Thursday, February 16, 2012

பொன்னியின் செல்வன் எடுக்க திராணி இருக்கா? ஷங்கர் தில் பேட்டி -காமெடி கும்மி பாகம் 2

http://roborajini.com/wp-content/uploads/2010/09/Shankar-director-tamil.jpg 

1. 'மாட்டிக்கிட்டீங்களா... உங்கள் ஹீரோக்களில் 'தி பெஸ்ட்யார்? ஹீரோயின்களில் 'தி பெஸ்ட்யார்? நழுவாதீர்கள்... நச்சுனு பதில் சொல்லுங்கள்..?''

சி.பி - அண்ணன் கமல் கூட இந்தியன் பண்ணுனப்ப யாமறிந்த நடிகர்களில்  கமல் போல் இனிதானது எங்கும் காணோம்னாரு, ரஜினி கூட எந்திரன் பண்றப்ப ரஜினி தான் மாஸ், வேற யாரு பாஸ்? அப்டினு பிளேட்டை திருப்பி போட்டாரு.. சினிமா லைஃப்ல இதெல்லாம் சாதாரணமப்பா..

 
 ''ரஜினிஹாசன்,  ஐஸ்வர்யா ராய்!''



2. ''மாஸ் ஹீரோ, புதிதாக வந்த கிளாமர் ஹீரோயின், மிகப் பெரிய பட்ஜெட், சமூக அக்கறை என்ற கோட்டிங் தடவிய மசாலா கதை, பரவலாகப் பாமரனுக்குத் தெரியாத சில விநோத விஷயங்கள்  ('இந்தியன்களரி, 'அந்நியன்கருட புராணம், 'சிவாஜிஹவாலா), சில மாடர்ன் டிஜிட்டல் பாடல்கள் (கண்ணும் கண்ணும் நோக்கியா, ஷக்கலக்க பேபி, முக்காலா முக்காபுலா), கர்னாடக சங்கீதத்தில் சில மெலடிப் பாடல்கள் (என் வீட்டுத் தோட்டத்தில், குமாரி, பச்சைக் கிளிகள், அழகான ராட்சசியே), ஒரு டண்டணக்க தெலுங்கு பீட் பாடல் (உப்புக் கருவாடு, பேட்ட ராப், ரண்டக்க ரண்டக்க, உசிலம்பட்டி), கலர் கலராக விரியும் திரை அமைப்பு (நெதர்லாந்து ட்யூலிப் தோட்டம், 100 டி.வி-க்களை ஒன்றாகக் காட்டுவது, சி.ஜி. மூலம் பூக்கள் பூப்பது), ஃபேன்டஸி கிராஃபிக்ஸ் நிறைந்த சண்டைக் காட்சிகள் (மேட்ரிக்ஸ் பாணி 'அந்நியன்சண்டை, ரோபாட் பாணி 'எந்திரன்சண்டை), யாரும் பார்த்து இருக்காத அசத்தல் லொகேஷன், பத்திரிகை, டி.வி. விமர் சனங்கள் வெளிவரும் முன்னரே 'கார்ப்பெட் பாம்பிங்முறையில் ஏகப்பட்ட பிரின்ட்கள் போட்டு, முதல் சில நாட்களிலேயே பணத்தை அள்ளும் உத்தி... இதுதானே 'ஷங்கர் ஃபார்முலா!’ 'காதலன்முதல் 'எந்திரன்வரை இந்த ஃபார்முலாவிலேயே கமர்ஷியல் கலக்கிக்கொண்டு இருக்கிறீர்களே... எப்போதுதான் இதில் இருந்து வெளியே வருவீர்கள்? விடையாக... 'நண்பன் ரீ-மேக்என்று சொல்லக் கூடாது... சென்சிபிள் பதில் தேவை ஷங்கர்ஜி!''

சி.பி - கேள்வி கேளுய்யான்னா ஒரு கட்டுரையே வரைஞ்சு வெச்சிருக்கு..?

 ''ஏ... அப்பா... திரும்பத் திரும்பப் பார்த்து, இவ்வளவு விஷயங்களை ரசிச்சு,  ஒண்ணுவிடாம எல்லாம் ஞாபகம் வெச்சுக்கிட்டு, இதுலேருந்து எப்போ வெளியே வருவேன்னு கேக்கறீங்களே... இது உங்களுக்கே நியாயமா இருக்கா?
பிடிக்கலேன்னா... நடுவிலயே என் படங்களை விட்டுட்டு வேற படங்களைப் பாத்திருக்கலாமே?! ஏன் 'நண்பன்வரைக்கும் ஒண்ணுவிடாம நல்லாப் பாத்துட்டு, இப்படி மூச்சு இரைக்க இரைக்க பிரமாண்டமாக் கேள்வி கேட்கிறீங்க?''



http://reviews.in.88db.com/images/kala-sankar-rajini.jpg

3. ''உங்களுடைய முதல் சில சினிமாக்களில் விழுந்த 'பிரமாண்ட இயக்குநர்முத்திரையைத் தக்கவைக்கவே இப்போதும் அதிக பட்ஜெட்டில் படங்கள் இயக்குகிறீர் களா?''



சி.பி - அண்ணனைப்பற்றி சரியாத்தெரியல போல.. அடுத்தவன் காசுன்னா அண்ணன் அள்ளி விடுவாரு, சொந்தக்காசுன்னா எண்ணி எண்ணி செலவு செய்வாரு. இவர் தயாரிப்பில் வந்த காதல்,வெய்யில் எல்லாம் ரொம்ப லோ பட்ஜெட் படங்களே, இம்சை அரசன் மீடியம் பட்ஜெட், ஆனா வசூலை அள்ளீட்டாரு 


 ''என் ஒவ்வொரு படத்திலும் ரசிகர் களுக்கு நல்ல விருந்து படைக்கவே முயற்சிக்கிறேன். அந்த ரசிகர்கள் அடுத்தப் படத்துக்கு வரும்போது, அதுக்குச் சமமான விருந்தையோ, அதைவிடச் சிறந்த விருந்தை யோதான் எதிர்பார்த்து வருவாங்க. அவங்க எதிர்பார்ப்பை ஏமாத்திடாம நான் நிறை வேத்தியாகணும். அப்படி ஒரு விருந்துக்கு என்ன பட்ஜெட் ஆகுதோ, அதான் பட்ஜெட்!''





4. ''மணிரத்னமே கைவிட்ட 'பொன்னியின் செல்வன்புராஜெக்ட்டை பிரமாண்ட மாகவும் நேர்த்தியாகவும் எடுக்கக் கூடியவர் நீங்கள் மட்டுமே என்பது என் எண்ணம்... அப்படி ஒரு 'மேக்னம் ஓப்பஸ்எடுக்கத் துணிச்சல் இருக்கிறதா?''

சி.பி - அண்ணன் எடுக்க ரெடி. கையை  சுட்டுக்க எந்த தயாரிப்பாளர் ரெடி? ஏன்னா அந்தப்படம் எடுத்தா சூப்பர் ஹிட் ஆனாக்கூட போட்ட காசை எடுக்க முடியாது. பட்ஜெட் அள்ளிக்கும்.. 

 ''நீங்க எம் மேலவெச்சிருக்கிற நம்பிக்கைக்கு மிக்க நன்றி!
'எந்திரன்படத்தப்போ எழுத்தாளர் சுஜாதாவோட பேசும்போது, 'இதுக்கு நேர் எதிரா ஒரு பீரியட் படம் - 'பொன்னியின் செல்வன்’ - பண்ணா எப்படி இருக்கும்?’னு கேட்டேன். 'ரொம்ப நல்லாருக்கும். பண்ணுங்க ஷங்கர்னு சொன்னார். அதுக்கு முன்னா டியே எப்பவோ ஏதோ தோணி, 'பொன்னியின் செல்வன்அஞ்சு பாகமும் வாங்கிவெச்சிருக்கேன்.

ஜனவரி 23, என் திருமண நாளன்று மனைவியின் விருப்பத்துக்காக நங்கநல்லூர் ஆஞ்சநேயர் கோயிலுக்குப் போயிருந்தேன். அங்கே வந்திருந்த மதிக்கத்தக்க பெரியவர் ஒருத்தர் என் கைகளைப் பிடிச்சிக்கிட்டு, 'எனக்கு ரொம்ப நாள் ஆசை... நீங்க 'பொன்னியின் செல்வன்கதையைப் படமா எடுக்கணும்னு உங்களை மாதிரியே தன் விருப்பத்தைத் தெரிவிச்சார். மனசிலும் மண்டையிலும் விதை விழுந்திருக்கு. அது முளைச்சு பெரிசாகி முட்டுமேயானால், எந்த சமரசமும் இல்லாம சர்வதேசத் தரத்தில் இதைத் தயாரிக்க யாராவது ஆர்வம் காட்டினா, சந்தோஷமா எடுப்பேன்!''


 சி.பி - அண்ணே, நீங்க தயாரிங்கண்ணே... பார்க்கலாம்.. வாய்ல இருந்து ஒரு பேச்சுக்காவது டைம் கிடைக்கறப்ப இதை நானே பண்றேன்னு சொல்லுங்க பார்க்கலாம்.. 




5. ''பாடல் காட்சிகளில் கிராமம், பாலம், ரயில் என எதைப் பார்த்தாலும் பெயின்ட் அடித்துவிடுகிறீர்களே... அது ஏன் சார்?''

 சி.பி - ஹா ஹா இது பாயிண்ட் .. அண்ணன் இப்போ சமாளிப்பார் பாருங்க.. 




''எல்லாம் ஒரு 'கலைவெறிதான். அந்த மெகா மெகா கிரியேட்டரைப்  பாருங்க. வானத்துக்கு நீலம்; மேகத்துக்கு வெள்ளை; பூமிக்குப் பச்சை; பூக்கள், வண்ணத்துப்பூச்சி, மீன்கள்னு எல்லாத்துக்கும் எப்படி எல்லாம் விதவிதமா அற்புதமா பெயின்ட் அடிச்சி ருக்காரு... நான் ஒரு துக்ளியூண்டு சினிமா கிரியேட்டர். ஏதோ என்னால முடிஞ்சதுக்கு எல்லாம் பெயின்ட் அடிச்சுட்டு இருக்கேன். இன்னும் கப்பலும் ஏரோப்ளேனும் பாக்கி இருக்கு!''


சி.பி - அண்ணே, ஷங்கர் அண்ணே, வெய்யில் படத்துல உங்க கலை வெறி காணாம போச்சே ஏண்ணே?


http://www.indiazooms.com/wp-content/uploads/2010/07/Endhiran-Wrap-up.jpg

6. ''உங்கள் படங்களில் கதையின் பிரச்னைகளில் ஆழம் போகாதது, வெற்று பிரமாண்டம், மாஸ் ஹீரோக்கள்... இந்தக் காரணங்களைவைத்தே நீங்கள் பெயர் வாங்கிவிடுகிறீர்கள் என்கிறேன். சரியா சார்?''


''ஆழமோ, அகலமோ, நீளமோ... கதைங்கிற அஸ்திவாரம் சரியில்லைன்னா... வெற்று பிரமாண்டம், மாஸ் ஹீரோக்கள்னு எதுவுமே வொர்க்-அவுட் ஆகாதுங்கிறது உங்களுக்கே தெரியும். அப்படி எல்லாம் கோடிக்கணக்கான ஆடியன்ஸை ஏமாத்திட முடியாது. சரியா சார்?''

சி.பி - அண்ணன் யாரையும் ஏமாத்த மாட்டார்.. அவர் படத்துல பேசிக் கதை ஊழல் எதிர்ப்பு, ராபின்ஹூட் பிழைப்பு என்று ஒரே ஃபார்முலாவா இருக்கலாம், ஆனா ஹீரோ வேற , மைண்ட் இட். ஹி ஹி 


7. ''உங்களுடைய 'ஜென்டில்மேன்’, 'முதல்வன்’, 'இந்தியன்படங்கள் எனக்கு ரொம்பப் பிடிக்கும். அவை போன்ற அழுத்தமான பதிவுகளாக 'அந்நியன்’, 'சிவாஜிஇல்லை என்பது என் கருத்து, இதற்குத் தங்களின் பதில்?''


  ''ஒரு படத்தோட இன்னொரு படத்தை ஒப்பிட்டுப் பார்க்கக் கூடாது. இதில் இருக்கிற சில விஷயங்கள் அதில் இருக் காது, அதில் இருக்கிற சில விஷயங்கள் இதில் இருக்காது.

சமீபத்தில் கிரிக்கெட் வீரர் ஸ்ரீகாந்த்தை அவர் மகன் அனிருத் திருமணத்தில் சந்தித்தபோது, 'உங்க படங்கள்ல ரொம்பப் பிடிச்ச படம் அந்நியன்னு சொன்னார். பல பேர், என்னோட பெஸ்ட் 'எந்திரன்னு சொல்றாங்க. ரஜினி ரசிகர்கள் சில பேர், எந்திரனைவிட 'சிவாஜிதான் பெஸ்ட்னு சொல்றாங்க.

ரசூல் பூக்குட்டி, 'பாய்ஸ்தான் பெஸ்ட்ங்கிறாரு.

'இந்தியன்தான் டாப்...’
''முதல்வன்தான் சூப்பர்...’
'உங்க முதல் படத்தை அடிச்சுக்கவே முடியாது...’
'இதுவரைக்கும் நீங்க பண்ணதுலயே 'நண்பன்தான் பெஸ்ட்னு இப்ப சொல் றாங்க.
ஒவ்வொரு மனுஷனுக்கும் ஒவ்வொரு ஃபீலிங்!''


சி.பி - அண்ணே, நீங்க சொன்னது எல்லாம் சரிதான், ஆனா பாய்ஸ் படம் பெஸ்ட்னு ரசூல் பூக்குட்டி சொன்னாரே அதுதான் செம காமெடி.. 


8. ''பார்க்க சுவாரஸ்யமாகத்தான் இருக்கிறது. ஆனால், உங்கள் படங்களில் ஒவ்வொரு பாடலுக்குமே மினிமம் பட்ஜெட் படத்துக்கான செலவு செய்வது என்பது தேவைதானா? படத் தயாரிப்புச் செலவு குறைந்தால், அது விநியோகஸ்தர்கள், தியேட்டர் அதிபர்கள் லாபம் அதிகரிப்பதில் தொடங்கி குறைந்த விலைக்கு டிக்கெட் என முதல் சீட் ரசிகர் வரை பயன் அடை வார்கள் என்ற தொலைநோக்குப் பார்வை ஏன் இல்லை உங்களிடம்?''


 ''பார்க்க சுவாரஸ்யமாத்தான் இருக்குனு தலையைத் தடவிக் கொடுத்துட்டு அப்புறம் ஏன் குட்டுறீங்க?
ஏழு உலக அதிசயங்கள்... பெருநாட்டு மச்சு பிச்சு... பிரேசில் பாலைவனம்... ஆஸ்திரேலியா ஹார்பர் பிரிட்ஜ்... ஆம்ஸ்டர்டாம் டூலிப் தோட்டம்... ஸ்பெயின் கிரிஸ் டல் பேலஸ்... சம்பா டான்ஸ்... பெல்லி டான்ஸுன்னு எல்லாத்தையும் நீங்க 50 ரூபா, 100 ரூபானு மினிமம் பட்ஜெட்ல இங்கு இருந்தே பார்க்கணும்கிற தொலைநோக்குப்பார்வை என்கிட்ட இருக்கு. இதனால் அதிக லாபம், தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள், தியேட்டர் அதிபர்களுக்கு மட்டுமல்ல; உங்களுக்கும்தான்கிற தொலைநோக்குப் பார்வை ஏன் இல்லை உங்ககிட்ட...?
(சென்னையைச் சேர்ந்த பஞ்சநாதனுக்கு நான் சொன்ன பதிலையும் படிங்க).''



சி.பி - அப்புறம் எப்படி அண்ணன் அடுத்தவங்க காசுல உலகத்தை சுத்தி பார்க்கறது? தன் தயாரிப்புன்னா ஷூட்டிங்க்கை ஒரு கிராமத்துல வை, அடுத்தவன் காசுன்னா ஷூட்டீங்கை மலேசியா ஹாங்க்காங்க், சிங்கப்பூர்னு வை - இதுதான் இப்போ எல்லார் பாலிசியும்..  


http://600024.com/files/2010/04/Endhiran.jpg


9. ''உங்களுடைய படங்களில் டாப் 3 என்பது 'இந்தியன்’, 'முதல்வன்’, 'ஜென்டில்மேன்என்பது என் கருத்து, சரிதானே ஷங்கர்?''


 ''உத்தமபாளையம் ரோகிணிக்கு சொன்ன பதிலைப் படிங்க உதயகுமார்!''

தொடரும்.. 


- அடுத்த வாரம்...

''உங்களுடைய பெரும்பாலான ஹீரோயின்கள் அதற்கு முன் மணிரத்னம் படங்களில் நடித்திருக்கிறார்கள். 'ரோஜா’ - 'ஜென்டில்மேன்’, 'இருவர்’ - 'ஜீன்ஸ்’, 'உயிரே’ - 'இந்தியன்’, 'முதல்வன்’... இது என்ன சென்டிமென்ட்?''
''உலக அதிசயங்களில் நீங்கள் வியந்து ஆச்சர்யப்பட்ட உலக அதிசயம் எது? ஏன்?''


'''நண்பன்நீங்கள் இயக்கிய படம் என்பதை மறந்துவிட்டு, விகடன் விமர்சனக் குழு அந்தப் படத்துக்கு அளித்த மதிப்பெண் கள் சரிதானா என்று சொல்லுங்கள்... எனக்கென்னவோ அவர்கள் 'வைரஸ் பிரின்சிபல்போல மிகவும் ஸ்ட்ரிக்ட்டாக நடந்துகொண்டார்கள் என்று தோன்று கிறது?''


-  இன்னும் பேசலாம்...

7 comments:

கோவை நேரம் said...

மதிய வணக்கம்

கோவை நேரம் said...

கேள்விகள் அனைத்தும் அருமை..(சத்தியமா நீங்க கேட்கல )..கமென்ட் அருமை

Unknown said...

சார் ரூட்டை மாத்துங்க...போரடிக்குது....ஹிஹி

கும்மாச்சி said...

ஷங்கர் பதிலைவிட சி.பி. பதில்தான் கேள்விக்கு நச்சுன்னு உட்காருது.

ராஜி said...

உங்க கமெண்ட் நச்சுனு இருக்கு

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

முதல்வன் அண்ணனோட சொந்தபடம்தான்

எழிலருவி said...

you are complaining about the budget of his own films frequently.But the producers, who have to worry about that are doing there part without any hesitation. Because they know that they can get back their money with a considerable profit. Shankar may not have that much of money to invest in his own film. Therefore he has to go for the producers who have the potential to bear the budget.