Wednesday, November 16, 2011

நாளைய இயக்குநர் - காலேஜ் ,காதல், பேய் கதைகள் - விமர்சனம்

Best Ever Quotes
viewer


என்னைக்கும் பொட்டு வைக்கற பழக்கம் இல்லாத கீர்த்தி  இன்னைக்கு ஒயிட் &ஒயிட்  கலர் நைட்டியா? கவுனா?னு கணிக்க முடியாத ஒரு டிரஸ் போட்டுட்டு வந்தாங்க.. மானாட மயிலாட நிகழ்ச்சிக்கு வர்றப்ப மட்டும்  டீசண்ட்டா வர்றாங்க.. இந்த நிகழ்ச்சில மட்டும் பேட்டா மிஸ்ஸிங்க் போல..


1.இயக்குநர் பெயர் -அருண் பிரசாத் - குறும்படத்தின் பெயர் - ஃபிளாஷ்பேக்


ஓப்பனிங்க் ஷாட்ல ஒரு மரத்தடில ஒரு பெண் நிருபர் ஒரு வெற்றி பெற்ற சினிமா இயக்குநருடன் காணும் நேர் காணல் மாதிரி காட்சி.. அதுல உங்க காலேஜ் லைஃப்ல நடந்த மறக்க முடியாத அனுபவம் சொல்லுங்க சார்.. அப்டினு கேட்க கட் பண்ணி காலேஜ் கேம்பஸ்க்கு கதை நகருது..

ஒரு ஃபிரண்ட்ஸ் குரூப்...ஒரு குறும்படம் எடுக்கறதுக்கு ஸ்டோரி டிஸ்கஷன் பண்றாங்க.. யார் ஹீரோ ,யார் ஹீரோயின் அப்டினு முடிவாகுது,.. ஷூட் பண்றப்ப ஹீரோவா நடிக்கறவர் ஹீரோயினா நடிக்கறவர்ட்ட ஐ லவ் யூ சொல்லற சீன்ல அவர் சரியா  பர்ஃபார்ம் பண்ணாததால டைரக்டர் நடிச்சுக்காட்றேன்கற பேர்ல அந்த ஃபிகர்க்கு ரூட் போடறார்..

அந்த ஷாட் கட் பண்ணுனா அதுவும் , இப்போ பேட்டி எடுக்கற ஷாட்டும் எல்லாமே இன்னொரு ஷூட்டிங்க்னு தெரியுது.. க்ளைமாக்ஸ்ல “ என்ன தாண்டா சொல்ல வர்றீங்க?” அப்டினு அவங்களே அவங்களை எள்ளல் பண்ணிக்கற மாதிரி முடியுது..

ஏதோ காமெடியா ட்ரை பண்ணி இருக்காங்கனு தெரியுது.. ஆனா கம்ப்ளீட் ஆகலை.. பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம்..

கே பாக்யராஜ் அவரோட மலரும் நினைவுகள்ல ஒரு சம்பவம் எடுத்து விட்டாரு.. சுவர் இல்லாத சித்திரங்கள்ல இதே மாதிரி ஒரு சீன் வரும்.. அதாவது ஷூட்டிங்க் ஸ்பாட்ல ஹீரோவுக்கு நடிப்பு சொல்லித்தர்றேன் பேர்வழின்னு டைரக்டர் ஹீரோயினுக்கு ரூட் விடுவாரு.. அப்போ கவுண்டமணி பஞ்ச் குடுப்பாராம்.. ஹீரோயினை அடிக்கடி கட்டிப்பிடிக்கறதுக்காகவே ஷாட் ஓக்கே இல்லைனு ஹீரோவை குறை சொல்லி டெமோ காட்ற சாக்குல அண்ணன் உள்ளே புகுந்து விளையாடறாரு,..னு..

சுந்தர் சி கமெண்ட் செஞ்சப்போ ஃபேமஸ் டயலாக்ஸை குறும்படத்துல அடிக்கடி வைக்காதீங்க.. போர் அடிச்சிடும்.. உதாரணமா இந்த “ கண்ணா, லட்டு திங்க ஆசையா?” டயலாக்கை அடிக்கடி டோண்ட் யூஸ்...அப்டின்னாரு. அதே மாதிரி ஃபேமஸான பழைய ஹிட் சாங்கை லவ் சீனுக்கு யூஸ் பண்றப்ப ஒரே மியூசிக்கை டோண்ட் ரிப்பீட்னாரு.. எல்லாரும் நோட் பண்ணிக்குங்கப்பா.. .

viewer6

2. இயக்குநர் பெயர் - அஸ்வின் -- குறும்படத்தின் பெயர் - உனக்காகவே வாழ்கிறேன்

ஒரு காலேஜ் ஸ்டூடண்ட் தான் பாஸ் ஆவமா? ஃபெயில் ஆவமா?ன்னு தெரிஞ்சுக்க ஆவி அமுதா மாதிரி ஒரு ஆவிகளிடம் பேசுற மீடியா கிட்டே வர்றான்.. அவனுக்கு பதில் சொல்றதும் ஒரு ஆவிதான்..அப்போ ஒரு ஃபிகர் பேய் கிராஸ் பண்ணுது அந்த இடத்தை.. உடனே பதில் சொல்ற வேலையை பாதிலயே விட்டுட்டு அந்த ஃபிகர் பேய் பின்னால இந்த ஆண் பேய் போகுது.. ஆவிகளின் லீடருக்கு செம கடுப்பு.. உன் வேலையை ஒழுங்கா செய்யாம பேய் பின்னால சுத்தறியேன்னு.. திட்றார்..

உடனே மனசொடிஞ்சு போன அந்த ஆண் பேய் தன் நண்பன் பேய் கிட்டே புலம்பறான்.. அப்படியே அந்த ஃபிகர் பேய் பற்றி விசாரிக்கறான்.. அது ஒரு கொலை செய்யப்பட்ட ஆவிங்கறான்.. அடடான்னு இரக்கப்பட்ட ஆண் பேய் அந்த ஃபிகர் பேய் பின்னாலயே சுத்தறான்.. அந்த ஃபிகர் பேய் ஒரு ஸ்விம்மிங் பூல்ல  ஒரு லவ் ஜோடியை முறைச்சு பார்க்குது..

யாரும் நிமிர்ந்து உக்காராதீங்க.. இந்த சீன்ல நோ சீன்.. ( நான் டைரக்டரா இருந்தா அந்த லவ் ஜோடி ஸ்விம்மிங்க் டிரஸ்ல இருக்கற மாதிரி ஒரு கிளாமர் சீன் வெச்சிருப்பேன். ( டேய் நாயே, அதான் ஆட்டுக்கு வாலை அளந்து வெச்சிருக்காங்க.. )

அந்த லவ் ஜோடில ஆண் தான் இப்போ இருக்கற பெண் பேயோட முன்னாள் லவ்வர்.. அவன் அமைதிப்படை சத்யராஜ் மாதிரி அவளுக்கு அல்வா குடுத்து கொன்னுடறான்.. அதே நிலைமை தானே இப்போ அவன் லவ்வற பொண்ணுக்கும் வரப்போகுதுன்னு இந்த பெண் பேய்க்கு மனசு சரி இல்லை..

உடனே அந்த ஆண் பேய் ஆவிகளின் தலைவன் கிட்டே போய் இந்த மாதிரி இந்த மாதிரி . ஒரு பொண்ணோட லைஃப் கெடப்போகுது.. அதை காப்பாத்தனும்னு ஐடியா கேட்கறான்.. உடனே ஆவிகளின் தலைவர்க்கு கோபம் வந்துடுது.. இதெல்லாம் நம்ம சக்திக்கு மீறுன விஷயம்,.. பிரதமர் மன் மோகன் சிங்க் மாதிரி வேடிக்கை மட்டும் தான் பார்க்கனும், சுப்ரமண்யம் சாமி மாதிரி ஆடாதேன்னு அட்வைஸ்,, 



ஆனா அந்த ஆண் பேய்  கேட்கலை..அது போய் அந்த சீட்டிங்க் லவ்வர் ஆணின் உடம்புல புகுந்து கில்மாவா அந்த ஃபிகர்ட்ட பேசறான் - வா ரூமுக்கு போலாம்னு.. உடனே அந்த ஃபிகருக்கு கோபம் வந்துடுது,.. கோவிச்சுக்கிட்டு போயிடுது..  இந்தக்காலத்துல இப்படி ஒரு ஃபிகர் இதுக்கெல்லாம் கோவிச்சுக்கிட்டு போகுமா?ன்னு லாஜிக் மிஸ்டேக் சொன்னா அப்புறம்  பெண் சங்கங்கள், மாதர் சங்கங்கள் ( 2ம் 1 தானே?) என்னை கும்மு கும்முனு கும்மி விடும் அபாயம் இருப்பதால் நோ கமெண்ட்ஸ்..

இதை பார்த்த அந்த பெண் பேய்க்கு சந்தோஷம் .. எனக்காகத்தானே இப்படி செஞ்சே.. தாங்கஸ்னு சொல்லி அவனை லவ்வுது.. இந்த மேட்டர் ஆவிகளின் தலைவனுக்கு தெரிஞ்சு செம காண்டாகறார்.. நம்ம ஆஃபீஸ் மேனேஜர் எதுக்கெடுத்தாலும் காச் மூச்னு கத்துவாரே அப்படி கத்தி இப்படி செஞ்சதுக்கு தண்டனையா நீ பூமில போய் இன்னொரு பிறப்பெடுக்கனும்கறார்..

பொதுவா ஒரு காலேஜ் கிளாஸ்ல நம்ம லவ்வர் வெளில போனா அல்லது லெக்சரர் வெளீல அனுப்பிட்டா நாம என்ன செய்வோம்? ஏதாவது சாக்கு வெச்சு கலாட்டா பணி அதே மாதிரி நாமும் வெளீல வந்துடுவோம் தானே.. அதே போல் அந்த பெண் பேய் என்ன பண்ணுது.. தன்னோட முன்னாள் லவ்வர் உடம்புல புகுந்து அவன் தற்கொலை பண்ணிக்கற மாதிரி பண்ணுது.

ஒரே கல்லுல 2 மாங்காய்..பழிக்கு ப்பழி வாங்குன மாதிரியும் ஆச்சு.. இதான் சாக்குனு பூமில பிறப்பெடுன்னு ஆவிகள் தலைவன் தண்டனை குடுத்ததும் அந்த பெண் பேய் பேபியா மாறி அந்த ஆண் பேய் பக்கத்துல (இப்போ அந்த ஆண் பேயும் ஒரு குழந்தையா) இருந்து சிரிக்குது.. குஷி படத்துல வர்ற ஓப்பனிங்க் சீன் மாதிரி இந்தப்பட க்ளை மாக்ஸ்,.

நல்ல வித்தியாசமான ஃபேண்டஸி கதைதான்.. ஃபர்ஸ்ட் பிரைஸ் இதுக்குத்தான்.

ரசித்த வசனங்கள்

1. நான் செத்தாக்கூட உருப்படமாட்டேனு எங்கம்மா அப்பவே சொன்னாங்க..

2. தூக்கில் தொங்கும் ஆள் கடைசி கட்ட சாங்க் - நான் போகிறேன் மேலே மேலே ..

3. நான் உயிரோட இருந்தாக்கூட இவ்ளவ் சந்தொஷம் கிடைச்சிருக்காது..

4. ஹாய்.. செல்லம் , ரூமுக்குப்போலாமா?

ஸ்டுப்பிட்....


அப்போ இங்கேயேவா?

டாமிட்

போடி. நீ போனா இன்னொருத்தி..



viewer8
3 -இயக்குநர் பெயர் - ராமானுஜம் - குறும்படத்தின் பெயர் - கால் ஏஜ் ( காலேஜ்)

காலேஜ்னாலே ராகிங்க் பண்றது சகஜம் தானே.. ஒரு காலேஜ்ல 3 சீனியர் ஸ்டூடண்ட்ஸ் ஒரு ஜூனியர் பையனை ராகிங்க் பண்றாங்க.. அவன் பார்க்க போங்கானாட்டம்  இருக்கான்.. இந்த 3 பசங்களும் என்ன தான் பார்க்க ரவுடிக மாதிரி இருந்தாலும் ஒரு ஃபிகர் கிட்டே எப்படி புரோப்பஸ் பண்றதுன்னு தெரியாம இருக்காங்க.. ( அது தெரிஞ்சா நாமளும் யாரையாவது லவ்வி இருப்போமே?)

3 பேரும் ஒரே ஃபிகரை ரூட் விடறாங்க, ஆனா யாருக்கும் அது செட் ஆகலை.. அது கூடப்பரவால்ல. அவங்களை மனுஷனாக்கூட மதிக்கலை.. ( இதெல்லாம் நமக்கு சாதாரணம்ப்பா.. )

அப்புறம் பார்த்தா அந்த 3 பேரும் ராக் பண்ணுனாங்களே ஒரு தகர டப்பா தலையன் ( நன்றி - கவுண்டமணி) அவன் தான் லவ்வறான், பாப்பாவும் அவனை லவ்வுது.. இதைத்தான் சஸ்பென்ஸ்னு நினைச்சுட்டார் போல.. ஹா ஹா நாங்க தான் பல கதைல இதை பார்த்துட்டமே..

ஹீரோயினா நடிச்ச ஃபிகர் நல்ல கலர், முக வெட்டு ( நாம எந்தக்காலத்துல பொண்ணுங்களை குறை சொல்லி இருக்கோம்?)

ரசித்த வசனங்கள்

1. என்ன பார்க்கறே? இவ்ளவ் அழகான பையன் லவ் பண்றானே?ன்னா?
ம்ஹூம்,நீயெல்லாம் லவ் பண்றியே.. அதான் பார்த்தேன்..

2. விட்றா விட்றா.. பொண்ணுங்க எல்லாம் மரத்துல இருந்து உதிர்ற இலை மாதிரி,, நாமெல்லாம் மரத்தோட ஆணி வேர் மாதிரி.. இந்தப்பொண்ணு போனா வேற பொண்ணு..  ( அதானே..  ச்சீ ச்சீ இந்தப்பழம் புளிக்கும் கதையை தமிழன் என்னைக்கும் மறக்க மாட்டானே?)

viewer1

4. இயக்குநர் பெயர் - குகன்  - குறும்படத்தின் பெயர் - காற்றில் கலந்து வா

ஒரு ஊர்ல ஒரு ஆஃபீஸ்.. அந்த ஆஃபீஸ்ல ஒரு ஃபிகரு.. ஏன் ஒரே ஒரு ஃபிகர்தான் அங்கே இருக்குன்னு என்னை கேட்காதீங்க? ஏன்னா நானும் யார்ட்டயும் அந்த கேள்வியை கேட்க முடியாது..அந்த 70 மார்க் ஃபிகர்க்கு அநாமதேய ஃபோன் கால்ஸ் வருது.. சாதாரண டொக்கு ஃபிகருக்கே நம்மாளுங்க ஃபோன் பண்ணி டார்ச்சர் பண்ணுவானுங்க.. நல்ல ஃபிகர் கிடைச்சா விடுவானுங்களா? அந்த ஃபிகருக்கு செம கோபம்.. யார்றா நீ? எதுக்கு சும்மா என்னை டார்ச்சர் பண்றே?ன்னு கேக்குது..

ஆனா அவன் டீட்டெயில்ஸ் எதுவும் சொல்லலை.. ( சொன்னா ஆள் வெச்சு அடிப்பாங்கன்னு தெரியுமே.. ) அவ காபி குடிக்கறதைக்கூட கரெக்ட்டா சொல்றான்.. உடனே ஃபிகர் கேக்குது.. நீ இந்த ஆஃபீஸ்லயா ஒர்க் பண்றே? உன்னை பார்க்கனுமே?அப்டிங்குது.. இல்ல.. என்னை உன்னால பார்க்க முடியாது அப்டினு சொல்றப்பதான் அந்த டார்ச்சர் பண்ற பார்ட்டி பேய்னு நமக்குத்தெரியுது.. அந்த ஃபிகரு டென்ஷன் ஆகி உன்னை இப்போ பார்க்க என்ன வழி?ன்னு கேட்கும்போது நீயும் என் உலகத்துக்கு வான்னு மேலே இருந்து தொப்னு அந்த ஃபிகர் மேல என்னமோ விழுது.. அவ்ளவ் தான் கதை..

இந்த கதைல ஹீரோயின் புல்லட் பைக் ஓட்டுது.. அவ்வ்வ்வ்வ்வ்
நல்ல டெரர் ஃபிலிமா வந்திருக்க வேண்டியது ஜஸ்ட் மிஸ் ஆகிடுத்து..

டிஸ்கி - நீ தான் டியூப்லைட் ஆச்சே, 2வது கதை உனக்கு புரிஞ்சிருக்காதே, காம்ப்ளீகேட்டடா இருக்கே. எப்படி கரெக்டா விமர்சனம் பண்ண முடிஞ்சுதுன்னு யாரும் கமெண்ட் போடாதீங்க.. ஏன்னா அந்தப்படத்தை 2 தடவை யூ டியூப்ல பார்த்து அப்பவும் சரியாப்புரியாம ஒரு கேர்ள் ஃபிரண்டுக்கு ஃபோன் போட்டு கேட்டு ஏதோ கொஞ்சம் புரிஞ்ச பிறகுதான் டைப்பிங்க்..



13 comments:

சக்தி கல்வி மையம் said...

முதன் முதலாய்..

சக்தி கல்வி மையம் said...

யாரு மாப்ள அந்த கேர்ல் பிரண்டு?

தமிழ்வாசி பிரகாஷ் said...

அண்ணே, அந்த பெண் நண்பர் யாருங்கோ? யுட்யூப்ல வேலை பாக்குறாங்களா?

நம்ம தளத்தில்:
பேஸ்புக், டிவிட்டர், கூகிள் ப்ளஸ், RSS - நமது தளங்களில் வைப்பது எப்படி?

rajamelaiyur said...

Super review

MANO நாஞ்சில் மனோ said...

எலேய் அண்ணா வெளுத்து கட்டுலேய் மக்கா ஒரு பயலையும், பயளையும் விட்டுராதே...!!!

MANO நாஞ்சில் மனோ said...

வேடந்தாங்கல் - கருன் *! said...
முதன் முதலாய்..//

ச்சே வடையை வாத்தி கவ்விட்டாரே ம்ஹும்...

MANO நாஞ்சில் மனோ said...

பெண்கள் போடும் டிரஸ்ஸை மட்டும் கவனமா கவனிக்கிறான்ய்யா மூதேவி ராஸ்கல்...

MANO நாஞ்சில் மனோ said...

ianaman டேய் அண்ணா இன்ட்லியில் இந்த பெயரில் ஓட்டு போட்டதும் போட்டு கொண்டிருப்பதும் நான்தான் [[நாஞ்சில்மனோ]]

மூ.ராஜா said...

மின்தடை காரணமாக முதல் படம் மட்டும் பார்த்த எனக்கு உங்கள் விமர்சனம் முழு நிகழ்ச்சியையும் தெளிவாக காட்டியதற்கு நன்றி...

Lingesh said...

கடின உழைப்புக்கும் விடா முயற்சிக்கும் வாழ்த்துக்கள்...

உணவு உலகம் said...

கேள்பிரண்ட்டிடம் கேட்டு விமர்சனமா? ஸூப்பர்ர்ர்ர்ர்.

K.s.s.Rajh said...

நல்ல விமர்சனம் பாஸ்
என்ன இந்த முறை ஒரே பேய் கதையா இருக்கு

VANJOOR said...

சுட்டியை சொடுக்கி இதையும் படியுங்கள்.

*** தினமலம்(ர்?) திருகுதாள திருவிளையாடல் தோலுரிக்கப்படுகிறது!
தமிழர்களுக்கும் இஸ்லாமியர்களுக்கும் எதிராக ஊளையிடும் தினமலர். ”ஆர்.எஸ்.எஸ். “ ன் ஊதுகுழலாக பார்ப்பன வன்மத்துடன் தமிழர்களுக்கும் இஸ்லாமியர்களுக்கும் எதிராக பகிரங்கமாக செயல்படும் ஆரிய வந்தேறி தினமல கூட்டம்.
****

.