Wednesday, October 05, 2011

வேலூர் மாவட்டம் - போலீஸ் ஸ்டோரி வித் சந்தானம் காமெடி - சினிமா விமர்சனம்

http://www.viparam.com/cinema/thumbnail.php?file=vellore_mavattam_movie_posters_451126400.jpg&size=article_medium 

கோடம்பாக்கம் கண்டு கொள்ளாமல் இருக்கும் ஒரு நல்ல நடிகர் நந்தா.திறமைசாலிகள் பலர் வாய்ப்புக்கிடைத்தும் சரியான வெற்றி கிடைக்காமல் தள்ளாடுகின்றனர்,அங்கீகாரம் கிடைக்காமல் அல்லாடுகின்றனர்,அப்படிப்பட்ட ஒரு திறமையான நடிகருக்கு கிடைத்திருக்கும் ஆறுதல் வெற்றிதான் வேலூர் மாவட்டம்.. 

சாதாரண மார்க்கெட் வியாபாரியான தந்தை தன் மகனை ஒரு ஐ ஏ எஸ் ஆஃபீசர் ஆக்க நினைக்கிறார்.. அது ஹேர் இழையில் தப்பி ஐ பி எஸ் ஆஃபீசர் ஆகும் வாய்ப்பு.. அவர் வேலூர் மாவட்டத்தில் பொறுப்பேற்று அந்த ஊரில் இருக்கின்ற லஞ்ச லாவண்யங்களை, தாதாக்களை, அரசியல் தலைகளை பலத்த எதிர்ப்புகளுக்கிடையே ஒழிக்கும் மாமூல்( இல்லாத , வாங்காத) போலீஸ் ஆக்‌ஷன் ஸ்டோரிதான்..

நந்தாவின் கம்பீரமான நடிப்புக்கு போலீஸ் யூனிஃபார்ம் ரொம்பவே கை கொடுக்கிறது. இதுதாண்டா போலீஸ், சிங்கம் ,சாமி, என பலதரப்பட்ட போலீஸ் ஆஃபீசர்ஸ் பார்த்து சலித்தாலும் நந்தாவின் நடிப்பால் கொஞ்சம் சலிக்காமல் போகிறது படம்...

அவருக்கு ஜோடி பூரணா... பார்ட்டி சுமாரான ஃபிகர் தான்.. வாய்ப்பு ரொம்ப கம்மி ( படத்துலப்பா... ) 2 டூயட் சீன் இருக்கு.. 

சந்தானம் போலீஸ் ஜீப் டிரைவராக வந்து சீரியஸான கதையில் கொஞ்சம் ரிலாக்ஸ் பண்ணுகிறார்.. நித்யானந்தா கெட்டப் அவருக்கு செம மாட்ச்.. அந்த சீனை இன்னும் நல்லா டெவலப் பண்ணி இருக்கலாம்.. 


அழகம்பெருமாளின் வில்லன் நடிப்பு பாந்தம்.. ஆர்ப்பாட்டம் இல்லாமல் அமைதியான வில்லனிக் ஆக்‌ஷன் குட்.. அவருக்கு பாஸாக வரும் வில்லன் ப சிதம்பரம் மாதிரி கெட்டப்பில் வர்றார்.. இயக்குநருக்கு அவர் மேல் என்ன கோபமோ.. 
http://www.cinemaexpress.com/Images/article/2011/9/21/newrelease2.jpg
படத்தில் மனம் கவர்ந்த வசனங்கள்

1. நம்ம குடும்பத்துல எல்லோருமே சுமையை தூக்கித்தான் பழக்கம், முதன் முதலா என் சுமையை ஒருத்தர் தூக்கிட்டு வர்றார்.. 


2. ஏன் சார்.? முன்னே பின்னே அறிமுகம் இல்லாத பொண்ணு ஃபோன் நெம்பர்  கேக்குதே, ஏன்? எதுக்குன்னு கேட்க மாட்டீங்களா?

ஏன்? எதுக்கு?

3. இந்தா பாருடி. இந்தாளைப்பார்த்தா கேணை மாதிரி இருக்கு. உன் ஆளை கண்டு பிடிக்க இவனை  யூஸ் பண்ணிக்க... 

4.  எனக்கு இலக்கியம் தெரியாது.. இசைல பிரமாதமா எதுவும் தெரியாது.. உன்னை மாதிரி கல கலன்னு பேசுற பொண்ணை பிடிக்கும், ஆனா எனக்கு அப்டி பேசத்தெரியாது.. உனக்கு ஓக்கேவா?

5.  சந்தானம் - ஏண்பா, ரவுடிங்க பேரைக்கேட்டா என்னமோ தாய்மாமன் பேரை சொல்ற மாதிரி டக் டக்னு சொல்றீங்க, போலீஸ் ஆஃபீசர் பேர் கேட்டா மட்டும் பம்பறீங்களே?என்னமோ சயின்ஸ்ல இருந்து கேள்வி கேட்ட மாதிரி...

6. சந்தானம் - அப்பா, நீ எதுக்கு ஹாஸ்பிடல்ல்ல வந்து அங்க பிரதட்சணம் பண்ண பம்பறேன்னு கண்டு பிடிச்சுட்டேன், நர்சுங்க எல்லாம் குட்டைப்பாவாடை போட்டிருக்காங்க. வாகா படுத்துக்கிட்டு நோகாம சீன் பார்க்க பிளான் பண்றே? பிச்சுப்புடுவேன் பிச்சு..

7. சந்தானம் -   ஹார்ட் ஆபரேஷன் பண்ற டாக்டர்க்கே ஹார்ட் அட்டாக்கா?

8.  அவர் என்ன கேட்டாரு இப்போ உங்களை?

அடுத்த குழந்தை எப்போ பெத்துக்கலாம்னு?

அடேய்.. இப்போத்தானேடா ஒரு குழந்தை பெத்தே? டே அப்பா!!!

9.  பக்கத்துவீட்டுக்காரனை பார்த்தியா? ஜாலியா அவன் சம்சாரத்தை கூட்டிட்டு வெளில கிளம்பறான். எனக்கும் அந்த மாதிரி ஆசை இருக்காதா?

சந்தானம் -அவன் பொண்டாட்டியை எதுக்கு நீ கூட்டிட்டு போக ஆசைப்படறே?  ( குமுதம் ஜோக் ரிட்டர்ன் பை வலங்கைமான் நூர்தீன் 1997)

10.  என்னப்பா? இது? எல்லா லாரிகளுக்கும் ஒரே ரெஜிஸ்ட்ரேஷன் நெம்பர்?

ட்வின்ஸ், த்ரின்ஸ் குழந்தைங்க பிறந்தா பார்க்க ஒரே மாதிரி இருக்கறதில்லையா? அது போல..
http://cinema.vikatan.com/index.php?view=image&format=raw&type=img&id=11643&option=com_joomgallery&Itemid=77
11. சந்தானம் - இவனை எல்லாம் யார் மிரட்டப்போறாங்க? நான் நினைக்கறேன், கண்ணாடியைப்பார்த்து இவனே மிரட்டி இருப்பான்.. 

12. பரம்பரைப்பணக்காரங்க நிறையப்பேர் என் கிட்டே கை கட்டி சேவகம் பண்ணத்தயாரா  இருக்காங்க. பாவம் நீ பஞ்சம் பிழைக்க வந்தவன் தானே?

13.  ரிசைன் பண்ணறோமேன்னு மனசுக்கு கஷ்டமா இருக்கா?

இல்லை, நிம்மதியா இருக்கு.. 

14. யோவ்,, போலீஸ் வேலை தங்க முட்டை இடற வாத்து மாதிரி.. 

15. சந்தானம் - எல்லோரும் பொறுக்கி சாப்பிடறாங்க.. நீ மட்டும் தான்யா சாப்பிட்டுட்டு அப்புறம் பொறுக்கறே.. 

16.  சந்தானம் - யார் இவன்? பார்க்க பொம்பள புரோக்கர் மாதிரி இருக்கான்?
17. சந்தானம் - பொண்ணு பார்க்க வழக்கமா கோயிலுக்குத்தானே வரச்சொல்வாங்க? ஏன் வேன்?

18. சந்தானம் - நீ சொல்றதை கேட்கறோம், கொட்டாவி விட்டவன் வாய்ல திருப்பதி லட்டு போட்ட மாதிரி....

19 லேடி - எதுவா இருந்தாலும் பெட் 1 தலகாணி 2 என பேசுபவ நான்

சந்தானம் - வெட்டு 1 துண்டு 2 தானே நான் கேள்விப்பட்டிருக்கேன்.. இது புதுசா இருக்கே?

சரி.. எனக்கு மாசம் ரூ 15,000 தான் சம்பளம் உனக்கு ஓக்கேவா?

லேடி - எனக்கு ரூ 3000 குடுங்க போதும்...

20. சிஷ்யன் - சுவாமி! காமத்தை அடக்குவது எப்படி?

சந்தானம் - உன் கையால தான்

சாமி!!!!!!

 https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgdhVUyKS0-tJItjazG1ULy3yfHHc-eZwOqtG_TfrBjZwcxgpYnHakbeJjMA3-lx2wvN0TpEELTP55sqtMEEgoic0JoI2Wr8hy4xg1K1ceJ2bZVeXrdxx4WgO8we3vb6dUIToZpmeC_Y7ZC/s1600/Poorna-hot-stills+%25284%2529.jpg

21.  என்னை கடத்திட்டு வந்தது குரு மூர்த்திக்கு தெரிஞ்சா உங்க நிலைமை அவ்வளவுதான்....


சந்தானம் - உன்னை கடத்திட்டு வந்தது உனக்கே இப்போதான் தெரியும். அதுக்குள்ள அவனுக்கு எப்படி தெரியும்?

22.  உள்ளே யாரையும் அலோ பண்ணக்கூடாதுன்னு மேடம் சொல்லி இருக்காங்க.. 

நாங்க உள்ளே போறதே மேடத்தை உள்ளே தள்ளத்தான், நீயும் வேணா கூட வா!!

23. சந்தானம் - டேய் , என்ன பிரச்சனை இங்கே?

உங்கப்பனையே கேளு..

சந்தானம் -அப்பா, என்ண்டா பிரச்சனை?

அவனையே கேளு..

சந்தானம் -என்ன பிரச்சனைன்னு கேட்டா அதை சொல்லாம ஏண்டா பிரச்சனை பண்றீங்க?

24. நான் வெளீல இருக்கேன்.. அப்புறம் பேசறேன்.. உன் கிட்டே..

இனிமே உள்ளேதான் போகப்போறீங்க!!

25.  சில நேரங்கள்ல உண்மையை விட பொய்க்கு மதிப்பு ஜாஸ்தி.. 

26. மறதின்னு ஒண்ணு இல்லைன்னா அரசியலே பண்ண முடியாது.. 


http://www.indiancinemagallery.com/Gallery2/main.php?g2_view=core.DownloadItem&g2_itemId=131858&g2_serialNumber=1

இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள்

1.  வழக்கமான போலீஸ் கதை எடுத்தாலும் திரைக்கதையில் விறு விறுப்பு ஏற்றி டெம்போவுடன் படத்தை போர் அடிக்காமல் கொண்டு சென்றது.. 


2. ஹீரோவாக நந்தாவை , வில்லனாக அழகம்பெருமாளை தேர்வு செய்தது..


3.சந்தானம் கேரக்டரை டெவலப் செய்து படத்தோட ஒன்றி வருவது போல் செய்தது..

4. போலீஸ் அரெஸ்ட், ரெய்டு , சேசிங்க் சமந்தப்பட்ட காட்சிகளில் பின்னணி இசை...

5. உன்னை உன்னை ஒன்று கேட்பேன் பாடல் நல்ல மெலோடி.. எடுத்த விதம் அழகு


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgWq__SBVZfjTomw4DS6qomE-ECh63zq_6Iy9qec3DRjBuLlSPZs2MBOT-0OGuvUSX8EQ8hY5gDI4ziNQTb9-twap00-TfpXAegzFBZVyE05hB7O9byuJQqn7I8eaUZMdvBRV1lih4Yhpg/s1600/poorna210.jpg
இயக்குநரிடம் சில சந்தேகங்கள், கேள்விகள், ஆலோசனைகள்

1. ஐ பிஎஸ் ஆஃபீசர்க்கான அப்பாயிண்ட்மெண்ட் ஆர்டர் லெட்டர் கூரியர் மூலமாகவோ,ரெஜிஸ்ட்டர் போஸ்ட் மூலமாகவோதான் வரும், ஆனால் சாதா தபாலில் ஹீரோவுக்கு வருது... 

2.  போலீஸ் பெரேட் நடக்கும்போதும், காலையில் ஜாகிங்க் எக்சசைஸ் பண்னும்போதும் யாருக்கும் செல் ஃபோன் நாட் அலோடு.. ஹீரோ மட்டும் செல் ஃபோனில் பேசறாரே? எப்படி?

3. போலீஸ் ட்ரெயினிங்க் நடக்கும்போது 50 மீட்டர் இடை வெளிவிட்டே வெளியாட்கள், அல்லது உறவினர்கள் பார்க்க முடியும், ஹீரோவின் அப்பா மட்டும் பக்கத்துலயே இருந்து பார்க்கறாரே? எப்படி?

4. பேஷண்ட்க்கு ஏதாவது சீரியஸ்னா நர்சுங்கதான் பதட்டமா இருப்பாங்க, இங்கேயும், அங்கேயும் ஓடுவாங்க. இதுல பெரிய டாக்டரே அப்படி பதட்டப்படறாரே? அவர் எப்படி ஆபரேஷன் செய்வார்?

5. ஆபரேஷன் பண்றதுக்கு முன்னாடி பேஷண்ட்டின் நெருங்கிய உறவினரிடன் கையெழுத்து வாங்க நர்ஸோ, அல்லது சின்ன டாக்டரோதான் வருவாங்க, இதுல பெரிய டாக்டரே பேடு, பேப்பர் தூக்கிட்டு பியூன் கணக்கா ஓடறாரே? ஏன்?

6. பஸ்ஸில் ஹீரோ, ஹீரோயின் ஒரே சீட்டில் போகும்போது மயில்சாமி தான் ஹீரோயின் பக்கம் அமர்வதாக ஆசைப்பட்டு கேட்டு ஹீரோயின் அருகே அமர்கிறார்... பின் துக்கம் கலைந்து எழுந்து பார்க்கும் ஹீரோயின் பயந்து மயில்சாமியை பின் சீட்டுக்கு விரட்றார்.. இப்போ நந்தா, பக்கத்துல மயில்சாமி.. ஆனா அடுத்த ஷாட்லயே ஹீரோ ஹீரோயின் பக்கம் இருக்காரு.. எப்டி?

7. ஆஃபீசர்ஸ் அனைவருக்கும் எங்கெங்கே டியூட்டி, எந்த ஊர் என உயர் அதிகாரி வாசிக்கும்போது இரியவர் எழுந்து எஸ் சார் என சொல்லி சல்யூட் வைக்க வேண்டும், ஆனால் எல்லோரும் விருந்துக்கு வந்தவங்க மாதிரி , அப்படியே உக்காந்து இருக்காங்களே? ஏன்?


http://flicksbuzz.com/Assets/Images/Tollywood/Tollywood-CelebPics/Tamil-actress-Poorna-Hot-stills.jpg

8. ஒரு டி எஸ் பிக்கு பதவி ஏற்றுக்கொண்ட 2 மாதங்கள் ஆகியும் தன் உயர் அதிகாரி வீடு தெரியாமல் போகுமா?அவர் எப்படி ஏமாற்றி வில்லனின் வீட்டுக்கு ஹீரோவை தன் வீடு என சொல்லி வர வைப்பார்?

9.  லாரிகள் 3ம் ஒரே ரெஜிஸ்ட்டரேஷன் நெம்பர் என ரெயிடின் போது தெரிகிறது... நந்தா அதை ஃபோட்டோ எடுக்க சொல்றார்... கோர்ட்ல இன்ஸ்பெக்டர் பல்டி சாட்சி அடிக்கறப்ப அந்த ஃபோட்டோ ஆதாரத்தை ஏன் காட்டலை?

10.  ஒரு சீன்ல கமிஷனர் ஆஃபீசர் பார்க்க நந்தாவும் ஜீப் டிரைவஎ சந்தானமும் போறாங்க, அப்போ சந்தானம் டீ வாங்கிட்டு வர்றார்.. டீ வாங்கிட்டு வர கமிஷனர் ஆஃபீஸ்ல உயாரும் இருக்க மாட்டாங்களா?

11.  சின்சியரான போலீஸ் ஆஃபீசரான நந்தா சோகமா இருக்கறப்ப ட்ரிங்க்ஸ் அடிக்கறாரே யூனிஃபார்மலயே? எபடி?

12.  ரிசைன் லெட்டரை கமிஷனரிடம் கொடுத்துட்டு நந்தா ரிட்டர்ன் ஆகறப்ப 3வது செகண்ட்லயே மினிஸ்டரும் , வில்லனுமான அழகம்பெருமாள் பின்னாலயே வந்து ஏன் ரிசைன் பண்ணீட்டிங்க? என கேட்கறாரே? அவருக்கு வேற பொழப்பே இல்லையா? அவ்வலவு குயிக்கா எப்படி வந்தார்?

13.  ஒரு சப் இன்ஸ்பெக்டருக்கு ஒரு மினிஸ்டரை கொலை செய்ய ரூ 20 கோடி ரொம்ப  ஓவர் ரேட்.. ( 2 கோடி போதாதா/)

14. அவ்வலவு முக்கியத்துவம் வாய்ந்த கொலைக்கான ஆதாரம் உள்ள சி டி யை ஒரு காப்பி எடுத்து வெச்சுக்கிட்டு கொடுக்க மாட்டாரா டி எஸ் பி? ( நம்மாளுங்க சாதா த்ரிஷா குளியல் பிட் டி வி டி வந்தப்ப 2 காப்பி பண்ணி வெச்சுக்கிட்டுத்தான் ரிட்டர்ன் தந்தாங்க)

http://www.chitramala.in/photogallery/d/553660-1/poorna-hot-stills.jpg

சாதாரணமா திறந்து இருக்கற கேட் கதவை சந்தானம் மூடி வெச்சு அப்புறம் தன் தலையால இடிச்சு திறப்பதிலிருந்து அவரோட காமெடி களை கட்டுது.. 

தீபாவளி வரை ஏ பி செண்ட்டர்களில் ஓடும்.. சி செண்ட்டர்களில் `10 நாட்கள்

எதிர்பார்க்கப்படும் ஆனந்த விகடன் மார்க் - 40

எதிர்பார்க்கப்படும் குமுதம் ரேங்கிங்க் - ஓக்கே

சி.பி கமெண்ட் - போலீஸ் ஸ்டோரி - ஆக்‌ஷன் ப்ரியர்கள் பார்க்கலாம்

 ஈரோடு ஸ்ரீலட்சுமியில் படம் பார்த்தேன்..

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEifWu2rUWhCWPoP9IiOgEqU-CoE0jv3QSLzXjaKzsVjkYEB8h1OyXNd9XV7_8MDAAGEh-I_84If9jns9Je8pOfXjiDWFFVltlxoexG5amB_h8kEHKtfUt7G7cImHCQZ3k35SRArcR2c2DA/s1600/poorna_latest_new_hot_photos_008.jpg

டிஸ்கி - விமர்சனத்துக்கு சம்பந்தம் இல்லாத ஆனால் சொல்லியே ஆக வேண்டிய ஒரு மேட்டர்.. போஸ்டர் டிசைன் அப்ரூவல் பண்ணுனது யார்? பாடல் ஆசிரியர் தாமரையின் பெயர் தாமாரை என தவறாக பிரிண்ட் ஆகி உள்ளது.. எல்லா ஊர் போஸ்டரிலும்....!!!

31 comments:

நாய் நக்ஸ் said...

தேங்க்ஸ் FOR REVIEW...

கடம்பவன குயில் said...

டிஸ்கி உங்க சமூக அக்கறையை காட்டுது... என்ன அக்கறை???

கடம்பவன குயில் said...

பாடல்கள் ஒன்றுகூடவா குறிப்பிடும்படி இல்லை???.

விரிவான அலசல்.. nice review...

Unknown said...

வேலூர் மாவட்டம் - படத் தலைப்பு விமர்சனத்துல வரவே இல்லையே சிபி ?

கடம்பவன குயில் said...

போலிஸ் பரேடு, டிரெயினிங், ஹாஸ்பிட்டல் நடப்பதெல்லாம் எல்லா கதைகளிலும் படங்களிலும் வரும் தவறுதான்...இதுக்கெல்லாம் லாஜிக் பார்த்தால் நடக்குமா??? நிஜ வாழ்க்கையில் எத்தனை லவ்வர்ஸ் மழையில் நனைந்துகொண்டு ரோட்டில் பாட்டுப்பாடிக்கொண்டு போகிறார்கள்??? சினிமாவில்் மட்டும் மழை சாங்ஸ்ஸை நல்லா...ரசிக்கிறீங்க!!!!

சும்மா சும்மா இயக்குநர்கிட்ட ஒரு கேள்வி பலசந்தேகம்னு கேட்காதீங்க சார்....

நக்கீரன் பரம்பரையா இருப்பீங்க போலயே.....

MANO நாஞ்சில் மனோ said...

அய்யய்யோ தாமரையின் பேரை தாமாரை'ன்னு மாத்திட்டாயிங்களா....???

MANO நாஞ்சில் மனோ said...

ம்ம்ம் படம் பார்க்கலாம்னு தோணுது...!!!

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

ம் ...

Unknown said...

படத்த எப்படியாவது பாத்துரனும்.

ரைட்டர் நட்சத்திரா said...

இந்த படம் ஹிட்டுங்களா ?

கோகுல் said...

ம்.நந்தா திறமையான நடிகர் தான்!
இந்த படத்துக்கு விமர்சனம் போடுவிங்கன்னு எதிர்பாக்கல!
யதார்த்தம்!
சந்தானத்துக்காகவும் ,நந்தாவுக்காகவும் பாக்கணும்!

Nirosh said...

அப்போ ஓகே... நன்றி அழகிய விமர்சனம்.!

ஜானகிராமன் said...

குமுதம் ஜோக்கை ரெபரண்ஸ் கொடுத்திருப்பது செம. மதிய சாப்பாடு எப்பவும் வல்லாரை குழம்பு தானா?

Anonymous said...

தாமரை ---ஒரு வேளை NHM எடிட்டர் உபயோகிச்சிருப்பாங்களோ ..-:)

கடவுள் said...

அண்ணாச்சி நம்ம பவர் ஸ்டார் இன் லத்திக பட விமசனம் எப்ப வரும்

Unknown said...

யப்பா டைரக்டர்களா....எங்க சிபி லென்ஸ் கொண்டுட்டு தான் படம்பாக்க போறார் ஸ்பெல்லிங் மிஸ்டேக் இல்லாம போஸ்டர் அடிங்க...

Unknown said...

@naan

ஆஹா...

rajamelaiyur said...

Happy ayudha pooja

rajamelaiyur said...

Super review

Sen22 said...

எங்க ஊரு படம் அதுக்காகவாது பார்க்கணும்...

படத்துல வேலூர் மாவட்டத்த பத்தி எதுவும் சொல்லலையா சார்...

விமர்சனம் சூப்பரு.... :)

காட்டான் said...

விமர்சனம் சூப்பர் தம9

Yoga.s.FR said...

எல்லாம் நல்லாருக்கு!அதாங்க,விமர்சனமும்,"ஸ்டில்"லுங்களும்!

Yoga.s.FR said...

சி.பி.செந்தில்குமார் said...

>>பொண்ணுகளுக்கு ‘பேக்கு’களைப் பிடிக்கும்னு அவங்களுக்குத் தெரியலை.

hi hi அண்ணே, அப்புறம் ஏன் என்னை எந்த பொண்ணுக்கும் பிடிக்க மாட்டேங்குது?////இப்பதான் தெரியுது ஏன் உங்கள பொண்ணுங்களுக்குப் பிடிக்கமாட்டேங்குதுன்னு!

செங்கோவி said...

விமர்சனத்தை கலக்கல்னு சொல்றதா...ஸ்டில்லை கலக்கல்னு சொல்றதா...சரி,ரெண்டையுமே சொல்வோம்:

கலக்கல்.

சசிகுமார் said...

மாப்ள உனக்கு ஒருத்தன் நல்லா இருந்தா புடிக்காதா... அந்த போஸ்டர் அப்ரூவல் பண்ணவன் வேலைய கெடுதுட்ட ஹீ ஹீ...

ராஜி said...

Super review. Thks

F.NIHAZA said...

நீங்க சொல்விட்டீங்க.....
மொத வேலையா இந்தப் படத்ித பார்க்“குறேன்...

Sadasivam said...

விமர்சனம் நல்ல இருக்கு

”தளிர் சுரேஷ்” said...

கோடம்பாக்கம் கண்டு கொள்ளாமல் இருக்கும் ஒரு நல்ல நடிகர் நந்தா.திறமைசாலிகள் பலர் வாய்ப்புக்கிடைத்தும் சரியான வெற்றி கிடைக்காமல் தள்ளாடுகின்றனர்,அங்கீகாரம் கிடைக்காமல் அல்லாடுகின்றனர்,அப்படிப்பட்ட ஒரு திறமையான நடிகருக்கு கிடைத்திருக்கும் ஆறுதல் வெற்றிதான் வேலூர் மாவட்டம்..

ரொம்ப நல்லாவே சொன்னீங்க! சரி படமெல்லாம் பெரிசா எப்படி போடறீங்க? கொஞ்சம் கிளாஸ் எடுக்க கூடாதா?

பாண்டியன் said...

kalakkunga.....

சேகர் said...

nice review.... hit points are super