Tuesday, October 11, 2011

ROMEO MUST DIE - ஹாலிவுட் சினிமா விமர்சனம்

http://sfappeal.com/culture/romeo_must_die_dvd.jpg 

ஒரு நைட் கிளப்.. அதுல நடக்கற பார்ட்டிக்கு லோக்கல் சைனீஸ் கேங்க்லீடரோட  2வது பையன் தன் 5 வது  கேர்ள் ஃபிரண்டோட போறாரு..அங்கே தகராறு.. லோக்கல் சரக்கடிக்கற நம்மாளுங்களே தகராறு பண்றப்ப ஃபாரீன் சரக்கடிக்கற அவங்க தகராறு பண்ண மாட்டாங்களா? கேங்க்லீடரோட  2வது பையன் தனது பாடிகார்டால் வார்ன் பண்ணப்பட்டும் அவன் கேட்கலை.. அப்புறம் அவனை துரத்திடறாங்க.. அடுத்தா நாள் காலைல பார்த்தா அவனை யாரோ அடிச்சு தூக்குல  தொங்க விட்டிருக்காங்க.. 

அதைப்பற்றி இன்வெஸ்டிகேட் பண்ண ஒரு பக்கம் போலீஸ்,. இன்னொரு பக்கம் கேங்க்லீடரோட  முதல் பையன் ஜெட் லீ வர்றாங்க.. கொலை செய்யப்பட்ட பையனோட அப்பா ஒரு கேங்க் லீடர் இல்லையா? அவனுக்கு எதிரான இன்னொரு கேங்க் லீடர் தன்னோட மகள், மகனை ஜாக்கிரதையா இருக்க சொல்லி வார்ன் பண்றான்.. அந்த மகள் தான் ஹீரோயின்.. 

இப்போ ஹீரோவும் , ஹீரோயினும் சந்திக்கறாங்க.. கிட்டத்தட்ட லவ் பண்றாங்க.. வில்லன் தன் மக கிட்டே தமிழ் பட வில்லன் மாதிரி சொல்றாரு.. அவன் எதிரியோட பையன்.. வேணாம். விட்டுடுனு.. எந்த பொண்ணு அப்பா பேச்சை கேட்டு இருக்கு?

யார் உண்மையான கொலையாளி? ஜெட்லீயோட லவ் என்னாச்சு?என்பதே மிச்ச சொச்ச திரைக்கதை.. 

ஜெட் லீ ஹீரோ என்பதால் ஆக்சன் காட்சிகளுக்குப்பஞ்சம் இல்லை.. அங்கங்கே காமெடியையும் தூவி விட்டிருக்காங்க.. ஹீரோயின் அழகு ஃபிகர் தான்..
http://content.internetvideoarchive.com/content/photos/334/014038_26.jpg

படத்தில் மனம் கவர்ந்த வசனங்கள்

1.  உன் பேர் எம் ல தானே ஸ்டார்ட் ஆகும்?

அட, ஆமா, எப்படி கண்டு பிடிச்சே?

மடையன்னு பார்த்தாலே தெரியுது.. 

2.  ஹாய்.. இந்த டாக்ஸியை எங்கே இருந்து சுட்டீங்க?

அது உனக்கு தேவை இல்லாதது.. உன்னை எங்கே இறக்கி விடனும்னு சொல்லு..

3. உங்க பேரென்ன மிஸ்..?

ஏன்? ஃபோன் பண்ணப்போறிங்களா?

இல்லை,என் கிட்டேதான் ஃபோனே இல்லையே?

அடடா.. இருந்திருந்தா நல்லாருந்திருக்கும்.. 

4.  என்ன பண்ணிட்டு இருக்கே?

பார்த்தா தெரில? சாப்பிட்டுட்டு இருக்கேன்.. 

ஹி ஹி பார்த்தேன், எதுவும் தெரில.. 

5.  நீ என்னை புரிஞ்சுக்கவே இல்லை..

சரி.. புரிய வை..

என்னைத்தவிர வேற யாராலும் உன்னை மடக்க முடியலையே?

திமிரா பேசாதே!!
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg0hyphenhyphenOKrsUAqk23a82qDyPui4q7F8rLsS7YlvX-kfbhjozLylq1T8U0FUQKjK6KLgbcT550oiKzZ5BZQfvQj7IJQytm5W5FFXJmlC7rMHTerr_Axt502tTmcA3hODgvxDJGUF-ImJ4BYJ4e/s1600/aaliyah11.jpg
6. மிஸ்.. பார்க்க டக்கரா இருக்கீங்க.. 


அட!!!! உங்களுக்கு என்னை சுத்தறதை தவிர வேற வேலை இல்ல போல...

7.  நீ குங்க்ஃபூல வேணா கிங்கா இருக்கலாம்.. ஆனா.. இந்த கேம்ல...???

8. நண்டுகள் போலத்தான் மனிதர்களும்.. ஒருத்தன் முன்னேற விடமாட்டாங்க... இப்போ பாரு.. அந்த ஜாடி திறந்தே தான் இருக்கும்.. ஒரு நண்டு ஏறுச்சுன்னா இன்னொரு நண்டு பிடிச்சு இழுத்து விட்ரும்.. சோ நோ கவலை... இந்த மாதிரி தான் அவனுங்களுக்குள்ள அடிச்சுக்கிட்டு இருக்கற வரை நமக்கு தான் லாபம்.. 

9. உன்னை கொல்லப்போறதா டிப்ஸ் கிடைச்சிருக்கு.. 

எப்போ?

இப்போ... டுமீல்..

http://moviesmedia.ign.com/movies/image/article/865/865749/sfcast_1207937648.jpg

சில சந்தேகங்கள், கேள்விகள்

1. மலையூர் மம்பட்டியான் பார்த்து உல்டா பண்ணுன மாதிரி ஒரு சீன் . ஜெட்லியை தலைகீழா கட்டி வெச்சிருக்காங்க.. அப்போ 3 பேரு அவரை சுத்தி நிக்கறாங்க.. அவரு நிராயுத பாணி. ஆனா 3 பேர் கைலயும் ஆயுதம்.. ஆனா அவர் தான் ஃபைட் பண்ணி வின் பண்றாரு.. யப்பா நம்பவே முடியலை.. காட்சிலயாவது கொஞ்சம் சமாளிச்சு இருக்கலாம், நோ நம்பகத்தன்மை.. 

2. போலீஸ் யூனிஃபார்ம் போட்டுட்டு ஜெயிலை விட்டு ஜெட் லீ தப்பிக்கற சீன் நம்பும்படியே இல்லை.. கேட்ல ஐ டி கேட்க மாட்டாங்களா?கைதிக்கும் ,போலீஸ்க்கும் வித்தியாசம் தெரியாதா? வீடியோ கேமரா ஏன் கேட்ல இல்லை?

3. ஜெட்லீ, ஜாக்கிசான், புரூஸ்லீ படங்கள்ல ஃபேமஸே மார்ஷியல் ஆர்ட்சூம் , ரியல் ஃபைட் சீனும் தான்.இந்தப்படத்துல ஏகப்பட்ட கிராஃபிக்ஸ் சீன் துருத்தலா தெரியுது..  

4. ஹீரோ தன் தம்பி கொலை செய்யப்பட்ட விதம் ஆள் யார்னு கண்டு பிடிக்கத்தான் வர்றார். ஆனா மொத்த 12 ரீல் படத்துல 8 ரீல் ஹீரோயின் பின்னால தான் சுத்தறார்.. ஏன்?

5. ஜெட்லியோட தம்பிக்கு பாடி கார்டுகள் எப்பவும் கூடவே இருக்கு, ஆனா ஜெட்லீக்கு மட்டும் எந்த பாடிகார்டும் இல்லை.. அது ஏன்?

http://images.allmoviephoto.com/2000_Romeo_Must_Die/aaliyah_romeo_must_die_001.jpg


 ரசித்த காட்சிகள்

1. ஹீரோயின் முன் உதார் காட்ட ஹீரோ வில்லன் கோஷ்டிகளின் ரக்பி பந்தாட்டத்தில் ஆடுவதும், அதில் முதலில் நையப்புடைக்கப்பட்டு பின் அவர்களை பந்தாடும் சீன் 


2. ஹீரோவுக்கு தன் மேல் காதல் என்பதை உணர்ந்தும் தெரியாதது போல் அப்பாவியாக முகத்தை வைத்துக்கொண்டு ஹீரோயின் கலாய்க்கும் சீன்

 3. ஹீரோயினின் தம்பி வெறுப்பாய் மேலுக்கு பேசினாலும், தங்கை மீது வைத்திருக்கும் பாசத்தை ஜஸ்ட் லைக் தட் சொல்வது, காட்டுவது நீட்..

4. கதையும், திரைக்கதையும் அனுமதித்தும் தேவை அற்ற வன்முறைக்காட்சிகளையோ, முகம் சுளிக்கும்படியான  காட்சிகளையோ வைக்காமல் இருந்ததற்கு ஒரு சபாஷ்.


ஈரோடு வி எஸ் பி தியேட்டரில் போன வருடமே பார்த்த படம்.. 



http://youknowigotsoul.com/wp-content/uploads/2011/05/Aaliyah_23.jpg















































24 comments:

Unknown said...

ME THE FIRST?

MANO நாஞ்சில் மனோ said...

அவ்வ்வ்வ்வ்வ் வடை போச்சே....

MANO நாஞ்சில் மனோ said...

விமர்சனம் நல்லாத்தேன் இருக்கு...!!!

MANO நாஞ்சில் மனோ said...

அண்ணன் இன்னைக்கு வேலையில் பிசியா இருக்கார் போல....!!

Astrologer sathishkumar Erode said...

நல்ல விமர்சனம்...

Unknown said...

பாரின் சரக்கடிப்பவர்களை...விமர்சனத்தின் ஆரம்பத்தில் அவமானப்படுத்தியது முதல் தவறு...ஹிஹி!

Unknown said...

ஒரு அமெரிக்க அழகிய போட்டுட்டு அது சைனா பொண்ணு என்று நம்ப வைக்க முயற்சிக்கும் பதிவரே...இது ரெண்டாவது ஹிஹி!

Unknown said...

எப்படி இருந்தாலும் விமர்சனத்துல டாப்பு நீர் என்று உணர்த்தியது இது மூணு ஹிஹி!

காட்டான் said...

பாரின் சரக்கடிப்பவர்களை...விமர்சனத்தின் ஆரம்பத்தில் அவமானப்படுத்தியது முதல் தவறு...ஹிஹி!

ஹி ஹி ஹி ஆமாய்யா இதை நானும் கண்டிக்கிறேன் மாப்பிள என்ன விளையாடுறீங்களா...??? ஹி ஹி சரி சரி இதெல்லாம் நமக்குள்ள..

Unknown said...

விமர்சன வித்தகர்!

Mathuran said...

அசத்தலான விமர்சனம்.

Mohamed Faaique said...

இந்தப் படத்துல வர்ர தலை கீழா கட்டினதும் வர்ர பைட்டு, பரசுராம்`லயும், Fire Fighting Tube;ல பண்ர பைட்டு, பாபா (அயன் பாக்ஸ்), டபாங்`லயும் சுட்டுட்டாங்க...
ரக்பி பைட்டும் வாலி பாலாக பாபா படத்துல மாறிடுச்சு...

SURYAJEEVA said...

எங்க ஹீரோயின சீன பொண்ணுன்னு சொன்னீங்க? விக்கி சொன்னவுடனே அழிச்சுட்டீன்களா?

Speed Master said...

படக்கதையே வேற மாதிரி இருக்கு

இந்த படத்திற்கு கதை வேறங்க

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

ரைட்டு ...

இன்று என் வலையில்:
"விகடனும்நானும்!"

செங்கோவி said...

இது தான் கதையா?

தமிழ்வாசி பிரகாஷ் said...

விமர்சனம் ஓகே. சி பி ஆங்கில படமெல்லாம் பாக்கிறாரா????

Anonymous said...

நல்ல விமர்சனம்...

உலக சினிமா ரசிகன் said...

ஜெட்லீ படத்துக்கும் கில்மா ஸ்டில்சை வாரி வழங்கி ஜொள்ளர்கள் தாகம் தீர்க்கும் சிபி வாழ்க....வளர்க...

வால்பையன் said...

போன வருசமா?

வால்பையன் said...

படம் வந்து பத்து வருசமாவது இருக்கும்!

KANA VARO said...

உலக படம்.. ம்ம்

உணவு உலகம் said...

// தமிழ்வாசி - Prakash said...
விமர்சனம் ஓகே. சி பி ஆங்கில படமெல்லாம் பாக்கிறாரா????//
இது ஊரறிஞ்ச ரகசியம்!

காந்தி பனங்கூர் said...

வழக்கம் போல படங்களும் விமர்சனமும் கலக்கல் தல.