Thursday, December 22, 2011

தமிழருவி மணியன் -ன் எழுச்சியான ,உருக்கமான வசனங்கள் இன் உச்சிதனை முகர்ந்தால்

http://www.filmics.com/tamil/images/stories/news/October_2011/18.10.11/Uchithanai_mugarnthal-movie-priview1.jpg 

1. ஒரு தனி மனிதனின் பேச்சால் (உரை) இரு நாடுகளின்  உறவு சீர் குலையும் என்றால் உடனடியாக சரி செய்யப்பட வேண்டியது அந்த இரு நாடுகளின் கெட இருக்கும் உறவைத்தானே தவிர அந்த தனி மனிதனின் பேச்சு அல்ல.. 

2. உள்ளதை உள்ளபடியாக பேசுவதையே அனுமதிக்காத இலங்கை அரசாங்கம் தவறாகப்பேசுவதை மட்டும் அனுமதிக்குமா?

3.  ஜெயில்ல இருந்து ரிலீஸ் ஆகற உன் கணவர் பேசற தொனியை பார்த்தா பிரஸ் மீட் முடிச்சுட்டு நேரா ஜெயிலுக்குத்தான் போவார் போல.. 

4. பொதுவேலை முக்கியம் தான், ஆனா குடும்பத்தையும் கவனிக்கனும்.. ஒரு குடிமகனா நாட்டுக்கு ஆற்ற வேண்டிய கடமை போலவே ஒரு குடும்பஸ்தனா தன் குடும்பத்துக்கு செய்ய வேண்டியது எல்லாருக்கும் இருக்கு.. 

5. ஐ அங்கிள்.. இந்த நாய் பேரென்ன?

மிக்கி..

எலி பேர் மாதிரி இருக்கு.. ஆனா பார்க்க புலி மாதிரி இருக்கு.. 

6.  நல்லா வளர்ந்த 21 வயசு பொண்ணுங்களுக்கே கர்ப்பம் ஆகி  5 மாசம் ஆகிட்டா கரு கலைக்கறது ரொம்ப ரிஸ்க், அதுவும் 13 வயசுப்பொண்ணுக்கு ரொம்பவே ரிஸ்க்.. 


http://www.eeladhesam.com/index.php?option=com_joomgallery&func=watermark&catid=13&id=5533&Itemid=53

7. யாரோ செஞ்ச தப்புக்காக உங்க பொண்ணை ஏன் பலி கொடுக்க துணியறீங்க?

8. விடுதலைப்புலி லேடி - எங்களை எல்லாம் சாப்பிடக்கூப்பிட நீ யாரு?

எங்களுக்காக சண்டை போடறீங்களே, உயிரைக்குடுக்கறீங்களே. நீங்க யார்?


9. விடுதலைப்புலி லேடிகள் - எங்களுக்கு சாப்பிட எல்லாம் நேரம் இல்லை.. 

பாப்பா- அப்போ உங்களுக்காக வேற யாராவது சாப்பிடுவாங்களா?

10.  எங்க நாட்டுப்பெண்கள் விமான சத்தம் கேட்டாலே வங்கருக்குள் சென்று ஒளிந்து  கொள்வார்கள், பாழாப்போன இந்த நாட்ல ( இலங்கை) அதைத்தவிர வேற என்ன தான் நாங்க செய்ய முடியும்? ( சென்சார்ல இலங்கைன்னு வர்ற இடங்கள் எல்லாம் கட்)

11. உயிரைக்காப்பாத்திக்கறதுக்காக  பலர் சொந்த மண்ணை விட்டு கிளம்பிட்டாங்க.. உயிரே போனாலும் பரவாயில்லை, நாம வாழந்த மண்ணை விட்டுப்பிரியக்கூடாதுன்னு நினைச்சது எவ்வளவ் பெரிய பிழை?

12. கிணத்துல அவ பிணம் கிடைச்சது.. தன்னையும் தன் கற்பையும் காப்பாத்திக்கறதுக்காக அவ கிணத்துல குதிச்சாளா? அல்லது அவளை யூஸ் பண்ணிக்கிட்டு அந்த மிருகங்கள் கிணத்துல தள்ளி விட்டுடுச்சான்னே தெரியலை.. போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட் எல்லாம் பண்ண முடியலை.. 

http://himadurai.com/images/tamilaruvimaniyan.jpg

13.  சீமான் - நம்ம கிட்டே கேட்காமயே லேடீஸ் 2 பேரும் கூட்டணி வெச்சுக்கிட்டாங்க பார்த்தீங்களா?

உங்க கிட்டே சொல்லிட்டு எல்லாம் கூட்டணி வைக்க முடியுமா?

14. உங்க 2 பொண்ணுங்களுக்கும் இயல், இசைன்னு அழகான தமிழ்ப்பேரு வெச்சிருக்கீங்க, அழகு.. அருமை.. சரி இயல், இசை முடிஞ்சது,அடுத்து   நாடகம் எப்போ?

ஆட்சில இருக்கற அரசியல்வாதிங்க அதைத்தான் தினம் நடத்திட்டு இருக்காங்களே, நான் வேற தனியா எதுக்கு நாடகம் போடனும்?

15.  நீ படிச்சு அமெரிக்கா போய் டாக்டர் ஆகப்போறியா?

ம்ஹூம், இங்கே மட்டக்களப்புல ஏழைகளுக்கு உரிய வசதி உள்ள ஹாஸ்பிடலே இல்லை. அங்கே ஹாஸ்பிடல் கட்டி டாக்டர் ஆகப்போறேன்.

16.  உங்களுக்கு ஒண்ணு தெரியுமா? என் ஃபிரண்ட் எங்க கண் எதிரே செத்துக்கிட்டே இருந்தான், நாங்க அதை பார்த்துக்கிட்டே இருந்தோம்...

17.  நாங்க செஞ்சது சட்ட விரோதமா?ன்னு தெரியலை.. ஆனா மனித நேயத்துக்கு எதிரானது அல்ல.. 

18. அது சாத்தானோட குழந்தை.. பல சிங்களவர்கள் ரேப் செஞ்சதால உருவான குழந்தை , அதை அழிச்சிடலாம்.. 

குழந்தைன்னாலே கடவுள் தான்.. இது கடவுள் குழந்தை, இது சாத்தானோட குழந்தைன்னு ஏன் பிரிச்சு பேசறீங்க? எந்த மண்ணுல பிறந்தாலும் ரோஜா ரோஜா தான்..

டிஸ்கி -

உச்சிதனை முகர்ந்தால் - ஈழத்தின் கண்ணீர் கவிதை -சினிமா விமர்சனம்

12 comments:

K.s.s.Rajh said...

////எங்க நாட்டுப்பெண்கள் விமான சத்தம் கேட்டாலே வங்குக்குள் சென்று ஒளிந்து கொள்வார்கள், பாழாப்போன இந்த நாட்ல ( இலங்கை) அதைத்தவிர வேற என்ன தான் நாங்க செய்ய முடியும்?////

பாஸ் இதில் வங்குக்குள் என்று வருகின்றது வங்கருக்குள் இல்லை பங்கருக்குள் என்று வரவேண்டும் என்று நினைக்கின்றேன்

பங்கர்/வங்கர்-பதுங்கு குழி

அருமையான பகிர்வு பாஸ்

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

தகவலுக்கு நன்றி.

MANO நாஞ்சில் மனோ said...

தமிழ்மனியன் எழுத்துக்கள், அபாரமாக உண்மை நிறைந்த போராட்டம் மிகுந்த எழுத்தாகவே எப்போதும் இருக்கிறது, நன்றிடா அண்ணே...!!!

MANO நாஞ்சில் மனோ said...

பங்கருக்குள் பதுங்கி இருக்கும் குழந்தை செல்வங்களின் கண்களின் மிரட்சியை பார்க்கும் போது, இப்பவே அருவாளை தூக்க மனம் துடிக்கிறது...!!!

MANO நாஞ்சில் மனோ said...

அந்த லேடி புலிகளின் கேள்வி பதில் அருமை...!!!

சரியில்ல....... said...

K.s.s.Rajh said... [Reply to comment]
////எங்க நாட்டுப்பெண்கள் விமான
சத்தம் கேட்டாலே வங்குக்குள்
சென்று ஒளிந்து கொள்வார்கள்,
பாழாப்போன இந்த நாட்ல ( இலங்கை)
அதைத்தவிர வேற என்ன தான் நாங்க
செய்ய முடியும்?////
பாஸ் இதில் வங்குக்குள்
என்று வருகின்றது வங்கருக்குள்
இல்லை பங்கருக்குள்
என்று வரவேண்டும்
என்று நினைக்கின்றேன்
பங்கர்/வங்கர்-பதுங்கு குழி
அருமையான பகிர்வு பாஸ்
///


இல்ல பாஸ், இலங்கை பேச்சு வழக்குல 'பங்கர்'ஐ வங்கர் னு தான் சொல்வாங்க. நிரூ கிட்டே கேட்டா தெரிஞ்சிடும்.

சரியில்ல....... said...

MANO நாஞ்சில் மனோ said...
பங்கருக்குள்
பதுங்கி இருக்கும்
குழந்தை செல்வங்களின் கண்களின்
மிரட்சியை பார்க்கும் போது,
இப்பவே அருவாளை தூக்க மனம்
துடிக்கிறது...!!!
////



கோவப்படாதீக..... அனியாயத்துக்கு லேட் நீங்க!
இலங்கைல போர் நடக்கிறப்போ நாமெல்லாம் 'மானாட மயிலாட' பாத்துக்கிட்டிருந்தோம் ஸாரே.

சரியில்ல....... said...

நல்ல பதிவு. எப்பவும் போல!

அக்கப்போரு said...

இந்த ஆட்சில இப்டி வசனம்லாம் இருக்க படத்த ரிலீஸ் பண்ணுனதுக்கே இந்தப் படத்தப் பாக்கனும்னே

Unknown said...

வசனங்கள் அல்ல இவை வாழ்க்கை சுவடுகள்...நன்றி சிபி!

உணவு உலகம் said...

அல்லல் பட்டோரின் கஷ்டங்கள் கண்கலங்க வைத்திடும்.

ம.தி.சுதா said...

சீபி வழமையாக தாங்கள் வசனங்கள் போடும் போது அதன் பெறுமதி இந்தளவு என்னால் உணர முடிவதில்லை...

நன்றி சீபி..

அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
எனக்கு ஏன் போர் பிடிக்காமல் போனது - அனுபவ விபரிப்பு