Monday, October 24, 2011

கோவை ப்ரீத்தியின் கொலை வழக்கு - KOVAI PREETHI MURDER CASE (சவால் சிறுகதைப்போட்டி )

6 மாதங்களுக்கு முன் கோவையில் எந்த பத்திரிக்கையிலும் வராத , எந்த போலீஸ் ஸ்டேஷனிலும் பதிவு செய்யப்படாத ஒரு தற்கொலை கேஸ் ..அவர் ஒரு பெண் பதிவர். .......................என்ற பெயரில் பிளாக் ஓப்பன் செய்து கொஞ்ச நாட்களிலேயே அந்த துர் சம்பவம் நடந்தது.. தனிப்பட்ட முறையில் அக்கறை எடுத்து நான் திரட்டிய தகவல்கள்... இவை.. முழுக்க முழுக்க பெயர் உட்பட எல்லாம் உண்மை.. விஷ்ணு , கோகுல் கேரக்டர் மட்டும் இடைச்செருகல்.. அது போட்டியின் விதி கருதி....




ப்ரீத்தியின் டைரியிலிருந்து

என் சொந்த ஊரு திருத்தணி.. +2 வரை அங்கே தான் படிச்சேன்..ரொம்ப லோ   இன்கம் ஃபேமிலி..எனக்கு ஒரு தங்கை.. அவ பேரு தேவி. அவ இப்போ பெங்களூர்ல ஒரு சாஃப்ட்வேர் கம்பெனில ஒர்க் பண்றா.. நான் கோவைல ஒரு டிபார்ட்மெண்ட் ஸ்டோர்ல சேல்ஸ் கேர்ள்.எனக்கு சின்ன வயசுல இருந்தே மத்தவங்க மாதிரி ஆடம்பரமா வாழ ஆசை,ஆனா வறுமை என்னை கட்டிப்போட்டுச்சு. ஆனா நானும் என் மனசுக்குப்பிடிச்ச மாதிரி நடக்க ஒரு வாய்ப்பு வந்துச்சு. கோவை வந்த முதல் 6 மாசம் எந்த வித பிரச்சனைகளும், முக்கிய நிகழ்வுகளும் இல்லாம தான் போச்சு..

ஒரு நாள் ஹை க்ளாஸ் லுக்கோட ஒரு ஆள் வந்தார்..என்னை ரொம்ப நுணுக்கமா பார்த்தார்.. எனக்கு மனசுக்குள்ள எந்த மணியும் அடிக்கல.. ஆனாலும் ஒரு குறு குறுப்பு ஏற்பட்டுச்சு.. அடுத்த நாள்ல இருந்து அது தொடர் கதை ஆச்சு.. எனக்கு தெரிஞ்சுடுச்சு. என்னை பார்க்கத்தான் வர்றார்னு..

என் கிட்டே பேச்சு குடுக்க ஆரம்பிச்சார்.. அவர் பேர் ரகு.. ஷாப்பிங்க் மால் வெச்சிருக்கார்..என்னை ஒரு நாள் காஃபி ஷாப் கூப்பிட்டார்.. போனேன்.. ரொம்ப டீசண்ட்டா பேசினார்.. என்னை மேரேஜ் பண்ணிக்க விரும்பறதா சொன்னார்.. சினிமால வர்ற மாதிரி கட்டிப்பிடிக்கறது, கிஸ், ஊர் சுற்றல் அப்டினு எந்த வித சில்மிஷங்களும் இல்லாம கண்ணியமா அவரது அணுகு முறை இருந்தது அப்போ எனக்கு எந்த சந்தேகத்தையும் ஏற்படுத்தலை..

எனக்குள்ள எந்த பட்டாம்பூச்சியும் பறக்கலை, ஏழைக்குடும்பம்,எப்படியோ வசதியான ஆள் கணவனா வந்தா நல்லதுதான்னு தோணுச்சு.. அம்மா, அப்பா கிட்டே விஷயம் சொன்னேன், அவங்களும் ஓக்கே சொல்லிட்டாங்க..

மருத மலை கோயில்ல எங்க மேரேஜ் ரொம்ப சிம்ப்பிளா நடந்தது. இவ்வளவு பணக்கார ஃபேமிலி மண்டபத்துல மேரேஜ் பண்ணாம கோயில்ல வைக்கறாங்களேன்னு எனக்கு கொஞ்சம் டவுட்டா இருந்தது.. ஆனா அதை பெரிசா எடுத்துக்கலை..

மேரேஜ் முடிஞ்சு முக்கிய உறவினர்கள், பேரண்ட்ஸ் எல்லாரும் கிளம்பிட்டாங்க..முதல் இரவு ரகுவின்  வீட்டில்.. அதை வீடுன்னு சொல்லிட முடியாது, பெரிய பங்களா.. வந்தாரு.. பக்கத்துல உட்கார்ந்தாரு..கொஞ்ச நேரம் பேசிட்டு இருந்தாரு,, தூங்கிட்டாரு..எதுவும் நடக்கலை..

சரி.. மேரேஜ் அலைச்சல், டென்ஷன் இப்படி இருக்கும்னு நான் அதை பெரிசா எடுதுக்கல.. 10 நாட்கள் இப்படியே போச்சு.. 11 வது நாள் எனக்கு டவுட் வந்து அவர்ட்ட பேசுனப்ப அந்த ஷாக் என் உடம்பு, மனசு எல்லாத்துலயும் ஒரு சேர இறங்குச்சு..அவர் ஆண்மை இல்லாதவர்.. IMPOTENT. அது போக டெயிலி அவர் டிரக் சாப்பிடறவர் , டிரக் அடிக்ட்..

அப்புறம் எதுக்காக என் லைஃப்ல விளையாடுனீங்க?ன்னு கேட்டேன்.. பிரஸ்டீஜ்க்காக. சொசைட்டி முன்னால எல்லோரையும் போல வாழ அப்டின்னார்..என் தலை எழுத்து அவ்ளவ் தான்னு என்னை தேத்திக்கிட்டேன். 2 மாசம் அப்டியே போச்சு..


ஒரு நாள் ரகு என் கிட்டே பம்பிக்கிட்டே வந்தாரு..நமக்கு ஒரு வாரிசு வேணும்.. அப்பதான் நான் தைரியமா ஆம்பளைன்னு வெளில சொல்லிக்க முடியும்னு  சொன்னாரு.. டெஸ்ட் டியூப் பேபி மேட்டர் எடுக்கப்போறார்னு நினைச்சேன்.. ஆனா அவர் தன் அப்பா கூட என்னை “அட்ஜஸ்” பண்ண சொன்னார்..


நான் ஒத்துக்கலை.. அழுது ஆர்ப்பாட்டம் பண்ணுனேன்.. எனக்கு போதை ஊசி போட்டு சாதிச்சுட்டாங்க.. 4 வருஷங்கள்.. 2 குழந்தைகள் பிறந்தாச்சு.. மாமனார் மூலமா..

வீட்டுக்கு வெளில ரகு கூட தம்பதி சகிதமா போவேன், வீட்டுக்கு உள்ளே மாமனார் கூட..

அவங்களுக்கு இணையான வசதியான இடத்துல பெண் எடுத்தா பிரச்சனை வரும்னு தான் என்னை மாதிரி ஒரு ஏழையை ,எதிர்க்க திராணி இல்லாத ஆளை, கல்யாணம் பண்ணிட்டார்னு புரிஞ்சுது.. தலை விதியேன்னு இருந்தேன்.

ஒரு நாள் ரகு திடீர்னு என் கால்ல விழுந்தார்...அவங்க ஷாப்பிங்க் மால் தீ விபத்துல எரிஞ்சிடுச்சாம், இன்ஷூரன்ஸ் ஆஃபீஸ்ஸர் சைன் பண்ணுனாத்தான் சாங்க்‌ஷன் ஆகுமாம்..அதனால அவர் கூடவும் ஒரு டைம் மட்டும் ....அட்ஜஸ் பண்ணச்சொன்னார்.. முடியவே முடியாதுன்னு சாதிச்சேன்.. அழுதேன்.. அம்மா அப்பாவுக்கு தகவல் சொல்லலாம்னு ட்ரை பண்ணேன், என்னை ஹவுஸ் அரெஸ்ட் மாதிரி வெச்சுட்டாரு. மாமனார், மாமியார் 2 பேரும் அவருக்கு உடந்தை, யாரோ ஒருத்தர் என்னை கண்காணிக்க என் கூடவே இருக்க ஆரம்பிச்சாங்க..


கரப்பான் பூச்சி மேல விழுந்தா, பல்லி மேல பட்டா எப்படி அருவெறுப்பா இருக்க்குமோ அது மாதிரி எனக்கு இருந்துச்சு , இன்சூரன்ஸ் ஆஃபீசர் கூட இருக்கறப்ப.. அப்புறம் பழகிடுச்சு.. என்னை கால் கேர்ளா யூஸ் பண்ண ஆரம்பிச்சுட்டாங்க.. நல்லா சம்பாதிக்க ஆரம்பிச்சுட்டாங்க..பணம் இல்லாதவந்தான் பணத்து மேல ஆசைப்படனும்.. இருக்கறவங்க மேலும் மேலும் சேர்க்க வெறி எடுத்துப்போய் அலையறாங்க..

ஆரம்பத்துல நான் பணத்தை பற்றி கவலைப்படல.. அப்புறம் என் குடும்பத்துக்காக தங்கை, பெற்றோருக்காக பணம் சேர்த்த ஆரம்பிச்சேன்.. முதல்ல அவங்க ஒத்துக்கலை, நான் ஒத்துழையாமை, உடன்படாத தன்மை எல்லாம் யூஸ் பண்ணி சம்மதிக்க வெச்சேன்.. 8 வருஷம் இப்படியே போச்சு..


அப்போதான் விஷ்ணுவை சந்திச்சேன்.. மத்தவங்க எல்லாம் வந்த வேலை முடிஞ்சதும் கிளம்பிடுவாங்க.. இவர் மட்டும் தான் என்ன் மேல கேர் எடுத்து என்னை பற்றி  பேசுவார்.. விசாரிப்பார்.. அவர் கிட்டே எல்லா மேட்டரையும் சொன்னேன்.. சட்டப்படி இவங்களை சிக்க வைக்க என்ன வழி?ன்னு கேட்டேன்.. அவர் ஒரு வீடியோ கேமரா கொடுத்தாரு.. (அதுக்கு பணம் வாங்கிக்கிட்டாரு)அது மூலமா கணவர், மாமனார் நடவடிக்கைகள், சித்ரவதைகளை படம் பிடிச்சு ஆதரமா சிடி ல காப்பி பண்ணி வைக்க சொன்னார்..

நான் என் வீட்டு பெட்ரூம்ல அதை ஃபிக்ஸ் பண்ணி அவர் ஐடியா படியே செஞ்சேன்.. ரகு என்னை அடிக்கறது,கட்டாயப்படுத்தறது, மாமனார் என்னை நாசம் பண்றது எல்லாம்.அந்த வீடியோவை என் பீரோ லாக்கர்ல  ஒரு பாக்ஸ்ல  போட்டு வெச்சிருக்கேன்.. என்னையும் அறியாம நான் இந்த ஆடம்பர வாழ்க்கைக்கும், கால்கேர்ள் லைஃப்க்கும் அடிமை ஆகிட்டேன்..எனக்கு இவங்களால ஆபத்து ஏற்படும்வரை லைஃபை அனுபவிப்பது,ஏதாவது பிரச்சனை வர்றப்ப போலீஸ்க்கு போலாம்னு முடிவு செஞ்சேன்..சரியான சமயம் பார்த்து 2 பேரையும் சட்டத்தின் பிடியில் சிக்க வைக்கனும்..னு பிளான் பண்ணி வெச்சிருக்கேன்

ரகுவின் டைரியிலிருந்து

ப்ரீத்தி முன்னே மாதிரி இல்லை. ஏதோ தப்பு பண்றா.. கண்காணிக்கனும்.. ரெகுலரா வர்ற கஸ்டமர் சொன்னதுல இருந்து ஒரு டவுட்.. அவளை பெருந்துறை சேனிட்டோரியம் கூட்டிட்டுப்போய் மெடிக்கல் செக்கப் பண்ணுனதுல கன்ஃபர்ம் ஆகிடுச்சு.. அவளுக்கு எய்ட்ஸ்.. 6 மாசமா இருக்காம்.. பாவம், எத்தனை பேருக்கு பரப்புனாளோ, நல்ல வேளை.. அப்பா 10 மாசமா அவளை தொடறதில்லை.. இனி ஜாக்கிரதையா இருக்கனும்.. அவ தங்கை பெங்களூர்ல தான் இருக்கா.. அவளை 2 வருஷமாவே அப்பப்ப போய் ப்ரீத்திக்குத்தெரியாம பார்த்து கரெக்ட் பண்ணி வெச்சிருக்கேன்..அவளை கல்யாணம் பண்ணி கூட்டிட்டு வந்துடனும்.. ப்ரீத்தி பண்ணிட்டிருந்த ரோலை  இனி அவ செய்வா..

தேவியின் டைரியிலிருந்து

அக்கா வீட்டுக்காரர் அக்காவைப்பற்றி சொன்னப்ப என்னால நம்ப முடியல.. ஆனா அவர் காட்டின ஃபோட்டோ ஆதாரங்கள் நம்ப வைக்குது.. ஆனா மாமா ரொம்ப அமைதி டைப்.. இவ்வளவு பொறுமையா இருக்கார்.. தான் ஆண்மை இல்லாதவர்ங்கறதை எந்த ஆணும் வெளில சொல்ல மாட்டான்.. இவர் சொல்லிட்டார்.. லைஃப்ல அந்த ஒண்ணுதானா?அந்த ஒரு சுகத்துக்காக அக்கா தடம் மாறுனது தப்பு.. பாவம் மாமா, அன்புக்கு ஏங்கறார்


முதல்ல என் கிட்டே அவர் அப்ரோச் பண்னப்ப எனக்கு தயக்கமாதான் இருந்துச்சு.. சொத்து, வசதி எல்லாம் பார்த்து ஓக்கே சொல்லிட்டேன்.. அம்மா, அப்பா, அக்காவுக்கு மேட்டர் தெரியாது.. அவர் பெங்களூர்லயே ஒரு கோயில்ல  தாலி கட்டி கோவை கூட்டிட்டுப்போயிட்டார்.. என்னை பார்த்ததும் அக்காவுக்கு அதிர்ச்சி.. அடிப்பாவி, மோசம் பண்ணிட்டியேன்னு கதறுனா.. பொறாமை போல.. அவ மேட்டர் எனக்கு தெரிஞ்சதா காட்டிக்கலை.. அழுது ஆர்ப்பாட்டம் பண்ணுனா.. உனக்காகத்தாண்டி இவ்வளவு கஷ்டப்பட்டேன், இப்படி பண்ணீட்டியே பாவி அப்டினு அழுதா.. எனக்கு அவ மேல பரிதாபமாவும் இருந்துச்சு,, கஷ்டமாவும் இருந்துச்சு..

நான் போன அன்னைக்கு அடுத்த நாள் காலைல அவ தூக்குபோட்டு இறந்துட்டதா ரகு சொன்னாரு.. நான் அந்த கோலத்தை பார்க்கலை.. ஆனா ரூம்ல  அக்காவை படுக்க வெச்சிருந்தாங்க,பக்கத்துல அவ தூக்கு போட்டதா சொல்லப்பட்ட சேலை இருந்துச்சு. ஏதோ மர்மம் என்னை சுத்தி நடக்குதுன்னு தெரிஞ்சிடுச்சு, அம்மா, அப்பாவுக்கு தகவல் சொல்லிட்டு அவங்க வராததுக்கு முன்னேயே அவசர அவசரமா கொண்டு போய் எரிச்சுட்டாங்க..




விஷ்ணுவின் டைரியிலிருந்து


ப்ரீத்தி நான் சொல்லிக்குடுத்த படியே எல்லாம் செஞ்சா.. எல்லா ஆதாரங்களையும் சி டி ல காப்பி பண்ணி எனக்கு அனுப்பச்சொன்னேன். அவ அது போல் செய்யலை.. அவ ஒரு சி டி ல எல்லாத்தையும் ஸ்டோர் பண்ணி  லாக்கர்ல போட்டு வெச்சிருக்களாம்..அந்த லாக்கர் திறக்க என்ன குறியீடுன்னு என் கிட்ட சொல்லிட்டா... ..அவளுக்கு எதாவது ஆபத்துன்னா மட்டும் அதை எடுக்கறதாம்..



திடீர்னு அவ சூசயிட் செஞ்ச மேட்டர் எனக்கு தெரிஞ்சுது.. எந்த பேப்பர்லயும் வர்ல.. தினமும் என்னை அவ காண்டாக்ட் பண்ணுவா.. 9 நாளா நோ காண்டாக்ட்.. டவுட் ஆகி ஒரு கஸ்டமரா அவ வேணும்னு கேட்டப்ப அவ இறந்துட்டதா ரகு சொன்னான்..



என் குறுக்கு புத்தி வேலை செஞ்சது.. வீட்டுக்கு வந்து யோசனை செஞ்சேன்.. கைல கிடைச்சிருக்கற மேட்டர் ரொம்ப பவர் ஃபுல்.. அதை வெச்சு சம்பாதிக்கனும்னு முடிவு செஞ்சேன்..  ரகுவுக்கு ஃபோன் போட்டேன்.. மேட்டரை சொன்னேன்.. அவர் மனசுக்குள்ள பதட்டம் அடைஞ்சு இருப்பார் , ஆனா வெளில காட்டிக்கலை.. 10 லட்சம் டிமாண்ட் பண்ணுனேன்.. ரொம்ப ஓவர் ரேட்னார்.. நீங்க செஞ்சது கொலை, பாலியல் அத்து மீறல், வலுக்கட்டாயமா விபச்சாரத்துக்கு தூண்டுனது, ஆண்மை இல்லைங்கறதை மறைச்சு மேரேஜ் செஞ்சது, எல்லாத்துக்கும் தனி தனி கேஸ் போட்டா நீ ங்க ஜென்மத்துக்கும் உள்ளே களி தான் சாப்பிடனும்னேன்.. S.P  கோகுல்ட்ட எல்லாத்தையும் சொல்லிடவா?ன்னு மிரட்னேன்..நான் ஒரு போலீஸ் இன்ஃபார்மர்னு சொன்னேன், ஃபோனை கட் பண்ணிட்டார்..


அவரை  மிரட்ட, பணிய வைக்க S P  கோகுல்ட்ட புகார் கொடுத்த மாதிரி டம்மியா புகார் கொடுப்போம், அதை வெச்சு விசாரனை , கேஸ்னு அலைஞ்சாத்தான் அவருக்கு பயம் வரும்னு முடிவு செஞ்சேன்.. கோகுல்க்கு ஃபோன் போட்டேன், எல்லா மேட்டரும் சொன்னேன்.. . அந்த லாக்கரை திறப்பதற்கான குறியீடு   சொன்னால் மிஸ் ஆக வாய்ப்பு உள்ளது என்பதால் sms  அனுப்பச்சொன்னார்.. அனுப்பினேன்





Mr.கோகுல் ,

S W 62 HF - இதுதான் குறியீடு. கவனமாக.. .
- விஷ்ணு



நேர்ல வரச்சொன்னார், போனேன்.. எழுத்துப்பூர்வமா புகார் எழுதி த்தரச்சொன்னார், எழுதி கொடுத்தேன்..


ரகுவுக்கு போலீஸ் என்கொயரி நடந்தது.. கைது ஆனார்.. கேசில் அடிப்படை முகாந்திரம் இருந்ப்தால் 15 நாட்கள் போலீஸ் கஸ்டடியில் வைத்து விசாரிக்க கோர்ட் ஆணை இட்டது..


ஜாமீனில் வெளியே வந்தார் ரகு.. என்னை ஃபோனில் தொடர்பு கொண்டார்.. கட் செய்தேன்.. நாளை என்கொயரியில்  யார் யாரிடம் பேசினேன் என்பது தெரிஞ்சிடுமே.. அதனால் SMS அனுப்பினேன்.


Sir,

எஸ்.பி ,கோகுலிடம் நான் தவறான குறியீடைதான் கொடுத்திருக்கிறேன் .
கவலை வேண்டாம்."
-விஷ்ணு



S.P கோகுலின் டைரியிலிருந்து


விஷ்ணு வழக்கம் போல் இல்லை.. படபடப்பாக இருந்தான்.. பிரீத்தி கொலை கேஸில் ஏதோ டபுள் கேம் ஆடப்போறான்னு எனக்கு மனசுக்குள்ள ஒரு பட்சி சொல்லுச்சு.. அவனை கண்காணிக்க ஆள் போட்டேன்.அவன் சமீப காலமா யார் யாரிடம் எல்லாம் ஃபோன்ல பேசுனான்னு செல் ஃபோன் கம்ப்பெனிக்கு என்கொயரி பண்ணி பார்த்தேன் , சில துப்பு கிடைச்சுது.அவன் SMS, MMS  எல்லாத்தையும் பார்த்தேன் ,அதுல டவுட்டா தெரிஞ்ச சில  மெசேஜ் மட்டும் பிரிண்ட் அவுட் எடுக்கச்சொன்னேன்..



Mr.கோகுல் ,

S W 62 HF - இதுதான் குறியீடு. கவனமாக.. .
- விஷ்ணு



Sir,

எஸ்.பி ,கோகுலிடம் நான் தவறான குறியீடைதான் கொடுத்திருக்கிறேன் .
கவலை வேண்டாம்."
-விஷ்ணு



மாட்னான்.. நம்ம கிட்டேயே டபுள் கேம் ஆடறானா? என யோசிக்கும்போதே அவன் கிட்டே இருந்து கால் வந்தது..



சார். நான் டேஞ்சர்ல இருக்கேன்...எல்லா விபரமும் அப்புறம் சொல்றேன்.. உடனே  மருத மலை  உச்சிக்கு வாங்க..நான் உயிருக்கு ஆபத்தான நிலைல இருக்கேன்


உடனே ஜீப்பில் மருதமலை போனேன்.. அவனை ஷூட் பண்ணிட்டு ரகு எஸ் ஆகிட்டான்.. அவனை ஹாஸ்பிடல்ல சேர்த்தேன்.. ஒரிஜினல் குறியீட்டை விஷ்ணு கிட்டே வாங்கி பிரீத்தி வீட்ல போய் அவங்க பீரோ லாக்கர் ஓப்பன் பண்ணி ஆதார சி டி  எடுத்துக்கிட்டேன்..



ரகு, தன் அப்பா, அம்மா, குழந்தைகள் உடன் ஃபிரான்ஸ் போய்ட்டான்..இண்ட்டர்போல்க்கு தகவல் சொன்னேன்...


ஃபிரான்ஸ்  கிருபாவதியின் டைரியிலிருந்து

பழகுன அடுத்த நாளே கிஸ் கேட்கற பல பாய் ஃபிரண்ட்ஸ்களுக்கு  நடுவே ரகு எனக்கு வித்தியாசமா தெரிஞ்சார்.. ரொம்ப டீசண்ட்... என்னை மேரேஜ் பண்ணிக்க ஆசைப்படறதா சொன்னதும் யோசிக்காம அதுக்குன்னே காத்துக்கிடந்தது போல் ஓக்கே சொல்லிட்டேன்...



59 comments:

தமிழ்வாசி பிரகாஷ் said...

அண்ணே, காலையில ஆட்டம் ஆரம்பிச்சாச்சா....

தமிழ்வாசி பிரகாஷ் said...

கதை நல்லா இருக்கு....

Unknown said...

கதை நகரும் விதம் அருமை! இன்னொரு சுஜாதா ஆக பரிணமிக்க வாழ்த்துக்கள்!

K.s.s.Rajh said...

அட அட என்னாமா கதையை நகர்த்தி சென்று இருக்கீங்க.....உங்கள் கதையாக்கம் சூப்பர்........

ராஜி said...

தர்மம் ஜெயிக்குமா?

உலக சினிமா ரசிகன் said...

எழுத்தாளர் சுஜாதா மறையவில்லை.
இந்தக்கதையில்...உங்கள் எழுத்தில்...கதையை வடிவமைத்ததில் வாழ்கிறார்.

Unknown said...

அடப்பாவமே மக்கள் இவ்ளோ அப்பாவியா இருக்காங்களே...இது கதையல்ல நிஜம்னு சொல்லேன்யா!

Unknown said...

கலக்கல்ஸ் தம்பி! :-)

Unknown said...

சூப்பர்
"ALL THE BEST"

வெளங்காதவன்™ said...

:(

இராஜராஜேஸ்வரி said...
This comment has been removed by the author.
வைகை said...

@ சிபி
இது உண்மைக்கதையா? இல்லை கதையா? பட் கதை நல்லா இருக்கு...:))

Chitra said...

இனிய தீபாவளி திருநாள் நல்வாழ்த்துக்கள்!

Mohamed Faaique said...

கதை அப்டியே என்னை கட்டிப் போட்டிடுச்சு...

rajamelaiyur said...

அருமையான கதை

rajamelaiyur said...

கலக்கிடிங்க

rajamelaiyur said...

தீபாவளி வாழ்த்துகள்


இன்று என் வலையில்

விஜய் Vs சூர்யா : ஜெய்க்கபோவது யார்?

Thirumalai Kandasami said...

உண்மையா,பொய்யா என்று எனக்கு தெரியாது.கதை எனக்கு பிடிக்கவில்லை..எழுத்து நடையில்,இறுதியில் தொய்வு அடைந்த மாதிரி தெரிகிறது..வெற்றி பெற வாழ்த்துக்கள்.

நிரூபன் said...

இனிய காலை வணக்கம் பாஸ்,

கதையினைப் படித்து விட்டு, விரிவான கருத்துரையோடு வருகிறேன்.

இன்னைக்கு மாட்டினீங்க;-)))

IlayaDhasan said...

கதை நன்று. வாழ்த்துக்கள்!

அடுத்தவனுக்கு உதவினால் தப்பா?

shanthi said...

எல்லா கதைமாந்தர்களின் dimensionஇலும் சொல்லப்பட்டுள்ள விறுவிறுப்பான கதை .வாழ்த்துகள்:-)

சி.பி.செந்தில்குமார் said...

@வைகை

உண்மை சம்பவம், க்ளைமாக்ஸ் மட்டும் கற்பனை

சி.பி.செந்தில்குமார் said...

@Thirumalai Kandasami

உண்மைதான், உண்மைக்கதையில் இன்னும் சில சம்பவங்கள் இருக்கின்றன,. போட்டியின் விதியின் படி அளவு கூடும் என்பதால் எடிட்டிங்க்கில் அவை கட் ஆகி விட்டது

செங்கோவி said...

கலக்கல்..சிறுகதையிலேயே வாண்டேஜ் பாயிண்ட் டச் கொண்டு வந்துட்டீங்களே!

MANO நாஞ்சில் மனோ said...

யோவ் அவன் உண்மை கதைன்னு சொல்லிட்டு இருக்கான், நீங்க கதை நகர்கிறது, பறக்கிற விதம் சூப்பர்னு கமெண்ட்ஸ் போட்டுருக்கீங்க ஹா ஹா ஹா ஹா ஆக ஒருத்தரும் உண்மையா வாசிக்கலையா..??? பாவம் சிபி...!!!

MANO நாஞ்சில் மனோ said...

ஏழை என்றால் சிலபேருக்கு இளக்காரம்தான், நீ கடைசியில் சேர்த்த கற்பனை உண்மையாக இருக்கவேண்டும்னு மனசு தவிக்குது...

நிரூபன் said...

சிறுகதை சொல்லும் நடையினை நீங்கள் இக் கதையில் கொடுக்கலை. தொடர்ச்சியாக ஒரு சம்பவத்தை கதாசிரியர் சொல்லியிருக்காரே அன்றி கதையினை நகர்த்தும் போது கதை சொல்லும் திறன், பாத்திரங்கள் ஒவ்வொன்றும் உரையாடும் தன்மை ஆகியவற்றில் கூடிய கவனம் செலுத்த தவறி விட்டார். மொபைலில் டைப் பண்ண கஸ்டமா இருக்கு.

நிரூபன் said...

சிறுகதையாக இச் சம்பவத்தைச் சொல்லும் போது விவரணப் பிரிப்பை நீக்கி கோர்வையாக இக் கதையினை முழு மூச்சில் சொல்லியிருந்தால் சிறப்பாக இருக்கும். ப்ரீதி, தேவி, ரகு போன்ற பாத்திரங்கள் பேசும் போது, அவை பேசுவது போன்று நீங்கள் கதையை ரியாலிட்டி சேர்த்து நகர்த்தியிருக்கலாம். ஆனால் இங்கே நீங்களே அப் பாத்திரங்கள் ஊடாக பேச முனைந்திருப்பது கதை நகர்விற்கு இடையூறாக உள்ளது.

settaikkaran said...

தல, விறுவிறுன்னு பரபரப்பா எழுதியிருக்கீங்க!

செல்ல நாய்க்குட்டி மனசு said...

முடிவு எனக்கு ரொம்ப பிடித்து இருந்தது. கதை முடிந்து விட்டதால் அல்ல...பரிசு பெற வாழ்த்துக்கள். உஷாரா இருக்கணும் போல இருக்கே. போட்டியில் இன்னும் ஒரு சிறுகதை எழுத்தாளர்.

பன்னிக்குட்டி ராம்சாமி said...

கதை நல்லாருக்கு...... இன்னும் கொஞ்சம் டெவலப் பண்ணி இருக்கலாம்........ வாழ்த்துக்கள்...!

ஷைலஜா said...

வாழ்த்துகள்...விறுவிறுப்பு கதையில்!!

சசிகுமார் said...

வாழ்த்துக்கள் மாப்ள கதை சூப்பர்..

மாலதி said...

உண்மைக்கதை படிக்கிறமாதிரி நல்ல கதை அமைப்பு பாராட்டுகள்

'பரிவை' சே.குமார் said...

super...

இனிய தீபாவளி வாழ்த்துக்கள் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும்...

Astrologer sathishkumar Erode said...

சரி..போட்டிக்கு அனுப்பிச்ச கதையா.ரிசல்ட்டு வரும் முன்னாடியே பிரசுரிச்சிட்டீங்க..?

ஹேமா said...

தெரிந்த ஒரு சம்பவத்தை அழகாகக் கதையாகத் தொகுத்திருப்பது அருமை.கஸ்டமான விஷயம்.
வெற்றிக்கு வாழ்த்துகள் சிபி !

RAMA RAVI (RAMVI) said...

தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

Anonymous said...

உண்மை சம்பவம் - அதை மாத்தாமல் விட்டது நல்லது...

க்ளைமாக்ஸ் - உங்க டச் இருக்கு...

M.R said...

கதை நல்லா இருக்கு நண்பரே

தீபாவளி நல் வாழ்த்துக்கள்

அம்பாளடியாள் said...

உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் என்
இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள் சார் .......

Angel said...

தீபாவளி நல் வாழ்த்துக்கள்

Angel said...

உண்மை சம்பவமா .எத்தனை பலி ஆடுகள் .வருத்தமா இருக்கு .
அழகா கோர்வையா எழுதியிருக்கீங்க .போட்டியில் வெற்றிபெற வாழ்த்துக்கள்

Unknown said...

ஹ்ம் கதை நல்லா இருக்கு..தீபாவளி நல்வாழ்த்துக்கள்:)

RAMA RAVI (RAMVI) said...

கதை நன்றாக எழுதியிருக்கீங்க.

உண்மை சம்பவம் என்று சொல்லியிருப்பதால் ரகுவின் மேல் ரொம்ப கோபம் வருகிறது.

ஃபிரான்சிலும் ரகுவின் திருவிளையாடல் தொடர்கிறதா?

தேவி என்ன ஆனாள்?

Jaganathan Kandasamy said...

இனிய தீபாவளி திருநாள் நல்வாழ்த்துக்கள்

உங்க டச்

வெற்றி பெற வாழ்த்துக்கள்

தர்ஷன் said...

கொஞ்சம் சுஜாதாவின் காயத்ரி மாதிரி இருக்கோ
சலிப்பூட்டாத நடை வெற்றி பெற வாழ்த்துக்கள்

vetha (kovaikkavi) said...

இனிய தீபாவளி திருநாள் நல்வாழ்த்துக்கள்.என் கதையுள் ஆங்கில எழுத்துகள் எனக்மு ஒண்ணுமே புரியவில்லை.

வேதா. இலங்காதிலகம்.
http://www.kovaikkavi.wordpress.com

Sen22 said...

கதை நல்லா இருந்தது பாஸ்... வாழ்த்துக்கள்...

மாய உலகம் said...

கதையில் நல்ல ஒரு பரபரப்பு இருக்கிறது... இன்னும் இது போல் என்னனவெல்லாம் நாட்டில் நடக்கிறதோ... கதை அருமை சகோ!

தங்களுக்கும், தங்களது குடும்பத்துக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் சகோ!.. சந்தோசமும் வளமும் பெருகட்டும்...

SURYAJEEVA said...

shots மாறி மாறி வந்தது அருமையாக கதையை நகர்த்த உதவியது... எடிட்டிங் சூப்பர்.. கிளைமாக்ஸ் நச்... எல்லா கதையும் உண்மை கதை தான் பாஸ்.. கொஞ்சம் கற்பனை கலந்திருக்கும் அவ்வளவு தான்...

KUTTI said...

your writing style is very good in this story.

bigilu said...

வாழ்த்துக்கள் அண்ணே.. விழிப்புணர்வு கதையாக இருந்தது...

நம்பிக்கைபாண்டியன் said...

கதை சூப்பர், மூன்றாமிடம் பிடித்து வெற்றி பெற்றதற்கு வாழ்த்துக்கள்!

IlayaDhasan said...

Congrats sir!

F.NIHAZA said...

வெற்றிக்கு வாழ்த்துக்கள் சகோ....
மிக்க சந்தோஷமா இருக்கு....
கதையும் அருமை....

Asiya Omar said...

வாழ்த்துக்கள்.

Unknown said...

யுடான்ஸில் 3ம் பரிசு பெற்றதுக்கு வாழ்த்துக்கள் சகோ.............

மாய உலகம் said...

உடான்ஸ்ல் பரிசு பெற்றமைக்கு வாழ்த்துக்கள் சகோ!