Wednesday, November 16, 2011

என் காதல் ஜாதகத்தின் ராசி பலன்கள்

1.   நீ இன்றி நான் இல்லை

நான் இன்றி நீ உண்டு # ஒரு தலை அன்பு!

---------------------------------------

2. ஒப்பனை இல்லாத என் உள்ளத்தை உன்னிடம் ஒப்படைத்தேன்!

கட்டுப்பட்டி என்று நீ அதை எட்டி உதைத்தாய்!

--------------------------------------

3. நான் சந்தித்த முதல் காதலி நீ! நீ சந்தித்த கடைசி ஏமாளி நான்!

---------------------------------------]]

4. என் ஜாதகத்தின் ராசி பலனை நான் பார்ப்பதே இல்லை

நீதான் என் ராசி, நீ எனக்கு சாதகம் ஆனால் அதுவே என் பலா பலன்கள்

---------------------------------

5. என் வீரங்கள் , வாய்ச்சவடால்கள் , எள்ளல்கள் அனைத்தும் நிர்மூலம் ஆகி உறைந்து மறைந்து விடுகிறது , உன் சமீபங்களில்

-----------------------------------



Spring Collection

6. வரலாறு காணாத தோல்வி - சொல்லாத காதல்!

----------------------------------------------

7.  கூடன் குளம் அணு உலை போல் என் இதயம்!

  உனக்கான அன்பை ப்பொழிய விடாமல் தடை செய்தால் வெடித்து விடும் அபாயம்!

-----------------------------------------

8. பெண்ணின் அழுகையில் சில சமயம் உள் நோக்கங்கள் உண்டு, ஆனால் ஆணின்  அழுகையில் இயலாமை மட்டுமே எதிரொலிக்கும்..

------------------------------------------

9.பெறும் தன்மை பெண்ணின் அணிகலன், பெருந்தன்மை ஆணின் மகுடம்

----------------------------------

10. ஆளத்தெரியாதவர்கள் நாட்டிலும், வாழத்தெரியாதவர்கள் வீட்டிலும் அதிகார மமதையுடன் ஆர்ப்பரிக்கிறார்கள் # “ஸ்டேட்”டஸ் அப்டேட்

----------------------------------


 

11. நீ நடக்கும் பாதையில் பூக்களை தூவ குனிந்தேன்.. உன் காலுக்கு செருப்பாக  மாற என்னை நீ பணித்தாய்!!

------------------------------------

12. மற்றவர் மனதைப்புண்படுத்தாமல் பகடி செய்வது கத்தி மேல் நடக்கும் நத்தையின் பயணம்

---------------------------------------

13. தற்கொலை செய்து கொள்ளும் எண்ணம் தோன்றும்போது அதை கடந்து வர மனிதனுக்கு அதிக மனோபலம் தேவைப்படுகிறது

-----------------------------------

14. நீ ஒரு விசித்திரமான தொட்டா சிணுங்கி, நான் தொடவே இல்லை.. சிணுங்குகிறாய்!!

------------------------------------

15. நிறைவேறாத காதல்கள் அந்தந்த ஊர்  மலைக்கோயில்களில், பாழடைந்த மண்டபங்களில்  அடையாளம் காட்டப்பட்டு பெயர்கள் பொறிக்கப்பட்டு இருக்கின்றன

-----------------------------------


Super Saree Collections Fashion 2011
16.அரை குறை உடையில் தங்கள் மகள் நடிக்க நேர்வதை எல்லா அம்மாக்களும் அரை குறை மனதுடன் தான் சம்மதித்து இருப்பார்கள்

---------------------------------

17. அறிமுகம் இல்லாத பெண்ணின் ஆடை விலகலை சுட்டிக்காட்ட, திருத்த சொல்ல ஒரு பெண் குழந்தையின் அப்பாவாக மனதை பக்குவப்படுத்திக்கொள்ள வேண்டும்

----------------------------------------

18. கவிதையை எழுதும்போதே இதை எத்தனை பேர் ரசிப்பார்கள் என்று கணக்குப்போட்டு விடுகிறது கவிஞனின் உள்ளம்

-----------------------------------

19.பிரச்சனை வெள்ளம் தலைக்கு மேல் போகும்போது வேறு வழி இல்லாமல் மனிதன் கடவுளை நம்புகிறான்

------------------------------------

20. விழிப்புணர்வு, எச்சரிக்கை உணர்வு, உள்ளுணர்வு இவற்றின் வழி காட்டல்கள் பெண்களுக்கு ஆண்களை விட மிக அதிகம்

------------------------------------

20 comments:

முத்தரசு said...

20/20 சூப்பர்

கவிதை வீதி... // சௌந்தர் // said...

ஒரு ஒரு வரியில அத்தனையும்..

சுவாரஸ்யம்...

ADMIN said...

ஸ்பிரிங்(spring collection) கலெக்ஷன் சூப்பர்..!!

முத்தரசு said...

16, 17, 19 & 20 சும்மா அதிருது

ADMIN said...

எனது வலையில்

வெற்றியின் அடிப்படையில் உடல்நலம்

உங்கள் internet speed உடனடியாக தெரிந்துகொள்ள

நேரமிருக்கும்போது தயங்காமல் வந்து உங்கள் கருத்துக்களையும் ஆலோசனைகளையும் அளிக்க அழைக்கிறேன். நன்றி..!

Unknown said...

நன்று !

பிரசன்னாவ விட ஸ்னேஹா 10 மாதம் மூத்தவர்
http://aagaayamanithan.blogspot.com/2011/11/10.html

மகேந்திரன் said...

வசந்தத்தின் அத்தனை துணுக்குகளும் அருமை...

Unknown said...

15.மனச டச் பன்னிடுச்சு


காப்பி பேஸ்ட் பதிவர் மன்னர் மார்த்தாண்டம் VS பிரபல பதிவர்கள்

மாதேவி said...

அசத்துங்க...

ராஜி said...

நிறைவேறாத காதல்கள் அந்தந்த ஊர் மலைக்கோயில்களில், பாழடைந்த மண்டபங்களில் அடையாளம் காட்டப்பட்டு பெயர்கள் பொறிக்கப்பட்டு இருக்கின்றன
>>>
அப்போ சென்னிமலையில அதுப்போல பொறிக்கப்பட்ட பெயர்கள் நிறைய இருக்குமா? டவுட்டு

ராஜி said...

சவால்கள் சிறுகதை போட்டியி மூன்றாவது இடம் கிடைத்தமைக்கு வாழ்த்துக்கள் சிபி சார்

சக்தி கல்வி மையம் said...

எல்லாமே அசத்தல் மாப்ள..

rajamelaiyur said...

20 th உண்மை

rajamelaiyur said...

சிறுகதை போட்டியில் வெற்றி பெற்றதுக்கு வாழ்த்துகள்

ஸ்ரீராம். said...

8. ஆணின் அழுகை அபரிமிதமான அவனது கர்வத்தின் பங்கத்தை (கர்வபங்கம்) தாங்க முடியாதது கூடக் காரணமாயிருக்கலாம் !
16. அப்படீங்கறீங்க..?
19. ஆமாம்...ஆமாம்!

இராஜராஜேஸ்வரி said...
This comment has been removed by the author.
இராஜராஜேஸ்வரி said...
This comment has been removed by the author.
சென்னை பித்தன் said...

ஆகா!

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

எப்போதும்போல.,.

அம்பாளடியாள் said...

ஆகா !:.......காதல் தத்துவ மழை. வாழ்த்துக்கள் சார் .கவிதைக்கும்
வென்றெடுத்த சிறுகதைப் போட்டிக்கும் .மிக்க நன்றி பகிர்வுக்கு .