Saturday, November 26, 2011

சன் பிக்சர்ஸாரின் ஆதிக்கம்- தியேட்டர்கள் கிடைக்காத அவலம் - இயக்குநர் காட்டம் !!பரபரப்புக்கடிதம்!!

http://www.musictub.com/Picture/Tamil_MusicTamil_Movie_SongsPaalai_(2011)cover.jpg

விஜய்-ன் காவலன் ரிலீஸின் போதே சன் பிக்சர்ஸாரின் மீது இந்த குற்றச்சாட்டு எழுந்தது.. அதாவது தமிழ்நாட்டின் பெரிய , செண்ட்டரான திரை அரங்குகளை ஆக்ரமித்து விடுகிறார்கள் . என்பதே அது.. இதனால் லோ பட்ஜெட் படங்களை திரை இட தியேட்டர்கள் கிடைப்பதில்லை.. தங்கள் கை வசம் மாஸ் மீடியா இருப்பதால் பெரும்பாலான படங்களை இவர்கள் வாங்கி நல்லா மார்க்கெட் பண்ணி தேத்தி விடுகிறார்கள்.. இதனால் வெளீயாகும் படங்கள் சன் பிக்சர்ஸாரின் தயாரிப்பாகவோ ,அல்லது அவர்கள் வாங்கும் படமாகவோ இருக்க வேண்டும் என்பது எழுதப்படாத விதி..

கலைஞர் ஆட்சியில் அது ஓக்கே, இப்போ ஆட்சி மாறிய பின்னரும் அது தொடர்வது ஏன்?ஏன் ஜெ வால் அவர்களை கண்ட்ரோல் செய்ய முடியவில்லை?என்பதே நம் மனதில் எழும் கேள்விகள்.. அதை ஊர்ஜிதப்படுத்துவது போல் பாலை இயக்குநர் காட்டமாக ஒரு கடிதம் மீடியாக்களில் வெளீயிட்டும் , ஃபேஸ் புக்கில் அதை பகிர்ந்தும் வந்திருக்கிறார்.. அந்த கடிதம்

 http://tamil.oneindia.in/img/2011/05/05-shammu-palai300.jpg

நிற்க ஒரு அடி மண் கேட்கிறோம்
பாலை திரைப்பட இயக்குநர் ம.செந்தமிழன் உருக்கமிகு கடிதம்!

முகம் தெரியாத உறவுகளுக்கு வணக்கம்.

பாலைஎன்ற திரைப்படத்தை எழுதி இயக்கியவன் நான். என் பெயர் ம.செந்தமிழன்.

பாலைபடத்தில் அதன் நாயகி காயாம்பூ பேசும் வசனங்களில் எனக்கு நெருக்கமானது, ‘பிழைப்போமா அழிவோமா தெரியாதுவாழ்ந்தோம் எனப் பதிவு செய்ய விரும்புகிறோம்என்பது.

பாலைகுழுவினர் உங்களிடம் கூற விரும்புவதும் ஏறத்தாழ இதுவே.

பாலை படம் தமிழினத்தில் பதிவாகுமா அழிந்து போகுமா தெரியாதுஇப்படி ஒரு படம் எடுத்தோம் எனப் பதிவு செய்ய விரும்புகிறோம்

சில நாட்களுக்கு முன் பாலையின் முன்னோட்டக் காட்சியைப் பார்த்த இயக்குனர் பாலுமகேந்திரா, “பாலை உலகத் திரைப்பட வரலாற்றில் குறிக்கத்தக்க இந்தியப் படமாக இருக்கும். இது ஒரு தமிழ்ப் படம் என்பதில் எனக்குத் தனிப்பட்ட கர்வம் உண்டு. எனது 45 ஆண்டுகால சினிமா வாழ்க்கையில் எந்தப் படத்தைப் பார்த்தும் இந்தப் படத்தை நான் இயக்கவில்லையேஎன ஆதங்கப்பட்டதில்லை. பாலை படம் என்னை அப்படி ஏங்கச் செய்கிறது’” என்று கடிதம் எழுதிக் கொடுத்தார்.

சத்தியமாக இவ்வார்த்தைகளுக்கான தகுதி எனக்கில்லை. இவை ஒரு மூத்த படைப்பாளியின் உணர்ச்சிவய வார்த்தைகள்.

முன்னோட்டக் காட்சி பார்த்த கார்ட்டூனிஸ்ட் பாலா முதல் மென்பொருள் இளம் பொறியாளர் விர்ஜினியா ஜோசபின் வரை பாலையை மனமார வாழ்த்துகிறார்கள்.

இவர்கள் அனைவரின் வேண்டுகோளும் மக்களை நோக்கி இருக்கிறது. அவசியம் பாலை படத்தைப் பாருங்கள்என்கிறார்கள் இவர்கள்.

எனக்கும் என் குழுவினருக்குமான வேண்டுகோள் மக்களை நோக்கி இல்லை. அதற்கான சூழலும் எழவில்லை. எங்கள் வேண்டுகோள் திரையுலகை நோக்கி இருக்கிறது.

தமிழகத்தின் சரி பாதி பகுதிகளில் பாலையைத் திரையிட ஒரு திரை அரங்கு கூட கிடைக்கவில்லை. இதற்கான காரணங்கள் நிறைய. அவற்றை நான் அடுக்க விரும்பவும் இல்லை; இப்போது அதற்கான அவகாசமும் இல்லை.

ஓர் உண்மையை உரத்துச் சொல்ல விரும்புகிறேன்.

அதிகாரமும் பெரும் பணமும் இருந்தால் குப்பைகளுக்கும் திரையரங்குகள் திறக்கும். இல்லையென்றால், இயக்குனர், தயாரிப்பாளர் முகங்களில் குப்பை வீசப்படும்

இன்றைக்குத் தமிழகத்தில் உள்ள ஆயிரத்து இருநூறு திரையரங்குகளில் சரி பாதியை மிகச் சில படங்கள் ஆக்கிரமித்துக் கொண்டுள்ளன. இவை ஓடும் திரையரங்குகளுக்குச் சென்று பாருங்கள். மக்கள் கூட்டம் அலைமோதுகிறதா அல்லது இவை வெறுமனே பணபலத்தாலும் அதிகார பலத்தாலும் ஆக்கிரமிக்கப் பட்டுள்ளனவா என்பதை நீங்களே உணரலாம்.

ஒவ்வொரு அரங்கத்துக்கும் இலட்சக்கணக்கில் பணம் கொடுக்கப்பட்டு, அவ்வரங்குகளில் வேறு படங்கள் வராமல் பாதுகாக்கப்படுகின்றன.

திரைப்படங்களால் நிரம்ப வேண்டிய அவ்வரங்குகள் மிகச் சில முதலைகளின் கழிவுகளால் நாற்றமெடுத்துக் கிடக்கின்றன.

தமிழகத்தில் DAM-999 என்ற படத்துக்குக் கிடைத்த திரையரங்குகளில் 25% கூட பாலைக்குக் கிடைக்கவில்லை! முல்லைப் பெரியாறு அணையின் உரிமையை மலையாளிகளுக்குப் பிடுங்கித் தரும் படமாக இருந்தாலும் பரவாயில்லை; தமிழரின் வரலாற்றைப் பதிவு செய்யும் படத்துக்கு அரங்கு இல்லை. அழுவதைத் தவிர வேறு என்ன வழி?

இப்போது DAM-999 படம் தடை செய்யப்பட்டுவிட்டது. ஆனாலும் அந்தத் திரை அரங்குகளில் மிகச் சில கூட பாலைக்குக் கிடைக்கவில்லை. அவ்வரங்கங்கள், வேறு ஒரு Warner Brothers தயாரிப்புப் படத்துக்காகக் காத்திருக்கின்றன. ஜாக்கிசானின் 1911 படத்துக்குக் கிடைத்த அரங்குகளின் எச்சில் துளி கூட எங்களுக்குக் கிடைக்கவில்லை.

கிடைத்த அரங்குகளில் பாலை இன்று (25/11/11) வெளியாகிறது. எமக்கு அரங்கு கொடுத்த அரங்க உரிமையாளர்கள், மேலாளர்கள், விநியோகஸ்தர்கள் மற்றும் இப்பணியில் தம்மை அளவுக்கு மீறி ஈடுபடுத்திக் கொண்டதால் மிக மோசமான உடல் உபாதையில் சிக்கித் தவிக்கும் என் இனிய நண்பர் செங்கோட்டை திரைப்பட இயக்குனர் சசிகுமார் உள்ளிட்ட அனைவருக்கும் எமது மனமுருகிய நன்றிகள்!

இக்கடிதத்தை எழுதுவதால் என்ன பலன் என எனக்குப் புரியவில்லை.

ஆனால், நான் ஒரு போதும் நம்பிக்கையை விடுவதில்லை. இயற்கையின் பேராற்றலை வேண்டுகிறேன். அப்பேராற்றலின் அங்கங்களாகவும் படைப்புகளாகவும் விளங்கும் மக்களை நம்புகிறேன்.

நாங்கள் பந்தயத்தில் பரிசு கேட்கவில்லை
நிற்க ஒரு அடி மண் கேட்கிறோம்!

பாலை குழுவுக்காக,

ம.செந்தமிழன்


------------------------------------------------------------




-------------------------------------------------------------




https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh3q1ONHvokhIe9TCdTEXGWNMyerF4YC-XiJGHhzjp2uK0vU_Mq0vjX1HKaYjCxC-bQQIFoPfebRzhtxhSqZXwKSRtPa8wTqHStzIYQ8iyRNnaEJ3aWQmo1HuZjdaY2TK95m6OuzQEVdEA5/s1600/paalai_movie_stills.jpg
பாலை திரைப்படத்தை பார்த்த பிரபலங்களின் கருத்துத் தொகுப்பு!
-------------------------------------------------------------------------------------------------------------------------


 
2300 ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழ் மக்களின் வாழ்வியலையும் வரலாற்றையும் பிரதிபலிக்கும் "பாலை" திரைப்படம் நாளை (நவம்பர் 25) தமிழகமெங்கும் வெளியாகிறது. ஆய்வாளரும், தமிழ் உணர்வாளருமான திரு. ம.செந்தமிழன் இயக்கிய இத்திரைப்படத்தின் சிறப்புக் காட்சியைக் கண்ட பிரபலங்கள் பலரது கருத்துகளும் தொகுக்கப்பட்டு வாசகர்களுக்காக அவை வழங்கப்படுகின்றன.

இயக்குநர் தங்கர் பச்சான்

 ‘
இப்படியொரு படத்தை தந்ததற்காக இயக்குநரையும், படக்குழுவினரையும் மனதார பாராட்டுகிறேன். இக்கதையின் கருவை அவர்கள் தேர்ந்தெடுத்த விதமே படத்தின் சிறப்பு. பெருமளவிலான பிரம்மாண்ட வரலாற்றுப் படங்களுக்கு சவால் விடும் படம் இது. இப்படத்திற்கு மிகப்பெரும் அங்கீகாரத்தை தமிழ் மக்கள் வழங்குவார்கள்

 இயக்குநர் வெ.சேகர்

 ‘
இந்தப் படத்தில் ஆயிரம் செய்திகள் சொல்லியிருக்கிறார்கள். பெரிய பொருட்செலவிலான பிரம்மாண்டமான படங்களுக்கு நிகராக எளிமையான இத்திரைப்படம் தமிழர்களை நெஞ்சு நிமிர்த்த வைக்கும்

 உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன்

 ‘
வழமையான திரைப்படங்கள் நகர்ந்த வழியிலிருந்து செந்தமிழன் விலகியிருக்கிறார். ஒவ்வொரு நொடியும் எதிர்பார்ப்போடு கூடிய, ஒரு திரைப்படம் உருவாக்கப் பட்டிருக்கிறது. ஐவகை நிலப்பிரிவு காலத்தில் வாழ்ந்த பழந்தமிழ்க் குடிகளின் வாழ்க்கை கொண்டு, நிகழ்கால தமிழர்களுக்கு பாடம் சொல்லப்பட்டிருக்கிறது. மிக சிறப்பான ஒளிப்பதிவு படத்திற்கு உயிர் ஊட்டியிருக்கிறது. முதல் முயற்சியிலேயே இயக்குநர் ம.செந்தமிழன் முதிர்ச்சி அடைந்திருக்கிறார்

 கவிஞர் தமிழச்சி தங்கபாண்டியன்

 ‘
ஒவ்வொரு பிரேமிலும் நான் கண்ட முழுமையான தமிழ்ப்படம் இது. நாம் வாழும் இந்த மண் பல போராட்டங்களால் நம் முன்னோர்களால் மீட்கப்பட்ட மண் என்று இப்படம் உணர்த்துகின்றது. இன்றைய காலகட்டத்தில் இது முக்கியமான செய்தியும் கூட

 ஓவியர் புகழேந்தி

மிகவும் சிறப்பான தயாரிப்பு இது. வழக்கமான சினிமாப் படமாக இல்லாமல் வரலாற்று சினிமாவாக இப்படம் நிமிர்ந்து நிற்கும். சங்க இலக்கியத்திலிருந்து எடுத்தாளப்பட்ட இப்படத்தின் மூலம்
, ஈழத்தின் இன்றைய அரசியல் நிலைமையோடு சரிவரப் பொறுந்துகிறது. நம் இன அடையாளத்தைத் தக்க வைக்க இது போன்ற படங்கள் தேவை.

 குமுதம் கார்டூனிஸ்ட் பாலா

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த தமிழர்களின் வரலாற்றின் ஊடாக, ஈழத்தில் அழிக்கப்பட்ட ஒரு இனத்தின் கதையைப் பேசுகிறது இப்படம். நம்பவே முடியாத கிராபிக்ஸ் சாகச கதாநாயகக் காட்சிகளைப் பார்த்துக் காசைக் கரியாக்குபவர்கள் ஒருமுறை பாலைபடத்தைப் பார்க்க வேண்டும். புதிய அனுபவமாக இருக்கும்

தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி பொதுச் செயலாளர் கி.வெங்கட்ராமன்

எளிய வழியில் திரை ஊடகத்தின் வழியறிந்து சொல்லப்பட்டிருக்கிற செறிவான கதை. இசை, ஒளிப்பதிவு மிகைப்படாத நடிப்பு ஒரு உயர்தளத்தில் படத்தை வைத்து எண்ண வைக்கிறது.

 விடுதலைச் சிறுத்தைகள் செய்தித் தொடர்பாளர் வன்னியரசு

 
இந்தப் படத்தை விடுதலை சிறுத்தைகள் தலைவர் தொல். திருமாவளவன் அவர்கள் பார்க்க விரும்பினார். ஆனால், மக்களைவையில் பங்குபெற வேண்டியிருப்பதால், அவரால் இயலவில்லை. படம் குறித்து நான் அவரிடம் கைபேசியில் தெரிவித்த போது, அப்பொழுதே படக்குழுவினரைப் பாராட்ட வேண்டுமென கூறினார் திருமா. இன்றைய தமிழ்ச் சூழலுக்கு தேவையான ஒரு படத்தை ம.செந்தமிழன் கொடுத்திருப்பதாகவும் அவர் சொன்னார்

மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன்

 
சங்க காலம் இப்படத்தில் அழகுற காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது. மாற்று அரசியலும், மக்கள் கலையும், மாற்று திரைப்படமும் வெற்றி பெருதல் வேண்டும். நம் தோழர்களின் இம் முயற்சியை வெற்றியடையச் செய்வோம். இதுவே இந்தத் தலைமுறைத் தமிழர்களின் இயக்கம். மாற்றத்தை சாத்தியப்படுத்துவோம்

ஊடகங்கள்

புதிய தலைமுறை
வரலாற்றுத் திரைப்படமாக எடுக்கும் வழக்கம் ஹாலிவுட்டில் அதிகம். பாலை திரைப்படக் குழுவினர் முதல் முறையாக தமிழில் இம்முயற்சியை மேற்கொண்டுள்ளனர்.


சன் தொலைக்காட்சி 
சமீப காலமாக பல வரலாற்றுத் திரைப்படங்கள் வருகின்றன. ஆனால், அவற்றை எல்லாம் விஞ்சும் விதமாக 2300 ஆண்டுகளுக்கு முந்தைய காலத்தைக் காட்டுகிறது பாலை.

குமுதம்
பாலை திரைப்பட இயக்குநர் செந்தமிழன் பேசுவதைக் கேட்கும் போது, தமிழ் சினிமா ஆரோக்கியமான பாதையில் நடைபோடுகிறது என்ற நம்பிக்கை பிற்கிறது.

The Hindhu
Extensive reasearch on Sangam period literature, of life and time around 2,300 years ago, enabled director M.Senthamizhan to write Paalai



http://reviews.in.88db.com/images/paalai-movie/paalai-movie-stills-pics-photos-gallery-7.JPG


டிஸ்கி -  எனவே நல்ல சினிமா ரசிகர்கள் , ஆரோக்யமான திரைப்படம் வரவேண்டும் , திறமைசாலிகளை ஊக்குவிக்கவேண்டும் என நினைக்கும் நல்ல உள்ளங்கள் பாலை படம் பார்க்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.. நண்பர்களூக்கும் பகிரலாம் ஈரோட்டில் இந்தப்படம் ரிலீஸ் ஆகவில்லை.....கொங்கு மண்டலத்தில் திருப்பூரில் மட்டும் 2 தியேட்டர்களில் ரிலீஸ் ஆகி உள்ளது.. மெத்தப்படித்தவர்கள் மிக்க  கோவையில் கூட இந்தப்படம் ரிலீஸ் ஆகாதது வருத்தம் தர வைக்கும் ஆச்சரியம்

டிஸ்கி பார்ட் 2 -

மயக்கம் என்ன - சினிமா விமர்சனம்

 

மயக்கம் என்ன - செல்வா குடுத்த அல்வா - காமெடி கும்மி கலாட்டா

 

26 comments:

K said...

good message.

சசிகுமார் said...

தமிழர்க்கு தமிழனால் கிடைத்த இன்னொரு கரும்புள்ளி....

K.s.s.Rajh said...

இந்த நிலை மாறவேண்டும் நல்ல சினிமாக்கள் ஊக்குவிக்கப்படவேண்டும் சிந்திக்கவேண்டும் சம்மந்தப்பட்டவர்கள்

Anonymous said...

இந்நிலை மாறணும், மாறும். பகிர்வுக்கு நன்றிண்ணே. எல்லாம் ம்ம்ம்...

Unknown said...

பகிர்வுக்கு நன்றி...உப்பை தின்னவன் தண்ணி குடிப்பான் என்ன கொஞ்சம் நேரம் ஆகும்...சன்னுக்கு ஒரு நாள் இருக்கு!

Mohammed Arafath @ AAA said...

erode la realease aki iruthaa ...? neenga ithayum etho scene padam nu ninachu than poi iruppeenga... then vera matri karuthu potu irupeengs... athuku release akama irukarathey paravalla... ini intha padathuku poi vimarsanam pota munjakarathai yoda thane poduveenga..

any way ALL THE BEST to the DIRECTOR..

ராஜி said...

:-((

கோகுல் said...
This comment has been removed by the author.
கோகுல் said...

ஆடும் வரை கூட்டம் வரும்,ஆட்டம் நின்றால் ஓட்டம் விடும்!

Unknown said...

தமிழ் ரசிகன் மாற வேண்டும்.கழிவுகளுக்கே விலை கிடைப்பதால் கழிவுகளை நோக்கியே தமிழ் சினிமா பயணிக்கிறது.பெரிய சினிமா நட்சத்திரங்களின் படங்களில் பெரும்பாலும் பிரம்மாண்டம் மட்டுமே மிஞ்சுகிறது.கதையோ,யதார்த்தமோ கொஞ்சமும் இல்லை:(

கவிதை வீதி... // சௌந்தர் // said...

கதை கருத்து மண்வாசனை உள்ளப்படங்கள் தமிழ் சினிமாவில் நிறந்தர இடத்தை பெற்றுவிடும்...


அதன் வெற்றியை யாராலும் தடுத்துவிட முடியாது...


ஒரு அடி மண் கேட்கிறார் என்றால் எவ்வளவு மனவேதனை பாருங்கள்...

Unknown said...

தரம் கெட்ட சினிமாவை விமர்சனம் மட்டும் நாங்கள் செய்யவில்லை! ஒரு நல்ல சினிமாவை ஓட வைக்கவும் தெரியும் என்று முயற்சி செய்த சிபியை
பதிவுலக நண்பர்கள் சார்பாக வாழ்த்துகிறேன்....

Yoga.S. said...

துட்டு எங்க இருக்குதோ அங்க தான் மரியாதையும்?!இருக்கும் என்று நிரூபிக்கிறார்கள்!

Unknown said...

ஆராதனா போன்று பல படங்கள் திரையிட்ட சில நாட்கள் ஓடாமல் இருந்து பார்த்த ரசிகர்கள் சொல்லி அதன் பிறகு வெற்றியடைந்த அனுபவங்கள் எல்லாம் இருக்கே! அது போலவே இதுவும் பார்த்த ரசிகர்கள் சொல்லி அதனாலேயே பிரபலம் ஆகிவிடும்.

Mathuran said...

என்ன செய்யிறது. பணத்திற்கும் அதிகாரத்துக்கும் இருக்கிற பலம் நல்ல விசயங்களுக்கி கிடைக்கிறதில்லையே

Ramesh said...

மிகவும் வருந்தத்தக்க விசயம்... பகிர்வுக்கு நன்றி..

அம்பலத்தார் said...

என்ன இன்னும் கலைஞர் குடும்ப ஆட்சி சினிமாத்துறையைவிட்டு அகலவில்லையா?
பாலை படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்.

அம்பலத்தார் said...

அநீதிக்கெதிரான உங்கள் பதிவிற்கு நன்றிகள்.

MANO நாஞ்சில் மனோ said...

படத்தை பார்த்துவிட்டு கருத்தும் சொல்லிட்டு, சன் பிக்சர் பண்ணுற அலப்பறை சரி இல்லை என்றே தோனுகிறது...?!!!

MANO நாஞ்சில் மனோ said...

இப்படி குறுக்கே கட்டையை போடுகிரவனுகளை என்ன செய்யலாம்...???

இராஜராஜேஸ்வரி said...
This comment has been removed by the author.
Unknown said...

CP நாளை ஞாயிறு -விடுமுறை தானே - திருப்பூருக்கு வாருங்கள் சேர்ந்து போவோம்

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

அருமையா சொன்னீங்க.
பகிர்வுக்கு நன்றி .
வாழ்த்துக்கள்.

boopathy perumal said...

The Mullai Periyar DAM Problem Hidden Truths & Solutions
http://vimeo.com/18283950

காட்டான் said...

அம்மா ஆட்சியிலும் அவங்களுக்கு அவ்வளவு பவரா??

நல்ல படத்தை ஆதரித்து எழுதியதற்கு நன்றி..

Na2 said...

உணர்ச்சி வசப்படும் பலர் திரையரங்கு சென்று இது போன்ற படங்களைப் பார்த்தும், தமிழுணர்வு இல்லாத படங்களைப் புறக்கணித்தும் தங்கள் உணர்ச்சியைக் காட்டலாமே. அது நடக்காத வரை வெறும் 'வாய்ச் சொல்லில் வீரரடி' தான்.