Saturday, April 30, 2011

பிள்ளையார் பட்டி ஹீரோ நீ தான்பா கணேசா...(ஆன்மீகம்)

சரணம் கணேசா..!
திருவாக்கும் செய்கருமம் கைகூட்டும் செஞ்சொல்
பெருவாக்கும் பீடும் பெருக்கும் - உருவாக்கும்
ஆதலால் வானோரும் ஆனைமுகத்தானைக்
காதலால் கூப்புவர்தம் கை.
- கபிலதேவநாயனார்

பொருள்: செல்வம், செய்தொழிலில் மேன்மை, வாக்கு வளம், உண்மையான பெருமை, உருவப் பொலிவு... இவை யாவும், ஆனைமுகத்தானை உள்ளன்புடன் வணங்கும் அடியாருக்குக் கைகூடும்.

'ந்தக் காலத்தில் தாத்தா- பாட்டிகள் தங்களுடைய பேரன்- பேத்தியருக்கு பக்தி உணர்வு ஏற்பட, பிள்ளையார் கதைகளைச் சொல்வார்கள். விநாயகர் வணக்கத்தாலும் நம்பிக்கையாலும் இடையூறுகள் யாவும் விலகிப்போகும் என்பதைப் பாடல்களாகப் பாடிக் காட்டுவார்கள்; பேரக்குழந்தைகளைச் சுற்றிலும் உட்காரவைத்து, பிள்ளையார் வழிபாடு பற்றிய கதை களையும் செய்திகளையும் கற்பனை நயம் கலந்து சொல்லுவார்கள்.


'கருணைவள்ளல் கணபதியைத் தொழு’ என்று பாட ஆரம்பிப்பார் தாத்தா
சங்கரிக்கு மூத்தபிள்ளை... சங்கரனார் பெற்ற பிள்ளை’ என்று பாட்டி தொடர்ந்து பாடுவாள். 'மகாவிஷ்ணுவுக்கு மாப்பிள்ளை’ என்று உறவுமுறையும் காட்டிப் பாடுவார்கள். அதுமட்டுமா? 'அப்பம், வடை, தோசை என்றால் ஆசைப்படும் பிள்ளை’ என்று பொக்கை வாய் திறந்து பாடிக்கொண்டே, கடைசியில்...'இப்பிள்ளை யார் சொல்?’ என்று ஒரு கேள்வியும் கேட்பார்கள். உடனே பேரக்குழந்தைகள் ''பிள்ளையார்!'' என்று பதில் சொல்லும்.


இப்படியாக, தாத்தாவும் பாட்டியும் கதை சொல்லச் சொல்ல, பிள்ளையாரின் யானை முகமும், பானை வயிறும், வெள்ளைக் கொம்பும், குள்ளத் தோற்றமும் பிள்ளைகளுக்குக் கண்முன் வந்து நிற்கும். பிறகென்ன... 'தொப்பை அப்பனைத் தொழுவோம் நாங்கள்’ என்று அவர்களும் உற்சாகமாகப் பாடுவார்கள்.

பள்ளிக்கூடத்தில், பிள்ளையாரைப் போற்றும் நாட்டுப் புறப் பாடல்களை ஆசிரியர்களும் பாடுவார்கள்.

'எள்ளுப் பொரியும் இடித்த அவலும்
வள்ளிக் கிழங்கும் வாழைப்பழமும்
அள்ளித் தருவோம் ஆனை முகத்தாய்’

என்று அவர்கள் பாடும்போது, தமக்குப் பிரியமான பண்டங்களைத்தானே விநாயகக் கடவுளும் விரும்புகிறார்


என்று பிள்ளைகள் இன்புறுவார்கள். 'ஆறு நூறு தேங்காயும் நூறு நூறு மாம்பழமும்...’ என்று நொடிக்குள்ளே அந்த குண்டு வயிற்றுக்குள் ஜீரணமாகிவிடும் என்று அவர்கள் எண்ணமிடும்போது, பிள்ளையாரின் ஜீரண சக்தியைக் கண்டு வியப்பார்கள். ஆக, நம் முன்னோர் பிள்ளையாரின் வல்லமையை... எவ்வளவு எளிமையாக, எத்தகைய நகைச்சுவையுடன் கலந்து பிள்ளையாருக்கு ஊட்டியிருக்கிறார்கள்?!


அடுத்து, குழந்தைகளுக்கு ஓர் ஆசை வரும்.

தினமும் பூக்களைப் பறித்து பிள்ளையாரின் திருமுடியில் சார்த்தி, கை கட்டி வாய் பொத்தி நிற்பார்கள். தலையில் குட்டிக்கொள்வார்கள். விளக்கேற்றி வைக்கவும் விரும்புவார்கள். தங்களைப் பாதுகாக்கவேண்டும் என்று வேண்டிக் கொள்வார்கள். 'நல்வாக்கு வேணும்; செல்வச்செழிப்பு வேணும்; கல்வி ஞானம் பெருகவேணும்’ என்றெல்லாம் பிரார்த்திப்பார்கள்.

இப்படிச் சிறுவயதில் ஏற்பட்ட பிள்ளையார் பக்தி, நாளாக ஆக அவர்களது வாழ்வில் விநாயகருடன் இணை பிரியாத உறவை ஏற்படுத்தி, வாழ்வை சிறக்கச் செய்யும். சிறு வயதில் கிராமங்களில் அரசமரத்தடியிலும் ஆற்றங் கரையிலும் பிள்ளையாரைத் தினமும் வழிபட்டுவிட்டு பள்ளிக்குச் சென்றவர்கள், இப்போது அதுகுறித்து நினைத்துப் பார்ப்பதே ஒரு சுகானுபவம் இல்லையா?!


தெய்வ நம்பிக்கையுடைய நாம், எந்தக் காரியத்தைத் தொடங்கினாலும் விநாயகரை வழிபடாமல் தொடங்க மாட்டோம். எடுத்த காரியம் எளிதாக- இன்பமயமாக வெற்றிபெற வேண்டும் என்ற ஆசையை நிறைவேற்றி வைக்கும் கடவுள் விநாயகரே என்ற நம்பிக்கை நம் ஒவ்வொருவர் உள்ளத்திலும் நிலைத்திருக்கிறது. ஒரு வேலையைத் துவங்கும்போது, 'பிள்ளையார் குட்டியாச்சி’ என்று சொல்வது வழக்கம்.

 பிள்ளையார் சுழி போட்டாச்சு

என்று கூறி, காரியத்தைத் துவங்கும் வழக்கம், நம்மிடம் காலம் காலமாக இருந்து வருகிறது. எதை எழுத ஆரம்பித்தாலும் முதலில் பிள்ளையார் சுழி போட்டுவிட்டே எழுத ஆரம்பிக் கிறோம். சுழி என்பது வளைசல் (வளைவு). விநாயகரின் தும்பிக்கை நுனி வளைந்திருக்கிறதல்லவா?! பிள்ளையார் சுழி, கொம்பும் கோடும் சேர்ந்தது. இரண்டுமே விநாயகரின் தந்தத்தின் பெயர். 'ஏக தந்தர்’ என்பதைத் தமிழில் 'ஒற்றைக் கொம்பன்’ என்பார்கள்.

'ஓம்’ எனும் ஓங்கார எழுத்தின் தனித்தமிழ் வடிவம், ஏறத்தாழ யானை முகத்தின் வடிவம் போலக் காணப் படும். ஓங்கார ஒலியைக் காதால் கேட்க லாம்; அதை எழுதினால் கண்ணுக்குப் புலனாகும். காதால் கேட்பது நாதம்; கண்ணுக்குப் புலனாவது விந்து. நாத தத்துவத்தை வரி (கோடு) போலவும், விந்து தத்துவத்தை புள்ளியிலும் அமைப்பது உண்டு. இரண்டும் சேர்ந்ததே, 'உ’ என்கிற  பிள்ளையார் சுழி ஆகும்.

நாதமும் விந்துவும் ஒன்றுக்கொன்று துணை (சான்று) நிற்கவேண்டும். இதில், சான்று எனும் பதத்தைக் 'கரி’ என்றும் சொல்வர். ஆக, உமை வடிவாகிய 'சுழி’ வடிவமும், சிவ சக்தி சான்றாகிய 'கரி’ வடிவமும் கொண்டு நிற்கும்போது, கணபதியின் வடிவாகிய ஓம்காரம் தோன்றும். எனவேதான், ஏதேனும் எழுதத் துவங்குமுன், ஒரு சுழியும் கோடும் இடுகிறோம். தமிழ் உயிர் எழுத்துக்கள் அனைத்தும், சுழியை அடிப்படையாகக் கொண்டவையே! பிரணவத் துக்கும் ஒலி வடிவமும் வரி வடிவமும் உண்டு. வரி வடிவாக விநாயகரின் திருவுருவும், ஒலி வடிவாக அவரது ஆற்றலும் திகழ்கின்றன.



முதன்முதலில் எழுதத் தொடங்கியவர் விநாயகரே! எழுத்து வடிவில் தோன்றிய முதல் நூல் வியாச பாரதமே!


'முத்தமிழ் அடைவினை முற்படுகிரி தனில் முற்பட எழுதிய முதலோனே’ என விநாயகர் துதி திருப்புகழில் போற்றுகிறார் அருணகிரிநாதர். மகாபாரத்தை வேதவியாசர் எடுத்துரைத்தபோது, அந்த மகா காவியம் காலாகாலத் துக்கும் அழியாது அனைவரும் படித்துப் பேறுபெறும் பொருட்டு, விநாயகர் தமது தந்தங்களில் ஒன்றை ஒடித்து, அதையே எழுத்தாணியாகக் கொண்டு எழுதினாராம்!  காஞ்சி மகா சுவாமிகள் இதற்கு அற்புதமான விளக்கம் ஒன்றை சொல்வார்...

''தந்தத்தை எழுத்தாணியாக வைத்துக்கொண்டு ஏன் எழுதினார் விநாயகர்? யானையின் பெருமைக்கு முக்கிய காரணம் அதன் தந்தம்தான்.

'யானை இறந்தாலும் ஆயிரம் பொன்’ என்பது

தந்தத்தின் மதிப்பை வைத்துத்தான். அப்படிப் பட்ட தந்தத்தை 'பிள்ளையார்’ என்கிற யானை முகத்தோன் ஒடித்து... தமது அழகு, கௌரவம், கர்வம் எல்லாவற்றுக்கும் காரணமாக இருக்கிற ஒன்றைக் காட்டிலும், தர்மத்தைச் சொல்கிற ஒன்றுதான் பெரியது என்பதை உலக மக்களுக் குக் காட்டினாராம்.


நியாயத்துக்காக, தர்மத்துக்காக, வித்தைக்காக எதையும் தியாகம் பண்ண வேண்டும் என்பதற் காகத்தானே தந்தத்தைத் தியாகம் பண்ணிக் காட்டியிருக்கிறார் விநாயகர்! ஸ்வாமிக்குக் கருவி என்று தனியாக எதுவும் வேண்டியது இல்லை; அவர் நினைத்தால், எதையும் கருவியாக உபயோகித்துக்கொள்வார் என்பதற்கும் இது ஓர் உதாரணம்.''

ஒருமுறை, தந்தத்தாலேயே அசுரனைக் கொன்றார் பிள்ளையார். அப்போது அது ஆயுதம். பாரதம் எழுதும்போது அதுவே பேனா! உலகத்திலேயே பெரிய புத்தகம் எது என்றால் மகாபாரதம்தான் என்று எவரும் சொல்வார்கள். 'பாரதம் பஞ்சமோ வேத:’ ஐந்தாவது வேதம் என்று அதற்குப் பெயர். மற்ற நாலு வேதங்கள் எழுதாக்கிளவி- அதாவது எழுத்தில் எழுதப்படாமல், காதால் கேட்டு மனப்பாடம் பண்ணியே ரக்ஷிக்கப்பட வேண்டியவை. ஐந்தாவது வேதமான மகாபாரதம் எழுதிவைக்கப்பட்டது.

ஆக, எழுத்தைக் கண்டுபிடித்த கருணைக் கணபதிக்கு வணக்கம் செலுத்தும் விதமாக- நன்றி அறிதலைக் காட்டும் விதமாக... நாமும் பிள்ளையார் சுழி போட்டு ஆரம்பிக்கிறோம்.

நன்றி - சக்தி விகடன்

சந்தனக்கடத்தல் மன்னன் வீரப்பன் மனைவி முத்துலட்சுமி ஜூ வி பேட்டி - காமெடி கும்மி

எல்லா அரசியல்வாதிகளும் சுயநலமிகள்

சிறை மீண்ட முத்துலட்சுமி ஆவேசம்
நீண்ட போராட்டங்களுக்குப் பிறகு கர்நாடக சிறையில் இருந்து ரிலீஸ் ஆகி
வெளியில் வந்திருக்கிறார் சந்தனக் கடத்தல் வீரப்பனின் மனைவி முத்துலட்சுமி.

 ஆமா.. சுதந்திரப்போராட்ட தியாகி .. வெளில வந்துட்டாங்க.. மாலை போட்டு ஆரத்தி எடுக்க வேண்டியதுதான்.. 




மேட்டூர் அருகே உள்ள பொட்டனேரி கிராமத்தில், அக்கா வீட்டில் தங்கியிருக்கும் முத்துலட்சுமியை சந்தித்தோம். பேச்சில் ஏகத்துக்கும் இப்போ கன்னட வாசம்! 

பேட்டி எடுத்தா கேள்விகளால் வசப்படுத்தனும்.. இப்படி வாசம் பிடிக்கக்கூடாது.. 

''கிட்டத்தட்ட மூணு வருசம் ஜெயிலுக்குள்ளயே ஓடிப்போச்சு. 2008-ம் வருஷம் நவம்பர் 26-ம் தேதி ராத்திரி ஒரு மணி இருக்கும். எங்க வீட்டுக் கதவை யாரோ தட்டினாங்க. வெளியில ரெண்டு பொம்பளை போலீஸ்  இருந்தாங்க. 'நாங்க
மாதேஸ்வரன்மலை போலீஸ்காரங்க. உங்களை அரெஸ்ட் பண்ண வந்திருக்கோம்...’னு தமிழ் கலந்த கன்னடத்தில் சொன்னாங்க.


'எதுக்கு..?’ன்னு புரியாமல் கேட்டேன். '11 தடவை உங்களை கோர்ட்ல ஆஜராகச் சொல்லி​யும், நீங்க ஆஜராகாம கோர்ட்டை அவமதிப்பு செஞ்சதுக்காக, உங்களை கைது செய்யச் சொல்லி பிடி வாரன்ட் போட்டிருக்கு’ன்னு சொன்னாங்க.

 அதெப்பிடி? மாலை 6 மணீக்கு மேலே பெண் கைதியை லாக்கப்ல வைக்க சட்டம் இல்லையேன்னு கேட்க வேண்டியது தானே?

'கோர்ட்ல ஆஜராகச் சொல்லி எந்த நோட்டீஸும் வரவே இல்லை’ன்னு நான் சொன்னது எதையும் அவங்க கேட்கத் தயாரா இல்ல. கட்டின புடவை​யோட அந்த நடு ஜாமத்துல என்னைக் கைது பண்ணிக் கூட்டிட்டுப் போயிட்டாங்க.''


1. ''சிறையில் எப்படி உணர்ந்தீர்கள்?''

''என்னை மைசூர் ஜெயில்ல அடைச்சாங்க. சின்ன ரூம், அதுல 16 பேர் தங்கி இருந்தோம். கால் நீட்டிக்கூட படுக்க முடியாது. ஆரம்பத்துல பல நாள் ராத்திரி தூக்கமே வராது. காட்டுக்குள்ள அவரோட நான் வாழ்ந்த வாழ்க்கையை நினைச்சிப் பார்த்​துட்டுப் உட்கார்ந்திருப்பேன்.

பொழுது விடிஞ்சிடும்.
ஜெயிலுக்குள்ள நக்சலைட் இயக்கத்தைச் சேர்ந்த பெண்கள் சிலரும் இருந்தாங்க. அவங்​களுக்குத் தமிழ், கன்னடம் ரெண்டும் தெரியும். அவங்கதான் என்கூட ரொம்ப அன்பாப் பழகி​னாங்க.

கோர்ட்டுக்கு கன்னடத்துல நான் எழுதச் சொன்ன லெட்டரை எல்லாம் அவங்கதான் எழுதிக் கொடுத்தாங்க. இப்போ ஓரளவுக்கு நானும் கன்னடம் பேசக் கத்துகிட்டேன். கன்னடத்துல கையெழுத்துப் போடவும், கொஞ்சம் படிக்கவும் தெரியும். எல்லாம் அவங்க கத்துக் கொடுத்ததுதான். நான் சோர்ந்துகிடந்தப்ப எல்லாம் எனக்கு ஆறுதலாக இருந்ததும் அவங்கதான்!''

 உடனே நம்மாளுங்க நக்சலைட்டுக்கும் ,உங்களுக்கும் என்ன தொடர்பு?ன்னு ஒரு கேஸ் போட்டு இருப்பாங்களே?


2. ''சிறைக்குள் மண்ணெண்ணெய் கடத்தியதாக உங்கள் மீது புகார் சொல்லப்பட்டதே..?''

''அது ஒரு பெரிய கூத்துங்க! ஜெயிலுக்குள்ள இருக்குற பொண்ணுங்களுக்கு எம்ப்ராய்டரி சொல்லிக் கொடுத்தாங்க. நானும் கத்துக்கிட்டு இருந்தேன். எம்ப்ராய்டரிக்கு டிரேஸ் பேப்பர்ல பயன்படுத்த மண்ணெண்ணெய் தேவைப்பட்டது. அதுக்காகக் கேட்டேன்.

உங்க வீட்டுல இருந்து கொண்டுவந்து கொடுக்கச் சொல்லுன்னு வார்டன் சொன்னார். அக்காகிட்ட சொன்னேன். அவங்க ஒரு சின்ன டப்பாவுல 50 மில்லி கொண்டுவந்தாங்க.
நான் தற்கொலை பண்ணிக்கிறதுக்காக மண்ணெண்​ணெய் கடத்தினதா என் மேல் புகார் பதிவு செஞ்சு விசாரணை நடத்தினாங்க.

அதுக்குப் பிறகுதான் மைசூர்ல இருந்து பெங்களூரு ஜெயிலுக்கு மாத்திட்​டாங்க. ஜெயிலுக்குள் எம்ப்ராய்டரியைத் தெளிவாக் கத்துக்கிட்டேன். நானே ஒரு சேலையில எம்ப்ராய்டரி போட்டேன் பாருங்க...'' என்று ஒரு சேலையைக் காட்டுகிறார்.

அடடா.. இந்த மேட்டரை இப்போ சொல்லி இருக்கீங்களே..? அண்ணன் நக்கீரன் கோபால்ட்ட அப்பவே  சொல்லி இருந்தா  அண்னன் நக்கீரன்ல ஒரு காட்டு காட்டி இருப்பாரு.. அதை வெச்சு 4 வாரம் எக்ஸ்க்ளூசிவ் மேட்டர் ஓட்டி இருப்பாரே..?

3. ''நீங்க ஆரம்பிச்ச மலை வாழ் மக்கள் இயக்கம் எந்த அளவில் இருக்குது..?''
''மலை வாழ் மக்களோட உரிமைகளுக்காகக் குரல் கொடுக்கத்தான் அந்த இயக்கத்தை ஆரம்பிச்சேன். நான் ஜெயிலுக்குப் போயிட்டதால், கடந்த மூணு வருஷமா அதை நடத்த யாரும் இல்லை.

இப்போ அதை நடத்தும் அளவுக்கு என்கிட்ட வசதி இல்ல.

 காட்டுல கட்டு கட்டா கணவர் சேர்த்து வெச்ச பணம் எல்லாம் என்னாச்சு?


ஏன்னா, புள்ளைங்க ரெண்டு பேருக்குமே இந்த வருஷம் ஃபீஸ் கட்டணும். பெரியவ, காலேஜ்ல கடைசி வருஷம் படிக்கிறா. சின்னவ, பிளஸ் டூ எழுதி இருக்கா. அவளையும் காலேஜ்ல சேர்த்தாகணும். இப்படி நிறையச் செலவுகள் இருக்குது. அந்தக் கடமையை முடிச்சிட்டு, அதுக்குப் பிறகு முழு நேரமா மலை வாழ் மக்களுக்காகத்தான் சேவை பண்ணப்போறேன்!''

4. ''அரசியல் திட்டம் இருக்கா..?''

''என் கணவர் இறந்த பிறகு, நான் எல்லா சோதனைகளையும் சந்திச்சிட்டேன். எல்லா அரசியல்வாதிகளையும் பார்த்துட்டேன். எல்லோருமே சுய நலத்தோடதான் இருக்காங்க.

 ஆமா.. சுய நலமா இருந்தாதான் அவங்க அரசியல் வாதி.. பொது நலமா இருந்தா அவங்க காந்திய வாதி


அதனால, இனி யாரையும் நம்பி அரசியல்ல இறங்குற எண்ணம் எனக்கு இல்லை. நான் உண்டு.. என் குடும்பம் உண்டுன்னு அமைதியா இருக்கணும்.  இனி என் குழந்தைங்களோட எதிர்காலம்தான் எனக்கு முக்கியம்!''

 பார்த்தீங்களா? நீங்களும் சுயநலமாத்தான் இருக்கீங்க.. அப்போ கண்டிப்பா நீங்களும் அரசியல்வாதி ஆக  வாய்ப்பு உண்டு.. 

எம் ஜி ஆர் சந்திரபாபுவை வெறுத்தது ஏன்?

கழுகார் பதில்கள் - காமெடி கும்மி

1.குணசீலன், தஞ்சாவூர்

சார்லி சாப்ளின் நடிப்பு பிடிக்குமா?
சாப்ளினை ரசிக்காதவர்கள் ரசிப்புத்தன்மை இல்லாதவர்கள்! அவர் நடிகர் மட்டுமல்ல...  தத்துவ மேதை! இதோ சில முத்துகள்...

. வாழ்க்கையே ஒரு நகைச்சுவை​தான்.
. மழையில் நனைவது பிடிக்கும், ஏனென்றால் நான் அழுவதை யாரும் கவனித்துவிட முடியாது.

. வாழ்க்கையை நெருங்கிப் பார்த்தால் சோகம், விலகிப் பார்த்தால் இன்பம்.

.நீங்கள் தலைகுனிந்து நடந்தால், வானவில்லை ரசிக்க முடியாது.


.நினைவுகள் இருந்தால் தனிமை தெரியாது.

சி. பி  - கம்யூனிச சிந்தனைகளை, தொழிலாளர் படும் கஷ்டங்களை அவர் அளவுக்கு நகைச்சுவையாக மக்களிடம் கொண்டு போய் சேர்த்தவர் யாரும் இல்லை.. பர்சனல் லைஃபில் அவர் போல் தோல்வியை சந்தித்த நகைச்சுவை நடிகரும் யாரும் இல்லை.

------------------------------
2.எல்லோரும் கரடியாய்க் கத்தி என்ன பயன்? நம் பிரதமரே வாக்களிக்கவில்லையாமே?

யாருக்கு வாக்களிப்பது என்று மன்மோகன் சிங் முடிவுக்கு வருவதற்குள், தேர்தல் முடிந்துவிட்டது. பாவம், பிரதமர் என்ன செய்வார்?



சி .பி. -அன்னையிடம் இருந்து ஆணை வரவில்லையோ என்னவோ?முன் மாதிரியாக இருக்க வேண்டியவர்கள் எல்லாம் இந்த மாதிரி இருந்தால்நாட்டை முன்னேற்றப்பாதையில் செலுத்துவது எப்படி?

 -------------------------------

3.ஆர்.ஜேஸ்மின் ரமேஷ், கம்பம்

தி.மு.க-வுக்கு எதிரான செய்திகளுக்கு கழுகார் முக்கியத்துவம் தருவது ஏன்?

அ.தி.மு.க ஆட்சிக் காலமாக இருந்திருந்​தால் நீர், இதே கேள்வியை மாற்றிக் கேட்டிருப்பீர். காய்க்கும் மரமே கல்லடி படும். ஆளும் கட்சியே அதிக விமர்சனங்களை சந்திக்க நேரும்!

சி பி - உச்சியில் இருப்பவர்களைத்தானே குட்ட முடியும்?

----------------------------------
4. ஜி.விஸ்வநாதன், நாகர்கோவில்.

நல்ல நடிகர் சந்திரபாபுவை குடிதானே வீழ்த்தி​யது?

குடியும்!
ஆனால், மனசுக்குள் எதையும் மறைத்து வைக்​காமல் வெளிச்சத்தில் போட்டு உடைத்த குணம் உடையவர் என்பதால், அவர் வீழ்த்தப்பட்டார் என்பதே உண்மை!

எம்.ஜி.ஆர்., சிவாஜி, ஜெமினி ஆகிய மூவரையும்பற்றி சந்திரபாபுவிடம் கருத்துக் கேட்டார் ஒரு நிருபர்.

'ஜெமினி என்னோட ஆதிகால நண்பன். அவனுக்கு காமெடி எப்படிப் பண்ணனும், லவ் சீன் எப்படிப் பண்ணனும் என்று நடித்துக் காட்டுவேன்.

அடே அம்பி, இத்தனை வருஷமாச்சு. நடிப்பில் எந்த முன்னேற்றமும் இல்லை!

சிவாஜி நல்ல ஆக்டர், பட்... அவரைச் சுத்தி காக்கா கூட்டம். அந்த ஜால்ரா கூட்டம் போனாத்தான் தேறுவார்.

எம்.ஜி.ஆர்., கோடம்பாக்கத்துல ஒரு ஆஸ்பத்திரி கட்டுறதா கேள்விப்பட்டேன். கம்பவுண்டராகப் போகலாம்’ என்று பதில் சொன்னவர் சந்திரபாபு. இடம், பொருள் பார்க்காமல், இப்படி கமென்ட்கள் அடித்ததால்தான் அவருக்கு சிக்கல் வந்தது!

சி பி - ஓப்பனா பேசக்கூடாது என்பது வி ஐ பி களுக்கான எழுதப்படாத விதி.. நம் ஆர் ராதாவும்,சந்திரபாபுவும் அதை மீறினார்கள். அவர்கள் பலமும் அதுதான்,பலவீனமும் அதுதான்

---------------------------------

5. போடி எஸ்.சையது முகமது, சென்னை-93

  மதுரை மாவட்ட கலெக்டர் சகாயம் பற்றி?

'அவருக்கு யாருய்யா சகாயம்னு பேர் வெச்சது? எந்த சகாயமும் பண்ண மாட்டேன்னு சொல்றாரே?’ என்று புலம்பினாராம் மத்திய அமைச்சர் அழகிரி.
'யார் என்னைத் தொந்தரவு செய்தாலும், இந்த சகாயம் நேர்மை தவற மாட்டான்’ என்பது அவர் அடிக்கடி சொல்வது.

2026-ல் யார் முதலமைச்சராக வருவார் என்பதைக்கூடக் கணக்குப் போட்டு காக்கா பிடிக்க நினைக்கும் ஐ.ஏ.எஸ். அதிகார வர்க்கத்தில் தப்பிய சிலரில் சகாயமும் ஒருவர். இந்த சமூகம் இன்னும் மோசமாகிவிடவில்லை, நல்லவர்களும் ஆங்காங்கே இருக்கிறார்கள் என்பதை நிரூபிக்கும் ஒரு சாட்சி!

சி. பி -சகாயம் அரசியல்வாதிகளுக்கு ஒரு கசாயம். சேற்றில் செந்தாமரைகள் முளைப்பது மாதிரி நாட்டில் சில நல்லவர்கள் தோன்றுவது உண்டு

---------------------------

6.ரேவதிப்ரியன், ஈரோடு

  உங்கள் குரு யார்?

வாசகர்!

சி பி - காசு குடுத்து வாங்கிப்படிக்கறவங்களா? ஓ சி ல லைப்ரரில படிக்கறவங்களா?

--------------------------
7. வி.சுதாகரன், நெய்வேலி.

  ஈழத் தமிழர் பிரச்னையை முழுமையாக அறிந்துகொள்ள சில புத்தகங்களைப் பரிந்துரை செய்யுங்கள்!


போரும் சமாதானமும் - ஆன்டன் பாலசிங்கம்

சமாதானம் பேசுதல் - 'அடையாளம்’ வெளியீடு

ஈழத்தமிழர் போராட்ட வரலாறு - பாவைச் சந்திரன்

இந்த மூன்றும் புராதன இலங்கையில் தொடங்கி ராஜபக்ஷேவின் காலம் வரைக்குமான அனைத்து அழிவுத் தகவல்களையும் அப்பட்டமாகச் சொல்கின்றன!

சி பி - புத்தகங்கள் படிப்பதை விட ஈழ அகதியிடம் ஒரு நாள் இருந்து அவர்களுடன் பேசிப்பார்த்தாலே அவர்கள் வலியை உணர முடியும்.

-----------------------

8. எம்.செல்லையா, சாத்தூர்

  நரேஷ்குப்தா, பிரவீண் குமார் ஒப்பிடுக!

இரண்டுமே அணுகுண்டுகள். ஒன்று அமைதியாகவும், இன்னொன்று அதிரடியாகவும் வெடிக்கும்!

சி பி -ஆணவத்தால் ஆடிய அரசியல்வாதி மாப்புகளை ஆப்பு அடித்தவர்கள் இருவருமே..

------------------------------


9. வி.செல்லப்பா, திருநெல்வேலி.

  இந்தத் தேர்தலில் செலவான பணத்தின் மதிப்பு எவ்வளவு இருக்கும்?

ஒரே ஒரு கட்சி செலவழித்தது மட்டும் இரண்டாயிரம் கோடியைத்  தாண்டுகிறது!  இதைத்தான் பூஜ்யங்களின் ராஜ்யம் என்கிறார்கள்!

சி பி - பிஸ்னெஸ்மேன் முதல் போட்டு பின் போட்ட காசை எடுப்பது மாதிரி சின்ன மீனைப்போட்டு பெரிய மீனை எடுக்கிறார்கள்.பாக்கெட்டில் இருந்தா செலவு பண்ணுனாங்க.? ஏற்கனவே அடிச்ச காசில இருந்து ஒரு பர்சண்ட்டேஜ்ஜை செலவு பண்ரது பெரிய தியாகமா? என்ன?

----------------------------
10. என்.சொர்ணம், தூத்துக்குடி.

  ஆ.ராசா எப்படி இருக்கிறார்?

தேர்தல் முடிந்ததும் தன்னை வந்து தலைவர் சந்திப்பார் என்று நினைத்தாராம். ஆசை நிராசை ஆகி வருவது அவருக்கு வருத்தமாகத் தானே இருக்கும்!

 சி பி - மாட்டிக்கொள்ளாதவரை மகான், மாட்டிக்கொண்டால் மாக்கான் .
தலைவர் வராட்டி என்ன? தலைவி வந்தாங்களே போதாதா?


-------------------------------
11. சி.சாந்தி, மதுரை.

  அமைச்சர்களில் அதிகம் சம்பாதித்த முதல் அமைச்சர் யார்?

தமிழ்நாட்டின் மத்தியில் இருக்கிறார்!

 சி பி - அதிகம் சம்பாதித்த முதல் அமைச்சர் நம் முதல் அமைச்சர்?

Friday, April 29, 2011

வானம் - சிம்பு VS தெம்பு? OR சொம்பு ? - சினிமா விமர்சனம்

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhKhZFuHn4K7DPynruNI78peG9Gu7BQ2uOh-2azlTSPtcQte70_vdwY1y9cDsGf6I3c77RTfLXyPD4D_qMI-NXRXSYAUlC8cW-jPoq6EP8zuvhkOLZ4E79L5jGcDKdcICnUkK7gv54w6g5p/s1600/Simbu_Anushka_vaanam_movie_posters.jpg

எவண்டி  உன்னைப்பெத்தான் அவன் மட்டும் என் கைல கிடைச்சான் செத்தான் என்ற சூப்பர் ஹிட் பாடல் கை வசம் இருக்கும் தைரியம் + விண்ணைத்தாண்டி வருவாயா படத்தால் சிம்புவுக்கு ஏற்பட்ட புது இமேஜ் & மார்க்கெட் இம்ப்ரூவ்மெண்ட்ஸ் +அனுஷ்காவின் இளமை  இந்த மூன்று மேட்டர்களை கையில் வெச்சுக்கிட்டு  இயக்குநர் க்ரிஸ் அதகளம் பண்ணி இருக்கலாம்.. ஆனா... 

 படத்தோட கதை என்ன?
.ராக் ஸ்டாராக ஆசைப்படும்  இளமை துள்ளும் இளைஞன் ( பரத்),மருமகளின் (சரண்யா)கிட்னியை விற்க வரும் மாமனார்,சொந்தமாக தொழில்(!) செய்ய ஆசைப்பட்டு,  ஹைதராபாத் வருகிற. அயிட்டம் கேர்ள் (அனுஷ்கா),தன் தகுதிக்கு மீறி மிகப்பெரிய பணக்கார பெண்ணை தானும் பணக்காரன் என்று நம்ப வைத்து எப்படியாவது அவளை திருமணம் செய்ய ஆசைப்படும் பேராசைக்காரன் ( சிம்பு).,ஹைதராபாத்தில் நடந்த ஒரு ஹிந்து ஊர்வலத்தில் தன் நிறைமாத கர்பிணியின் கர்ப்பம் கலைந்து போன சோகத்தில் ஒரு முஸ்லிம் (பிரகாஷ் ராஜ் ) இந்த 5 பேரும் ஒரு ஹாஸ்பிடலில் சந்திக்க நேரிடுகிறது.

 இவர்கள் ஐந்து பேரும் வந்து சேரும் இடமான மருத்துவமனையை, தீவிரவாதிகள் வளைத்து, கண்ணில் கண்டவர்களையெல்லாம் சுட்டுத் தள்ள,படம் ஒரு ஆக்‌ஷன் படத்துக்கே உரிய ஸ்பீடோடு சூடு பிடிக்கிறது.என்ன நடக்கிறது என்பதே கதை.





https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhfTkbuQCRa2R4fA9Div40Jabo8qd516uMK0TBpKYNFbl0riiKVwceJ0KOnLUnoAeHZ2342LlXncRyEw-WjkEePB-8MrDmrk22E1SX0vQOj1dvSHNDZlE_Ju4ZKmYivMm71e7P_XOYjRQJ9/s1600/Sneha_Ullal_Simbu_Vaanam_Movie_Stills_01.jpg
சிம்புவுக்கு அல்வா மாதிரி கேரக்டர்.அவர் சந்தானத்துடன் அடிக்கும் லூட்டிகள் கல கல காமெடி.சினேகா உல்லாள் தான் ஜோடி ( அவர் தங்கை பேர் மேனகா வெளி ஆள்?)ஆனா ஃபிகர் சுமார் தான்.. நடிக்க வாய்ப்பு இல்லாட்டி கூட  பரவால்ல.. அவர் திறமையை (!!) காட்டக்கூட வாய்ப்பில்லாம போச்சேன்னு தான் இளவட்டங்கள் வருத்தம். 

அனுஷ்கா .. அருந்ததி மாதிரி கலக்கலான கேரக்டரில்,சிங்கம் மாதிரி கிளாமரான கேரக்டரில் பார்த்து விட்டு இந்த மாதிரி டிக்கெட் கேரக்டரில் பார்க்க மனசுக்கு ரொம்ப கஷ்டமா  இருக்கு.ஆனா அவர் அசால்ட்டா ந்டிச்சிருக்கார். ஆனா தெலுங்கு பதிப்பை விட தமிழ்ல அவருக்கு அழகும் இளமையும் கம்மி தான்.. (இப்படியே கம்ப்பேர் பண்ணிட்டே இரு. )

பரத் கேரக்டர் வந்த வரை ஓக்கே என்றாலும் படத்துக்கு தேவை இல்லாத கேரக்டர் தான்.

படத்தில் மனம் கவரும் நடிப்பு சரண்யா, அவர் மாமனார், பிரகாஷ்ராஜ் இந்த 3 பேரும் தான்.சோனியா அகர்வால் பார்க்க பரிதாபமாக இருக்கார். செல்வராகவன் விட்டுட்டுப்போனதால் அப்படி இருக்காரா? அவர் அப்படி டல்லா இருக்கறதால அவர் விட்டுட்டுப்போய்ட்டாரா? என்பது சர்ச்சைக்குரியவிஷயம்.


சந்தானம் காமெடி பலத்துக்கு பலம்
http://fullytimepass.com/wp-content/uploads/2009/03/sneha-ullal-11.jpg
 படத்தில் களை கட்டும் கலக்கல் வசனங்கள்

1.  என் பைக்கை நான் என் ஒயிஃப் மாதிரி பார்த்துக்கறேன்..

சந்தானம்- அப்புறம் ஏண்டா வாசல்ல நிறுத்தி வெச்சிருக்கறே? வீட்டுக்குள்ளேயே நிறுத்தி வெச்சிருக்க வேண்டியது தானே?

2. இங்கே இருக்கறவங்க எல்லாம் பார்த்தியா ஆல் ஹை க்ளாஸ்....

சந்தானம்-  - பார்த்தா எச்ச க்ளாஸ் மாதிரி இருக்கு?

3.  சந்தானம்- ஏம்ப்பா இவ்வளவு கஷ்டப்பட்டு காமெடி பண்றேன்.. சிரிக்க மாட்டியா?

 பணம் இருக்கறவன் சிரிக்க மாட்டான்.

 சந்தானம்-  ஆமாமா..  பணம் இருக்கறவன் சிரிக்க மாட்டான், விசில் அடிக்க மாட்டான்,ஜாலியை அனுபவிக்க மாட்டான்.. போறப்ப பணத்தை எடுத்துட்டா போகப்போறான்?

4.  டேய்.. நான் ஒண்ணு சொல்லட்டா.. அந்தாள் பைக்கை நைஸா வித்துடலாமா?

சந்தானம்-  செத்துடலாமா?ன்னு கேட்டிருக்கலாம். இதுக்கு

5.  லேடி - வாங்க இன்ஸ்பெக்டர் சார்... ரொம்ப நாளா ஆளையே காணோம்?

ரெகுலரா வர இது என்ன போலீஸ் ஸ்டேஷனா?

6. என்னது? சரோஜா ஒரு ஃபுல் நைட்டுக்கு வேணுமா? நீங்க தான் மேட்ச்ல வீக் ஆச்சே? எதுக்கு அவ? 

உன்னை எல்லாம் லாக்கப்ல வெச்சு ஒரு வாரம் கும்முனாத்தான் புத்தி வரும்.

7.  எத்தனை தடவை சொல்றது? உங்க கனவை ,ஆசைகளை என் மேல திணிக்காதீங்க..

8. சந்தானம்- பேசாம அம்பானி பொண்ணையே ரூட் விட்ரலாமா? பணக்காரன் ஆகிடலாம் ஈசியா..

ஆனா அம்பானிக்கு பையன் தான்

9. எப்படியாவது ரூ 40000 பணத்தை ரெடி பண்ணனும். 40 பேர்ட்ட ரூ 1000  கேட்கலாமா?

 சந்தானம்- ஏன்? 40000 பேர்ட்ட ஆளுக்கு ரூ 1 கேளேன்..

10. சரி சரி.. இந்த செல்ஃபோன்ல இருக்கற எல்லா  நெம்பருக்கும் டரை பண்ணு..யாராவது சிக்காமலா போவாங்க? கறந்துடலாம்.

சந்தானம்- கஸ்டமர் கேர் நெம்பர் தவிர எல்லா நெம்பரும் ட்ரை பண்ணீயாச்சு.

11.  சந்தானம்- யோவ்.. நீ நல்ல பார்ட்டியா கல்யாணம் பண்ணாம ஒரு பாட்டியைப்[போய் கல்யாணம் பண்ணீ இருக்க..

 சரி சரி.. கொலீக்ஸ் முன்னால என் மானத்தை கொலாப்ஸ் பண்னாதே..

12. சந்தானம்- உன் லவ் நல்ல ஒர்த்தா?

ரூ 600 கோடிக்கு அதிபதி.

ஆ.......

சந்தானம்- அதுக்கு ஏன் கார் டிக்கி மாதிரி வாயைப்பிளக்கறெ..?க்ளோஸ்

13.  சரி.. ப்ளேன் என்னா>ன்னு சொல்லாம டீ சொல்றே,,?

 இன்னுமா புரில..? அவன் ப்ளேனே இன்னைக்கு நம்ம கிட்டே ஓ சி டீ சாப்பிடறது தான்.

14.  அந்தக்காலத்துல திருடறவன் பசிக்காக திருடுனான். இந்தக்காலத்துல புட்டிக்கும் குட்டிக்கும் திருடறான்.
15.  ஏண்டி.. எல்லாரும்  நம்மையே பார்க்கறாங்க.. 

இவங்க இப்படித்தான். சினிமா நடிகையையும், நம்மை மாதிரி பொண்ணுங்களையும் ஒரே மாதிரி பார்ப்பாங்க.. ( ச்சே ச்சே நீங்க நினைக்கறது தப்பு)

16. திரு நங்கை - ஆணுக்கும் பெண்ணுக்கும் தனித்தனி பாத்ரூம் இருக்கு.. நாங்க எங்கேய்யா போவோம்.?

17. என்னது? நீங்க கன்னித்திருடன்களா? கன்னிப்பொண்ணுங்களை திருடுவீங்களா? 

 அட நீங்க வேற.. இது எங்க முத திருட்டு..

18.  சரி.. நீங்க எப்படி? ஒன்லி திருட்டு தானா? இல்லை கொலை, ரேப் இந்த மாதிரி...?

சந்தானம்- இன்ஸ்பெக்டர் சார்.. என்னது இது சர்வர்  மாதிரி வடை பொங்கல் போதுமா ? ரோஸ்ட் வேணாமாங்கறது மாதிரி கேட்கறீங்க?

19. யோவ்.. நாங்க தான் படிக்காதவளுக.. இந்த தொழிலுக்கு வந்துட்டோம். நீ படிச்சவன் தானே.. அரசாங்க வேலை ல தானே இருக்கே? யூனிஃபார்ம் போட்டுட்டு இப்படி சம்பாதிக்க வெட்கமா இல்லை? ( பளார்)

20. போலீஸ்களை நம்பக்கூடாது.. குழந்தையை காணோம்னு புகார் குடுத்தா பொண்டாட்டியை காணாம போக பண்ணிடுவானுங்க.. ( செம க்ளாப்ஸ்)
21.  மத்த வேலைகள் செய்ய அனுபவம் வேணும். ஆனா இந்த தொழிலுக்கு அனுபவம் கம்மின்னா பணத்தை அள்ளி வீசுவாங்க.. அனுபவமே இல்லைன்னா கேட்கற பணம் கிடைக்கும்.

22. எனக்காக அவ கிட்டே என்னைப்பற்றின உண்மையை சொல்றியா?

சந்தானம்-  ஏன்? நீ சொல்ல மாட்டியா? எத்தனை பொய் சொல்லி இருக்கே?

பொய் சொல்றது ஈஸி.. ஆனா உண்மை சொல்றது ரொம்ப கஷ்டம்.. (க்ளாப்ஸ்)
http://www.telugupedia.com/wiki/images/d/d7/Anushka.jpg
23. நான் போலீஸ்.. என்னையே டெரரிஸ்ட்னு சொல்றியா?

அப்பாவிகளை கொடுமைப்படுத்தற எல்லாரும் டெரரிஸ்ட்தான்.

24. சந்தானம்- டேய் நாயே.. சீ வெளில வா.. இவரு பெரிய பாரதிராஜா.. ஸ்க்ரீனுக்கு பின்னால இருந்து ஒளிஞ்சு பார்க்கறாரு.. 

25.. அடப்போடா.. என்னை போலீஸ் ஸ்டேஷன்ல நிக்க வெச்சுட்டியே..?

சந்தானம்-  நீ குடுத்த காசுக்கு உன்னை எலக்‌ஷன்லயா நிக்க வைக்க முடியும்?

26.  எனக்கு இந்த தொழிலே வேணாம்யா.. எத்தனை ஜென்மம் எடுத்தாலும் காட்ட முடியாத ஒரு வாழ்க்கையை  ஒரு நல்ல சாவு காட்டிடுச்சு... 
http://l.yimg.com/t/movies/movietalkies/20090112/21/snehaullal-7b-1_1231775016.jpg

இயக்குநர்க்கு பொக்கே குடுக்கும் ஷாட்ஸ்

1. பிரகாஷ்ராஜ் தன்னிடம் அடி வாங்கினாலும் ஆபத்து நேரத்தில் தன்னை தீவிரவாதியிடம் இருந்து காப்பாற்றினார் என்றதும் கை எடுத்துக்கும்பிடும் போலீஸ் ஆஃபீசர் கேரக்டர் வடிவமைத்த விதம்

2. யுவன் சங்கர் ராஜாவிடம் செமயான ஹிட்ஸ் சாங்க்ஸ் வாங்கியது.

3.உனக்கும் வேணும் எனக்கும் வேணும் பாடல் காட்சியை படமாக்கிய விதம்.

4. ஹாஸ்பிடல் காட்சியில்  திருடிய பணத்தை சிம்பு  திருப்பிக்குடுக்க வரும்போது அந்த பெரியவர் நடிப்பு.. அந்த காட்சி மார்வலஸ்



http://hotphotos.picswallpapers.com/var/albums/Sneha-Ullal/latest/Sneha-Ullal-latest-photo-003.jpg?m=1279039354
இயக்குநருக்கு சில யோசனைகள் & கேள்விகள்

1. இரண்டு வருஷத்துக்கு ஓட வேண்டிய மெகா சீரியல் ரேஞ்சுக்கு எதுக்கு படத்துல அத்தனை கேரக்டர்.? கசா முசான்னு ஏகப்பட்ட பேர் வர்றதால சாதாரண சினிமா ரசிகன் குழம்ப மாட்டானா?

2. படம் போட்ட முதல் ஒரு மணிநேரம் கதை எந்த திசைல பயணிக்குதுன்னே தெரில.. கதைல சுவராஸ்யம் கூட்ட க்ளைமாக்ஸ்ல பாம் வைக்கப்போற மேட்டரை ஆரம்பத்துலயே காட்டி இருந்தா டெம்ப்போ ஏத்தி இருக்கலாமே?

3. பரத் கேரக்டர் படத்துல எதுக்கு? தயவு தாட்சண்யமே இல்லாம அந்த கேரக்டரையே தூக்கி இருக்கலாம்.

4. அனுஷ்கா கில்மா பாட்டு சீன்ல லாங்க் ஷாட்ல யெல்லோயிஷ் ஷேடும் ,க்ளோஷப் ஷாட்ல ரெட்டிஷ் ஷேடும் எதுக்கு?அதெல்லாம் எம் ஜி ஆர் கால டெக்னிக் ஆச்சே?

5. எவண்டி  உன்னைப்பெத்தான் அவன் மட்டும் என் கைல கிடைச்சான் செத்தான் என்ற சூப்பர் ஹிட் பாடல்இப்படித்தான் பிக்சரைசேஷன் பண்றதா? ஏதோ க்ளப் சாங்க் மாதிரி இருக்கு.இந்தப்பாட்டை பட்டாசு கிளப்ப எடுத்திருக்கலாம்.

6. சிம்புவோட காதல் ஆழமா காட்டப்படல.. ஒரு டூயட் வெச்சிருக்கலாம். கோடீஸ்வரி பொண்ணு குப்பத்துப்பையனை ஏன் லவ்வறா? குப்பத்துப்ப்பையன் ஏன் அப்படி மல்ட்டி மில்லியனர் மாதிரி இருக்கான்? ஏகப்பட்ட லாஜிக் ஓட்டைகள்.

7. சிம்பு ஒரு சீன்ல  அப்பா டி ஆர் மாதிரி வாடா என் மச்சி வாழக்கா பஜ்ஜி பாட்டை ரீ மிக்ஸ் பண்ணி அவரை மாதிரியே ஆடி இருக்காரு.. அதைக்கூட மன்னிச்சுடலாம். ஆனா அவர் அப்போ செய்யும் ஆபாச சைகை ஓவர். ( சிங்கார வேலன்ல கமல் புதுச்சேரி கச்சேரி பாட்டுல.. பண்ணூவாரே.. அது போல )

8. சோனியாவின் கர்ப்பம் கலைந்ததும் பிரகாஷ்ராஜின் நடிப்பு இயல்பான நடிப்பின் கடைசிப்படியில் இருந்து ஓவர் ஆக்டிங்கின் முதல் படியை தொட்டது ஏன்?

9. பரத் பாடல் காட்சியில் எதுக்கு லைட்ஸ் எல்லாம் ஆஃப் ஆகி எரியுது,.. கண் வலி வந்தது தான் மிச்சம்..

10 ஹீரோ அறிமுகம் மகா சொதப்பல். 10 ரவுடிங்க வந்து அவர் எங்கே என க்கேட்பதும் அவர் உயரமான இடத்தில் இருந்து குதித்து8 ஓடுவதும் அவர்கள் துரத்துவதும் செம போர். ஏற்கனவே ஆர் பாண்டியராஜனின் நெத்தி அடி, ஊரை தெரிஞ்சுக்கிட்டேன் படங்கள்ல யும்,. ஜாக்கி சானின் போலீஸ் ஸ்டோரி, ஆர்மர் ஆஃப் காட் ல யும் பார்த்து பார்த்து சலிச்சாச்சு.

பரத் கூட 2 ஃபிகருங்க சுத்துது.. அதுங்க பரட்டைத்தலயோட ஏன் இருக்கு? ஒரு ரப்பர் பேண்டோ,க்ளிப்போ வாங்க கூட வசதி இல்லியா? அய்யோ பாவம்... ஆனா அந்த ஓப்பனிங்க் பாடல்ல  அந்த 2 ஃபிகரும் மழைல நனைஞ்சு ஒரு குலுக்கல் டான்ஸ் போடறாங்களே அடடா..
http://thatstamil.oneindia.in/img/2010/12/30-anushka-2001.jpg

இந்தப்படம் ஏ செண்ட்டர்ல 30 நாட்கள். பி செண்ட்டர்ல 20 நாட்கள், சி செண்ட்டர்ல  10 நாட்கள் ஓடும்

எதிர்பார்க்கப்படும் ஆனந்த விகடன் மார்க் - 38

எதிர்பார்க்கப்படும் குமுதம் ரேங்க்கிங்க் - ஓக்கே

 ஈரோடு அபிராமி,ஆனூர்,ஸ்ரீனிவசா,அன்னபூரணி என 4 தியேட்டர்ல ரிலீஸ் ஆகி இருக்கு. நான் அபிராமில பார்த்தேன்

 தியேட்டரில் ... ஒருத்தன்   தனுஷ் ரசிகனா இருக்கும்னு நினைக்கறேன்


எவண்டா  இந்த படத்தை எடுத்தான் அவன் மட்டும் என் கைல கிடைச்சான் செத்தான்  செத்தான்  செத்தான்  செத்தான்
என்று பாடி விட்டு செல்கிறான்.. எஹே ஹே ஹேய்

கோவை மாவட்டத்தில் உள்ள ஃபேமஸ் கோயில்கள் ஒரு பார்வை

 http://www.lordmurugan.com/images/parankundram_moolasthan.gif
திக்கெட்டும் அருள் பொங்கும் கொங்குநாட்டு கோயில்கள்!

அருள் தரும் ஆலயங்கள்

கோவை- கொங்கு தமிழ் கொஞ்சி விளையாடும் இந்தப் பெருநகரம், தொழில் வளர்ச்சியிலும் பொருளாதாரத்திலும் சிறந்து விளங்குவதற்குக் காரணம், இங்கு அமைந்திருக்கும் கோயில்களும், மக்களின் குறைதீர்க்கும் தெய்வங்களுமே!

1. தண்டுமாரியம்மனுக்கு நெய் விளக்கு! 
ஆங்கில ஆதிக்கத்தை எதிர்க்கத் துணிந்த திப்புசுல்தானின் பெரும்படைகள் கோவைக் கோட்டையில் முகாமிட்டிருந்தன. படை வீரர்களில் ஒருவன், அம்பாள் உபாஸகன். அவன் கனவில் தோன்றிய அம்பிகை, தான் யுகம் யுகமாக இந்த இடத்தில் வசிப்பதாகவும், நீர்ச் சுனைக்கு அருகில், வேப்ப மரங்களும் செடி- கொடிகளும் நிறைந்த இடத்தில் வீற்றிருப்பதாகவும் கூறினாள்.

மறுநாள் காலையில், அம்பிகை குறிப்பிட்ட இடத்துக்குச் சென்றான் படைவீரன். அங்கே, தெய்வீகம் பொங்கும் விக்கிரக ரூபமாகக்காட்சி தரும் அம்பாளைக் கண்டு மெய்சிலிர்த்தான். நல்லதொரு சுபமுகூர்த்த தினத்தில், சின்னதாக மேடை அமைத்து, அதில் அம்பாளை எழுந்தருளச் செய்தான். கூடாரத்தில் தங்கியிருந்த படைவீரனின் கனவில் வந்து தன்னை வெளிப்படுத்தியதால், இந்த அம்பாளுக்கு ஸ்ரீதண்டுமாரியம்மன் என்று பெயர் வந்ததாம் (வீரர்கள் தங்கும் கூடாரத்தைத் 'தண்டு’ என்பர்). 

தொடர்ந்து 9 செவ்வாய்க்கிழமைகள் இங்கு வந்து, ராகு காலத்தில் நெய் தீபம் ஏற்றி அம்மனை வழிபட, திருமணத் தடைகள் நீங்கும்; குழந்தை உருவ பொம்மையைக் காணிக்கை செலுத்துவதாக நேர்ந்துகொண்டால், பிள்ளை பாக்கியம் கிடைக்கும் என்கிறார்கள்.


2. காமதேனு அருள்பெற்ற பட்டீஸ்வரம்! 

காமதேனுவுக்கு அருள்புரிந்த சிவப் பரம்பொருள், அந்தத் தெய்வப் பசுவுக்கு ஏற்றம் தரும் வகையில், தனது லிங்கத் திருமேனியில் கொம்பு மற்றும் கால்குளம்பின் சுவடுகளுடன் காட்சி தரும் அற்புதத் திருத்தலம்- பேரூர் பட்டீஸ்வரம். காமதேனுபுரி, பட்டிபுரி என்றும் போற்றுவர். இங்கு கோயில் கொண்டிருக்கும் ஈசனுக்கு, ஸ்ரீபட்டிஸ்வரர் என்பது திருநாமம். அம்பாள்- ஸ்ரீபச்சைநாயகி.

இங்குள்ள ஸ்ரீநடராஜப் பெருமானின் திருமேனி, கொள்ளை அழகு! இதனாலேயே, கொங்குச் சோழர்கள் இந்தக் கோயிலை 'மேலைச் சிதம்பரம்’ என்று போற்றியுள்ளனர். பேரூர் ஆலயம் வந்து ஆடல்வல்லானைத் தரிசித்து வழிபட, கல்வி-கேள்விகளில் சிறக்கலாம் என்பது நம்பிக்கை. ஸ்ரீபட்டீஸ்வரரிடம் வந்து முறையிட்டால் காணாமல் போன பொருள்கள் விரைவில் திரும்பக் கிடைக்கும் என்கின்றனர்.


3. பண்ணாரி மாரியம்மன்! 

கோவை- மைசூர் பாதையில், சத்தியமங்கலத்தில் இருந்து சுமார் 14 கி.மீ. தொலைவில் கோயில் கொண்டிருக்கிறாள் ஸ்ரீபண்ணாரி மாரியம்மன். சுமார் 300 ஆண்டுகளுக்கு முன், அம்மன் சுயம்புவாகத் தோன்றிய திருத்தலம் இது என்கின்றனர்.

தினமும் இந்தத் திருவிடத்துக்கு வரும் பசு மாடு ஒன்று, இங்கே வேங்கை மரத்தடியில் இருந்த புதரின் மீது பால் சொரியுமாம். இதைக் கண்ட கிராமத்தவர்கள், ஒருநாள் அந்தப் புதரை விலக்கிப் பார்க்க, அம்பிகையின் சுயம்பு விக்கிரகத்தைக் கண்டு சிலிர்த்துப்போனார்கள். அப்போது அங்கிருந்தவர்களில் ஒருவரிடம் அருளாக வந்திறங்கிய அம்மன், ''இங்கே குடியிருக்கும் நான் எல்லோருக்கும் பாதுகாவலாக இருப்பேன்.

கேரளா மற்றும் கோவையில் இருந்து மைசூர் செல்லும் வணிகப் பெருமக்களுக்கு உறுதுணையாக இருந்து அருள்பாலிப்பேன்'' என்றாளாம்.
தினமும் 4 கால பூஜைகள் நடைபெறும் இந்த ஆலயத்தில், பங்குனி மாதத்தில் குண்டம் திருவிழா விசேஷம். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், லட்சக்கணக்கான பக்தர்கள் குண்டம் இறங்க வருகிறார்கள். 

இதனால், வேண்டியது நிறைவேறும், நோய்நொடிகள் எதுவும் அண்டாது என்பது நம்பிக்கை. தங்க ரதம் வடம் பிடித்தல் மற்றும் ஆடி நோன்பு முதலான வழிபாடுகளும் இங்கே பிரசித்தம்.


4. முதல் அழைப்பு கோணியம்மனுக்கு! 

கோவை- ஸ்ரீகோணியம்மன் ஆலயம், 13-ஆம் நூற்றாண்டில் இருளர்களால் கட்டப்பட்டது என்கிறது வரலாறு.

எதைச் செய்தாலும் இந்த அம்மனை வழிபட்டு விட்டுத் தொடங்குவதே கொங்கு மன்னர்களின் வழக்கமாம். இன்றும் இந்த அம்மனிடம் ஆசிபெற்ற பிறகே முக்கிய காரியங்களில் இறங்குகிறார்கள் கோவை மக்கள். கல்யாணம் முதலான சுபச் சடங்கு களின்போதும், முதல் பத்திரிகை கோணியம்மனுக்கே. துயரங்கள் தீரவும், நோய்கள் விலகவும், எண்ணியது நிறைவேறவும் வேண்டி, கோணியம்மனை மனதார வழிபடுகின்றனர்.


இங்கு வந்து மஞ்சள்காப்பு சாத்துவது, உப்பு இடுவது போன்ற நேர்த்திக்கடன்களைச் செய்வதன் மூலம் அம்மனின் பரிபூரண அருளைப் பெறலாம் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

கோணியம்மன் கோயில் தேர்த் திருவிழா வெகு கோலாகலமாகக் கொண்டாடப்படும். அன்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்படுமாம். மேலும் நவராத்திரி, ஆருத்ரா தரிசனம், ஆடி வெள்ளி, ஆடிப் பதினெட்டு ஆகிய விழாக்களும் சிறப்புற நடைபெறுகின்றன. கோவை சென்ட்ரல் பேருந்து நிலையத்திலிருந்து சுமார் 2 கி.மீ. தொலைவில் உள்ளது ஸ்ரீகோணியம்மன் திருக்கோயில்.


5. மருதமலைக்கு வந்து பாருங்க..! 

முருகப்பெருமானின் படைவீடுகள் அமைந்திடாத மாவட்டம் கோவை என்றாலும், படை வீடுகளுக்கு இணையான மருதமலையைப் பெற்றுத் திகழ்கிறது. மருத மரங்கள் நிறைந்திருப்பதால் மருதமலை எனும் பெயர் வந்தது என்கிறார்கள்.

இந்த மலைக்கு வந்த சித்தர் ஒருவர் தாகத்தால் தவித்தாராம். தாகம் தணிக்கத் தண்ணீர் தரும்படி முருகப் பெருமானிடம் வேண்டினாராம். மறுகணம், சுற்றிலும் இருந்த மருத மரங்களில் இருந்து தண்ணீர் கொட்டியதாம். சித்தரின் தாகம் தணிந்தது. இந்த அருளாடலால் மகிழ்ந்த அந்த சித்தர், 'மருதாஜலபதி’ என முருகனைப் போற்றினாராம். இதுவே பின்னர் மருதாசலபதி ஆனதாகச் சொல்வர் (சலம் என்றால் மலை; மருதமலையில் வீற்றிருப்பதால் மருதாசலபதி என்றும் சிலர் விவரிப்பர்). அற்புதமான இந்த ஆலயம் தோன்றியது கி.பி.12-ல் என்கிறார்கள்!

தெய்வப்பசுவாம் காமதேனுவும் இங்கு வந்து வழிபட்டுள்ளதாகப் புராணங்கள் கூறும். தைப்பூசம், திருக்கார்த்திகை தீபம், பங்குனி உத்திரம், தமிழர் திருநாள் ஆகிய விழாக் காலங்களில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் பாற்குடம், காவடிகள் சுமந்து வந்தும், முடி காணிக்கை செலுத்தியும், படி பூஜை செய்தும் முருகப் பெருமானை வழிபட்டுச் செல்கிறார்கள்.

இங்கு அருள்பாலிக்கும் தான்தோன்றிப் பிள்ளையா ரும் வரப்பிரசாதியானவர். பாம்பாட்டிச் சித்தர் தவமிருந்து முக்தி பெற்ற இந்தத் தலத்தில், சித்தரின் குகைக்குச் சென்று வழிபட, அவரின் திருவருளும் பரிபூரணமாகக் கிடைக்கும். மருதமலை முருகனை தனது இஷ்டதெய்வமாகப் போற்றிய, சாண்டோ சின்னப்பா தேவர் இந்தக் கோயிலுக்கு எண்ணற்ற திருப்பணிகள் செய்திருக்கிறார். கோவையில் இருந்து சுமார் 15 கி.மீ. தூரத்தில் உள்ளது மருதமலை. நீங்களும் ஒருமுறை மருதமலை முருகனைத் தரிசித்து வாருங்கள்; உங்களின் தீராத வினைகளும் தீரும் பாருங்கள்!

6. ஈச்சனாரி பிள்ளையார்! 

பேரூர், ஸ்ரீபட்டீஸ்வரர் ஆலயத்துக்காக விநாயகர் விக்கிரகம் ஒன்று வடிக்கப்பட்டு, மதுரையில் இருந்து கொண்டுவரப்பட்டது. சிலையைச் சுமந்து வந்த வண்டி, ஈச்சனாரி அருகில் வரும்போது நின்று விட்டது. எவ்வளவு முயன்றும் வண்டியை நகர்த்த முடியவில்லை. 'பிள்ளையார் இந்த இடத்திலேயே தங்க விரும்புகிறார்போலும்’ என முடிவு செய்த மக்கள், ஈச்சனாரியில் பிள்ளையாருக்கு கோயில் எழுப்பினராம் (கி.பி. 1500-ல் கட்டப்பட்டது என்கின்றனர்).

பிரணவ சொரூபமாகக் காட்சி தருகிறார் ஈச்சனாரி பிள்ளையார். எந்தத் திசையிலிருந்து பார்த்தாலும் தரிசனம் தெளிவாகக் கிடைக்கும்படி மூலவரை அமைத்துள்ளது சிறப்பு. கல்வி, கலை மற்றும்தொழிலில் சிறக்க, இந்தப் பிள்ளையாரை வழிபட்டுச் செல்கிறார்கள் பக்தர்கள். விநாயக சதுர்த்தி, சங்கடஹர சதுர்த்தி, பௌர்ணமி, அமாவாசை, சரஸ்வதி பூஜை மற்றும் திருக்கார்த்திகை தீப விழா இங்கே விசேஷமாகக் கொண்டாடப்படுகின்றன. கோவையிலிருந்து பொள்ளாச்சி செல்லும் வழியில் சுமார் 14 கி.மீ. தொலைவில் உள்ளது ஈச்சனாரி பிள்ளையார் திருக்கோயில்.


7. குழந்தை வரம் அருளும் கோதண்டராமர்! 

கோவையில் ஸ்ரீராமனுக்கு ஓர் ஆலயம் வேண்டும் எனும் விருப்பத்துடன் பக்தர்களால் நிர்மாணிக்கப்பட்ட ஸ்ரீகோதண்டராம ஸ்வாமி ஆலயம், சுமார் 77 வருடங்கள் பழைமை வாய்ந்தது. சென்ட்ரல் பேருந்து நிலையத்திலிருந்து நடந்து செல்லும் தூரத்திலேயே கோயில்கொண்டிருக்கிறார் இந்த கோதண்டராமர்!

இங்கே சீதாதேவி மற்றும் தம்பி லட்சுமணனுடன் ஸ்ரீராமன் தெற்கு நோக்கிச் சந்நிதி கொண்டிருப்பது விசேஷ அம்சம். இவரின் சந்நிதிக்கு நேர் எதிரில் அனுமன் சந்நிதி. மேலும் இங்கு ஸ்ரீவிநாயகர், நவக்கிரக சந்நிதிகளையும் தனிச் சந்நிதியில் அருளும் லிங்க மூர்த்தத்தையும் தரிசிக்கலாம்.

ஐந்து நிலை கோபுரத்துடன் அழகுறத் திகழும் ஸ்ரீராமர் ஆலயத்தில், தினமும் 6 கால பூஜைகள் நடைபெறுகின்றன. ஸ்ரீராமநவமி சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. மாதந்தோறும் இந்த ஆலயத்தில்...
கஷ்ட நிவர்த்திக்காக ஸ்ரீமகா சுதர்சன ஹோமம், வியாதி நிவர்த்திக்காக ஸ்ரீதன்வந்திரி ஹோமம், குழந்தைகளின் கல்வி சிறக்க ஸ்ரீஹயக்ரீவ ஹோமம் ஆகியன நடைபெறுகின்றன.

கலியுகத்தில் அனைத்து நன்மைகளையும் பெற்றுச் சிறக்கும் மார்க்கமாக, ஸ்ரீமந் நாராயணரால் நாரத முனிவருக்கு உபதேசிக்கப்பட்ட வழிபாடு- ஸ்ரீசத்ய நாராயண பூஜை. பௌர்ணமி தினங்களில் மாலை வேளையில் மிக அற்புதமாக நடைபெறுகிறது இந்த பூஜை. குழந்தை வரம் அருளும் தெய்வமான ஸ்ரீகோதண்டராமருக்குச் துளசி மாலை சமர்ப்பித்து வழிபட, துன்பங்கள் யாவும் நீங்கும் என்பது நம்பிக்கை.
 http://www.namadwaar.org/images/kalyanasrinivasaperumal.jpg
8. பிணி தீர்க்கும் காரமடைப் பெருமாள்! 

கோவையிலிருந்து சுமார் 29 கி.மீ. தூரத்தில் உள்ளது காரமடை ஸ்ரீரங்கநாதர் ஆலயம். இந்தப் பெருமாளுக்கு ஸ்ரீஅரங்க வேங்கடேசன், ஸ்ரீஅச்சுதன் ஆகிய திருநாமங்களும் உண்டு. உற்ஸவர் ஸ்ரீவேங்கடேசபெருமாள் ஸ்ரீதேவி- பூதேவியுடன் அருள்கிறார். தாயார் அரங்கநாயகி; மலையில் குடிகொண்டிருப்பதால், 'பெட்டத்து அம்மன்’ என்றும் திருப்பெயர் உண்டு. கோதை நாச்சியாரும் வரமருளும் நாயகியாய் இங்கு சந்நிதி கொண்டிருக்கிறாள்.

மூலவர் சுயம்புவாக, கிழக்கு நோக்கி அமர்ந்துள்ளார். மிகச் சிறந்த பிரார்த்தனைத் தலமாகிய இங்கு, வைணவ சம்பிரதாயப்படி பஞ்ச சம்ஸ்காரங்களை இந்தத் தலத்தாரிடம் (பட்டர்களிடம்) பெற்று, அரங்கனுக்கு அடிமைப் பணி செய்யும் தாசர்களின் பந்த சேவை, தண்ணீர் சேவை, கவாள சேவை ஆகியன பாரம்பரியமானவை. நவராத்திரி, புரட்டாசி சனிக்கிழமை, வைகுண்ட ஏகாதசி, திருத்தேர் விழா ஆகியன இங்கு சிறப்பாக நடைபெறுகின்றன. 

திருக்கல்யாண உற்ஸவத்தையட்டி, பெட்டத்து அம்மன் மலைக்குச் செல்லும் அர்ச்சகரே தாயாராக பாவிக்கப்பட்டு அழைத்து வரப்படுவார். பிறகு, ராமபாணம் சுழற்றும் வைபவமும், அவர்கள் கோயிலை அடைந்ததும் திருக்கல்யாணமும் சிறப்புற நடைபெறும்.

சுமார் 1,600 வருடங்கள் பழைமையானது இந்த ஆலயம்; சுயம்புவாகத் தோன்றிய பெருமாளுக்குத் திருமலை நாயக்கர் கட்டிய கோயில் இது! கரிகால் சோழன், மைசூர் மன்னர், கிருஷ்ணதேவ உடையார் ஆகியோரும் இங்கு வழிபட்டுள்ளனர்.

திருமலைநாயக்கரின் ராஜபிளவை நோய் தீர அருளியவர் இந்தப் பெருமாள். இவரை வழிபட, பக்தகோடிகளின் பிணிகளையும் நீக்கி அருள்புரிவார் என்பது நம்பிக்கை.


நன்றி - சக்தி விகடன்

ஒழுக்கத்துக்கு சம்பந்தமே இல்லாத சினிமாத் துறை - கவிஞர் வாலி

https://lh4.googleusercontent.com/-FWnZ8RSOqsM/TXj1XVoGkqI/AAAAAAAAtNA/1h_Xwms2ijU/s1600/anushka-hot-vaanam-movie-stills%25281%2529.jpg

1.ஒழுக்கத்துக்கு சம்பந்தமே இல்லாத சினிமாத் துறை - கவிஞர் வாலி#அடடா.. அதனாலதான் 40 வருஷத்துக்கும் மேலே அங்கேயே இருக்கீங்களா வர மனசில்லாம?

---------------------------

2. பூவா? தலையா? படத்துக்கு பாதி சம்பளம் தான் குடுத்தாங்க-நடிகை ஷெரீன் புகார் #அரை குறையான டிரஸ்ல நடிக்கறதா ஒத்துக்கிட்டு பல்டி அடிச்சீங்களோ?

 --------------------------------
 3. இப்போதைக்கு திருமணம் செய்யும் எண்ணம் இல்லை-நடிகை கரண்#40 வயசு ஆன பின்னும் அப்படி ஐடியா இல்லையா? இப்போ இல்லாட்டி எப்போ?

-----------------------------

4.பிரான்ஸ் செல்கிறது திருத்தனி டீம்-இயக்குநர் பேரரசு#மொட்டை போட திருப்பதியோ பழநியோ போனா பத்தாதா?

--------------------------

5.ஜெனிலியாவுக்கு ஜூலையில் திருமணம்# உங்க கல்யாண வாழ்க்கையில்” ஜெயம்” கிடைக்க வாழ்த்துக்கள்

----------------------
http://2.bp.blogspot.com/_YcU7A6403D0/TUHOrQ1qX6I/AAAAAAAAASo/SDA7_5aiZfU/s1600/kiran003.jpg
6.ஈரோட்டை சேர்ந்த ரஞ்சனியை, கார்த்திக்கு திருமணம் செய்ய முடிவெடுத்துள்ளனர்# அப்பாடா.. நம்ம ரூட்டு க்ளியர்.. தமனாவுக்கு ஒரு கவிதை எழுதலாம்

-------------------------------

7.கட்சியைக் காட்டிக் கொடுக்க மாட்டேன்-கருணாநிதி#உங்க குடும்பத்துல யார் யார் இருக்காங்கன்னு எங்களுக்கே தெரியுமே? நீங்க சொல்லனுமா? தலைவரே,.

----------------------

8.தங்கபாலு-வேட்பாளர் தேர்வு, நான் மட்டும் முடிவு செய்வது அல்ல#ஆமா சம்சாரத்தைக்கேட்காம எந்த முடிவும் எடுக்க மாட்டாரு,ஆனா கவுத்துடுவாரு

------------------------

9.உதயநிதி தனது பெண் குழந்தைக்கு அழகான தமிழ் பெயரை தேடிக் கொண்டிருக்கிறார்.#ஜெயான்னு வைங்க.அப்பவாவது அய்யா ஜெ த்வேஷத்துல இருந்து மாறட்டும்
 http://mimg.sulekha.com/sherin/stills/sherin-newhot06.jpg
_-----------------------------

10. சிம்பு எழுதிய எவன்டி உன்னை பெத்தான் பாடலை ஒன்றரை மணி நேரத்தில் மெட்டமைத்து உள்ளனர்.#வானம் வந்தா ஏழரை யாருக்குன்னு தெரிஞ்சிடும்?


-----------------------------

Thursday, April 28, 2011

ஈரோடு,கோவை,திருப்பூர் மாவட்டங்களில் நிலத்தடி நீர் அபாயம்????


http://www.foothillhydroponics.com/07-01-05-gardening-3.jpg
புல்தரையும் நீர்ப்பூங்காவும் நமக்கு அவசியமா?

ஓவியம்:சிவபாலன்
சு.தியடோர் பாஸ்கரன்


உலகின் பல நாடுகளில் நிலத்தடி நீர் பாதுகாப்புக்குக் கடுமையானச் சட்டங்கள் விதிக்கப்பட்டிருக்கின்றன. நிலத்தடி நீரை எடுத்துப் பயன்படுத்துவதாக இருந்தாலும், ஆழ்துளைக்கிணறு அமைப்பதாக இருந்தாலும், அரசாங்கத்திடம் அனுமதி பெற்றால்தான் செய்ய முடியும். நம் நாட்டில்... நிலைமையே தலைகீழ்.

 இங்கே... நிலத்தடி நீர் என்பது பொதுச் சொத்து. யார் வேண்டுமானாலும், எவ்வளவு நீரை வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம். விற்பனை செய்யலாம். எந்த வரைமுறையும் கிடையாது. சுதந்திரம் கிடைத்த சில ஆண்டுகளில் கிராமப்புறங்களுக்கெல்லாம் மின்வசதி கொடுக்கப்பட்டது. அதனால்தான் தோட்டங்களில் எல்லாம் ஆழ்துளைக் கிணறு அமைத்து நீரை எடுக்க ஆரம்பித்தனர். விளைவு... அடுத்த பத்தாண்டுகளுக்குள்ளாகவே நிலத்தடி நீர்மட்டம் பாதாளத்துக்குப் போக ஆரம்பித்தத்து.



ஈரோடு, திருப்பூர், சேலம், நாமக்கல், தர்மபுரி என்று பல மாவட்டங்களில் ஆயிரம் அடி வரை தோண்டினால்கூட தண்ணீர் கிடைக்காத பகுதிகள்தான் அதிகம் இருக்கின்றன. ஒருபுறம், காடுகள் அழிப்பு; இன்னொரு புறம், ஏரிகள் அழிப்பு. அதனால் நிலத்தின் மேல்மட்ட ஈரம்கூட முற்றிலும் காய்ந்து போய் விட்டது. கிடைக்கும் மழையைத் தக்க வைக்க முடியாமல் போய்விட்டது. ஆண்டுதோறும் மழை பெய்தாலும், தண்ணீர் பஞ்சத்துக்கு முடிவு கிடையாது.

இவ்வளவு மோசமான சூழ்நிலை நிலவினாலும், பாறைக்கடியில் பொக்கிஷமாக இருக்கும் நிலத்தடி நீரைப் பாதுகாக்க, இன்னமும் நாம் அக்கறை காட்டாமல்தான் இருக்கிறோம். கொஞ்சம்கூட யோசிக்காமல் சாயக்கழிவு உள்ளிட்ட இன்னபிற விஷயங்களால், நிலத்தடி நீரை முடிந்தளவு மாசுபடுத்தி விட்டோம். நீர் மாசுபடுவதையோ, குறைவதையோ நாம் உணர முடியாது.
http://www.dinamani.com/Images/article/2011/1/30/30ko1.jpg
மேல்நாட்டுப் பழக்க வழக்கங்களை நாகரிகம் என்று கருதி, அப்படியே நாம் கடைபிடிப்பது இன்னமும் கொடுமையான விஷயம். நீர்ப்பூங்கா, புல்தரை) போன்றவை இப்படிப்பட்ட நாகரிகத்தின் எச்சங்கள். நீர் எளிதாகக் கிடைக்கக்கூடிய வெப்பமில்லாத, குளிர்மிகுந்த மேலை நாடுகளில் இவற்றை ஏற்படுத்தி பராமரிப்பது சுலபம். குடிப்பதற்கே தண்ணீர் இல்லாமல், அல்லாடிக் கொண்டிருக்கும் வறண்ட பூமியில் இவை அவசியமா?

 இதைப் பற்றிக் கொஞ்சம்கூட யோசிக்காமல், காசை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு பூமியைக் குடைந்து நீர் எடுப்பது எந்த வகையில் நியாயம்? ஆஸ்திரேலியாவில் இப்படிப் புல்தரைகள் பாவுவதற்குக் கட்டுப்பாடுகள் உண்டு. அதேபோல மழைநீர் சேமிப்பும் கட்டாயமாக்கப்பட்டு இருக்கிறது.  

சூழல்கேடுகளுக்கு முதலில் துணைபோவது வசதி படைத்தவர்கள்தான் என்பதற்கு உதாரணம்... வறண்ட பகுதிகளில்கூட பல்லாயிரம் சதுரடிப் பரப்பளவில் கோல்ஃப் விளையாட்டுக்காக புல்வெளி திடல் அமைப்பதுதான். இது, இந்தியச் சுற்றுச்சூழலின் சிதைவுக்கு மிகமுக்கியமானதொரு எடுத்துக்காட்டு.
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhn4dfIbaxRSUKUyoa5kn3EYiiwKKGTrwTPPDRURHrNH4BY5_ZjlOvU_5gPMjwTtXrVg_MXj2b5bfV-B3LeCcO4qqOebI4_8FUzwGYeQUoo49EW-uU4c3uPBVEKgcF7vnKMHFG4RkQ_vjCo/s1600/0512+mdp+3+tn+ex.JPG
 இம்மாதிரியான காரியங்களுக்குப் பதிலாக, மனிதனின் அத்தியாவசியத் தேவைக்கு முன்னுரிமை அளிக்க அரசாங்கம் முன் வர வேண்டும். அதேப்போல எதற்கெல்லாம் நீரைப் பயன்படுத்துகிறோம் என்று கவனமாக இருக்க வேண்டும். அரிதான நீரைச் செலவழித்து ஆளைக் கொல்லும் புகையிலை போன்ற பயிர்களை நாம் பயிரிடுவது சரியா?

நமது தேசியக் கொள்கைப்படி, நீர்ப்பயன்பாட்டில் குடிநீருக்கு அடுத்தபடியாக விவசாயத்துக்குதான் முன்னுரிமை கொடுக்க வேண்டும். ஆனால், நடப்பது? பணக்காரத் தொழிலதிபர்கள் பலர் தங்கள் ஆலைகளுக்குப் பெருமளவில் நீரை உறிஞ்சிக் கொள்கிறார்கள். அதோடு கழிவுநீரை ஆற்றில் கலந்து விடவும் அவர்களில் பலர் தயங்குவதில்லை. நிலத்தடி நீரை உறிஞ்சியதால், கேரளாவில் 'பிளாச்சிமாடா’வில் கோகோகோலா குளிர்பான ஆலைக்கு எதிராக நடந்த போராட்ட நிகழ்வு, இதற்கு ஒரு சாட்சி.

ஆற்றுக்கு குறுக்கே அணைகளைக் கட்டினால் தமிழ்நாட்டின் வேளாண்மைப் பிரச்னைகள், குடிநீர்ப் பிரச்னை, மின்சாரத் தட்டுப்பாடு போன்றவை சரியாகி விடும் என்று நம்பப்பட்டது. ஆனால், என்ன நடந்தது? அமராவதி போன்ற நதிகள் வறண்டு, பாலைவனம் போல் காட்சியளிக்கின்றன. அணைப் படுகைகளில் வண்டல்தான் நிரம்பியுள்ளது.

பெரிய அணைத் திட்டங்களைப் போல், இன்று நதிகள் இணைப்பைப் பற்றிய பேச்சு அடிபடுகிறது. இதுவும் ஒரு கனவுதான். நம்பிக்கையின் பேரிலும், யூகத்தின் பேரிலும் இயற்கையை, மனிதர்கள் திருத்தி அமைக்க முயல்வது பேதமை. அண்ணா ஹஜாரே தனது கிராமத்தில் செய்ததைப் போல உள்ளூர் முயற்சிகளை ஊக்குவித்தாலொழிய 'நீர் சேமிப்பு’ என்பது நம் நாட்டில் சாத்தியமில்ல

நன்றி - பசுமை விகடன்

என்னது? என் கிட்டே சொந்த சரக்கு இல்லையா?

http://s.chakpak.com/se_images/14400_-1_564_none/hansika-motwani-wallpaper.jpg 

1.கூட இருந்தே குழி பறிக்கறதுல நம்ம தலைவர் தான் நெம்பர் ஒன்.. 

எப்படி சொல்றே..?

வாக்கிங்க் ஸ்டிக்கா கடப்பாரையை யூஸ் பண்றாரே..?


-------------------------------------

2. ஹன்சிகா மோத்வானி முன்னால பார்க்க அழகா இருக்காங்க.. ஆனா பின்னால பார்க்க சுமாரா தான் இருக்காங்க..

 முன்னுக்குப்பின் முரணாப்பேசாதே... 

-----------------------------------

3.  மிஸ் மோஹனா.. நான் உங்க வீட்ல எடுபுடி வேலை செய்ய ஆசைப்படறேன்.. 

 சாரி,, மிஸ்டர்.... என்னை கல்யாணம் செய்ய ஆசைப்பட்டா என் அப்பா கிட்டே போய் பேசுங்க.. 

------------------------

4.டைரக்டர் சார்.. எதுக்காக உங்க வீட்லயே சாராயம் காய்ச்சறீங்க?

என் கிட்டே சொந்த சரக்கே இல்லைன்னு ஊர் பூரா பேச ஆரம்பிச்சுட்டாங்க.. அவங்க வாயை அடைக்கத்தான்.

-----------------------

5. பால் விலை உயர்வு தனை எதிர்த்து ஆர்ப்பாட்டம் பண்ணனும்னா கோட்டைக்குத்தான் போகனும்.. தலைவர் எதுக்கு கோடம்பாக்கம் போறாரு?

அட நீங்க வேற.. அவரோட டார்கெட் ஆவின் பால் அல்ல.. அமலா பால்.. அவங்க ஜாஸ்தி சம்பளம் கேட்கறாங்களாம்..

--------------------------
http://tamil.koodal.com/cinema/gallery/actress/amala_paul/amala_paul_57_411201170910123.jpg
6. இந்த மேட்ச்ல இந்தியா தான் ஜெயிக்கனும்னு சாமி கிட்டே வேண்டிக்கறியே..?நாட்டுப்ப்ற்றா?

அதெல்லாம் இல்ல.. இந்த மேட்ச் ல இந்தியா ஜெயிச்சுட்டா ஒட்டுத்துணி  கூட இல்லாம் ஒரு பிட்டுப்படத்துல நடிப்பேன்னு நடிகை பேட்டி குடுத்து இருக்காங்களே?

---------------------------

7. நடிகை ரத்னா தேவி வெளி நாடு ஷூட்டிங்க்குக்கு வர மாட்டேங்கறாங்களா? ஏன்? 

 பாரத ரத்னா  விருது மிஸ் ஆகிடும்னு யோசிக்கறாங்களாம்.

-------------------------

8. ரசிகர் மன்றம் முன்னால ஏகப்பட்ட கூட்டம் நிக்குதே.. ஏன்?

நடிகையோட ரசிகர் மன்றத்துக்கு அமலாபால் பூத் அப்படின்னு பேர் வெச்சு இருக்காங்களாம்.. கண்டிச்சு போராட்டம் நடக்குது...

---------------------------

9. நீங்க காஃபி அல்லது பூஸ்ட் தான் குடிக்கறீங்க.. அது ஏன்?

காப்பி பேஸ்ட் எழுத்தாளன்னு ஒரு பேர் வந்துடுச்சு.. அதனால அதை டைவர்ட் பண்றேன்.. இப்போ பாருங்க காப்பி பூஸ்ட் எழுத்தாளன்னு சொல்வாங்க.. ஹி ஹி

---------------------------

10.  கல்யாண மண்டபத்துல எந்தப்பக்கம் மொய் எழுதறாங்க..?

ஏன் கேட்கறே,?

 அந்த ஏரியா பக்கம் தலை காட்டாம நைசா எஸ்கேப் ஆகத்தான்.. 

-----------------------
டிஸ்கி 1 - என்னை தாக்கி தினசரி 3 பதிவுகள் வந்துட்டு இருக்கு.. அதுக்கெல்லாம் ஏன் பதில் சொல்லலைன்னு நண்பர்கள் கேட்கறாங்க.. இலங்கைல ஒரு இனமே தாக்கப்பட்ட போதும் நாம் கையாலாகாம சும்மா பார்த்துட்டுதானே இருந்தோம்.. ஒரு இனம் தாக்கப்பட்ட போதே கண்டுக்காத நாம ஒரு தனி மனிதன் தாக்கப்பட்டா மட்டும் ஏன் பொங்கி எழனும்?

டிஸ்கி 2 - இது என் 445 வது போஸ்ட்.இதுல காப்பி பேஸ்ட் போஸ்ட் 44. மீதி எல்லாம் சொந்த சரக்கு தான்.அமரர் சுஜாதா கற்றதும் பெற்றதும்ல தான் படிச்ச நல்ல விஷயங்களை பகிர்ந்துக்கற மாதிரி நானும் படிச்ச நல்ல விஷயங்கலை ஷேர் பண்ணிக்கறேன்.. 

டிஸ்கி 3 - சிலர் சொல்றாங்க.. ஆனந்த விகடனின் சேல்ஸ் என்னால பாதிக்கப்படுதுன்னு.. விகடனின் சேல்ஸ் 8லட்சத்துக்கு மேல்.. ஆனா என் போஸ்ட்டை படிக்கறவங்க ஜஸ்ட் 1000 டூ 2000. இதுல என்ன பாதிப்பு?

ஆனந்த விகடன் VS - ஏ.பி.ஜெ. அப்துல்கலாம் பேட்டி

http://www.hope.ac.uk/thebighope/images/content/abdul%20kalam.jpg 
விகடன் மேடை - அப்துல்கலாம்

 'நண்பர்களே! உங்கள் கேள்விகளை எல்லாம் படித்துப் பார்க்கும்போது, எனக்கு ஓர் எண்ணம் தோன்றுகிறது. அதாவது, நம் நாட்டின் இளைய சமுதாயத்துக்கு, 'என்னால் முடியும்’ என்ற நம்பிக்கை மிகவும் முக்கி யம். அது நல்ல புத்தகங்களில் இருந்தும், நல்ல பெரியோர்களிடம் இருந்தும், நல்ல ஆசிரியர்களிடம் இருந்தும், தெய்வீகப் பெற்றோர்களிடம் இருந்தும்தான் கிடைக்கும்.

'என்னால் முடியும்’ என்ற நம்பிக்கை உங்களுக்குள் உதயமானால், மக்களுக்கு 'நம்மால் முடியும்’ என்ற நம்பிக்கை வளரும். நம்மால் முடியும் என்ற நம்பிக்கை வந்தால், இந்தியாவால் முடியும். அப்படிப்பட்ட நம்பிக்கை ஏற்பட்டால், வளமான இந்தியாவை... ஓர் அமைதியான இந்தியாவை நம்மால் உறுதியாக அமைக்க முடியும். 60 கோடி இளைய சமுதாயத்தின் சக்தி, 'நம்மால் செய்ய முடியும்’ என்ற நம்பிக்கையின் சக்தியாக மாறுமானால், இந்தியா 2020-க்குள் வளர்ந்த நாடாக மாறும் என்பது திண்ணம்!''

 - ஏ.பி.ஜெ.அப்துல் கலாம்
எஸ்.சங்கரன், காரைக்குடி.

1.''உங்கள் ரோல் மாடல் யார்?''

''என் 10-வது வயதில், பறவையின் பறக்கும் விதம்பற்றிக் கற்பித்து, வாழ்க்கையில் பறக்க வேண்டும் என்ற எண்ணத்தை விதைத்த என் ஆசிரியர் சிவசுப்பிரமணி ஐயர்தான் என் ரோல் மாடல்!''

கே.மாலதி, நாச்சியார்புரம்.

2. ''நீங்கள் ஜனாதிபதியாக இருந்தபோது நடந்த சுவாரஸ்யமான சம்பவம் ஏதாவது சொல்லுங்கள்?''

''நான் 11-வது குடியரசுத் தலைவராக இருந்தபோது, தினமும் குறைந்தது, 100 மாணவர்களிடமாவது உரையாடுவது வழக்கம். அப்போது ஒருநாள், 9-ம் வகுப்பு மாணவன் என்னுடைய கேள்விக்குப் பதில் அளித்தான். பார்வையற்ற அந்த மாணவனின் பெயர் ஸ்ரீகாந்த்.

அவன் சொன்னான், 'நான் ஒருநாள் இந்தியாவின் பார்வையற்ற முதல் ஜனாதிபதி ஆவேன்’ என்று. என்ன ஒரு லட்சியம், தன்னம்பிக்கை அந்த மாணவனுக்கு!

அந்த மாணவன் அதன் பின் படித்து 10-ம் வகுப்பில் 90 சதவிகித மதிப்பெண்கள் பெற்றான். 12-ம் வகுப்பில் 96 சதவிகித மதிப்பெண்கள் பெற்றான். அவனது லட்சியம், அமெரிக்காவின் பாஸ்டன் மாநகரில் உள்ள  MIT-ல் கல்வி கற்பதாகும்.

முதன்முறையாக  MIT அவனுக்கு கம்ப்யூட்டர் சயின்ஸ் படிக்க அனுமதி அளித்தது. அவனைப் படிக்கவைக்க, 'லீட் இந்தியா 2020’ என்ற இயக்கம், GE கம்பெனி உதவியோடு அமெரிக்கா அனுப்பியது. இதில் என்ன சுவராஸ்யம் என்றால், GE கம்பெனி மேலாளர் அவனுக்கு, 'நீ படித்து முடித்ததும் உனக்கு வேலை தரத் தயாராக இருக்கிறோம்!’ என்று இ-மெயில் அனுப்பினார்.

அதற்கு ஸ்ரீகாந்த், 'உங்கள் உதவிக்கு நன்றி. ஒருவேளை, நான் இந்தியாவின் பார்வையற்ற முதல் ஜனாதிபதி ஆகாவிட்டால், உங்கள் அழைப்பை ஏற்கிறேன்’ என்று பதில் அனுப்பினான். என்ன ஒரு தன்னம்பிக்கை. இதுபோல, கொண்ட லட்சியத்தில் மாறாத உறுதி இளைய சமுதாயத்துக்குத் தேவை!''

இள.செம்முகிலன், விருத்தாச்சலம்.

3.''நீங்கள் தமிழ் சினிமாக்கள் பார்ப்பது உண்டா? உண்டு என்றால், சமீபத்தில் பார்த்த படம் என்ன?''

''கடந்த 50 வருடங்களாக சினிமா பார்க்கவில்லை. அதனால் நான் இழந்தது என்று ஏதும் இல்லை!''

ப.நலங்கிள்ளி, திருப்பத்தூர்.

4.''பால்ய கால சந்தோஷத் தருணங்களை நினைவுகூருங்களேன்?''

''நான் மேல்நிலைக் கல்வி படிக்கும்போது, தமிழ் பாடத்தில் 100-க்கு 95 மதிப்பெண்கள் பெற்றேன். என் தமிழ் ஆசிரியர் எனது விடைத் தாளை வகுப்பு முழுவதும் காண்பித்து, அனைவரும் இப்படி மார்க் எடுக்க வேண்டும் என்று கூறினார். அப்போது எனக்குக் கிடைத்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை!''

பொன்.சிங்கமுத்து, கும்பகோணம்.

5.''கவிஞர் நீங்கள். காதலித்தது இல்லை என்று சொன்னால், நம்ப மாட்டேன். உங்கள் முதல் காதலி யார்?''

''அறிவுத் தாகம்!''
ஆ.சங்கர், திருப்பூர்.

'5. B. 'உங்களின் கல்லூரிக் காலத்தில், உங்களோடு படித்தவர் எழுத்தாளர் சுஜாதா, அவருடனான உங்களின் நினைவுகளை எங்களிடம் பகிர்ந்துகொள்ளலாமே?''

''நானும் சுஜாதாவும் எப்போதும் முதல் பெஞ்சில் அமர்ந்து இருப்போம். ஆசிரியர் கேள்வி கேட்டு முடிப்பதற்கு முந்தியே நாங்கள் முந்திக்கொண்டு, எல்லா கேள்விகளுக்கும் பதில் அளிப்பதால், எங்களுக்கு முந்திரிக்கொட்டை என்று பெயர். சுஜாதா என் இனிய நண்பர்!''

ப.சிவராமன், பழநி.

'6. 'விஞ்ஞானி, ஆசிரியர், குடியரசுத் தலைவர் - உங்கள் மனதுக்கு நெருக்கமாக இருந்த பொறுப்பு எது?''

''ஆசிரியர்!''

ஜெ.ஜெர்லின் அபிஷகா, கன்னியாகுமரி.

7. ''இந்தியாவில் வல்லரசு என்ற வார்த்தையை நீங்கள்தான் பிரபலம் ஆக்கினீர்கள். ஆனால், காலம் காலமாக வல்லாதிக்க எண்ணம்தானே பெரிய நாடுகளை எல்லாம் சிதறடித்து வந்திருக்கிறது?''

''நான் சொல்வது 2020-ல் இந்தியா பொருளாதார மேம்பாடு அடைந்த, பாதுகாப்பு மிகுந்த, அமைதியான, ஏற்றத்தாழ்வு இல்லாத சமதர்ம சமுதாயம்கொண்ட வளர்ந்த நாடு என்ற அந்தஸ்தை எட்டுவோம் என்றுதான். தவிர, வல்லரசு என்ற கோட்பாடு உலகத்திலேயே இப்போது இல்லை!''
 http://robinindia2020.com/abdulkalam.jpg
எஸ்.பெனாசிர், புதுக்கோட்டை.

8.''2020-ல் நிச்சயம் உங்களின் கனவு நிறைவேறும் என்று இப்போதும் நம்புகிறீர்களா?''

''60 கோடி இளைய சமுதாயத்தின் சக்தி, 'நம்மால் செய்ய முடியும்’ என்ற நம்பிக்கையின் சக்தியாக மாறுமானால், இந்தியா 2020-க்குள் வளர்ந்த நாடாக மாறும் என்பது திண்ணம்.

எனது கனவு, 125 கோடி மக்களின் முகத் தில் மகிழ்ச்சி கலந்த புன்னகையைப் பார்ப் பதுதான். அது இந்தியாவின் எழுச்சிகொண்ட இளைய சமுதாயத்தால் கண்டிப்பாக நிறை வேறும் என்று நம்புகிறேன்!''

சே.செல்லத்துரை, மேட்டுப்பாளையம்.

9.''கல்பாக்கம் அணு உலை கடுமையான பூகம்பத்தைத் தாங்க முடியாத இடத்தில் இருக்கிறது என்கிறார்களே... உண்மையா?''

''இந்திய அணு உலைகளின் பாதுகாப்பு மிக முக்கியமானது. அவற்றை மீண்டும் கண் காணித்து, சுனாமியுடன் பூகம்பமும் சேர்ந்து வந்தால், அதைத் தாங்கிச் செயல்படக்கூடிய சக்தி இருக்கிறதா என்பதைத் தீவிரமாக மறு பரிசீலனை செய்து, மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது!'' 

Wednesday, April 27, 2011

சொப்பன சுந்தரி வெச்சிருந்த காரை இப்போ யாரு வெச்சிருக்கா?




புது காரில் புகை! என்ன செய்வது?

1. அடகுக் கடைகளில் ஆங்கிலத்தில் கண்டிஷன் களை எழுதி கையெழுத்து வாங்குகிறார்கள். இதை தமிழில் எழுதித் தரவேண்டும் என்று கேட்க முடியுமா?

-ஆனந்த் ராஜ், போரூர்
.
''நிச்சயம் கேட்க முடியும். காரணம், இன்றைக்கு பட்டித்தொட்டிகளில் எல்லாம் நீக்கமற நிறைந்திருக்கின்றன அடகுக் கடைகள். கடைகளின் எண்ணிக்கை உயர்ந்ததற்கேற்ப அடகு வைக்கிறவர்களின் எண்ணிக்கையும் கணிசமாக அதிகரித்திருக்கிறது.

 பான் புரோக்கர் என்று சொல்லப்படும் சிறிய அடகுக் கடைகளாகட்டும் அல்லது பல்வேறு நகரங்களில் இயங்கும் பெரிய நிறுவனங்கள் ஆகட்டும், ஆங்கிலத்தில் அச்சடிக்கப்பட்ட பேப்பரில்தான் கையெழுத்து வாங்குகிறார்கள்.
நம் மக்கள் எல்லோருக்கும் ஆங்கிலம் தெரியும் என்று சொல்ல முடியாது.

பெரும்பாலும் ஏழை மக்கள்தான் இது மாதிரியான அடகுக் கடைகளை அதிகம் நாடுகிறார்கள். அவர்கள் எளிதில் படித்துப் பார்த்து புரிந்து கொள்ளும் வகையில் விதிமுறைகளைத் தமிழில் அச்சடித்துத் தந்தால், பிற்பாடு ஏற்படும் சச்சரவுகள் உருவாகாமலே தடுக்க முடியும். மகாராஷ்டிராவிலும், குஜராத்திலும் விதிமுறைகள் இந்தியில் அச்சடிக்கப்பட்டு கொடுக்கும்போது தமிழ்நாட்டில் மட்டும் ஏன் தமிழில் அச்சடித்துக் கொடுக்க முடியாது? ஆனால், அடகு வைக்கிறவர்கள் இதை வாய் திறந்து கேட்டால் மட்டுமே கிடைக்கும்.''


2. வாஷிங்மெஷின் ரிப்பேராகி விட்டது. இப்போது கேட்டால் அந்த மாடலை நிறுத்திவிட்டோம் என்கிறார்கள். ஸ்பேர்பார்ட்ஸ் கிடைக்காது என்கிறார்கள். இவர்கள் மாடலை நிறுத்திவிட்டார்கள் என்பதற்காக நான் பாதிப்படைய முடியுமா?

-பிரபாகர், காரைக்கால்
.
''உங்கள் வாதம் சரியானதே. வாஷிங்மெஷினில் மட்டுமல்ல, இரு சக்கர வாகனங்கள் தயாரிக்கும் நிறுவனங்கள் கூட தங்களுடைய இஷ்டத்துக்கேற்ப பல மாடல்களை மார்க்கெட்டில் அறிமுகம் செய்கின்றன. சில மாடல்கள் மிகப் பெரிய வெற்றி கண்டு நிறைய விற்பனையா கின்றன. இன்னும் சில மாடல்கள் கன்ஸ்யூமர் களிடம் போதிய அளவு வரவேற்பு கிடைக்காததால் அதை உற்பத்தி செய்வதை நிறுத்திவிடுகிறது.

 ஆனால், திடீரென  உற்பத்தி செய்வது நிறுத்தப்படும் பட்சத்தில் அதற்கான ஸ்பேர்பார்ட்ஸ்களை கட்டாயம் கொடுத்தாக வேண்டும். அப்படி கொடுக்காவிட்டால், பழைய வாஷிங்மெஷினையோ, வாகனத்தையோ வாங்கிக் கொண்டு புதியதை கொடுக்கும்படி கேட்கும் உரிமை கன்ஸ்யூமர்களுக்கு நிச்சயம்  இருக்கிறது என்பதை மறந்துவிடாதீர்கள்.''


3. கடந்த ஜூலை மாதம் முதல் எனது செல்போனில்  நெட்வொர்க் பிராப்ளம் என்று வருகிறது. இது தொடர்பாக எத்தனையோ முறை புகார் செய்தும், மெயில் அனுப்பியும் எந்த பிரயோஜனமும் இல்லை. என் குறை தீர என்ன செய்வது?

-அன்பு, கும்மிடிப்பூண்டி
.
''டிராய் என்று சொல்லப்படுகிற தொலைதொடர்பு கட்டுப்பாட்டு வாரியம் ஒவ்வொரு மாநிலத்திலும்  நோடல் ஆபீஸர் என்று ஒருவரை நியமித்திருக்கிறது. இந்த நோடல் ஆபீஸர்களின் வேலையே செல்போன் நிறுவனங்கள் தொடர்பாக வரும் புகார்களை விசாரித்து நடவடிக்கை எடுப்பதே. ஏர்டெல் நிறுவனத்துக்கு சென்னை சாந்தோமில் அலுவலகம் இருக்கிறது.

 ஏர்செல் நிறுவனத்துக்கு கோவை, மதுரை, திருச்சி, பாண்டிச்சேரி என பல நகரங்களில் நோடல் ஆபீஸர்கள் இருக்கின்றனர். சம்பந்தப்பட்ட செல்போன் நிறுவனத்தின் இணையதளத்தில் புகுந்து தேடினாலேயே இந்த நோடல் ஆபீஸர்களின் அலுவலகம் அமைந்திருக்கும் முகவரி, அவர்களின் போன் நம்பர் என அனைத்தும் கிடைத்துவிடும். செல்போன் சர்வீஸ் தொடர்பான எந்த குறையாக இருந்தாலும் இந்த நோடல் ஆபீஸரிடம் தாராளமாக தெரிவிக்கலாம்.''


4. சமீபத்தில் புது கார் ஒன்றை வாங்கினோம். வாங்கிய மறுநாளே காரிலிருந்து புகை வந்தது. இதுபற்றி புகார் செய்து, பத்து நாளைக்குப் பிறகுதான் வந்து பார்த்தார்கள். இதோ, அதோ என்று நான்கு நாட்கள் இழுத்தடித்துதான் சரி செய்து கொடுத்தார்கள். லட்சக்கணக்கில் செலவு செய்து ஒரு புது காரை வாங்கினோம் என்கிற மகிழ்ச்சியே எங்களுக்கு போய்விட்டது. நாங்கள் என்ன செய்ய?
-லலிதா, வளசரவாக்கம்
.
''இது மாதிரியான விஷயங்களில் நம் செயல்பாடு எப்படி இருக்கிறது என்பது முக்கியமான விஷயம். புத்தம் புதிய காரை முதல் முறையாக வெளியே எடுத்துச் செல்லும்போதே அதிலிருந்து புகை வருகிறது என்றால் காரை அதே இடத்தில் நிறுத்திவிட்டு, கார் வாங்கிய நிறுவனத்துக்கு போன் செய்து, உடனடியாக வந்து காரை சரி செய்து கொடுக்கும்படி சொல்ல வேண்டும்.

 அவர்கள் வந்து சரி செய்து கொடுக்கும்வரை காரை அந்த இடத்திலிருந்து எடுக்க மாட்டேன் என்று சொன்னால், வேறு வழியில்லாமல் ஓடிவருவார்கள். அப்படி வந்து சரி செய்து கொடுப்பதோடு பிரச்னையை விட்டுவிடக்கூடாது.

'காரிலிருந்து மீண்டும் புகை வராது என்பதை உறுதிப்படுத்த 100 கி.மீட்டருக்காவது தன்னோடு பயணம் செய்ய வேண்டும்’ என்று கேளுங்கள். அதெல்லாம் முடியாது என்று சொன்னால், இந்த காரை எடுத்துக் கொண்டு புது காரை கொடுக்கும்படி கேளுங்கள். இப்படி கேட்பது கார் நிறுவனம் வேண்டுமானால் அநியாயம் என்று நினைக்கலாம்.

 ஆனால், கன்ஸ்யூமரை பொறுத்தவரை, இதெல்லாம் நியாயமான கோரிக்கைகளே. இந்த விஷயத்தை நீங்கள் இப்படி டீல் செய்யும் பட்சத்தில் நீங்கள் புகார் செய்தவுடன் உங்களைத் தேடி வந்து பிரச்னையை சரி செய்து கொடுத்துவிட்டுப் போவார்கள். அநாவசியமாக நீங்கள் அலைய வேண்டிய அவசியம் இருக்காது!''

நன்றி - மோட்டார் விகடன்