Tuesday, November 29, 2011

நாளைய இயக்குநர் - லைட் காமெடி , சைட் ஃபிகர்ஸ் - விமர்சனம்

Art Wallpapers
தனது 28 வருட வாழ்க்கையில் முதல் முறையாக தலைக்கு தேங்காய் எண்ணெய் தடவி, படிய தலை சீவி  ஓரளவு டீசண்ட்டான டிரஸ்ஸுடன் ( மெரூன் கலர் நைட்டி கம் மிடி பட் லோ யூ நெக் ஹி ஹி ) வந்த தொகுப்பாளினி கீர்த்தி  சிரிச்ச முகத்தோட இருந்தார்.. இதை ஏன் பர்ட்டிகுலரா, பைனாகுலரா, டிராகுலரா சொல்றேன்னா டி வி ல வர்ற ஃபிகருங்க எல்லாம் பிசி (busy) போல யாருமே தலையே சீவறதில்லை.. அது ஒரு ஃபேஷன் மாதிரி ஆகிப்போச்சு.. நான் ஒரு ஃபிகர்ட்ட காரணம் கேட்டேன் (ஃபோன்ல தான் நோ ட்ரீம்)அது ஆண்களுக்கு இணையா நாங்களும் வளர்றோம் இல்லையா? அதான் அவங்க மாதிரியே பரட்டையா.. ஹி ஹி ன்னாங்க அவ்வ்வ்வ்


1. குறும்படத்தின் பெயர் - கணக்குப்பண்ணுவது எப்படி? -இயக்குநர் -ஸ்ரீகணேஷ்

 காலேஜ் கலாட்டா கதை தான், ரொம்ப லைட்டா சொல்லி இருக்கார்.. அதாவது ஹீரோவுக்கு கணக்கு சப்ஜெட்னா ஆவாது.. கணக்கு , பிணக்கு , ஆமணுக்கு  , புண்னாக்கு  டைப்... லெக்சரர் செம காண்ட் ஆகறார்.. ஒரு சம்  (SUM)மை குடுத்து நாளை இதை போர்டுல எல்லார் முன்னாலயும் சால்வ் பண்ணிக்காட்டுனா நீ தப்பிச்சே, இல்லைனா அவ்ளவ் தான்னு மிரட்றார்.. ஏன்னா அவர் க்ளாஸ்ல சீரியஸா பாடம் நடத்தறப்ப ஹீரோ தூங்கிட்டு இருந்திருக்கான்.. 


இனி என்ன பண்றதுன்னு பையன் யோசிச்சுட்டே போறப்ப ஒரு ஃபிகர் அவன் ரூட்ல என்ட்ரி குடுக்குது.. தாமினி டீச்சரா மாறி ( ஐஸ்வர்யா ராய் நடிச்ச கில்மா படம் ஹி ஹி ) இலவச டியூஷன் சொல்லி தர்றாப்ல.. ஆம்பள வாத்தியார் சொல்லிதர்றப்ப தூங்கிட்டு இருந்த பையன் ஃபிகர் சொல்லித்தர்றப்ப நல்லா கவனமா கவனிக்கறான் பாடத்தை..

க்ளாஸ் ரூம்ல கரெக்டா அந்த கணக்கை போட்டுடறான், என்னா சோகமான ட்விஸ்ட்னா வாத்தியார் இப்போ தூங்கிடறார்.. அவ்வ்வ்வ்வ்

படத்தில் வந்த ரசனையான  வசனங்கள்

1. வெளில என்ன வெய்யில் அடிச்சாலும், ராமானுஜம் சார் க்ளாஸ்னா காத்து வாங்கும். ...

2. கணக்கு பாடமே எனக்கு கொடுமை தான், இந்த வாத்தியார் அதை விடக்கொடுமை..

3. இவன் ஏன் இங்கே வந்தான்?

அவனுக்கு தூக்கத்துல நடக்கற வியாதி,அதான் தெரியாம காலேஜ் வந்துட்டான்..

4.  பொண்ணுங்க அட்வைஸ் பண்ணுவாங்களே தவிர ஹெல்ப் பண்ண மாட்டாங்க..

5. அட்வைஸ் பண்றது ஈஸி, ஆனா அதை அப்டேட் பண்றது கஷ்டம்..


பாக்யராஜ் கமெண்ட் - வாத்தியார் சொல்லித்தர்றதை விட ஒரு பொண்ணூ சொல்லிக்குடுத்தா நல்லா மண்டைல ஏறும்..

சுந்தர் சி கமெண்ட் -  இளமைக்குறும்பு + திமிர் , நல்ல வந்தது படம்.. ஓவர் ஆல் எண்ட்டர்டெயிண்மெண்ட் காமெடி





2. குறும்படத்தின் பெயர் - தோற்ற மயக்கம் ஏனோ?  இயக்குநர் - முருகப்பிரகாஷ்

ஒரு வித்தியாசமான ட்விஸ்ட் உள்ள லவ் ஸ்டோரி.. பார்க்ல ஒரு லவ் ஜோடி உக்காந்திருக்கு.. 2 பேரும் ஒரே டைம்ல லவ்வை வெளிப்படுத்திக்கறாங்க அப்போத்தான்.. அடடே.. என்ன ஒரு ஒற்றுமைன்னு அவங்க சிலாகிக்கும்போது... ஒரு ஃபிளாஸ் பேக்...

அந்த ஃபிகர் தனியா வாக் வித் எ சாங்க்.. அந்த பையன் வாக் வித் எ சாங்க்.. 2 பேரும் பார்க் வர்றப்பதான் தெரியுது... அவன் லவ் பண்ற ஃபிகர் வேற ஒரு பையன் கூட, அந்த ஃபிகர் லவ் பண்ற பையன் வேற ஒரு பொண்ணோட .. நல்ல ட்விஸ்ட்.. இப்போ நிராகரிக்கப்பட்ட அதாவது காதலை வெளிப்படுத்த தயங்குன 2 பேரும் அவங்களுக்குள்ள காதலிச்சுக்கறாங்க , 2 பேருக்கும் புக்ஸ் ரீடிங்க் ஒரு ஒற்றுமை..

படிக்கும்போது கொஞ்சம் குழப்பமா இருந்தாலும் காட்சிப்படுத்துனது அழகு..  பார்க்ல லவ் ஜோடிங்க உக்காந்திருக்கும்போது அவங்க என்ன டிரஸ் போட்டிருந்தாங்களோ அதே கலர் டிரஸ்ல இந்த ஜோடியையும் பொட வெச்சது நல்ல உத்தி..

கவுதம் வாசுதேவ் மேனன் பட பாடல் மாதிரி நல்லா விசுவல் டேஸ்ட்டோட பாட்டு இருந்துச்சு அது ஒரு எக்ஸ்ட்ரா பிளஸ்..பெஸ்ட் மியூசிக் அவார்ட் வாங்கிச்சு




3. குறும்படத்தின் பெயர் - ஒரு தலை ராகம்  இயக்குநர் -ராகேஷ்

ஏதோ வித்தியசமான கருன்னு இயக்குநர் நினைச்சு பணி இருக்கார் சரியா எடுபடல..  ஒரு காலேஜ்ல கடைசி நாள்  ..ஸ்வாதி மாதிரி ஒரு ஃபிகர் நடக்குது, ஓடி வருது .. பேக் டிராப்ல ஒரு ஆணின் குரலில் காதல் பாடல் ஒலிக்குது.. வசனமே இல்லை.. 7 நிமிஷம் பூரா அந்த ஃபிகர் புகழ் பாடல் லைன்ஸ் மட்டும் தான்.. அப்புறம் பார்த்தா அந்த காலேஜ் சுவர் தான் அந்த பாட்டை பாடுனது மாதிரி.. காதல் என்பது உயிருள்ள மனிதருக்கு மட்டும் இல்ல..  உயிர் அற்ற கான்கிரிட் சுவருக்கும் உண்டுன்னு சொல்லி முடிக்கறாங்க.. எடுபடலை.. சாரி மிஸ்டர் டைரக்டர்..

இது காலேஜ் கதையா? காலேஜே கதையா?ன்னு  பாக்யராஜ் கிண்டல் அடிச்சார்.. சாங்க் நல்லாருந்தது..




4. குறும்படத்தின் பெயர் -அட்ரா அவளை ஒதைடா அவளை , இயக்குநர் -கே பாக்யராஜ் ( இவர் வேற ஆள்)


 டைட்டில்ல டைமிங்கா ஹிட் பாட்டு லைன் இருந்தப்பவே நினச்சேன் படம் செமயா இருக்கும்னு.. எதிர்பார்ப்பு சரிதான்.. ஒருத்தன் ஒரு ஃபிகரை காதலிக்கறான்..துரத்தறான் ஐ லவ் யூ சொல்றான்.. அது பளார்னு அறையுது.. இவன் சலிக்காம லவ்வறான்.. அப்புறம் போனாத்தொலையுதுன்னு  அதுவும்  லவ் பண்ணுதுதான்.. அப்புறம் ஒரு சின்ன ஊடல்.. காதலியோட பிறந்த நாளை அவன் மறந்துட்டு வாழ்த்து சொல்லாம விட்டுடறான்.. உடனே ஃபிகர் கழட்டி விட்டுடுது.. அதாவது அவன் லவ்வை கழட்டி விட்டுடுது..அவ அவனை திட்டறா.. லவ் டமால்.. இவன் செம காண்ட் ஆகறான்.. லவ் எல்லாம் சரி வராது, யாரும் லவ் பண்ணாதிங்கங்கறான்./. அப்புறம் அந்த ஃபிகரே வந்து சாரி சொல்லுது.. உடனே இவன் பல்டி அடிச்சுடறான்.. ஃபிகர் கூட சேர்ந்துடறான்..

ஜாலியான கதை .. மேக்கிங்க் ஸ்டைல் செம..

ரசித்த வசனங்கள்

1.  பசங்களுக்கு 13 வயசானாலே  பொண்ணுங்களை ரொம்ப பிடிச்சுடுது..

2.  அவ்வ்வ்வ்வ், செம ஃபிகர்டா... அப்டினு சொல்ல முடியாட்டாலும் சுமாரான ஃபிகர் தான்.

3. அஞ்சாவது தடவையா அறை வாங்குன பிறகுதான் அவ பேரு அஞ்சலைன்னு தெரிய வருது.. அவ்வ்வ்

4.  ஃபேஸ்புக்ல சர்ச் பண்ணுனா அஞ்சலைங்கர பேர்ல ஏகப்பட்ட ஆண்ட்டிங்க ஆன்சர் பண்றாங்க, இவளை காணோம்..

5. சூப்பர் ஃபிகரை கரெக்ட் பண்ண பிறந்தவன்னு உன்னை பார்த்ததுமே உங்கம்மா முடிவு பண்ணி இருப்பாங்களே?

6. லவ்வர் பர்த்டேவை எவனாவது மிஸ் பண்ணுவானா?

இதுல ஹீரோ ஹீரோயின் நடிப்பு ரெண்டும் செம..

இதுதான் பெஸ்ட் ஃபிலிம் அவார்டு வாங்குச்சு, அப்புறம் பெஸ்ட் ஆர்ட்டிஸ்ட்டா ஹீரோவுக்கு ஒரு அவார்டு..

45 comments:

MANO நாஞ்சில் மனோ said...

முதல் படம் நாந்தேன் அண்ணே...

MANO நாஞ்சில் மனோ said...

எலேய் கொன்னியா ரொம்ப நாளைக்கு அப்புறமா வந்துருக்கேன்

MANO நாஞ்சில் மனோ said...

பாக்கியராஜ்

MANO நாஞ்சில் மனோ said...

சுந்தர் சி

MANO நாஞ்சில் மனோ said...

சிபி செந்தில்குமார் டேமேஜர்...

MANO நாஞ்சில் மனோ said...

ராகேஷ்

MANO நாஞ்சில் மனோ said...

முருகபிரகாஷ்

MANO நாஞ்சில் மனோ said...

கணக்கு பண்ணுவது எப்பிடி

MANO நாஞ்சில் மனோ said...

ஸ்ரீகணேஷ்

MANO நாஞ்சில் மனோ said...

ஐஸ்வர்யா ராய் நடித்த கில்மா படம்

MANO நாஞ்சில் மனோ said...

தோற்ற மயக்கம் ஏனோ

MANO நாஞ்சில் மனோ said...

ஒருதலை ராகம்

MANO நாஞ்சில் மனோ said...

பாக்கியராஜ் கிண்டல் அடித்தார்

MANO நாஞ்சில் மனோ said...

சாங் நல்லா இருந்தது

MANO நாஞ்சில் மனோ said...

அட்ரா அவளை உதைடா அவளை

MANO நாஞ்சில் மனோ said...

ரசித்த வசனங்கள்

MANO நாஞ்சில் மனோ said...

செம பிகர்டா அப்பிடின்னு சொல்ல முடியாவிட்டாலும்

MANO நாஞ்சில் மனோ said...

அஞ்சாவது தடவையா அறை வாங்குன பிறகுதான் பொண்ணு பேரே தெரிஞ்சிருக்கு

MANO நாஞ்சில் மனோ said...

லவ்வர் பெர்த்டேயை எவனாவது மிஸ் பண்ணுவானா

MANO நாஞ்சில் மனோ said...

இதுல ஹீரோ ஹீரோயின் நடிப்பு ரெண்டும் செம

MANO நாஞ்சில் மனோ said...

இரு ஓட்டு குத்திகிட்டு வாறேன் ஹி ஹி...

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

ம் ...

முத்தரசு said...

படம் - நல்லாத்தான் இருக்கு

முத்தரசு said...

@MANO நாஞ்சில் மனோ

ஏன் இந்த கொலைவெறி

முத்தரசு said...

@MANO நாஞ்சில் மனோ

why this கொலைவெறி

Anonymous said...

2 நாள் தாமதமா வந்துருக்கு விமர்சனம் ........... why சிபி சார்?

RAMA RAVI (RAMVI) said...

இந்த தடவை எல்லாமே காலேஜ் பற்றிய படங்களா? விமர்சனம் நன்றாக இருக்கு.

K.s.s.Rajh said...

ஹி.ஹி.ஹி.ஹி...ஒரு தலை ராகம் குறும்பட இயக்குனர் நல்லாத்தான் யோசிச்சு இருக்கார் ஆனால் கொஞ்சம் மெருகூட்டி இருந்தால் சிறப்பாக வந்திருக்கும்

Thirumalai Kandasami said...

Review super !!!

"யானை குட்டி" ஞானேந்திரன் said...

மன்னிக்கவும் நான்
அந்த நிகழ்ச்சி பர்ர்கவில்லை

"யானை குட்டி" ஞானேந்திரன் said...

ஆனாலும் உங்கள் விமர்சன பார்வை மூலம்
நாங்கள் பார்க்கிறோம்

"யானை குட்டி" ஞானேந்திரன் said...

நன்றாக உள்ளது .
(நண்பர் mano நாஞ்சில் மனோ பாணியில்
கருத்துக்கள் )

"யானை குட்டி" ஞானேந்திரன் said...

வாழ்த்துக்கள்

"யானை குட்டி" ஞானேந்திரன் said...

புகை படம் அருமை

"யானை குட்டி" ஞானேந்திரன் said...

:-)))))

"யானை குட்டி" ஞானேந்திரன் said...

முடியலை !!!!!!சாமி !!!!!

"யானை குட்டி" ஞானேந்திரன் said...

மனோ சார் எப்படி இப்படி!!!!!

"யானை குட்டி" ஞானேந்திரன் said...

ஆளை விடுங்க சாமி !!!!

"யானை குட்டி" ஞானேந்திரன் said...

எஸ்கேப்........... ......................

மாதேவி said...

வரை படங்கள் அருமை.

Anonymous said...

விமர்சனம் நன்றாக இருக்கு...படங்கள் அருமை...

ஹேமா said...

வந்தேன் சிபி !

ராஜி said...

Kalakal cp sir. Nan indha varam andha programe mis paniten. Analum unga vimarsanam moolama parthuten. Thanks cp sir

Philosophy Prabhakaran said...

அடுத்த முறையிலிருந்து கீர்த்தி பாப்பாவை மட்டும் விமர்சனம் பண்ணி தனி இடுகையா போடுங்க தல...

உணவு உலகம் said...

விமரிசனத்திற்கு இணையான அழகு படங்கள்.