Wednesday, December 21, 2011

ஈரோடு பதிவர் சந்திப்பு - வெளிவந்த பல பதிவுலக ரகசியங்கள் பாகம் 2

தொகுத்து வழங்குவது ஈரோடு  கதிர் ,, தாமோதரன் ,திரையில் ஜாக்கி


பதிவர்கள் எல்லாரும் வந்து சேர்ந்தாச்சு.. யார் யார் என்ன பேரு, பிளாக் பேரு என்ன? அப்டின்னு ஈசியா அடையாளம் கண்டுக்க ஒரு ஐடியா பண்ணி இருந்தாங்க .அதாவது ரிசப்ஷன்லயே ஒரு ஐ டி கார்டு ,திடீர் உப்புமா, திடீர் கிச்சடி மாதிரி உடனடி ஐ டி கார்டு, அவங்கவங்க பேர் , பிளாக் நேம் எழுதி அதை சட்டைல மாட்டிக்கனும்.. எல்லாரும் மாட்டிக்கிட்டாங்க. ஆனா பாருங்க எனக்கு பின்னூசி குத்த தெரில ஹி ஹி , இதை வெளீல சொன்னாலும் கேவலம், உள்ள சொன்னாலும் கேவலம்.. 

அப்புறம் உள்ளே போய் எல்லார் சட்டை பாக்கெட்டையும் பார்க்க வேண்டியது , அவங்க கிட்டே வாலண்ட்டரியா போய் அறிமுகம் பண்ண வேண்டியது..ஃபோட்டோ எடுத்துக்க வேண்டியது. ( ஆரியக்கூத்தாடினாலும், திராவிட விஷால் கூத்தாடினாலும் காரியத்துல கண்னா இருடான்னு பெரியவங்க சொல்லி இருக்காங்க ஹி ஹி )


 ஆரூர்மூனா செந்தில், சங்கவி சதீஷ்,மெட்ராஸ்பவன் சிவக்குமார்,ஃபிலாசபி பிரபாகரன்,மீ, லக்கிலுக் யுவகிருஷ்ணா, நாய் நக்ஸ் நக்கீரன்

ஆனா லேடீஸ் பெரும்பாலும் பேட்ஜ் குத்திக்கலை. ஹேண்ட் பேக்லயே வெச்சுக்கிட்டாங்க, அதனால பெரும்பாலான பெண் பதிவர்களை அடையாளம் காண முடியாம போச்சு.. இதுல ஒரு உளவியல் ரீதியான சிக்கலும் இருக்கு..210 ஆண்கள் இருக்கற கூட்டத்துல 15 பெண் பதிவர்கள் இருப்பதால் அவங்களுக்கு ஒரு அன் ஈசி இருக்கும். அவங்களா போய் யார் கிட்டயும் அறிமுகம் பண்ணிக்க முடியாது, ஆண் பதிவர்கள் வாலண்ட்ரியா போய் அவங்க கிட்டே அறிமுகம் செஞ்சு பேசுனா மண்டபத்துல அது தனியா தெரியும்...பசங்க கிண்டல் பண்ணுவாங்க, பார்றா பொண்ணுங்க கிட்டே போய் வழியறான்னு.. அதனால இரு பிரிவும் தனித்தனியா  இருந்தாங்க, ஏற்கனவே அறிமுகம் ஆனவங்க மட்டும் கலந்து பேசிக்கிட்டாங்க, மத்தவங்க வேடிக்கை பார்த்துட்டு இருந்தாங்க..




 இது எதிர்காலத்துல நடக்கற பதிவர் சந்திப்புல தவிர்க்கப்படனும்.. பதிவர் சந்திப்பே எதுக்குன்னா இதுவரை எழுத்தில் மட்டுமே அடையாளம் காணப்பட்டவர்கள் நேரில் உருவத்தை, அவர்கள் பழகும் விதத்தை காணூம் வாய்ப்பாக அதை பயன்படுத்தவே...

அப்புறம் கண்ணில் தென்பட்ட உறுத்தலான இன்னொரு விஷயம்.. பிரபல பதிவர்கள் எல்லாம் ஒரு குரூப், மீடியம் பதிவர்கள் இன்னொரு குரூப், அதிகம் எழுதாத பதிவர்கள் ஒரு குரூப் என பதிவர்கள் 3 பிரிவாக தனித்தனியே இருந்தது வருந்தத்தக்கது..

சாதனை புரிந்த பதிவர்கள் என 15 பேருக்கு விருது குடுத்தாங்க, அவர்கள் ஆரம்பத்துலயே மேடைக்கு அழைக்கப்பட்டு  கவுரவிக்கப்பட்டாங்க.. சிறப்பு அழைப்பாளர்கள், விருந்தினர்கள் பேசியதும், விருது வழங்கப்பட்டதும் அவங்க எல்லாம் கிளம்பிட்டாங்க.. அதற்குப்பிறகு மீதி இருப்பவர்கள் அறிமுகம் நடந்தது.. இது பலருக்கு மன வருத்தத்தை ஏற்படுத்தி இருக்கும்.


 வீடு சுரேஷ்குமார், மீ


இவங்க பரிசு வாங்குவதை பார்க்க, இவங்களுக்கு கை தட்டவா நாங்க வந்தோம் என பலர் புலம்பியதை காண முடிந்தது. ஒரு விழா நடத்துவது  எவ்வளவு சிரமம், அதில் யார் மனதையும் புண் படுத்தாமல் எப்படி நடத்துவது, வந்திருந்தவர்களை எப்படி நடத்துவது என்று நமக்கெல்லாம் ஒரு பெரிய பாடமாக இந்த நிகழ்ச்சி இருந்தது..

எந்த ஒரு நிகழ்வில் இருந்தும் பாசிட்டிவ் பார்வை வேண்டும் என்ற பெரியவர்கள் கூற்றுக்கு ஏற்ப இந்த நிகழ்ச்சியில் இருந்து எப்படி எல்லாம் விழா ஏற்பாடு இருக்க வேண்டும் என்னும் பாடத்தை கற்றுக்கொண்டேன்.. இது யாரையும் குறை சொல்லும் நோக்கம் அல்ல.. நிறை  குறைகளை அலசும் ஒரு முயற்சி அவ்வளவுதான்..

விழாவில் தொகுப்பாளர்களாக 3 பேர் மிக பிரமாதமாக விழாவை தொகுத்து வழங்கினார்கள்.. அப்புறம் குறிப்பிட்டு சொல்ல வேண்டிய இன்னொரு விஷயம்.. சாதனையாளர்கள் 15 பேரின் பயோ டேட்டா , அவர்கள் வலைப்பூ பற்றிய விபரங்கள் அனைத்தும் மேடையிலேயே ஒரு திரை கட்டி அட்டகாசமாக தொகுத்து அளித்தார்கள்.அந்த அழகிய பணியை அகல் விளக்கு ராஜா ஏற்றுக்கொண்டார்.. முதலில் உண்மைத்தமிழன்



ஜாக்கிசேகர், உண்மைத்தமிழன்

1. உண்மைத்தமிழன்  - இவரைப்பற்றி சொல்லவே வேணாம், டைரக்டர் எழுதுன திரைக்கதையை விட சினிமா விமர்சனத்தில் இவர் எழுதும் கதையின் நீளம் அதிகமா இருக்கும், கடும் உழைப்பாளி.. பிரம்மச்சாரி .. தமிழன் எக்ஸ்பிரஸ் உட்பட பல பத்திரிக்கைகளில் பணி ஆற்றியவர், முருக பக்தர்..இயற்பெயர் சரவணன்,4 வருடங்களாக வலைத்தளம் இயக்கி  வருகிறார்,சென்னையை சார்ந்தவர்

2. ஜாக்கிசேகர் - வலை உலகின் சூப்பர் ஸ்டார், இவர் பற்றி தாக்கி எழுதவே பல வலைத்தளங்கள் இயங்கி வருகிறது என்றாலும் காய்த்த மரமே கல்லடி படும் என்பதால் அதை பற்றிக்கவலைப்படாமல் 4 வருடங்களாக சினிமா விமர்சனம், சமூக விழிப்புணர்வுக்கட்டுரைகள் எழுதி வருகிறார்.. 4 குறும்படங்கள் இயக்கி உள்ளார்.. உதவி ஒளிப்பதிவாளராக திரைத்துறையில் பணி ஆற்றி வருகிறார்.விஜய் டி வி யின் நீயா நானா நிகழ்ச்சியில் பங்கேறு உள்ளார், அதில் பல விவாதங்கள் புரிந்தவர்,4 வருடங்களாக வலைத்தளம் இயக்கி  வருகிறார்,சென்னையை சார்ந்தவர், இவர் பெயர் வாசிக்கப்பட்டதும் பலத்த கரகோஷம் ஹாலில்



3. ஜீவ்ஸ் எனும் அய்யப்பன் -  பிட்ஸ் இன் ஃபோட்டோகிராஃபி (PIT) எனும் வலைத்தளம் நடத்துகிறார்.. புகைப்படங்களூக்கான தளம் அது . கல்கி , அமுத சுரபி, வடக்கு வாசல் போன்ற இதழ்களீல் கட்டுரை எழுதி இருக்கிறார். 4 வருடங்களாக வலைத்தளம் இயக்கி  வருகிறார்,பெங்களூர்வாசி


 அதிஷா , ஸ்டாலின் குணசேகரன்

4. அதிஷா எனும் வினோத்குமார் - புதிய தலைமுறை தலைமை நிருபர்.. மிகச்சிறந்த  எள்ளல் நடைக்கு சொந்தக்காரர். ட்விட்டர், பஸ், ஃபேஸ்புக் என எல்லாவற்றிலும் இவரது படைப்புகள் பிரபலம்.. சென்னையை சார்ந்தவர்


 தேனம்மை லட்சுமணன்,

5. தேனம்மை லட்சுமணன் - இவர் படைப்பு வராத புக்ஸே இல்லை.. இவர் பிளாக் திறந்தாலே அந்த புக்ல வந்த படைப்பு, இந்த புக்ல வந்த கதை என கலக்கலாக இருக்கும்.. பெண் பதிவர்களில் அதிகமாக எழுதுபவர். சென்னையை சார்ந்தவர்.






6. வெய்யிலான் எனும் ஸ்ரீகாந்த் ரமேஷ் - விருதுநகர் வாசி, பணி திருப்பூர்.. 4வருடங்களாக வலைப்பூ வைத்துள்ளார், இவர் எனகு அறிமுகம் இல்லாதவர்.. திருப்பூரில் சேர்தளம் எனும் அமைப்பை சார்ந்தவர் போல.. ஒரு பெரிய குரூப்பே ஒரே மாதிரி வெள்ளை நிற டி சர்ட்டில் வந்து மண்டபத்தில் ஒரு கலகலப்பை ஏற்படுத்தினார்கள்.





7. வலைச்சரம் சீனா - வலைத்தளம் வந்த புதிதில் எல்லா பிளாக்குக்கும் கமெண்ட்ஸ் போட்டு பின்னூட்ட பிதாமகர் பட்டம் பெற்றவர்.. வலைச்சரத்தின் மூலம் பல புதியவர்களை அடையாளம் காட்டியவர்..




8. கே ஆர் பி செந்தில்  - இவர் எழுத்துக்கள் எல்லாம் படு சீரியஸ் ஆக இருக்கும்.. செம கோபக்காரர் போல என நினைத்தால் ஆள் படு ஜாலி டைப்.. சென்னை வாசி.. பயோடேட்டா ஸ்பெஷலிஸ்ட். கேபிள் சங்கரின் நெருங்கிய நண்பர்..





9. சுரேஷ்பாபு - இவர் புகைபட கலைஞர், பல ஜனரஞ்சகப்பத்திரிக்கைகளில் படைப்பு வர கண்டவர். இவர் எனக்கு அறிமுகம் இல்லை





10. லக்கிலுக் யுவகிருஷ்ணா - 2010 ஆம் ஆண்டு சுஜாதா விருது பெற்ற வலைத்தள வாசி. புதிய தலைமுறை நிருபர். தீவிர திமுக அனுதாபி.. ஆள் செம ஜாலி டைப். ட்விட்டரில் செம கலாட்டா செய்யற நபர். இவர் விருது வாங்கறப்ப ஒரு காமெடி. விருது தர்றப்ப கொடுத்த சில்வர் தட்டையும் எடுத்துட்டு போய்ட்டார். அப்புறம் ஒருத்தர் பதறி ஓடி வந்து தட்டு வேணும்னு கேட்டு வாங்குனது செம கலட்டாவான சீன்.. இவர் வரும்போது மட்டும் நிறைய பேர் கைதட்டுனாங்க.. ஆள்ங்களை ஏற்பாடு பண்ணிட்டு வந்துட்டார் போல.




11. நாளைய இயக்குநர் புகழ் ரவிக்குமார் - இவர் எடுத்த ஜீரோ கிலோ மீட்டர் ஷார்ட் ஃபிலிம் எனக்கு மிகவும் பிடித்தது.. நாளைய இயக்குநர் நிகழ்ச்சியில் பல படங்கள் இடம் பெற்று 3ம் பரிசு பெற்றவர். நகைச்சுவை உணர்வு நிரம்பியவர்.




12. பாலபாரதி - நல்ல கவிஞர். பல ஜனரஞ்சகப்பத்திரிக்கைகளில் இவரது நீண்ட கவிதைகள் பிரசித்தம்.. எனக்கு பழக்கம் இல்லை,புதிய தலைமுறையில் பணி புரிகிறார்






13. இளங்கோவன் பாலகிருஷ்ணன் - குறும்பட இயக்குநர்.கோவை பி எஸ் ஜி ஆர்ட்ஸ் காலேஜ் லெக்சரர்.எனக்கு பழக்கம் இல்லை




14. மகேந்திரன் - சிறந்த சமூக ஆர்வலர்.. பல மன நிலை குன்றிய நண்பர்களுக்கு உதவி செய்தவர்..



15. ஓவியர் ஜீவா - திரைச்சீலை என்னும் திரைப்படத்தை பற்றி எழுதப்பட்ட புத்தகத்துக்கு  தேசிய விருது பெற்ற சாதனையாளர்..


---..... தொடரும்

டிஸ்கி -

ஈரோடு பதிவர் சந்திப்பு - வெளிவந்த பல பதிவுலக ரகசியங்கள் பாகம் 1

43 comments:

Unknown said...

பலரை அறிந்து கொண்டேன் நன்றி சிபி!

கோவை நேரம் said...

நானா..ரெண்டாவது

கோவை நேரம் said...

ஆச்சரியம் ..ஆனால் உண்மை...

மன்மதகுஞ்சு said...

அண்ணா பார்க்கவே பொறாமையா இருந்திச்சு நம்ம ஊரில இப்பிடியெல்லாம் செய்யிறாங்கள் இல்லையேன்ன்னு,அப்படி செய்தால் என்னைப்போன்ற பதிவுலக கத்துக்குட்டிகளுக்கு கொஞ்சம் உதவியா இருக்கும்,அண்ணே சின்ன வேண்டுகோள் அந்த பதிவர்களோட பெயரை அவர்களின் வலைப்பூ இணைத்திருந்தால் இலகுவாக அவர்களின் வலைப்பூக்களை நாம் சென்றடைய வசதியாக இருந்திருக்கும், ஒரு மிகப்பெரிய நிகழ்ச்சியை உங்கள் எழுத்து நடையில் லாவகமாக வலைப்பூவில் திரையிட்டு காண்பித்ததுக்கு நன்றி

கோவை நேரம் said...

பதிவுலக பாக்யராஜ் உங்களுக்கு விருது இல்லையே ..ப்ளாக் ஆரம்பிச்சு மின்னல் வேகத்தில் உயர்ந்த உங்களுக்கு கொடுக்காதது வருத்தமே...

கோவை நேரம் said...

இரண்டாவது போட்டோவை மார்பிங் பண்ணி தோத்தவண்டா செந்தில் தன்னோட ப்ளாக்ல போட்டு இருக்கிறார்.

Unknown said...

நாங்கல்லாம் உம்பட பதிவுக் கெனாவுல இன்னும் வரலையோ ? #lol

மன்மதகுஞ்சு said...

அங்கே வந்திருந்த பலரின் எழுத்தில் கவர்ந்திழுக்கப்பட்ட நான் அவர்களை நேரில் பார்க்க உங்கள் பதிவு உதவியாக இருந்தது ரொம்ப நன்றிண்ணே

சசிகுமார் said...

/// தொடரும் ///

இன்னுமா!!!

எங்க போனாலும் நம்ம வேலையில கரெக்டா இருக்கணும்.. உதாரணம் சிபி

MaduraiGovindaraj said...

அப்புறம் கண்ணில் தென்பட்ட உறுத்தலான இன்னொரு விஷயம்.. பிரபல பதிவர்கள் எல்லாம் ஒரு குரூப், மீடியம் பதிவர்கள் இன்னொரு குரூப், அதிகம் எழுதாத பதிவர்கள் ஒரு குரூப் என பதிவர்கள் 3 பிரிவாக தனித்தனியே இருந்தது வருந்தத்தக்கது..
முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் நடுநிலை தவறும் புதியதலைமுறை T.V

கவி அழகன் said...

கலக்கல் வாழ்த்துக்கள்

CS. Mohan Kumar said...

பால பாரதியும் புதிய தலைமுறையில் தான் பணி புரிகிறார் ரயில்வேயில் அல்ல

வெளங்காதவன்™ said...

:-)

Unknown said...

எங்க தலைவர் பிரபல பதிவர் நாய்நக்ஸ் அவர்களை(இரண்டாம் படத்தில்)ஓரங்கட்டியதை வன்மையாக கண்டிக்கிறோம்)...லிங்க்கும் தரல
என்ன நியாயம் இது......

சாதாரணமானவள் said...

Exactly what i felt

ராஜி said...

பகிர்வுக்கு நன்றி

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

:))

சம்பத்குமார் said...

வணக்கம் சிபி அண்ணா

பதிவுல கடைசி வரை நீங்க மெடிக்கல்ஸாப் போனத பத்தி சொல்லல பார்த்தீங்களா..

ஹா.ஹா.ஹா..

சம்பத்குமார் said...

சுவாரஸ்யங்கள் தொடரட்டும்...

Unknown said...

மிக்க நன்றி தலைவரே!...

தமிழ்வாசி பிரகாஷ் said...

அண்ணே.... இந்தவாட்டி பதிவு கொஞ்சம் டீசண்டா இருக்கே... அதாவது நக்கல்ஸ் கம்மின்னு சொன்னேன்..ஹி..ஹி...

Unknown said...

arumai.......

Anonymous said...

என்ன அண்ணே, அந்த போட்டோவை போட்டு புசுக்குன்னு ஆக்கிப்புட்டீங்களே. நான் அதில் ஒரு பிளாக்கையே ஒட்டிடலாம் என்று பார்த்தேன்.

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

அசத்தல் அறிமுகங்கள்.

ஈழவயல் said...

அன்புச் சகோதரனே வணக்கம்!

ஈரோட்டில் நடந்த பதிவர் சந்திப்பின் விபரங்களை அழகிய தொகுப்பாகத் தந்துள்ளீர்கள்! இணைத்துக்கொண்ட புகைப்படங்களும் அருமை!

உங்களுக்கு எமது வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்!

அன்புடன் ஈழவயல்

கோகுல் said...

சுவாரஸ்ய தொகுப்பு.

MANO நாஞ்சில் மனோ said...

நான் அறியாத பலரின் அறிமுகம் செய்தமைக்கு நன்றி அண்ணே...!!!

MANO நாஞ்சில் மனோ said...

விழாவின் பல நிறைகுறைகளை சொல்லி இருக்கிறாய், ஆனால் ஒன்னுய்யா ஒரு விழான்னா எல்லாரையும் கண்டிப்பா திருப்தி படுத்த முடியாது என்பதும் உண்மைதான்...!!!

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

ரைட்டு.

Anonymous said...

அருமையான தொகுப்பு. உங்களை பார்த்ததில் சந்தோஷம்.

N.H. Narasimma Prasad said...

சூப்பர் அண்ணே. அடுத்த பாகத்தை ரொம்ப ஆர்வத்தோடு எதிர் பார்த்து காத்திருக்கிறேன். சீக்கிரம் வெளியிடுங்கள்.

rajamelaiyur said...

சங்கமத்திற்கு வராத குறையை போக்கிடேங்க..

rajamelaiyur said...

உங்கள் பார்வைக்கு இன்று ..

இந்த வருடத்தில் நான்- ஒரு தொடர் பதிவு.

நிரூபன் said...

வணக்கம் அண்ணே,
ஒரு விழா எப்படி நடத்த வேண்டும் என்பதற்கு முன்மாதிரியாக இந்தச் சந்திப்பினை நடத்தியிருக்கிறார்கள்.

நீங்கள் சொல்வது போல, சந்திப்பின் மைய நோக்கம் - புரிந்துணர்வுடன் கூடிய வகையில் ஏனைய பதிவர்களுடன் பேசுவதற்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை! இது கவலையான விடயம்.

மற்றும் படி ஏனைய விடயங்கள் ஓக்கே!

நிரூபன் said...

அண்ணே,
சந்திப்பிற்கு நாம் எல்லாம் வரவில்லையே எனச் சிந்திக்கும் வண்ணம் சுவைபடத் தொகுத்து எழுதியிருக்கிறீங்க.

நான் என்னமோ பிலாசபி என்றதும் பெரிய பையனாக இருப்பான் என நினைத்தேன்.
ஆள் செம ஒல்லியா இருக்காரே.
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

Ravikumar Tirupur said...

ஒவியர் ஜீவா அவர்கள் 'திரைச்சீலை' என்ற பெயரில் சினிமா பற்றி எழுதியுள்ள கட்டுரை தொகுப்புக்குத்தான் தேசிய விருது பெற்றார்

Raja said...

http://anbudan-raja.blogspot.com/
உங்களுடைய கருத்துகளை பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறேன்

பன்னிக்குட்டி ராம்சாமி said...

லேடீசையும் ஜெண்ட்சையும் பிரிச்சு உக்கார வெச்சிட்டாங்கன்னு அண்ணன் ரொம்பத்தான் சலிச்சிக்கிறாரே?

RAMA RAVI (RAMVI) said...

பதிவர்களை சிறப்பாக அறிமுகம் செய்திருக்கீங்க.பகிர்வுக்கு நன்றி.

KANA VARO said...

அடுத்தடுத்த பாகங்களுக்கு வெயிட்டிங்.. ஹீ ஹீ நம்மளை பத்தியும் ஏதோ சொல்லுறன் எண்டிருக்கிறீங்க..

இராஜராஜேஸ்வரி said...
This comment has been removed by the author.
Jackiesekar said...

காய்த்த மரமே கல்லடி படும்..//

அம்மா சரியில்லாதவர்கள்,மனநிலை சரியில்லாதவர்கள்..அப்படித்தான் எழுதுவார்கள்.. எனது பதில் புறக்கணிப்பு மட்டுமே...

புகைபடங்களுக்கு மிக்க நன்றி சிபி.

தாராபுரத்தான் said...

எங்களை மாதிரி வராம இருந்தவங
களுக்கு ஊங்கள் அறிமுகம் அருமைங்க.