Tuesday, January 03, 2012

பதினெட்டான்குடி - சிங்கம்புலியின் காமெடியை நம்பி - சினிமா விமர்சனம்

http://tamildigitalcinema.com/wp-content/uploads/2011/12/Pathinettan-kudi-wall-papers-5.jpgகன்னி ராசியை (பிரபு, ரேவதி ) மறந்தவங்க கூட ஆண் பாவத்தை மறக்க முடியாது,காதல் கசக்குதய்யா புகழ் ஆர் பாண்டியராஜன்க்கு பர்சனலா ஒரு அட்வைஸ் சொல்லி இந்த விமர்சனத்தை ஆரம்பிக்கறேன், எஸ் ஏ சி பாருங்க, விஜய்க்கு எவ்ளவ் சப்போர்ட் பண்றாரு.. அவர் கம்முனு இருந்தாலும் தேரை இழுத்து தெருவுல விடற மாதிரி அரசியலுக்கு அவரை இழுத்துட்டு வராம ஓய மாட்டார் போல.. ஆனா நீங்க உங்க பையனுக்கு என்ன செஞ்சீங்க? அவர் படம் ரிலீஸ் ஆகி இருக்கு, போஸ்டர்லயாவது அட்லீஸ்ட் ஆர் பாண்டியராஜன் -ன் மகன் பிருத்வி நடிக்கும்னு போட வேணாம்...?

படத்தோட கதை கிடக்குது கழுதை , கதை ஓட்டத்துக்கு என்ன பண்ணலாம்னு டைரக்டர் கண்ல சிக்குனது களவாணி கதையும், நாடோடிகள் செகண்ட் ஆஃபும்.. ஆனா இவர் என்ன பண்ணி இருக்கனும்னா படத்துல கதை கம்மி, சதையும் கம்மி (!!!) அதனால காமெடி போர்ஷன் கலக்கலா அமைச்சுட்டாலே படம் ஓக்கே ஆகிடும்னு 10 பேரை உக்கார வெச்சு ஸ்டோரி டிஸ்கஷன்ல ஆளுக்கு 2 ஐடியா குடுங்கன்னு 10 புரோட்டா வாங்கி கொடுத்தாலே போதும்.. ஆனா இப்போ வர்ற புது டைரக்டர்ங்க எல்லாம் கதை , திரைக்கதை , வசனம், பாடல்கள் இசை எல்லாம் நம்ம பேர் தான் வரனும்கற பேராசைல  யாரையும் மதிச்சு டிஸ்கஷன் உக்கார்றதே இல்லை
ஹீரோ பிருத்வியும் அவர் கூட்டாளி நண்பர்கள் 3 பேரும் சிங்கம்புலியின் சாமியானா பந்தல் போடும் காண்ட்ராக்டர் கடைல வேலை செய்யறவங்க ,அவங்க ஊர்ல சாவு விழுந்தாலும் சரி , சில்ஃபான்சிங்க சடங்குக்கு உக்காந்தாலும் சரி பந்தல் போட இவங்க தான் போவாங்க.. 

http://www.sivajitv.com/application/images/gallery/small/139/37.jpg

ஹீரோயின்க்கு 15 வயசு எட்டாங்கிளாஸ் படிக்குது.. யாரும் பயப்படாதீங்க, கதைப்படி தான் பாப்பாவுக்கு வயசு 15 , ஆனா உண்மைல 18 டூ 20 இருக்கும் ( பர்த் சர்ட்டிஃபிகேட் பார்த்தியா?ன்னு எடக்கு மடக்கா கேக்கக்கூடாது , எல்லாம் ஒரு உத்தேசமா, குத்து மதிப்பா சொல்றதுதான் )

ஹீரோயின் வீட்ல ஒரு பெருசு சொர்க்கத்துக்கு டிக்கெட் வாங்கிடுது.. பந்தல் போட வந்த ஹீரோ ஹீரோயினை பார்த்து லுக் விடறாரு.. அடுத்த நாளே பாப்பா வயசுக்கு வந்துடுது. மறுபடியும் ஹீரோ & கோ அங்கே ஆஜர்.. 2 பார்வைலயே செட் ஆகிடுச்சு.. அடங்கோ.. 

அப்புறம் காமெடி பாருங்க ஹீரோயினுக்கு ஒரு தங்கச்சி.. அதாவது ஹீரோவுக்கு மச்சினி.. அதுக்கு வயசு 12, அதுவும் வயசுக்கு வந்துடுது ( அட போங்கப்பா ) மறுபடியும் ஹீரோ ஹீரோயின் லுக் காதல் கண்றாவி எல்லாம் நடக்குது.. ( நீங்க நினைக்கற கண்றாவி இண்ட்டர்வெல்க்கு அப்புறமா)


என்னடாது படம் ஜாலியா போய்ட்டு இருக்கேன்னு யோசிக்கறப்ப ஹீரோயினோட முறை மாமன் வில்லனா வர்றான்.. அமைதிப்படைல சத்யராஜை பயமுறுத்துன ஜோசியர் மாதிரி வில்லனை இங்கேயும் ஒரு ஜோசியர் பயமுறுத்தறார் , அதாவது இன்னும் 10 நாள் தான் டைம், அதுக்குள்ள மேரேஜ் பண்ணிக்கலைன்னா ஜென்மத்துக்கும் மேரேஜே நடக்காதுன்னு , நானா இருந்தா ஐ ஜாலின்னு விட்டிருப்பேன்.. ஆனா வில்லன் உடனே பரிசம் போடறார்.. 

ஹீரோயின் ஹீரோ கிட்டே மேட்டரை சொல்றார், அவங்க 2 பேரும் எஸ் ஆகறாங்க  டட்டடய்ங்க் இடைவேளை.. இதுக்குப்பிறகுதான் கதை சூடு பிடிக்கறதா . டைரக்டர் நினைச்சுட்டாரு.. அதாவது இப்போ ஹீரோயினுக்கு 18 வயசு கம்ப்ளீட் ஆக 6 நாள் டைம் இருக்கு. 6 நாள் தலை, கால், உடல் எல்லாம் மறைவா இருக்கனும்.. 

http://img1.dinamalar.com/cini/ShootingImages/14235722467.jpg

வில்லன் கோஷ்டிங்க 25 ஜீப்ல ஆட்களோட துரத்தலாம்னு கிளம்பலை, ஏன்னா இது லோ பட்ஜெட் படம், அதனால் ஒரே ஒரு ஜீப்ல அவங்க , இன்னொரு டாட்டா ஏஸ் ஆட்டோல ( சின்ன யானை) ஹீரோ, ஹீரோயின், & கோ போறாங்க.. எப்படி மேரேஜ் நடக்குது, அதுக்கு முன்னாடியே எப்படி ஃபர்ஸ்ட் நைட் நடக்குதுங்கறதுதான் கதை..

படத்தோட மெயின் ஆள் டைரக்டர் கம் காமெடியன் சிங்கம்புலிதான்,, அவருக்கு வாய்ஸ் மாடுலேஷன், டயலாக் டெலிவரி எல்லாம்  செமயா வருது.. படத்தை கொஞ்சமாச்சும் போர் அடிக்காம கொண்டு போறது அவர் தான்.. ஆங்காங்கே சொந்த டயலாக்ஸ் பேசி அப்ளாஸ் வாங்கறார்/...
பிருத்விதான்  ஹீரோ.. என் உயிர்த்தோழன் பாபு மாதிரி கெட்டப்ல வர்றார்.. பாஸ் மார்க் தரலாம்.. அப்பாவோட சாயல் எதுவும் இல்லாம இருக்கறது பலமா ? பலவீனமா?ன்னு அடுத்த படத்துல தான் தெரியும்.. ( சப்போஸ் அடுத்த படத்துல சான்ஸ் வந்தா .. )

ஹீரோயின் ஸ்ரீநிஷா.. ரவுண்டு ஃபேஸ்.. 50 மார்க் தான் தேறும்.. படம் முழுக்க அப்பாவி மாதிரி முகத்தை வெச்சுட்டு, பாடல் காட்சிலயும், அந்த காட்டு வாசிக கில்மா காட்சில மட்டும் நல்லா விளைஞ்ச கட்டை போலவும் ஃபேஸ் எக்ஸ்பிரஷன் குடுக்குது..

வில்லனா வர்றவர்க்கு ஒரு வார்த்தை .. டேய் டேஏஏஎய்னு கத்தறது மட்டும் வில்லத்தனம் இல்ல.. 

ஹீரோயின் ஃபேமில வர்ற எல்லாருமே எதார்த்தமான நடிப்பு. முடிஞ்சவரை எல்லாம் புதுமுகங்களா போட்டிருக்காரு டைரக்டர்.. வெல் செட்.. 

http://gallery.southdreamz.com/cache/actress/srinisha/download-pathinettan-kudi-audio-launch-stills-26_720_southdreamz.jpg

இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள்

1. சி செண்ட்டர் ரசிகர்களுக்குப்பிடிச்ச மாதிரி திரைக்கதை அமைச்சு முதல் பாதி காதல் கலாட்டா , பின் பாதி சேசிங்க்- காமெடி கலாட்டா என  கொண்டு போன விதம்.. 

2. சிங்கம்புலியை சுத்தியே கதை போற மாதிரி சாமார்த்தியமா காட்சிகளை அமைச்ச விதம்.. 

3. ஹீரோயினுக்கு தோழிகளா வர்ற 3 ஜிகிடிகள் ,ஹீரோயின் தங்கை என நல்ல லட்சணமான பொண்ணுங்களை அப்பாயிண்ட் பண்ணுனது..

4. கிராமங்களில் நடக்கும் விசேஷங்கள், காது குத்து வைபவங்கள் என மண் மணம் மணக்க சொன்னது , பாதிபடம் விசேஷங்களை காட்டியே படத்தை ஓட்டிட்டாரே?


http://www.mysixer.com/wp-content/gallery/pathinettan-kudi-ellai-aarambam/padhinettan-kudi-ellai-aarambam-21.jpg
இயக்குநர் கவனிக்கத்தவறிய லாஜிக் மிஸ்டேக்ஸ்

1. என்ன தான் கிராமம் ஆகட்டும், பந்தல், சேர்கள் 100, பெட்ஷீட், குடை என எல்லாம் வேன்ல கொண்டு போய் 4 ஆட்கள் வேலையும் செய்ய ரூ 600 தான் சார்ஜா? ரொம்ப கம்மியா இருக்கே? நகரங்களில் அதற்கு ரூ 6000 சார்ஜூம், கிராமங்களில் அதற்கு ரூ 3000 சார்ஜும் பண்றாங்க

2. பொதுவா பொண்ணுங்க வயசுக்கு வந்து குடிசைல உக்கார வெச்சா மினிமம் 9 நாட்கள் வெளீல வரக்கூடாது, மேக்சிமம் 11 நாட்கள், ஆனா ஹீரோயின் சடங்குல உக்காந்த அன்னைக்கே அதே விழாவுல வந்த ஜனங்களுக்கு பந்தி பரிமாறுது.. ஹீரோயின் ஹீரோ சந்திப்புக்காக போட்ட திட்டம் தான் ஆனாலும் இது தப்பு தான் ஹி ஹி ( கிராமங்களில் அப்படி பொண்ணை பந்தி பரிமாற விட மாட்டாங்க )

3.  ஹீரோயின் படத்துல ஸ்கூல்ல இருக்கற மாதிரி எல்லா காட்சிலயும் ஸ்கூல் யூனிஃபார்ம்லயே இருக்கு, ஆனா வில்லன் பொண்ணு பார்க்க வர்றப்ப : இருங்க பொண்ணு ஸ்கூல்ல இருந்து இன்னும் வர்லை, வந்துடுவா”ன்னு அப்பா சொல்றாரு, அப்போ ஹீரோயின் அன்யூனிஃபார்ம்ல வருது.. ( ஸ்கூலுக்குப்போறப்ப யூனிஃபார்ம், வர்றப்ப சிவில் டிரஸ்?)

4.  ஒரு சீன்ல ஹீரோவோட ஃபிரண்ட் சரியான பசின்னு வயக்காட்ல இருக்கற கரும்பை சாப்பிடறார்.. கிராமத்துல இருக்கறவங்களுக்கு கரும்பு ஜீரண சக்தியை அதிகரித்து பசியை மேன்மேலும் உண்டாக்கும்னு தெரியாதா? வயல்ல, தோட்டத்துல சாப்பிட வேற திங்க்ஸா இல்ல?

5.  கதைப்படி ஹீரோயின் வயசு சான்றிதழ்க்கு ரேஷன் கார்டு வேணும்.. வேலைக்காரி ரேஷன் கார்டுல அரிசி வாங்கறதா காட்றாங்க.. அரிசி வாங்கற ரேஷன் கார்டு மஞ்சள் அல்லது பச்சை கலர் தான்.. ஆனா லைட் ப்ளூ கலர்ல காட்டறாங்க

http://www.cenimaz.com/wp-content/uploads/2011/12/Pathinettan-kudi-stills.jpg

6. ஹீரோயின் பட்டு சேலை கட்டிட்டு வெறும் கையை வீசிட்டுதான் வருது, ஹீரோ & கோ கூட காட்டுல 4 நாட்கள் தங்குது, ஆனா கன கச்சிதமா மேட்ச் ஜாக்கெட்டோட இருக்கு..2 செட் தாவணி செட்  கடைல வாங்குனாலும் சுடி தானே வாங்க முடியும்? டெய்லர்ட்ட குடுத்து தைக்கவும் நேரம் இருக்காதே?

7. ஒரு ஸீன்ல ஸ்கூல் கேட் பூட்டி இருக்கு, வாட்ச்மேன் ஹீரோ & ஹீரோயினை துரத்தி விடறார்.. அப்போ உள்ளே இருந்து ஒரு டீச்சர் எட்டி பார்த்து அவங்களை உள்ளே அனுப்புங்கன்னு சொல்றாங்க.. யாருமே இல்லாத ஸ்கூல்ல அந்த டீச்சர் என்ன பண்றாங்க? அவங்க எப்படி ஹெச் எம் இல்லாம டி சி தர்றாங்க?

8. வில்லனோட ஆட்கள் 2 பேரு ஸ்கூல்  வாசல்ல நிக்கறாங்க, அவங்க பிளான் என்னன்னா ஹீரோ ஹீரோயினின் டி சி வாங்க வந்தா தடுக்கனும்.. ஹீரோ அவங்களை டபாய்ச்சுட்டு டி சி வாங்கிடறார்.. எனக்கு என்ன டவுட்னா ஹீரோ எப்போ வருவான்னு தேவுடு காத்துட்டு இருக்காம வில்லன் ஆட்கள் நேரா ஸ்கூல்க்குள்ளே போய் ஹீரோயின் டி சி குடுங்கன்னு இவங்க முன்னால முந்தி இருக்கலாமே?

9. ஹீரோயின், ஹீரோ தனிமைல கில்மா நடத்திடறாங்க, அந்த மேட்டர் எல்லார்க்கும் தெரிஞ்சுடுது.. கில்மா நடந்த அடுத்த நாளே ஹீரோயின் வாமிட் எடுக்கறா.. உடனே எல்லாருக்கும் டவுட், மருத்தவச்சியை கூட்டிட்டு வந்து செக்கப் பண்றாங்க , எப்படியும் 17 நாட்கள் ஆகும்ப்பா வாமிட்க்கு 

10.  க்ளைமாக்ஸ்ல செம காமெடி.. எல்லா எதிர்ப்புகளையும் சமாளிச்சுட்டு வில்லன் ஹீரோயின் கழுத்துல தாலி கட்டற கடைசி செகண்ட்ல ஹீரோ எண்ட்டர் ஆகி நிறுத்துன்னு சொன்னதும் வில்லன் டக்னு  ரிமோட்டால் ஃப்ரீஸ் செய்யப்பட்ட டி வி மாதிரி அப்படியே அசையாம ஆன்னு வேடிக்கை பார்க்கறான் , நானா இருந்தா சட் புட்னு தாலியை கட்டி இருப்பேன்

11. இதை சொல்ல  கொஞ்சம் சங்கடமா இருக்கு, இருந்தாலும் நிறைய பேரு இதே தப்பை பண்றாங்க.. அதாவது கதைப்படி காட்டு வாசிங்க டான்ஸ்.. அதுல பொண்ணுங்க எல்லாம் ஜாக்கெட் போடாம முதல் மரியாதை ராதா கணக்கா டேன்ஸ் ஆடுதுங்க, ஆனா எல்லார் முதுகுலயும் பிரா பட்டை இருந்த தடம்  அப்பட்டமா காட்டுது.. இதை அவாய்டு பண்ண அந்த க்ரூப் டேன்சர்ஸ் கிட்டே 4 நாள் ஒழுங்கா தேச்சு குளிங்கன்னு சொல்லனும் ஹி ஹி 

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEibZ_6TT1mfteI3uiLKOnhxk3HStPGD0BYRjW310j9DLOvO7s7Us7Op8qv-md2ujkS9PHfwJStU6ezZP5HcFqED-AlBxdq-QlKai3wNgKKdVWyttQ_9air8RFBVZq7sjxVsqaw6PRM0C08/s1600/pathinettan_kudi_ellai_aarambam_102.jpg

சி.பி கமெண்ட் - இந்தப்படம் டி வில போட்டா பார்த்துக்கலாம்

எதிர்பார்க்கப்படும் ஆனந்த விகடன் மார்க் - 39

எதிர்பார்க்கப்படும் குமுதம் ரேங்க் - சுமார்

ஈரோடு ஸ்டார்-ல் படம் பார்த்தேன்

18 comments:

Jaganathan Kandasamy said...

pathinetula nan mudhal kudiya.

Admin said...

விமர்சனம் அருமை..ஒரு தடவை பார்க்கலாம்.. இல்லையா?

senthil said...

இந்த படத்தைகூட உட்டு வெக்க மாட்டீங்களா சாமி !

MANO நாஞ்சில் மனோ said...

இப்போ படம் பார்க்கலாம்னு சொல்றியா வேண்டாம்னு சொல்றியா...?

MANO நாஞ்சில் மனோ said...

அண்ணே நீ சொல்றதை பார்த்தா படத்துல கொஞ்சம் காமெடி நல்லா இருக்கும் போல தெரியுதே...!!!

MANO நாஞ்சில் மனோ said...

பாண்டியராஜன் மகன் முதல் படமே ஒரு நாடகம் பார்த்த பீலிங்க்தான் இருந்துச்சு...!!!

Astrologer sathishkumar Erode said...

இந்த படத்துக்கும் மெனக்கெட்டு...நாலு பக்கம் விமர்சனம் எழுதறீங்க..அதுக்கு 50 ரூப்பா செலவு பண்றிங்க..மெனக்கெட்டு பார்க்குறீங்க ..உங்க நேர்மை எனக்கு பிடிச்சிருக்கு!!!

கவிதை வீதி... // சௌந்தர் // said...

ரைட்டு...

எப்படியோ நகைச்சுவையாவது நல்லாயிருந்தா சரி...

KANA VARO said...

ப்ருத்வியின் நடிப்பு எடுபடாதது எனக்கும் வருத்தமே! மீன்குஞ்சுக்கு நீந்தக் கத்துக் கொடுக்கணுமா? அப்பிடீன்னு சொல்லுவாங்க.. ப்ருத்வி விசயத்தில அது பொய்யாப் போச்சு போல!

KANA VARO said...

சிங்கம்புலி காமெடி எனக்கும் பிடிக்கும்.

Unknown said...

மொக்க படத்த கூட இவ்ளோ டீட்டெய்லா நோட் பண்றதுக்கு தனி திறமை வேணும்ங்னா..

rajamelaiyur said...

போட்டோலாம் சைவமா இருக்கு .. மனோ சொன்னதால மாறிடின்களா?

தமிழ் பையன் said...

என்னங்கண்ணா.. பெண்களே இல்லாத ஒரு படத்தைப் போட்டு உங்க பதிவையும் கேவலப்படுத்தி, படிக்கற எங்களையும் கேவலப்படுத்தீட்டிங்க.. நியாயமா?

RAMA RAVI (RAMVI) said...

இந்தப்படத்துக்கு கூட இவ்வளவு பெரிசா விமர்சனமா? பரவாயில்லை.

புத்தாண்டு வாழ்த்துக்கள்.

GANESH said...

Nice posting...
Keep it up...

movithan said...

//நானா இருந்தா சட் புட்னு தாலியை கட்டி இருப்பேன்//
இந்த நேர்மைதான் பாஸ் உங்கள்ள எனக்கு பிடிச்சது.

நீங்க மட்டும் நல்ல படியா யோசிச்சு இருந்தால் Grand Master ஆ வந்திருப்பீங்க.lol

Marc said...

அருமை நண்பரே

ஹாலிவுட்ரசிகன் said...

படத்த ஸ்கிப் பண்ணிட்டு ஆதித்யால சரி சிரிப்பொலில சரி நம்ம சிங்கம்புலியின் காமெடியை பார்த்துக்கிருவோம்.