Saturday, October 01, 2011

முரண் - த்ரில்லிங்க் , ட்விஸ்ட்,மர்டர் - சினிமா விமர்சனம்


 http://tamil.way2movies.com/wp-content/uploads/2011/09/muran_review_cheran_muran_movie_review-300x254.jpg
அன்பே சிவம் படத்தில் வருவது போல் 2 மாறுபட்ட கேரக்டர்கள் சேரன் + பிரசன்னா ,இருவரும் ஒரு கார் பயணத்தில் எதேச்சையாக இணைகிறார்கள்.தனது காதலியை தன் தந்தையே கெடுத்து அவளது தற்கொலைக்கு காரணம் ஆகி விட்டார், அவரைப்பழி வாங்க வேண்டும் என்ற வெறியுடன் பிரசன்னா, கோடீஸ்வரியாக இருந்தாலும் தன் மனைவி தன்னை மதிக்காமல் பார்ட்டி, குடி என ஊர் சுற்றுகிறாளே என்ற ஆதங்கத்தில் வேறொரு காதலியுடன் தன் கவனத்தை திருப்பிய சேரன் இருவரும் எந்தப்புள்ளியில் ஒருவருக்கொருவர் உதவி செய்ய முடியும்?



எஸ்.. அதே தான்...பிரசன்னாவின் அப்பாவை சேரன் கொலை செய்வது, சேரனின் மனைவியை பிரசன்னா கொலை செய்வது.. யாருக்கும் சந்தேகம் வராது.. இது தான் பிரசன்னாவின் திட்டம்.. ஆனால் இதற்கு சேரன் உடன் பட வில்லை..


விறுவிறுப்பான திரைக்கதை மூலம் பல ட்விஸ்ட்களை சந்தித்து கடைசியில் என்ன ஆகிறது என்பதை வெள்ளித்திரையில் காண்க.. கதையோட  பேசிக் நாட் (BASIC KNOT) அமரர் சுஜாதாவின் எதையும் ஒரு முறை என்ற நாவலில் இருந்தும், திரைக்கதையை ஹாலிவுட்டின் திகில் கதை மன்னன் ஹிட்ச்சாக்-ன் STRANGERS ON THE TRAIN படத்தில் இருந்தும் சுட்டிருந்தாலும் , படத்தின் இயக்குநர் தமிழுக்காக ரொம்பவே மெனக்கெட்டிருக்கிறார்.. பிரசன்னாவின் காதலி அவரது தந்தையால் ரேப் செய்யப்படவில்லை,பிரசன்னாதான் ரேப் செய்தார் என்ற ட்விஸ்ட் எழுத்தாளர் சுபாவின் நீ நான் நிலா நாவலில் இருந்தும் சுடப்பட்டுள்ளது.

யதார்த்த நாயகன் என்ற பெயர் எடுத்த சேரன் என்னதான் அண்டர்ப்ளே ஆக்டிங்க்கில் அசத்தினாலும், அசால்ட்டாக நடித்து பெயர் தட்டிக்கொண்டு செல்வதென்னவோ பிரசன்னா தான்.. அஞ்சாதே படத்துக்குப்பின் நல்ல வில்லன் வாய்ப்பு.. அவரது பாடி லேங்குவேஜ், வசன உச்சரிப்பு எல்லாம் அட்டகாசம்.. ஆர்யாவுக்குப்பிறகு தமிழில் அசால்ட்டாக நடிக்க ஒரு ஆள் ரெடி.. 


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhZI94K623jmkk-fZPC3IBMppGws8NNtYOf5PWzAo6gf5ruyMbjo2M_NMTHdWjnUk4SBTNvXD22q6GLHJjHtiXNmDt-xoOictx7YL_LO5UJGpkb6HfrxdqkpA8CQrz50QeNZVj6SSMQzfof/s1600/muran+movie+pictures.jpg
படத்தில் மனம் கவர்ந்த வசனங்கள்

1. அப்பன் காசை அழிக்கறதுக்குன்னே ஒருத்தன் இருப்பான் இல்லையா? அதுல இவனும் ஒருத்தன்...

2. சாதாரண லெமன் சோடா .. எவ்ளவ் மப்புல இருந்தாலும் இவன் தமிழ்லயே தெளிய வெச்சுடுவான்

3. லைஃப்ல த்ரில்லிங்கா ஏதாவது செய்யனும்..

அப்படி செய்ய நான் ஒண்ணும் முட்டாள் இல்லை.. 

அப்படி செய்யாம இருக்க நான் ஒண்ணூம் கோழை  இல்லை..
4. நீங்க இப்போ பார்க்கப்போறது பயங்கர ஆக்சிடெண்ட்.. அல்லது மிரேக்கிள்..


5.  நான் எப்பவுமே லக்கை நம்பாதவன்.. அதுக்கு எல்லாம் கட்ஸ் வேணும்.. 

அப்போ என்னை தைரியம் இல்லாதவன்கறியா?

6. உங்க ஒயிஃபை ரொம்பவே லவ் பண்றீங்க போல.. 

சாரி..   அவள் என் ஒயிஃப் இல்லை..

உங்களுக்கு மேரேஜ் ஆகிடுச்சுன்னு நினைச்சேன்...


மேரேஜ் ஆகலைன்னு சொல்லவே இல்லையே.. அவ எனக்கு ஒயிஃபா நடந்துக்கலை.. 

7.  லேடி - சார்.. நீங்கதான் என்னோட முதல் கஸ்டமர்.. 

வாட்?

ஐ மீன், இந்த சோப் பவுடர் வாங்க.. 

8. சார்.. உங்க வீட்ல லேடீஸ் இல்லையா?

எஸ்.. இருக்காங்க.. ஆனா இப்போ இல்லை.

சார்.. உங்க துணியை நீங்க தானே வாஷ் பண்றீங்க..?எப்டி கண்டுபிடிச்சேன் பார்த்தீங்களா?

9. ஏம்மா.. இந்த அபார்ட்மெண்ட்ல இத்தனை பேர் இருக்கறப்ப என்னை மட்டும் ஏன் செலக்ட் பண்ணுனே?

 வேற யாரும் என்னை உள்ளே வர அலோ பண்ணலை சார்.. 

10.  நைட் லேட்டா தண்ணி அடிச்சுட்டு இப்படி வீட்டுக்கு வர்றியே, நீ எல்லாம் ஒரு பொம்பளையா?

அதை நீ கேட்காதே , உனக்கு எந்த தகுதியும் இல்ல.. என்னை விட நாலுல ஒரு பங்கு கூட சம்பாதிக்க கையாலாகாத ஆம்பளை நீ...





https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiK6EMMSa3mnqyy-f3aNYLXylYpLJOg1KkMjxkjffZRGaLexLFsUiIQVklckiCDIK4Dp2hJO6vr4NsmDktx4lzqCM-krIhWavfKQdkJEUzwByK6PbnbpYALe2w-ozL5HIaqZwiSx7S3mEnb/s1600/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D.jpg

11.  என் கிட்ட அவ என் ஃபோன் நெம்பர் வாங்குனா... எனக்கு அவ கால் பண்ணுனா,அவளுக்கு நான் கால் பண்ணுனேன்.. 2 பேரும் லவ்வ ஆரம்பிச்சுட்டோம்...

12. உங்க கிட்டே ஒரு கஷ்டமான கேள்வி கேட்கப்போறேன்.. உங்க ஒயிஃபை நீங்க லவ் பண்றீங்களா?

விதி என் லைஃப்ல விளையாண்ட மாதிரி யார் லைஃப்லயும் விளையாடக்கூடாது..

13. ஹாய்... நீ அழகா இருக்கே.. அது உனக்கு தெரியும்.. ஆனா எனக்குத்தெரியும்கறது உனக்குத்தெரியனும் இல்லையா? அதான் சொன்னேன்.. இதை நான் தான் உன் கிட்டே முதல்ல சொல்லி இருப்பேன்னும் நான் நினைக்கலை.. ( டேய், என்னதாண்டா சொல்ல வர்றே? )

14.  உன்னை மாதிரி பணக்காரப்பசங்களுக்கு என்னை மாதிரி பொண்ணுங்க வெறும் ஃபன் தான்..

15.  ஆம்பளைன்னாலே ஒரு இண்டிவிஜாலிட்டி வேணும்.. அப்பன் காசுல உக்காந்து சாப்பிடக்கூடாது.. 

ஏய்.. யார்ட்டடி பேசிட்டு இருக்கே?

யார்ட்ட பேசுனா என்ன? சரியாப்பேசறேனா? இல்லையா?

16.  என்னால இதை ஜீரணிக்கவே முடியலை./..

ஏன், இன்னும் சாப்பிடவே ஆரம்பிக்கலையே? எப்படி ஜீரணம் ஆகும்?

டோண்ட் ஜோக்.. நீங்க சொன்னதை ஜீரணிக்கவே முடியலைன்னு சொன்னேன்.. 

17.  நான் இப்படி ஒரு காரியம் பண்ணுனேன்னு லாவண்யா கிட்டே சொன்னா அவ நம்பவே மாட்டா...

சொல்லப்போறீங்களா?

நோ..

18.  உங்க மனைவியை கொலை பண்ணனும்னு உங்களுக்கு எப்பவாவது தோணி இருக்கா?

இல்லை..

தோணி இருக்கும்.. ஏன் பயப்படறோம்னா விளைவுகள்.. அதனால அப்புறம் போலீஸ்.. கேஸ், ஜெயில் இதான் பயம்..  வீ ஆர் ஸ்மார்ட் பியூப்பிள்..

19.  புரிஞ்சுக்காத பொண்டாட்டி இருந்தும் உங்க காதலி கூட நீங்க  வாழலை.. ஆனா புரிஞ்சுக்கற புருஷன் இருந்தும் உங்க மனைவி உங்க கூட வாழலை..

20.  அதுல ஒரே ஒரு பிராப்ளம் இருக்கு.. நீங்க ஷூட் பண்னப்போற அதே ரோட்ல தான் கமிஷனரும் வாக்கிங்க் வர்றார்.. 



http://cinema.dinakaran.com/cinema/CineGallery/Kollywood/Movie/Muran/vm-02.jpg

21. ஏய்.. இங்கே பாருடி.. உன் கிட்டே இருந்த அழகு திமிர் 2ம் எனக்கு பிடிச்சிருந்தது... இப்போ மேட்டர் ஓவர்,. என் த்ரில் குறைஞ்சிடுச்சு.. 

22. இங்கே பாரு... 24 வயசு வரைக்கும் கோடீஸ்வரனா வாழ்ந்துட்டு திடீர்னு பிச்சைக்காரனா என்னால வாழ முடியாது.. அதான் அப்பனையே போட்டுத்தள்ள முடிவு பண்ணிட்டேன்.. 

23. உன்னால முடிஞ்சதை பண்ணிப்பாருன்னு சவால் விட்டீங்க..  நான் பண்ரேன்.. நீ பாரு.. 

24. வாழ்றப்ப  யாரோட பரிதாபத்தையும் சம்பதிக்காம வாழறவன் வேஸ்ட்.. 
http://www.tamilactresspics.com/new-gallery/plog-content/images/tamil-movies/muran/muran_movie_new_stills_3080.jpg


இயக்குநர் சபாஷ் பெறும் இடங்கள்

1. சேரனின் ஃபிளாஷ்பேக் கதைக்கு பி கே பி யின் நாவல் கரு, பிரசன்னாவின் ஃபிளாஷ்பேக்கிற்கு சுபாவின் கதைக்கரு, படத்தின் மெயின் நாட்டிற்கு (KNOT) சுஜாதாவின் கதைக்கரு என இயக்குநர் ரொம்பவே ஹோம் ஒர்க் பண்ணி தெளிவாக திரைக்கதை அமைத்திருக்கிறார்.. 

2.  இதுவரை என்னை தீண்டியதில்லை பாடல் காட்சி படமாக்கப்பட்ட விதம் கவிதை.. அதே போல் நான் கண்டேன் நேற்று இல்லா இன்று  பாடல் வரிகளும் லொக்கேஷன்களும் அழகு..

3. சேரன், பிரசன்னா இருவருக்குமான வாய்ப்புகள், கதாபாத்திரத்தின் தன்மை எல்லாம் அளந்து வைத்திருப்பது போல் சம வாய்ப்பு.. 

4. இடைவேளைக்குப்பின் கதை எப்படி பயணிக்கும் என்பதை எளிதில் யூகிக்க வைக்காத திரைக்கதை..

5. பின்னணி இசை, ஒளிப்பதிவு இரண்டும் இந்த மாதிரி   த்ரில்லர் படத்துக்கு எவ்வளவு முக்கியம் என்பதை உணர்ந்து பயன்படுத்திய விதம்.. சபாஷ்!!

http://mimg.sulekha.com/tamil/muran/stills/muran-stills-0204.jpg

இயக்குநரிடம் சில  கேள்விகள், சில சந்தேகங்கள், சில ஆலோசனைகள்


1. சேரனின் மனைவியின் சகோதரன் ஒரு இன்ஸ்பெக்டர்.. அவருக்கு சேரன் மீது டவுட்.. ஓப்பனாக கேட்கிறார்.. கொலை செஞ்சியா? என, விரைவில் ஆதாரத்துடன் பிடிப்பேன் என்கிறார்.. ஆனால் அந்த இன்ஸ்பெக்டரே கொலை ஆன பின்னும் போலீஸ் நிர்வாகம் எப்படி சேரனை சந்தேகப்படவில்லை?

2.  பிரசன்னா செமயா பிளான் பண்ணி சேரனின் மனைவி, இன்ஸ்பெக்டர் என இருவரையும் கொலை செய்பவர் அதே போல் வேறு ஏதாவது பிளான் பண்ணி அப்பாவை கொன்றிருக்கலாமே? ஏன் படம் பூரா சேரன் பின்னாலயே தொங்கிட்டு இருக்கனும்?

3. கதைப்படி பிரசன்னா ஒரு லேடீஸ் செலக்டர். அதாங்க பொம்பள பொறுக்கி.. சேரனின் மனைவி ஒரு கில்மா லேடி.. சேரனின் மனைவியை கொலை செய்ய 2 மாசம் அவரை ஃபாலோ செய்யும் பிரசன்னா அவரை ஏன் யூஸ் பண்ணிக்கலை?

4. கதைல ஒரு டர்னிங்க் பாயிண்ட் வேணும்கறதுக்காக சேரனின் காதலி பிரசன்னாவுக்கு காதலி மாதிரி ஒரு பிட்டை டவுட் வர்ற மாதிரி போட்டு ஏன் இயக்குநர் பேக் அடிச்சுட்டார்? அது இன்னும் செம த்ரில்லிங்காவும், ட்விஸ்ட்டாவும் இருந்திருக்குமே?

5. சேரன் வீட்டுக்குள்ள தெரியாம ரிவால்வரால நிலைக்கண்ணாடியை சுடறப்ப காதலி வீட்டுக்கு வர்றாங்க... என்ன சத்தம்?னு கேட்டதுக்கு கண்ணாடி விழுந்து உடைஞ்சிதுன்னு அவர் சமாளிக்கிறார்..காதலி வீட்டுக்குள்ள வந்தும் அந்த உடைஞ்ச கண்ணாடியை கண்டுக்கவே இல்லை.. குண்டு சத்தம் பற்றி எதுவும் கேட்கலை.. ஏன்?

6.  பிரசன்னாவின் காதலியின் தோழிக்கு பிரசன்னாவின் கேரக்டர் தெரிந்தும் அவ ஏன் தோழியை எச்சரிக்கை பண்ணலை?

7. தனது எல்லா வண்டவாளங்களும் தெரிந்த காதலி லிண்டாவின் தோழியை பிர்சன்னா ஏன் உயிரோட விட்டு வெச்சார்? அந்தப்பொண்ணு சேரனை பார்த்து உண்ஐயை சொல்றப்ப  பிரசன்னா ஏன் தடுக்க முயற்சி பண்ணலை?

8. பிரசன்னாவின் தந்தையை கொலை செய்ய சேரன் ரிவால்வரை நீட்டிக்கிட்டே வர்றப்ப திடீர்னு கமிஷ்னர் பிரசன்னாவின் தந்தையை பார்க்க வந்துடறார்..அப்போ சேரன் டக்னு ரிட்டர்ன் ஆகறாரே? அப்போ கமிஷனருக்கு டவுட் வராதா? ஏன் கண்டுக்கவே இல்லை?

http://600024.com/gallery/cache/events/muran-press-meet/muran-press-meet_08_w531_h800_600024.jpg

ஆனா இந்தக்குறைகளெல்லாம் பெரிசாத்தெரியாத அளவுக்கு படம் செம விறு விறுப்பா போகுது.. 

ஏ செண்ட்டர்கள்ல 50 நாட்கள், பி செண்ட்டர்கள்ல 30 நாட்கள் ( தீபாவளி வருதே? ), சி செண்ட்டர்கள்ல 20 நாட்கள் ஓடும்.. 

எதிர்பார்க்கப்படும் ஆனந்த விகடன் மார்க் - 41

எதிர்பார்க்கப்படும் குமுதம் ரேங்கிங்க் - ஓக்கே 

சி.பி கமெண்ட் - சஸ்பென்ஸ் த்ரில்லர் ரசிகர்கள் அனைவரும் பார்க்கலாம்..

ஈரோடு ஸ்ரீ சண்டிகாவில் படம் பார்த்தேன்

டிஸ்கி -1

வாகை சூடவா - மண்வாசனை,ஒளிப்பதிவு ஸ்பெஷல் - சினிமா விமர்சனம்

 

டிஸ்கி 2 -

JOHNNY ENGLISH REBORN - மிஸ்டர் பீன் ஜேம்ஸ்பாண்டாக கலக்கிய காமெடி ஹாலிவுட் படம் - சினிமா விமர்சனம்

டிஸ்கி 3 -

வெடி - ன் கிளாமர், விவேக்கின் மொக்கைகாமெடி - சினிமா விமர்சனம்

 

 




http://www.nakkheeran.in/AllImages/Gallerys/12331_1.jpg

44 comments:

Dr. Butti Paul (Real Santhanam Fanz) said...

முரணான நேரேத்தில ஒரு பதிவு, சிபி அண்ணன்கிட்டயிருந்து...

Dr. Butti Paul (Real Santhanam Fanz) said...

அட.. மூணு நாலு எடத்துல சுட்டு ஒரு படத்த ரெடி பண்ணிட்டாங்களா? ஆனாலும் தமிழ் சினிமா பயன்படுத்த தவறிய ஒரு நடிகர் பிரசன்னா, அவருக்கு வாய்ப்பளித்திருப்பது பாராட்டத்தக்கது..

Unknown said...

நல்ல விமர்சனம்.ட்விஸ்ட்களை இங்கே குறிப்பிடுவதை தவிர்த்திருந்தால் படம் பார்க்காதவர்களுக்கு இன்னும் சுவாரஸ்யமாக இருக்கும்.

சுதா SJ said...

விமர்சனம் சூப்பர் பாஸ்..
உங்கள் விமர்சனம் படிக்கும் போதே படம் எனக்கு பிடிக்கும் என்று நினைக்கிறேன்..
படத்தை பார்த்திட வேண்டியதுதான் :)

Saravanaa said...

Mukkiyamana twist'lam yen solringa..? Heroines pathi edhuvum sollalai.. Padam nallarukunu sonnthila santhosam. Prasanna successful actor aga vazhthukal.

Philosophy Prabhakaran said...

அண்டர்பிளே ஆக்டிங்ன்னு அடிக்கடி சொல்றீங்களே அப்படின்னா என்ன தலைவா...

Pulavar Tharumi said...

படத்தின் கதையும் திரைக்கதையும் நல்லா இருக்கும் போல.உங்களின் விமர்ச்சனமும் சுவாரசியமாக இருக்கு. உங்களின் விமர்ச்சனத்தின் படி ஆனந்த விகடனின் மார்க் 41க்கும் மேல போகலாம்.

சி.பி.செந்தில்குமார் said...

@Philosophy Prabhakaran


அடக்கி வாசித்தல்

சி.பி.செந்தில்குமார் said...

@M.Shanmugan

அந்த ட்விஸ்ட்கள் சாதாரணமாக எளிதில் யூகித்து விடக்கூடிய அளவிலே தான் இருந்தது.. நூறாவது நாள் போன்ற முக்கியமான ,அன்கெஸ்ஸபிளாக ( UNGUESSABLE) இருந்ந்திருந்தால் கண்டிப்பாக சொல்லி இருக்க மாட்டேன்

காந்தி பனங்கூர் said...

தல, இங்கிலீஷ் படம், சுஜாதா நாவல்ன்னு ஒன்னு விடாம எல்லாத்தையும் பார்த்து, படித்து எல்லாத்தையும் கைக்குள்ள வச்சிருக்கீங்க போல.

கருத்துக்கணிப்பு கூட அருமையா பண்றீங்க. அதனால தேர்தல் தேர்தல்ல்னு ஒன்னு வருதே, அதுல எந்தந்த கட்சி எத்தனை எத்தனை சீட் பிடிக்குனு சொன்னா நல்லா இருக்கும்.

விமர்சனம் அருமை. எனக்கு சேரனை ரொம்ப பிடிக்கும்.

ராஜி said...

Indha padathaiyum paarththuttengala? Avvvv

rajamelaiyur said...

Kalakkal review boss . . Good morning

rajamelaiyur said...

Next VEDI ya?

Unknown said...

கலக்கல் விமர்சனம்....யார் என்ன சொன்னாலும் நீ உன் சேவையை செய்...மனம் வருத்தப்படாதே...!

தமிழ்வாசி பிரகாஷ் said...

விக்கி அட்வைஸ் பலமா இருக்கே சி பி?

தமிழ்வாசி பிரகாஷ் said...

விமர்சனம் படம் பார்க்க தூண்டுது... நேரம் கிடைக்குதான்னு பார்க்கலாம்

உணவு உலகம் said...

சினிமான்னா சிபிதான்.

ரைட்டர் நட்சத்திரா said...

ஒ.கே படம் பார்க்கலாம்

செல்ல நாய்க்குட்டி மனசு said...

படத்தை பார்க்க தூண்டிய விமர்சனம். முடிவு தெரிந்து படம் பார்க்கும் போது படத்தின் சில நுணுக்கமான இடங்களை கவனிக்கலாம் என்று எண்ணும் என்னைப் போன்றவர்களுக்கு நீங்கள் முக்கியமான ட்விஸ்ட் களை குறிப்பிட்டது பயனளிக்கும்

kobiraj said...

முரண் -பார்க்கலாம் அப்படித்தானே .

Unknown said...

முரண்...நல்ல விமர்சனம்......

Unknown said...

அழகிய படங்களுடன் ஒரு அசத்தலான விமர்சனம் - படத்தை பார்க்கும் எண்ணத்தை உருவாக்கியது

Unknown said...

மூணாவது டவுட் எல்லாம் ரொம்ப ஓவர் செந்தில் ....... உங்களுக்கு கில்மா சீன வேனுங்குரதுக்காக இப்டி லாம் டவுட் கேக்கபடாது .........

Arul Kumar P அருள் குமார் P said...

நல்லா சொல்லி இருக்கீங்க .CPS . சேரனின் உடைகளை கவனிச்சிங்களா , வித விதமா போட்டு கலக்கிட்டு வந்தார் ...! காஸ்ட்யும் யார் தெரியல ஆனா நல்லா பண்ணி இருந்தார்கள் ...!

vetha (kovaikkavi) said...

நல்ல விமர்சனம்.
vaalthukal
ஆனால் படம் பார்க்கமாட்டேங்க...
வேதா. இலங்காதிலகம்.
http://www.kovaikkavi.wordpress.com

Arul Kumar P அருள் குமார் P said...

இடை வேலைக்கு அப்புறம் கதை எப்படி நகரும் என்பதை யூகிக்க முடியா விட்டாலும் , கிளைமாக்சை நான் இப்படி தான் இருக்கும் என சரியாக யூகித்து விட்டேன். வேறு மாதிரியாக அமைத்து இருந்தால் இன்னும் அருமையாக இருந்து இருக்கும் .

சக்தி கல்வி மையம் said...

குட்

abdul said...

அருமையான விமர்சனம் சார்...ஆனால் நீங்கள் ட்விஸ்ட் எல்லாவற்றையும் சொல்லி விட்டீர்கள்....அதனால கொஞ்சம் ரசிக்க முடியாது தான்....தயவு செய்து இந்த மாதிரி படங்களுக்கு அடக்கி வாசித்தால் கொஞ்சம் நல்லா இருக்கும்....இது எனது தாழ்மையான வேண்டுகோள் சார்....

Unknown said...

நல்ல விமர்சனம்.. படம் பார்த்த மாதிரியே ஒரு உணர்வு. கண்ணை மூடிக்கிட்டே கொஞ்ச நேரம் படம் பார்த்துட்டேன் கலக்கல்...

ramalingam said...

மூலப் படம் இதை விட சூப்பராக இருக்கும். strangers on a train by Hitchcock.

MANO நாஞ்சில் மனோ said...

சுட சுட சுட்டு பதிவு போடுற மாதிரி, சினிமா'காரனுவளும் சுட ஆரம்பிச்சிட்டாயிங்க...!!!

MANO நாஞ்சில் மனோ said...

என்னடா அண்ணா, காப்பி பேஸ்ட் பதிவையே காணோம்...???

கடம்பவன குயில் said...

சுடசுட சினிமா விமர்சனம். எந்தப்படம் வந்தாலும் ரிலிசான அன்றோ மறுநாளோ உடனே விமர்சனம் போட்டுடறீங்களே..இந்த வேகம் தான் சிபி. சினிமா விமர்சனம் என்றாலே எல்லோரும் உங்களுடைய review தான் முக்கியமா எதிர்பார்க்கிறார்கள் டைரக்டர்கள் உட்பட. உங்களை அறியாமலேயே நீங்கள் அசுர வளர்ச்சி கண்டுவருகிறீர்கள் கொழுந்தனாரே..வாழ்த்துக்கள்.

M.R said...

நல்ல விமர்சனம் நண்பரே

கடம்பவன குயில் said...

காய் அதிகம் காய்த்துதொங்கும் மரம்தான் அதிகம் கல்லடி படும். அதற்கு உங்கள் அறிவுத்திறனும் தங்கள் படைப்புகளுமே சான்று. எதைப்பற்றியும் கவலைப்படாமல் கண்டுக்காமல் உங்கள் படைப்பகளில் மட்டும் கவனத்துடன் செயல்படவும்.

Riyas said...

விமர்சனம் ஓக்கே..

கடம்பவன குயில் said...

படம் பார்க்கலாமா வேண்டாமா?யாருக்கு பிடிக்கும்? எத்தனைநாட்கள் ஓட சான்ஸ் இருக்கு என்று உங்கள் கருத்துக்களை வெட்டு ஒண்ணு துண்டு இரண்டு என்று பட்டவர்த்தனமாக நீங்கள் உங்கள் பதிவில் சொல்லும் நேர்மைதான் அபாரமானது. அதற்கு யாருடனும் யாருக்காவும் காம்ப்ரமைஸ் ஆகாத மன தைரியம் வேண்டும். அது உங்களுக்கு ஜாஸ்திதான்.

ப.சிவா said...

நல்ல விமர்சனம் :)

Unknown said...

சுடச்சுட பதிவுகளை ஏற்றி, அன்பர்களை மகிழ்விக்கும்,தங்களுடைய பதிவுலகச் சேவையை மெச்சி, "பதிவரசர்" எனும் பட்டத்தை தங்களுக்கு அளிக்கிறோம்!

வெட்டி ஆபிசர் said...

ஜஸ்ட் மிஸ்ஸுல இந்த படத்த பார்க்கர வாய்ப்ப தவரவிட்டுட்டணா.

அடடட... வட போச்சே

முதலில் உங்க விமர்சனம் படிச்சிட்டு அப்புறம் படம் பார்க்கும்போது அது ஒரு புது அனுபவமா இருக்குங்க்ணா....
நன்றிங்க்ணா
வெட்டி ஆபிசர்

Sivakumar said...

நானும் படம் பார்த்தேன்.


எனக்குத்தெரிந்ததை சொல்கிறேன்:

1. இன்ஸ்பெக்டர் சேரனுடன் தனிமையில்தானே பேசுகிறார். தனிப்பட்ட முறையில் அவர் சேரனை சந்தேகித்து இருக்கலாம். அது நிர்வாகத்திற்கு தெரியாமல் இருந்து இருக்கலாம்.

2. தன் தந்தையை கொலை செய்பவர் மீது முற்றிலும் சந்தேகம் வரக்கூடாது என்பதால் சேரனை தேர்ந்து எடுப்பதாக படத்தில் பிரசன்னா சொல்கிறாரே.

3. ஆண் பெண் இருவரும் தவறான கேரக்டராக இருக்கும் ஒரே காரணத்திற்காக யார் வேண்டுமானால் யாரையும் விரும்பலாம் என்பது சரியில்லையே?

5,6,8 சரியான கேள்விகள். குறிப்பாக எட்டாவது கேள்வி. யாரும் இல்லா ரோட்டில் கமிஷனரை கண்டதும் துப்பாக்கியை உள்ளே வைக்கிறார் சேரன். அதை கமிஷனர் கண்டு கொள்ளாமல் இருப்பது உதைக்கிறது.

நல்ல விமர்சனம் சிபி சார். குறைகளை சரியாக தேடிப்பிடித்து உள்ளீர்கள். தைரியம் இருந்தால் வெடி படத்தில் ஒரே ஒரு குறையாவது சொல்ல முடியுமா?

நிரூபன் said...

பாஸ்...நானும் இந்தப் படத்தை பார்ப்பதாக ப்ளான் பண்ணியுள்ளேன்.

விமர்சனம் கலக்கல்.

ஜயந்தன் said...

விமர்சனம் என்டுடு முழுக்கதையையும் சொன்ன எப்பிடி பாஸ்? நல்ல படங்கள ஓட விடுங்க...

raja23 said...

paatu remix panra madhiri.. ippo tamizh navalgalai suda aarambichinanuva..