Monday, November 07, 2011

ஈரோட்டில் அம்மன் சிலை கண் திறந்ததா? - ஸ்பாட் விசிட் ரிப்போர்ட்

3.11.2011 வியாழன் அன்று ஈரோட்டில் ஒரே பரபரப்பு , ஈரோட்ல ஒரு கோயில்ல அம்மன் கண் திறந்து பார்த்ததா... இது நம்ம தமிழ் நாட்ல ஒண்ணும் புதுசில்ல.. பிள்ளையார் பாலை குடிச்சார்.. அம்மன் சிலை கண்ல இருந்து ரத்தம் வழிஞ்சதுன்னு ஏதாவது  ஒரு பர பரப்பு நியூஸ் ஓடிட்டே இருக்கும்..அப்புறம் பார்த்தா அது ஏதாவது காரணத்துக்காக சொல்லப்பட்ட புரளியா இருக்கும், ஆனா ஜனங்க ஒவ்வொருதடவையும் கும்பலா போய் விழுவாங்க..

ஆனா இந்த டைம் இந்த நியூஸ் பரவுன அடுத்த நாள் கோயில் கலெக்‌ஷன் மட்டும் ரூ ஒரு லட்சத்து நாற்பதாயிரமாம்.. வழக்கமா அந்த கோயில்ல டெயிலி கலெக்‌ஷன் அதிக பட்சம் ரூ 400 தான் இருக்கும்.. அவ்வளவு ரஷ் வரக்காரணம் என்ன? ஒரு ஸ்பாட் விசிட் அடிச்சேன்..


ஈரோடு பன்னீர் செல்வம் பார்க் கில் இருந்து 2 கி மீ தொலைவில் ஈரோடு கோட்டை செங்குந்தர் கல்யாணம் மண்டபம் அருகே செங்குந்தர் சமூக திருமண  மண்டபம் இருக்கு.. அதுக்கு பக்கத்துல பத்ர காளியம்மன் கோவில் இருக்கு.. அதுதான் ஸ்பாட்.. 

அடேங்கப்பா.. என்னா கூட்டம்? அங்கே போய் அம்மனை பார்த்தேன்.. எப்பவும் போல் தான் இருந்தது.. அக்கம் பக்கம் விசாரித்தேன்.. 

அந்த கோயிலுக்கு ஐம்பொன் சிலை செய்யப்போறாங்களாம்.. அதுக்கு பொருள் உதவி கேட்டு கோயில்லயே விளம்பரம் பண்ணியும் ஒரு ஆளும் கண்டுக்கலையாம்.. அதனால ஒரு விளம்பரத்துக்காக பூசாரி தான் இந்த ட்ரிக்கை செஞ்சாராம்..

பெரிய பெரிய தலைவருங்க கூட என் கனவுல அண்ணா வந்தார் , எம் ஜி ஆர் வந்தார் அப்படி சொன்னார்.. இப்படி செய்ய சொன்னார்னு சொல்லி மக்களை ஏமாத்தறப்ப சாதாரண பூசாரி அப்படி செஞ்சதுல என்ன தப்பு? என நினைக்கத்தோணினாலும் இது ஒரு சமுதாயத்தை ஏமாற்றும் குற்றமே..



இதுதான் கோயில் 



அந்த விளம்பர போஸ்டர்







 

சப்போஸ் கடவுள் கண்ணை திறந்தால் நான் கேட்க விரும்பும் கேள்விகள்


1. கூடங்குளம் பிரச்சனைக்கு என்ன தீர்வு? மக்கள் உண்ணா விரதம் இருக்கறதும்  அதை அரசியல் ஆக்கும் சிலர் ஆதாயம் கண்பதும் ஏன்?

2. பிரதமர் மன்மோஹன் சிங்க் உண்மையிலேயே ஒண்ணும் தெரியாதவரா? இல்லை அப்படி நடிக்கிறாரா?

3. இலங்கைத்தமிழ் அகதிகள்க்கு நல்ல வாழ்வு கிடைக்காதா? எல்லாரும் உங்கள் குழந்தைகள் என்றால் ஏன் அவங்க சாவதை வேடிக்கை பார்க்கறீங்க?

4.  தமிழ் நாட்ல கலைஞர், ஜெ ஆகிய 2 தீய சக்திகளுக்கு மாற்று யாரும் இல்லையா? ஒருத்தர் மாற்றா வருவார்னு நினைச்சோம், அவர் வர்றேன் வந்துடுவேன், வரப்போறேன்னு சொல்லிட்டு வரவே இல்லை.. இன்னொருத்தர் எப்பவும் மப்புலயே இருக்கார்..

5. மாற்று அரசு அமையும்னு பார்த்தா தமிழ் நாட்ல எதையாவது டெயிலி மாத்திட்டே இருக்கற அரசாங்கம் அமைஞ்சிருக்கே.. அதுக்கு என்ன தீர்வு?

6. மாயாவதி மாதிரி சிலைப்பைத்தியங்களை நிஜமாவே சிலை ஆக்கிட்டா என்ன?

7. இந்த உலகத்துல  பாரதியார், பக்த்சிங்க் போன்ற நல்லவங்க அல்ப ஆயுசுல போயிடறாங்க.. கெட்டவங்க, அட்டூழியம் பண்றவங்க நீண்ட நாள் நலமா வாழறாங்க.. அது ஏன்?

35 comments:

KANA VARO said...

மெய்யாலுமா?

KANA VARO said...

யோவ்! நீர் மெய்யாலுமே பெரிய ஆள் தான்!

settaikkaran said...

இப்புடியெல்லாம் கேள்வி கேட்டா, பதில் சொல்லி மாட்டிக்கிடணுமுன்னு தான் சாமி கண்ணைத் தொறக்குறதே கிடையாது. :-)

ராஜி said...

Present sir

சக்தி கல்வி மையம் said...

மாப்ள ரைட்டு..

Unknown said...

தல பெரியார் பிறந்த நம்ம ஊர்ல இந்த மாதிரி நடப்பது கொடுமை...

K said...

thanks for the 3 rd question that you prefered to ask to the god.

கோவை நேரம் said...

எப்பவும் ஆன்மீக பதிவு போடுவீங்க .இப்போ புலனாய்வு பண்றீங்களா..?

கும்மாச்சி said...

செந்தில் கடவுள் கிட்ட இந்த மாதிரி ஏடா கூடமா கேள்வியெல்லாம் கேட்கக்கூடாது, அப்புறம் கண்ணை குத்திடுவார். அவர் என்ன பதில் தெரிஞ்சா சொல்ல மாட்டேங்கிராறு.

வெளங்காதவன்™ said...

:)

RAMA RAVI (RAMVI) said...

ஏமாறுபவர்கள் இருக்கும் வரை ஏமாற்றுபவர்கள் இப்படித்தான் ஏமாற்றுவார்கள்.

Unknown said...

சாமி கண்ணக்குத்திடும் மக்கா!!!

இராஜராஜேஸ்வரி said...
This comment has been removed by the author.
இராஜராஜேஸ்வரி said...
This comment has been removed by the author.
விச்சு said...

இதுமாதிரி அடிக்கடி நடக்குது.நன்றி தகவலுக்கு.

Philosophy Prabhakaran said...

அடப்பாவிகளா... கடவுளையும் இப்படி மொக்கைப்பட டைரக்டரை கேக்குற மாதிரி நிக்க வச்சு கேள்வி கேக்குறீங்களே...

Philosophy Prabhakaran said...

எதுனா ராம.நாராயணன் பட ஷூட்டிங்குக்கு போனீங்களா...???

vetha (kovaikkavi) said...

ஏழு கேள்வியும் எனது கேள்வி போல இருக்கிறதே!.
வேதா. இலங்காதிலகம்.

அம்பலத்தார் said...

நீங்கல்லாம் இப்படி நடுரோட்டிலை வச்சு நாக்கைப்பிடுங்கிறாப்போல கேட்டிடுவிங்க என்றுதானே கடவுள் கண்ணை திறக்கவில்லை. Good post.

அம்பலத்தார் said...

கடவுள் திறக்காட்டில் என்ன? சந்திக்கு சந்தி ஒவ்வொரு போஸ்டரிலையும் பானரிலையும் நம்ம நடிகைங்க திறந்த கோலத்திலை காட்சி தருகிறாங்களே அப்புறம் எதுக்கு கவலை.

K.s.s.Rajh said...

ரைட்டு...........ஆனாலும் கடவுள் கண்திறந்தால்...நீங்கள் கேட்கும் கேள்விகள் அருமை?

கவிதை வீதி... // சௌந்தர் // said...

அப்படியா அப்படி நடந்தால் நம்மளபத்தியும் நாலு வரி சொல்லிவையுங்க...

கோகுல் said...

இன்னைக்கு கமலஹாசனோட பிறந்தநாள் அவரு தசாவதாரத்துல கடைசில சொல்ற டையலாக் நினைவுக்கு வருது!

கடவுள் இல்லேன்னு சொல்லல இருந்தா நல்லாருக்கும்னு சொல்றேன்!

Kazhudhai said...

கடவுள் எவ்ளோ பிஸினு இத பாத்து படிச்சு தெரிஞ்சிக்கோங்க.
http://kazhudhai.blogspot.com/

மாங்கனி நகர செல்லக் குழந்தை said...

ஏமாறா மக்கள் இருக்குற வரைக்குற இந்த மாதிரி பூசாரிங்க இருப்பாங்க.....

செங்கோவி said...

புலனாய்வுப் பதிவர் சிபி வாழ்க..

SURYAJEEVA said...

என்னங்க கோவை நேரம் என்னவோ சொல்றாரு, ஆன்மீக பதிவா போடுவீங்கன்னு... நான் இது வரைக்கும் அப்படி ஒன்னும் உங்கள் வலை பூவில் பார்க்கலியே, ஒரு வேலை ரொம்ப நாள் முன்னாடி போட்டீங்களோ?

MANO நாஞ்சில் மனோ said...

செமையான கேள்வி கேட்டுருக்கே அண்ணே, ஆனால் பதில் நஹி....

MANO நாஞ்சில் மனோ said...

அந்த கடைசி கேள்வி ஆயிரம் கதை சொல்லுதே, திமுக'காரன் ஆட்டோ அனுப்பபோறான் சாக்குரதை சொல்லிப்புட்டேன்...

வயசானவர் இன்னும் கொஞ்சநாள் இருக்கட்டும், மகள் வெளியே வரும்வரையாவது....

செவிலியன் said...

சாமிதான் கண்ண குத்தும்....சாமி கண்ணையே யாரோ ஆசாமி குத்தி தெறந்துட்டானா...???? நடத்துங்க....போலாம் ரைட் .....

Unknown said...

கண்ணத் தொறக்கணும் சாமின்னு ஒரு கில்மா பதிவு போடுவீங்கன்னு பார்த்தா...
மீண்டும் விழிப்புணர்வு பதிவு
அதிகமான பதிவு இந்த திடீர் விழிப்புணர்வு... தீபாவளிக்கு பிறகுதான்...
காதுல வெடி வச்சாங்களா ? இல்ல வீட்டில மந்திரிச்சு விட்டாங்களோ CP

Anonymous said...

கேள்விகள் கம்மியா இருக்கே...

Admin said...

Nalla ketka vendiya kelvigal.

Shanmugam Rajamanickam said...

நல்ல கேள்விகள்.....

நிரூபன் said...

மீண்டும் வணக்கம் பாஸ்...

ஒன் த ஸ்பார்ட் விசிட் அடிச்சு பூசாரி பண்ணிய திருவிளையாடலை கண்டு பிடிச்சிருக்கிறீங்க.

அம்மன் கண் திறந்தால் கேட்க விரும்பும் கேள்விகள்...

அதில ஜெ, கலைஞர் பற்றி போட்டிருக்கிற கேள்விகளை நினைத்து நினைத்துச் சிரித்தேன்....