Monday, January 31, 2011

மீனவ நண்பன்


தலைவா...!

உங்களை கடலில் தூக்கிப்போட்டால்

கட்டுமரமாக மிதப்பீர்களாமே...

ஆனால் நாங்கள் கடலில்

பட்டுப்போன மரமாக

வீசப்படுகிறோம்.

எங்கள் இனங்கள் பிணங்களாய்

மிதக்கின்றன..

நீங்கள் எத்தனை கோடி வேண்டுமானாலும்

சுருட்டிக்கொள்ளுங்கள்...

அது அரசியல்வாதிகளின் அடிப்படை உரிமை..

ஆனால்

எங்கள் உரிமைகளுக்கு ஒரு கோடியாவது காண்பியுங்கள்..

கூட்டணிக்கட்சித்தலைவர்களுக்கு

இதயத்தில் இடம் கொடுத்தது போதும்..

எங்கள் உயிர் உடலில் தங்க

ஒரு இடம் கொடுங்கள்..

ஓட்டுக்காக இலவசங்களை அள்ளி

வீசுகிறீர்கள்...

எங்கள் உயிர் எங்கள் வசம் தங்க

ஒரு ஏற்பாடு செய்யுங்கள்..

எம் ஜி ஆர் படத்தில் நடித்தே மீனவ நண்பன் ஆனார்...

நீங்கள் அரசியல் மேடையில் நடித்து

மீனவ எதிரி ஆகி விடாதீர்..

கடைசியாக ஒரு வார்த்தை...

இலங்கைத்தமிழர்களைத்தான் காக்க முடியவில்லை..

இங்கே இருக்கிற தமிழர்களையாவது.........

காதல் வானவில் - கவிதை


http://rammalar.files.wordpress.com/2010/12/rainbow1.jpg 
வரும் .......வரும் ...........என 

தோட்டத்துப்பாத்திகளெல்லாம் 

காத்திருக்க 

பாதை மாறிப்போனது ஏன் நதியே?

விதைப்பது வீண் என்று தெரிந்தும் 

பாலைவனத்தில் பதியம் ஏன் சகியே..?

http://www.uyirmmai.com/Images/ContentImages/uyirosai-49/rain-cover.jpg
மொட்டு மலர தென்றல் தாலாட்டலாம்.

ஆனால் தென்றலைக்காண மொட்டு..?

மண்ணருகே நீர் இருந்தும் 

வானம் பார்க்கும் பூமியாய் நீ....


உன் அருகே நான் இருந்தும் 

நிலாவைப்பிடிக்க ஆசைப்படும்

சின்னக்குழந்தையாய் நீ...
http://ahshaja.files.wordpress.com/2010/07/love_water_beach_bg2.jpg
பூமிக்குப்பிடித்தது சூரியன் என்பது தெரிந்தும்

மழைச்சாரல் என்னும் கவிதை வழியாகவாவது

மண்ணைத்தொடத்துடிக்கும்

வானவிலாய் நான்.

டிஸ்கி -1 :  இந்தக்கவிதை தினமலர் வார மலர் இதழில் வெளியானது.மேலே உள்ள 5 ஃபிகர்களில் என் ஆள் எது?ன்னு யாரும் கேக்காதீங்க.. அதுல யாரும் என் ஆள் இல்ல..( என்ன ஒரு வருத்தம்?)

டிஸ்கி 2 - கலியுகம் தினேஷ்தான் முதல்ல பாஸ்னு என்னை கூப்பிட ஆரம்பிச்சார்..சரி போனாப்போகுது ஒருத்தர்தானேன்னு நானும் விட்டுட்டேன்,,இப்போ ஆளாளுக்கு தல.. பாஸ்.. அப்படின்னு கூப்பிடறாங்க.. சிலர் ஒரு படி மேலே போய் அண்ணேன்னு கூப்பிடறாங்க.. இதெல்லாம் ரொம்ப ஓவரு.. எனக்கே வயசாகிப்போன மாதிரி ஒரு ஃபீலிங்க் வந்திடுச்சு..அதனால இனி என்னை எல்லாரும்  டேய்  சிபி  , அடேய் செந்தில் இப்படி கூப்பிடுங்க.. ஏன்னா நான் எல்லாருக்கு தம்பி மாதிரி.. ஹி ஹி ஹி 

டிஸ்கி 3 - நேத்து நெட் பக்கம் வராதவங்களுக்காக....

 

2. வாடா போடா நண்பர்கள் - சினிமா விமர்சனம்

 

3. THE GREEN HORNET - காமெடி + ஆக்‌ஷன் - ஹாலிவுட் சினிமா விமர்சனம்

 

4 உயிரினும் மேலான உடன் பிறப்பே.....

Sunday, January 30, 2011

உயிரினும் மேலான உடன் பிறப்பே.....

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjUzktyI7M1Whtu1AQmaY2gMH5XxWuhO_gyAg59cfBeqDwB-ch0cbRUXYnXl-H0kYK3KpJXqskG0ZdqMLbOyp6Qfj5ZvNoJYuBUEvCgBYmBZPXs1Y0D6C4cW5fgXVHj_oWQBFd_4OZ8TUMC/s1600/Tamanna-bhatia-actress3.jpg
1.ஆசிரியர் - வெள்ளையர் ஆட்சியை ஏன் எதிர்த்தோம்?

மாணவன் - எத்தனை நாளுக்குத்தான் வெளி ஆட்கள் நம்ம நாட்டை கொள்ளை அடிக்க அனுமதிப்பது?

-----------------------------------------------------

2. பி ஜே பி - காங்கிரஸ் என்ன வித்தியாசம்?

இவங்க கர சேவை செய்யத்துடிக்கறாங்க.. அவங்க கரப்ஷன் ( CORRUPTION) சேவை (ஊழல்) செஞ்சே நம்மளை துடிக்க வைக்கிறாங்க...


-------------------------------------------------------------

3.தலைவ்ரே.. மார்ச் மாசத்துக்குள்ள விலைவாசி குறையும்னு எப்படி சொல்றீங்க?

மாசத்தை சொன்னேன்... வருஷத்தை சொன்னேனா?


-----------------------------------------------

4.அந்த காலேஜ் ஸ்டூடண்ட்  அரசியல்வாதி பையன் தான்னு எப்படி சொல்றே?

க்ளாஸ்ரூம்ல எந்த ஃபிகர்ட்டயும் நான் கிஸ் கேக்கலை.. ஆனா அவங்களா குடுத்தா நான் வேணாம்னு சொல்லமாட்டேன் அப்படின்னானே..?


-------------------------------------------------


5.எந்த செல்ஃபோன் கம்ப்பெனிக்கு மாறுனாலும் இனி நம்ம செல்ஃபோன் நெம்பர் மாறாதாமே..?

இதென்ன பிரமாதம்?  எந்தக்கட்சி கூட கூட்டணியை மாத்திக்கிட்டாலும் நம்ம தலைவர் 25 சீட்தான் வேணும்னு அடமா மாறாம இருக்காரே..?

----------------------------------------------------------
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgg_7n9ELn9_pc8M-1jzIcPj8KZqC0xo1f_dYYqeVBEdbmxLxPHXm95OLkIqhPi1-R8P3y1VYFJB64ySmBXCpN8agYST3ZLb8YayrWoRO_BE6XJ1fdB8zvoKYzS-CZynUWMwshrjsQ3GETt/s1600/Tapsee+photos+1.jpg
6.ரொம்ப நாள் கழிச்சு மேடை ஏறுன மகளிர் அணித்தலைவியை பார்த்து தலைவர் கொண்டாட்டம் ஆகிட்டார்.

இருக்கட்டும், அதுக்காக மேடையிலேயே  “ அடி யாத்தே யாத்தே” னு வேட்டியை முகத்துல மூடிக்கிட்டு பாட்டு பாடி ஆடனுமா?

-----------------------------------------------------

7. மிஸ். மோஹனா.. உங்களை நான் 10 வருஷமா லவ் பண்றேன்..

ரொம்பப்பழசான ,  வயசான லவ்வா இருக்கே..?

-----------------------------------------------------------

8.தலைவருக்கு சினிமா நாலெட்ஜூம் இல்ல.. ரவுடிகள் நடமாட்டம் பற்றிய நாலெட்ஜூம் இல்லன்னு எப்படி சொல்றே..?

ராக்கெட் ராஜாங்கறது  சயிண்ட்டிஸ்ட் ஆளா?ன்னு கேக்கறாரே..

-------------------------------------------------------

9.தலைவ்ரே.. நேர்மையான ஆட்சி நடத்துவீங்களா?ன்னு நிருபர் கேக்கறரு..

இன்னுமாய்யா இந்த உலகம் என்னை நம்புது...

------------------------------------------------------

10  அசிஸ்டெண்ட் டைரக்டர் - சார்... வீடு வாடகைக்கு வேணும்...

ஹவுஸ் ஓனர் - ஸாரி.. சினிமாக்காரனுக்கு வீடு தரமாட்டோம்.

அசிஸ்டெண்ட் டைரக்டர் - சினிமாக்காரரை நம்பி சி எம் சீட் தர்றீங்க.. நாட்டை தர்றீங்க.. சிம்ப்பிளா ஒரு வீட்டை வாடகைக்கு தர மாட்டேங்கறீங்களே...

--------------------------------------------

டிஸ்கி 1 -- வட போச்சே....


டிஸ்கி 2 - போன இடுகைல தாப்ஸி பற்றி போட்ட கமெண்ட்டுக்கும், தமனா பற்றி சொன்னதுக்கும் கடும் எதிர்ப்பு.. அதனால 2 பேர் ஃபோட்டோவும் போட்டுட்டேன்.. யாரை வேணாலும் ரசிச்சுக்குங்க..( காசா.. பணமா?). 2 பேருக்கும் உள்ள ஒற்றுமை என்னன்னா 2 பேரும் வெளில எங்காவது போறப்ப தலை சீவ மாட்டாங்க போல..அப்புறம் ரொம்ப ஓப்பன் டைப்.. ஹி ஹி

டிஸ்கி 3..- நேத்து நெட் பக்கம் வராதவங்களுக்காக....

1.

பதினாறு - டீன் ஏஜ் வில்லேஜ் லவ் - சினிமா விமர்சனம்

 

2.

வாடா போடா நண்பர்கள் - சினிமா விமர்சனம்

 

3.

THE GREEN HORNET - காமெடி + ஆக்‌ஷன் - ஹாலிவுட் சினிமா விமர்சனம்





Saturday, January 29, 2011

பதினாறு - டீன் ஏஜ் வில்லேஜ் லவ் - சினிமா விமர்சனம்

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgte2Di1pC5KWzZwwigqHsE-S7x5OHzpgaborjJ-nCnY636gZT2RKnqbIUIO0OPu46q1F6Crk98tR77VJW_K6m-0zXXSP47h7zFz8x7EAAH9ax9wUH0M-n-WTHfRdENkYqfBTiGXblYREw/s320/pathinaru+Songs+Free+download+Cd+Covers.jpg

ஆனந்த விகடனில் தொடராக வந்த சொர்ணமுகி படத்தோட ஒன்லைன் தான்
கதை..(கே எஸ் அதியமான் டைரக்‌ஷனில் ஆர் பார்த்திபன் நடித்த படம்).அதாவது  காதலி ஒரு சிக்கலான கட்டத்தில் ஒரு கால அவகாசம் கொடுத்து காதலனை வரச்சொல்ல அவனால் வர முடியாமல் போவதால் ஏற்படும் குழப்பங்களும், பிரச்சனைகளும்தான் திரைக்கதை.

படத்தோட மெயின் கதையை விட சில சமயங்களில் கிளைக்கதை எனப்படும் ஃபிளாஷ்பேக் கதை ஆழமாகவும்,மனதைத்தைப்பது போலவும் அமைந்து விடுவது உண்டு.. அது படத்தின் மெயின் கதையை டாமினேட் பண்ணும்போது ஏற்படும் சிக்கல் இந்தப்படத்துக்கும் ஏற்படுகிறது.

அழகி படத்தில் வருவது போல் காட்டப்படும் அந்த கிராமத்துக்காதல் கதையில் வரும் ஹீரோயின் நல்ல நடிப்புத்திறமையும்,சட் சட் என மாறும் முக பாவமும் பிளஸ் என்றால் அவரது இளமை கூடுதல் போனஸ்.(இமேஜில் தேடிப்பார்த்தால் அவரது ஃபோட்டோ கூகுளில் கிடைக்கல)

டென்த் படிக்கும்  மாணவர்களின் காதல் கதை என்பதால் இது அடலசண்ட் லவ்வை உற்சாகபடுத்துவதுபோல் அல்லாமல் டீன் ஏஜ் காதல் செல்லாது ..ஆகாது என்பது போல் நீதி உணர்த்திய இயக்குநர் அதை எல்லோரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் திரைக்கதையில் ஜால வித்தை காட்ட தவறி விட்டார்.


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhNMtvIvJaqQja9f9nYn3wLRZoQHaK9fnqTJIvG3-visMVTZDbGYV_oI4PQhf7w3mFYVOBwU4rvzJgAzRZBh-Z3rA0P98WQXGC3lUtTlwO4SqFVFawCpEQH5g8J3ycT5AwVNTabqwsxccQ/s1600/Madhu+Shalini+In++16+pathinaaru+movie+Stills+%25286%2529.jpg
மெயின் கதையின் ஹீரோயின் இவர்தான். பார்ட்டி படு சுமார்தான். ஆனால் இவரது அம்மாவாக வருபவர் செம கலர் + ஷைனிங்க். ( அது என்னமோ தெரியல..ஹீரோயின் தங்கையா வர்றவரோ, தோழியா வர்றவரோ நம்ம கண்ணுக்கு கலக்கலா தெரியறாங்க..( சரி டீன் ஏஜ்ல இதெல்லாம் சகஜம்..)


படத்தோட ஓப்பனிங்க் சீன்ல வர்ற டூயட்ல ஹீரோயின் பல கிஃப்ட்களை ஹீரோவுக்கு கொடுக்க ஹீரோ ஹீரோயினுக்கு ஒரே ஒரு சின்ன கிஃப்ட் பாக்ஸ் குடுக்க அதை ஓப்பன் பண்ணி பார்த்தால் அந்த நகைப்பெட்டி காலி,, செம நக்கலோடு டூயட் தொடர்கிறது..

காட்டு செடிக்கு காவல் கிடைச்சிடுச்சு என தொடங்கும் பாடல் ஃபிளாஷ்பேக்கில் வரும் காதலை அழகியலோடு அணுகும் அற்புத தொடக்கம்.இயக்குநர் கவிநயம் மிக்கவர் என்பதற்கு அந்த ஒரே ஒரு பாடலே போதும்.

அந்தப்பாட்டில் ஆசிரியர் மாணவிக்கு தண்டனையாக முட்டி போட வைப்பது பழசு என்றாலும் அவள் அரிசி பரப்பிய தரையில் முட்டி போடுவது புதிய கிராமக்கலாச்சாரப்பதிவு.

  https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjAPVw2VkDjSv935tFOIxkqNEbuLEAOc_8Rj0yVEno3GvmPjynKesmXBfmKmSOnjyUZeZYORcqBVOLn3zzdXJE3aPRx4bS8YQfviQhyzUqnzHubycmuWZNAH5epDCMeaDQiAZaTzx4Ki9FU/s1600/16_tamil_movie_stills_photos_01.jpg அட
டென்த் படிக்கும் பெண்ணாக வருபவர் சிறுமியாக வரும் சீனிலும் சரி, வயதுக்கு வந்த பருவக்குமரியாக வரும்போதும் சரி அவர் காண்பிக்கும் பாடி லேங்குவேஜ் மாற்றம் அபாரம்.. (இப்போ இருக்கற முன்னணி ஹீரோயின்கள் கவனிக்க.)


களவாணி படத்தில் எல் சி 311 கூட்டு என்பதை மகேஷ் என மாற்றுவது மாதிரி இதிலும் 16 என்ற எண்ணை  I G  கற்பிதம் செய்வது அழகு..  ( ஐ - இளவரசி ஜி -கோபி

ஆனால் இடைவேளைக்குப்பிறகு தனது காதலில் நாயகி உறுதியாக இருப்பது போல் காட்ட நினைத்தவர் வீம்பு பிடித்த பெண்ணாக காட்டியது திரைக்கதை கோளாறா? கேரக்டர் வடிவமைப்பில் ஏற்பட்ட பிழையா?

பொதுவாக எல்லாரையும் நல்லவராக காட்ட நினைக்கும் இயக்குநரின் நல்லஎண்ணம் புரிகிறது. ஆனால் முறை மாமனை, நல்லவனாக காட்டியதால் அவர் மீது பரிதாபம் ஏற்பட்டு  இந்த காதல் ஜோடி சேர்ந்துதான் ஆக வேண்டுமா? என்ற எண்ணம் நமக்கு ஏற்படுவது படத்தின் வெற்றிக்கு மாபெரும் மைனஸ்.

படத்தின் வசனகர்த்தா பட்டையை கிளப்பிய இடங்கள்


1. அவசர அவசரமா வாழ்ந்துட்டு சீக்கிரமா சாகறதுக்காகத்தான் மனுஷன் படைக்கப்படுகிறானா?

2.  ஹீரோயின் - ஹலோ...

ஹீரோ - எஸ் .. கோடம்பாக்கம் போலீஸ் ஸ்டேஷன்...

ஹீரோயின் - விளையாடாதீங்க.. நான் தான்.

3. என் ஃபியூச்சரை டிசைடு பண்ண பேரண்ட்ஸா உங்களுக்கு எப்படி ரைட்ஸ் இருக்கோ அதே மாதிரி எனக்கும் ரைட்ஸ் இருக்கு.

4. டே.. மச்சான்.. இந்து காலேஜ்ல டி சி வாங்கிட்டு வீட்டுக்கு போயிட்டா..

இப்போ என்னடா பண்றது?

நீயும் டி சி வாங்கிட்டு போயிடு.. அதுதான் காதலுக்கு மரியாதை.


5. பீச்ல அலை வந்து மோதுதே அது மாதிரி தான் காதலும்..

டேய். அவன் இதுவரைக்கும் பீச்சுக்கே போனதில்லையா? இப்படி விளக்கறே.. ( நையாண்டி டூ டி ஆர்?)

6. அவங்க ரொம்ப நல்லவங்களா தெரியறாங்க...

எப்படி சொல்றே..?

கார் வெச்சிருக்காங்களே...?

7. அடப்பாவி.. இந்த ஆண்ட்டி யார்டா? எப்போ கரெக்ட் பண்ணுனே.?எங்க கிட்டே சொல்லவே இல்ல..?

டேய்.. கொல்லாதீங்கடா..இது என் ஆளோட அம்மாடா..

ஓ சாரி .. நிஜமான ஆண்ட்டியா?

8. எல்லாமே உன்னாலதான்னு நான் சொல்ற மாதிரி என் கிட்டே நிறைய விஷயங்கள் இருக்கு.. ஆனா என்னாலதான்னு நீ சொல்ற மாதிரி உன் கிட்டே எதுவுமே இல்லையா?


9. என்னை உனக்கு பிடிக்கலைன்னு தெரியும்.. இருந்தாலும் இப்படி என் பைக் பின்னால நீ உக்காந்து வர்றது மனசுக்கு சந்தோஷமா இருக்கு.

10. டேய், சொந்த மாமன் மகளை பைக்ல கூட்டிட்டு போறது பெரிய விஷயமாடா..இந்த அலட்டு அலட்டறியே..?நாங்க எல்லாம் சினிமாக்கே கூட்டிட்டு போயிருக்கோம்..

எது அந்த 5 வயசு பொண்ணைத்தானே...

11. என்னடா..ஃபோட்டோ எடுக்கறப்ப யூனிஃபார்ம் போட்டுட்டு வந்திருக்கே..?வேற டிரஸ் போட்டுட்டு வா  போ..

என் கிட்டே இருக்கறதே இந்த ஒரு டிரஸ்தான்,அதுவும் நீ எடுத்துக்குடுத்ததுதான்.

12. மாலைக்கும் ,கழுத்துக்கும்  என் கழுத்து நின்னுச்சுன்னா அது உனக்கு மட்டும்தான்.

13.  ஊரே கூடி தேர் இழுத்தாலும் தேர் போய் சேரும் இடம் கோயில்தான்..என் கோயில் என் ஆள் கோபிதான்.

14. காதல்ல தோத்துப்போன யாரோ ஒருத்தரோட கதையைப்படிச்சாஎங்க மனசு மாறிடுமா?

15. காதலிக்காத ஒரு ஆளைக்காட்டுங்க.. நான் காதலிக்கறதை விட்டுடறேன்னு சொல்றியே...அப்படிக்காதலிச்சு கல்யாணம் பண்ணுனவங்க சந்தோசமா இருக்கறதைக்காட்டு...பார்ப்போம்.. விரல் விட்டு எண்ணிடலாம்.

16. மரணம்கறது ஒரு சம்பவம்..ஆனா என்னைப்பொறுத்தவரை நம்ம நினைவுகள்ல இருந்து நம்ம மனசுக்கு பிடிச்சமானவங்க எப்போ போறாங்களோ (பிரியறாங்களோ) அதுதான் மரணம்.

17 நான் செத்துப்போயிட்டேன்னு நினைச்சு அவ இப்படி நடைப்பிணமா வாழ்ந்திட்டு இருக்கா. நான் உயிரோட இருக்கறது தெரிஞ்சா அவ செத்துப்பொயிடுவா..

தமிழ்ப்படம் படத்துல ஹீரோவா நடிச்ச ஷிவா இந்தப்படத்துல சீரியஸ் ஹீரோவா நடிக்க வேண்டிய கட்டாயம். ஆனா அவர் சும்மா கெஸ்ட்
ரோல் மாதிரிதான்.மதுஷாலினிதான் ஹீரோயின்.அவங்க நடிப்பும் சுமார்தான்.

கிளைக்கதையில் வரும் பாத்திரங்கள் அனைவரின் நடிப்பும் டாப்.ஆனால் என் வருத்தம் எல்லாம் ஒரு சூப்பர் ஹிட் ஆக வேண்டிய படத்தை இயக்குநர் கவனக்குறைவால் சாதாரண லவ் சப்ஜெக்ட் ஆக்கி விட்டார் என்பதுதான்.

எதிர்பார்க்கப்படும் ஆனந்த விகடன் மார்க் - 40

எதிர்பார்க்கப்படும் குமுதம் ரேங்க்கிங்க் - ஓக்கே

எத்தனை நாள் ஓடும்?  ஏ செண்ட்டர்களில் படம் ரிலீஸ் ஆன மாதிரியே தெரியல.. 25 நாள் ஓடலாம். காதலர்கள் பார்க்கலாம்.



THE GREEN HORNET - காமெடி + ஆக்‌ஷன் - ஹாலிவுட் சினிமா விமர்சனம்

http://www.moresay.com/wp-content/uploads/2009/07/cameron-diaz-green-hornet-01.jpg
படத்தோட டைட்டில் போட்டதும் சப் டைட்டிலா “ நீதியைக்காக்க சட்டத்தையே புறந்தள்ளியவன் கதை”ன்னு போட்டதும் ஏதோ எஸ் ஏ சந்திரசேகர் டைரக்‌ஷன்ல நடிச்ச கேப்டன் படத்துக்குத்தான் வந்துட்டமா?ன்னு ஒரு நிமிஷம் ஆடிப்போயிட்டேன்..அப்புறம் படம் ஓட ஆரம்பிச்சதும்தான் அப்பாடான்னு ஒரு ஆசுவாசம்..( எவ்வளவு பழைய வார்த்தை?)

ஒரு பிரபல பத்திரிக்கையின் நிர்வாக இயக்குநர் மர்மமான முறையில் இறக்கிறார். அவரது வாரிசு  பகலில் எடிட்டராகவும் இரவில் அநியாயங்களை எதிர்க்கும் ராபின் ஹூட்டாகவும் டபுள் கேம் ஆடறார்.அவருக்கு உதவியா டெக்னிக்கல்ல கில்லாடியான அப்பாவோட பி ஏ இருக்கார்.இந்த சாதாரண கதையை முடிஞ்ச வரை காமெடியா ,ஜாலியா பொழுது போற மாதிரி சொல்லி இருக்காரு டைரக்டரு..

சேத் ரோகன் -ஜே சவ் 2 பேரும் இணைஞ்சு பண்ற காமெடி கூத்துக்கள் கலகல கலக்கல்.பொதுவா 2 ஹீரோ சப்ஜெக்ட்னாலே ஹாலிவுட்ல ஒரு பாணி வெச்சுக்கறாங்க..ஒரு ஆள் லொட லொடன்னு பேசிட்டே இருப்பாரு..இன்னொரு ஆள் ஆக்‌ஷன்ல அதகளம் பண்ணுவாரு. அதே ஃபார்முலா தான் இதுலயும்.

http://www.shockya.com/news/wp-content/uploads/the_green_hornet_seth_rogen.jpg
படத்துல ஹீரோவுக்கு பி ஏ வா வர்றவரு ஆரம்பத்துல எந்திரன் மாதிரி காஃபி போடற ஸ்டைல் சூப்பர்.அவர் ஜேம்ஸ்பாண்ட் சயிண்டிஸ்ட் கணக்கா பல பல நவீன சாதனங்களை கண்டு பிடிக்கறதும்,அதிரடி ஆக்‌ஷன்ல இறங்கறதும் காதுல பூ சுத்தற ரகம்னாலும் ரசிக்க வைக்குது.படம் முதல் ஒரு மணி நேரம் ஜாலியா போகுதுன்னா அதுக்கு காரணமே காமெடியா எழுதப்பட்ட வசனங்களும், அதுக்குத்தகுந்த சீன்களும்தான்.

கேமரூன் டயஸ் படத்தின் கதைக்கு தேவை இல்லாத கேரக்டர் என்றாலும் சும்மா கிளுகிளுப்புக்காகவும் ( சீன் எல்லாம் இல்ல) கிளாமருக்காகவும் வந்துட்டுப்போறாரு. எப்போ அவரு எனக்கு  36 வயசு ஆகுதுன்னு ஹீரோ கிட்டே சொல்றாரோ அப்பவே பார்வையாளனுக்கு கிக் போயிடுது.. ( பார்வையாளன்னு நான் சொன்னது என்னைத்தான் ஹி ஹி ஹி )

அந்த 36 வயசு ஆண்ட்டிக்கு 22 வயசு ஹீரோக்கள் 2 பேரும் அடித்துக்கொள்வதும், அலைவதும் ஓவர் என்றாலும் ரசிக்க முடிகிறது. ( நாம எதைத்தான் ரசிக்கலை? ) வில்லனா வர்றவர் அசல் தெலுங்கு படத்துல வர்ற வில்லன் மாதிரியே பன்ச் டயலாக் பேசறார்.

சாம்ப்பிளுக்கு ஒண்ணு

என்னை ரத்த நிற டிரஸ்ல பார்க்கறவங்க ரத்தம் உறைஞ்சு போய் நின்னுடுவாங்க.. ( என்னே ஒரு கேவலமான டயலாக்..?)

http://www.thedipaar.com/pictures/52cameron_diaz.jpg
படத்தில் கலக்கிய காமெடி வசனங்கள்

1. வில்லன் - என் வாழ்க்கையின் லட்சியம்,கொள்கை,ஆசை எல்லாமே ஒண்ணுதான்.. அது லாஸ் ஏஞ்சல்லியே நான்தான் பெஸ்ட் ரவுடின்னுபேர் வாங்கனும்.. ( ஆஹா .. இதுவல்லவோ லட்சியம்..?)

2. யார் என்னைப்பார்த்தாலும் பார்த்தவுடனே பயம் வரனும்.. அதுக்கு நான் என்ன செய்யனும்,?

என்னை மாதிரி கொலை பண்ரதுக்கு முன்னால பஞ்ச் டயலாக் பேசனும்.

3. ------- இந்த நகரம் உனக்கு தெரியுமா?

ம்.. எனக்கு ஜப்பான்னா ரொம்ப பிடிக்கும்.

அது சைனால இருக்கு.. சும்மா கதை விடாதே..

4. உன் ஹார்ட் பீட் ஃபாஸ்ட் ஆகறப்ப உன்னை சுத்தி இருக்கறது எல்லாமே ஸ்லோ மோஷன் ஆகிடுதே.. ( நல்ல கற்பனை)

5.  டேய்.. உன் கிட்டே ஒண்ணு கேக்கனும்.. அதுக்கு முன்னால உலக அழகியை விட பிரமாதமா ஒரு ஃபிகர் இருக்கே ..உன் முன்னால.... பார்ட்டி யாரு.? எனக்கு தெரிஞ்சாகனும்.


6. நாம இப்போ எங்கே போறோம்?

நீதானே வண்டி ஓட்டறே..?உனக்கே தெரியலைன்னா எப்படி?

7. ஹாய்.. அபின் பொட்டலம் வேணுமா..?

உன்னைப்பொட்டலம் கட்ட வந்திருக்கேன்..

8.  என் பேரு செக்னோஸ்கி..

பேர்ல கூட விஸ்கி வெச்சிருக்கியே..?

9. அடடா.. பஞ்ச் டயலாக் பேசறதுக்குள்ள செத்துட்டானே..

10. நியூஸ் பேப்பர்வளர்ச்சிக்காக இதை எல்லாம் பண்ற மாதிரி எனக்கு தெரியல..அந்தப்பெண்ணை இம்ப்ரெஸ் பண்ண பண்றே..


11. எனக்கு மட்டும் எதுக்ல்கு பாதுகாப்புக்கு கன் (GUN) குடுத்திருக்கே..?

ஏன்னா டேலண்ட்டா ஃபைட் போட உனக்கு தெரியாது..

12. பாஸ்.. உங்களை மீட் பண்ண நிறைய பேர் வெயிட்டிங்க்.

வெயிட் பண்ணட்டும்.. அதானே அவங்க வேலை..?

13. அந்தப்பொண்ணைப்பார்த்தா உனக்கு என்ன தோணுது,,?

என்னை இம்ப்ரெஸ் பண்ண ஓவரா சீன் போடற மாதிரி தோணுது..

இந்த மாதிரி ஜாலியான படங்கள் தொடர்ந்து வருவதால்தான் தமிழ்ப்படங்கள் போதிய வரவேற்பை பெறுவதில்லை.சும்மா குண்டுச்சட்டியில் குதைரை ஓட்டாமல் இப்படி வெரைட்டையா காமெடி படம் கொடுத்தால் நம்மாளுங்களும் ஜெயிக்கலாம்.

ஈரோடு வி எஸ் பி தியேட்டர்ல படம் பார்த்தேன்.செம கூட்டம்.30 ரூபா டிக்கெட் 40 ரூபா. ஹூம்..10 ரூபா போச்சு..

Friday, January 28, 2011

வாடா போடா நண்பர்கள் - சினிமா விமர்சனம்

http://www.sevanthi.com/images/FilmPics/VadaPodaNanbargalMain35.jpg
ஹீரோக்கள் 2 பேர் ,ஹீரோயின் 1 ஆள் என்றதுமே அது முக்கோணக்காதல் கதைதான் என நினைத்துப்பார்த்தால் ம்ஹூம்..சம்திங்க் டிஃப்ரண்ட்தான்.. எல்லாம் இடைவேளை வரைதான்.அதற்குப்பிறகு....

காதல் கோட்டை படத்தின் ஒன்லைன் தான் கதை.அதுல பாக்காமயே 2 பேரு லவ் பண்ற மாதிரி இதுல பாக்காமயே நண்பர்கள் ஆன 2 ஆண்களின் கதை.


நெட் செண்ட்டர் (சுத்த சைவம்) என போர்டை பார்த்ததுமே காமெடி களை கட்டப்போகிறது என்பது தெரிந்து விடுகிறது.ஹீரோவும்,காமெடியனும் நெட் செண்ட்டர் வைத்திருப்பவர்கள் என கதைக்களன் வைத்தது இயக்குநரின் புத்திசாலித்தனம்.


http://www.kodambakkamtoday.com/wp-content/uploads/2010/06/vada-poda-nanbarkal_kodambakkamtoday_com.jpg அட
ஹீரோ எது செய்தாலும் அல்லது என்ன சொன்னாலும் வாவ் கிரேட் என வியக்கும் ஹீரோயினை தமிழ் சினிமாவில் மட்டுமே பார்க்க முடியும்.(நாம என்ன சாகசம் பண்ணுனாலும் ரியல் லைஃப்ல கண்டுக்கவே மாட்டாங்க..)

அதே மாதிரி கோடம்பாக்கத்தில் பரவி வரும் இன்னொரு க்ளிஷே காட்சி ஹீரோயின் படத்தின் முதல் 3 ரீல் மாடர்ன் டிரஸ் போட்டு கிளாமராக வருவார்..4வது ரீலில் சேலையில் வரும்போது ஹீரோ காணாததைக்கண்டவன் போல் அட.. அம்சமா இருக்கே என வியப்பான்..
மேலே சொன்ன 2 மேட்டர்களும் இந்தப்படத்திலும் இருக்கு.
தாய் தந்த பிச்சையிலே எனும் குத்தாட்டப்பாட்டு நமக்கு மாறுபட்ட 2 அனுபவங்களைத்தருகின்றன.

1.நடன அமைப்பு, கேமரா கோணம் என இயக்குநர் பார்த்து பார்த்துபண்ணி இருக்கார்.

2.ஒரு பாட்டு சீனுக்கு ஏன் ரிஸ்க் எடுக்கனும்னு க்ரூப் டான்சர்களை ரொம்ப முத்தல் முகங்களா (எல்லாமே 35 வயசு பார்ர்ட்டிங்க)போட்டு கொன்னெடுத்துட்டாரு..)

படத்தில ரசிக்கற மாதிரி சீன்ஸ்னா

1. ஹீரோயின் முதன் முதலா ஹீரோ வீட்டுக்கு (ரூம்) வர்றப்போ அங்கே கட்டில்ல கிடக்கற அலங்கோலமான ஆணின் உள்ளாடைகளை வெட்கபட்டுக்கொண்டே அவன் எடுத்து மறைத்து வைக்க உடனே ஹீரோயின் இதுல வெட்கப்பட என்ன இருக்கு ?என் ரூம்க்கு வந்தாலும் இதே நிலைமைதான் என சிரித்த படியே கூறுவது.... பின் அதே நிகழ்வு ஹீரோயின் ரூம்க்கு ஹீரோ போகும்போது நடப்பதும் அந்த் சீனில் ஹீரோயினின் வெட்கமும் டாப் கிளாஸ்..(இந்த காலத்துல பொண்ணுங்க வெட்கப்படறதைப்பார்க்கறதே அபூர்வம் பாஸ்)

http://www.koodal.com/cinema/gallery/movies/vaada_poda_nanbargal/vaada_poda_nanbargal_39_910201034940123.jpgஅட
மேலே பிங்க் கலர் டிரஸ் போட்டிருக்கறதுதான் ஹீரோயின்.இங்கே பாக்க சுமாரான ஃபிகரா தெரிஞ்சாலும் படத்துல பாஸ் மார்க் வாங்கற அளவு நடிச்சிருக்கு.நேர்ல எப்படியோ..

2.குடைக்குள் மழை சுதாவா பீச்ல ஒரே ஒரு சீன் வர்ற அந்த ஃபிகர் செம கலக்கல் ரகம்.பேசாம அல்லது பேசி அக்ரீமெண்ட் போட்டு அந்த பார்ட்டியை ஹீரோயின் ஆக்கி இருக்கலாம்.

3. அப்பா தம் அடிக்கறப்ப ஹீரோ சாதரண பேப்பரை ஆஸ்ட்ரே மாதிரி டிசைன் பண்ற சீன் அட்டகாசம்.

படத்தில் இயக்குநரை கண்டிக்கவைக்கும் சீன்கள்


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj6j9jSsBgZ5gRBUN80cWM_mhGiHnRvbjObOGU9ypZQYgIR6CwXrkbF9dvBT2xZiiyER0BKwvdqYhgdmHB_-VtobdIKOyLVI_UWeTpcQoZP2hQ-QejOgaKDE5wQkBaauoxJyeHUGUxP-Qs/s1600/Vaada-Poda-Nanbargal-Movie-Stills-www.beautyanaels.com-7.jpg அட
1.ஒரே நாள்ல ஏ டி எம் ல 2 லட்சம் எடுக்கற மாதிரி சீன் வருது..எனக்கு தெரிஞ்சு அதிக பட்சம் ரூ 50000 தான் எடுக்க முடியும்.

2. தங்களோட காதலை பரஸ்பரம் வெளீப்படுத்திக்காத நிலைல ஹீரோயின் ஹீரோ கிட்டே ரெஸ்ட்டாரண்ட்ல நீ யாரையாவது லவ் பண்றியா?ன்னு கேக்கறப்ப ஹீரோ விழுந்து விழுந்து சிரிக்கறாரு.. ஏன் எதுக்குன்னே தெரியல..செம கடுப்பைக்கிளப்பிய சீன் அது.

3.அவ்வளவு பெரிய கம்பெனி ஓனர் ஒரு இண்ட்டர்வியூல தான் செலக்ட் பண்ணுன ஆளை (ஹீரோ) சாரி.. இப்போதான் என் பையன் வேற ஆளை செலக்ட் பண்ணீட்டானாம் என சாரி கேட்பது சொதப்பல்.

படத்தில் வசனகர்த்தா கலக்கிய இடங்கள்

1. இது உங்க கிராமம் இல்ல.. இங்கே எதையும் மிஸ்யூஸ் பண்றவங்க தான் ஜாஸ்தி.இது நகரம்.. (இயக்குநருக்கு சிட்டி ஆள்ங்க மேல என்ன காண்ட்டோ?)

2. மேடம் ..சிக்ஸ் (6) க்கு போங்கன்னுதான் சொன்னேன்.. ஏன் இப்படி நெளியறீங்க..?


3. என் நெட் செண்ட்டரை அவன் நீலாங்கரை கெஸ்ட் ஹவுஸா மாத்தீட்டான்.

4.மியூசிக் ஒரு டிவைன் ஆர்ட்..அது நல்ல மனுஷன் கிட்டே இருந்துதான் வரும்..நல்ல மனுஷனுக்குதான் புரியும்.

5. மேடம்..ஃபர்ஸ்ட் டைம் வீட்டுக்கு வந்திருக்கீங்க.. என்ன சாப்பிடறீங்க..?டீ..காஃபி..போர்ன்விடா..பூஸ்ட்..இதெல்லாம் இல்ல..லெமன் ஜூஸ் சாப்பிடறீங்களா?

6.ஃபிரண்ட்ஷிப்  மேல பிராமிஸ்...

ஃபிரண்ட்ஷிப்  மேல பிராமிஸ் பண்ண முடியாது.. ஏன்னா ஃபிரண்ட்ஷிப்பே ஒரு பிராமிஸ்தான்..

7.பொண்ணுங்களோட வீக்னெஸ்சை தெரிஞ்சுக்க ஆண்கள் என்ன வேணாலும் செய்யத்தயாரா இருப்பீங்கன்னு எனக்கு தெரியாதா?

8. ஹீரோயின் - பை அண்ணா.நாங்க 2 பேரும் பார்ட்டிக்கு போயிட்டு வந்து மேட்டர் என்னன்னு சொல்றோம்..

காமெடியன் - என்னது ?அண்ணன் கேரக்டரா?

9.எனக்கு சாமி பிடிக்கும் ..கோயில் பிடிக்காது..கிரிக்கெட் பிடிக்கும்..அதை பாக்கறவங்களை பிடிக்காது......

10. என்னடா இது ஏ டி எம் செண்ட்டர் வாசல்ல நெம்பர் டூ போக கியூல நிக்கற மாதிரியே நிக்கறானுங்க..கைல ஒரு பக்கெட்தான் இல்ல..

11. ரோஜா செடிக்கு தண்ணீர் ஊற்றும் சீனில் காமெடியன் -ஹூமிந்த மாதிரி ஆர் கே செல்வமணி கூட ரோஜாவை கவனிச்சிருக்கமாட்டார்.

12. ம் ம் ஆள் பட்டாபட்டி போட்டிருந்தாலும் பாண்டி பஜார் கூட்டிட்டுப்போய் பக்காவா ரெடி பண்ணுனா தேறிடுவான் போல..

13, மனசு சரி இல்லைன்னா மனசுக்கு பிடிச்ச இடத்துக்கு போ.. அல்லது மனசுக்கு பிடிச்சவங்களை போய் பாரு..

14.  நீ அவனை லவ் பண்றியா?

தெரியல.. ஆனா அவன் எது செஞ்சாலும் பொயட்டிக்கா இருக்கு.அவன் எச்சில் துப்புனாக்கூட அழகா இருக்குடி..அவனைப்பாக்கலைன்னா பைத்தியம் பிடிச்ச மாதிரி இருக்கு.அவன் என்னைத்தொட்டா செத்துடலாம் போல இருக்குடி..

அடி போடி பைத்தியம்.. இதுக்கு பேருதாண்டி லவ்.

பாடல்  வரிகள் ரொம்ப கேவலமா இருக்கு.
சென்னைப்பட்டினத்தில் என் பேரை நீ சொன்னா ஜீன்ஸ் பேண்ட் எல்லாம் எழுந்து நிக்கும் போன்ற இலக்கிய நயம் மிக்க பாடல் வரிகளுக்கு சொந்தக்காரர் யார்?னு தெரியல.

க்ளைமாக்ஸில் உயிருக்கு போராடிக்கொண்டிருக்கும் நண்பனை சட்டுபுட்டுன்னு ஹாஸ்பிடலில் சேர்க்காமல் பிதாமகன் விக்ரம் ரேஞ்சுக்கு அலப்பறை பண்ணும் இன்னொரு ஹீரோவின் நடிப்பு சகிக்கல.

ஒரு சீனில் ஹாஸ்பிடலில் நர்ஸ்..” ஏன் எல்லாரும் கூட்டமா இங்கே இருக்கீங்க?எல்லாம் எந்திருச்சு வெளில போங்க” அப்படின்னு சொல்றாங்க..அப்பவே கிளம்பி வந்திருக்கனும்.

எனக்கு என்ன டவுட்னா இடைவேளை வரை சாந்தமா வரும் 2 ஹீரோவும் இடைவேளைக்குப்பிறகு டாய்.. டூய் என உச்சஸ்தாதியில் கத்துவது ஏன்னே தெரியல.. ( ஒரு வேளை சம்பள பாக்கியோ என்னவோ)

எதிர்பார்க்கப்படும் ஆனந்த விகடன் மார்க் - 36 ( சப்போஸ் விமர்சனம் போட்டா. இளைஞன் மாதிரி போடாம விடத்தான் சான்ஸ் அதிகம்)

எதிர்பார்க்கப்படும்  குமுதம் ரேங்க் - சுமார்

எத்தனை நாள் ஓடும்?  எல்லா செண்ட்டர்லயும் சேர்த்து 7 நாள் ஓடலாம்.

சேட்டைக்காரன் VS சேஷ்டைக்காரி - பிரச்சனைகள்

 https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiU9PmehVV8qec1o5gRRaHzjt6rFy3O0W0_iiQuWIL1m_4Y8z8PlJJkSqmIDhdkJu37ggJsIx2MEbk_dtj4xAlvSH9OgFRkCE1eI-5fjQt5k5WVQc-aLPUmdYw9mgckUe28RMMPlApJ4F3c/s1600/smile.jpg
உலகத்துலயே ரொம்ப சந்தோஷமான விஷயம் குழந்தைகளோட டைம் பாஸ் பண்றதுதான். மத்தவங்களோட பழகறப்ப அவங்களுக்குத்தகுந்தபடி ஒரு முகமூடி போட்டுக்கற மாதிரி குழந்தைகளோட பழகறப்ப நாமும் ஒரு குழந்தை ஆகிடறோம்.ஆனா ஒரே ஒரு விஷயம் நாம் நம்ம புத்திசாலித்தனத்தையும்..,மேதாவிலாசத்தையும் ( நாமா கற்பனை பண்ணிக்கறது..) தூக்கி கடாசிட்டு நாமும் குழந்தையாவே ஆனாத்தான் அவங்களோட எஞ்சாய் பண்ண முடியும்.

1. அப்பா.. நாம 2 பேரும் ஒளிஞ்சு விளையாடலாமா?

ஓக்கே நீ முதல்ல போய் ஒளீஞ்சுக்கோ...
ஓகே ஜூட்டா...


ஜூட் டாடி..


ஆ.. கண்டு பிடிச்சுட்டேன்.. சத்தத்தை வெச்சே கண்டுபிடிச்சுட்டேன்...

போங்கப்பா.. என்னை ஏமாத்தீட்டே..

---------------------------------------------------------------------------

2.  அப்பா.. என்ன யோசிச்சுட்டு இருக்கே..?

ஜோக் எழுத KNOT யோசிக்கறேன்..

அதுக்கு ஏன் சோகமா ,சீரியஸா இருக்கே?சிரிச்சுட்டே யோசிச்சாத்தானே ஜோக் தோணும்..

---------------------------------------------------------------------

3.  எனக்கு ஒரு முத்தம் குடு...

சாரி டாடி.. அம்மாவுக்கு மட்டும்தான் தருவேன்...

சரி.. நான் இப்போ உனக்கு ஒரு முத்தம் தர்றேன்.. பிடிச்சிருக்கா?

ம்ஹூம்.. அம்மா குடுத்தாதான் பிடிக்கும்..

பிடிக்கலையா? அப்போ திருப்பி குடு..

ம்ச்

ஆ.. நல்லா ஏமாந்தியா? உன் கிட்டே முத்தம் வாங்கீட்டேனே?

 ------------------------------------------------------------------------------

4. அப்பா.. கதை சொல்லுப்பா..

அம்மா கிட்டே போய் கேளு.. நான் பத்திரிக்கைக்கு கதை எழுத யோசிச்சிட்டு இருக்கேன்..

என்னப்பா... முகமே தெரியாத யாருக்காகவோ கதை எழுதறே.. உன் கூடவே இருக்கற எனக்கு கதை சொல்ல மாட்டேங்கறியே.. ( பளார்.. வேதம் புதிது-ல சத்யராஜ்க்கு கிடைச்ச மாதிரி..)

http://www2.hiren.info/desktopwallpapers/thumb/child-playing-with-bubbles.jpg

5. ஸ்கூல்ல என்ன என்ன குறும்பு பண்ணுனே..இன்னைக்கு?

எதுவும் செய்யலை டாடி..

பொய் சொல்லாதே.. GOD CAMERA வெச்சு பார்த்துட்டேன்..

அதென்ன காட் கேமரா..?

யார் யார் என்னென்ன தப்பு பண்றாங்க?ன்னு காட் கேமரால தெரிஞ்சிடும்..

அப்படியா? ஹைய்யா.. அப்பா.. கேமராவை ஆன் பண்ணுங்க.. நீ இங்க ஆஃபீஸ்ல என்ன என்ன தப்பு பண்ணுனீஙகன்னு பார்க்கலாம்.

------------------------------------------------------------

6.  அப்பா.. உங்க மேரேஜ் ஆல்பத்துல என்னை மட்டும் காணோமே...?

அது வந்து... நீ தூங்கப்போயிட்டே..

சும்மா பொய் சொல்லாதீங்கப்பா..உங்க கல்யாணத்துக்கு அப்புறமாதான் நான் பொறந்தேனாம்.. அம்மா சொன்னாங்களே..

http://media.nowpublic.net/images//80/6/80610c54ed55ef5382d93acd7e980860.jpgஅட..

7. அப்பா.. எனக்கு டிஃபனுக்கு போட்டாச்சா?

இரு.. ஃபர்ஸ்ட் எனக்கு போட்டுக்கறேன்..  ( சுயநலம்)

அப்பா.. இவ்வளவு சாப்பாடு போட்டுக்கறியே.. இத்தனை எதுக்கு?

நான் பெரிய ஆள் இல்லையா? அதிகம் பசிக்கும்..

அப்போ அம்மாவும் பெரியவங்கதானே.. அவங்க டிஃபன் பாக்ஸ் சின்னதா இருக்கு.. உங்களுது மட்டும் பெரிசா  இருக்கே..?

--------------------------------------------------------------

8. அப்பா.. காசு எவ்வளவு வெச்சிருக்கே..?

எதுக்கு கேக்கறே..?

ஸ்கூல்ல சர்க்கஸ் கூட்டிட்டு போறாங்க.. பணம் 60 ரூபா வேணும்..

அடேங்கப்பா.. 60 ரூபாயா? பேசாம நான் உன்னை காலைல சர்க்கஸ் கூடாரத்துக்கு வாக்கிங்க் போறப்ப கூட்டீட்டு போறேன்.. சிங்கம், யானை,ஒட்டகம்  இதெல்லாம் காட்டறேன்..ஃபிரீயாவே பார்த்துக்கோ..

போங்கப்பா.. ஜோக் எழுதறப்ப 10 ஜோக் சேர்த்து எழுதி சம்பாதிப்பா....

------------------------------------------------------------------------------

9. அப்பா.. நானும் ஜோக் எழுதறேன்...

எப்படி? எழுது பார்ப்போம்...

இதோ உங்க ஜோக்கை பார்த்து எழுதறேன்...

இது செல்லாது.. சொந்தமா யோசிச்சு எழுதனும்..

நீங்க கூட டைரியை பார்த்துத்தானே எழுதறீங்க...?

அது.. நான் ஏற்கனவே யோசிச்சு எழுதுன ஹின்ட்ஸ்..அதை வெச்சு டெவலப் பண்ணி எழுதறேன்..

அப்பா சொத்து பிள்ளைங்களுக்குத்தானே.. அப்போ உங்க ஜோக்கும் எனக்குத்தானே சொந்தம்?

-------------------------------------------------------------

10.  ஆஃபீஸ்க்கு லேட் ஆகிடுச்சு.. கிளம்பறேன்..

அப்பா.. இன்னைக்கு எனக்கு ஸ்கூல் லீவ்.. என் கூட கொஞ்ச நேரம் விளையாடிட்டுப்போப்பா..

மேனேஜர் அடிப்பாரு... நான் போறேன்.

என்ன்னப்பா.. இவ்வளவு பெரிய ஆளா இருக்கே..நீயும் திருப்பி அடி..


டிஸ்கி 1 - இந்தப்பதிவுக்கு நான் முதல்ல வெச்ச டைட்டில் குழல் இனிது.. யாழ் இனிது என்பர்......(பேபி ஸ்பெஷல்) என்பதுதான். மறுபடி யோசிச்சு பார்த்தா அதுல கிளாமரும் இல்ல.. கிக்கும் இல்ல. ஏற்கனவே என் பிளாக் காத்து வாங்கிட்டு இருக்கு ..அதனால சும்மா அட்ராக்‌ஷனுக்காக இப்படி டைட்டில் வெச்சேன்.. சேட்டை அண்ணன்கிட்டே அனுமதி வாங்கிட்டுத்தான்..

டிஸ்கி 2 - பொதுவா யாரையாவது தாக்கி போடற பதிவுக்குத்தான் வரவேற்பு  அதிகமா இருக்கு.. ஆனா என் கூட யாரும் வமபு சண்டைக்கே வரமாட்டேன்கறாங்க.அது ஏன்னு தெரியல..(நாம டம்மி பீஸ்ங்கற ரகசியம் எல்லாருக்கும் தெரிஞ்சுடுச்சு போல.)

டிஸ்கி 3  இதுல சேட்டைக்காரன் நான் தான், சேஷ்டைக்காரி  என் 7 வயசு பொண்ணு அபிராமி ஸ்ரீ

Thursday, January 27, 2011

ராக்கெட் ராஜா -ஆ ராசா என்ன வித்தியாசம்?

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjAz7iNJT8jeAgrrjHq9qcsXfGeVRqRyl1otKEEKjbpSZ9hLp6Jp-4J1IWGG1pgyoXDbXiOF2sOY5ZQvdk7AaLy3E-NSiU5uWT0GzgSLHU-0nUCDLep0b1DQD4ACP4yT4W6WPHICxw4Ahvt/s1600/Taapsi-Hot-Photo-Gallery-1-8.jpg
1. தலைவரு இவ்வளவு ஓப்பனா பேசுவார்னு யாரும் எதிர்பார்க்கலை..

எப்படி சொல்றே..?

எனது கட்சியின் கொள்கை என்ன?னு யாராவது கண்டு பிடிச்சா அவங்களுக்கு நான் செஞ்ச ஊழல் ல 50% ஷேர் தந்துடறேன்னாரே..?

---------------------------------------------

2.முதுமைக்கும், பழைமைக்கும் விடை குடுப்போம்னு ஏன் தலைவரே சொன்னீங்க..?

பின்னே என்னய்யா..இன்னும் எத்தனை நாட்களுக்குத்தான் 40 வயசான நாகலட்சுமியை மகளிர் அணித்தலைவியா வெச்சுக்கறது..?

-------------------------------------------------


3. நானோ காருக்கு தேசிய விருது கொடுத்துட்டாங்களாம்..

சுத்தம்.. விருது குடுத்தாச்சா? இனி அந்தக்கார் ஓடுன மாதிரிதான்...

---------------------------------------------------

4.என்னங்க.. உங்க படத்துக்கு ஈரோடு மாவட்டத்துல இருக்கற பள்ளிபாளையம் ஊர்ப்பெயரை  டைட்டிலா வெச்சிருக்கீங்க?

அதனால என்ன? பவானின்னு டைட்டில் வைக்க்றப்ப பள்ளிபாளையம்னு வைக்கக்கூடாதா?அங்கேயும் ஆறு ஓடுது.. இங்கேயும் ஆறு ஓடுது..

--------------------------------------------------------

5.என் ஆள் மோஹனா என் காதலுக்கு ஓக்கே சொல்வாளா மாட்டாளா?னு சீட்டு பார்த்து சொல்லுங்க ஜோசியரே...

ஆஹா.. பேஷ் பேஷ்..கிளி  சிக்குமா? சிக்காதா?ன்னு கிளி ஜோசியமா?

-------------------------------------------------
http://indianewz.com/wp-content/uploads/2010/07/tapasee-07.jpg
6.வழக்கமா தலைவர் ரெஸ்ட்டா இருக்கறப்ப சின்ன வீடு ஷில்பா வீட்டுக்கு போவார் ..இன்னைக்கு ஷில்பா வுக்கு உடம்பு சரி இல்லையாம்..அதனால அவங்களை ரெஸ்ட் எடுக்க சொல்லீட்டு இவர் கிளம்பிட்டார்..

ஓஹோ.. ஓய்வுக்கே ஓய்வு குடுத்தவர்னு பாராட்னாங்களே.. இந்த அர்த்தத்துலதானா?

--------------------------------

7.டாக்டர்.. நீங்க சவப்பிரியராமே..?

வேண்டாதவங்க கட்டி விட்ட கதை அது.. சைவப்பிரியன் அவ்வளவுதான்..

---------------------------------------

8.  சிறுத்தைல வந்த ராக்கெட் ராஜா  -- ஆ ராசா என்ன வித்தியாசம்?

ராக்கெட் ராஜா சின்னத்திருடன்.... ஹி ஹி ஹி

------------------------------------------------------------------

9.தலைவருக்கு ரொம்பத்தான் ஆசை...


ஏன்?

வீட்டு வேலைக்கு ஆடுகளம் தாப்ஸி மாதிரி கலக்கலான ஆங்கிலோ இண்டியன் ஃபிகர் தேவைனு பேப்பர்ல விளம்பரம் குடுத்திருக்காரே,,?

--------------------------------------------------

10. தலைவர் அடிக்கடி “உங்களால் எண்ணிப்பார்க்க முடியுமா?” ன்னு மேடைல பேசறாரே.. ?

அவர் செஞ்ச ஊழல்ல கிடைச்ச பணத்தை எண்ணிப்பார்க்க முடியுமா?ன்னு கேட்கறாரு.. முடிஞ்சா கவுண்ட் பண்ணிக்காமிச்சிடு..

---------------------------------------------

டிஸ்கி 1- கழகக்கண்மணிகளின் கவனத்துக்கு வரும்வரையே ஜோக் 8 இருக்கும்.அதே போல் பதிவின் டைட்டில் எந்நேரமும் மாற்றப்படும் அபாயம் இருக்கலாம்.( யாருக்கு அபாயம்? ஹி ஹி எனக்குத்தான்)

டிஸ்கி 2 - நாட்டில் பல பிரச்சனைகள் இருந்தாலும் இப்போது கோலிவுட்டில் கிளம்பிய முக்கியப்பிரச்சனை கலக்கல் கலர் தமனாவா? வெள்ளாவி வெச்சுத்தான் வெளுத்தாங்களா? புகழ் தாப்சியா? என்பதுதான்.. எனது ஓட்டு இப்போதைக்கு தாப்சிதான்.. ஏன்னா அதுதான் ஃபிரஸ் ஹி ஹி

Wednesday, January 26, 2011

SEASON OF THE WITCH - (சூனியக்காரி) - ஹாலிவுட் சினிமா விமர்சனம


http://www.bscreview.com/wp-content/uploads/2011/01/Season-Of-The-Witch-Photo.jpg

சின்னப்பசங்க படிக்கிற அம்புலிமாமா கதைதான்.நம்மாளுங்க தமிழ்ல வர்ற பாலமித்ரா..ரத்னபாலா கதைகளை எல்லாம் இளக்காரமா பேசுவாங்க.. ஆனா அதே கதை ஹாலிவுட்ல சொல்லப்படும்போது பிரமிப்பா பார்ப்பாங்க.. ஹாரிபாட்டர் கதைகள் ஃபேமஸ் ஆனது இப்படித்தான்.

அந்தக்காலத்துல ( எந்தக்காலத்துல?..) நடக்கறதா சொல்லப்படும் கதை.ஊர்ல சூன்யக்காரிகள்..சூன்யக்காரிக்கு உதவியா இருந்த பொண்ணு ..( பொண்ணுன்னாலே சூன்யக்காரிதான் என்பது டைரக்டரின் வாதம்) என எல்லாருக்கும் மரண தண்டனை கொடுப்பது போல கதை ஆரம்பிக்குது.அப்புறம் ஒரு சூன்யக்காரியை ( பார்ட்டி நல்ல ஃபிகர் - திகில் படம் பார்க்கற களேபரத்துலயும் உனக்கு கிளு கிளுப்பு கேக்குது..?) சில வீரர்கள் கூண்டில் அடைத்து 500 மைல் தள்ளி இருக்கற ஒரு இடத்துக்கு அழைச்சுட்டு போறாங்க..

எதுக்கு 500 மைல்? என்ன சார் நீங்க... படத்தை வளர்த்த வேணாமா? அங்கே ஸ்பாட்டுக்கு போவதற்குள் அவர்கள் சந்திக்கும் இடர்ப்பாடுகள் தான் கதை.

பொதுவா இந்த மாதிரி பயணக்கதைகள்னாலே ஒரு ஆபத்து இருக்கு.. கொஞ்சம் ஏமாந்தாலும் திரைக்கதை போர் அடித்துவிடும்.விதி விலக்காய் ஹிட் அடித்த படங்களில் ஞாபகம் உள்ளவை மைனா, திருடா திருடா,கண்டேன் காதலை ( ஜப் வி மெட்). கோட்டை விட்டதில் நினைவு உள்ளவை கார்த்தி நடித்த ஆயிரத்தில் ஒருவன்


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh-AobH2vjTdwQ0dsqEiapf_Gk6_wUY7h0sBjlU6Ik9JNWKgmYe3zoY_tCcenqt_-cDNJhaMwTNJ0B_yUa43WfHHHUBpSoXhG-yJLltkBzmT6QmJ_hIDddwVfEmLf578M2DNooL8AjjB3g/s400/Claire+Foy+in+Season+of+the+Witch.jpg
மேலே இருப்பதுதான் சூன்யக்காரி.. அந்த ஃபிகர்  சூன்யக்காரி.யா? சூட்சுமக்காரியா?ன்னு எல்லாரும் ஒரு முடிவுக்கு வர்றதுக்குள்ள படத்துல இடைவேளை வந்துடுது.

THE NATIONAL TREASURE (புதையலைத்த்தேடி) படத்துல ஹீரோவா நடிச்ச நிக்கோலஸ் கேஜ் தான் இந்தப்படத்தோட ஹீரோ.. கடைசில செந்தூரப்பூவே கேப்டன் ரேஞ்சுக்கு உயிர்த்தியாகம் எல்லாம் செய்யறாரு.இதே மாதிரி ஸ்டீரியோ டைப் படங்கள்ல நடிச்சுட்டு இருந்தா மார்க்கட் கோவிந்தாதான்.

ஹீரோயின் அந்நியன் படத்தில் விக்ரம் க்ளைமாக்ஸில் ரெமோவாக,அந்நியனாக,அம்பியாக சட்சட் என முகம் மாறுவாரே அது மாதிரி...நம்ம டாக்டர் ராம்தாஸ் எலக்‌ஷனுக்கு எலக்‌ஷன் அய்யா.. அம்மா அப்படி மாத்தி  மாத்தி பல்டி அடிப்பாரே .. அந்த மாதிரி அடிக்கடி மாறும் முக பாவனைகள் அற்புதம்.அவர் நல்லவரா? கெட்டவரா? என ஒரு முடிவுக்கே வர முடியாதவாறு கேரக்டர் சித்தரிப்பு அருமை.
http://www.horror-asylum.com/news/pics/little-dorrits-claire-foy-witches-it-up-in-season-of-the-witch.jpg
வசனகர்த்தா வசப்படுத்திய இடங்கள்

1. நான் உங்களோட வந்தது ஆள்றதுக்குத்தான்.. இத்தனை உயிர்களை கொல்றதுக்கில்லை...

எல்லாம் ஆண்டவன் கட்டளைப்படிதான் செஞ்சுட்டு வர்றேன்..

ஓஹோ.. அப்போ நீங்களும்,ஆண்டவனும் அடிக்கடி பேசிக்குவீங்களா?

2.  இதுக்கு முன்னால வேற யாராவது அங்கே போயிருக்காங்களா?

இல்லை...

அப்போ நாம கண்டிப்பா அங்கே போறோம்.


3. நான் செஞ்ச அசிங்கமான சிலை இன்னும் அங்கேயேதான் இருக்கு.

அப்போ அது உன்னை மாதிரியேதான் இருக்கும்னு சொல்லு.


4. உன் கெட்ட நேரம்.. எங்க கிட்டே மாட்டிக்கிட்டே..

இந்த சூன்யக்காரியையும் அங்கே கூட்டிட்டா போறோம்?

பின்னே.. அங்கே கும்மாளம் போடவா போறோம்?


5. ஒரு பொண்ணு நினைச்சா இந்த உலகத்தையே தலைகீழா மாத்திட முடியும்.

பொண்ணுங்களை நம்பி ஏமாறுவதை முதல்ல நிறுத்து..

6.நம்ம கிட்டே இருக்கற பலவீனங்களை தனக்கு சாதகமா பயன்படுத்திக்கறது பொண்ணுங்களுக்கு கை வந்த கலை.

7. நீங்க என்னை தப்பா புரிஞ்சிட்டு இருக்கீங்க...

ஏன்னா நீ தப்புதப்பாத்தானே காரியங்களை பண்ணீட்டு வர்றே..?

8. பாதிலயே வந்த வாழ்க்கை இது.. பாதிலயே போயிடும்.. அதுக்குள்ள பாவங்கள் செஞ்சு மேலும் நாம பாவிகள் ஆகனுமா?


9. சூன்யக்காரிகள்னு அபாண்டமா பழி போட்டு அப்பாவிப்பொண்ணுங்களை கொல்றீங்களே.. அவங்களுக்கு நிஜமாவே அப்படி ஒரு சக்தி இருந்தா தன்னைத்தானே காப்பாற்றி இருக்கலாமே... ( வாட்  எ லாஜிக் கொஸ்டீன்)

10. இப்போ நாம எங்கே இருக்கோம்?

வழிகாட்டி - எனக்கே தெரியலை.

11. நாம எல்லாருமே பொணமாத்தான் போய்ச்சேருவோம்னு நினைக்கிறேன்.

நான் உயிரோட இருக்கறவரை அது நடக்காது..

அப்போ முதல்ல சாகப்போறது நீ தான்.

12. நாம கஷ்டப்படறதைப்பார்த்துக்குட்டு சும்மா இருக்கறவன் எப்படி ஆண்டவனா இருக்க முடியும்? ( செம கேள்வி)

13.  சூன்யக்காரி - நான் பேச ஆரம்பிச்சா ஆண்டவனால கூட பதில் சொல்ல முடியாது.

நம்பவே முடியல..யார்னே தெரியாத ஒருத்தியை காப்பாற்ற இத்தனை பேரா?

சிதைந்து போன தொங்குபாலத்தில் சூன்யக்காரியின் வண்டியை கடக்க வைக்கும் இடம் செம விறு விறுப்பு.அந்த ஒரு இடத்தில் மட்டும் இசை அமைப்பாளர் ஆடியன்சின் டெம்ப்போவை ஏற்றும்படி கலக்கலாய் மியூசிக் போட்டிருக்கிறார்.

மற்றபடி ஜஸ்ட் பாக்கலாம்.படத்துல பெரிசா சொல்ற அளவு ஒண்ணும் இல்ல.
ஈரோடு வி எஸ் பி தியேட்டர்ல இந்தப்படம் பார்த்தேன். ரொம்ப பயமா இருந்துச்சு.. ஹ்ஹி ஹ்ஹி  தியேட்டர்ல மொத்தமே 23 பேர்தான்..ஏதோ 1000 பேர் இருந்தாலாவது ஆயிரத்தில் நான் ஒருவன்னு பெருமையா சொல்லிக்கலாம்..

குடியரசு தின ஸ்பெஷல் சிந்தனைகள்

http://www.udumalaiinfo.com/news/wp-content/uploads/2010/01/indexphp.jpg
1.  குடியரசு விழா கொண்டாட

     தேடப்படுகிறது

     தியாகிகள் லிஸ்ட்.

http://static.webdunia.com/mwdimages/thumbnail/image/nnozizi//mywebdunia/UserData/DataU/unnikris/images/restricted/20-03-2009/babies_107_.bmp

2. எட்டு மணிக்கு வரும் கலெக்டருக்காக

    ஆறு மணியிலிருந்தே பசியோடு

   காத்துக்கொண்டிருந்தன குழந்தைகள்.


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjJ1HFx7UkyiMIkKYltZrxiFubbutW0aTxqyFbllTle00HdRiEtZa0fbEhb4qU7TvujYkC0hmyNTHT4Ieomw6174ncntEmBC22Cf6lcVrKlxOgasO-JiZ0AZAiSdW5itKBvNWqiW0KxqL4/s1600/pic_1178393734.jpg

3.  ஆகஸ்ட் 14, அக்டோபர் 1,ஜனவரி 25

  குடி மக்களிடம் விழிப்புணர்வு

விடிஞ்சா டாஸ்மாக் லீவ்..இப்பவே வாங்கி ஸ்டாக் வெச்சுக்கோ..

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhMLMpwqrsaGzb4zSfrg0nuVwwqxOz-nSyiSQbgC0BFJAwZeP7qbk2RiUqNSKekXn26ticI5yJ69dTO-CSheFp9jxPmX0WtfdcwfF-9lXAifyzhtqx5fd0HIyHcK8S2Aq6F4rzM5bYfDVmz/s400/Boss.JPG


4. குடியரசு தின ஸ்பெஷல் நிகழ்ச்சி

கலைஞர் டி வி யில்

நமீதாவின் மனம் திறந்த பேட்டி.

Tuesday, January 25, 2011

விஜய் -ன் டாப் 10 படங்கள்

dd9cdc28-d2a7-495c-ace4-1e758b651a481.jpg (450×256)
பொதுவா டாப் 10 படங்கள் மாதிரி பதிவை யாராவது தொடர்பதிவுக்கு அழைச்சாத்தான் போடறாங்க.. என்னை யாரும் அழைக்காமயே போட 2 காரணம்.

1. என்னை யாரும் மதிக்கற மாதிரி தெரியல ( ஹி ஹி வழக்கமா நடக்கறதுதானே..)2.குடும்பத்துல எல்லாரும் அழைச்சிட்டுபோய் பொண்ணு பாக்கற வைபவம் என்னதான் கலகலப்பு இருந்தாலும் நாமா தனியா போய் சைட் அடிக்கறதுல ஒரு கிளு கிளுப்பு இருக்கத்தான் செய்யுது..

10. கண்ணுக்குள் நிலவு. ஃபாசில் இயக்கிய இந்தப்படம் வசூல் ரீதியா தோல்விப்படமா இருந்தாலும் ,விஜய்க்கும்,அவரது ரசிகர்களுக்கும் இது முக்கியமான படம்.அவர் நடிச்ச படங்கள்லயே அதிக அளவு வித்தியாசமான முக பாவங்களை வெளிப்படுத்துன படம் இதுதான்.வித்தியாசமான சஸ்பென்ஸ் திரில்லர் படம். ஆனா அந்த சஸ்பென்ஸ் ஓவர்டோஸ் ஆகி தங்களை ஏமாத்தறதா ரசிகர்கள் நினைச்சதன் விளைவு படம் அவுட்.தன்னால் கொலை செய்யப்பட்டதா நம்புன பொண்ணு தன் கண் முன்னால உயிரோட வர்றப்ப விஜய் காண்பிக்கும் ஃபேஸ் எக்ஸ்பிரஸ்ஸன்ஸ் டாப் கிளாஸ்.ஷாலினி விஜய் லவ் சீன்ஸூம் ரொம்ப கவிதையா இருக்கும்.ஈரோடு அபிராமியில் 13 நாட்களே ஒடியது.

9. ஷாஜகான் - நண்பனின் காதலியை அவனோடு சேர்த்து வைக்கும் ஹீரோவின் கதைதான். சாதாரண இந்தக்கதை விஜய்-ன் ஸ்பெஷல் ஆனது    விஜய் ஸ்மார்ட்டான கலரில் சர்ட் அணிந்து போட்ட டான்ஸ் ஸ்டெப்கள் ஒண்டர்ஃபுல்.டான்ஸ் மாஸ்டர் சொல்லித்தந்ததை மட்டும் ஆடி விட்டுப்போகாமல் தனது ஸ்டைலில் ஸ்பெஷலாய் ஏதாவது செய்ய வேண்டும் என்ற தவிப்பு இந்தப்பாடலில் எதிரொலிக்கும்.காதலை விட்டுக்கொடுக்கும் பெரும்பாலான படங்கள் கமர்ஷியல் சக்‌சஸ் ஆவதில்லை என்ற பொது விதியின் படி இந்தப்படமும் ஓடவில்லை.ஈரோடு ராயலில் 28 நாட்களே ஓடியது.

8.ஃபிரண்ட்ஸ்- விஜய் -ன் மார்க்கெட் டவுன் ஆகும்போதெல்லாம் அவருக்கு கை கொடுப்பது கேரளாதான். சித்திக் இயக்கிய இந்தப்படம் சத்தமே இல்லாமல் வந்து சக்கை போடு போட்டது.காமெடி கலக்கல் படம். வடிவேல் சர்வசாதாரணமாக விஜய்யை வாடா போடா என சகட்டு மேனிக்கு திட்டுவது போல் காட்சிகள் இருந்தாலும் விஜய் பெருந்தன்மையாக அதில் நடித்து பாத்திரத்துக்கு உயிர் ஊட்டினார்.பன்ச் டயாலக்கை நம்பாமல் திரைக்கதையயும்,காமெடியையும் நம்பினால் சக்சஸ் என்று உணர்த்திய படம்.ஈரோடு சண்டிகாவில் 80 நாட்கள் பின் சங்கீதாவில் 25 நாட்கள் ஓடியது

7.வசீகரா -இந்தப்படம் விஜய்-ன் வித்தியாசமான காமெடி சென்சை உணர்த்திய படம்.படம் முழுக்க நகைச்சுவை தோரணங்கள் கொடி கட்டிப்பறக்கும்.நெஞ்சம் ஒரு முறை வா என்றது பாட்டில் விஜய் சினேகா இருவரும் எம் ஜி ஆர் சரோஜா தேவி போல் ஆடி நடித்த இந்தப்படம் ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவைப்பெறாமல் போனது ஏமாற்றம்தான்.ஆனால் இதே போல் ரஜினிக்கும் மிஸ்டர் பாரத்தில் நடந்தது, என்னம்மா கண்ணு சவுக்கியமா? பாடல் காட்சியில் ரஜினி,சத்யராஜ் இருவரும் கலக்கலாக நடனம் ஆடி அவரவர் ஸ்டைலில் அசத்தி இருந்த போதும் ரசிகர்கள் பிரமாதமாய் ரசிக்கவில்லை.ஈரோடு அன்னபூரணி தியேட்டரில் இது 23 நாட்களே ஓடியது.

6.பிரியமுடன் - விஜய்க்கு அவரது கேரியரில் முக்கியமான படம்.கிட்டத்தட்ட சைக்கோ கம் வில்லன் கேரக்டர்..பாஜிகர் படத்தில் ஷாரூக்கான் நடித்த கேரக்டர்.இந்தப்படம் பார்க்கும்போது இது எடுபடாது.. தமிழில் ஓடாது என்றே நினைத்தேன். ஆனால் படம் ஹிட்.கவுசல்யாவின் அப்பாவை பேசிக்கொண்டே மாடியில் இருந்து தள்ளி கொலை செய்யும்போது விஜய் பிரமாதமாய் நடித்தார்.அதேபோல் க்ளைமாக்ஸ்சில் தனது காதலைப்பற்றி சொல்லிக்கொண்டே உயிர் விடும் காட்சியிலும் கலக்கினார்.ஈரோடு ராயல் தியேட்டரில் இது 53 நாட்கள் ஓடியது.

trisha_n_vijay.jpg (400×397)
5.திருமலை. - தொட்டபெட்டா ரோட்டு மேல முட்டை பரோட்டா, ஸ்ரீ வித்யாவுக்கு பாத்ரூமில் சோப்போடுவது மாதிரி சீன்களில் எல்லாம் நடித்து பேரை கெடுத்துக்கொண்ட விஜய் இந்தப்படத்தில்தான் ஆக்‌ஷன் ரூட்டில் பயணிக்க ஆரம்பித்தார்.வாழ்க்கைங்கறது ஒரு வட்டம் மாதிரி இதுல ஜெயிக்கறவன் தோப்பான், தோக்கறவன் ஜெயிப்பான் என பேசிய பன்ச் டயலாக் சூப்பர் ஹிட்.விஜய் -ன் கேரியர் புது பாணியில் வெளிப்பட அடி கோலிய படம்.அதே போல் ஜோதிகாவுக்கு நிகராக டான்ஸ் காட்சியில் முக பாவங்களை சட் சட் என மாற்றி நடித்த படம்.ஈரோடு ராயல் தியேட்டரில் இது 43 நாட்கள் ஓடியது.

4.குஷி -இயக்குநர் எஸ் ஜே சூர்யா செய்த உருப்படியான ரெண்டே காரியம் 1. வாலியில் அஜித்தை இயக்கியது.. 2. குஷி படத்தில் விஜய்யை இயக்கியது. எம் ஜி ஆர் காலத்தில் வந்த அன்பே வா பட KNOT தான். ஆனால் படம் முழுக்க ஜாலியாக போகும். என் இடுப்பை பாத்தியா? -இல்ல பாக்கல போன்ற பிரசித்தி பெற்ற வசனம் இதில் உண்டு.மேட்டோ ரீனா மேட்டோ ரீனா விசில் அடிக்கும் நிலவு தானா..பாட்டில் டான்ஸ் கொடி கட்டி பறக்கும்.கட்டிப்பிடி கட்டிப்பிடிடா கண்ணாளா மும்தாஜின் நடனமும் ஃபேமஸ்.இந்தப்படத்தில் ஜோதிகா பல இடங்களில் ஓவர் ஆக்டிங்க் பண்ணி இருப்பார், விஜய் அண்டர்பிளே ஆக்டிங்க் பண்ணி சமப்படுத்தி இருப்பார். ஈரோடு ஆனூர் தியேட்டரில் இந்தப்படம் 70 நாட்கள் ஓடியது.

3.காதலுக்கு மரியாதை - விஜய் என்றால் விடலைப்பசங்கதான் ரசிகர்கள், சங்கவி கூடத்தான் சுத்துவார் என்ற இமேஜை உடைத்து தமிழ்த்திரை உலகையே கலக்கு கலக்கிய படம் .இந்தப்படத்தின் க்ளைமாக்ஸ் பிரமாதமாக அனைவரும் ஏற்றுக்கொள்ளும்வகையில் இருக்கும்.ஷாலினியின் நடிப்பும் குறிப்பிட்டு சொல்லக்கூடிய வகையில் இருக்கும்.2 பேரும் போட்டி போட்டு நடித்திருந்தாலும் இது ஒரு இயக்குநர் படம். ஃபாசில் பின்னி பெடல் எடுத்த படம்.இளையராஜாவின் இசையும் படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணம்.க்ளைமாக்சில் இருவரின் காதலுக்கும் குடும்பம் ஓக்கே சொல்லும்போது ஒரு பின்னணி இசை வரும் பாருங்க.. சான்ஸே இல்லை..மேஸ்ட்ரோ மேஸ்ட்ரோதான்.இன்னும் கூட லவ் சப்ஜெக்ட் என்றால் இந்தப்படத்தைத்தான் ஸ்டோரி டிஸ்கஷன்போது இயக்குநர்கள் சொல்றாங்க.காவலன் பட விமர்சனங்களில் தினத்தந்தி, த ஹிந்து, ஸ்டார் டஸ்ட் போன்ற பத்திரிக்கைகள் விஜய்க்கு இன்னொரு காதலுக்கு மரியாதை என்றே குறிப்பிட்டுள்ளன.விஜய்-ஷாலினி இருவரும் புக்ஸ்டாலில் முதன்முதல் காதல் பார்வைகளை பரிமாறிக்கொள்ளும் சீன் கவிநயம்.அபிராமி தியேட்டரில் 64 நாட்கள் தேவி அபிராமி தியேட்டரில் 40 நாட்கள் மொத்தம் 104 நாட்கள் ஈரோட்டில் ஓடியது.

2. துள்ளாத மனமும் துள்ளும் -சார்லி சாப்ளின் படத்தில் வந்த கதையை ஆளாளுக்கு உல்டா பண்ணி இந்த டைமில் 12 படங்கள் வந்தன. கார்த்திக்கின் நிலவே முகம் காட்டு படம் மட்டும்தான் ஞாபகம் இருக்கு.ஈரோடு ராயலில் இந்தப்படம் பார்த்து விட்டு வெளியில் வரும்போது ரசிகர்கள் அடித்த கமெண்ட் 3 மாசத்துக்கு வேற படம் போட மாட்டாங்க..க்ளைமாக்சில் இன்னிசை பாடி வரும் இளம் காற்றுக்கு உருவம் இல்லை பாட்டுக்கு சிம்ரன் விஜய் இருவரும் போட்டி போட்டு நடித்திருப்பார்கள்.விஜய்க்கு டான்சில் சரிக்கு சரி சிம்ரன்தான்.படத்துல வேற எந்த செலவும் இல்லை. சிம்ப்பிளா வந்து லாட்டரி அடிச்சுது.ஈரோடு ராயலில் 103 நாட்கள் ஓடியது.

1. கில்லி- ரஜினிக்கு எப்படி பாட்ஷா முக்கியமான திருப்பு முனையோ அது மாதிரி விஜய்க்கு கில்லி முக்கியமான படம். அவர் நடித்து அதிக நாட்கள் ஓடிய படமும் இதுவே.. ( 205 நாட்கள்). கபடி வீரராக வரும் விஜய்க்கு படம் பூரா திரிஷாவைக்கூட்டிக்கொண்டு ஓடும் வேலைதான். பிரகாஷ்ராஜின் ஹாய்   செல்லம் டயலாக் செம ஃபேமஸ்..அப்படிப்போடு போடு பாட்டுக்கு விஜய் ஆடும் ஆட்டம் இளசுகளை துள்ளி ஆட வைத்தது.இந்தப்படத்தைப்பார்த்து காப்பி அடித்தே விஷால் பல படங்களில் நடித்தார்.நான் இந்தப்படத்தை பார்க்கும்போது படம் ஓக்கே நல்லாருக்கு என்றுதான் நினைத்தேன்.. ஆனால் படம் பட்டி தொட்டி எங்கும் ஹிட்.இதற்குப்பிறகு வந்த விஜய் படங்களை கில்லியோடு ஒப்பிட்டு அதுமாதிரி இது இல்லையே என பேச ஆரம்பித்தார்கள்..இது எல்லா ஹீரோக்களுக்கும் நடப்பதுதான்,,

டிஸ்கி 1 - இந்த லிஸ்ட்டில் காவலன் ஏன் இல்லைன்னா இப்போதானே படமும் வந்தது,, படத்தோட விமர்சனமும் வந்தது..பொண்ணு பார்த்த அனுபவம் கேட்டா லேட்டஸ்ட்டா பார்த்த பொண்ணு (மனைவி)பற்றி யாரும் சிலாகிச்சுக்கறதில்லை.அது மாதிரி...

டிஸ்கி 2 - இந்த தொடர் பதிவுக்கு நான் அழைப்பது நல்ல நேரம் சதீஷ், சிரிப்புபோலீஸ் ரமேஷ்,ஃபிலாசபி பிரபாகரன்.. இதுல என்ன காமெடின்னா ரமேஷ்க்கு விஜய்னா உயிரு,,(!!) சதீஷ்க்கு விஜய்னா சொந்த சம்சாரம் மாதிரி( அவங்கவங்க சம்சாரத்தை யார் இப்போ ரசிக்கறாங்க?)  பிரபாகரன் தல அஜித் ரசிகர்.. பாப்போம் என்ன நடக்குதுன்னு..


நாட்டு நடப்பும், நையாண்டி சிரிப்பும்

https://www.cia.gov/library/publications/the-world-factbook/graphics/flags/large/in-lgflag.gif 
1,தமிழக சட்டத் துறை அமைச்சர் துரைமுருகன்: குழந்தை பிறப்பு முதல், பராமரிப்பு, கல்வி, மருத்துவம், திருமண உதவி உள்ளிட்ட, வாழ்க்கையின் அனைத்து தேவைகளுக்கும் தி.மு.க., அரசு உதவி வருகிறது. அடுத்த முறை, உட்கார்ந்து சாப்பிடும் வகையில், பொதுமக்களுக்கு வீடு தேடி டிபன் கேரியரில் சாப்பாடு வழங்கும் அளவுக்கு, பல திட்டங்களை கைவசம் வைத்துள்ளோம்.

கவுண்டமணியின் கவுண்ட்டர் டயலாக் - அதுதான் 70 தலைமுறைக்கும் உக்காந்து சாப்பிடற அளவு தலைவர் சேர்த்து வெச்சிருக்காரே.. அப்புறம் என்ன?

2. பெட்ரோலியத் துறை மத்திய அமைச்சர் ஜெய்பால் ரெட்டி: சர்வதேச கச்சா எண்ணெய் விலை, பெரிய சவாலாக உள்ளது. இந்நிலையில், விலை உயர்வு தவிர்க்க முடியாது. எண்ணெய் நிறுவனங்கள் நஷ்டப்படுவதைப் பார்த்துக்கொண்டு சும்மா இருக்க முடியாது.

கவுண்டமணியின் கவுண்ட்டர் டயலாக் - அதுவும் கரெக்ட்தான்.. மக்கள் நஷ்டப்பட்டு நாசமாப்போனா நமக்கு என்ன?

3. பா.ம.க., நிறுவனர் ராமதாஸ்: சினிமா மோகத்தால் இளைஞர்கள், தே.மு.தி.க.,வில் சேருகின்றனர்; அவர்களை, பா.ம.க.,வுக்கு இழுத்து வர வேண்டும். வரும் தேர்தலில், பா.ம.க., தனித்து போட்டியிட்டால் கூட, 30 தொகுதிகளில் வெற்றி பெறும் நிலை தற்போது உள்ளது.

கவுண்டமணியின் கவுண்ட்டர் டயலாக் - ஆளே இல்லாத டீக்கடைல யாருக்குண்ணே டீ ஆத்தீட்டு இருக்கீங்க?

4. பிரதமர் மன்மோகன் சிங்: அன்னிய நாட்டு வங்கிகளில் கறுப்புப் பணத்தை குவித்து வைத்துள்ள இந்தியர்கள் பற்றிய விவரங்களை வெளியிட முடியாது. இந்த விஷயத்தில் நாம் பல்வேறு ஒப்பந்தங்களுக்கு கட்டுப்பட்டு நடக்க வேண்டியுள்ளது.

கவுண்டமணியின் கவுண்ட்டர் டயலாக் - பி எம் சார்.. நல்லா யோசிச்சு சொல்லுங்க..ஒப்பந்தமா? நிர்ப்பந்தமா?
http://www.positivityblog.com/_images/080509_gandhi.jpg

5. தொழிலாளர் நலத்துறை அமைச்சர் அன்பரசன் அறிக்கை: அணி அணியாக அ.தி.மு.க.,வில் இருந்து வெளியேறி, தி.மு.க.,வில் இணைகின்றனர். இந்த உண்மையை மூடி மறைக்கவே, தி.மு.க., உட்பட மாற்றுக் கட்சிகளில் இருந்து, அ.தி.மு.க.,வில் இணைகின்றனர் என்று கூறி, அ.தி.மு.க.,வில் இருப்பவர்களை மீண்டும் அதே கட்சியில் சேர்க்கும் அவலத்தை ஜெயலலிதா அரங்கேற்றுகிறார்.

கவுண்டமணியின் கவுண்ட்டர் டயலாக் - தமிழனோட தலை எழுத்தைப்பார்த்தீங்களா?இந்தப்பக்கம் போனா ஊழலின் ஊற்றுக்கண்.. அந்தப்பக்கம் போனா ஊழல் கடல்.. பாவம் அவனும் தான் என்ன செய்வான்..?


6. அ.தி.மு.க.,வுக்கு ஆதரவாக பிரசாரம் செய்வார் என எதிர்பார்க்கப்படும் நடிகர் விஜய் பேட்டி: என் சினிமாக்களில் அரசியல் உள்ளது; ஆனால், ஒரேயடியாக அதை தந்துவிட முடியாது. இப்போதுள்ள தலைமுறை தெளிவாக உள்ளனர். அரசியலை சினிமாவுடன் இணைத்துப் பார்க்கும், பேசும் மன பக்குவம் அவர்களுக்கு உள்ளதா எனத் தெரியவில்லை. அவர்கள் நினைத்தால் எல்லாம் கூடும்.
கவுண்டமணியின் கவுண்ட்டர் டயலாக் - தம்பி.. அப்பா பேச்சைக்கேட்டுட்டு கட்சி.. சி எம்னு கனவு கண்டுட்டு அப்புறம் உள்ளதும் போச்சுடா நொள்ளக்கண்ணானு அவஸ்தைப்பட வேணாம்..வந்தமா.. நடிச்சமா?4 காசு பார்த்தமா?ன்னு இருக்கனும்..ரஜினியே உள்ளே வர யோசிக்கறாரு.. உங்களுக்கென்ன அவசரம்.?

7.இந்திய கம்யூனிஸ்ட் பொதுச் செயலர் பரதன் பேட்டி: கறுப்புப் பணம் வைத்திருப்பவர்கள் பற்றிய விவரங்களை ரகசியமாக வைத்திருப்பது ஏன்? அவர்களின் பெயர்களை வெளியிடாதது ஏன்? தங்கள் பணத்திற்கு வரி செலுத்தாமல், பதுக்கி வைத்துள்ளனர். அந்த பணத்தை மத்திய அரசு பறிமுதல் செய்ய வேண்டும்.

கவுண்டமணியின் கவுண்ட்டர் டயலாக் - ஏன்? ஏன்?னு ஏன் கேள்வி கேட்டு கொல்றீங்க? சொந்த செலவுல யாராவது சூன்யம் வெச்சுக்குவாங்களா?அந்த மேட்டர் வெளில வந்தா பாதி பேரு காங்கிரஸ் காரனா இருப்பான்.. மீதிப்பேரு கழக ஆட்களா இருப்பாங்க..

8.ம.தி.மு.க., பொதுச் செயலர் வைகோ பேச்சு: வாஜ்பாய் பிரதமராக இருந்த போது கூடிய அனைத்துக் கட்சி கூட்டத்தில், இலங்கை ராணுவத்திற்கு எந்த உதவியும் செய்யமாட்டோம் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதில் சோனியாவும் பங்கேற்றார். ஆனால், காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தவுடன் செய்த முதல் காரியமே, சிங்கள அரசுக்கு அனைத்து உதவிகளையும் செய்தது தான். ஆறு கோடித் தமிழர்களை உள்ளடக்கிய இந்தியாவை ஆளும் காங்கிரஸ், தமிழர்களுக்கு எதிரான முடிவை எடுத்தால், அதை நாம் கண்டிக்கக் கூடாதா?

கவுண்டமணியின் கவுண்ட்டர் டயலாக் - எந்தக்காலத்துல  எந்த அரசியல்வாதி சொன்னதை செஞ்சிருக்கான்?ஏன் நீங்க கூடத்தான் என் ஒரே தலைவன் கலைஞர்தான் அப்படின்னு வீர வசனம் பேசுனீங்க..இப்போ அம்மா பின்னால ஓடலையா?


டிஸ்கி 1 - சிறுகதைகள் பத்திரிக்கைகளில் பெரிய வரவேற்பை இப்போது பெறுவதில்லை..பிளாக் உலகில் கதைகள் ரொம்ப குறைவான அளவிலேதான் வருது.. அப்படியே வந்தாலும் சும்மா நட்புக்காக லைட்டா ரீட் பண்ணிட்டு ஓட்டும் கமெண்ட்டும் போடறதை பாக்கறேன்..அதனால கதை போடலாமா? அல்லது மின்னல் கதைகள் மாதிரி குட்டி கதைகள் ( 8 லைன்)போடலாமா? அப்படின்னுயோசிக்கறேன்..


டிஸ்கி 2 - வழக்கமா நான் போடற சினிமா பதிவை விட கவிதை,கட்டுரைகளுக்கான ஹிட்ஸ் 13 மடங்கு கம்மியா இருக்கு.இருந்தாலும் நான் கலந்து கட்டி அடிக்கக்காரணம் இவனுக்கு சினிமாவை விட்டா எதுவும் தெரியாதுன்னு சொல்றவங்க வாயை அடைக்கத்தான்..