Friday, December 16, 2011

மம்பட்டியான் - சினிமா விமர்சனம்

 http://www.mambattiyan.com/image01.jpg

ரீமேக் படத்தை பார்க்கறப்ப  ஒரிஜினல் பற்றி ஒப்பீடு செய்வது தவிர்க்க முடியாது, அதுவும் ஒரிஜினல்ல அப்பா, ரீமேக்ல பையன் ஹீரோ எனும்போது அது இன்னும் கூடுதல் கவனிப்பு பெறும்.. சும்மா சொல்லக்கூடாது. ஒளிப்பதிவு  , லொக்கேஷன் செலக்‌ஷன்ஸ் ரெண்டுலயும் ரீமேக் படம் ஒரிஜினலை தூக்கி சாப்பிட்டுடுச்சு.. சபாஷ்.. ஆனா......................

தியாகராஜன் மலையூர் மம்பட்டியானா நடிக்கறப்ப அவர் இறுகுன முகமும்,எதுக்கும் அசைஞ்சு கொடுக்காத அவர் பாடி லேங்குவேஜும் மாபெரும் பிளஸ் , ஆனா பிரசாந்த் என்னதான் அப்பாவை விட பாடியா இருந்தாலும் , எப்போ பாரு பஸ்கி எடுத்த ஜிம் பார்ட்டி மாதிரி உடம்பை விறைப்பா வெச்சிருந்தாலும் அவரோட முகம் அப்பா அளவுக்கு கேரக்டரை வெளிப்படுத்தலை..

ஓக்கே, படத்தோட கதை என்ன? மலையூர்ங்கற கிராமம்.. ஏழை மக்களை ஏமாற்றும்  வில்லன் ஹீரோவோட அம்மா, அப்பா சொந்தங்களை போட்டுத்தள்ளறார், ஹீரோ உடனே பழிக்குப்பழி வாங்கி காட்டுக்குள்ள போய்  பதுங்கறார். அவர் செல்வந்தர்களை கொள்ளையடிச்சு ஏழை மக்களுக்கு உதவறார்..காட்டுக்குள்ள மம்பட்டியான்கற பேரை மிஸ்யூஸ் பண்ணி இன்னொருத்தன் இருக்கான்.. 

போலீஸ் படையே காட்டுக்குள்ள மம்பட்டியானை தேடுது.. மம்பட்டியான் போலீஸ்க்கு டிமிக்கி கொடுத்துட்டே , சைடுல ஹீரோயின் கூட ரொமான்ஸும்,இன்னொரு சைடுல முமைத்கான் கூட சில்பான்சும் பண்ண ட்ரை பண்றார். ஆனா அவருக்கு ஓடறதுக்கே படம் பூரா நேரம் பத்தலை.. அப்பாதான் டைரக்டர் ,பாவம் என்ன செய்வார்.. ஹூம்.. 



https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi0RH6masb28d2gDzPvybQVci6X-whnun_6Gl8DsDdNAWBYA-v82gA4m4z-_c0za53V1-NIZe-_ifzPZRzre-yhhV9T-_sGFawHZis6l6nfjQ3a-bav0Nf9BdogIVDn0smulFILUrEXPYD0/s1600/Mambattiyan_releasing.jpeg

சரிதா கேரக்டர்ல மீரா ஜாஸ்மின் ஓக்கே .. அது ஒரு கிராமத்துக்கேரக்டர் என்பதால் ரஞ்சிதா மாதிரி மாநிறமான ஃபிகரை போட்டிருக்கலாம். அதாவது ஹீரோயினா.. மீரா கேரளா ஃபிகர் என்பதால் பாத்திரத்துக்கு பொருந்தினாலும் தனித்து தெரிகிறார்.. ஏன்னா படத்துல வர்ற எல்லாரும் மாநிறமா இருக்காங்க, பாப்பா மட்டும் சந்தன நிறத்துல ஜொலிக்குது.. 

பிரகாஷ்ராஜ் வழக்கம் போல் அசத்தல்ராஜ்.. ஐ ஜி யான அவர் மம்பட்டியானிடம்  அடிக்கடி ஏமாறுவது நம்பும்படி இல்லை.. வடிவேல் சீரியஸான கதையில்  நமது ரிலாக்ஸ்க்கு  காமெடி பண்றார். 320 நாட்களுக்குப்பிறகு அவர் காமெடி நடிப்பு வெல்கம் பேக்.. .

காட்டு வழி போற பெண்ணே கவலைப்படாதே, காட்டுப்புலி வழி மறிக்கும் கலங்கி நிக்காதே, சின்னப்பொண்ணு சேலை செண்பகப்பூ போல   போன்ற சூப்பர்ஹிட் பாடல்களை அப்படியே யூஸ் பண்ணி இருக்காங்க.. குட் திங்க்.. 



http://www.southdreamz.com/wp-content/uploads/2010/05/meera.jpg

இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள்

1. லொகேஷன்கள் ஒக்கேனக்கல் , குற்றாலம்  மாதிரி அருவியும் அருவி சார்ந்த இடங்களும் கண்ணுக்குக்குளுமையா செலக்ட் பண்ணி  சீன் பை சீன்  அட்ராக்டிவ் ஷாட்டா எடுத்திருக்கறது செம.. காமிரா எப்பவும் அருவி, பசுமையான காடு, என ரவுண்டிங்க்லயே ஆக்டிவா இருப்பது சூப்பர்.. 


2. ஆர்ட்டிஸ்ட் செலக்‌ஷன்கள் எல்லாமே ஓக்கே , சண்டைப்பயிற்சி , பின்னணி இசை நல்லாருக்கு.. 


3.  ஹீரோவை போட்டுத்தள்ளும் அப்பாவி கேரக்டர், முமைத்கான், வடிவேல் கேரக்டர் எல்லாம் அவங்கவங்களுக்கு குடுத்த வேலையை சரியா செஞ்சிருக்காங்க.. சரியா வேலை  வாங்குன இயக்குநருக்கு பாராட்டுகள்


இயக்குநரிடம் சில கேள்விகள், பல சந்தேகங்கள், சில ஆலோசனைகள்

1.  பில்லா படம் ரீமேக்ல எப்படி ஒரிஜினலை விட ஸ்டைலிஸா இருந்ததோ அந்த மாதிரி இதை சொல்ல முடியலை, ஏன்னா சம்பவங்கள் எல்லாம் அப்படியே ஜெராக்ஸ் தான், புது ஐடியாக்கள் கம்மி. 

2. கதை நடந்த கால கட்டம் 1983.... ஆனா  இது ஒரு பீரியர்டு ஃபிலிம் மாதிரி கவனம் காட்டலை.. இந்தக்காலத்துல ஏது பண்னையார் எல்லாம்?

3. பிரகாஷ்ராஜ் கிட்டே மம்பட்டியான் கேஸ் பற்றி சொல்லும் போலீஸ் ஏன் செந்தமிழ்ல செய்தி வாசிக்கறார்? நார்மலா பேச்சுத்தமிழ்ல பேசமாட்டாரா?

4.  ஹீரோ ஒரு ஐ ஜி கிட்டே உங்க போலீஸ் ஆளுங்களை நான் பிடிச்சு வெச்சிருக்கேன்னு சொன்னதும் அவர் உடனே அவர் ஆளுங்களுக்கு ஃபோன் போட்டு செக் பண்ண மாட்டாரா? சொன்னதும் உடனே நம்பி ஹீரோ ஆளுங்களை ரிலீஸ் பண்ணிடுவாரா?

5. ஊருக்குள்ள போலீஸ் நடமாட்டம் இருந்தா வீட்ல சிவப்புக்கொடி, போலீஸ் நடமாட்டம் இல்லைன்னா பச்சைக்கொடியை தன் வீட்டு கம்பத்துல ஏத்தி சிக்னல் தர்றாரு முமைத்கான்,அது ஓக்கே, அவர் ஏன் எப்போ பாரு கரகாட்டத்துக்கு கிளம்பற கலக்கல் ஃபிகர் மாதிரி மேக்கப், டிரஸ் போட்டுட்டு ரெடியா இருக்காரு, வருஷத்துல 365 நாட்களும் திருவிழாவா?

http://tamilmovies.skynyxonline.com/myimages/actress/meerajasmine/Meera_Jasmine001.jpg

6.  போலீஸ் கேரக்டரா வர்ற பிரகாஷ் ராஜ், ஆர்த்தி புகழ் கணேஷ் 2 பேரும்  போலீஸ் மாதிரி க்ளோஸ் கட்டிங்க் பண்னாட்டி பரவால்ல, ஹிப்பி மாதிரி ஹேர் எதுக்கு?

7. ஒரு சீன்ல மீரா ஜாஸ்மின் பானைல தண்ணி எடுத்துட்டு வர்றார்.. அப்போ ஒரு பொண்ணு தற்கொலை முயற்சின்னு சொல்றாங்க, அவங்க வீட்டுக்கு போறப்ப காலி பானையை இறக்கி வைக்கறார். கண்டினியுட்டி மிஸ்ஸிங்க்.. 

8. பல இடங்கள்ல மம்பட்டியானை போலீஸ் நேருக்கு நேர் சேஸ் பண்ணீ ஓடுது, ஆனா சுட மாட்டெங்குது. துரத்திட்டே இருக்கு.. அட்லீஸ்ட் கால்லயாவது சுடலாமே?


9. மம்பட்டியான் மாதிரி ஒரு டஃப் கேரக்டர் முமைத்கான் மாதிரி ஒரு நடிகையோட குத்தாட்ட சாங்க் போடனுமா? என்னதான் கனவு சீனா இருக்கட்டும்.. அது கேரக்டரோட சீரியஸ்னெஸை குறைக்காதா? (ஒரிஜினல்ல தியாகராஜன் ஆட மாட்டார், சும்மா வேடிக்கை மட்டும் பார்த்திங்க், ஆனா இதுல அண்ணன் பிரசாந்த செம ஆட்டம்)

10. ஒரு சீன்ல காட்டுக்குள்ள ஒரு போலீஸ் படையே மம்பட்டியானை நேர்ல பார்த்துடுது, அடுத்த ஷாட்ல ஒரே ஒரு இன்ஸ்பெக்டர் மட்டும் துரத்தறார் .. ஏன்?

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhbtkM6jKgkW5QEPY7l4NdL2J7zSmmRB8VWn0zrV4lQz3Rpy-t0QHcj_MAf8EkAHYVJ7ozvTHqyMd_WfWcgdqQWwyX_LrLUs_Creqh_dW7J1pxgml24Pq_HCe5tIX3MtExCxHOLJKVfg-w/s1600/meera-jasmine-alladista-hot-005.jpg

பிரசாந்துக்கு கண்டிப்பா இது ஒரு ரீ எண்ட்ரி படம் தான்.. 

ஏ பி செண்டர்கள்ல 30 நாட்கள், சி செண்டர்கள்ல 10 நாட்கள் ஓடும்

எதிர்பார்க்கப்படும் ஆனந்த விகடன் மார்க் - 41

எதிர்பார்க்கப்படும் குமுதம் ரேங்க் - ஓக்கே 

சி.பி கமெண்ட் - ஒளிப்பதிவில், லொக்கேஷன்களில் ஆர்வம் உள்ளவர்கள் பார்க்கலாம்

31 comments:

Anonymous said...

me first

Anonymous said...

padam mokkaiya?

கோவி said...

அடடா.. படம் நல்லா இல்லியா..

MANO நாஞ்சில் மனோ said...

விகடன் மார்க் 41 அப்புயடின்னா படம் சக்சஸ்தான்....!

MANO நாஞ்சில் மனோ said...

இனி தியாகராஜன் நடிச்ச கொம்பெறிமூக்கனை ரீமேக் பண்ணசொல்லு அண்ணே...

Admin said...

விமர்சனம் நன்று..

ஸ்ரீராம். said...

ஃபாஸ்ட் விமர்சனம். பிரகாஷ்ராஜ், வடிவேலு படம் ஒன்றாவது போட்டிருக்கக் கூடாதோ...

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

பகிர்வுக்கு நன்றி.
வாழ்த்துக்கள்.

Anonymous said...

உங்க கருத்த சொல்லுங்க

காதல் - காதல் - காதல்

சசிகுமார் said...

ஒருத்தர் நல்லா இருக்கு என்கிறார் ஒருத்தர் நல்லா இல்லை என்கிறார் எதுப்பா உண்மை... அது சரி ஆளாளுக்கு ஒரு டேஸ்ட்...

சென்னை பித்தன் said...

படம் நல்லா இல்லாட்டாலும்,விமரிசனம் நல்லாருக்கு.

பன்னிக்குட்டி ராம்சாமி said...

படம் தேறிடுமோ?

தமிழ்வாசி பிரகாஷ் said...

அண்ணே, பாஸ்ட் விமர்சனம் போட்ட நீங்க பாவம் தான்.... மொக்கைன்னு கேள்விப்பட்டேன்....


வாசிக்க:
குடிகாரன் மனசும், மக்கள் மனசும் - கவிதை

கவிதை வீதி... // சௌந்தர் // said...

நல்லது

Yoga.S. said...

வணக்கம்,சி.பி சார்!நல்லா விமர்சிச்சிருக்கீங்க!(எப்பப் பாரு பதினேழாவது,இல்ல பதினெட்டாவதா தான் கமெண்டமுடியுது,ஏன்????)

Astrologer sathishkumar Erode said...

விமர்சனம் முழுமையாக இல்லாத தோற்றம் தருகிறது.படம் போரடிக்குது..விறுவிறுப்பா போகுதா..பொன்னர் சங்கர் மாதிரி தியாகராஜன் இதிலும் மொக்கையா சொதப்பி இருக்காரா என்பதை விமர்சகர் தெளிவுபடுத்தவில்லை;-))

சக்தி கல்வி மையம் said...

விமர்சனம் வழக்கம் போல... உங்கள் பாணியில் அசத்தல்..

Unknown said...

பாவம் பிரசாந்த்! அவரை உற்சாகப்படுத்தவேனும் படம் சுமாராக ஓடினால் சரி!

karthikkumar.karu said...

film parkalama vendamanu athaiyum sollividungha.....

சரியில்ல....... said...

நச்சுன்னு நறுக்குன்னு, ஜம்ன்னு ஜிம்னு, பட்டைய கெளப்புது விமர்சனம ......

M.R said...

படம் பற்றிய தங்களின் கருத்து பகிர்வுக்கு நன்றி நண்பரே


த.ம 9

கோவை நேரம் said...

உங்களின் பார்வையில் எனது விமர்சனம்...சிபி...

Unknown said...

Nalla vimarsanam.. :-)..

padam parkara idea illa..

Unknown said...

சிபி...உளவு.com ல நான் மட்டும் தான் ஓட்டு போட்டிருக்கேன்....
நோட் திஸ் பாயின்ட் !

ad said...

பார்க்கவா?வேண்டாமா?

மகேந்திரன் said...

கலக்கல் விமர்சனம் நண்பரே..

சுதா SJ said...

விமர்சனம் தூள் பாஸ்

சுதா SJ said...

பாஸ் அந்த முமைத்கான் படம்.... அவ்வ்வ்வ்...... ஏன் பாஸ் இப்படி பயப்படுத்துறீங்க... :(

சுதா SJ said...

என்னது ஹீரோயினா ரஞ்சிதா வேணுமா??? நம்ம சிபி பாஸுக்கு ரஞ்சிதா பீவர் இன்னும் மாறல்ல போல... அவ்வ

N.H. Narasimma Prasad said...

அடுத்த படத்துலயாச்சும் ஜெயிப்பாரா பிரஷாந்த்?

கடம்பவன குயில் said...

இப்ப என்னன்றீங்க????? மம்பட்டியான் தேறுவானா??மாட்டானா???

நாங்க பார்க்கலாமா????தப்பிக்கலாமா????