில் தர வேண்டிய நெருக்கடி எனக்கு சவால் நிறைந்ததாக தோன்றியது.. மிக சிரமமாக இருந்தது.

ஒரு வருடம் சமாளித்தேன்.. அது என் கிரியேட்டிவிட்டியை குறைக்கும் அபாயம் இருப்பதாகத்தோன்றியது.. ஜோக்ஸ் எழுதுவதை மீண்டும் தீவிரம் ஆக்கலாமா? என யோசித்த போதுதான் குமுதம் வார இதழில் இருந்து அழைப்பு வந்தது.. 1998 டாப் டென் ஜோக் ரைட்டர்ஸ் ஒரு சந்திப்பு சென்னை ஆஃபீசில் போக வர அனைத்தும் அவர்கள் செலவில்..

நான் துள்ளிக்குதித்தேன்.. ஏன்னா டாப் டென்ல ஒருத்தனா வந்ததுக்காக இல்லை... மீதி 9 பேரை அவங்க செலவில் சந்திக்கலாமே, குமுதம் ஆஃபீசை சுற்றிப்பார்க்கலாமே?

அமரர் சாவி அவர்கள்

http://balhanuman.files.wordpress.com/2010/05/saavi.gif

தமிழ் நாட்டின் நெம்பர் ஒன் ஜோக்  ரைட்டர் வி சாரதி டேச்சு, அம்பை தேவா,பா ஜெயக்குமார் வந்தவாசி,சீர்காழி வி ரேவதி, பாஸ்கி, திருவெண்ணெய் நல்லூர் எஸ் எஸ் பூங்கதிர், இடைப்பாடி ஜெ மாணிக்க வாசகம்,  உ ராஜாஜி, கொங்கனாபுரம் வே செந்தில் அனைவரையும் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்ததே பெரிய வரப்பிரசாதம்..

குமுதம் ஆஃபீசில் என்ன நடந்தது?....

 தொடரும்

டிஸ்கி -1  இந்த பத்திரிக்கை உலக அனுபவங்கள் எழுத காரணமா இருந்த மாத்தி யோசி ஜீவன், நிரூபன் இருவருக்கும் நன்றி.. அவங்க தான் எழுத சொல்லி தூண்டுனாங்க.. மாயவரத்தான் அண்ணனின் கட்டுரை.காம் தளத்தில் இது தொடரா வருது.. அவருக்கும் நன்றிகள்


டிஸ்கி 2 - இந்த கட்டுரையின் முதல்பாகம் படிக்காதவங்க http://adrasaka.blogspot.com/2012/01/1.html


இந்த கட்டுரையின் 2ம் பாகம் -http://adrasaka.blogspot.in/2012/01/2.html  

டிஸ்கி 3 - பதிவுலக சகோ மாய உலகம் ராஜேஷ் அவர்களின் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக வீடு சுரேஷின் விருப்பத்துக்கு இணங்க, நிரூபன் சொன்னது போல் நாளை செவ்வாய் அன்று பதிவுலகின் துக்க நாளாக கடைபிடிப்போம்

http://balhanuman.files.wordpress.com/2010/09/sujatha_raviprakash_saavi.jpg?w=510

26 comments:

கோவை நேரம் said...

வாழ்த்துக்கள்

கோவை நேரம் said...

இனி தான் படிக்க போறேன்

கோவை நேரம் said...

ஆப்கோ ஹிந்தி மாலும் ஹை

கோவை நேரம் said...

அப்போ இடைவேளைகளில் டீ பப்ஸ் வாங்க போக மாட்டீங்க ....

கோவை நேரம் said...

ஓஹோ....சிபிஐ வேலை கூட செய்வீங்களா...அதான் காபின்ல போய் ஆப்பரேட்டர் கூட பேசறது

காங்கேயம் P.நந்தகுமார் said...

ஆமான்னா இப்ப அந்த கொங்காணபுரம் வே.செந்தில்குமார் பற்றி ஒரு தகவலும் காணோம்

காங்கேயம் P.நந்தகுமார் said...

குமுதம் அலுவலகத்தில் நடந்தது என்ன? அடுத்த பதிவிற்காக காத்திருக்கிறேன் ஆவலுடன்

Unknown said...

எங்க நண்பர் இவ்வளவு பெரிய டாப்டக்கர்'னு,முன்னாடியே தெரியாமப் போச்சே! புகழ் மேலும் பெருகட்டும்!

குடந்தை அன்புமணி said...

நல்ல அனுபவங்கள்... பாலசுப்பிரமணியம் சொன்னதை நானும் உள்வாங்கிக்கொண்டேன்...

Admin said...

அனுபவங்களை அசை போடுவது என்பது சுவையான விசயம் தான்.படிக்கும் எங்களுக்கும் சுவைக்கிறது..தொடருங்கள்.

சசிகுமார் said...

மாப்ள மிக சுவாரஸ்யமாக இருக்கு... நெருங்கி இருந்தால் அருமை தெரியாது என்று கூறுவார்கள் அப்படி தான் நானும் இருந்தேன் இப்பொழுது இந்த தொடரின் மூலம் தான் உங்களின் மதிப்பு என்னை போல பலபேருக்கு தெரிய வருது... இவ்ளோ நல்ல அனுபவங்களை வைத்து கொண்டு இவ்வளவு நாள் எழுதாம விட்டுடீங்களே பரவா இல்லை தொடருங்கள் நண்பரே...

அப்புறம் திரட்டிகளில் இணைப்பதில் ஏதேனும் பிரச்சினை உள்ளதா தினமும் திரட்டிகளில் இணைக்காமலே உள்ள பதிவுகள்... பிரச்சினை என்றால் கூறவும்...

ராஜி said...

வாழ்த்துக்கள்

சி.பி.செந்தில்குமார் said...

@சசிகுமார்

இல்ல சசி, எல்லா திரட்டிகளிலும் இணைச்சுட்டேன், எபிக்ஸ் பிரவுசர்ல. ஆனா மற்ரவங்க கண்ணுக்கு இணைக்காதது போல் காட்டுது போல.. வாட் டூ டூ?

rajamelaiyur said...

அருமையான அனுபவ பகிர்வு

Unknown said...

அண்ணே எழிதிட்டே போங்க...தொடர்ந்துகிட்டே வர்றேன்!

Yoga.S. said...

வணக்கம் சி.பி சார்!ஆவலைத் தூண்டும் உரைநடை!வாழ்த்துக்கள்,நன்றி!!!

சென்னை பித்தன் said...

சுவாரஸ்யமான அனுபவங்களை அழகாகப் பகிர்ந்துள்ளீர்கள்.வாழ்ழ்த்துகள்.
நாளை துக்க தினம் அனுஷ்டிப்போம்.

தமிழ்வாசி பிரகாஷ் said...

அண்ணே, அருமையான தொடரா போயிட்டே இருக்கு...

RAMA RAVI (RAMVI) said...

உங்கள் அனுபவங்களை மிகவும் சுவாரசியமாக எழுதியிருக்கீங்க.சினிமா விமர்சனம் எழுதுவதற்கு நீங்கள் கையாளும் உத்திகளை அருமையாக சொல்லியிருக்கீங்க.சிறப்பான பதிவு.

கடம்பவன குயில் said...

அருமையான நடையில் அழகான அனுபவ பகிர்வு. நீங்கள் கடந்துவந்த பாதைகளும் தாண்டி வந்த தடைகளும் உங்களின் திறமைகளும் பிரமிக்க வைக்கின்றன. தொடருங்கள்! தொடர்கிறோம்!!

முத்தரசு said...

தொடர்கிறேன்..........

Anonymous said...

படிக்க படிக்க பிரமிப்பா இருக்குங்க சிபி சார், சும்மா எதையோ கிருக்கிட்டு இஙக ஆட்டம் போடரவங்க எத்தனை பேர், ஆனா நீங்க so great sir....

Anonymous said...

என்னை ஏன் எழுதரதில்லனு கேட்டு இருக்கீங்க என் ப்லொக்ல, நான் பொதுவா பதிவுகல படிகரதுக்குதான் வங்தேன், ஒரு அடயாலத்துக்குதான் பிளாக் எல்லாம், உஙகள் மாதிரி ஜாம்பவான்கள் எழுதர இடத்துல நான் என்ன் எழுதரது, நான் அந்த அள்வு worth இல்ல சார், இன்னும் நிரய படிக்கனும், அப்புரம் எழுதாலம்.

காட்டான் said...

தொடருங்கள் அருமையாக இருக்கின்றது. வாழ்த்துக்கள்!!

கலையன்பன் said...

எழுதிட்டே போங்க. அருமை.

'பத்திரிக்கை' அல்ல; பத்திரிகை.

vetha (kovaikkavi) said...

நாளை செவ்வாய் (எந்த செவ்வாய்? ஏன் திகதி போடவில்லை)மாய உலகம் ராஜேஸ் துக்க தினம்.-இது தெரியாததால் கவலையாக இருந்தது. நான் ராஜேஸ்சை றெஸ்பெக்ட் பண்ணுகிறேன். இது நிற்க.
பாகம்3 வாசித்திட்டேன்.
பொது மக்களோடு மக்களாக தகவல் சேகரித்த விதம்..சந்திப்புகள் பிரமிப்பாக உள்ளன. வாழ்த்துகள். ஒரே நாளில் 3ம் பார்த்தேன் மறுபடி எப்போதோ தெரியாது . பார்ப்போம்
வேதா. இலங்காதிலகம்.
http://kovaikkavi.wordpress.com